தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 160

மார்ச் 17, 2023

ஆதியில், மனுஷகுலத்தை சிருஷ்டித்த பிறகு, தேவனுடைய கிரியையின் அஸ்திபாரமாக ஊழியம் செய்தது இஸ்ரவேலர்கள்தான். பூமியில் இஸ்ரவேல் முழுவதும் யேகோவாவின் கிரியையின் அஸ்திபாரமாக இருந்தது. மனுஷனை ஒரு சரியான ஜீவிதத்தை வாழச் செய்யவும், பூமியில் ஒரு சரியான முறையில் யேகோவாவை வணங்கச் செய்யவும், நியாயப்பிரமாணங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மனுஷனை நேரடியாக வழிநடத்துவதும் மேய்ப்பதும் யேகோவாவின் கிரியையாக இருந்தது. நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் மனுஷனால் தேவனைப் பார்க்கவோ தொடவோ முடியவில்லை. ஏனென்றால், அவர் செய்ததெல்லாம் சாத்தானால் சீர்கெட்டுப்போன ஆதிகால ஜனங்களை வழிநடத்துவதும், அவர்களுக்குக் கற்பிப்பதும், அவர்களை மேய்ப்பதும்தான். அவருடைய வார்த்தைகளில் நியாயப்பிரமாணங்கள், சட்டங்கள் மற்றும் மனுஷ நடத்தை விதிமுறைகளைத் தவிர வேறொன்றும் இருக்கவில்லை, மேலும் அவர்களுக்கு ஜீவனைக் குறித்த சத்தியங்களையும் வழங்கவில்லை. அவருடைய தலைமையின் கீழ் இருந்த இஸ்ரவேலர் சாத்தானால் ஆழமாகச் சீர்கெட்டுப்போகவில்லை. அவரது நியாயப்பிரமாணத்தின் கிரியையே, இரட்சிப்பிற்கான கிரியையின் முதல் கட்டமாக, இரட்சிப்பிற்கான கிரியையின் ஆரம்பமாக இருந்தது, மேலும் அதற்கு மனுஷனின் ஜீவ மனநிலையில் ஏற்பட்ட மாற்றங்களுடன் நடைமுறையில் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகையால், இரட்சிப்பிற்கான கிரியையின் ஆரம்பத்தில் இஸ்ரவேலில் அவர் செய்த கிரியைக்காக அவர் மாம்சமாக வேண்டிய அவசியம் இல்லை. இதற்குத்தான் மனுஷனுடன் ஈடுபட அவருக்கு ஓர் ஊடகம்—ஒரு கருவி—தேவைப்பட்டது. இவ்வாறு, யேகோவாவின் சார்பாகப் பேசியவர்களும் கிரியை செய்தவர்களும் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களிடையே எழுந்தார்கள், இவ்வாறுதான் மனுஷகுமாரர்களும் தீர்க்கதரிசிகளும் மனுஷரிடையே கிரியை செய்ய வந்தார்கள். மனுஷகுமாரர்கள் யேகோவாவின் சார்பாக மனுஷரிடையே கிரியை செய்தனர். யேகோவாவால் "மனுஷகுமாரர்" என்று அழைக்கப்படுவதன் காரணம் என்னவென்றால், அத்தகையவர்கள் யேகோவாவின் சார்பாக நியாயப்பிரமாணத்தை வகுக்கிறார்கள் என்பதாகும். அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களிடையே ஆசாரியர்களாக இருந்தனர், அவர்கள் யேகோவாவால் கவனிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டவர்களாகவும், யேகோவாவின் ஆவி கிரியை செய்தவர்களாகவும் இருந்தார்கள்; அவர்கள் ஜனங்களிடையே தலைவர்களாக இருந்து, நேரடியாக யேகோவாவுக்கு ஊழியம் செய்தார்கள். மறுபுறம், தீர்க்கதரிசிகள், யேகோவாவின் சார்பாக, எல்லா நாடுகளிலும், பழங்குடியின ஜனங்களிடமும் பேசுவதற்காக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் யேகோவாவின் கிரியையையும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். அவர்கள் மனுஷகுமாரர்களாக இருந்தாலும், தீர்க்கதரிசிகளாக இருந்தாலும், அனைவரும் யேகோவாவின் ஆவியினால் எழுப்பப்பட்டு, தங்களுக்குள் யேகோவாவின் கிரியையைக் கொண்டிருந்தார்கள். ஜனங்களிடையே, அவர்கள்தான் யேகோவாவை நேரடியாகப் பிரதிநிதித்துவப்படுத்தினர்; அவர்கள் பரிசுத்த ஆவியானவர் மனுஷனாக அவதரித்த மாம்சமாக இருந்ததால் அல்ல, மாறாக அவர்கள் யேகோவாவால் எழுப்பப்பட்டதனால் மட்டுமே அவர்கள் தங்கள் கிரியையை செய்தார்கள். ஆகையால், அவர்கள் தேவனின் சார்பாகப் பேசுவதிலும் கிரியை செய்வதிலும் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் இருந்த மனுஷகுமாரர்களும், தீர்க்கதரிசிகளும் மனுஷனாக அவதரித்த தேவனின் மாம்சத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. கிருபையின் யுகத்திலும், கடைசி கட்டத்திலும் செயல்படுத்தப்பட்ட தேவனின் கிரியை நேர்மாறாக இருந்தது, ஏனென்றால் மனுஷனின் இரட்சிப்பு மற்றும் நியாயத்தீர்ப்பு ஆகிய இரண்டும் மனுஷனாக அவதரித்த தேவனால் நிகழ்த்தப்பட்டன. எனவே அவர் சார்பாகக் கிரியை செய்ய தீர்க்கதரிசிகளையும் மனுஷகுமாரர்களையும் மீண்டும் ஒரு முறை எழுப்ப வேண்டிய அவசியமிருக்கவில்லை. மனுஷனின் பார்வையில், சாராம்சத்திற்கும், அவர்களின் கிரியையின் முறைக்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் எதுவும் இருப்பதில்லை. இந்தக் காரணத்தினாலேயே, ஜனங்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் மனுஷகுமாரனின் கிரியைகளோடு மனுஷனாக அவதரித்த தேவனின் கிரியைகளைத் தொடர்ந்து குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். மனுஷனாக அவதரித்த தேவன் தோன்றியது அடிப்படையில் தீர்க்கதரிசிகள் மற்றும் மனுஷகுமாரர்கள் தோன்றியதைப் போன்றதுதான். மனுஷனாக அவதரித்த தேவன், தீர்க்கதரிசிகளை விட மிகவும் இயல்பாகவும், உண்மையாகவும் இருந்தார். எனவே, மனுஷனால் அவர்களை வேறுபடுத்திப் பார்க்க இயலாது. மனுஷன் தோற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறான், கிரியை செய்வதிலும் பேசுவதிலும் இருவரும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவர்களுக்கு இடையே முக்கியமான வேறுபாடு இருப்பதை அவனால் முழுமையாக அறியமுடிவதில்லை. மனுஷனின் விஷயங்களை ஆழ்ந்து கவனிக்கும் திறன் மிகவும் மோசமாக இருப்பதால், அவனுக்கு எளிய சிக்கல்களை வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை, மிகவும் சிக்கலானவற்றையும் கூட வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. தீர்க்கதரிசிகளும், பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஜனங்களும் பேசியபோதும், கிரியை செய்தபோதும், இது மனுஷனின் கிரியைகளை மற்றும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் செயல்பாட்டைச் செய்வதாக இருந்தது. இது மனுஷன் செய்ய வேண்டிய ஒன்றாக இருந்தது. இருப்பினும், மனுஷனாக அவதரித்த தேவனின் வார்த்தைகளும் கிரியையும் அவருடைய ஊழியத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்டவை ஆகும். அவருடைய வெளிப்புறத் தோற்றம் சிருஷ்டிக்கப்பட்டவைக்குரியதாக இருந்தபோதிலும், அவருடைய கிரியை அவருடைய செயல்பாட்டைச் செய்வதல்ல, அவருடைய ஊழியத்தைச் செய்வதாகும். "கடமை" என்ற சொல் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷரைக் குறித்து பயன்படுத்தப்படுகிறது, அதேசமயம் "ஊழியம்" என்பது மனுஷனாக அவதரித்த தேவனைக் குறித்து பயன்படுத்தப்படுகிறது. இரண்டிற்கும் இடையே ஒரு கணிசமான வேறுபாடு உள்ளது; அவை ஒன்றோடொன்று மாற்றிக்கொள்ளக் கூடியவை அல்ல. மனுஷனின் கிரியை அவனுடைய கடமையைச் செய்வதே ஆகும், அதேசமயம் தேவனின் கிரியை நிர்வகிப்பதும், அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதும் ஆகும். ஆகையால், பல அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பல தீர்க்கதரிசிகள் அவரால் நிரப்பப்பட்டிருந்தாலும், அவர்களுடைய கிரியையும் வார்த்தைகளும் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷராகத் தங்கள் கடமையைச் செய்வதற்காக மட்டுமே இருந்தன. அவர்களுடைய தீர்க்கதரிசனங்கள் மனுஷராக அவதரித்த தேவனால் பேசப்பட்ட ஜீவவழியை மிஞ்சியிருக்கலாம், மேலும் அவர்களின் மனுஷத்தன்மையானது மனுஷனாக அவதரித்த தேவனின் தன்மையை மிஞ்சியிருக்கலாம், ஆனால் அவர்கள் இன்னும் தங்கள் கடமையைத்தான் செய்து கொண்டிருந்தார்கள், ஊழியத்தை நிறைவேற்றவில்லை. மனுஷனின் கடமை மனுஷனின் செயல்பாட்டைக் குறிக்கிறது; அதுவே மனுஷனால் அடையக்கூடியதும் கூட. இருப்பினும், மனுஷனாக அவதரித்த தேவனால் மேற்கொள்ளப்படும் ஊழியம் அவருடைய நிர்வாகத்துடன் தொடர்புடையது, இது மனுஷனால் அடைய முடியாதது. மனுஷனாக அவதரித்த தேவன் பேசினாலும், கிரியை செய்தாலும், அதிசயங்களை வெளிப்படுத்தினாலும், அவர் தனது நிர்வாகத்தின் மத்தியில் மிகச் சிறந்த கிரியையைச் செய்துவருகிறார், அத்தகையக் கிரியையை அவருக்குப் பதிலாக மனுஷனால் செய்ய முடியாது. மனுஷனின் கிரியை என்பது தேவனின் நிர்வாகத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சிருஷ்டிக்கப்பட்ட மனுஷனாக தனது கடமையைச் செய்வதாகும். தேவனின் நிர்வாகம் இல்லாமல், அதாவது, மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியம் இழக்கப்பட்டால், சிருஷ்டிக்கப்பட்ட ஒருவனின் கடமை இழக்கப்பட நேரிடும். தன் ஊழியத்தைச் செய்வதில் இருக்கும் தேவனின் கிரியை, மனுஷனை நிர்வகிப்பதாகும், அதேசமயம் மனுஷனுடைய கடமையின் செயல்திறனானது சிருஷ்டிகரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகத் தனது சொந்த கடமையை நிறைவேற்றுவதாகும், மேலும் ஒருவருடைய சொந்த ஊழியத்தை நிறைவேற்றுவதை எந்த வகையிலும் கருத முடியாது. தேவனின் ஆழமான சாராம்சத்திற்கு—அவருடைய ஆவிக்கு—தேவனின் கிரியை அவருடைய நிர்வாகமாகும், ஆனால் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனின் வெளிப்புறத் தோற்றத்தை அணிந்திருக்கும் மனுஷனாக அவதரித்த தேவனுக்கு, அவருடைய கிரியை அவருடைய ஊழியத்தைச் செய்வதாகும். அவர் எந்தக் கிரியையைச் செய்தாலும் அது அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதற்காகவே ஆகும்; மனுஷனால் செய்யக்கூடியது, தேவனின் நிர்வாகத்தின் எல்லைக்குள் மற்றும் அவரது வழிகாட்டுதலின் கீழ் தனது சிறந்ததைக் கொடுப்பது மட்டுமே ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க