தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 9
மனுஷர் மத்தியில் தேவனுடைய கிரியை மனுஷனிடமிருந்து மறைக்கப்படவில்லை, மேலும் இது தேவனை வணங்குபவர்களால் அறிந்துகொள்ளப்பட வேண்டும். தேவன் மனுஷர்...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
பேதுருவின் அனுபவங்களில் ஓர் உச்சக்கட்டம் இருந்தது, அவருடைய உடல் கிட்டத்தட்ட முற்றிலுமாக உடைந்துவிட்டபோது, இயேசு இன்னும் அவருக்குள் ஊக்கத்தை அளித்தார். ஒரு முறை, இயேசு பேதுருவுக்குக் காட்சியளித்தார். பேதுரு மிகுந்த துன்பத்தில் இருந்து, அவருடைய இருதயம் உடைந்துவிட்டதாக உணர்ந்தபோது, இயேசு அவருக்கு இவ்வாறு அறிவுறுத்தினார், "நீ பூமியில் என்னுடன் இருந்தாய், நான் உன்னுடன் இங்கே இருந்தேன். நாம் பரலோகத்தில் ஒன்றாக இருந்ததற்கு முன்பே, அது ஆவிக்குரிய உலகில் உள்ளது. இப்போது நான் ஆவிக்குரிய உலகிற்குத் திரும்பிவிட்டேன், நீ பூமியில் இருக்கிறாய், ஏனென்றால் நான் பூமியைச் சேர்ந்தவனல்ல, நீயும் பூமியைச் சேர்ந்தவன் அல்ல என்றாலும், நீ பூமியில் உன் கிரியையை நிறைவேற்ற வேண்டும். நீ ஓர் ஊழியனாக இருப்பதால், நீ உன் கடமையை நிறைவேற்ற வேண்டும்". பேதுருவுக்கு, தான் தேவனின் பக்கமாக திரும்பிட முடியும் என்று கேள்விப்பட்டது ஆறுதல் அளித்தது. அந்த நேரத்தில், பேதுரு மிகவும் வேதனையில் இருந்தார், அவர் கிட்டத்தட்ட படுத்தப் படுக்கையாக இருந்தார். "நான் தேவனை திருப்திப்படுத்த முடியாமல் மிகவும் சீர்கெட்டுவிட்டேன்" என்று சொல்லும் அளவிற்கு அவர் வருத்தப்பட்டார். இயேசு அவருக்குக் காட்சியளித்து, "பேதுருவே, நீ ஒரு முறை எனக்கு முன் செய்த தீர்மானத்தை மறந்துவிட்டாயா? நான் சொன்ன அனைத்தையும் நீ உண்மையில் மறந்துவிட்டாயா? நீ என்னிடம் செய்த தீர்மானத்தை மறந்துவிட்டயா?" அவர் இயேசு என்பதைக் கண்டு, பேதுரு படுக்கையில் இருந்து எழுந்தார். "நான் பூமியைச் சேர்ந்தவனல்ல, நான் ஏற்கனவே உனக்கு சொல்லியிருக்கிறேன்—இதை நீ புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் நீ மறந்துவிட்டாயா? வேறு ஏதாவது நான் உன்னிடம் சொன்னேனா? ‘நீ பூமியிலிருந்து அல்ல, உலகத்திலிருந்து அல்ல.’ இப்போதே, நீ செய்ய வேண்டிய கிரியை இருக்கிறது. நீ இப்படி வருத்தப்பட முடியாது. நீ இப்படித் துன்பப்பட முடியாது. மனிதர்களும் தேவனும் ஒரே உலகில் ஒன்றிணைந்து வாழ முடியாது என்றாலும், எனக்கு எனது கிரியை இருக்கிறது, உன்னிடம் உன்னுடையது உள்ளன, ஒரு நாள் உன் கிரியை முடிந்ததும், நாம் ஒரே உலகில் ஒன்றாக இருப்போம், நான் வழிநடத்துவேன் நீ என்றென்றும் என்னுடன் இருக்க வேண்டும்," என்று இயேசு அவரை இவ்வாறு ஆறுதல்படுத்தினார். இந்த வார்த்தைகளைக் கேட்டபின் பேதுரு ஆறுதல் அடைந்தார், தைரியமானார். இந்த துன்பம், தான் தாங்கிக் கொள்ள வேண்டிய மற்றும் அனுபவிக்க வேண்டிய ஒன்று என்பதை அவர் அறிந்திருந்தார், அப்போதிலிருந்து அவர் தூண்டப்பட்டார். ஒவ்வொரு முக்கிய தருணத்திலும் இயேசு அவருக்கு விசேஷமாக் காட்சியளித்தார், அவருக்குச் சிறப்பு ஞானத்தையும் வழிகாட்டலையும் அளித்தார், மேலும் அவர் அவரில் அநேகக் கிரியைகளைச் செய்தார். "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்" என்று பேதுரு சொன்னபின், எதனால் பேதுரு மிகவும் வருத்தப்பட்டார்? இயேசு மற்றொரு கேள்வியைப் பேதுருவிடம் முன்வைத்தார். (இது வேதாகமத்தில் இவ்வாறு பதிவு செய்யப்படவில்லை என்றாலும்). "பேதுரு! நீ எப்போதாவது என் னிடத்தில் அன்பு கூர்ந்திருக்கிறாயா?" என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர் சொன்னதைப் பேதுரு புரிந்துகொண்டு, "ஆண்டவரே! நான் முன்னர் பரலோகத்திலுள்ள பிதாவினிடத்தில் அன்புகூர்ந்தேன், ஆனால் நான் உம்மை ஒருபோதும் நேசித்ததில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்". அப்போது, "ஜனங்கள் பரலோகத்திலுள்ள பிதாவினிடத்தில் அன்புகூரவில்லை என்றால், அவர்கள் பூமியிலுள்ள குமாரனிடத்தில் எப்படி அன்புகூர முடியும்? பிதாவாகிய தேவனால் அனுப்பப்பட்ட குமாரனை ஜனங்கள் நேசிக்கவில்லை என்றால், அவர்கள் பரலோகத்திலுள்ள பிதாவை எப்படி நேசிக்கமுடியும்? பூமியில் ஜனங்கள் குமாரனை உண்மையாக நேசிக்கிறார்கள் என்றால், அவர்கள் உண்மையிலேயே பரலோகத்திலுள்ள பிதாவை நேசிக்கிறார்கள்" என்று இயேசு சொன்னார். இந்த வார்த்தைகளைப் பேதுரு கேட்டபோது, தான் பின்தங்கியிருப்பதை உணர்ந்தார். "நான் முன்னர் பரலோகத்திலுள்ள பிதாவினிடத்தில் அன்பு கூர்ந்தேன், ஆனால் நான் உம்மை ஒருபோதும் நேசித்ததில்லை" என்ற அவரது வார்த்தைகளுக்கு அவர் எப்போதும் கண்ணீர் விட்டார். இயேசுவின் உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலுக்குப் பிறகு, இந்த வார்த்தைகள் குறித்து அவர் இன்னும் குற்ற உணர்வையும் துக்கத்தையும் உணர்ந்தார். அவருடைய கடந்த காலக் கிரியையையும், அவருடைய தற்போதைய அந்தஸ்தையும் நினைவு கூர்ந்த அவர், அடிக்கடி ஜெபத்தில் இயேசுவுக்கு முன்பாக வருவார், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றாததாலும், தேவனின் தரத்தை அளவிடாததாலும் எப்போதும் வருத்தமும் கடன்பட்டவராகவும் உணர்கிறார். இந்தப் பிரச்சினைகள் அவருக்கு மிகப்பெரிய சுமையாக மாறின. "ஒரு நாள் நான் என்னிடம் உள்ள அனைத்தையும், என்னை முற்றிலுமாகவும் நான் உமக்காக அர்ப்பணிப்பேன், மிகவும் விலையேறப்பெற்ற யாவற்றையும் நான் உமக்குக் கொடுப்பேன்" என்று அவர் சொன்னார். "தேவனே! எனக்கு ஒரே ஒரு விசுவாசமும், ஒரே ஒரு அன்பும் இருக்கிறது. என் வாழ்க்கை ஒன்றும் மதிப்புக்குரியது அல்ல, என் உடலுக்கு மதிப்பு ஒன்றும் இல்லை. எனக்கு ஒரே ஒரு விசுவாசமும், ஒரே ஒரு அன்பும் இருக்கிறது. நான் என் மனதில் உம்மை விசுவாசிக்கிறேன், என் இருதயத்தில் உம்மை நேசிக்கிறேன். இந்த இரண்டு விஷயங்களையும் நான் உமக்கு கொடுக்க வேண்டும், வேறு ஒன்றும் இல்லை" என்று அவர் கூறினார். இயேசுவின் வார்த்தைகளால் பேதுரு பெரிதும் தைரியப்படுத்தப்பட்டார், ஏனென்றால் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, "நான் இந்த உலகத்திற்குரியவனல்ல, நீயும் இந்த உலகத்திற்குரியவனல்ல", என்று அவர் பேதுருவிடம் சொன்னார். பின்னர், பேதுரு மிகுந்த வேதனையை அடைந்தபோது, "பேதுரு, நீ மறந்துவிட்டாயா? நான் உலகத்திற்குரியவனல்ல, என் கிரியைக்காக மட்டுமே நான் முன்பே புறப்பட்டு விட்டேன். நீயும் உலகத்திற்குரியவனல்ல, நீ உண்மையில் மறந்துவிட்டாயா? நான் உனக்கு இரண்டு முறை சொன்னேன், உனக்கு நினைவில் இல்லையா?", என்று இயேசு அவருக்கு நினைவூட்டினார். இதைக் கேட்ட பேதுரு, "நான் மறக்கவில்லை!" என்றார். அப்போது "நீ ஒரு முறை என்னுடன் சேர்ந்து பரலோகத்தில் மகிழ்ச்சியான நேரத்தையும், என் பக்கத்தில் ஒரு கால கட்டத்தையும் செலவழித்தாய். நீ என் பிரிவை உணர்கிறாய், நான் உன் பிரிவை உணர்கிறேன். என் சிருஷ்டிப்புகள் என் கண்களுக்கு முன்பாகக் குறிப்பிடத்தக்கவை அல்ல என்றாலும், அப்பாவியான மற்றும் அன்பான ஒருவரை நான் எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்? நீ என் வாக்குத்தத்தத்தை மறந்துவிட்டாயா? பூமியில் என் கட்டளையை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் உன்னிடம் ஒப்படைத்த பணியை நீ நிறைவேற்ற வேண்டும். ஒரு நாள் நான் நிச்சயமாக உன்னை என் பக்கமாக வழிநடத்துவேன்", இவ்வாறு இயேசு சொன்னார். இதைக் கேட்டபின், பேதுரு இன்னும் தைரியமடைந்து, இன்னும் பெரிய தூண்டுதலைப் பெற்றார், அதாவது அவர் சிலுவையில் இருந்தபோது, "தேவனே! உம்மிடத்தில் போதுமான அளவிற்கு என்னால் அன்புகூர முடியவில்லை! நீர் என்னை மரிக்கச் சொன்னாலும், என்னால் இன்னும் உம்மை போதுமான அளவு நேசிக்க முடியவில்லை. நீர் என் ஆத்துமாவை எங்கு அனுப்பினாலும், உம் கடந்த கால வாக்குத்தத்தங்களை நீர் நிறைவேற்றினாலும் நிறைவேற்றாவிட்டாலும், அதன்பிறகு நீர் எதைச் செய்தாலும், நான் உம்மிடத்தில் அன்புகூர்கிறேன், உம்மை விசுவாசிக்கிறேன்" என்று அவரால் சொல்ல முடிந்தது. அவர் பற்றிக் கொண்டிருந்தது அவருடைய விசுவாசமும், உண்மையான அன்பும் ஆகும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பேதுரு இயேசுவை எப்படி அறிந்துகொண்டார்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
மனுஷர் மத்தியில் தேவனுடைய கிரியை மனுஷனிடமிருந்து மறைக்கப்படவில்லை, மேலும் இது தேவனை வணங்குபவர்களால் அறிந்துகொள்ளப்பட வேண்டும். தேவன் மனுஷர்...
தேவன் மீதுள்ள விசுவாசத்தில், மக்களிடம் இருக்கும் மிகப்பெரிய தவறு என்னவென்றால், அவர்கள் உதட்டளவில் மட்டுமே விசுவாசிக்கிறார்கள், அவர்களின்...
யேகோவா அவரது கிரியைகளை நடத்திய இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னர் மனிதன் எதையும் அறியவில்லை. மேலும் வெள்ளத்தால் உலகம் அழிக்கப்படுவதற்கு...
தேவன் மீதான உன் விசுவாசம், சத்தியத்தின் மீதான உன் நாட்டம், உன்னை நீயே தொடர்பு கொள்ளும் விதம் அனைத்தும் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக...