புதிய காலத்திற்கான கட்டளைகள்

தேவனின் கிரியையை அனுபவிப்பதில், நீங்கள் தேவனின் வார்த்தைகளைக் கவனமாக வாசித்து, சத்தியத்தினால் உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது அதை எப்படிச் செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தவரையில், உங்கள் ஊக்கமான ஜெபமோ அல்லது விண்ணப்பமோ தேவையில்லை, உண்மையில் இந்த விஷயங்கள் உபயோகமற்றவை. இருப்பினும் தற்போது, தேவனின் கிரியையை எவ்வாறு உணர்வது என நீங்கள் அறியாது இருப்பதே நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாகும், மேலும் உங்களிடம் அதிக செயலற்ற தன்மை உள்ளது. நீங்கள் பல கோட்பாடுகளை அறிவீர்கள், ஆனால் உங்களிடம் அதிகமான யதார்த்தம் இல்லை. இது தவறான செயலின் அடையாளம் அல்லவா? இந்தக் குழுவில், உங்களிடம் நிறைய தவறானவை இருப்பதாகத் தெரிகிறது. இன்று, நீங்கள் “ஊழியம் செய்பவர்கள்” என்ற முறையில் இத்தகைய உபத்திரவங்களைப் பெற இயலாதவர்களாய் இருக்கிறீர்கள், மேலும் நீங்கள் தேவனின் வார்த்தைகள் தொடர்பான பிற உபத்திரவங்களையும் சுத்திகரிப்பையும் கற்பனை செய்யவோ அல்லது அடையவோ இயலாதவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் கைக்கொள்ள வேண்டிய பல விஷயங்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது ஜனங்கள் செய்ய வேண்டிய பல கடமைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதைத்தான் ஜனங்கள் கடைப்பிடிக்க வேண்டும், இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். பரிசுத்த ஆவியானவர் செய்ய வேண்டியதைப் பரிசுத்த ஆவியானவரே செய்யட்டும்; மனிதன் அதில் எந்தப் பங்களிப்பும் செய்ய முடியாது. மனிதனால் செய்யப்பட வேண்டியதை மனிதன் கடைப்பிடிக்க வேண்டும், அதில் பரிசுத்த ஆவியானவருக்கு எந்த தொடர்புமில்லை. இது மனிதனால் செய்யப்பட வேண்டியதே தவிர வேறொன்றுமில்லை, பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதைப் போலவே இவை கட்டளைகளாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இப்போது நியாயப்பிரமாணத்தின் காலமாக இல்லாமல் இருந்தாலும், நியாயப்பிரமாணத்தின் காலத்தில் உரைக்கப்பட்ட வார்த்தைகளைப் போலவே பல வார்த்தைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த வார்த்தைகள் பரிசுத்த ஆவியானவரின் தொடுதலை நம்பியதால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, மாறாக, அவை மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. உதாரணமாக:

நடைமுறைத் தேவனின் கிரியை குறித்து நீங்கள் நியாயந்தீர்க்கக்கூடாது.

தேவனால் சாட்சியமளிக்கப்படும் மனிதனை நீங்கள் எதிர்க்கக்கூடாது.

தேவனுக்கு முன்பாக, நீங்கள் உங்கள் இடத்தை வைக்க வேண்டும், ஒழுக்கக்கேடாக இருக்கக்கூடாது.

நீங்கள் பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும், உங்கள் வார்த்தைகளும் செயல்களும் தேவனால் சாட்சியமளிக்கப்பட்ட மனிதனுக்கான ஏற்பாடுகளைப் பின்பற்ற வேண்டும்.

தேவனின் சாட்சியத்தை நீங்கள் கனப்படுத்த வேண்டும். தேவனின் கிரியையையும் அவருடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளையும் நீங்கள் புறக்கணிக்கக்கூடாது.

தேவனுடைய வார்த்தைகளின் தொனியையும் நோக்கங்களையும் நீங்கள் பாவனை செய்யக்கூடாது.

வெளிப்படையாகச் சொன்னால், தேவனால் சாட்சியமளிக்கப்படும் மனிதனைப் பகிரங்கமாக எதிர்க்கும் எதையும் நீங்கள் செய்யக்கூடாது.

இவை ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டியவையாகும். ஒவ்வொரு காலத்திலும், தேவன் நியாயப்பிரமாணங்களுக்கு ஒத்துப்போகக்கூடிய மற்றும் மனிதனால் பின்பற்றப்பட வேண்டிய பல விதிகளைக் குறிப்பிடுகிறார். இதன் மூலம், அவர் மனிதனின் மனநிலையைக் கட்டுப்படுத்தி, அவனது நேர்மையைக் கண்டறிகிறார். உதாரணமாக, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” என்ற வார்த்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வார்த்தைகள் இன்று பொருந்துவதில்லை; அந்த நேரத்தில், அவை மனிதனின் வெளிப்புற மனநிலைகள் சிலவற்றை மட்டுமே கட்டுப்படுத்தி, தேவன் மீதான மனிதனுடைய விசுவாசத்தின் நேர்மையை நிரூபிக்கப் பயன்படுத்தப்பட்டன, மேலும் தேவனை விசுவாசித்தவர்களின் அடையாளமாக அவை இருந்தன. இப்போது ராஜ்யத்தின் காலமாக இருக்கின்ற போதிலும், மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய பல விதிகள் இன்னும் உள்ளன. கடந்த கால விதிகள் பொருந்தாது, இன்றும் மனிதன் செய்ய வேண்டிய, அவனுக்கு அவசியமான, பல பொருத்தமான வழக்கங்கள் உள்ளன. அவை பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் ஈடுபடுவதில்லை, அவை மனிதனாலேயே செய்யப்பட வேண்டும்.

கிருபையின் காலத்தில், நியாயப்பிரமாணத்தின் கால பல வழக்கங்கள் நீக்கப்பட்டன, ஏனெனில் இந்த நியாயப்பிரமாணங்கள், குறிப்பாக அந்த நேரத்தில் கிரியைக்குப் பயனுள்ளதாக இல்லை. அவை நீக்கப்பட்ட பின்னர், காலத்திற்கு ஏற்ற பல வழக்கங்கள் உருவாக்கப்பட்டன, அவை இன்றைய பல விதிகளாக மாறிவிட்டன. இன்றைய தேவன் வந்தபோது, இந்த விதிகள் கைவிடப்பட்டு, அதற்குமேல் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அவசியமில்லாமல் போனது, மேலும் இன்றைய கிரியைக்கு ஏற்ற பல வழக்கங்கள் உருவாக்கப்பட்டன. இன்று, இந்த வழக்கங்கள் விதிகளாக இல்லை, மாறாக அவை பலன்களை அடைவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன; அவை இன்றைக்கும், நாளைய தினத்திற்கும் பொருத்தமானவையாக இருக்கின்றன, ஒருவேளை அவை விதிகளாக மாறக்கூடும். மொத்தத்தில், நீ இன்றைய கிரியைக்குப் பலனளிப்பதைக் கடைப்பிடிக்க வேண்டும். நாளைய தினத்தில் கவனம் செலுத்த வேண்டாம்: இன்று செய்யப்படுவது இன்றைய தினத்தின் நிமித்தமாகவே செய்யப்படுகிறது. நாளை வரும்பொழுது, நீ செயல்படுத்த வேண்டிய சிறந்த வழக்கங்கள் இருக்கும், ஆனால் அதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டாம். மாறாக, தேவனை எதிர்ப்பதைத் தவிர்ப்பதற்காக இன்று கடைப்பிடிக்க வேண்டியதைக் கடைப்பிடியுங்கள். இன்று, பின்வருவனவற்றைக் கடைப்பிடிப்பதை விட மனிதனுக்கு மிக முக்கியமானது எதுவுமில்லை:

உன் கண்களுக்கு முன்பாக நிற்கும் தேவனை இனிய வார்த்தைகளால் ஏமாற்றவோ, அவரிடமிருந்து எதையும் மறைக்கவோ நீ முயற்சிக்கக்கூடாது.

உன் முன் உள்ள தேவனுக்கு முன்பாக இழிவான அல்லது அகங்காரமான வார்த்தையைச் சொல்லக்கூடாது.

தேவனின் நம்பிக்கையைப் பெறுவதற்காகத் தேன் போன்ற இனிமையான வார்த்தைகளாலும் நியாயமான பேச்சுகளாலும், உங்கள் கண்களுக்கு முன்பாக தேவனை வஞ்சிக்கக்கூடாது.

நீங்கள் தேவனுக்கு முன்பாகப் பயபக்தியின்றி செயல்படக்கூடாது. தேவனின் வாயிலிருந்து உரைக்கப்படும் அனைத்திற்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும், அவருடைய வார்த்தைகளைத் தடுக்கவோ, எதிர்க்கவோ, வாதிடவோ கூடாது.

தேவனின் வாயிலிருந்து உரைக்கப்படும் வார்த்தைகளுக்கு உங்களுக்குத் தகுந்தமாதிரி நீங்கள் விளக்கமளிக்கக்கூடாது. துன்மார்க்கரின் வஞ்சகமான திட்டங்களுக்கு நீ இரையாகிவிடாமல் இருக்க, உன் நாவினைக் காக்க வேண்டும்.

தேவனால் உனக்காக அமைக்கப்பட்ட எல்லைகளை மீறுவதைத் தவிர்க்க உன் அடிச்சுவடுகளைப் பாதுகாக்க வேண்டும். நீ மீறினால், இது உன்னைத் தேவனின் நிலையில் நின்று, இறுமாப்பாகவும் பகட்டாகவும் பேசும் வார்த்தைகளை உருவாக்கக் காரணமாகிறது, இதனால் நீ தேவனால் வெறுக்கப்படுவாய்.

தேவனின் வாயிலிருந்து உரைக்கப்படும் வார்த்தைகளை நீ கவனக் குறைவாகப் பரப்பக்கூடாது, அவ்வாறு செய்தால் பிறர் உன்னைப் பரியாசம் பண்ணுவார்கள், பிசாசுகள் உன்னை மூடனாக்கும்.

இன்றைய தேவனின் அனைத்து கிரியைகளையும் நீ கடைப்பிடிக்க வேண்டும். நீ அதைப் புரிந்து கொள்ளாவிட்டாலும், நீ அது குறித்து நியாயந்தீர்க்கக்கூடாது; நீங்கள் செய்ய வேண்டியது, தேடிச்சென்று ஐக்கியம் கொள்வதாகும்.

எந்தவொரு மனிதனும் தேவனுடைய உண்மையான ஸ்தானத்தை மீறக்கூடாது. மனிதனின் நிலையில் இருந்து இன்றைய தேவனைச் சேவிப்பதைத் தவிர வேறு எதுவும் உன்னால் செய்ய முடியாது. மனிதனின் நிலையிலிருந்து இன்றைய தேவனுக்கு உன்னால் போதிக்க முடியாது, அவ்வாறு செய்வது தவறான வழிகாட்டுதலாகும்.

தேவனால் சாட்சியமளிக்கப்பட்ட மனிதனின் இடத்தில் யாரும் நிற்கக்கூடாது; உன் வார்த்தைகள், செயல்கள் மற்றும் உள்ளார்ந்த எண்ணங்களில், நீ மனிதனின் நிலையில் நிற்கிறாய். இதை மனிதனின் பொறுப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும், இதை யாரும் மாற்றக்கூடாது; அவ்வாறு முயற்சிப்பது நிர்வாக ஆணைகளை மீறுவதாகும். இது அனைவராலும் நினைவில் கொள்ளப்பட வேண்டும்.

தேவன் பேசுவதற்கும் உச்சரிப்பதற்கும் செலவழித்த நீண்ட நேரமானது, மனிதன் தேவனின் வார்த்தைகளை வாசிப்பதையும் மனப்பாடம் செய்வதையும் முதன்மைப் பணியாகக் கருத வைத்திருக்கிறது. வழக்கமாகச் செய்வதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை, உங்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டியவற்றையும் செய்வதில்லை. இது உங்கள் ஊழியத்திற்குப் பல சிரமங்களையும் சிக்கல்களையும் கொண்டு வந்துள்ளது. தேவனின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதற்கு முன்பு, நீ கடைப்பிடிக்க வேண்டியதை நீ கடைப்பிடிக்கவில்லை என்றால், தேவனால் வெறுக்கப்பட்டு புறக்கணிக்கப்படுபவர்களில் நீயும் ஒருவனே. இந்த வழக்கங்களைக் கடைப்பிடிப்பதில், நீ ஆர்வமாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். நீ அவற்றை கட்டுகளைப்போல் நினைக்கக் கூடாது, ஆனால் அவற்றைக் கட்டளைகளாகக் கடைப்பிடிக்க வேண்டும். இன்று, நீ அடைய வேண்டிய பலன்கள் குறித்து நீ கவலைப்பட வேண்டியதில்லை; சுருக்கமாகச் சொல்வதென்றால், பரிசுத்த ஆவியானவர் இவ்வாறு செயல்படுகிறார், குற்றத்தைச் செய்கிற யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் உணர்ச்சியற்றவர், உன் தற்போதைய புரிதலைக் கவனிக்காமல் இருக்கிறார். இன்று நீ தேவனுக்கு இடறலுண்டாக்கினால், அவர் உன்னைத் தண்டிப்பார். அவருடைய அதிகார எல்லைக்குள் நீ அவருக்கு இடறலுண்டாக்கினால், அவர் உன்னை விடமாட்டார். இயேசுவின் வார்த்தைகளை நீ கடைப்பிடிப்பதில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறாய் என்பதை அவர் பொருட்படுத்தமாட்டார். இன்றைய தேவனின் கட்டளைகளை நீ மீறினால், அவர் உன்னைத் தண்டிப்பார், மேலும் உன்னை மரண ஆக்கினைக்கு உட்படுத்துவார். நீ அவற்றைக் கடைப்பிடிக்காதது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்? சிறிய வேதனையை அனுபவித்தாலும் கூட நீ அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்! இதில் எந்த மதம், பிரிவு, நாடு, அல்லது சபைப் பிரிவு என்பது முக்கியமல்ல, எதிர்காலத்தில் அவர்கள் அனைவரும் இந்த வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். யாருக்கும் விலக்கு அளிக்கப்படாது, யாரும் தப்பிக்க மாட்டார்கள்! பரிசுத்த ஆவியானவர் இன்று செய்கின்றவற்றை யாரும் மீறக்கூடாது. அவை பெரிய விஷயமாக இல்லாமல் இருந்தாலும், அவை ஒவ்வொரு மனிதனாலும் செய்யப்பட வேண்டும், அவை உயிர்த்தெழுப்பப்பட்டு, பரலோகத்திற்கு ஏறிய இயேசுவால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட கட்டளைகளாகும். நீ நீதிமானாக இருக்கிறாயா அல்லது பாவியாக இருக்கிறாயா என்பது இன்றைய தேவன் மீதான உன் அணுகுமுறையின்படிதான் உள்ளது என்ற இயேசுவின் விளக்கத்தைப் “பாதை … (7)” சொல்லவில்லையா? இந்தக் கருத்தை யாரும் கவனிக்காமல் போகலாம். நியாயப்பிரமாண காலத்தில், பரிசேயர்கள் தலைமுறை தலைமுறையாய் தேவனை நம்பினார்கள், ஆனால் கிருபையின் காலம் வந்தவுடன் அவர்கள் இயேசுவை அறியாமல், அவரை எதிர்த்தார்கள். ஆகவே, அவர்கள் செய்ததெல்லாம் ஒன்றுமில்லாமல் வீணாகிப்போனது, தேவன் அவர்களின் கிரியைகளை ஏற்கவில்லை. இதன் மூலம் உன்னால் பார்க்க முடிந்தால், நீ எளிதாகப் பாவத்தில் விழ மாட்டாய். ஒருவேளை அநேக ஜனங்கள், தேவனுக்கு எதிராகத் தங்களை மதிப்பிட்டிருக்கலாம். தேவனை எதிர்ப்பது எப்படிப்பட்ட சுவையுள்ளது? இது கசப்பானதா அல்லது தித்திப்பானதா? இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்; உனக்குத் தெரியாது என்று பாசாங்கு செய்யாதே. அவர்களுடைய இருதயங்களில், அநேகமாய், சிலர் நம்பாமல் இருக்கிறார்கள். இருப்பினும், அதை முயன்று பார்க்குமாறும், அது என்ன சுவையில் இருக்கிறது என்று பார்க்குமாறும் நான் உனக்கு ஆலோசனை சொல்கிறேன். இது எப்போதும் அநேகர் அதனைக் குறித்து ஐயப்படுவதைத் தடுக்கும். அநேகர் தேவனின் வார்த்தைகளை வாசிக்கிறார்கள், இருப்பினும் இரகசியமாக அவரை இருதயத்தில் எதிர்க்கிறார்கள். அவரை இப்படி எதிர்த்த பிறகு, உன் இருதயத்தில் கத்தி கொண்டு முறுக்கியதைப் போல நீ உணரவில்லையா? குடும்ப ஒற்றுமை இல்லையென்றால், சரீர உபாதை, அல்லது மகன்கள் மற்றும் மகள்களின் பெரும் துன்பங்களாக இது இருக்கிறது. உன் மாம்சம் மரணத்திலிருந்து விடுபட்டாலும், தேவனின் கை உன்னை விட்டு ஒருபோதும் அகலாது. இது அவ்வளவு எளிதானதாக இருக்கலாம் என நீ நினைக்கிறாயா? குறிப்பாக, தேவனுக்கு அருகாமையில் உள்ள அநேகர் இதில் கவனம் செலுத்துவது இன்னும் அவசியமாக இருக்கிறது. காலப்போக்கில், அதனை உணராமல், நீ அதை மறந்து விடுவாய், நீ இச்சைகளில் மூழ்கி எதையும் கவனத்தில் கொள்ள மாட்டாய், இதுவே உன் பாவத்தின் ஆரம்பமாக இருக்கும். உனக்கு இது அற்பமானதாகத் தோன்றுகிறதா? உன்னால் இதனைச் சிறப்பாகச் செய்ய முடிந்தால், தேவனுக்கு முன்பாக வந்து அவரின் வழிநடத்துதலை அவருடைய வாயிலிருந்தே பெற்று, நீ பரிபூரணப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. நீ கவனக் குறைவாக இருந்தால், உனக்கு உபத்திரம் ஏற்படும், நீ தேவனுடன் இணக்கமற்று இருப்பாய், உன் வார்த்தைகளும் செயல்களும் ஒழுக்கக்கேடாகிவிடும், விரைவில் நீ சுழற்காற்றாலும் வலிமையான அலைகளாலும் அடித்துச் செல்லப்படுவாய். இந்தக் கட்டளைகளை நீங்கள் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் அவற்றை மீறினால், தேவனால் சாட்சியமளிக்கப்படுபவர் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்காவிட்டாலும், தேவனுடைய ஆவியானவர் உன்னுடன் இடைபடுவார், மேலும் அவர் உன்னைத் தப்ப விடமாட்டார். உன் குற்றத்தின் விளைவுகளை உன்னால் சுமக்க முடியுமா? ஆகவே, தேவன் என்ன சொன்னாலும், அவருடைய வார்த்தைகளை நீ கைக்கொள்ள வேண்டும், உன்னால் முடிந்த எந்த வகையிலாவது அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். இது சாதாரண விஷயம் அல்ல!

முந்தைய: தேவன் மனிதனைப் பயன்படுத்துவது பற்றி

அடுத்த: ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக