தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 158

ஏப்ரல் 30, 2023

தேவனுடைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதன் தொடர்பாக மனுஷனிடம் வைக்கப்படும் கோரிக்கைகளும் உள்ளன. பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இருப்பவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் மற்றும் சிட்சை ஆகியவற்றைக் கொண்டுள்ளனர், மற்றும் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இல்லாதவர்கள் சாத்தானின் கட்டுப்பாட்டின் கீழ், பரிசுத்த ஆவியானவரின் எந்தக் கிரியையும் இல்லாமல் இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இருப்பவர்கள் தேவனுடைய புதிய கிரியையை ஏற்றுக்கொள்கிறார்கள், மற்றும் இவர்கள் தேவனுடைய புதிய கிரியையில் ஒத்துழைக்கிறார்கள். இந்தப் பிரவாகத்திற்குள் இருப்பவர்கள் ஒத்துழைக்க இயலாதவர்களாக, மற்றும் இந்த நேரத்தில் தேவனால் கோரப்படும் சத்தியத்தைக் கடைப்பிடிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள் என்றால், பின்பு அவர்கள் சிட்சிக்கப் படுவார்கள், மற்றும் மோசமான நிலையில் பரிசுத்த ஆவியானவரால் கைவிடப்படுவார்கள். பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்பவர்கள், பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் வாழ்வார்கள், மற்றும் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் பெறுவார்கள். சத்தியத்தைக் கைக்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஒளியூட்டப்படுகிறார்கள், மற்றும் சத்தியத்தைக் கைக்கொள்ள விரும்பாதவர்கள் பரிசுத்த ஆவியினால் சிட்சிக்கப் படுகிறார்கள், மற்றும் அவர்கள் தண்டிக்கப்படுவதும் கூட நடைபெறலாம். அவர்கள் எந்த வகையான நபராக இருந்தாலும், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இருக்கிறார்கள் என்றால், தேவனுடைய நாமத்திற்காக அவருடைய புதிய கிரியையை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரையும் தேவன் பொறுப்பு எடுத்துக்கொள்வார். அவருடைய நாமத்தை மகிமைப் படுத்துகிறவர்கள், மற்றும் அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்க விருப்பமாய் இருப்பவர்கள் யாவரும் அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்; அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள் மற்றும் அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடிக்காதவர்கள் அவருடைய தண்டனையைப் பெறுவார்கள். புதிய கிரியையை ஏற்றுக்கொள்பவர்களே பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்தில் இருக்கிறார்கள், அவர்கள் புதிய கிரியையை ஏற்றுக்கொண்டதால், அவர்கள் தேவனுடன் சரியான முறையில் ஒத்துழைக்க வேண்டும், தங்கள் கடமையைச் செய்யாத கலகக்காரர்களாகச் செயல்படக்கூடாது. இது மனிதனிடத்தில் தேவன் வைக்கும் ஒரே கோரிக்கையாக இருக்கின்றது. புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்கு அவ்வாறு இல்லை: அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்கு வெளியே உள்ளனர், பரிசுத்த ஆவியின் சிட்சை மற்றும் கடிந்துகொள்ளுதல் ஆகியவை அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதில்லை. நாள் முழுவதும், இந்த மக்கள் மாம்சத்தில் வாழ்கிறார்கள், அவர்கள் தங்கள் மனதிற்குள் வாழ்கிறார்கள், அவர்கள் செய்வதெல்லாம் தங்கள் சுய மூளையின் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சியால் உருவாக்கப்பட்ட கோட்பாட்டின் படியானதாக உள்ளது. இது பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையினால் கேட்கப்பட்டதாக இருப்பதில்லை, இது தேவனுடனான ஒத்துழைப்பாகவும் இருப்பதில்லை. தேவனுடைய புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தேவனுடைய பிரசன்னத்தை இழந்தவர்களாக இருக்கிறார்கள், மேலும், தேவனுடைய ஆசீர்வாதங்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை இல்லாதவர்கள் ஆகிறார்கள். அவர்களுடைய பெரும்பாலான வார்த்தைகளும் கிரியைகளும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய கடந்தகால கோரிக்கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன; அவை சத்தியம் என்பதாக இருப்பதில்லை, அவை கோட்பாடாகவே உள்ளன. இந்த ஜனங்கள் ஒன்றாகக் கூடுவது மதத்தைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதை நிரூபிக்க இத்தகைய கோட்பாடும் ஒழுங்குமுறையும் போதுமானவைகளாக இருக்கின்றன; இவை தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருப்பதில்லை, அல்லது தேவனுடைய கிரியையின் இலக்குகளாக இருப்பதில்லை. இவர்கள் அனைவரின் மத்தியிலான கூடுகையானது மதத்தின் மாபெரும் கூடுகை என்று மட்டுமே அழைக்கப்பட முடியும், மற்றும் அது சபை என்று அழைக்கப்பட முடியாது. இது மாற்ற முடியாத உண்மையாக உள்ளது. இவர்களிடம் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியை இல்லை; இவர்கள் செய்வது மதத்தின் தொடர்பை நினைவூட்டுவதாகக் காணப்படுகிறது, இவர்கள் வாழ்வது எதுவோ, அது மதத்தினால் நிரம்பியதாகத் தெரிகிறது; இவர்கள் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் மற்றும் கிரியையைக் கொண்டிருக்கவில்லை, பரிசுத்த ஆவியின் சிட்சை அல்லது ஒளியூட்டப்படுதலைப் பெறுவதற்கு இவர்கள் தகுதியுள்ளவர்களாக இருப்பதில்லை. இந்த மக்கள் அனைவரும் உயிரற்ற சடலங்களாக உள்ளனர், மற்றும் ஆவிக்குரிய தன்மையற்ற புழுக்களாக இருக்கிறார்கள். மனுஷனின் கலகம் மற்றும் எதிர்ப்பைப் பற்றி இவர்களுக்கு எந்த அறிவும் இல்லை, மனுஷனின் எல்லாப் பொல்லாங்கு செய்தல் பற்றி அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை, தேவனுடைய கிரியை பற்றிய யாவற்றையும் மற்றும் தேவனுடைய தற்போதய சித்தத்தையும் இவர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்கள் அனைவரும் அறியாமையுள்ள, கீழ்மட்ட ஜனங்களாய் இருக்கிறார்கள், மற்றும் இவர்கள் விசுவாசிகள் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்ற நுரை போன்று பயனற்றவர்களாய் இருக்கிறார்கள்! இவர்கள் செய்யும் எதுவும் தேவனுடைய நிர்வகித்தலின் எவ்விதமான தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை, இது தேவனுடைய திட்டங்களையும் பாதிக்க முடியாது. இவர்களின் சொற்களும் செயல்களும் மிகவும் அருவருப்பானவையாக, மிகவும் பரிதாபகரமானவையாக, மற்றும் குறிப்பிடத் தகுதியற்றவையாக உள்ளன. பரிசுத்த ஆவியானவரின் பிரவாகத்திற்குள் இல்லாதவர்களால் செய்யப்படும் எந்த ஒரு விஷயத்திற்கும் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதன் காரணமாக, இவர்கள் என்ன செய்தாலும், இவர்கள் பரிசுத்த ஆவியின் சிட்சையின்றி இருக்கிறார்கள், மேலும், பரிசுத்த ஆவியானவரின் ஒளியூட்டுதல் இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சத்தியத்தின் மீது அன்பு இல்லாதவர்கள், பரிசுத்த ஆவியினால் வெறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டவர்கள். இவர்கள் மாம்சத்தின்படி நடந்துகொண்டு, தேவனுடைய அடையாளப் பலகையின் கீழ் தங்களைப் பிரியப்படுத்துபவை எவைகளோ அவைகளையே செய்கிறதால் இவர்கள் பொல்லாங்கு செய்பவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தேவன் கிரியை செய்கையில், இவர்கள் வேண்டுமென்றே அவரிடம் பகைமை உணர்வுடன் இருக்கிறார்கள், மற்றும் அவருக்கு நேர் எதிர்த்திசையில் ஓடுகிறார்கள். தேவனுடன் ஒத்துழைக்க மனுஷனின் தோல்வியானது தன்னிலேயே மிகவும் கலகத்தனமாக இருக்கிறது, எனவே வேண்டுமென்றே தேவனுக்கு எதிராக ஓடுகிற மக்கள் குறிப்பாக அவர்களுக்கான நியாயமான தண்டனையைப் பெறாதிருப்பார்களா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க