மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்

உங்களை ஜெயங்கொள்ளுவதை எண்ணமாகக் கொண்டு நான் உங்களுக்குப் பல எச்சரிக்கைகளை அளித்திருக்கிறேன் மேலும் பல சத்தியங்களை வழங்கியிருக்கிறேன். இப்போது, கடந்த காலத்தில் இருந்ததை விட குறிப்பிடத்தக்க அளவில் நீங்கள் அனைவரும் மிகவும் செழிப்படைந்து இருப்பதாக உணர்கிறீர்கள், ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய பல கோட்பாடுகளைப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் மற்றும் உண்மையுள்ள ஜனங்களுக்கு இருக்க வேண்டிய சாதாரணமான அறிவை மிக அதிகமாகக் கொண்டிருக்கிறீர்கள். இவை எல்லாம் பல ஆண்டுகளின் போக்கில் நீங்கள் அறுவடை செய்துள்ள விளைச்சல் ஆகும். நான் உங்கள் சாதனைகளை மறுக்கவில்லை, ஆனால் இந்தப் பல ஆண்டுகளாக நீங்கள் எனக்கு எதிராகச் செய்துள்ள எண்ணற்ற கீழ்ப்படியாமைகளையும் கலகங்களையும் நான் மறுக்கவில்லை என்பதையும் நான் மிகவும் வெளிப்படையாகக் கூற வேண்டும், ஏனெனில் உங்கள் மத்தியில் ஒரு பரிசுத்தவான் கூட இல்லை. நீங்கள், எந்த விதிவிலக்கும் இல்லாமல், சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட ஜனங்கள்; நீங்கள் கிறிஸ்துவின் சத்துருக்கள். இந்நாள் வரை, உங்களது மீறுதல்களும் கீழ்ப்படியாமைகளும் எண்ணமுடியாத அளவுக்குப் பலவாக இருக்கின்றன, ஆகவே நான் எப்போதும் உங்களைத் தொந்தரவு செய்கிறேன் என்பதை வித்தியாசமானதாகக் கருதமுடியாது. இந்த விதமாக உங்களோடு சேர்ந்து இருப்பதை நான் விரும்பவில்லை—ஆனால் உங்கள் எதிர்காலங்களின் பொருட்டு, நீங்கள் சென்றடையும் இடத்தின் பொருட்டு, இங்கு தற்போது மீண்டும் ஒருமுறை நான் உங்களைத் தொந்தரவு செய்கிறேன். நீங்கள் என்னைத் திருப்திப்படுத்துவதோடு, என்னுடைய ஒவ்வொரு பேச்சையும் உங்களால் நம்ப முடியும் என்றும் அதன் ஆழமான உட்பொருட்களை உய்த்துணர முடியும் என்றும் நான் நம்புகிறேன். நான் கூறுவதைச் சந்தேகிக்காதீர்கள், அதுமட்டுமல்லாமல் நீங்கள் விரும்பும் விதமாக என் வார்த்தைகளை எடுத்து விருப்பத்திற்கேற்ப அப்பால் எறியாதீர்கள்; இதை நான் சகிக்கமுடியாததாகப் பார்க்கிறேன். என்னுடைய வார்த்தைகளை நியாயந்தீர்க்காதீர்கள், மேலும் அவற்றை நீங்கள் இலகுவாக எடுத்துக்கொள்ளக் கூடாது அல்லது நான் எப்போதும் உங்களைச் சோதிக்கிறேன் என்றும் அல்லது அதைவிட மோசமாக, நான் உங்களிடம் கூறியது தவறானது என்றும் சொல்லக் கூடாது. இந்த விஷயங்களை நானும் சகிக்க முடியாதவைகளாகக் காணுகிறேன். ஏனெனில் நீங்கள் என்னையும் நான் கூறுகிறதையும் இவ்வளவு சந்தேகத்துடன் நடத்துகிறீர்கள், என்னுடைய வார்த்தைகளை ஏற்காமல் என்னைப் புறக்கணிக்கிறீர்கள், நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் எல்லாத் தீவிரத்தோடும் கூறுகிறேன்: நான் கூறுவதைத் தத்துவத்தோடு இணைக்காதீர்கள்; என்னுடைய வார்த்தைகளை ஒரு மோசடிக்காரனின் பொய்களோடு இணைக்காதீர்கள். அதை விட, என் வார்த்தைகளுக்கு அலட்சியமாகப் பதிலளிக்காதீர்கள். ஒருவேளை எதிர்காலத்தில் ஒருவரும் நான் உங்களுக்குக் கூறுவதை உங்களிடம் கூற முடியாது, அல்லது இவ்வளவு அன்போடு உங்களிடம் பேச முடியாது அல்லது அதைவிட இந்த கருத்துக்களின் வழியாக உங்களைப் பொறுமையாக நடத்த முடியாது. நீங்கள் நல்ல நேரங்களை நினைவுபடுத்திக்கொண்டும், அல்லது சத்தமாக விம்மிக்கொண்டும் அல்லது வலியால் முனகிக்கொண்டும், அல்லது இருண்ட இரவுகளின் ஊடாக சிறு துண்டு அளவிலான சத்தியம் அல்லது ஜீவனும் இன்றி வாழ்ந்துகொண்டு, அல்லது நம்பிக்கையின்றி காத்துக்கொண்டிருந்து, அல்லது எல்லா பகுத்தறிவையும் நீங்கள் இழந்து கசப்பான வருத்தங்களோடு வாழ்ந்துகொண்டு வரவிருக்கும் அந்த நாட்களைக் கழிப்பீர்கள்…. மெய்யாக உங்களில் யாரும் இந்த சாத்தியங்களில் இருந்து தப்பிக்க முடியாது. ஏனென்றால் உங்களில் ஒருவரும் உண்மையாக தேவனை ஆராதிக்கும் ஓர் இருக்கையில் அமரவில்லை, ஆனால் காமவெறியும் தீமையும் நிறைந்த உலகத்துக்குள் உங்களை மூழ்கடித்துக்கொண்டு, ஜீவனுக்கும் சத்தியத்திற்கும் சம்பந்தமற்றவையும் உண்மையில் அவற்றிற்கு எதிர்மாறாக இருப்பவைகளையும் உங்கள் நம்பிக்கைகளிலும், உங்கள் ஆவிகளிலும், ஆத்துமாக்களிலும், சரீரங்களிலும் கலந்துகொண்டு இருக்கிறீர்கள். ஆகையால் உங்களை வெளிச்சத்தின் பாதையில் கொண்டுவந்துவிடலாம் என்றே உங்களுக்காக நான் நம்பிக்கைகொள்கிறேன். உங்களை நீங்களே கவனித்துக்கொள்ளும், உங்களுக்காக நீங்களே கவனம் எடுத்துக்கொள்ளும் திறனுடையவர்களாக உங்களால் மாறமுடியும் மேலும் உங்கள் நடத்தையையும் மீறுதல்களையும் அலட்சியத்தோடு பார்க்கும் போது உங்களது சென்றடையும் இடம் குறித்து நீங்கள் மிக அதிகமான முக்கியத்துவம் அளிக்க மாட்டீர்கள் என்பதே என் ஒரே நம்பிக்கை.

நீண்ட காலமாகவே, தேவனை விசுவாசிக்கும் ஜனங்கள் எல்லோரும் ஓர் அழகான சென்றடையும் இடத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர், மேலும் அனைத்து தேவனுடைய விசுவாசிகளும் திடீரென நல்லதிர்ஷ்டம் தங்களுக்கு வரும் என்று நம்புகிறார்கள். வெகு சீக்கிரத்தில், தாங்கள் பரலோகத்தில் ஏதோ ஓர் இடத்தில் சமாதானமாக அமர்வதைக் காண்போம் என்று அவர்கள் எல்லோரும் நம்புகிறார்கள். ஆனால், அவர்களுடைய அழகான எண்ணங்களுடன், பரலோகத்தில் இருந்து கீழே பொழியும் இத்தகைய நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவும் அல்லது அங்கே ஓர் இருக்கையில் அமரவும் கூட தகுதி பெற்றிருக்கிறார்களா இல்லையா என்பதை இந்த ஜனங்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்று நான் கூறுகிறேன். தற்போது நீங்கள், உங்களைப் பற்றிய சிறந்த அறிவைக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் கடைசி நாட்களின் பேரழிவுகளில் இருந்தும் மற்றும் துன்மார்க்கரைத் தண்டிக்கும்போது சர்வவல்லவரின் கரத்தில் இருந்தும் தப்பிக்கும் நம்பிக்கையுடன் இன்னும் இருக்கிறீர்கள். இனிய கனவுகளைக் கொண்டிருப்பதும் தாங்கள் விருப்பத்துக்கேற்ற பொருட்களை விரும்புவதும் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்ட எல்லா ஜனங்களின் பொதுவான அம்சம் போலவும், மேலும் அது எந்த ஒரு தனி நபரின் அதியற்புதமான ஆலோசனை அல்ல என்பது போலவும் தோன்றுகிறது. அப்படியிருந்தும், உங்களுடைய இந்த ஆடம்பரமான ஆசைகளுக்கு மட்டுமல்லாமல் உங்கள் ஆசீர்வாதங்களை அடையும் ஆர்வத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இன்னும் நான் விரும்புகிறேன். உங்கள் மீறுதல்கள் எண்ணற்றவையாகவும், உங்கள் கலகத்தன்மை வளர்ந்துகொண்டே போவதையும் கருத்தில் கொள்கையில், இந்த விஷயங்கள் உங்களுடைய அழகான எதிர்கால வரைபடங்களுக்கு எவ்வாறு பொருத்தமாக இருக்க முடியும்? உன்னை எதுவும் கட்டுப்படுத்தாமல், நீ விரும்பிய வண்ணமே தவறுகளை செய்ய விரும்பி, ஆனால் அதே வேளையில் இன்னும் நீ உன் கனவுகள் உண்மையாக வேண்டும் என்று விரும்பினால், அந்த மயக்கத்திலேயே தொடர்வாயாக மேலும் ஒருபோதும் விழிக்காதே என்று நான் உன்னை வற்புறுத்துகிறேன்—ஏனெனில் உன்னுடையது ஒரு வெற்றுக் கனவு மேலும் நீதியுள்ள தேவனின் முன்னிலையில், அவர் உனக்காக ஒரு விதிவிலக்கை அளிக்க மாட்டார். நீ உன் கனவுகள் நனவாக வேண்டும் என்று மட்டும் விரும்பினால், பின்னர் ஒருபோதும் கனவு காணாதே; மாறாக, எப்போதும் சத்தியத்தையும் உண்மைகளையும் மட்டுமே எதிர்கொள். நீ இரட்சிக்கப்பட இது மட்டுமே ஒரே வழி. உறுதியான வகையில், இந்த முறைக்கான படிகள் என்ன?

முதலில், உன்னுடைய எல்லா மீறுதல்களையும் நோக்கிப்பார், மற்றும் உன்னிடமுள்ள சத்தியத்துக்கு இணங்காத எந்த நடத்தையையும் சிந்தனைகளையும் ஆராய்ந்து பார்.

இந்த ஒரு விஷயத்தை நீ எளிதாகச் செய்யலாம், மேலும் எல்லா புத்தியுள்ள ஜனங்களும் இதைச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், மீறுதல் மற்றும் சத்தியம் என்றால் என்ன என்று ஒருபோதும் அறியாதவர்கள் விதிவிலக்கு, ஏனெனில் அடிப்படை நிலையில், அவர்கள் புத்தியுள்ள ஜனங்கள் அல்லர். நேர்மையான, எந்த நிர்வாகக் கட்டளைகளையும் கடுமையான முறையில் மீறாத, மற்றும் தங்கள் மீறுதல்களை எளிதாக அறிந்துகொள்ளக் கூடிய தேவனால் அங்கீகரிக்கப்பட்ட ஜனங்களிடம் நான் பேசுகிறேன். நான் உங்களிடத்தில் கோரும் இந்த ஒரு விஷயம் நிறைவேற்றுவதற்கு எளிதாக இருந்தாலும், நான் உங்களிடத்தில் வேண்டுவது இந்த ஒரு விஷயத்தை மட்டுமல்ல. எதுவாக இருந்தாலும், இந்தத் தேவையைப் பற்றி நீங்கள் தனிமையில் சிரிக்க மாட்டீர்கள், மேலும் குறிப்பாக அதை நீங்கள் தாழ்வாகப் பார்க்கமாட்டீர்கள் அல்லது இலேசானதாகக் கருதமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அதைத் தீவிரமாகக் கருதவேண்டும், மேலும் அதைப் புறந்தள்ளக் கூடாது.

இரண்டாவதாக, உன்னுடைய ஒவ்வொரு மீறுதல்களுக்கும் கீழ்ப்படியாமைகளுக்கும் தொடர்பான ஒரு சத்தியத்தை நீ தேட வேண்டும், பின் இந்தச் சத்தியங்களைப் பயன்படுத்தி அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். அதன் பின்னர், உன்னுடைய மீறுதல் நடவடிக்கைகளையும் கீழ்ப்படியாத எண்ணங்களையும் செயல்களையும் சத்தியத்தைக் கடைப்பிடித்துப் பதிலீடு செய்.

மூன்றாவதாக, நீ ஒரு நேர்மையான நபராக இருக்க வேண்டும், எப்போதும் தந்திரமுள்ளவனாகவும் தொடர்ந்து ஏமாற்றும் ஒருவனாகவும் இருக்கக் கூடாது. (இங்கே நான் மீண்டும் உங்களை ஒரு நேர்மையான நபராக இருக்கும்படி கேட்கிறேன்.)

இந்த மூன்று காரியங்களையும் உன்னால் நிறைவேற்ற முடிந்தால், அதன்பின் நீ அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக—கனவுகள் நனவாகப்பெற்று நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ஒரு நபராக இருக்கிறாய். ஒருவேளை நீங்கள் இந்த கவனத்தைக் கவராத மூன்று தேவைகளையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளலாம், அல்லது ஒருவேளை அவற்றைப் பொறுப்பற்ற தன்மையில் கையாளலாம். எதுவாக இருந்தாலும், உங்கள் கனவுகளை நனவாக்குவதும் உங்கள் இலட்சியங்களை நடைமுறைப்படுத்துவதும் என் நோக்கமே தவிர உங்களைக் கேலி செய்வதோ அல்லது உங்களை முட்டாள் ஆக்குவதோ இல்லை.

என் கோரிக்கைகள் எளிமையாக இருக்கலாம், ஆனால் நான் உங்களிடம் கூறுவது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல் அவ்வளவு எளிதானது அல்ல. நீங்கள் செய்வதெல்லாம் இதைப் பற்றி சாதாரணமாகப் பேசுவதும் அல்லது வெற்று, ஆரவார அறிக்கைகள் மூலம் உளறித்திரிவதுமாக இருந்தால், பின் உங்கள் வரைபடங்களும் உங்கள் விருப்பங்களும் எப்போதும் ஒரு வெற்றுப்பக்கமாக மட்டுமே இருக்கும். உங்களில் பல ஆண்டுகளாகத் துன்பப்பட்டும் கடுமையாக உழைத்தும் பலன் எதுவும் இன்றி இருப்போருக்காக நான் இரக்கம் கொள்ள மாட்டேன். மாறாக, என் கோரிக்கைகளை நிறைவேற்றாதவர்களுக்குப் பிரதிபலன்கள் அல்ல, தண்டனை அளிப்பேன், அதைவிட எவ்வித இரக்கமும் காட்ட மாட்டேன். பல ஆண்டுகளாகப் பின்பற்றும் ஒருவராக இருந்து, எதுவாக இருந்தாலும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள் என்றும், மேலும் ஒரு சேவை செய்பவராக தேவனின் வீட்டில் இருந்ததற்காக மட்டும் உங்களுக்கு ஒரு கிண்ணம் சாதம் அளிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம். உங்களில் பெரும்பான்மையோர் இவ்விதமாகவே சிந்திக்கிறீர்கள் என்று நான் கூறுவேன், ஏனெனில் எவ்வாறு விஷயங்களைச் சாதகமாக்கிக்கொள்வது மற்றும் நீங்கள் சாதகமாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்ற கொள்கையை எப்போதும் பின்பற்றினீர்கள். இவ்வாறு, நான் இப்போது உங்களிடம் எல்லாத் தீவிரத்துடனும் கூறுகிறேன்: உன் கடின உழைப்பு எவ்வளவு பாராட்டத்தக்கது, உன் தகுதிகள் எவ்வளவு கவர்ச்சிகரமானது, நீ எவ்வளவு நெருக்கமாக என்னைப் பின் தொடர்கிறாய், நீ எவ்வளவு புகழ்பெற்றவனாக இருக்கிறாய், அல்லது உன் மனப்பான்மையை நீ எவ்வளவு தூரம் மேம்படுத்தி இருக்கிறாய் என்று நான் கவலைப்பட மாட்டேன்; என்னுடைய கோரிக்கைகளை நீ நிறைவுசெய்யாத வரையில், உன்னால் என் பாராட்டைப் பெற முடியாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக உங்களுடைய எல்லா எண்ணங்களையும் கணக்கீடுகளையும் தள்ளுபடி செய்துவிடுங்கள், மேலும் என்னுடைய கோரிக்கைகளைத் தீவிரமாகக் கருதத் தொடங்குங்கள்; இல்லாவிட்டால், என்னுடைய கிரியையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர நான் உங்கள் அனைவரையும் சாம்பலாக மாற்றிவிடுவேன் மேலும், மிக மோசமான வகையில் ஆண்டாண்டான என் கிரியை மற்றும் துன்பத்தை ஒன்றுமில்லாமல் மாற்றிவிடுவேன், ஏனெனில் என்னுடைய சத்துருக்களையும் தீமையின் துர்நாற்றம் வீசும் மற்றும் சாத்தானின் தோற்றத்தையும் கொண்ட அந்த ஜனங்களையும் என் ராஜ்யத்துக்குள் என்னால் கொண்டுவர முடியாது அல்லது அவர்களை அடுத்த யுகத்துக்குக் கொண்டுசெல்ல முடியாது.

எனக்கு ஏராளமான நம்பிக்கைகள் இருக்கின்றன. நீங்கள் தகுந்த மற்றும் நல்ல முறையில் நடந்து கொள்வீர்கள், உங்கள் கடமைகளை உண்மையோடு நிறைவேற்றுவீர்கள், சத்தியமும் மனிதத்தன்மையும் உடையவர்களாக இருப்பீர்கள், தங்களிடமுள்ள எல்லாவற்றையும் மற்றும் தங்கள் வாழ்க்கையைக் கூட தேவனுக்காகத் தரும் ஜனங்களாக இருப்பீர்கள் என்றெல்லாம் நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கைகள் எல்லாம் உங்கள் போதாமைகள் மற்றும் உங்கள் சீர்கேடு மற்றும் கீழ்ப்படியாமையில் இருந்து பிறக்கின்றன. நான் உங்களோடு நடத்திய உரையாடல்களில் ஒன்றும் உங்கள் கவனத்தைக் கவரப் போதுமானதாக இல்லை என்றால், என்னால் இப்போது செய்யக்கூடியது என்னவென்றால் இனிமேலும் சொல்லாமல் இருப்பதுதான். இருப்பினும், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று உங்களுக்குப் புரிகிறது. நான் பெரும்பாலும் ஓய்வு எடுப்பதில்லை, ஆகவே நான் பேசாவிட்டால், நான் ஜனங்கள் பார்க்கும்படி எதையாவது செய்வேன். யாரோ ஒருவரின் நாக்கு அழுகும்படி நான் செய்யலாம், அல்லது அவயவங்கள் துண்டிக்கப்பட்டு யாரையாவது சாகும்படி செய்யலாம், அல்லது ஜனங்களுக்கு நரம்புக் கோளாறுகளை அளிக்கலாம் மற்றும் அவர்களைப் பல வகையிலும் அருவருப்பான தோற்றமுடையவர்களாகச் செய்யலாம். மீண்டும், அவர்களுக்கென்றே குறிப்பாக நான் உருவாக்க்கிய வேதனைகளால் ஜனங்கள் துன்புறும்படி என்னால் செய்யமுடியும். இந்த வகையில் மகிழ்ச்சியாகவும், மிகவும் சந்தோஷமாகவும், மற்றும் அதிக நிறைவாகவும் என்னால் உணர முடியும். “நன்மைக்கு நன்மையும், தீமைக்குத் தீமையும் பலனாகக் கிடைக்கும்” என்று எப்போதும் சொல்லப்பட்டிருக்கிறது, எனவே இப்போது ஏன் கூடாது? நீ என்னை எதிர்க்க விரும்பினால், மற்றும் என்னைக் குறித்து சில நியாயத்தீர்ப்பைச் செய்தால், பின் நான் உன் வாயை அழுகச் செய்வேன், மற்றும் அது முடிவற்ற வகையில் என்னை மகிழச் செய்யும். இது ஏன் என்றால் முடிவாக, நீ செய்துள்ளது சத்தியம் அல்ல, அதற்கும் ஜீவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதேசமயத்தில் நான் செய்வது எல்லாம் சத்தியம்; என்னுடைய செயல்கள் எல்லாம் எனது கிரியையின் கோட்பாடுகளுக்கும் நான் அமைத்துள்ள நிர்வாக ஆணைகளுக்கும் சம்பந்தப்பட்டவை. ஆகவே, கொஞ்சம் நற்குணங்களைத் திரட்டுங்கள், இவ்வளவு தீமைகளைச் செய்வதை நிறுத்துங்கள், மேலும் உங்கள் ஓய்வுநேரத்தில் என் கோரிக்கைகளைக் கேளுங்கள் என்று உங்கள் ஒவ்வொருவரையும் நான் வற்புறுத்துகிறேன். அப்போது நான் மகிழ்ச்சியாக உணர்வேன். மாம்சத்துக்காக நீங்கள் எடுக்கும் முயற்சியில் ஆயிரத்தில் ஒருபங்கை சத்தியத்திற்காக நீங்கள் வழங்கினால் (அல்லது கொடையளித்தால்) கூட, நீ அடிக்கடி மீறுதல்களைச் செய்ய மாட்டாய் மற்றும் அழுகிப்போன வாய்களைக் கொண்டிருக்க மாட்டாய் என்று நான் சொல்லுகிறேன். இது தெளிவாகத் தெரியவில்லையா?

நீ அதிகமாக மீறுதல்களைச் செய்யும்போது, ஒரு நல்ல சென்றடையும் இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உனக்கு மிகக் குறைவாகவே இருக்கும். மாறாக, மிகக் குறைவான மீறுதல்களை நீ செய்யும் போது, தேவனால் புகழப்படுவதற்கு சிறந்த வாய்ப்புகள் உனக்குக் கிடைக்கும். உன்னை மன்னிப்பதற்கு என்னால் முடியாத அளவுக்கு உனது மீறுதல்கள் அதிகரித்தால், பின்னர் மன்னிக்கப்படுவதற்கான உன் வாய்ப்புகளை நீ முற்றிலுமாக வீணாக்கியிருப்பாய். அவ்வாறாக, உனது சென்றடையும் இடம் மேலே இருக்காது, ஆனால் கீழே இருக்கும். நீ என்னை விசுவாசிக்காவிட்டால், பின்னர் தைரியமாக பொல்லாங்கைச் செய், மேலும் அது உனக்கு என்ன கொண்டுவரும் என்று பார். நீ சத்தியத்தை மிகவும் வாஞ்சையோடு கடைப்பிடிக்கும் ஒரு நபராக இருந்தால், உன் மீறுதல்களுக்காக மன்னிக்கப்பட நிச்சயமாக நீ ஒரு வாய்ப்பைப் பெறுவாய், மேலும் உன் கீழ்ப்படியாமை குறைந்துகொண்டே போகும். சத்தியத்தைக் கடைப்பிடிக்க மனதில்லாத ஒரு நபராக நீ இருந்தால், பின் தேவனுக்கு முன்பான உன் மீறுதல்கள் நிச்சயமாக எண்ணிக்கையில் அதிகரிக்கும் மேலும் வரம்பை எட்டும்வரை மிகவும் அடிக்கடி நீ கீழ்ப்படியாமல் இருப்பாய், அதுவே உன் முழுமையான அழிவுக்கான நேரமாக இருக்கும். ஆசீர்வாதங்களைப் பெறும் உன்னுடைய மகிழ்ச்சியான கனவு பாழாகும் போது இது நடக்கும். உன்னுடைய மீறுதல்களை ஒரு முதிர்வடையாத அல்லது முட்டாள்தனமான ஒரு நபரின் சாதாரணத் தவறுகள்தான் என்று எண்ணாதே; உனது மோசமான திறமையின் காரணமாக சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்டது என்ற சாக்குப்போக்கைப் பயன்படுத்தாதே. மேலும், உன்னால் செய்யப்பட்ட மீறுதல்கள் அதிகம் அறியாத ஒருவனின் செயல்கள் என்று சாதாரணமாகக் கருதாதே. உன்னை நீயே மன்னித்துக் கொள்வதில் நீ சிறந்தவனாக இருந்தால் மேலும் உன்னை நீயே பெருந்தன்மையோடு நடத்திக்கொண்டால், பின்னர் நான் உனக்குச் சொல்லுகிறேன் நீ ஒரு போதும் சத்தியத்தைப் பெற முடியாத ஒரு கோழை, மட்டுமல்லாது உன்னுடைய மீறுதல்கள் உன்னைச் சுற்றிச்சுற்றி வந்து வதைப்பதற்கு முடிவே இருக்காது; அவை சத்தியத்தின் தேவைகளை நீ நிறைவுசெய்வதை ஒருபோதும் அனுமதிக்கவிடாமல், உன்னை என்றென்றைக்கும் சாத்தானின் ஒரு விசுவாசமுள்ள கூட்டாளியாக இருக்கச் செய்யும். இன்னும் உங்களுக்கு என் புத்திமதி இதுவே: உனது மறைவான மீறுதல்களைக் கவனிக்கத் தவறுகையில் நீ சென்றடையும் இடத்தின் மேல் மட்டும் கவனம் செலுத்தாதே; மீறுதல்களைத் தீவிரமாக எடுத்துக் கொள், மேலும் உனது சென்றடையும் இடத்தின் மேல் உள்ள அக்கறையால் அவற்றில் ஒன்றையும் கவனிக்கத் தவறாதே.

முந்தைய: மூன்று புத்திமதிகள்

அடுத்த: தேவனின் மனநிலையைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக