தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 130

பிப்ரவரி 1, 2023

இயேசுவும் நானும் ஒரே ஆவியில் இருந்து வருகிறோம். நாங்கள் எங்கள் மாம்சத்தில் தொடர்பற்றவர்களாக இருந்தாலும், எங்கள் ஆவிகள் ஒன்றே; நாங்கள் செய்வதன் உள்ளடக்கமும் நாங்கள் எடுத்துக்கொள்ளும் கிரியையும் ஒன்றாக இல்லாத போதும், நாங்கள் உட்சாரத்தில் ஒன்றுபோல் இருக்கிறோம்; எங்கள் மாம்சங்கள் வெவ்வேறு வடிவங்களை எடுக்கின்றன, ஆனால் இது யுகத்தின் மாற்றத்தாலும் எங்கள் கிரியையின் வேறுபடும் தேவைகளின் காரணமாகவும் ஆகும்; எங்கள் ஊழியங்கள் ஒன்றுபோல் இல்லை, ஆகவே நாங்கள் கொண்டுவரும் கிரியையும் நாங்கள் வெளிப்படுத்தும் மனநிலைகளும் கூட வேறாக இருக்கின்றன. யுக மாற்றத்தின் காரணமாக மனிதன் இன்றைய நாளில் பார்ப்பதும் புரிந்து கொள்ளுவதும் கடந்த காலத்தைப் போலல்லாமல் இருக்கின்றன. அவர்கள் பாலினத்திலும் தங்கள் மாம்சத்தின் வடிவத்திலும் வேறாக இருந்தாலும், அவர்கள் ஒரே குடும்பத்தில் பிறக்கவில்லை எனினும், ஒரே கால கட்டத்தில் இல்லாவிட்டாலும் கூட, அவர்களது ஆவி ஒன்றே. அவர்களுடைய மாம்சங்கள் இரத்தத்தையோ அல்லது எந்த வகையான உடலியல் உறவுகளையோ பகிரவில்லை, அவர்கள் இருவேறு கால கட்டத்தில் தேவனின் அவதார மாம்சங்களாக இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. ஆகவே அவர்கள் தேவனுடைய மனுவுருவான மாம்சங்களாக இருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். எனினும், அவர்கள் ஒரே இரத்தவழியைச் சேர்ந்தவர்கள் அல்ல மற்றும் ஒரே பொது மொழியைக் கொண்டவர்களும் அல்ல (ஒருவர் யூதர்களின் மொழியைப் பேசிய ஓர் ஆண் மற்றும் இன்னொருவர் சீன மொழியை மட்டுமே பேசும் ஒரு பெண்) எனினும் அவர்கள் தேவனின் அவதார மாம்சங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தக் காரணங்களால் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையின் பொருட்டு அவர்கள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டத்திலும் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் ஒரே ஆவியாக இருக்கிறார்கள், ஒரே சாராம்சத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கும் போதிலும், அவர்களுடைய மாம்சத்தின் புறப்பகுதியில் முழுமையான எந்த ஓர் ஒற்றுமையும் இல்லை. அவர்கள் ஒரே மனிதத்தன்மையைப் பகிர்ந்துகொண்டாலும், அவர்களுடைய மாம்சத்தின் புறத் தோற்றத்தையும் அவர்களுடைய பிறப்பின் சூழ்நிலைகளையும் பொறுத்த வரையில் அவர்கள் ஒன்றுபோல் இல்லை. அவர்களுடன் தொடர்புடைய கிரியை அல்லது அவர்களைப் பற்றி மனிதன் கொண்டிருக்கும் அறிவின் மேல் இந்த விஷயங்கள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, ஏனெனில் இறுதி ஆய்வில், அவர்கள் ஒரே ஆவியாக இருக்கிறார்கள், மேலும் ஒருவரும் அவர்களைப் பிரிக்க முடியாது. அவர்கள் இரத்த சம்பந்தமான உறவுடையவர்கள் இல்லை என்றாலும், அவர்களுடைய முழு இருப்பும் அவர்களுடைய ஆவியின் கட்டுப்பாட்டில் உள்ளது, அது அவர்களுக்கு வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு கிரியைக்கும், அவர்களுடைய மாம்சங்கள் வெவ்வேறு இரத்தவழிகளைக் கொண்டவையாகும். யேகோவாவின் ஆவி இயேசுவினுடைய ஆவியின் பிதா அல்ல, மற்றும் இயேசுவின் ஆவி யேகோவாவினுடைய ஆவியின் குமாரனும் அல்ல: அவை ஒரே ஆவியாகும். அதுபோலவே, இன்றைய தேவ அவதாரமும் இயேசுவும் இரத்தத்தால் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் ஒன்றே, இது ஏனெனில் அவர்களது ஆவி ஒன்றே. இரக்கம் மற்றும் அன்பான கருணையின் கிரியையும், மனிதனை நீதியாக நீயாயந்தீர்த்து கடிந்துகொள்ளுதலையும் மற்றும் மனிதன் மேல் சாபங்களை வரவழைப்பதையும் தேவனால் செய்ய முடியும்; முடிவில் உலகத்தை அழித்துத் துன்மார்க்கரை தண்டிக்கும் கிரியையும் அவரால் செய்ய முடியும். இவற்றை எல்லாம் அவர்தாமே செய்வதில்லையா? இது தேவனின் சர்வவல்லமை அல்லவா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க