Christian Song | தேவன் தம்மை நேசிப்பவர்களை ஆசீர்வதிக்கிறார் (Tamil Subtitles)

ஆகஸ்ட் 27, 2021

தேவனை நேசிப்பவர்கள் அவருக்குக் கீழ்ப்படிகிறார்கள்,

அவர் முன் அவர்கள் எப்போதும் வாழ்கிறார்கள்.

அவர் வார்த்தைகளின் வழிகாட்டுதலுடன்,

அவர்கள் சமாதானத்தையும் இன்பத்தையும் அடைகிறார்கள்.

தேவனை நேசிப்பவர்கள் நேர்மையானவர்கள்,

அவர்கள் புரிந்திருக்கும் சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.

தேவசித்தத்தைத் தங்கள் உள்ளத்தில் எப்போதும் வைத்திருக்கிறார்கள்,

அவரைத் திருப்திப்படுத்த அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.

தேவனை நேசிப்பவர்கள் கொள்கையுடையவர்கள்,

தங்கள் கருத்துக்களிலும் செயல்களிலும் சத்தியத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

விதிகளும் இல்லை கைவிலங்குகளும் இல்லை,

அவர்கள் சத்தியத்தைப் புரிந்து விடுவிக்கப்பட்டார்கள், ஆம்.

தேவன் தம்மை நேசிப்பவர்களை ஆசீர்வதிக்கிறார்,

அவரது நியாயத்தீர்ப்பும் தண்டனையும்

எப்போதும் அவர்கள் பக்கம் இருக்கும்.

அவர்கள் சத்தியத்தைத் தேடி வெளிச்சத்தை அடைகிறார்கள்,

அவர்களது சீர்கேடு சுத்திகரிக்கப்படுகிறது.

தேவன் தம்மை நேசிப்பவர்களை ஆசீர்வதிக்கிறார்,

அவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாய் இருப்பார்கள்.

நியாயத்தீர்ப்பினால் அவர்கள் இரட்சிப்பை அடைகிறார்கள்.

தேவ வார்த்தைகள் அவர்கள் வாழ்வாகின்றன,

அவரது முகம் அவர்கள்மீது பிரகாசிக்கிறது.

தேவனை நேசிப்பவர்கள் அவரைப் போற்றுகிறார்கள்.

அவர் கண்காணிப்பை அவர்கள் ஏற்கிறார்கள்.

இசைவாக அவர்கள் தேவனைச் சேவிக்கிறார்கள்,

யதார்த்தத்தை வாழ்ந்து, சாட்சியளிக்கிறார்கள்.

தேவனை நேசிப்பவர்கள் அவருக்கு உண்மையாய் இருக்கிறார்கள்,

உபத்திரவங்களின் வழியே விசுவாசத்தில் உறுதியாகிறார்கள்.

எதிர்காலத்தையும் விதியையும் விட்டுவிட்டு,

அன்பான சர்வ வல்லமையுள்ள தேவனை முழுமனதோடு நேசிக்கிறார்கள்.

தேவனை நேசிப்பவர்கள்

அவரது நீதியை, அவரது பரிசுத்தத்தை துதித்து அவரை ஆராதிக்கிறார்கள்.

தேவனை நேசிப்பவர்கள் சத்தியத்தைக் கொண்டிருக்கிறார்கள்,

எப்போதும் தேவனுக்கு சாட்சியளித்து அவரை மகிமைப்படுத்துகிறார்கள்.

தேவன் தம்மை நேசிப்பவர்களை ஆசீர்வதிக்கிறார்,

அவரது நியாயத்தீர்ப்பும் தண்டனையும்

எப்போதும் அவர்கள் பக்கம் இருக்கும்.

அவர்கள் சத்தியத்தைத் தேடி வெளிச்சத்தை அடைகிறார்கள்,

அவர்களது சீர்கேடு சுத்திகரிக்கப்படுகிறது.

தேவன் தம்மை நேசிப்பவர்களை ஆசீர்வதிக்கிறார்,

அவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாய் இருப்பார்கள்.

நியாயத்தீர்ப்பினால் அவர்கள் இரட்சிப்பை அடைகிறார்கள்.

தேவ வார்த்தைகள் அவர்கள் வாழ்வாகின்றன,

அவரது முகம் அவர்கள்மீது பிரகாசிக்கிறது.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க