தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 221

தேவனுடைய வார்த்தைகள் எண்ணற்ற வீடுகளில் பரவும். அனைவருக்கும் அவை தெரிய வரும் மற்றும் அதன்பின் தான் அவருடைய கிரியை பிரபஞ்சம் முழுவதும் பரவும். அதாவது, தேவனுடைய கிரியை முழு உலகத்திலும் பரவ வேண்டும் என்றால், அவருடைய வார்த்தைகள் பரப்பப்பட வேண்டும். தேவனுடைய மகிமையின் நாளில், தேவனுடைய வார்த்தைகள் அவற்றின் வல்லமையையும் அதிகாரத்தையும் காண்பிக்கும். ஆதிகாலம் முதல் இன்று வரை சொல்லப்பட்ட அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிறைவேறும், அது நடக்கும். இவ்வாறு, பூமியில் தேவனுக்கு மகிமை இருக்கும்—அதாவது, அவருடைய வார்த்தைகள் பூமியில் ஆளுகை செய்யும். தேவனுடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் துன்மார்க்கர் அனைவரும் சிட்சிக்கப்படுவார்கள், நீதிமான்கள் அனைவரும் அவருடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், அவருடைய வாயிலிருந்து பேசப்படும் வார்த்தைகளால் அனைவரும் ஸ்தாபிக்கப்பட்டு முழுமையாக்கப்படுவார்கள். அவர் எந்த அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்த மாட்டார். அவருடைய வார்த்தைகளால் அனைத்தும் நிறைவேறும். அவருடைய வார்த்தைகள் உண்மைகளை உருவாக்கும். பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டாடுவார்கள், அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும், ஆண், பெண், வயதானவர்கள் அல்லது இளைஞர்கள் என யாராக இருந்தாலும் தேவனுடைய வார்த்தைகளின் கீழ் அனைவரும் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள். தேவனுடைய வார்த்தைகளானது மாம்சத்தில் வெளிப்படும், பூமியிலுள்ள ஜனங்கள் வாழ்நாள் முழுவதும் அதைத் தெளிவாக உயிரோட்டமுடையதாய்ப் பார்க்க அனுமதிக்கிறது. இதுவே வார்த்தை மாம்சமாக மாறுவதன் பொருள் ஆகும். "வார்த்தை மாம்சமாக மாறுகிறது" என்ற உண்மையை நிறைவேற்றுவதற்காக தேவன் முதன்மையாக பூமிக்கு வந்துள்ளார், அதாவது, அவருடைய வார்த்தைகள் மாம்சத்திலிருந்து வெளிவரும்படி அவர் வந்திருக்கிறார் (பழைய ஏற்பாட்டில் மோசேயின் காலத்தைப் போல, தேவனுடைய சத்தம் வானத்திலிருந்து நேரடியாக வெளியிடப்படாது). அதன்பிறகு, அவருடைய வார்த்தைகள் அனைத்தும் ஆயிர வருட அரசாட்சியின் யுகத்தில் நிறைவேறும். அவை மனிதனுடைய கண்களுக்கு முன்பாகத் தெரியும் உண்மைகளாக மாறும், மேலும் ஜனங்கள் தங்கள் கண்களைப் பயன்படுத்தி சிறிதளவும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அதனைப் பார்ப்பார்கள். இது தேவனுடைய மனுவுருவின் மிக உயர்ந்த அர்த்தமாகும். அதாவது, ஆவியின் கிரியை மாம்சத்தின் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் நிறைவேற்றப்படுகிறது. இதுதான் "வார்த்தை மாம்சமாகிறது" மற்றும் "மாம்சத்தில் வார்த்தையின் தோற்றம்" என்பதன் உண்மையான அர்த்தமாகும். தேவனால் மட்டுமே ஆவியின் சித்தத்தைப் பேச முடியும். மாம்சத்தில் உள்ள தேவன் மட்டுமே ஆவியின் சார்பாகப் பேச முடியும். தேவனுடைய வார்த்தைகள் மனுவுருவான தேவனில் தெளிவாக்கப்படுகின்றன, மற்ற அனைவருமே அவற்றால் வழிநடத்தப்படுகிறார்கள். யாருக்கும் விதிவிலக்கு இல்லை, அவை அனைத்தும் இந்த எல்லைக்குள் உள்ளன. இந்த பேச்சுக்களிலிருந்து மட்டுமே ஜனங்கள் விழிப்புணர்வு பெற முடியும். இவ்வாறு பெறாதவர்கள் பரலோகத்திலிருந்து பேச்சுக்களைப் பெற முடியும் என்று நினைத்தால் அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள் என்பதாகும். தேவனுடைய மனுவுருவின் மாம்சத்தில் நிரூபிக்கப்பட்ட அதிகாரம் இது தான், அனைவரையும் முழு நம்பிக்கையுடன் விசுவாசிக்க வைக்கிறது. மிகவும் மதிப்பிற்குரிய வல்லுநர்கள் மற்றும் மதப்போதகர்கள் கூட இந்த வார்த்தைகளைப் பேச முடியாது. அவர்கள் அனைவரும் அவற்றின் கீழ் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் மற்றும் அவர்கள் யாரும் மற்றொன்றைத் தொடங்க முடியாது. தேவன் பிரபஞ்சத்தை ஜெயிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துவார். அவருடைய மனுவுருவின் மாம்சத்தில் அல்ல, ஆனால், மாம்சமான தேவனுடைய வாயிலிருந்து வரும் பேச்சுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் முழு பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜனங்களையும் ஜெயிக்க அவர் இதைச்செய்வார். இதுவே மாம்சமான வார்த்தையாகும், இதுவே மாம்சம் வார்த்தையாகத் தோன்றுவதாகும். ஒருவேளை, மனிதர்களுக்கு, தேவன் அதிகக் கிரியை செய்யவில்லை என்பது போலத் தோன்றுகிறது. ஆனால் தேவன் அவருடைய வார்த்தைகளை உச்சரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் முழுமையாக அவரை நம்புவார்கள், அவருக்குப் பயபக்திகொள்வார்கள். உண்மைகள் இல்லாமல், ஜனங்கள் கூச்சலிடுகிறார்கள், கத்துகிறார்கள்; தேவனுடைய வார்த்தைகளால், அவர்கள் அமைதியாகிறார்கள். தேவன் நிச்சயமாக இந்த உண்மையை நிறைவேற்றுவார், ஏனென்றால் இது, நீண்ட காலமாக தேவனால் நிறுவப்பட்ட திட்டம் ஆகும்: பூமியில் வார்த்தையுடைய வருகையின் உண்மையை நிறைவேற்றுவதாகும். உண்மையில், நான் விளக்க வேண்டிய அவசியமில்லை, ஆயிர வருட அரசாட்சியின் வருகையானது பூமியில் தேவனுடைய வார்த்தைகளின் வருகையாகும். பரலோகத்திலிருந்து புதிய எருசலேமின் இறக்கமானது, மனிதர்களிடையே ஜீவிக்கவும், மனிதனுடைய ஒவ்வொரு செயலுடனும், அவனது உள்ளார்ந்த எண்ணங்களுடன் துணை செய்யவும் வந்த தேவனுடைய வார்த்தைகளின் வருகையாகும். இது தேவன் நிறைவேற்றும் ஓர் உண்மையும் ஆகும். இதுவே ஆயிர வருட அரசாட்சியின் அழகு ஆகும். இது தேவன் வகுத்த திட்டம் ஆகும்: அவருடைய வார்த்தைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு பூமியில் தோன்றும். அவை அவருடைய செயல்கள் அனைத்தையும் வெளிப்படுத்தும், பூமியில் அவர் செய்த எல்லா கிரியைகளையும் நிறைவு செய்யும், அதன் பிறகு மனிதகுலத்தின் இந்த நிலை முடிவுக்கு வரும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 158

தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் தொடர்பாக மனுஷனிடம் வைக்கப்படும் கோரிக்கைகளும் உள்ளன. பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 102

தேவன் தமது முதல் மனுஷரூபமெடுத்தலில் மாம்சமாகியதன் கிரியையை முடிக்கவில்லை; மாம்சத்தில் தேவன் செய்ய வேண்டிய அவசியமான கிரியையின் முதல்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 323

ஜனங்கள் நீண்ட காலமாக தேவனை விசுவாசிக்கிறார்கள், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் "தேவன்" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 594

ஆதியில் தேவன் இளைப்பாறுதலில் இருந்தார். அக்காலத்தில் பூமியில் மனிதர்களோ அல்லது வேறு எதுவுமோ இருக்கவில்லை, மேலும், தேவன் இன்னும் எந்தக்...