தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 19
மார்ச் 27, 2023
யேகோவா அவரது கிரியைகளை நடத்திய இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்னர் மனிதன் எதையும் அறியவில்லை. மேலும் வெள்ளத்தால் உலகம் அழிக்கப்படுவதற்கு முன் வரை, ஏறக்குறைய மனிதகுலம் அனைத்தும் சீர்கேட்டுக்குள் விழுந்து, அவர்கள் ஒழுக்கமின்மை மற்றும் உலக அசுத்தங்களின் ஆழத்தை அடைந்திருந்தார்கள். அதனால் அவர்கள் இருதயங்களில் யேகோவா முற்றிலுமாக இல்லை, மேலும் அவரது வழிகளில் அவர்கள் நடக்கவில்லை. யேகோவா ஆற்றப்போகும் கிரியையை அவர்கள் ஒருபோதும் புரிந்துகொள்ளவில்லை; காரணகாரிய அறிவு அவர்களுக்குக் குறைவுபட்டது, அறிவும்கூட குறைவாகவே இருந்தது, மேலும், சுவாசிக்கும் இயந்திரங்கள் போல, அவர்கள் மனிதன், தேவன், உலகம், வாழ்க்கை மற்றும் அது போன்றவற்றைப் பற்றி அறியாமை கொண்டவர்களாக இருந்தார்கள். உலகில், சர்ப்பத்தைப் போல பல தீய கவர்ச்சிகளில் மூழ்கி இருந்தார்கள். யேகோவாவுக்கு எதிரான பல விஷயங்களைக் கூறினார்கள். ஆனால் அவர்கள் அறியாமையில் மூழ்கி இருந்ததால், யேகோவா அவர்களைச் சிட்சிக்கவோ தண்டித்துத் திருத்தவோவில்லை. வெள்ளத்துக்குப் பின்னர்தான், நோவாவின் 601 வது வயதில், யேகோவா முறையாக நோவாவுக்கு முன் தோன்றி அவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் வழிகாட்டி, நோவாவுடனும் அவனது சந்ததியாருடனும் வெள்ளத்துக்குத் தப்பிப்பிழைத்த பறவைகளையும், மிருகங்களையும், மொத்தம் 2,500 ஆண்டுகள் நீடித்த நியாயப்பிரமாணத்தின் காலத்தின் முடிவு வரை வழிநடத்தினார். அவர் இஸ்ரவேலில் மொத்தம் 2,000 ஆண்டுகள் கிரியை நடத்தினார், அதாவது முறையாகக் கிரியை செய்தார். மேலும் அதே நேரத்தில் இஸ்ரவேலிலும் அதற்கு வெளியிலும் 500 ஆண்டுகளாகக் கிரியை செய்தார். மொத்தம் இவை 2,500 ஆண்டுகள் ஆகும். இந்தக் காலகட்டத்தில், யேகோவாவைச் சேவிக்க, அவர்கள் ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்றும், ஆசாரியருக்கு உரிய உடைகளைத் தரிக்க வேண்டும் என்றும், அதிகாலையில் வெறுங்காலுடன் ஆலயத்துக்குள் நடக்கவேண்டும் இல்லாவிட்டால் அவர்களின் காலணிகள் ஆலயத்தைக் கெடுக்கும் மேலும் ஆலயத்தின் உச்சியில் இருந்து கீழே அக்கினி அனுப்பப்பட்டு அது அவர்களை எரித்துக் கொன்றுவிடும் என்றும் அவர் இஸ்ரவேலர்களுக்கு அறிவுறுத்தினார். அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றி யேகோவாவின் திட்டங்களுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தனர். ஆலயத்தில் அவர்கள் யேகோவாவினிடத்தில் ஜெபித்தனர், மற்றும் யேகோவாவின் வெளிப்பாட்டைப் பெற்றபின், அதாவது யேகோவா பேசிய பின்னர், அவர்கள் திரளான மக்களை வழிநடத்தி, அவர்கள் தங்கள் தேவனான யேகோவாவுக்கு பயபக்தியைக் காட்ட வேண்டும் என்று போதித்தனர். அவர்கள் ஓர் ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்டவேண்டும் என்றும் மேலும் யேகோவாவினால் குறிக்கப்பட்ட காலத்தில், அதாவது பஸ்காவின் போது, தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளவும் தங்கள் இருதயங்களில் யேகோவாவுக்கு பயபக்தியைக் காட்டுவதற்காகவும், அவர்கள் இளங்கன்றுகளையும் ஆட்டுக்குட்டிகளையும் யேகோவாவைச் சேவிப்பதற்கு பலியாகப் பலிபீடத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றும் யேகோவா அவர்களிடம் கூறினார். இந்தப் பிரமாணத்துக்குக் கீழ்ப்படிவது யேகோவாவிடம் அவர்கள் வைத்த விசுவாசத்திற்கான அளவுகோல் ஆயிற்று. அவரது சிருஷ்டிப்பின் ஏழாம் நாளை யேகோவா அவர்களுக்கான ஓய்வுநாளாகப் பரிசுத்தப்படுத்தினார். ஓய்வுநாளுக்கு அடுத்த நாளை, அவர் முதல் நாள் ஆக்கி, அதை யேகோவாவை ஆராதிக்கவும், அவருக்குப் பலிகளைச் செலுத்தவும், அவரைப் போற்றிப் பாடுவதற்குமான ஒரு நாள் ஆக்கினார். இந்த நாளில், யேகோவா ஆசாரியர்கள் யாவரையும் ஒன்றாக அழைத்து, மக்கள் புசிப்பதற்காக பலிபீடத்தில் பலிகளைப் பங்கிடுமாறும் அதனால் யேகோவாவின் பலிபீடத்தில் மக்கள் பலிகளை அனுபவித்து மகிழுமாறும் செய்தார். அவரோடு ஒரு பங்கை பகிர்ந்து கொண்டதால் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள் என்றும் (இது யேகோவா இஸ்ரவேலர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கை) யேகோவா கூறினார். இதனால்தான், இன்றுவரை, இஸ்ரவேலர்கள் யேகோவா தங்கள் தேவன் மட்டுமே என்றும், புறஜாதியாரின் தேவன் இல்லை என்றும் இன்னும் கூறிவருகின்றனர்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "நியாயப்பிரமாணத்தின் காலத்தில் கிரியை" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்