Christian Song | தேவன் மாபெரும் அவமானத்தைச் சகித்துக் கொள்கிறார் (Tamil Subtitles)

பிப்ரவரி 4, 2022

தேவன் பரிசுத்தமானவரும் நீதியுள்ளவரும் ஆவார்.

ஓர் இழிவான தேசத்தில் பிறந்திருந்தாலும்

கிருபையின் காலத்தில் இயேசு பாவிகளோடு வாழ்ந்தது போல

இழிவான ஜனங்களோடு அவர் ஜீவித்து வரும் போதும்,

மனுக்குலம் இரட்சிப்பை அடைவதற்காக அவரது கிரியை எல்லாம்

மனுக்குலத்திற்காகச் செய்யப்படவில்லையா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பல ஆண்டுகள் அவர் பாவிகளோடு வாழ்ந்தார்.

அது மீட்பின் பணிக்காக.

மனுக்குலத்தை இரட்சிப்பதற்காக இல்லையென்றால், அவர் ஏன் இரண்டாவது முறையாக

மாம்ச தேகத்துக்குத் திரும்பி வந்து,

பிசாசுகள் கூடும் இந்த தேசத்தில் பிறந்து,

சாத்தானால் மோசமாக சீர்கெடுக்கப்பட்ட இந்த ஜனங்களோடு ஏன் ஜீவிக்க வேண்டும்?

மனுக்குலத்தின் பேரில் தேவனுடைய அன்பு

மிகமிக சுயநலமற்றது என்பது ஒன்றே இதன் அர்த்தமாகும்.

அவர் சகித்துக்கொள்ளும் அவமானம் மிக மிகப் பெரியது.

உங்கள் அனைவருக்காகவும் உங்கள் தலைவிதிக்காகவும் எவ்வளவு மாபெரும்

அவமானத்தால் அவர் துன்பப்படுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

முழு மனுக்குலமும் பிழைத்திருப்பதற்காக,

அவர் ஓர் இழிவான தேசத்தில் பிறந்து ஒவ்வொரு அவமானத்தையும்

தாங்குவதை தேர்வு செய்தார்.

அவர் கிரியைகள் எல்லாம் உண்மையானவை மற்றும் நடைமுறையானவை இல்லையா?

அவர் பாவிகளோடு உண்கிறார் என்று எல்லா ஜனங்களும் அவதூறாகக் கூறினாலும்,

இழிவான ஜனங்களோடு வாழ்கிறார் என்று

எல்லா ஜனங்களும் அவரைக் கேலி செய்து பேசினாலும்,

அவர் இன்னும் தம்மை சுயநலமில்லாமல் அளிக்கிறார்,

ஆயினும் கூட அவர் மனுக்குலத்தால் புறக்கணிக்கப்படுகிறார்.

மனுக்குலத்தின் பேரில் தேவனுடைய அன்பு

மிகமிக சுயநலமற்றது என்பது ஒன்றே இதன் அர்த்தமாகும்.

அவர் சகித்துக்கொள்ளும் அவமானம் மிக மிகப் பெரியது.

உங்கள் அனைவருக்காகவும் உங்கள் தலைவிதிக்காகவும் எவ்வளவு மாபெரும்

அவமானத்தால் அவர் துன்பப்படுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தேவன் எப்படி கஷ்டப்படுகிறார் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்,

அவர் சகிக்கும் துன்பம் உங்களுடையதை விடப் பெரிதல்லவா?

நீங்கள் செலுத்திய கிரயத்தை விட

அதிகமான கிரியையை அல்லவா அவர் செய்கிறார்?

மனுக்குலத்தின் பேரில் தேவனுடைய அன்பு

மிகமிக சுயநலமற்றது என்பது ஒன்றே இதன் அர்த்தமாகும்.

அவர் சகித்துக்கொள்ளும் அவமானம் மிக மிகப் பெரியது.

உங்கள் அனைவருக்காகவும் உங்கள் தலைவிதிக்காகவும் எவ்வளவு மாபெரும்

அவமானத்தால் அவர் துன்பப்படுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க