தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல் | பகுதி 298

இது ஆதியாகமத்திலுள்ள தேவனுடைய வார்த்தைகளை பெரும்பாலானவர்களுக்கு நினைவூட்டலாம்: "நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக" (ஆதியாகமம் 1:26). "நமது சாயலாக மனுஷனை உண்டாக்குவோமாக என்று தேவன் சொல்வதால்," "நமது" என்பது இரண்டு அல்லது அதற்கு அதிகமானவர்களைக் குறிப்பிடுகிறது. அவர் "நமது" என்று சொன்னதால், ஒரே ஒரு தேவன் மட்டும் இல்லை. இதனால், மனிதன் தனித்தனி நபர்கள் என்ற அர்த்தத்தில் சிந்திக்க ஆரம்பித்தான். இந்த வார்த்தைகளிலிருந்து தான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற கருத்து எழுந்தது. பிதாவின் சாயல் என்ன? குமாரனின் சாயல் என்ன? பரிசுத்த ஆவியின் சாயல் என்ன? இன்றைய மனுக்குலம் மூன்றில் இருந்து ஒன்றாக இணைந்த ஒருவரின் சாயலில் உருவாக்கப்பட்டிருக்குமோ? அப்படியானால் மனிதனின் சாயல் பிதா, குமாரன் அல்லது பரிசுத்த ஆவியின் சாயலைப் போன்று இருக்கிறதா? தேவனுடைய ஆள்தத்துவங்களில் மனிதனின் சாயலில் இருப்பவர் யார்? மனிதனின் இந்தக் கருத்து உண்மையில் தவறானது மற்றும் முட்டாள்தனமானது! இதனால் ஒரு தேவனை பல தேவர்களாக மட்டுமே பிரிக்க முடியும். உலகத்தைச் சிருஷ்டித்ததைத் தொடர்ந்து மனுக்குலத்தைச் சிருஷ்டித்த பிறகே மோசே ஆதியாகமத்தை எழுதினான். ஆதியில் உலகம் தோன்றியபோது, மோசே இல்லை. மோசே வேதாகமத்தை எழுதியது அதற்கு வெகு காலத்திற்குப் பிறகுதான். ஆகையால், பரலோகத்திலுள்ள தேவன் பேசியது அவனுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? தேவன் உலகை எவ்வாறு சிருஷ்டித்தார் என்பதற்கான ஒரு குறிப்பும் அவனிடம் இல்லை. வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஒரே மெய்த்தேவன் யேகோவா மட்டுமே இஸ்ரவேலில் தமது கிரியையைச் செய்தார். காலம் மாறும்போது அவர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார், ஆனால் ஒவ்வொரு பெயரும் வெவ்வேறு நபரைக் குறிக்கிறது என்பதை இது நிரூபிக்க முடியாது. இது இப்படி இருப்பதனால், தேவனில் எண்ணற்ற நபர்கள் இருக்க மாட்டார்கள் அல்லவா? பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருப்பது என்னவென்றால், நியாயப்பிரமாண காலத்தில் ஆரம்பிப்பதற்காக தேவனின் ஒரு கட்டக் கிரியையான யேகோவாவின் கிரியையாகும். இது தேவனுடைய கிரியையாக இருந்தது. அவர் பேசியது போலவே அது இருந்தது. அவர் கட்டளையிட்டபடியே அது நின்றது. யேகோவா எந்த நேரத்திலும் தாம் கிரியை செய்ய வந்த பிதா என்று சொல்லவும் இல்லை, மனுக்குலத்தை மீட்க வந்த குமாரன் என்றும் அவர் ஒருபோதும் தீர்க்கதரிசனம் உரைத்ததில்லை. இயேசுவின் காலத்திற்கு வரும்போது, சகல மனுக்குலத்தையும் மீட்க தேவன் மாம்சமாகினார் என்று மட்டுமே கூறப்பட்டது, ஆனால் வந்தவர் குமாரன் என்று கூறப்படவில்லை. காலங்கள் ஒன்றுபோல இருப்பதில்லை என்பதாலும், தேவன் செய்யும் கிரியையே வேறுபடுவதனால், அவர் தமது கிரியையை வெவ்வேறு பகுதிகளுக்குள் செய்ய வேண்டும். இதனால், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளமும் வேறுபடுகிறது. யேகோவா இயேசுவின் பிதா என்று மனிதன் நம்புகிறான், ஆனால் இது உண்மையில் இயேசுவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இயேசு சொன்னார்: "நாங்கள் பிதா, குமாரன் என்று ஒருபோதும் வேறுபடுத்தப்படவில்லை; நானும் பரலோகத்திலுள்ள பிதாவும் ஒருவரே. பிதா என்னிலும் நான் பிதாவிலும் இருக்கிறேன்; மனிதர் குமாரனைப் பார்க்கும்போது, அவர்கள் பரலோக பிதாவையே பார்க்கிறார்கள்." எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்க்கும்போது, பிதாவாக இருந்தாலும், குமாரனாக இருந்தாலும், அவர்கள் ஒரே ஆவியானவராக இருக்கின்றார்கள், தனி நபர்களாகப் பிரிக்கப்படுவதில்லை. மனிதன் இதை விளக்க முயற்சிக்கும்போது, தனித்தனி ஆள்தத்துவங்கள் என்ற கருத்து மற்றும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோருக்கு இடையிலான உறவு ஆகியவற்றினால் காரியங்கள் சிக்கலாகியுள்ளன. மனிதன் தனித்தனி ஆள்தத்துவங்களைப் பற்றி பேசும்போது, இது தேவனைப்பொருளாக்காதா? மனிதன் ஆள்தத்துவங்களை முதலாமவர், இரண்டாவது நபர் மற்றும் மூன்றாவது நபர் என்றும் வரிசைப்படுத்துகிறான். இவை அனைத்தும் மனிதனின் கற்பனைகளே தவிர, இவை அர்த்தமுள்ளவையும் அல்ல, முற்றிலும் நம்பத்தகுந்தவையும் அல்ல! நீ அவரிடம், "எத்தனை தேவர்கள் இருக்கிறார்கள்?" என்று கேட்டால், தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் திரித்துவமான ஒரே மெய்த்தேவனாக இருக்கிறார் என்று அவர் கூறுவார். நீ மேலும் அவரிடம், "பிதா யார்?" என்று கேட்டால், "பிதா பரலோகத்திலுள்ள தேவனுடைய ஆவியானவர் என்றும், அவர் அனைவருக்கும் பொறுப்பானவர், பரலோகத்தின் எஜமானர்" என்று அவர் கூறுவார். "அப்படியானால் யேகோவா ஆவியானவரா?" அவர், "ஆம்!" என்று கூறுவார். நீ அவரிடம், "குமாரன் யார்?" என்று கேட்டால், நிச்சயமாகவே, இயேசு தான் குமாரன் என்று அவர் கூறுவார். "அப்படியானால் இயேசுவின் கதை என்ன? அவர் எங்கிருந்து வந்தார்?" "இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டு மரியாளிடம் பிறந்தார்" என்று கூறுவார் அப்படியானால் அவருடைய சாராம்சம் ஆவியானவர் இல்லையா? அவருடைய கிரியை பரிசுத்த ஆவியின் பிரதிநிதித்துவம் இல்லையா? யேகோவாதான் ஆவியானவர், இயேசுவின் சாராம்சமும் அவர்தான். இப்போதும் கடைசி நாட்களில், ஆவியானவர்தான் இன்னும் இருக்கிறார் என்று சொல்ல வேண்டிய அவசியம் அதிகமில்லை என்றிருக்கும்போது, அவர்களால் எப்படி வெவ்வேறு நபர்களாக இருக்க முடியும்? தேவனுடைய ஆவியானவரே ஆவியானவரின் கிரியையை வெவ்வேறு கண்ணோட்டங்களில் இருந்து செய்யவில்லையா? இவ்வாறு, ஆள்தத்துவங்களுக்கு இடையில் வேறுபாடு கிடையாது. இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார், மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி, அவருடைய கிரியையானது துல்லியமாக பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருக்கிறது. யேகோவா செய்த முதல் கட்டக் கிரியையில், அவர் மாம்சமாகவும் மாறவில்லை, மனிதனிடத்தில் தோன்றவும் இல்லை. ஆகையால் மனிதன் அவர் தோன்றியதை ஒருபோதும் பார்த்ததில்லை. அவர் எவ்வளவு பெரியவராகவும், எவ்வளவு உயரமானவராகவும் இருந்தாலும், அவரே இன்னும் ஆவியானவராக இருந்தார், தேவன்தாமே மனிதனை ஆதியிலே சிருஷ்டித்தார். அதாவது, அவர்தான் தேவனுடைய ஆவியானவராக இருந்தார். அவர் மேகங்களுடனே இருந்து மனிதனிடம் பேசினார், அவர் ஆவியானவராக மாத்திரமே இருந்தார், மேலும் அவருடைய தோற்றத்தை யாரும் கண்டதில்லை. கிருபையின் காலத்தில், தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் வந்து யூதேயாவில் அவதரித்தபோது, ஒரு யூதனாக மனிதன் மாம்சமான தேவனின் சாயலை முதன்முதலாகப் பார்த்தான். யேகோவாவைப் பற்றிய எதுவும் இருக்கவில்லை. ஆயினும், அவர் பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார், அதாவது யேகோவாவின் ஆவியானவரால் கருத்தரிக்கப்பட்டார். இயேசு இன்னும் தேவனுடைய ஆவியானவரின் சாயலாகவே பிறந்தார். பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல் இயேசுவின் மேல் இறங்கியதைத் தான் மனிதன் முதலில் பார்த்தான். அது இயேசுவுக்கான பிரத்யேகமான ஆவியானவர் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவராக இருந்தார். அப்படியானால் இயேசுவின் ஆவியானவரைப் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பிரிக்க முடியுமா? குமாரனாகிய இயேசு இயேசுவாகவும், பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த ஆவியானவராகவும் இருந்தால், அவர்களால் எப்படி ஒருவராக இருக்க முடியும்? அவ்வாறு இருந்தால் கிரியையை செய்ய முடியாமல் போயிருக்கும். இயேசுவுக்குள் இருக்கும் ஆவியானவர், பரலோகத்திலுள்ள ஆவியானவர், யேகோவாவின் ஆவியானவர் எல்லோருமே ஒருவர்தான். அவர் பரிசுத்த ஆவியானவர் என்றும், தேவனுடைய ஆவியானவர் என்றும், ஏழு மடங்கு தீவிரமான ஆவியானவர் என்றும் மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஆவியானவர் என்றும் அழைக்கப்படுகிறார். தேவனுடைய ஆவியானவரால் அதிகமான கிரியைகளைச் செய்ய முடியும். அவரால் உலகத்தைச் சிருஷ்டிக்கவும், பூமியை ஜலப்பிரளயத்தால் அழிக்கவும் முடியும். அவரால் முழு மனுக்குலத்தையும் மீட்கவும் முடியும், முழு மனுக்குலத்தையும் ஜெயங்கொண்டு அழிக்கவும் முடியும். இந்தக் கிரியைகள் அனைத்தும் தேவனாலேயே செய்யப்படுகின்றன, அவருக்குப் பதிலாக தேவனுடைய ஆள்தத்துவங்களான யாராலும் செய்ய முடியாது. அவருடைய ஆவியானவரை யேகோவா, இயேசு மற்றும் சர்வவல்லவர் என்ற பெயர்களிலும் அழைக்கலாம். கர்த்தரும், கிறிஸ்துவும் அவரே. அவரால் மனுஷகுமாரனாகவும் முடியும். அவர் வானத்திலும் பூமியிலும் வாசம்பண்ணுகிறார். அவர் பிரபஞ்சங்களுக்கு மேலேயும், திரளான ஜனங்களுக்கு நடுவேயும் வாசம்பண்ணுகிறார். வானத்திற்கும் பூமிக்கும் அவர் ஒருவரே எஜமானர்! சிருஷ்டிப்பின் காலம் முதல் இப்போது வரை, இந்த கிரியையானது தேவனுடைய ஆவியானவரால் செய்யப்பட்டு வருகிறது. வானத்திலுள்ள கிரியையாக இருக்கட்டும் அல்லது மாம்சத்திலுள்ள கிரியையாக இருக்கட்டும், இவை அனைத்தும் அவருடைய சொந்த ஆவியானவராலேயே செய்யப்படுகின்றன. வானத்திலிருந்தாலும் அல்லது பூமியிலிருந்தாலும், சகல ஜீவராசிகளும் அவருடைய சர்வவல்லமையுள்ள உள்ளங்கையிலே உள்ளன. இவை எல்லாமே தேவனுடைய கிரியையாகும், அவருக்குப் பதிலாக வேறு ஒருவராலும் செய்ய இயலாது. வானங்களில், அவர் ஆவியானவராகவும், அதேவேளையில் தேவனாகவும் இருக்கிறார். மனிதர்களிடையே அவர் மாம்சமாகவும், அதேவேளையில் தேவனாகவும் இருக்கிறார். அவர் இலட்சக்கணக்கான பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அவர் இன்னும் அவராக இருக்கிறார், அவருடைய ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாகவும் இருக்கிறார். அவர் சிலுவையில் அறையப்பட்டதன் மூலமாக சகல மனுக்குலத்திற்குமான மீட்பு அவருடைய ஆவியானவரின் நேரடி கிரியையாகும், அதேபோல் இது கடைசி நாட்களில் எல்லா தேசங்களிலும், எல்லா நாடுகளிலும் அறிவிக்கப்படுகிறது. எல்லா நேரங்களிலும், தேவனை சர்வவல்லவர் என்றும், ஒரே மெய்த்தேவன் என்றும், சகலத்தையும் உள்ளடக்கிய தேவன் என்றும் மட்டுமே அழைக்க முடியும். தனித்தனி ஆள்தத்துவங்களும் கிடையாது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற இந்த கருத்தும் கிடையாது. வானத்திலும் பூமியிலும் ஒரே ஒரு தேவன் தான் வாசம்பண்ணுகிறார்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "திரித்துவம் என்பது உண்டா?" என்பதிலிருந்து

The Bible verses found in this audio are from TAMIL OV and the copyright to the Bible verses belongs to the Bible Society of India. With due legal permission, they are used in this production.

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய மனநிலை மற்றும் தேவன் என்னவாக இருக்கிறார் மற்றும் என்ன கொண்டிருக்கிறார் | பகுதி 238

எனது திட்டமிடப்பட்ட கிரியை ஒரு கணம் கூட இயங்குவதில் நிறுத்தம் இன்றி முன்னோக்கி விரைகிறது. ராஜ்யத்தின் காலத்திற்கு நகர்ந்து, என் ஜனங்களாக...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 142

கடைசி நாட்களில் மாம்சமான தேவன், அவருடைய வார்த்தைகளைப் பேசுவதற்கும், மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விளக்குவதற்கும், மனிதன்...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 483

நீங்கள் ஏன் தேவனை விசுவாசிக்கிறீர்கள்? இந்தக் கேள்வியால் பெரும்பாலான மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நடைமுறையிலான தேவன் மற்றும் பரலோகத்திலுள்ள...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 130

இயேசுவும் நானும் ஒரே ஆவியில் இருந்து வருகிறோம். நாங்கள் எங்கள் மாம்சத்தில் தொடர்பற்றவர்களாக இருந்தாலும், எங்கள் ஆவிகள் ஒன்றே; நாங்கள்...