தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 589
சிருஷ்டிகர் சிருஷ்டித்த அனைத்து ஜீவராசிகளுக்கும் திட்டமிட விரும்புகிறார். அவர் செய்யும் எதையும் நீ நிராகரிக்கவோ அல்லது கீழ்ப்படியாமல்...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
தேவனுடைய ஒவ்வொரு கட்டக் கிரியையும் முழு மனுக்குலத்துக்காகவும் செயல்படுத்தப்பட்டு, மனுக்குலம் முழுவதையும் வழிநடத்துகிறது. இது மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையாக இருக்கின்றபோதிலும், இது இன்னும் முழு மனுக்குலத்தையும் வழிநடத்துகிறது. அவர் முழு மனுக்குலத்திற்கும் தேவனாக இருக்கிறார். சிருஷ்டிக்கப்பட்ட மற்றும் சிருஷ்டிக்கப்படாத எல்லா ஜீவராசிகளுக்கும் தேவனாக இருக்கிறார். மாம்சத்தில் அவர் செய்யும் கிரியை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கின்றபோதிலும், இந்தக் கிரியையின் நோக்கமும் குறைவாக இருக்கின்றபோதிலும், அவர் தமது கிரியையைச் செய்ய மாம்சமாக மாறும் ஒவ்வொரு முறையும், அவர் தமது கிரியைக்கான ஒரு மிகவும் உயர்ந்த பிரதிநிதித்துவமான நோக்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார். அவர் கிரியை செய்ய எளிய மற்றும் சாதராணமான ஜனக்கூட்டத்தைத் தெரிந்துகொள்வதில்லை. மாறாக, அவருடைய கிரியைக்கான நோக்கத்திற்காக மாம்சத்தில் அவர் செய்யும் கிரியைக்கான பிரதிநிதிகளாக இருக்கத் தகுதியான ஒரு ஜனக்கூட்டத்தைத் தெரிந்துகொள்வார். மாம்சத்தில் அவர் செய்யும் கிரியைக்கான நோக்கம் வரம்புக்குட்பட்டதாக இருப்பதால், குறிப்பாக அவருடைய மாம்சமான மாம்சத்திற்காக ஆயத்தப்படுத்தப்படுவதால், இந்த ஜனக்கூட்டம் தெரிந்துகொள்ளப்படுகிறது, குறிப்பாக மாம்சத்தில் அவர் செய்யும் கிரியைக்காகத் தெரிந்துகொள்ளப்படுகிறது. தேவன் தமது கிரியைக்கான நோக்கத்தைத் தேர்ந்தெடுப்பது ஆதாரமற்றது அல்ல, ஆனால் இது கொள்கையின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது: கிரியைக்கான நோக்கம் மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியைக்கு நன்மை பயக்க வேண்டும், மேலும் மனுக்குலம் முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். உதாரணமாக, இயேசுவின் தனிப்பட்ட மீட்பை ஏற்றுக்கொள்வதில் மனுக்குலம் முழுவதையும் யூதர்களால் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது. மேலும், மாம்சமான தேவனுடைய தனிப்பட்ட ஜெயங்கொள்ளுதலை ஏற்றுக்கொள்வதில் மனுக்குலம் முழுவதையும் சீனர்களால் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்தது. மனுக்குலம் முழுவதையும் யூதர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒரு அடிப்படை நோக்கம் உள்ளது. தேவனுடைய தனிப்பட்ட ஜெயங்கொள்ளுதலை ஏற்றுக்கொள்வதில் மனுக்குலம் முழுவதையும் சீனர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் ஒரு அடிப்படை நோக்கம் உள்ளது. யூதர்களிள் நடுவே செய்யப்படும் மீட்பின் கிரியையைக் காட்டிலும் அதிகமாக வேறு எதுவும் மீட்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தவில்லை. சீனர்கள் நடுவில் செய்யப்படும் ஜெயங்கொள்ளுதல் கிரியையைக் காட்டிலும் அதிகமாக வேறு எதுவும் ஜெயங்கொள்ளுதல் கிரியையின் முழுமையையும் ஜெயங்கொள்ளுதலையும் வெளிப்படுத்தவில்லை. மாம்சமான தேவனுடைய கிரியையும் வார்த்தையும் சிறு ஜனக்கூட்டத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாகத் தோன்றுகிறது, ஆனால் உண்மையில், இந்தச் சிறு ஜனக்கூட்டத்தின் நடுவே அவருடைய கிரியை முழு பிரபஞ்சத்தின் கிரியையாகவும், அவருடைய வார்த்தை மனுக்குலம் முழுவதையும் வழிநடத்துவதாகவும் இருக்கிறது. மாம்சத்தில் அவர் செய்யும் கிரியை முடிந்ததும், அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவர் செய்யும் கிரியையை அவர்கள் நடுவே பரப்ப ஆரம்பிப்பார்கள். மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையைப் பற்றிய மிகச் சிறந்த காரியம் என்னவென்றால், அவரால் துல்லியமான வார்த்தைகளையும் அறிவுரைகளையும், அவரைப் பின்பற்றுகிறவர்களுக்கு மனுக்குலத்திற்கான அவருடைய குறிப்பிட்ட சித்தத்தையும் விட்டுச்செல்ல இயலும். இதனால், அதன்பிறகு அவரைப் பின்பற்றுகிறவர்கள் மாம்சத்தில் செய்யும் அவருடைய எல்லாக் கிரியைகளையும், மனுக்குலம் முழுவதிற்குமான அவருடைய சித்தத்தையும் இதை ஏற்றுக்கொள்கின்றவர்களிடம் மிகவும் துல்லியமாகவும், உறுதியாகவும் பரப்ப இயலும். மனுஷர்கள் நடுவே மாம்சத்திலுள்ள தேவனுடைய கிரியை மாத்திரமே தேவன் மனுஷனுடன் ஒன்றாக இருக்கிறார் மற்றும் ஒன்றாக சேர்ந்து ஜீவிக்கிறார் என்கிற உண்மையை மெய்யாகவே நிறைவேற்றுகிறது. தேவனுடைய முகத்தைக் காணவும், தேவனுடைய கிரியையைப் பார்க்கவும், தேவனுடைய தனிப்பட்ட வார்த்தையைக் கேட்கவும் மனுஷனுடைய விருப்பத்தை இந்தக் கிரியை மாத்திரமே நிறைவேற்றுகிறது. யேகோவாவின் பின்புறம் மாத்திரமே மனுக்குலத்திற்குத் தோன்றிய போது மாம்சமான தேவன் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார். மேலும், தெளிவற்ற தேவன் மீதான மனுக்குலத்தின் நம்பிக்கையின் காலத்தையும் அவர் முடிவுக்குக் கொண்டுவருகிறார். குறிப்பாக, கடைசியாக மாம்சமான தேவனுடைய கிரியையானது முழு மனுக்குலத்தையும் மிகவும் யதார்த்தமான, மிகவும் நடைமுறையான மற்றும் அழகான ஒரு காலத்திற்குக் கொண்டுவருகிறது. அவர் நியாயப்பிரமாணத்தின் மற்றும் கோட்பாட்டின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மட்டுமின்றி, மிகவும் முக்கியமாக, உண்மையான மற்றும் சாதாரணமான, நீதியுள்ள மற்றும் பரிசுத்தமான, நிர்வாகத் திட்டத்தின் கிரியைகளைத் திறக்கும் மற்றும் மனுக்குலத்தின் மறைபொருட்களையும், போய்ச்சேருமிடத்தையும் விவரிக்கும், மனுக்குலத்தைச் சிருஷ்டித்து, நிர்வாகக் கிரியைகளை முடிவுக்குக் கொண்டுவரும், ஆயிரக்கணக்கான வருடங்களாக மறைந்திருக்கும் ஒரு தேவனை அவர் மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகிறார். அவர் தெளிவற்ற காலத்தை ஒரு முழுமையான முடிவுக்குக் கொண்டுவருகிறார். மனுக்குலம் முழுவதும் தேவனுடைய முகத்தைத் தேட விரும்பியும் காண முடியாத காலத்தை அவர் முடிவுக்குக் கொண்டுவருகிறார். மனுக்குலம் முழுவதும் சாத்தானுக்கு ஊழியம் செய்த காலத்தை அவர் முடிவுக்குக் கொண்டுவந்து, மனுக்குலம் முழுவதையும் ஒரு புதிய காலத்திற்குள் வழிநடத்துகிறார். இவையெல்லாம் தேவனுடைய ஆவியானவருக்குப் பதிலாக மாம்சத்திலுள்ள தேவனால் செய்யப்படும் கிரியையின் பலனாகும். தேவன் தம்முடைய மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவரைப் பின்பற்றுகிறவர்கள் இனிமேல் இருப்பதும் இல்லாததும் போலத் தோன்றும் காரியங்களைத் தேடி அலைவதில்லை, தெளிவற்ற தேவனுடைய சித்தத்தை ஊகம் செய்வதை நிறுத்திக்கொள்கிறார்கள். தேவன் மாம்சத்தில் தம்முடைய கிரியையைப் பரப்பும்போது, அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவர் மாம்சத்தில் செய்த கிரியையை எல்லா மதங்களிலும் மதப் பிரிவுகளிலும் அறிவிப்பார்கள். மேலும், அவர்கள் அவருடைய வார்த்தைகள் அனைத்தையும் மனுக்குலத்தின் காதுகளில் எடுத்துரைப்பார்கள். அவருடைய சுவிசேஷத்தைப் பெறுபவர்களால் கேட்கப்படுகின்ற அனைத்தும் அவருடைய கிரியையின் உண்மைகளாகவும், மனுஷனால் தனிப்பட்ட முறையில் காணக்கூடிய காரியங்களாகவும் இருக்கும், அவை உண்மைகளாக இருக்குமே தவிர, வதந்தியாக இருக்காது. இந்த உண்மைகள் அவர் கிரியையைப் பரப்புவதற்கான ஆதாரமாக இருக்கின்றன. இவை கிரியையைப் பரப்புவதற்கு அவர் பயன்படுத்தும் கருவிகளாகவும் இருக்கின்றன. ஜீவித்திருக்கிற உண்மைகள் இல்லாமல், அவருடைய சுவிசேஷம் எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் பரவாது. உண்மைகள் இல்லாமல் மனுஷனுடைய கற்பனைகளைக் கொண்டு மட்டுமே, முழு பிரபஞ்சத்தையும் ஜெயங்கொள்ளும் கிரியையை அவரால் ஒருபோதும் செய்ய முடியாது. ஆவியானவர் மனுஷனால் தொட்டுணர முடியாதவராகவும், மனுஷனுடைய கண்ணுக்குத் தெரியாதவராகவும் இருக்கிறார். தேவனுடைய கிரியையின் வேறு எந்தக் கூடுதல் ஆதாரத்தையோ அல்லது உண்மைகளையோ விட்டுச்செல்ல ஆவியானவரின் கிரியையால் முடியாது. தேவனுடைய உண்மையான முகத்தை மனுஷன் ஒருபோதும் காணமாட்டான். அவன் எப்போதும் இல்லாத ஒரு தெளிவற்ற தேவனையே நம்புவான். மனுஷன் ஒருபோதும் தேவனுடைய முகத்தைக் காணமாட்டான். தேவனால் தனிப்பட்ட முறையில் பேசப்படும் வார்த்தைகளையும் மனுஷன் ஒருபோதும் கேட்கமாட்டான். எல்லாவற்றிற்கும் மேலாக, மனுஷனுடைய கற்பனைகள் வெறுமையாக உள்ளன, தேவனுடைய உண்மையான முகத்திற்கு அவை மாற்றாக முடியாது. தேவனுடைய இயல்பான மனநிலை மற்றும் தேவனுடைய கிரியை ஆகியவற்றை மனுஷனால் ஆள்மாறாட்டம் செய்ய முடியாது. பரலோகத்திலுள்ள அதரிசனமான தேவனும், அவருடைய கிரியையும் மனுஷர் நடுவே தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்யும் மாம்சமான தேவனால் மட்டுமே பூமிக்குக் கொண்டுவர முடியும். இதுவே தேவன் மனுஷரிடம் தோன்றுவதற்கான மிகச் சிறந்த வழியாகும், இதில் மனுஷன் தேவனைப் பார்க்கிறான், தேவனுடைய உண்மையான முகத்தை அறிந்துகொள்கிறான். மாம்சமாகாத தேவனால் இதை அடைய முடியாது. இந்தக் கட்டத்தில் அவருடைய கிரியை செய்யப்பட்டதனால், தேவனுடைய கிரியை ஏற்கனவே சிறந்த பலனை அடைந்துள்ளது, மேலும் இது ஒரு முழுமையான ஜெயமாக இருக்கிறது. மாம்சத்தில் தேவனுடைய தனிப்பட்ட கிரியையானது ஏற்கனவே அவருடைய முழு நிர்வாகத்தின் தொண்ணூறு சதவிகித கிரியைகளை முடித்துவிட்டது. இந்த மாம்சம் அவருடைய எல்லா கிரியைகளுக்கும் ஒரு சிறந்த துவக்கத்தையும், அவருடைய எல்லாக் கிரியைகளுக்கும் ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளது, மேலும் அவருடைய எல்லாக் கிரியைகளையும் அறிவித்துள்ளது. இந்தக் கிரியைகள் எல்லாவற்றிற்கும் கடைசி முழு நிறைவேறுதலையும் செய்துள்ளது. இனிமேல், தேவனுடைய நான்காவது கட்டக் கிரியையைச் செய்வதற்கு மற்றொரு மாம்சமான தேவன் இருக்க மாட்டார், மேலும் மூன்றாவது மாம்சமான தேவனுடைய எந்த அதிசயமான கிரியையும் ஒருபோதும் இருக்காது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
சிருஷ்டிகர் சிருஷ்டித்த அனைத்து ஜீவராசிகளுக்கும் திட்டமிட விரும்புகிறார். அவர் செய்யும் எதையும் நீ நிராகரிக்கவோ அல்லது கீழ்ப்படியாமல்...
ஜனங்களுடைய முடிவுகளையும் தரங்களையும் தேவன் எவ்வாறு அவற்றைச் செய்வதன் மூலம் தீர்மானிக்கிறார் எந்தவொரு கருத்துக்களிலும் முடிவுகளிலும் நீ...
ஆதியில், மனுஷகுலத்தை சிருஷ்டித்த பிறகு, தேவனுடைய கிரியையின் அஸ்திபாரமாக ஊழியம் செய்தது இஸ்ரவேலர்கள்தான். பூமியில் இஸ்ரவேல் முழுவதும்...
தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் உயிருக்கு ஆபத்தான இடங்களில் ஓங்கி அடித்து, நம்மைக் காயப்படுத்தி, பயத்தினால் நிறைந்திருக்கச் செய்கிறது. அவர்...