தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 142
ஜனவரி 15, 2023
கடைசி நாட்களில் மாம்சமான தேவன், அவருடைய வார்த்தைகளைப் பேசுவதற்கும், மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் விளக்குவதற்கும், மனிதன் பிரவேசிக்க வேண்டியதைச் சுட்டிக்காட்டுவதற்கும், தேவனுடைய செயல்களை மனிதனுக்குக் காண்பிப்பதற்கும், மனிதனுக்குத் தேவனுடைய ஞானம், சர்வவல்லமை மற்றும் அற்புதத்தன்மை ஆகியவற்றைக் காண்பிப்பதற்காகவும் முக்கியமாக வந்திருக்கிறார். தேவன் பேசுகிற பல வழிகளில், மனிதன் தேவனுடைய மேன்மையையும், தேவனுடைய மகத்துவத்தையும், மேலும், தேவனுடைய தாழ்மையையும் மறைவான தன்மையையும் காண்கிறான். தேவன் உயர்ந்தவராக இருக்கிறார் என்பதை மனிதன் காண்கிறான், ஆனால் அவர் தாழ்மையுள்ளவராகவும் மறைக்கப்பட்டவராகவும் இருக்கிறார், மற்றும் எல்லாரிலும் சிறியவராக மாறக்கூடியவராகவும் இருக்கிறார். அவருடைய சில வார்த்தைகள் ஆவியானவரின் கண்ணோட்டத்திலிருந்து நேரடியாகவும், சில வார்த்தைகள் நேரடியாக மனிதனின் கண்ணோட்டத்திலிருந்தும், சில வார்த்தைகள் மூன்றாம் நபரின் கண்ணோட்டத்திலிருந்தும் பேசப்படுகின்றன. இதில், தேவனுடைய கிரியையின் முறையானது பெரிதும் மாறுபடுகிறது என்பதைக் காணலாம், மேலும் இதை வார்த்தைகள் மூலமாகத்தான் மனிதனைப் பார்க்கும் படிக்கு அவர் அனுமதிக்கிறார். கடைசி நாட்களின் தேவனுடைய கிரியை இயல்பானது மற்றும் உண்மையானது, ஆகவே கடைசி நாட்களில் உள்ள ஜனக்கூட்டம் அனைத்து மாபெரும் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். தேவனுடைய இயல்பு நிலை மற்றும் யதார்த்தத்தின் காரணமாக, எல்லா ஜனங்களும் இத்தகைய சோதனைகளுக்கு மத்தியில் பிரவேசித்திருக்கிறார்கள்; மனிதன் தேவனுடைய சோதனைகளில் இறங்கியிருப்பதற்கான காரணம் தேவனுடைய இயல்பு மற்றும் யதார்த்தமே ஆகும். இயேசுவின் யுகத்தில், எந்தவிதமான கருத்துக்களும் அல்லது சோதனைகளும் இல்லை. ஏனென்றால் இயேசு செய்த பெரும்பாலான கிரியைகள் மனிதனின் கருத்துக்களோடு ஒத்துப்போனதால், ஜனங்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள், அவர்களுக்கு அவரைப் பற்றி எந்தக் கருத்துக்களும் இல்லை. மனிதன் எதிர்கொள்கிற இன்றைய சோதனைகள் மிகப் பெரியது, இந்த ஜனங்கள் பெரும் உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறப்படும் போது, குறிப்பிடப்படும் உபத்திரவம் இதுதான். இன்று, தேவன் இந்த ஜனங்களில் உண்டான விசுவாசம், அன்பு, துன்பத்தை ஏற்றுக்கொள்வது, மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றைப் பேசுகிறார். கடைசி நாட்களில் மாம்சத்தில் வந்த தேவனால் பேசப்பட்ட வார்த்தைகள் மனிதனின் சுபாவம் மற்றும் சாராம்சம், மனிதனின் நடத்தை மற்றும் இன்று மனிதன் பிரவேசிக்க வேண்டியவை ஆகியவற்றுக்கு ஏற்ப பேசப்படுகின்றன. அவரது வார்த்தைகள் உண்மையானவை மற்றும் இயல்பானவை: அவர் நாளைய தினத்தைப் பற்றி பேசுவதுமில்லை, நேற்றைய தினத்தைத் திரும்பிப் பார்ப்பதுமில்லை; இன்று பிரவேசிக்க வேண்டிய, நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய, மற்றும் புரிந்துகொள்ளப்பட வேண்டியவற்றை மட்டுமே அவர் பேசுகிறார். இன்றைய நாளில், அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்கவும், பிசாசுகளைத் துரத்தவும், பிணியாளிகளைக் குணப்படுத்தவும், பல அற்புதங்களைச் செய்யவும் கூடிய ஒரு நபர் வெளிவர வேண்டுமானால், அவர்கள் வந்திருக்கிற இயேசு என்று கூறினால், இது இயேசுவைப் பின்பற்றும் அசுத்த ஆவிகளால் தோற்றுவிக்கப்பட்ட போலியானவர்களாக இருப்பார்கள். இதை நினைவில் கொள்ளுங்கள்! தேவன் முன்னமே செய்த கிரியையை மீண்டும் செய்வதில்லை. இயேசுவின் கிரியையின் கட்டம் ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவன் மீண்டும் ஒருபோதும் அந்தக் கிரியையின் கட்டத்தை மேற்கொள்ள மாட்டார். தேவனுடைய கிரியை மனிதனின் கருத்துக்களுடன் முரண்பட்டவையாகும்; எடுத்துக்காட்டாக, பழைய ஏற்பாடு ஒரு மேசியாவின் வருகையை முன்னறிவித்தது, இந்த தீர்க்கதரிசனத்தின் விளைவாக இயேசுவின் வருகை இருந்தது. இது ஏற்கனவே நடந்தேறியதால், வேறொரு மேசியா மீண்டும் வருவது என்பது தவறாக இருந்திருக்கும். இயேசு ஏற்கனவே ஒரு முறை வந்துவிட்டார், இந்த முறை இயேசு மீண்டும் வருகிறாரானால் அது தவறாக இருந்திருக்கும். ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உள்ளது, மேலும் ஒவ்வொரு பெயரிலும் அந்த யுகத்தின் குணாதிசயம் உள்ளது. மனிதனின் கருத்துக்களில், தேவன் எப்போதும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிக்க வேண்டும், எப்போதும் பிணியாளிகளைக் குணமாக்கி, பிசாசுகளைத் துரத்த வேண்டும், எப்போதும் இயேசுவைப் போலவே இருக்க வேண்டும். இருப்பினும் இந்தக் காலத்தில், தேவன் அப்படி இல்லவே இல்லை. கடைசி நாட்களின் போது, தேவன் இன்னும் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்து, பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளைக் குணப்படுத்தினார் என்றால்—அதாவது அவர் இயேசுவைப் போலவே செய்திருந்தால்—தேவன் அவர் முன்னமே செய்த அதே கிரியையை மீண்டும் செய்கிறவராக இருப்பார், அப்படி அவர் செய்வாரானால், இயேசு முன்னமே செய்து முடித்த கிரியையில் முக்கியத்துவம் அல்லது மதிப்பு இருக்காது. இவ்வாறு, ஒவ்வொரு யுகத்திலும் தேவன் ஒரு கட்ட கிரியையை செய்கிறார். அவருடைய கிரியையின் ஒவ்வொரு கட்டமும் முடிந்ததும், அது வெகு விரைவில் அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது, மேலும் சாத்தான் தேவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கியதும், தேவன் வேறு முறைக்கு மாறுகிறார். தேவன் தனது வேலையின் ஒரு கட்டத்தை முடித்தவுடன், அது அசுத்த ஆவிகளால் பின்பற்றப்படுகிறது. நீங்கள் இதைப் பற்றிய விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இன்று தேவனுடைய கிரியையானது இயேசுவின் கிரியையிலிருந்து ஏன் வேறுபட்டதாய் இருக்கிறது? இன்று தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பித்து, பிசாசுகளைத் துரத்தி, பிணியாளிகளைக் குணமாக்காதது ஏன்? இயேசுவின் கிரியை நியாயப்பிரமாண யுகத்தின் போது செய்யப்பட்ட கிரியையை போலவே இருந்திருந்தால், அவர் கிருபையின் யுகத்தின் தேவனைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க முடியுமா? அவர் சிலுவையில் அறையப்பட்ட கிரியையைச் செய்து முடித்திருக்க முடியுமா? நியாயப்பிரமாண யுகத்தைப் போலவே, இயேசு தேவாலயத்திற்குள் பிரவேசித்து ஓய்வுநாளைக் கடைப்பிடித்திருந்தால், அவர் யாராலும் துன்புறுத்தப்படாமல் அனைவராலும் அரவணைக்கப்பட்டிருப்பார். அப்படியானால், அவர் சிலுவையில் அறையப்பட்டிருக்க முடியுமா? அவர் மீட்பின் கிரியையை முடித்திருக்க முடியுமா? கடைசி நாட்களில் மாம்சமாக வந்த தேவன் இயேசுவைப் போலவே அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிப்பாரானால் என்ன பயன்? கடைசி நாட்களில் தேவன் தனது கிரியையின் மற்றொரு பகுதியைச் செய்தால் மட்டுமே, அவருடைய நிர்வாகத் திட்டத்தின் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராலேயே தேவனைப் பற்றிய ஆழமான அறிவைப் பெற முடியும், அப்போதுதான் தேவனுடைய நிர்வாகத் திட்டம் செய்து முடிக்கப்பட முடியும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்