தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 102

ஏப்ரல் 23, 2021

தேவன் தமது முதல் மனுஷரூபமெடுத்தலில் மாம்சமாகியதன் கிரியையை முடிக்கவில்லை; மாம்சத்தில் தேவன் செய்ய வேண்டிய அவசியமான கிரியையின் முதல் கட்டத்தை மட்டுமே அவர் செய்து முடித்தார். ஆகவே, மாம்சமாகியதன் கிரியையை முடிப்பதற்காக, தேவன் மீண்டும் மாம்சத்திற்கு திரும்பியுள்ளார், மாம்சத்தின் இயல்பான தன்மையிலும் யதார்த்தத்திலும் வசித்து வருகிறார், அதாவது தேவனுடைய வார்த்தையை முற்றிலும் இயல்பான மற்றும் சாதாரண மாம்சத்தில் வெளிப்படுத்துகிறார், இதன் மூலம் அவர் மாம்சத்தில் செய்து முடிக்காமல் விட்டுப்போன கிரியையை முடிக்கிறார். முக்கியமாக, இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சமானது முதல் மாம்சத்தைப் போன்றதுதான், ஆனால் அது இன்னும் உண்மையானது மற்றும் முதலில் இருந்ததை விட சாதாரணமானது. இதன் விளைவாக, இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சமானது கடந்து செல்லும் துன்பமானது முதல் மாம்சம் கடந்து சென்ற துன்பத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது, ஆனால் இந்த துன்பம் மாம்சத்தில் அவர் செய்த ஊழியத்தின் விளைவாகும், இது சீர்கெட்ட மனிதனின் துன்பத்தைப் போலல்லாததாகும். இது அவருடைய மாம்சத்தின் இயல்பு மற்றும் யதார்த்தத்திலிருந்து உருவாகிறது. அவர் தம்முடைய ஊழியத்தை முற்றிலும் இயல்பான மற்றும் உண்மையான மாம்சத்தில் செய்வதால், மாம்சமானது பெரும் கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும். இந்த மாம்சம் எவ்வளவு அதிகமாக சாதாரணமானதாகவும் மற்றும் உண்மையானதாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அவருடைய ஊழியத்தின் செயல்பாட்டில் அவர் அதிகம் வேதனையை அடைவார். தேவனுடைய கிரியையானது மிகவும் பொதுவான மாம்சத்தில் வெளிப்படுத்தப்படுகிறது, இது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. ஏனென்றால், அவருடைய மாம்சம் இயல்பானது, மேலும் மனிதனை இரட்சிக்கும் கிரியையைச் செய்ய வேண்டும், அவர் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட மாம்சத்தை விட மிகப் பெரிய அளவில் பாடுபடுகிறார்—மேலும் இந்த பாடுகள் யாவும் அவருடைய மாம்சத்தின் யதார்த்தம் மற்றும் இயல்பான தன்மையிலிருந்து உருவாகின்றன. இரண்டு மனுஷரூபமான மாம்சங்களும் தங்கள் ஊழியங்களைச் செய்யும்போது ஏற்பட்ட பாடுகளிலிருந்து, மாம்சமாகியதன் சாராம்சத்தை ஒருவர் கண்டுகொள்ளலாம். மாம்சம் எந்த அளவிற்கு சாதாரணமானதாக இருக்கிறதோ, கிரியையைச் செய்யும்போது அவர் அந்த அளவிற்கு அதிகமாகக் கஷ்டங்களைச் சகிக்க வேண்டும்; கிரியையை மேற்கொள்ளும் மாம்சமானது எந்த அளவிற்கு உண்மையாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஜனங்களின் கருத்துக்கள் மற்றும் அதிக ஆபத்துகள் அவருக்கு ஏற்படக்கூடும். இன்னும், மாம்சமானது எந்த அளவிற்கு உண்மையானதோ, மேலும் சாதாரண மனிதனின் தேவைகளையும் முழுமையான உணர்வையும் மாம்சம் எந்த அளவிற்கு கொண்டிருக்கிறதோ, மாம்சத்தில் தேவனுடைய கிரியையை அவர் மேற்கொள்வதில் அவ்வளவு அளவிற்கு அதிக திறன் உள்ளவராக இருக்கிறார். இயேசுவின் மாம்சந்தான் சிலுவையில் அறையப்பட்டது, அவருடைய மாம்சத்தை அவர் பாவநிவாரணப்பலியாக ஒப்புக்கொடுத்தார்; சாதாரண மனிதத்தன்மையுடன் கூடிய ஒரு மாம்சத்தின் மூலம்தான் அவர் சாத்தானைத் தோற்கடித்து மனிதனை முழுமையாக சிலுவையிலிருந்து இரட்சித்தார். தேவன் தமது இரண்டாவது மனுஷரூபமெடுத்தலில் ஜெயங்கொள்ளுதலின் கிரியையைச் செய்து சாத்தானைத் தோற்கடிப்பது ஒரு முழுமையான மாம்சமாக இருக்கிறது. முற்றிலும் இயல்பான மற்றும் உண்மையான ஒரு மாம்சம் மட்டுமே ஜெயங்கொள்ளுதலின் கிரியையை முழுவதுமாக செய்ய முடியும் மற்றும் வல்லமையான சாட்சியத்தை அளிக்க முடியும். அதாவது, மனிதனை இரட்சிப்பது மாம்சத்தில் தேவனுடைய யதார்த்தம் மற்றும் இயல்பான தன்மை மூலம் திறம்படச் செய்யப்படுகிறது, மாறாக இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் மற்றும் வெளிப்பாடுகள் மூலம் அல்ல. இந்த மாம்சமாகிய தேவனுடைய ஊழியம் என்னவென்றால் பேசுவதும், அதன் மூலம் மனிதனை ஆட்கொண்டு பரிபூரணமாக்குவதும் ஆகும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாம்சத்தில் உணரப்பட்ட ஆவியானவரின் கிரியை, அதாவது மாம்சத்தின் கடமை என்னவென்றால் பேசுவதும் அதன் மூலம் ஜெயங்கொள்வதும், வெளிப்படுத்துவதும், பரிபூரணமாக்குவதும், மனிதனை முற்றிலுமாக புறம்பாக்குவதும் ஆகும். எனவே, ஜெயங்கொள்ளுதலின் கிரியையில் தான் மாம்சத்தில் தேவனுடைய கிரியை முழுமையாக நிறைவேற்றப்படும். மீட்பின் ஆரம்ப கிரியையானது மாம்சமாகியதன் கிரியையின் ஆரம்பம் மட்டுமே; ஜெயங்கொள்ளுதலின் கிரியையைச் செய்யும் மாம்சமானது மாம்சமாகியதன் முழு கிரியையையும் நிறைவு செய்யும். பாலினத்தில், ஒருவர் ஆண் மற்றவர் பெண், எனவே தேவன் மாம்சமாகியதன் முக்கியத்துவத்தை பூர்த்திசெய்து, தேவனைப் பற்றிய மனிதனின் கருத்துக்களை அகற்றுவார்: தேவன் ஆணும் பெண்ணுமாக மாறமுடியும், முக்கியமாக, மாம்சத்தில் மனுஷரூபமாக வந்த தேவன் பாலினமற்றவர். அவர் ஆண் மற்றும் பெண் இருவரையும் உருவாக்கினார், அவரைப் பொறுத்தவரை பாலினத்தில் பிரிவு இல்லை. கிரியையின் இந்தக் கட்டத்தில், தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்வதில்லை, இதனால் கிரியை அதன் முடிவுகளை வார்த்தைகளின் மூலம் அடையும். இதற்குக் காரணம், இந்த காலத்தில் மாம்சமாகிய தேவனுடைய கிரியை என்னவென்றால் பிணியாளிகளைக் குணப்படுத்துவதும் பிசாசுகளைத் துரத்துவதும் அல்ல, ஆனால் பேசுவதன் மூலம் மனிதனை ஆட்கொள்வதே ஆகும், அதாவது தேவனுடைய இந்த மனுஷரூபமெடுத்த மாம்சத்தால் சொந்த பூர்வீக திறன் என்று கூறுவது வார்த்தைகளை பேசுவதற்கும் மனிதனை ஆட்கொள்வதற்குமே ஆகும், பிணியாளிகளைக் குணப்படுத்துவதற்கும் பிசாசுகளைத் துரத்துவதற்கும் அல்ல. சாதாரண மனிதத்தன்மையில் அவர் செய்யும் கிரியை அற்புதங்களைச் செய்வதல்ல, பிணியாளிகளைக் குணப்படுத்துவதற்கும், பிசாசுகளைத் துரத்துவதற்கும் அல்ல, ஆனால் பேசுவதற்காகும், எனவே இரண்டாவது மனுஷரூபமெடுத்த மாம்சமானது முதல் மாம்சத்தை விட மிகவும் சாதாரணமானதாக ஜனங்களுக்குத் தோன்றுகிறது. தேவன் மாம்சமாகியது பொய் அல்ல என்பதை ஜனங்கள் காண்கிறார்கள்; ஆனால் இந்த மாம்சமாகிய தேவன் மாம்சமாகிய இயேசுவிலிருந்து வேறுபட்டவர், அவர்கள் இருவரும் மாம்சமாகிய தேவனாக இருந்தாலும், அவர்கள் இருவரும் முற்றிலும் ஒன்றல்ல. இயேசு இயல்பான மனிதத்தன்மையையும் சாதாரண மனிதத்தன்மையையும் கொண்டிருந்தார், ஆனால் அவரைப் பல அடையாளங்களும் அதிசயங்களும் தொடர்ந்திருந்தன. இந்த மாம்சமாகிய தேவனில், மனித கண்கள் எந்த அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பதில்லை, பிணியாளிகளை குணப்படுத்துவதோ, பிசாசுகளைத் துரத்துவதோ, கடல்மேல் நடப்பதோ, நாற்பது நாட்கள் உபவாசம் இருப்பதோ இல்லை…. இயேசு செய்த அதே கிரியையை அவர் செய்வதில்லை, ஏனெனில், முக்கியமாக, அவருடைய மாம்சம் இயேசுவிலிருந்து வேறுபட்டது என்பதற்காக அல்ல, ஆனால் பிணியாளிகளைக் குணப்படுத்தி பிசாசுகளைத் துரத்துவது அவருடைய ஊழியமல்ல. அவர் தமது சொந்தக் கிரியையை பாழ்படுத்துவதில்லை, மேலும் தமது சொந்த கிரியைக்கு அவரே இடையூறு செய்வதில்லை. அவர் தமது உண்மையான வார்த்தைகளின் மூலம் மனிதனை ஆட்கொள்வதால், அவர் அவனை அற்புதங்களால் அடக்க வேண்டிய அவசியமில்லை, எனவே இந்தக் கட்டம் மாம்சமாகியதன் கிரியையை முடிப்பதே ஆகும். இன்று நீ காணும் மாம்சமாகிய தேவன் முற்றிலும் ஒரு மாம்சமாவார், அவரில் இயற்கைக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. அவர் மற்றவர்களைப் போலவே நோய்வாய்ப்படுகிறார், மற்றவர்களைப் போலவே உணவும் உடைகளும் தேவைப்படுகின்றன; அவர் முற்றிலும் ஒரு மாம்சமாவார். இந்த காலத்தில், மாம்சமாகிய தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தியிருந்தால், அவர் பிணியாளிகளைக் குணப்படுத்தியிருந்தால், பிசாசுகளைத் துரத்தியிருந்தால், அல்லது ஒரே வார்த்தையால் கொல்ல முடிந்திருந்தால், ஜெயங்கொள்ளுதலின் கிரியை எவ்வாறு மேற்கொண்டிருக்க முடியும்? புறஜாதி தேசங்களிடையே இந்தக் கிரியையானது எவ்வாறு பரவக்கூடும்? பிணியாளிகளைக் குணப்படுத்துவதும், பிசாசுகளைத் துரத்துவதும் கிருபையினுடைய காலத்தின் கிரியை, இது மீட்பின் கிரியையின் முதல் படியாகும், இப்போது தேவன் மனிதனை சிலுவையிலிருந்து இரட்சித்திருந்தால், அவர் இனி அந்த கிரியையைச் செய்வதில்லை. கடைசி நாட்களில், இயேசுவைப் போலவே ஒரு "தேவன்" தோன்றியிருந்தால், அதாவது பிணியாளிகளைக் குணப்படுத்தி, பிசாசுகளைத் துரத்தி, மனிதனுக்காக சிலுவையில் அறையப்பட்டிருந்தார் என்றால், அந்த "தேவன்" வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள தேவனுடைய விளக்கத்திற்கு ஒத்தவராகவும், மனிதன் ஏற்றுக்கொள்வதற்கு எளிதானவராகவும் இருந்தாலும், அதன் சாராம்சத்தில், தேவ ஆவியானவர் அணிந்துகொண்ட மாம்சமாக இருக்காது, மாறாக ஒரு அசுத்த ஆவி அணிந்துகொண்ட மாம்சமாகவே இருக்கும். ஏனென்றால், அவர் ஏற்கனவே முடித்ததை மீண்டும் செய்யக்கூடாது என்பது தேவனுடைய கொள்கையாக இருக்கிறது. எனவே, தேவனுடைய இரண்டாவது மனுஷரூபமெடுத்தலின் கிரியையானது முதல் கிரியையிலிருந்து வேறுபட்டது. கடைசி நாட்களில், ஒரு இயல்பான, சாதாரண மாம்சத்தில் ஜெயங்கொள்ளும் கிரியையை தேவன் உணர்கிறார்; அவர் பிணியாளிகளை குணப்படுத்தமாட்டார், மனிதனுக்காகச் சிலுவையில் அறையப்படமாட்டார், ஆனால் மாம்சத்தில் வெறுமனே வார்த்தைகளைப் பேசுகிறார், மற்றும் மாம்சத்தில் மனிதனை வெற்றி கொள்கிறார். அத்தகைய மாம்சம் மட்டுமே மாம்சமாகிய தேவனுடைய மாம்சமாகும்; அத்தகைய மாம்சத்தால் மட்டுமே மாம்சத்தில் தேவனுடைய கிரியையை முடிக்க முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவன் வசிக்கும் மாம்சத்தின் சாராம்சம்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க