நடைமுறை தேவனும் தேவன்தான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்

நடைமுறை தேவனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஆவி, ஆள்தத்துவம் மற்றும் வார்த்தை ஆகியவற்றினால் ஆனவர்தான் நடைமுறை தேவன். இதுதான் நடைமுறை தேவன் என்பதற்கான உண்மையான அர்த்தமாகும். நீங்கள் அவருடைய ஆள்தத்துவத்தை மட்டுமே அறிந்திருந்தால், மேலும் நீங்கள் அவருடைய பழக்கவழக்கங்களையும் ஆளுமையையும் அறிந்திருந்து, ஆவியின் கிரியையையோ, ஆவி மாம்சத்தில் என்ன செய்யும் என்பதையோ அறியவில்லை என்றால், மேலும் நீங்கள் ஆவியின் மீதும், வார்த்தையின் மீதும் மட்டுமே கவனம் செலுத்தி, ஆவிக்கு முன்பாக மட்டுமே ஜெபம் செய்து நடைமுறை தேவனுக்குள் உள்ள தேவனுடைய ஆவியின் கிரியையை அறியவில்லை என்றால், நீங்கள் நடைமுறை தேவனை அறியவில்லை என்பதையே இது காட்டுகிறது. நடைமுறை தேவனைப் பற்றிய அறிவு என்றால் அவருடைய வார்த்தைகளை அறிந்து கொள்வதும் அனுபவிப்பதுமாகும், மேலும் பரிசுத்த ஆவியின் கிரியையின் விதிகளையும் கொள்கைகளையும் மற்றும் தேவனுடைய ஆவி மாம்சத்தில் எவ்வாறு கிரியை செய்கிறது என்பதையும் புரிந்து கொள்வதுமாகும். மாம்சத்தில் தேவனுடைய ஒவ்வொரு கிரியையும் ஆவியினால் ஆளுகை செய்யப்படுகிறது என்பதையும், அவர் பேசும் வார்த்தைகள் ஆவியின் நேரடி வெளிப்பாடு என்பதையும் அறிந்து கொள்வதும் இதில் அடங்கும். ஆகவே, நடைமுறை தேவனை அறிந்துகொள்ள, மனிதத் தன்மையிலும் தெய்வீகத் தன்மையிலும் தேவன் எவ்வாறு கிரியை செய்கிறார் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். ஆதலால், இது ஆவியின் வெளிப்பாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது, இதன்மூலம் எல்லா மக்களும் ஈடுபடுகின்றனர்.

ஆவியின் வெளிப்பாடுகளின் அம்சங்கள் எவை? சிலநேரங்களில் தேவன் மனிதத் தன்மையிலும், சிலநேரங்களில் தெய்வீகத் தன்மையிலும் கிரியை செய்கிறார், ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆவியே கட்டளையிடுகிறது. மக்களுக்குள் இருக்கும் ஆவி எதுவாக இருந்தாலும், அவர்களின் வெளிப்புற வெளிப்பாடு இதுதான். ஆவி இயல்பாகவே கிரியை செய்கிறது, ஆனால் ஆவியினால் அவருடைய வழி நடத்துதலுக்கு இரண்டு பகுதிகள் உள்ளன: ஒரு பகுதி மனிதத் தன்மையில் அவர் செய்த கிரியை, மற்றொன்று தெய்வீகத் தன்மையின் மூலம் அவர் செய்த கிரியை. நீங்கள் இதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். ஆவியின் கிரியை சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது: அவருடைய மனிதக் கிரியை தேவைப்படும் போது, ஆவி இந்த மனிதக் கிரியையை வழிநடத்துகிறது, அவருடைய தெய்வீகக் கிரியைத் தேவைப்படும் போது, அதைச் செய்ய தெய்வீகத் தன்மை நேரடியாகத் தோன்றுகிறது. தேவன் மாம்சத்தில் கிரியை செய்து மாம்சத்தில் தோன்றுவதால், அவர் மனிதத் தன்மை மற்றும் தெய்வீகத் தன்மை இரண்டிலும் கிரியை செய்கிறார். மனிதத் தன்மையில் அவரது கிரியை ஆவியால் வழிநடத்தப்படுகிறது, மேலும் மக்களின் மாம்ச தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அவருடன் தங்கள் ஈடுபாட்டை எளிதாக்கிக் கெள்வதற்கும், தேவனுடய யதார்த்தத்தையும் சுபாவத்தையும் காண அவர்களை அனுமதிப்பதற்கும், தேவனுடைய ஆவி மாம்சத்தில் வந்து, மனிதர் மத்தியில் மனிதருடன் சேர்ந்து வாழ்வதையும், மனிதருடன் ஈடுபடுவதையும் காண அவர்களை அனுமதிப்பதற்கும் மனிதத் தன்மையில் அவரது கிரியை செய்யப்படுகிறது. மக்களின் வாழ்க்கையை வழங்குவதற்கும், மக்களை எல்லாவற்றிலும் நேர்மறையான பக்கத்திலிருந்து வழிநடத்துவதற்கும், மக்களின் மனநிலையை மாற்றுவதற்கும், மாம்சத்தில் ஆவியின் தோற்றத்தைக் காண அவர்களை உண்மையிலேயே அனுமதிப்பதற்கும் தெய்வீகத்தன்மையில் அவரது கிரியை செய்யப்படுகிறது. முக்கியமாக, மனிதனின் வாழ்க்கையில் வளர்ச்சியானது தெய்வீகத் தன்மையில் தேவனுடைய கிரியை மற்றும் வார்த்தைகளின் மூலம் நேரடியாக பெறப்படுகிறது. தெய்வீகத் தன்மையில் தேவனின் கிரியையை மக்கள் ஏற்றுக் கொண்டால் மாத்திரமே, அவர்கள் தங்கள் மனநிலையில் மாற்றங்களை அடைய முடியும், அப்போது தான் அவர்கள் தங்கள் ஆவியில் நிரம்பியிருக்க முடியும்; மேலும், மனிதத் தன்மையில் தேவனுடைய மேய்ப்பர் பணி, ஆதரவு மற்றும் மனிதத் தன்மையில் உதவுதல் போன்ற கிரியைகள் செய்யப்பட்டால் மட்டுமே தேவனுடைய கிரியையின் பலன்களை முழுமையாக அடைய முடியும். இன்று பேசப்படும் நடைமுறை தேவன் தாமே மனிதத் தன்மையிலும் தெய்வீகத் தன்மையிலும் கிரியை செய்கிறார். நடைமுறை தேவனின் தோற்றத்தின் மூலம், அவருடைய வழக்கமான மனிதப் பணி மற்றும் ஜீவன் மற்றும் அவருடைய முழு தெய்வீகப் பணி ஆகியவை நிறைவேற்றப்படுகின்றன. அவரது மனிதத் தன்மையும் தெய்வீகத் தன்மையும் ஒன்றாக இணைக்கப்படுகின்றன, இரண்டின் கிரியையும் வார்த்தைகளால் நிறைவேற்றப்படுகின்றன; மனிதத் தன்மையினாலும் அல்லது தெய்வீகத் தன்மையினாலும் அவர் வார்த்தைகளை உதிர்க்கிறார். தேவன் மனிதத் தன்மையில் கிரியை செய்யும் போது, அவர் மனித மொழியைப் பேசுகிறார், இதனால் மக்கள் அதை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியும். அவருடைய வார்த்தைகள் தெளிவாகப் பேசப்படுகின்றன, புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கின்றன, அவற்றை எல்லா மக்களுக்கும் கொடுக்கலாம்; மக்கள் அறிவுள்ளவர்களாக இருந்தாலும் அல்லது குறைவாக படித்திருந்தாலும், எல்லோருமே தேவனுடைய வார்த்தைகளைப் பெற முடியும். தெய்வீகத் தன்மையில் தேவனுடைய பணியானது வார்த்தைகள் மூலமாக செய்யப்படுகிறது, ஆனால் அது சிலாக்கியமும் ஜீவனும் நிறைந்ததாக இருக்கிறது, அது மனித சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டது, அது மனித விருப்பங்களுடன் தொடர்பில்லாதது, அது மனித வரம்புகளற்றது, அது எந்தவொரு சாதாரண மனிதனின் எல்லைக்கும் வெளியே உள்ளது; அது மாம்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது, ஆனால் அது ஆவியின் நேரடி வெளிப்பாடாக இருக்கிறது. மனிதத் தன்மையில் செய்யப்படும் தேவனின் கிரியையை மாத்திரமே மக்கள் ஏற்றுக் கொண்டால், அவர்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் அடைத்துக் கொள்வார்கள், இதனால் அவர்களுக்குள் ஒரு சிறிய மாற்றமாவது ஏற்பட வேண்டுமென்றால் நீண்ட கால கையாளுதல், கிளை நறுக்குதல் மற்றும் தண்டித்து திருத்துதல் ஆகியவை தேவைப்படும். ஆனாலும், பரிசுத்த ஆவியின் கிரியை அல்லது பிரசன்னம் இல்லாமல், அவர்கள் எப்போதும் தங்கள் பழைய வழிகளுக்கே திரும்பிச் செல்வார்கள்; தெய்வீகக் கிரியை மூலமாக மாத்திரமே இந்த மாறுபாடுகளையும் குறைபாடுகளையும் சரிசெய்ய முடியும், அப்போதுதான் மக்களைப் பரிபூரணமாக்க முடியும். தொடர்ச்சியான கையாளுதல் மற்றும் கிளை நறுக்குதலுக்குப் பதிலாக, அனைத்துக் குறைபாடுகளையும் சரிசெய்யும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல், மக்களின் ஒவ்வொரு நிலையையும் வெளிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல், அவர்களுடைய வாழ்க்கையையும், அவர்களுடைய ஒவ்வொரு சொல்லையும் செயலையும் வழிநடத்தும் மற்றும் அவர்களுடைய நோக்கங்களையும் ஊக்கங்களையும் வெளிப்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துதல் போன்ற நேர்மறையான வழிமுறைகளே தேவைப்படுகின்றன. இதுதான் நடைமுறை தேவனின் உண்மையான பணியாகும். ஆகவே, நடைமுறை தேவனுடனான உங்கள் அணுகுமுறையில், நீங்கள் அவருடைய மனிதத் தன்மைக்கு முன்பாக அவரை அங்கீகரித்து, ஏற்றுக் கொண்டு உங்களை உடனடியாக ஒப்புக் கொடுக்க வேண்டும், மேலும் அவருடைய தெய்வீகக் கிரியைகளையும் வார்த்தைகளையும் நீங்கள் ஏற்றுக் கொண்டு கீழ்ப்படிய வேண்டும். மாம்சத்தில் தேவனின் தோற்றம் என்றால் தேவனுடைய ஆவியின் அனைத்து கிரியைகளும் வார்த்தைகளும் அவருடைய சாதாரண மனிதத் தன்மை மூலமாகவும், அவருடைய மனித அவதாரம் எடுத்த மாம்சத்தின் மூலமாகவும் செய்யப்படுகின்றன என்று அர்த்தமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய ஆவி ஒரே நேரத்தில் அவருடைய மனிதக் கிரியையை வழிநடத்துகிறார் மற்றும் மாம்சத்தில் தெய்வீகக் கிரியை செய்கிறார், மேலும் தேவனுடைய மனித அவதாரத்தில் நீங்கள் மனிதனில் தேவனுடைய கிரியை மற்றும் அவருடைய முழு தெய்வீகக் கிரியை இரண்டையும் காணலாம். இதுதான் மாம்சத்தில் நடைமுறை தேவனின் தோற்றத்தின் உண்மையான முக்கியத்துவம் ஆகும். உங்களால் இதைத் தெளிவாகக் காண முடிந்தால், உங்களால் தேவனின் வெவ்வேறு பகுதிகளை இணைக்க இயலும்; தெய்வீகத்தில் அவர் செய்த கிரியையுடன் தேவையற்ற முக்கியத்துவத்தை இணைப்பதை நீங்கள் நிறுத்திவிடுவீர்கள், மேலும் மனிதனில் அவர் செய்த கிரியையைத் தேவையற்ற நிராகரிப்புடன் பார்ப்பதை நீங்கள் நிறுத்திவிடுவீர்கள், மேலும் நீங்கள் வரம்பு மீறிய நிலைக்குச் செல்லவோ, எந்த மாற்றுப்பாதைகளையும் தேர்ந்தெடுக்கவோ மாட்டீர்கள். ஒட்டுமொத்தமாக, நடைமுறை தேவன் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆவியால் வழிகாட்டப்பட்டபடி, அவருடைய மனித மற்றும் அவருடைய தெய்வீகக் கிரியையானது அவருடைய மாம்சத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது, இதன்மூலம் அவர் வெளிப்படையானவர் மற்றும் ஜீவனுள்ளவர், நிஜமானவர் மற்றும் உண்மையானவர் என்பதை மக்களால் காண இயலும்.

மனிதத் தன்மையில் தேவனுடைய ஆவியின் கிரியையானது மாறும் தன்மைகளைக் கொண்டுள்ளது. மனிதத் தன்மையைப் பரிபூரணமாக்குவதன் மூலம், ஆவியின் வழிநடத்துதலைப் பெற அவர் தனது மனிதத் தன்மையைச் செயல்படுத்துகிறார், அதன் பிறகு அவருடைய மனிதத் தன்மையானது திருச்சபைகளுக்கு வழங்கவும் அவற்றை வழி நடத்தவும் முடிகிறது. இது தேவனுடைய சாதாரண கிரியையின் ஒரு வெளிப்பாடாகும். ஆகவே, மனிதத் தன்மையில் தேவனுடைய கிரியையின் கொள்கைகளை நீங்கள் தெளிவாகக் காண முடியுமானால், மனிதத் தன்மையில் தேவனுடைய கிரியைகள் குறித்த கருத்துக்கள் உங்களிடம் இருக்க முடியாது. வேறு எதுவாக இருந்தாலும், தேவனுடைய ஆவி தவறாக இருக்க முடியாது. அவர் சரியானவர், மாசற்றவர்; அவர் எதையும் தவறாக செய்வதில்லை. தெய்வீகக் கிரியை என்பது மனிதத் தன்மையின் குறுக்கீடு இல்லாமல், தேவனுடைய சித்தத்தின் நேரடி வெளிப்பாடாகும். இது பரிபூரணத்திற்கு உள்ளாகாது, ஆனால் ஆவியிலிருந்து நேரடியாக வருகிறது. இருப்பினும், உண்மை என்னவென்றால் அவருடைய சாதாரண மனிதத் தன்மை காரணமாக அவரால் தெய்வீகத் தன்மையில் கிரியை செய்ய முடியும்; இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல, இது ஒரு சாதாரண மனிதனால் செய்யப்படுவது போலத் தோன்றுகிறது. தேவன் முக்கியமாக தேவனுடைய வார்த்தைகளை மாம்சத்தின் மூலமாக வெளிப்படுத்துவதற்காகவும் தேவனுடைய ஆவியின் கிரியையை மாம்சத்தின் மூலம் நிறைவேற்றுவதற்காகவும் பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்தார்.

இன்று, நடைமுறை தேவனைப் பற்றிய மக்களின் அறிவு ஒருதலைப்பட்சமாகவே இருக்கிறது, மேலும் மனித அவதாரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய அவர்களின் புரிதல் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது. தேவனுடைய மாம்சத்தின் பொருட்டு, தேவனுடைய ஆவியை மிக அதிகமாக உள்ளடக்கியிருப்பதையும், அவர் மிகவும் செல்வச் செழிப்பானவர் என்பதையும் அவருடைய கிரியை மற்றும் வார்த்தைகளின் மூலம் மக்கள் பார்க்கிறார்கள். இது எவ்வாறு இருப்பினும், தேவனுடைய சாட்சியம் இறுதியில் தேவனுடைய ஆவியிலிருந்து வருகிறது: தேவன் மாம்சத்தில் என்ன செய்கிறார், அவர் எந்தக் கொள்கைகள் மூலம் செயல்படுகிறார், அவர் மனிதத் தன்மையில் என்ன செய்கிறார், அவர் தெய்வீகத் தன்மையில் என்ன செய்கிறார். மக்களுக்கு இது குறித்த அறிவு இருக்க வேண்டும். இன்று, உங்களால் இவரை தொழுதுகொள்ள முடிகிறது, ஆனால் உண்மையில் நீங்கள் ஆவியைத் தொழுதுகொள்கிறீர்கள், தேவனுடைய மனித அவதாரம் குறித்துத் தங்கள் அறிவில் குறைந்தபட்சம் மக்கள் அடைய வேண்டிய காரியம் இதுதான்: மாம்சத்தின் மூலமாக ஆவியின் இயல்பை அறிந்துகொள்ள வேண்டும், மாம்சத்தில் ஆவியின் தெய்வீகக் கிரியையையும் மாம்சத்தில் மனித கிரியையையும் அறிந்துகொள்ள வேண்டும், மாம்சத்தில் ஆவியின் எல்லா வார்த்தைகளையும் வாக்குகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும், தேவனுடைய ஆவி மாம்சத்தை எவ்வாறு வழி நடத்துகிறது என்பதையும், மாம்சத்தில் அவருடைய வல்லமை எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் காண வேண்டும். மனிதன் மாம்சத்தின் மூலம் பரலோகத்திலுள்ள ஆவியை அறிந்துகொள்கிறான் என்று தான் சொல்ல வேண்டும்; மனிதர்கள் மத்தியில் நடைமுறை தேவனின் தோற்றம் மக்களின் எண்ணங்களில் உள்ள தெளிவற்ற தேவனை நீக்கியுள்ளது. மக்கள் நடைமுறை தேவனைத் தொழுதுகொள்வது அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதை அதிகரித்துள்ளது, மேலும், மாம்சத்தில் தேவனுடைய தெய்வீகக் கிரியையின் மூலமாகவும், மாம்சத்தில் அவருடைய மனிதக் கிரியையின் மூலமாகவும், மனிதன் வெளிப்பாட்டைப் பெறுகிறான், வழிநடத்தப்படுகிறான், மேலும் மனிதனின் வாழ்க்கை மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுதான் மாம்சத்தில் ஆவி வருவதன் உண்மையான அர்த்தமாகும், இதன் முக்கியமான நோக்கம் என்னவென்றால் மக்கள் தேவனுடன் இணைந்து செயல்படலாம், தேவனை நம்பலாம், தேவனைப் பற்றிய அறிவைப் பெறலாம் என்பதாகும்.

முக்கியமாக, நடைமுறை தேவனைப் பற்றி மக்கள் என்ன மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும்? மனுவுருவெடுத்தல், மாம்சத்தில் வார்த்தையின் தோற்றம், மாம்சத்தில் தேவனின் தோற்றம், நடைமுறை தேவனின் செயல்கள் போன்றவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இன்றைய விவாதத்தின் முக்கிய தலைப்புகள் எவை? மனுவுருவெடுத்தல், மாம்சத்தில் வார்த்தையின் வருகை, மற்றும் மாம்சத்தில் தேவனுடைய தோற்றம் அனைத்தும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய பிரச்சினைகளாகும். உங்கள் அந்தஸ்தின் அடிப்படையிலும், காலகட்டத்தின் அடிப்படையிலும் நீங்கள் இந்தப் பிரச்சனைகளைப் படிப்படியாக புரிந்துகொள்ளவும், உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் அவற்றைப் பற்றிய தெளிவான அறிவைப் பெறவும் வேண்டும். தேவனுடைய வார்த்தைகளை மக்கள் அனுபவிக்கும் முறையும் மாம்சத்தில் தேவனுடைய வார்த்தைகளின் தோற்றத்தை அவர்கள் அறிந்துகொள்ளும் முறையும் ஒன்றாகும். தேவனுடைய வார்த்தைகளை மக்கள் எவ்வளவு அதிகமாக அனுபவிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தேவனுடைய ஆவியையும் அறிவார்கள்; தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதன் மூலம், மக்கள் ஆவியின் கிரியையின் கொள்கைகளைப் புரிந்துகொண்டு, நடைமுறை தேவனை அறிந்துகொள்கிறார்கள். உண்மையில், தேவன் மக்களைப் பரிபூரணமாக்கி, அவர்களை ஆதாயப்படுத்தும் போது, அவர் நடைமுறை தேவனுடைய செயல்களை அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்; அவர் மனித அவதாரத்தின் உண்மையான முக்கியத்துவத்தை மக்களுக்குக் காண்பிப்பதற்காகவும், தேவனுடைய ஆவி உண்மையில் மனிதனுக்கு முன்பாக தோன்றியிருப்பதைக் காண்பிப்பதற்காகவும் நடைமுறை தேவனுடைய கிரியையை அவர் பயன்படுத்துகிறார். மக்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு, பரிபூரணமாக்கப்படும் போது, நடைமுறை தேவனின் வெளிப்பாடுகள் அவர்களை வென்றுள்ளன; நடைமுறை தேவனுடைய வார்த்தைகள் அவர்களை மாற்றியுள்ளன, அவருடைய சொந்த ஜீவனை அவர்களுக்குள் புகுத்தியுள்ளன, அவர் என்னவாக இருக்கிறார் (அவர் மனிதத் தன்மையில் என்னவாக இருக்கிறார் அல்லது தெய்வீகத்தன்மையில் என்னவாக இருக்கிறார்) என்பதைக் கொண்டு அவர்களை நிரப்பியுள்ளன, அவருடைய வார்த்தைகளின் சாராம்சத்தினால் அவர்களை நிரப்பியுள்ளன மற்றும் அவருடைய வார்த்தைகளின்படி மக்களை வாழ வைத்துள்ளன. தேவன் மக்களை ஆதாயப்படுத்தும் போது, அவர் மிக மிக முக்கியமாக நடைமுறை தேவனுடைய வார்த்தைகளையும் வாக்குகளையும் மக்களின் குறைபாடுகளைக் கையாள்வதற்கும், அவர்களுடைய கலகக்கார மனநிலையை நியாயந்தீர்ப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் ஒரு வழியாகப் பயன்படுத்துகிறார், இதனால் அவர்களுக்குத் தேவையானதைப் பெறச் செய்கிறார் மற்றும் தேவன் மனிதர் மத்தியில் வந்துவிட்டார் என்பதைக் காண்பிக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, நடைமுறை தேவனால் செய்யப்படும் கிரியை என்னவென்றால், அவர் ஒவ்வொருவரையும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து இரட்சித்து, அவர்களை அசுத்தமான தேசத்திலிருந்து அழைத்துச் செல்கிறார், மேலும் அவர்களுடைய சீர்கேடான மனநிலையை நீக்குகிறார். நடைமுறை தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதன் மிக ஆழமான முக்கியத்துவம் என்னவென்றால், நடைமுறை தேவனை ஒரு முன்மாதிரியாகவும், உதாரணமாகவும் எடுத்துக்கொண்டு சாதாரண மனிதத் தன்மையில் வாழ வேண்டும், நடைமுறை தேவனுடைய வார்த்தைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப சிறிதளவு விலகலோ அல்லது மாறுபாடோ இல்லாமல் நடக்க வேண்டும், அவர் சொல்கிற வழியில் நடக்க வேண்டும் மற்றும் அவர் கேட்பதை நிறைவேற்ற வேண்டும். இவ்விதமாக, நீங்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டிருப்பீர்கள். நீங்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்படும் போது, பரிசுத்த ஆவியின் கிரியையை மட்டுமே பெற்றிருப்பதில்லை; முக்கியமாக, நடைமுறை தேவனின் தேவைகளின்படி உங்களால் வாழ இயலும். பரிசுத்த ஆவியின் கிரியை மாத்திரம் உங்களிடம் இருப்பதனால் உங்களுக்கு ஜீவன் உள்ளது என்று அர்த்தமல்ல. உங்களுடைய நடைமுறை தேவனின் தேவைகளுக்கு ஏற்ப உங்களால் செயல்பட முடியுமா என்பதுதான் முக்கியமான காரியமாகும், இது நீங்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்பட முடியுமா என்பதுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இவைதான் மாம்சத்தில் நடைமுறை தேவனுடைய கிரியையின் மாபெரும் அர்த்தமாகும். தேவன் உண்மையிலேயே மாம்சத்தில் தோன்றுவதன் மூலமும், தெளிவானவராகவும், ஜீவனுள்ளவராகவும் இருப்பதன் மூலமாகவும், மக்களால் பார்க்கப்படுவதன் மூலமாகவும், உண்மையில் மாம்சத்தில் ஆவியின் கிரியையைச் செய்வதன் மூலமாகவும், மாம்சத்தில் மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயல்படுவதன் மூலமாகவும் ஒரு கூட்ட மக்களை ஆதாயப்படுத்துகிறார் என்றே சொல்ல வேண்டும். மாம்சத்தில் தேவனுடைய வருகை என்றால் முக்கியமாக மக்கள் தேவனுடைய உண்மையான செயல்களைக் காணவும், உருவமற்ற ஆவிக்கு மாம்ச உருவத்தைக் கொடுக்கவும், மக்கள் அவரைக் காணவும் தொடவும் அனுமதிக்க வேண்டும் என்பதாகும். இவ்விதமாக, அவரால் பரிபூரணமாக்கப்பட்டவர்கள் அவரைப் போல வாழ்வார்கள், அவரால் ஆதாயப்படுத்தப்படுவார்கள், அவருடைய இருதயத்திற்குப் பின்னால் இருப்பார்கள். தேவன் பரலோகத்தில் மாத்திரமே பேசிவிட்டு, உண்மையிலே பூமிக்கு வரவில்லை என்றால், மக்கள் தேவனை இன்னும் அறிய முடியாமல் இருப்பார்கள்; அவர்கள் வெற்றுக் கோட்பாட்டைப் பயன்படுத்தி தேவனுடைய செயல்களைப் பிரசங்கிக்க மட்டுமே முடியுமே தவிர, தேவனுடைய வார்த்தைகளை நிஜமாகக் கொண்டிருக்க மாட்டார்கள். தேவன் முக்கியமாகத் தன்னால் ஆதாயப்படுத்தப் பட்டவர்களுக்கு முன்மாதிரியாகவும் உதாரணமாகவும் செயல்படவுமே பூமிக்கு வந்துள்ளார்; மக்கள் இவ்வாறு மாத்திரமே உண்மையில் தேவனை அறிந்துகொள்ளவும், தேவனைத் தொடவும், அவரைப் பார்க்கவும் இயலும், அப்போதுதான் அவர்கள் உண்மையிலேயே தேவனால் ஆதாயப்படுத்தப்பட முடியும்.

முந்தைய: ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது

அடுத்த: தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக