தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 9

மார்ச் 16, 2023

மனுஷர் மத்தியில் தேவனுடைய கிரியை மனுஷனிடமிருந்து மறைக்கப்படவில்லை, மேலும் இது தேவனை வணங்குபவர்களால் அறிந்துகொள்ளப்பட வேண்டும். தேவன் மனுஷர் மத்தியில் மூன்று கட்ட இரட்சிப்பின் கிரியைகளை நிறைவேற்றியிருப்பதால், இந்த மூன்று கட்ட கிரியைகளின் போது அவர் என்ன கொண்டிருக்கிறார் மற்றும் என்னவாக இருக்கிறார் என்ற வெளிப்பாட்டை மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும். இதைத்தான் மனுஷன் செய்ய வேண்டும். தேவன் மனுஷனிடமிருந்து மறைப்பதை எந்த மனுஷனாலும் அடைய முடியாது, அதை மனுஷன் அறிந்துகொள்ளவும் கூடாது, அதே நேரத்தில் தேவன் மனுஷனுக்குக் காண்பிப்பதை மனுஷன் அறிந்துகொள்ள வேண்டும் மற்றும் எந்த மனுஷனும் அதைக் கொண்டிருக்க வேண்டும். மூன்று கட்ட கிரியைகளில் ஒவ்வொன்றும் முந்தையக் கட்டத்தின் அஸ்திபாரத்தின் மீது செய்யப்படுகின்றன; இது இரட்சிப்பின் கிரியையிலிருந்து பிரிக்கப்பட்டுத் தனியாகச் செய்யப்படுவதில்லை. யுகத்திலும் செய்யப்படும் கிரியையிலும் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும், அதன் மையத்தில் இன்னும் மனுக்குலத்தின் இரட்சிப்பு உள்ளது, மேலும் ஒவ்வொரு கட்ட இரட்சிப்பின் கிரியையும் முந்தையதைக் காட்டிலும் ஆழமானதாக இருக்கிறது. ஒவ்வொரு கட்டமும் அழிக்கப்படாத முந்தைய கட்டத்தின் அஸ்திபாரத்திலிருந்து தொடர்கிறது. இவ்வாறு, எப்போதும் புதியதாகவும், ஒருபோதும் பழையதாகாத அவருடைய கிரியையில், தேவன் இதற்கு முன்பு ஒருபோதும் மனுஷனுக்கு வெளிப்படுத்தாத தனது மனநிலையின் அம்சங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறார், மேலும் மனிதனுக்கு எப்போதும் தனது புதிய கிரியையையும் அவருடைய புதிய இருப்பையும் வெளிப்படுத்துகிறார். பழைய மதக் காவலர் இதை எதிர்ப்பதற்குத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தாலும், அதை வெளிப்படையாக எதிர்த்தாலும், தேவன் தான் செய்ய விரும்பும் புதிய கிரியையை எப்போதும் செய்கிறார். அவரது கிரியை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது, இதன் விளைவாக அது எப்போதும் மனுஷனுடைய எதிர்ப்பை எதிர்கொள்கிறது. ஆகையால், அவருடைய கிரியையின் காலத்தையும் பெறுநர்களையும் போலவே, அவருடைய மனநிலையும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. மேலும், அவர் இதற்கு முன் எப்போதும் செய்திராத கிரியையையே செய்கிறார், இதற்கு முன் செய்த கிரியைக்கு முரண்பாடாகவும் வேறுபாடாகவும் இருப்பதாக மனுஷனுக்குத் தோன்றும் கிரியையையும் செய்கிறார். மனுஷனால் ஒரு வகையான கிரியையை அல்லது ஒரு நடைமுறைப் பாதையை மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும். மேலும், தங்களுக்கு முரண்பாடான அல்லது தங்களை விட உயர்வான கிரியை அல்லது நடைமுறை வழிகளை மனுஷன் ஏற்றுக்கொள்வது கடினமாகும். ஆனால், பரிசுத்த ஆவியானவர் எப்போதும் புதிய கிரியையைச் செய்கிறார், அதனால்தான் தேவனுடைய புதிய கிரியையை எதிர்க்கும் மத வல்லுநர்கள் கூட்டம் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகிறது. தேவன் எவ்வாறு எப்போதுமே புதியவராக இருக்கிறார், ஒருபோதும் பழையவராக இருப்பதில்லை என்பது பற்றி மனுஷனுக்கு எந்த அறிவும் இல்லை என்பதனாலும், தேவனுடைய கிரியையின் கொள்கைகளைப் பற்றிய எந்த அறிவும் இல்லை என்பதனாலும் மற்றும் தேவன் மனுஷனை இரட்சிக்கும் பல வழிகளைப் பற்றிய எந்த அறிவும் இல்லை என்பதனாலும், இந்த ஜனங்கள் வல்லுநர்களாகிவிட்டனர். ஆகையால், இது பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வரும் கிரியையா, அது தேவனுடைய கிரியையா என்பதை மனுஷனால் முழுவதுமாகச் சொல்ல முடியவில்லை. பலர் முன்பு வந்த வார்த்தைகளுடன் தொடர்புடைய ஒன்றின் மனப்பாங்கைப் பற்றிக்கொண்டு, அதை ஏற்றுக்கொள்கிறார்கள். முந்தைய கிரியையுடன் வேறுபாடுகள் இருந்தால், அவர்கள் அதை எதிர்க்கின்றார்கள் மற்றும் புறக்கணிக்கின்றார்கள். இன்று, நீங்கள் அனைவரும் இதுபோன்ற கொள்கைகளைப் பற்றிக்கொண்டிருக்கவில்லையா? மூன்று கட்ட இரட்சிப்பின் கிரியைகள் உங்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, மேலும் முந்தைய இரண்டு கட்ட கிரியைகளும் தாங்கள் அறிந்துகொள்ள அவசியமில்லாத ஒரு பாரமாகவே இருப்பதாக நம்புகிறவர்களும் இருக்கின்றார்கள். இக்கட்டங்கள் ஜனங்களுக்கு அறிவிக்கப்படக்கூடாது என்றும், முடிந்த அளவு அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இதனால் மூன்று கட்ட கிரியைகளின் முந்தைய இரண்டு கட்டங்களால் ஜனங்கள் குழப்பமாக உணர மாட்டார்கள் என்றும் அவர்கள் நினைக்கின்றார்கள். முந்தைய இரண்டு கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வது மிகவும் அதிகமானது என்றும், தேவனை அறிந்துகொள்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள், நீங்களும் அப்படித்தான் நினைக்கின்றீர்கள். இன்று, இவ்விதமாகச் செயல்படுவது சரியானது என்று நீங்கள் அனைவரும் நம்புகின்றீர்கள், ஆனால் எனது கிரியையின் முக்கியத்துவத்தை நீங்கள் உணரும் நாள் வரும்: முக்கியத்துவமில்லாத எந்தக் கிரியையையும் நான் செய்வதில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். நான் மூன்று கட்ட கிரியைகளை உங்களுக்கு அறிவிப்பதனால், அவை உங்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கும். இந்த மூன்று கட்ட கிரியைகளும் தேவனுடைய முழு நிர்வாகத்தின் மையமாக இருப்பதால், அவை பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைவரின் மையமாக வேண்டும். ஒரு நாள், நீங்கள் அனைவரும் இந்தக் கிரியையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வீர்கள். நீங்கள் தேவனுடைய கிரியையின் கொள்கைகளை அறியாததினாலும் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் குறித்த உங்கள் முரட்டாட்டமான நடத்தையினாலும், நீங்கள் தேவனுடைய கிரியையை எதிர்க்கிறீர்கள் அல்லது இன்றைய கிரியையை அளவிட உங்கள் சொந்தக் கருத்துக்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் தேவனை எதிர்ப்பது மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு இடையூறு ஏற்படுத்துவது உங்கள் கருத்துக்களாலும் உள்ளார்ந்த இறுமாப்பினாலும் ஏற்படுகின்றன. இது தேவனுடைய கிரியை தவறானது என்பதால் அல்ல, ஆனால் நீங்கள் இயல்பாகவே மிகவும் கீழ்ப்படியாதவர்கள் என்பதனால் ஆகும். தேவன் மீதான தங்கள் விசுவாசத்தைக் கண்டறிந்த பிறகு, மனுஷன் எங்கிருந்து வந்தான் என்று சிலரால் உறுதியாகச் சொல்ல முடிவதில்லை, ஆனாலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் சரியானவற்றையும் தவறானவற்றையும் மதிப்பிடும் பொது சொற்பொழிவுகளை ஆற்ற அவர்கள் தைரியம் கொள்கிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையைக் கொண்டுள்ள அப்போஸ்தலர்களுக்கும் அவர்கள் விரிவுரை வழங்குகின்றார்கள், கருத்துரை கூறுகிறார்கள், அளவுக்கதிகமாகப் பேசுகிறார்கள்; அவர்களின் மனிதத்தன்மை மிகவும் குறைவாக உள்ளது அவர்களுக்கு சிறிதளவும் அறிவு இல்லை. இதுபோன்றவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் புறக்கணிக்கப்பட்டு, நரகத்தின் அக்கினியினால் எரிக்கப்படும் நாள் வரவில்லையா? அவர்கள் தேவனுடைய கிரியையை அறியவில்லை, மாறாக அவருடைய கிரியையைப் பரியாசம் செய்கிறார்கள், மேலும் எவ்வாறு கிரியை செய்ய வேண்டும் என்று தேவனுக்கு அறிவுறுத்தவும் முயற்சி செய்கிறார்கள். இதுபோன்ற அநீதியானவர்களால் தேவனை எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? தேடும் மற்றும் அனுபவிக்கும் செயல்முறையின்போதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்கிறான். பரிசுத்த ஆவியானவரின் அறிவொளி மூலமே மனுஷன் தேவனை அறிந்துகொள்கிறான் என்று விரும்பியபடி விமர்சிப்பதன் மூலம் அல்ல. தேவனைப் பற்றிய ஜனங்களின் அறிவு எவ்வளவு துல்லியமானதாகிறதோ, அந்த அளவு குறைவாகவே அவர்கள் அவரை எதிர்க்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, தேவனைப் பற்றி ஜனங்கள் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அவரை எதிர்க்க வாய்ப்புள்ளது. உனது கருத்துக்கள், உனது பழைய சுபாவம் மற்றும் உனது மனிதத்தன்மை, குணம் மற்றும் நீதிநெறி ஆகியவையே நீ தேவனை எதிர்க்கும் மூலதனம் ஆகும். உன்னுடைய ஒழுக்கம் எவ்வளவு அதிகமாக சீர்கெட்டிருக்கிறதோ, உன்னுடைய குணாதிசயங்கள் எவ்வளவு அதிகமாக அருவருப்பாக இருக்கிறதோ, உன்னுடைய மனிதத்தன்மை எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நீ தேவனுக்கு சத்துருவாக இருக்கிறாய். வலுவான கருத்துக்களைக் கொண்டவர்களும் சுய நீதி மனநிலையைக் கொண்டவர்களும் மாம்சமாகிய தேவனுடன் இன்னும் அதிகமான பகையுடன் உள்ளனர். இதுபோன்றவர்கள்தான் அந்திக்கிறிஸ்துகள். உனது கருத்துக்கள் சரிசெய்யப்படாவிட்டால், அவை எப்போதும் தேவனுக்கு எதிராகவே இருக்கும். நீ ஒருபோதும் தேவனுடன் இணக்கமாக இருக்கமாட்டாய், எப்போதும் அவரிடமிருந்து விலகியே இருப்பாய்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க