தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்
பெரும்பாலான ஜனங்களின் தேவன் மீதான விசுவாசத்தின் சாராம்சம் மத நம்பிக்கையே ஆகும். அவர்களால் தேவனை நேசிக்க இயலாது, மேலும் இயந்திர மனிதனைப் போல மட்டுமே தேவனைப் பின்பற்ற முடியும், தேவனுக்காக உண்மையிலேயே ஏங்கவோ அல்லது அவரைத் தொழுதுகொள்ளவோ முடியாது. அவர்கள் வெறுமனே அவரை அமைதியாகப் பின்பற்றுகிறார்கள். பலர் தேவனை விசுவாசிக்கிறார்கள், ஆனால் தேவனை நேசிப்பவர்கள் மிகக் குறைவு, அவர்கள் பேரழிவிற்குப் பயப்படுவதால் மட்டுமே, அவர்கள் தேவனை “வணங்குகிறார்கள்”, இல்லையென்றால் தேவன் உயர்ந்தவர் மற்றும் வலிமைமிக்கவர் என்பதால் அவர்கள் அவரைப் “போற்றுகிறார்கள்”. ஆனால் அவர்களின் பயபக்தியிலும் புகழ்ச்சியிலும், அன்போ உண்மையான ஏக்கமோ இல்லை. அவர்களின் அனுபவங்களில் அவர்கள் சத்தியத்தை மிகச்சிறிய அளவில் இல்லையெனில் சில அற்பமான மறைபொருட்களை நாடுகிறார்கள். பெரும்பாலான ஜனங்கள் வெறுமனே பின்பற்றுகிறார்கள், கலங்கிய நீரில் ஆசீர்வாதத்தை மீனைப்போல பிடிக்கிறார்கள். அவர்கள் சத்தியத்தைத் தேடுவதும் இல்லை, அவர்கள் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக உண்மையிலேயே தேவனுக்குக் கீழ்ப்படிவதுமில்லை. தேவன்மீது உள்ள எல்லா ஜனங்களுடைய விசுவாசத்தின் வாழ்க்கையும் அர்த்தமற்றது, அதற்கு மதிப்பு இல்லை, அதில் அவர்களின் தனிப்பட்ட கருத்துகளும் நோக்கங்களும் உள்ளன. அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்காகவேயன்றி தேவனை நேசிப்பதற்காக தேவனை விசுவாசிக்கவில்லை. பலர் தங்கள் விருப்பப்படி நடக்கிறார்கள். அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள், தேவனின் ஆர்வங்களையும் அல்லது அவர்கள் செய்வது தேவனின் சித்தத்திற்கு ஏற்ப இருக்கிறதா என்றும் ஒருபோதும் ஆலோசிக்க மாட்டார்கள். அத்தகையவர்களால் உண்மையான விசுவாசத்தைக்கூட அடைய முடியாது, தேவன் மீதான அன்பையும் அடைய முடியாது. தேவனின் சாராம்சம் மனிதன் நம்புவதற்காக மட்டுமல்ல, இன்னும், அது மனிதனால் நேசிக்கப்பட வேண்டும். ஆனால் தேவனை விசுவாசிக்கிறவர்களில் பலரால் இந்த “ரகசியத்தை” கண்டுபிடிக்க முடியாது. ஜனங்கள் தேவனை நேசிக்கத் துணிவதும் இல்லை, அவரை நேசிக்க முயற்சிப்பதும் இல்லை. தேவனைக் குறித்து அன்புகூர அதிகம் உண்டு என்று அவர்கள் ஒருபோதும் கண்டுபிடித்திருக்கவில்லை. தேவன் மனிதனை நேசிக்கும் தேவன் என்றும், மனிதனால் நேசிக்கப்பட வேண்டிய தேவன் என்றும் அவர்கள் ஒருபோதும் கண்டுபிடித்திருக்கவில்லை. தேவனின் அருமை அவருடைய கிரியையில் வெளிப்படுத்தப்படுகிறது. ஜனங்கள் அவருடைய கிரியையை அனுபவிக்கும் போது மட்டுமே அவர்களால் அவருடைய அருமையைக் கண்டறிய முடியும். அவர்களின் உண்மையான அனுபவங்களில் மட்டுமே தேவனின் அருமையை அவர்களால் புரிந்துகொள்ள முடியும். நிஜ வாழ்க்கையில் அதைக் கடைபிடிக்காமல், தேவனின் அருமையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. தேவனைப் பற்றி நேசிக்க அநேகம் இருக்கிறது, ஆனால் உண்மையில் அவருடன் ஐக்கியப்படாமல் ஜனங்களால் அதைக் கண்டுபிடிக்க இயலாது. அதாவது, தேவன் மாம்சமாக மாறவில்லை என்றால், ஜனங்களால் அவருடன் உண்மையாக ஐக்கியப்பட இயலாது, அவர்களால் உண்மையில் அவருடன் ஐக்கியப்பட முடியாவிட்டால், அவர்களால் அவருடைய கிரியையை அனுபவிக்கவும் முடியாது. எனவே தேவன் மீதான அவர்களுடைய அன்பு மிகவும் பொய் மற்றும் கற்பனையால் கறைபடுத்தப்படுகிறது. பரலோகத்தில் உள்ள தேவன் மீதான அன்பு பூமியிலுள்ள தேவன் மீதான அன்பைப் போல உண்மையானதல்ல, ஏனென்றால் ஜனங்கள் தங்களின் கண்களால் பார்த்ததையும் அவர்கள் தனிப்பட்ட முறையில் அனுபவித்ததையும் விட, பரலோகத்தில் தேவனைப் பற்றிய அறிவு அவர்களின் கற்பனைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தேவன் பூமிக்கு வரும்போது, அவருடைய உண்மையான கிரியைகளையும் அவருடைய அருமையையும் ஜனங்களால் காண முடிகிறது, மேலும் அவருடைய நடைமுறை மற்றும் இயல்பான மனநிலையை அவர்கள் அனைவராலும் காண முடிகிறது, இவை அனைத்தும் பரலோகத்தில் உள்ள தேவனைக்குறித்த அறிவை விட ஆயிரக்கணக்கான மடங்கு உண்மையானவை. ஜனங்கள் பரலோகத்திலுள்ள தேவனை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், இந்த அன்பைக் குறித்து உண்மையானது எதுவுமில்லை, அது மனிதனின் கருத்துக்களால் நிறைந்துள்ளது. அவர்கள் பூமியிலுள்ள தேவன்மீது எவ்வளவு குறைவாக அன்பு வைத்திருந்தாலும், இந்த அன்பு உண்மையானது. அதில் கொஞ்சம் மட்டுமே இருந்தாலும், அது இன்னும் உண்மையானது. தேவன் உண்மையான கிரியையின் மூலம் ஜனங்கள் அவரை அறிந்துகொள்ளச் செய்கிறார், இந்த அறிவின் மூலம் அவர் அவர்களின் அன்பைப் பெறுகிறார். இது பேதுருவைப் போன்றது, அவர் இயேசுவோடு வாழ்ந்திருக்காவிட்டால், இயேசுவை வணங்குவது அவருக்கு சாத்தியமில்லை. ஆகவே, இயேசுவுடனான ஐக்கியத்தின் அடிப்படையில் இயேசுவிடம் அவர் கொண்டிருந்த விசுவாசமும் கட்டப்பட்டது. மனிதனை தம்மை நேசிக்க வைப்பதற்காக, தேவன் மனிதர்களிடையே வந்திருந்து மனிதனுடன் சேர்ந்து வாழ்கிறார், மேலும் அவர் மனிதனைப் பார்க்கவும் அனுபவிக்கவும் வைக்கும் எல்லாமே தேவனுடைய யதார்த்தமாகும்.
ஜனங்களைப் பரிபூரணமாக்க தேவன் யதார்த்தத்தையும் உண்மைகளின் தோற்றத்தையும் பயன்படுத்துகிறார், தேவனின் வார்த்தைகள் அவர் ஜனங்களைப் பரிபூரணப்படுத்துவதன் ஒரு பகுதியை நிறைவேற்றுகின்றன, இதுவே வழிகாட்டுதலின் கிரியை மற்றும் வழியைத் திறப்பது ஆகும். அதாவது, தேவனின் வார்த்தைகளில் நீ நடைமுறையின் பாதையையும் தரிசனங்களின் அறிவையும் கண்டுபிடிக்க வேண்டும். இந்தக் காரியங்களைப் புரிந்துகொள்வதன் மூலம், மனிதன் ஒரு பாதையையும் தரிசனத்தையும் தனது உண்மையான நடைமுறையில் கொண்டிருப்பான், மேலும் தேவனின் வார்த்தைகளின் மூலம் அவனால் வெளிச்சத்தைப் பெற முடியும். இவை தேவனிடமிருந்து வந்தவை என்பதையும், அதிகம் புரிந்துகொள்ள முடியும் என்பதையும் அவனால் புரிந்துகொள்ள முடிகிறது. புரிந்து கொண்ட பிறகு, மனிதன் உடனடியாக இந்த யதார்த்தத்திற்குள் நுழைய வேண்டும், மேலும் தேவனின் வார்த்தைகளை அவனது நிஜ வாழ்க்கையில் தேவனைத் திருப்திப்படுத்தப் பயன்படுத்த வேண்டும். தேவன் எல்லாவற்றிலும் உன்னை வழிநடத்துவார், மேலும் உனக்கு நடைமுறையான பாதையைத் தருவார், மேலும் அவர் குறிப்பாக அருமையானவர் என்பதை உன்னை உணர வைப்பார், மேலும் உன்னில் தேவனுடைய ஒவ்வொரு கட்ட கிரியையும் உன்னைப் பரிபூரணமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதைக் காண உன்னை அனுமதிப்பார். நீ தேவனின் அன்பைக் காண விரும்பினால், நீ உண்மையிலேயே தேவனின் அன்பை அனுபவிக்க விரும்பினால், நீ யதார்த்தத்திற்குள் ஆழமாகச் செல்ல வேண்டும், நீ நிஜ வாழ்க்கையில் ஆழமாகச் செல்ல வேண்டும், மேலும் தேவன் செய்கின்ற அனைத்தும் அன்பும் இரட்சிப்பும்தான் என்பதைக் காண வேண்டும், அவர் செய்கின்றவை எல்லாம் அசுத்தமானதை விட்டுவிட ஜனங்களுக்கு உதவுவதற்கும், தேவனின் சித்தத்தை நிறைவேற்ற இயலாத மனிதனுக்குள் உள்ள காரியங்களைச் சுத்திகரிப்பதற்கும் ஆகும். மனிதனுக்கு வழங்குவதற்கு தேவன் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். நிஜ வாழ்க்கையின் சூழ்நிலைகளை ஜனங்கள் அனுபவிக்க அவர் ஏற்பாடு செய்கிறார், மேலும் தேவனின் அநேக வார்த்தைகளை ஜனங்கள் புசித்துப் பானம்பண்ணினால், அவர்கள் உண்மையில் அவற்றைக் கடைபிடிக்கும்போது, தேவனின் அநேக வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களால் தங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்துச் சிரமங்களையும் தீர்க்க முடியும். அதாவது, நீ யதார்த்தத்திற்குள் ஆழமாகச் செல்ல தேவனின் வார்த்தைகளைக் கொண்டிருக்க வேண்டும். நீ தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணாமலும் தேவனுடைய கிரியை இல்லாமலும் இருந்தால், நிஜ வாழ்க்கையில் உனக்குப் பாதை இருக்காது. நீ ஒருபோதும் தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணவில்லை என்றால், உனக்கு ஏதாவது நேர்ந்தால் நீ குழப்பமடைவாய். தேவனை நேசிக்க வேண்டும் என்பதை மட்டுமே நீ அறிவாய், ஆனால் நீ எந்த வேறுபாட்டிற்கும் தகுதியற்றவன் மற்றும் நடைமுறைக்குறிய பாதையைக் கொண்டிருக்கவில்லை. நீ தடுமாறிக் குழப்பமடைகிறாய், சில சமயங்களில் மாம்சத்தைத் திருப்திப்படுத்துவதன் மூலம் நீ தேவனைத் திருப்திப்படுத்தலாம் என்று கூட நம்புகிறாய். இவை அனைத்தும் தேவனின் வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணாமல் இருப்பதன் விளைவாகும். அதாவது, நீ தேவனின் வார்த்தைகளின் உதவியின்றி இருந்து, யதார்த்தத்திற்குள் மட்டுமே இருந்தால், உன்னால் அடிப்படையில் நடைமுறைக்குறிய பாதையைக் கண்டுபிடிக்க இயலாது. இது போன்றவர்களுக்கு தேவனை விசுவாசிப்பதன் அர்த்தம் என்னவென்று வெறுமனே புரிவதில்லை, தேவனை நேசிப்பதன் அர்த்தம் என்ன என்பதும் அவர்களுக்குப் புரிவதில்லை. தேவனுடைய வார்த்தைகளின் வெளிச்சம் மற்றும் வழிகாட்டுதலைப் பயன்படுத்தி, நீ அடிக்கடி ஜெபிக்கிறாய், ஆராய்கிறாய் மற்றும் தேடுகிறாய் என்றால், இதன் மூலம் நீ கடைப்பிடிக்க வேண்டியதைக் கண்டுபிடித்து, பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, உண்மையிலேயே தேவனுடன் ஒத்துழைத்து, தடுமாற்றமாகவும் குழப்பமாகவும் இல்லாமல் இருக்கிறாய் என்றால், பின்னர் நீ நிஜ வாழ்க்கையில் ஒரு பாதையைப் பெற்றிருப்பாய், மேலும் தேவனை உண்மையிலேயே திருப்திப்படுத்துவாய். நீ தேவனைத் திருப்திப்படுத்தியிருக்கும்போது, உனக்குள் தேவனின் வழிநடத்துதல் இருக்கும், மேலும் நீ குறிப்பாக தேவனால் ஆசீர்வதிக்கப்படுவாய், இது உனக்கு இன்ப உணர்வைத் தரும். நீ தேவனைத் திருப்திப்படுத்தியிருப்பதால் நீ குறிப்பாகக் கவுரவிக்கப்பட்டவனாய் உணருவாய், நீ குறிப்பாக உனக்குள்ளே பிரகாசமாக இருப்பாய், உன் இருதயத்தில் நீ தெளிவாகவும் சமாதானத்துடனும் இருப்பாய். உன் மனசாட்சி ஆறுதலடைந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடும், உன் சகோதர சகோதரிகளைப் பார்க்கும்போது நீ உனக்குள்ளே இனிமையாக உணருவாய். தேவனின் அன்பை அனுபவிப்பதன் அர்த்தம் இதுதான், இது மட்டுமே உண்மையிலேயே தேவனை அனுபவிப்பது ஆகும். தேவனின் அன்பை ஜனங்கள் அனுபவிப்பது அனுபவத்தின் மூலம் அடையப்படுகிறது. கஷ்டங்களை அனுபவிப்பதன் மூலமும், சத்தியத்தைக் கடைபிடிப்பதை அனுபவிப்பதன் மூலமும், அவர்கள் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். தேவன் உன்னை உண்மையிலேயே நேசிக்கிறார் என்று நீ சொன்னால், ஜனங்களுக்காக தேவன் உண்மையிலேயே ஒரு பெரிய கிரயத்தைச் செலுத்தியுள்ளார், அவர் பொறுமையாகவும் கனிவாகவும் பல வார்த்தைகளை பேசியுள்ளார், மற்றும் எப்போதும் ஜனங்களை இரட்சிக்கிறார், இந்த வார்த்தைகளை நீ உச்சரிப்பது தேவனின் இன்பத்தின் ஒரே ஒரு பக்கம் மட்டுமே ஆகும். ஆனாலும், ஜனங்கள் தங்கள் நிஜ வாழ்க்கையில் சத்தியத்தைக் கடைபிடிப்பதே அதிக சந்தோஷமும் உண்மையான சந்தோஷமும் ஆகும். அதன் பிறகு அவர்கள் தங்கள் இருதயங்களில் சமாதானமாகவும் தெளிவாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குள்ளாகப் பெரிதாக அசைக்கப்பட்டதை உணர்கிறார்கள் மற்றும் தேவன் மிகவும் அன்பானவர் என்று உணர்கிறார்கள். நீ செலுத்திய கிரயம் நியாயமானதை விட அதிகம் என்பதை நீ உணருவாய். உன் முயற்சிகளில் ஒரு பெரிய கிரயத்தைச் செலுத்தியுள்ளதால், நீ குறிப்பாக உனக்குள்ளே பிரகாசமாக இருப்பாய். நீ உண்மையிலேயே தேவனின் அன்பை அனுபவித்து வருகிறாய் என்பதை நீ உணருவாய், மேலும் தேவன் ஜனங்களில் இரட்சிப்பின் கிரியையைச் செய்துள்ளார் என்பதையும், ஜனங்களைச் சுத்திகரிப்பது என்பது தூய்மைப்படுத்துவதாகும் என்பதையும் நீ புரிந்துகொள்வாய். அவர்கள் தேவனை உண்மையிலேயே நேசிக்கிறார்களா என்று அவர்களைச் சோதிக்க தேவன் முயற்சிக்கிறார். நீ எப்பொழுதும் இந்த வழியில் சத்தியத்தைக் கடைபிடித்தால், நீ படிப்படியாக தேவனின் பெரும்பாலான கிரியைகளைப் பற்றிய தெளிவான அறிவை வளர்த்துக் கொள்வாய், அந்நேரத்தில் நீ தேவனின் வார்த்தைகள் உனக்கு முன்பாக படிகத்தைப் போலத் தெளிவாக இருப்பதை நீ உணர்ந்து கொள்வாய். உன்னால் பல உண்மைகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தால், எல்லா விஷயங்களையும் கடைப்பிடிப்பது எளிது என்றும், நீ எந்தவொரு பிரச்சினையையும் சமாளிக்கலாம் மற்றும் எந்தவொரு சோதனையையும் சமாளிக்க முடியும் என்றும் நீ உணர்ந்து கொள்வாய், மேலும் உனக்கு எதுவும் ஒரு பிரச்சனையல்ல என்பதை நீ கண்டு கொள்வாய், இது பெரிதும் உன்னைச் சுதந்திரமாக்கி விடுவிக்கும். இந்த நேரத்தில், நீ தேவனின் அன்பை அனுபவிப்பாய், மேலும் தேவனின் உண்மையான அன்பு உன் மீது வந்திருக்கும். தரிசனங்களைக் கொண்டவர்களையும், சத்தியம் உடையவர்களையும், அறிவுள்ளவர்களையும், அவரை உண்மையாக நேசிப்பவர்களையும் தேவன் ஆசீர்வதிக்கிறார். ஜனங்கள் தேவனின் அன்பைக் காண விரும்பினால், அவர்கள் நிஜ வாழ்க்கையில் சத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், அவர்கள் வலியைத் தாங்கிக்கொள்ளவும், தேவனைத் திருப்திப்படுத்தத் தாங்கள் விரும்புவதைக் கைவிடவும் தயாராக இருக்க வேண்டும், மேலும் அவர்களின் கண்களில் கண்ணீர் இருந்தபோதிலும், அவர்களால் தேவனின் இருதயத்தை இன்னும் திருப்திப்படுத்த முடிய வேண்டும். இந்த வழியில், தேவன் நிச்சயமாக உன்னை ஆசீர்வதிப்பார், மேலும் இது போன்ற கஷ்டங்களை நீ சகித்தால், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பின்பற்றியிருக்கும். நிஜ வாழ்க்கையின் மூலமாகவும், தேவனின் வார்த்தைகளை அனுபவிப்பதன் மூலமாகவும், ஜனங்கள் தேவனின் அருமையைக் காண முடிகிறது, மேலும் அவர்கள் தேவனின் அன்பை ருசித்திருந்தால் மட்டுமே அவரை உண்மையாக நேசிக்க அவர்களால் முடியும்.
தேவனை நேசிப்பவர்கள் சத்தியத்தை நேசிப்பவர்களாவர், மேலும் சத்தியத்தை நேசிப்பவர்கள் அதை அதிகமாகக் கடைப்பிடிக்கும் போது, அவர்கள் அதை அதிகமாகக் கொண்டுள்ளனர்; அவர்கள் சத்தியத்தை எவ்வளவு அதிகமாகக் கடைப்பிடிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக தேவனின் அன்பைப் பெற்றிருப்பார்கள். மேலும் அவர்கள் சத்தியத்தை எவ்வளவு அதிகமாகக் கடைப்பிடிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நீ எப்பொழுதும் இந்த வழியில் நடந்தால், உன்னைக் குறித்த தேவனின் அன்பு படிப்படியாகப் பேதுரு தேவனை அறிந்து கொண்டதைப் போலவே உன்னைப் பார்க்கும்படியாகச் செய்யும். பேதுரு, தேவனிடம் வானத்தையும் பூமியையும் மற்றும் எல்லாவற்றையும் உண்டாக்கும் ஞானம் மட்டுமல்ல, ஆனால், மேலும், மக்களில் உண்மையான கிரியையைச் செய்வதற்கான ஞானமும் அவரிடம் உள்ளது என்று சொன்னார். வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் உண்டாக்கியதன் காரணமாக மட்டுமல்லாமல், மேலும் மனிதனைப் படைப்பதற்கும், மனிதனை இரட்சிப்பதற்கும், மனிதனைப் பரிபூரணமாக்குவதற்கும், அவனுடைய அன்பைப் பெறுவதற்குமான அவருடைய திறனின் காரணமாக அவர் ஜனங்களின் அன்பிற்குத் தகுதியானவர் என்று பேதுரு கூறினான். ஆகவே, மனிதனின் அன்பிற்குத் தகுதியானவை அவரிடத்தில் அதிகம் இருப்பதாகப் பேதுரு சொல்லத்தான் செய்தான். பேதுரு இயேசுவை நோக்கி, “வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் உண்டாக்கியதே ஜனங்களின் அன்பிற்கு நீர் தகுதியானவராக ஒரே காரணமா? உம்மில் உள்ள அநேக காரியங்கள் அன்புக்குறியவை. நீர் நிஜ வாழ்க்கையில் செயல்படுகிறீர், ஏவுகிறீர், உம் ஆவி என்னை உள்ளே தொடுகிறது, நீர் என்னை ஒழுங்குபடுத்துகிறீர், நீர் என்னை நிந்திக்கிறீர்—இந்த விஷயங்கள் ஜனங்களின் அன்பிற்கு இன்னும் தகுதியானவை.” நீ தேவனின் அன்பைக் காணவும் அனுபவிக்கவும் விரும்பினால், நீ நிஜ வாழ்க்கையில் ஆராய்ந்து தேட வேண்டும், மேலும் உன் சொந்த மாம்சத்தை ஒதுக்கி வைக்க தயாராக இருக்க வேண்டும். இந்தத் தீர்மானத்தை நீ எடுக்க வேண்டும். சோம்பேறியாகவோ அல்லது மாம்சத்தின் இன்பங்களை விரும்பாமலோ, மாம்சத்திற்காக வாழாமல் தேவனுக்காக வாழ்பவனாகவும் இருந்து, எல்லாவற்றிலும் தேவனைத் திருப்திப்படுத்தக்கூடிய உறுதியான ஒருவனாக நீ இருக்க வேண்டும். நீ தேவனைத் திருப்திப்படுத்தாத சமயங்கள் இருக்கலாம். ஏனென்றால், நீ தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. அடுத்த முறை, அதிக முயற்சி தேவை என்றாலும், நீ அவரை திருப்திப்படுத்த வேண்டும் மற்றும் மாம்சத்தைத் திருப்திப்படுத்தக்கூடாது. இந்த வழியில் நீ அனுபவம் பெறும்போது, நீ தேவனை அறிந்து கொண்டிருப்பாய். வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் தேவனால் உண்டாக்க முடியும் என்பதையும், அவர் மாம்சமாகிவிட்டார் என்பதையும், அதனால் ஜனங்கள் உண்மையில் அவரைப் பார்க்கவும், அவருடன் உண்மையில் ஐக்கியப்படவும் முடியும் என்பதை நீ கண்டுகொள்வாய். அவர் மனிதர்களிடையே நடக்க முடிகிறது என்பதையும், அவருடைய ஆவியால் நிஜ வாழ்க்கையில் ஜனங்களைப் பரிபூரணமாக்க முடியும் என்பதையும், அவருடைய அருமையைக் காணவும், அவருடைய ஒழுக்கத்தையும், சிட்சையையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கவும் அவர்களை அனுமதிக்கிறது என்பதையும் நீ கண்டுகொள்வாய். நீ எப்போதுமே இந்த வழியில் அனுபவித்தால், நிஜ வாழ்க்கையில் நீ தேவனிடமிருந்து பிரிக்கமுடியாதவனாக இருப்பாய், ஒரு நாள் தேவனுடனான உன் உறவு சாதாரணமாக இருப்பது நிறுத்தப்பட்டால், உன்னால் நிந்தனைக்கு ஆளாகி வருத்தத்தை உணர முடியும். நீ தேவனுடன் ஒரு சரியான உறவைக் கொண்டிருக்கும்போது, நீ ஒருபோதும் தேவனை விட்டு விலக விரும்பமாட்டாய், ஒரு நாள் தேவன் உன்னைத் தாம் கைவிட்டு விடுவதாகச் சொன்னால், நீ பயப்படுவாய், மேலும் நீ தேவனால் கைவிடப்படுவதை விட இறந்துவிடுவது மேல் என்று கூறுவாய். இந்த உணர்ச்சிகளை நீ பெற்றவுடன், உன்னால் தேவனை விட்டு விலக இயலாது என்று நீ உணர்ந்து கொள்வாய், இந்த வழியில், நீ ஒரு அஸ்திபாரத்தைக் கொண்டிருப்பாய், மேலும் தேவனின் அன்பை உண்மையிலேயே அனுபவிப்பாய்.
தேவனை தங்கள் வாழ்க்கையாக அனுமதிப்பதைப் பற்றி ஜனங்கள் அடிக்கடி பேசுகிறார்கள், ஆனால் அவர்களின் அனுபவம் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை. தேவனே உன் ஜீவன் என்றும், ஒவ்வொரு நாளும் அவர் உன்னை வழிநடத்துகிறார் என்றும், நீ ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணுகிறாய் என்றும், ஒவ்வொரு நாளும் நீ அவரிடம் ஜெபிக்கிறாய் என்பதால் அவர் உன் வாழ்க்கை ஆகிவிட்டார் என்று நீ வெறுமனே சொல்லிக்கொண்டிருக்கிறாய். இதைச் சொல்பவர்களின் அறிவு மிகவும் மேலோட்டமானது. பல மக்களிடத்தில் அஸ்திபாரம் இல்லை. தேவனின் வார்த்தைகள் அவர்களுக்குள் நடப்பட்டிருக்கின்றன, ஆனால் அவை இன்னும் முளைக்கவில்லை, அவை எந்தவொரு கனியையும் காய்க்கவில்லை. இன்று, நீ எந்த அளவிற்கு அனுபவித்திருக்கிறாய்? தேவன் உன்னை இவ்வளவு தூரம் வரும்படி கட்டாயப்படுத்திய பிறகு, இப்போதுதான், நீ தேவனை விட்டு விலக முடியாது என்று நினைக்கிறாயா? ஒரு நாள், உன் அனுபவம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டும்போது, தேவன் உன்னை விலகிப்போகச் செய்தால், உன்னால் முடியாது. உனக்குள் தேவன் இல்லாமல் இருக்க முடியாது என்பதை நீ எப்போதும் உணருவாய். நீ ஒரு கணவன், மனைவி அல்லது குழந்தைகள் இல்லாமல், ஒரு குடும்பம் இல்லாமல், ஒரு தாய் அல்லது தந்தை இல்லாமல், மாம்சத்தின் இன்பங்கள் இல்லாமல் இருக்க முடியும், ஆனால் உன்னால் தேவன் இல்லாமல் இருக்க முடியாது. தேவன் இல்லாமல் இருப்பது உன் ஜீவனை இழப்பதைப் போன்றது. உன்னால் தேவன் இல்லாமல் வாழ முடியாது. இந்த கட்டம்வரை நீ அனுபவித்திருக்கிற போது, தேவன் மீதான உன் விசுவாசத்தில் வெற்றியை அடைந்திருப்பாய், இந்த வழியில், தேவன் உன் ஜீவனாக மாறியிருப்பார், அவர் உன் ஜீவனின் அஸ்திபாரமாக மாறியிருப்பார். நீ மீண்டும் ஒருபோதும் தேவனை விட்டு விலகிட முடியாது. நீ இந்த அளவிற்கு அனுபவித்திருக்கிற போது, நீ உண்மையிலேயே தேவனின் அன்பை அனுபவித்திருப்பாய், மேலும் நீ தேவனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும்போது, அவரே உன் ஜீவனும் உன் அன்புமாயிருப்பார், மற்றும் அந்த நேரத்தில் நீ தேவனிடம் ஜெபித்து, “தேவனே! உம்மை நான் விட்டுவிட முடியாது, நீரே என் ஜீவன், மற்றவை எல்லாம் இல்லாமல் என்னால் செல்ல முடியும்—ஆனால் நீர் இல்லாமல் என்னால் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது.” என்று கூறுவாய். இது ஜனங்களின் உண்மையான நிலை. இதுவே உண்மையான ஜீவன். சிலர் இன்று இருப்பதைப் போல வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதை அவர்கள் தொடர வேண்டும், மேலும் அவர்கள் எப்போதும் ஓர் இக்கட்டான சூழலில் சிக்கியிருப்பதைப் போல உணர்கிறார்கள். தேவனே உன் ஜீவன் என்பதை நீ அனுபவிக்க வேண்டும், அதாவது தேவன் உன் இருதயத்திலிருந்து நீக்கப்பட வேண்டியவராய் இருந்தால், அது உன் ஜீவனை இழப்பதைப் போன்றதாகும். தேவன் உன் ஜீவனாக இருக்க வேண்டும், மேலும் நீ அவரை விட்டு விலக இயலாது இருக்க வேண்டும். இந்த வழியில், நீ உண்மையில் தேவனை அனுபவித்திருப்பாய், இந்த நேரத்தில், நீ தேவனை நேசிக்கும்போது, நீ உண்மையிலேயே தேவனை நேசிப்பாய், அது ஒரு தனித்துவமான, தூய அன்பாக இருக்கும். ஒரு நாள், உன் அனுபவங்களில் உன் ஜீவன் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியிருக்கும்போது, நீ தேவனிடம் ஜெபித்து, தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துப் பானம்பண்ணும்போது, நீ உன்னுள் தேவனை விட்டுவிலகவும் முடியாது, நீ விரும்பினாலும் அவரை மறக்கவும் முடியாது. தேவன் உன் ஜீவனாக மாறியிருப்பார். நீ உலகை மறக்க முடியும், உன் மனைவி, கணவர் அல்லது குழந்தைகளை நீ மறந்துவிடலாம், ஆனால் தேவனை மறப்பதில் உனக்கு சிக்கல் இருக்கும். அவ்வாறு செய்வது சாத்தியமற்றது, இது தேவனுக்கான உன் உண்மையான ஜீவன் மற்றும் உன் உண்மையான அன்பு ஆகும். ஜனங்கள் தேவனை நேசிப்பது ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியதும், தேவன் மீதான அவர்களின் அன்பிற்கு வேறு எதன் மீதும் அவர்கள் காட்டும் அன்பு சமம் ஆகாது. தேவன் மீதான அவர்களின் அன்பு முதலிடத்தைப் பெறுகிறது. இந்த வழியில் உன்னால் மற்ற எல்லாவற்றையும் விட்டுவிட முடிகிறது, மேலும் தேவனிடமிருந்து அனைத்து நடத்துதலையும் சுத்திகரிப்பையும் ஏற்க தயாராக இருக்கிறாய். எல்லாவற்றிற்கும் மேலாக நீ தேவன் மீதான அன்பை அடைந்தவுடன், நீ யதார்த்தத்திலும் தேவனின் அன்பிலும் வாழ்வாய்.
தேவன் ஜனங்களுக்குள் ஜீவனாக மாறியவுடன், ஜனங்கள் தேவனை விட்டு விலக முடியாமல் போகிறார்கள். இது தேவனின் கிரியை அல்லவா? இதைவிட பெரிய சாட்சி இல்லையே! தேவன் ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை கிரியை செய்திருக்கிறார். ஜனங்கள் சேவை செய்யவோ, தண்டிக்கப்படவோ அல்லது மரணிக்கவோ ஜனங்கள் பின்வாங்கவில்லை என்று அவர் கூறியுள்ளார், இது அவர்கள் தேவனால் ஜெயங்கொள்ளப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. சத்தியம் உள்ளவர்கள், தங்கள் உண்மையான அனுபவங்களில், தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்கவும், தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கவும், தேவனின் பக்கத்தில் நிற்கவும், எப்போதும் பின்வாங்காமல் இருக்கவும், தேவனை நேசிக்கும் ஜனங்களுடன் சரியான உறவை வைத்திருக்கவும் முடியும், அவர்களுக்குக் காரியங்கள் நடக்கும்போது, அவர்களால் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிய முடிகிறது, மேலும் மரணம் வரை தேவனுக்குக் கீழ்ப்படிய முடியும். நிஜ வாழ்க்கையில் உன் நடைமுறை மற்றும் வெளிப்பாடுகளே தேவனின் சாட்சி, அவை மனிதனின் வாழ்வும் மற்றும் தேவனின் சாட்சியும் ஆகும், மற்றும் இது உண்மையிலேயே தேவனின் அன்பை அனுபவிப்பது ஆகும். இந்தக் கட்டம்வரை நீ அனுபவித்திருக்கிறபோது, உரிய பலனை அடைந்திருப்பாய். நீ உண்மையான வாழ்வைக் கொண்டிருக்கிறாய், மற்றும் உன் ஒவ்வொரு செயலும் மற்றவர்களால் போற்றுதலுடன் உயர்வாகப் பார்க்கப்படுகிறது. உன் உடைகள் மற்றும் வெளிப்புறத் தோற்றம் குறிப்பிடத்தக்கவை அல்ல, ஆனால் நீ மிகுந்த பக்தியுள்ள வாழ்க்கையை வாழ்கிறாய், மேலும் நீ தேவனுடைய வார்த்தைகளைப் பேசும்போது, நீ அவரால் வழிநடத்தப்பட்டு வெளிச்சத்தைப் பெறுகிறாய். நீ தேவனின் சித்தத்தை உன் வார்த்தைகளின் மூலம் பேசவும், யதார்த்தத்தைத் தெரிவிக்கவும் முடிகிறது, மேலும் ஆவியில் ஊழியம் செய்வதைப் பற்றி நீ அதிகம் புரிந்துகொண்டிருக்கிறாய். உன் பேச்சில் நீ கபடற்றவன், நீ ஒழுக்கமானவன், நேர்மையானவன், மோதல் இல்லாதவன் மற்றும் அலங்காரமானவன், தேவனின் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படியவும், காரியங்கள் உன்னை வீழ்த்தும் போதும் உன் சாட்சியில் உறுதியாக நிற்கவும் முடிகிறது, மேலும் நீ எதைக் கையாண்டு கொண்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் உன்னால் அமைதியாகக் கலக்கமடையாமல் இருக்க முடியும். இதுபோன்றோர் தேவனின் அன்பை உண்மையிலேயே பார்த்தவர்கள். சிலர் இன்னும் இளமையாக இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் நடுத்தர வயதுடையவர்களாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் முதிர்ச்சியுள்ளவர்கள், சத்தியம் உடையவர்கள், மற்றவர்களால் போற்றப்படுகிறார்கள்—இவர்கள்தான் சாட்சி உடையவர்கள் மற்றும் தேவனின் வெளிப்பாடு ஆவர். அதாவது, அவர்கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அனுபவித்தவுடன், உள்ளுக்குள் அவர்கள் தேவனைப் பற்றிய ஒரு நுண்ணறிவைக் கொண்டிருப்பார்கள், மேலும் அவர்களின் வெளிப்புற மனநிலையும் உறுதிப்படுத்தப்படும். பலர் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதில்லை மற்றும் தங்கள் சாட்சியில் உறுதியாக நிற்க மாட்டார்கள். அத்தகையவர்களில் தேவன் மீதான அன்போ அல்லது தேவனுக்குச் சாட்சியோ இல்லை, தேவனால் மிகவும் வெறுக்கப்பட்டவர்கள் இவர்களே. அவர்கள் கூட்டங்களில் தேவனின் வார்த்தைகளைப் படிக்கிறார்கள், ஆனால் அவர்கள் வாழும் விதம் சாத்தான்தான், இது தேவனை அவமதிப்பது, தேவனை இழிவுபடுத்துவது மற்றும் தேவனை நிந்திப்பதாகும். அத்தகையவர்களில், தேவனின் அன்பின் அறிகுறியே இல்லை, அவர்களிடத்தில் பரிசுத்த ஆவியானவரின் கிரியை எதுவும் இல்லை. எனவே, ஜனங்களின் வார்த்தைகளும் செயல்களும் சாத்தானைக் குறிக்கின்றன. உன் இருதயம் எப்போதும் தேவனுக்கு முன்பாக சமாதானமாக இருந்தால், உன்னைச் சுற்றியுள்ள ஜனங்கள் மற்றும் விஷயங்கள் மற்றும் உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் நீ எப்போதும் கவனம் செலுத்துகிறாய் என்றால், தேவனின் பாரத்தை நீ கவனத்தில் வைத்திருந்தால், எப்போதும் தேவனை வணங்கும் இருதயம் இருந்தால், பின்னர் தேவன் உன்னை அடிக்கடி உனக்குள் வெளிச்சமூட்டுவார். திருச்சபையில் “மேற்பார்வையாளர்களாக” இருப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மற்றவர்களின் தவறுகளைக் காணவும், பின்னர் அவற்றைப் பிரதிபலித்து பின்பற்றவும் புறப்படுகிறார்கள். வேறுபடுத்தி அறிவதற்கு அவர்களால் இயலாது, அவர்கள் பாவத்தை வெறுக்க மாட்டார்கள், சாத்தானின் காரியங்களால் பாவத்தை வெறுக்கவோ வெறுப்படையவோ மாட்டார்கள். அத்தகையவர்கள் சாத்தானின் காரியங்களால் நிரப்பப்படுகிறார்கள், அவர்கள் இறுதியில் தேவனால் முற்றிலும் கைவிடப்படுவார்கள். உன் இருதயம் தேவனுக்கு முன்பாக எப்போதும் பயபக்தியுடன் இருக்க வேண்டும், உன் வார்த்தைகளிலும் செயல்களிலும் நீ சாந்தமாக இருக்க வேண்டும், தேவனை எதிர்க்கவோ வருத்தப்படுத்தவோ விரும்பக் கூடாது. எதுவும் இல்லாமல் இருக்கவும் அல்லது நீ அனுபவித்த அனைத்து கஷ்டங்களையும் அனுமதிக்கவும் மற்றும் நீ நடைமுறையில் வைத்திருந்த அனைத்தும் ஒன்றுமில்லாமல் போகவும் உன்னில் தேவனின் கிரியைக்கு நீ ஒருபோதும் தயாராக இருக்கக்கூடாது. நீ கடினமாக உழைக்க தயாராக இருக்க வேண்டும், மேலும் வரும் பாதையில் தேவனை அதிகமாக நேசிக்க வேண்டும். இவர்கள்தான் ஒரு தரிசனத்தைத் தங்களது அஸ்திபாரமாக கொண்டவர்கள். இவர்கள்தான் முன்னேற்றத்தை நாடுகிறார்கள்.
ஜனங்கள் தேவனை விசுவாசித்தால், தேவனைப் போற்றும் இருதயத்துடன் தேவனின் வார்த்தைகளை அனுபவித்தால், அத்தகையவர்களில் தேவனின் இரட்சிப்பையும் தேவனின் அன்பையும் காண முடியும். இந்த ஜனங்களால் தேவனுக்கு சாட்சியளிக்க முடிகிறது. அவர்கள் சத்தியத்தில் வாழ்கிறார்கள், அவர்கள் சாட்சியளிப்பது சத்தியமும், தேவன் என்றால் என்ன என்பதும், தேவனின் மனநிலையும் ஆகும். அவர்கள் தேவனின் அன்பின் மத்தியில் வாழ்கிறார்கள், தேவனின் அன்பைக் கண்டிருக்கிறார்கள். ஜனங்கள் தேவனை நேசிக்க விரும்பினால், அவர்கள் தேவனின் அருமையை ருசித்து தேவனின் அருமையைக் காண வேண்டும். அப்போதுதான் தேவனை நேசிக்கும் ஓர் இருதயமும், தேவனுக்காக விசுவாசமாக தங்களைத் தாங்களே கொடுக்க ஜனங்களைத் தூண்டும் ஓர் இருதயமும் அவர்களில் எழுப்பப்பட்டிருக்க முடியும். தேவன் ஜனங்களை வார்த்தைகளாலும் வெளிப்பாடுகளாலும் அல்லது அவர்களின் கற்பனையினாலும் அவரை நேசிக்க வைப்பதில்லை, மேலும் தன்னை நேசிக்கும்படி ஜனங்களை அவர் கட்டாயப்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, அவர் தங்களுடைய விருப்பப்படி அவரை நேசிக்க அனுமதிக்கிறார், மேலும் அவருடைய கிரியையிலும் சொற்களிலும் அவருடைய அருமையைக் காண அவர் அவர்களை அனுமதிக்கிறார், அதன் பிறகு அவர்களில் தேவன் மீதான அன்பு இருக்கிறது. இந்த வழியில் மட்டுமே ஜனங்கள் உண்மையிலேயே தேவனுக்குச் சாட்சி அளிக்க முடியும். மற்றவர்களால் அவ்வாறு செய்யும்படி அவர்கள் வற்புறுத்தப்படுவதால், ஜனங்கள் தேவனை நேசிப்பதில்லை, அல்லது இது ஒரு தருணத்தின் உணர்ச்சி தூண்டுதலும் அல்ல. அவர்கள் தேவனை நேசிக்கிறார்கள், ஏனென்றால் அவருடைய அருமையைக் கண்டிருக்கிறார்கள், ஜனங்கள் அன்பிற்கு தகுதியானவை அநேகம் அவரிடத்தில் இருப்பதைக் கண்டிருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தேவனின் இரட்சிப்பு, ஞானம் மற்றும் அதிசயமான செயல்களைக் கண்டிருக்கிறார்கள்—இதன் விளைவாக அவர்கள் உண்மையிலேயே தேவனைப் புகழ்கிறார்கள் உண்மையிலேயே அவருக்காக ஏங்குகிறார்கள், தேவனைப் பெறாமல் அவர்களால் உயிர்வாழ முடியாது என்ற ஓர் உணர்வு அவர்களில் எழுந்திருக்கிறது. தேவனுக்கு உண்மையாகச் சாட்சியளிப்பவர்கள் அவருக்கு ஒரு பெரும் சாட்சி அளிக்கக் காரணம், அவர்களுடைய சாட்சி உண்மையான அறிவின் அஸ்திபாரத்திலும் மற்றும் தேவனைக்குறித்த உண்மையான ஏக்கத்திலும் உள்ளது. இத்தகைய சாட்சி ஓர் உணர்ச்சித் தூண்டுதலின் படி வழங்கப்படாமல் தேவனைப் பற்றிய அவர்களுடைய அறிவு மற்றும் அவருடைய மனநிலையின் படி வழங்கப்படுகிறது. அவர்கள் தேவனை அறிந்திருப்பதால், அவர்கள் நிச்சயமாக தேவனுக்கு சாட்சி அளிக்க வேண்டும் என்றும், தேவனுக்காக ஏங்குகிற அனைவரும் தேவனை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், தேவனின் அருமை மற்றும் அவருடைய யதார்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஜனங்களுக்கு தேவன் மீதுள்ள அன்பைப் போலவே, அவர்களின் சாட்சியும் தன்னிச்சையானது. இது உண்மையானது மற்றும் உண்மையான முக்கியத்துவத்தையும் மதிப்பையும் கொண்டுள்ளது. இது செயலற்றதோ அல்லது வெறுமையானதோ மற்றும் அர்த்தமற்றதோ அல்ல. தேவனை உண்மையாக நேசிப்பவர்களுக்கு மட்டுமே அவர்களின் வாழ்க்கையில் அதிக மதிப்பும் அர்த்தமும் இருக்கிற காரணமும், அவர்கள் தேவனை உண்மையாக நம்புவதற்கான காரணமும் என்னவென்றால், இந்த ஜனங்கள் தேவனின் வெளிச்சத்தில் வாழ முடிகிறது, மேலும் தேவனின் கிரியை மற்றும் நிர்வகித்தலுக்காக வாழ முடிகிறது. அவர்கள் இருளில் வாழாமல், வெளிச்சத்தில் வாழ்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம். அவர்கள் அர்த்தமற்ற வாழ்க்கையை வாழவில்லை, ஆனால் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழுகிறார்கள். தேவனை நேசிப்பவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சியளிக்க முடியும், அவர்கள் மட்டுமே தேவனின் சாட்சிகள், அவர்கள் மட்டுமே தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள், அவர்களால் மட்டுமே தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பெற முடியும். தேவனை நேசிப்பவர்கள் தேவனுக்கு நெருங்கியவர்கள். அவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கிற ஜனங்கள், அவர்களால் தேவனோடு சேர்ந்து ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும். இது போன்றவர்கள் மட்டுமே நித்தியமாக வாழ்வார்கள், அவர்கள் மட்டுமே தேவனின் கவனிப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் எப்போதும் வாழ்வார்கள். ஜனங்களால் நேசிக்கப்படவே தேவன் இருக்கிறார், அவர் எல்லா ஜனங்களின் அன்பிற்கும் தகுதியானவர், ஆனால் எல்லா ஜனங்களும் தேவனை நேசிக்க தகுதியானவர்கள் அல்ல, எல்லா ஜனங்களும் தேவனுக்கு சாட்சியளிக்கவும் தேவனுடன் வல்லமையைக் கொண்டிருக்கவும் முடியாது. அவர்கள் தேவனைப் பற்றி சாட்சியளிக்கவும், தேவனின் கிரியைக்காக தங்கள் எல்லா முயற்சிகளையும் அர்ப்பணிக்கவும் முடிந்ததால், தேவனை உண்மையாக நேசிப்பவர்கள் யாராலும் துணிந்து எதிர்க்கப்படாமல் வானத்தின் கீழ் எங்கும் நடக்க முடியும், மேலும் அவர்கள் பூமியில் வல்லமையைப் பயன்படுத்தலாம் மற்றும் தேவனின் எல்லா ஜனங்களையும் ஆட்சி செய்யலாம். இந்த ஜனங்கள் உலகம் முழுவதும் இருந்து ஒன்றாக வந்துள்ளனர். அவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள் மற்றும் வெவ்வேறு தோல் வண்ணங்களைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் இருப்பதற்கு ஒரே அர்த்தம் உண்டு. அவர்கள் அனைவருக்கும் தேவனை நேசிக்கும் ஓர் இருதயம் இருக்கிறது, அவர்கள் அனைவரும் ஒரே சாட்சியை அளிக்கிறார்கள், ஒரே தீர்மானமும் ஒரே விருப்பமும் கொண்டவர்கள். தேவனை நேசிப்பவர்கள் உலகம் முழுவதும் சுதந்திரமாக நடக்க முடியும், மேலும் தேவனுக்குச் சாட்சி அளிப்பவர்கள் பிரபஞ்சம் முழுவதும் பயணிக்க முடியும். இந்த ஜனங்கள் தேவனால் நேசிக்கப்படுகிறார்கள், அவர்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் மற்றும் அவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்.