தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 318

மார்ச் 7, 2023

தேவன் மீதான உன் விசுவாசம், சத்தியத்தின் மீதான உன் நாட்டம், உன்னை நீயே தொடர்பு கொள்ளும் விதம் அனைத்தும் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டும்: நீ செய்யும் அனைத்தும் நடைமுறையானதாக இருக்கவேண்டும், மேலும் நீ மாயையான மற்றும் கற்பனையான காரியங்களைப் பின்தொடரக்கூடாது. இந்த வழியில் நடப்பதற்கு எந்த மதிப்பும் இல்லை, மேலும், அத்தகைய வாழ்க்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை. ஏனென்றால், உன் பின்தொடர்தலும் வாழ்க்கையும் பொய் மற்றும் வஞ்சகத்தைத்தவிர வேறொன்றிலும் செலவழிக்கப்படுவதில்லை, மேலும் நீ மதிப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த காரியங்களை பின்தொடராததால், உன்னால் சத்தியமற்ற அபத்தமான பகுத்தறிவையும் உபதேசத்தையும் மட்டுமே பெறமுடியும். இதுபோன்ற காரியங்களுக்கும் நீ இருப்பதன் முக்கியத்துவத்துக்கும் மதிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, மேலும் இவை உன்னை ஒரு வெறுமையான உலகத்திற்குள் மட்டுமே கொண்டு வரமுடியும். இந்த வழியில், உன் முழு வாழ்வும் எந்த மதிப்பும் அர்த்தமும் இல்லாமல் இருக்கும்—நீ அர்த்தமுள்ள வாழ்வைத் தொடராதிருந்தால், நீ ஒரு நூறு ஆண்டுகள் வாழ்ந்தாலும், அது ஒரு பிரயோஜனமும் இல்லாததாக இருக்கும். அதனை எவ்வாறு ஒரு மனித வாழ்க்கை என்று அழைக்க முடியும்? இது உண்மையில் ஒரு மிருக வாழ்க்கை அல்லவா? அதே போல், நீங்கள் தேவன் மீதான விசுவாசப் பாதையை பின்பற்ற முயற்சித்தாலும், காணக்கூடிய தேவனைப் பின்தொடர எந்த முயற்சியும் செய்யாமல், அதற்குப் பதிலாக ஒரு அதரிசனமான மற்றும் தொட்டுணர முடியாத தேவனைத் தொழுதுகொள்கிறீர்கள் என்றால், அத்தகைய பின்தொடர்தல் இன்னும் வீணானதல்லவா? இறுதியில், உன்னுடைய பின்தொடர்தல் அழிவுகளின் குவியலாக மாறும். இது போன்ற ஒரு பின்தொடர்தலால் உனக்கு என்ன பயன்? மனிதனுடைய மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவனால் காணவோ தொடவோ முடியாத காரியங்களையும், மிகவும் மர்மமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கும் காரியங்களையும் மற்றும் மனிதனால் கற்பனைச் செய்ய முடியாத மற்றும் வெறுமையான மனுஷர்களால் அடைய முடியாததாக உள்ள காரியங்களையும் மட்டுமே நேசிக்கின்றான். இந்தக் காரியங்கள் எந்தளவுக்கு யதார்த்தமில்லாதவையாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அவை ஜனங்களால் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன, மேலும் ஜனங்கள் மற்ற எல்லாவற்றையும் கவனிக்காமல் அவற்றைப் பின்தொடர்கிறார்கள், அவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். அவர்கள் எந்த அளவிற்கு அவை யதார்த்தமில்லாதவைகளாக இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு நெருக்கமாக ஜனங்கள் அவற்றை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்கிறார்கள், வெகுதொலைவிற்குச் சென்று தங்களைப் பற்றிய தங்களுடைய முழுமையான கருத்துக்களை உருவாக்குகிறார்கள். மாறாக, எந்த அளவிற்கு யதார்த்தமான காரியங்கள் உள்ளனவோ, அந்த அளவிற்கு புறக்கணிக்கப்பட்ட ஜனங்கள் அவர்கள் பக்கமாக உள்ளார்கள்; அவர்களிடத்தில் வெறுமனே தங்கள் முகத்தைச் சுருக்கி ஏளனமாகப் பார்க்கிறார்கள், மேலும் அவர்களை இழிவுபடுத்துகிறார்கள். இன்று நான் செய்யும் யதார்த்தமான கிரியையைப் பற்றிய உங்கள் துல்லியமான அணுகுமுறை இது இல்லையா? இது போன்ற காரியங்கள் எவ்வளவு அதிகமாக யதார்த்தமாக இருக்கின்றனவோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் அவற்றுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுகிறீர்கள். அவைகளை ஆராய நீங்கள் எந்த நேரத்தையும் செலவிடுவதில்லை, ஆனால் அவைகளை அப்படியே புறக்கணிக்கிறீர்கள்; இந்த யதார்த்தமான, சாதாரணமான கோரிக்கைளை நீங்கள் முகத்தைச் சுருக்கி இழிவாகப் பார்க்கிறீர்கள், மேலும் மிகவும் உண்மையான இந்த தேவனைப் பற்றிய எண்ணற்ற கருத்துக்களைக்கூட வைத்திருக்கிறீர்கள், அவருடைய யதார்த்தத்தையும் இயல்பையும் ஏற்றுக்கொள்ள இயலாது இருக்கிறீர்கள். இந்த வழியில், நீங்கள் தெளிவற்ற விசுவாசத்தைப் பிடித்துக் கொண்டிருக்கவில்லையா? கடந்த காலத்தின் தெளிவற்ற தேவன் மீது நீங்கள் அசைக்க முடியாத விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள், மேலும் இன்றைய உண்மையான தேவன் மீது உங்களுக்கு ஆர்வம் இல்லை. நேற்றைய தேவனும் இன்றைய தேவனும் இரு வேறு காலங்களிலிருந்து வந்தவர்கள் அல்லவா? நேற்றைய தேவன் பரலோகத்தில் உன்னத தேவனாக இருக்கிறார், அதேசமயம் இன்றைய தேவன் பூமியில் ஒரு சிறிய மனிதர் அல்லவா? மேலும், மனிதனால் ஆராதிக்கப்படும் தேவன் அவருடைய கருத்துக்களால் உருவாக்கப்பட்டவராக இருக்கிறார், அதே சமயம் இன்றைய தேவன் உண்மையான மாம்சத்தால், பூமியில் உருவாக்கப்படுகிறார் அல்லவா? எல்லாவற்றையும் பார்க்கும்போது, இன்றைய தேவன் மிகவும் உண்மையானவர் என்பதால் மனிதன் அவரைப் பின்தொடரவில்லை அல்லவா? இன்றைய தேவன் ஜனங்களிடம் துல்லியமாகக் கேட்பது ஜனங்கள் மிகவும் செய்ய விரும்பாததும், அவர்கள் வெட்கி நாணமடையக்கூடியதும் ஆகும். இது ஜனங்களுக்கு காரியங்களைக் கடினமாக்கவில்லையா? இது வெறுமையான ஜனங்களுக்கு வடுக்களை ஏற்படுத்தவில்லையா? இந்த வழியில், அநேகர் நடைமுறைத் தேவனாகிய மெய்த்தேவனைப் பின்பற்றுவதில்லை, அதனால் அவர்கள் மனுவுருவான தேவனுக்கு எதிரிகளாக, அதாவது அந்திக்கிறிஸ்துகளாக மாறுகிறார்கள். இது தெளிவான உண்மை அல்லவா? கடந்தகாலத்தில், தேவன் இன்னும் மாம்சமாக மாறியிராதபோது, நீ ஒரு மத பிரமுகராகவோ அல்லது பக்தியுள்ள விசுவாசியாகவோ இருந்திருக்கலாம். தேவன் மாம்சமாக மாறிய பிறகு, இது போன்ற அநேக பக்தியுள்ள விசுவாசிகள் அறியாமலேயே அந்திக்கிறிஸ்துகளாக மாறினார்கள். இங்கே என்ன நடக்கிறது என்பது உனக்குத் தெரியுமா? தேவன் மீதான உன் விசுவாசத்தில், நீ யதார்த்தத்தில் கவனம் செலுத்தவில்லை அல்லது சத்தியத்தைப் பின்தொடரவில்லை, மாறாகப் பொய்யானவைகள் மீது மூர்க்கவெறி கொண்டிருக்கிறாய்—இது மாம்சமான தேவனிடம் உனக்குள்ள பகைமையின் தெளிவான ஆதாரமல்லவா? மாம்சமான தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், எனவே மாம்சமான தேவனை விசுவாசிக்காத அனைவரும் அந்திக்கிறிஸ்துக்கள் அல்லவா? ஆகவே, நீ மாம்சமான இந்த தேவனை உண்மையாக அன்பு செய்து விசுவாசிக்கிறாயா? மிகவும் உண்மையாகவும் விசேஷித்த இயல்புமாய் இருக்கிற தேவன் ஜீவனும் சுவாசமுமாய் உண்மையில் இருக்கிறாரா? உன் பின்தொடர்தலுக்கான மிகச் சரியான நோக்கம் என்ன? இது பரலோகத்தில் உள்ளதா அல்லது பூமியில் உள்ளதா? இது ஒரு கருத்தா அல்லது இது ஒரு சத்தியமா? இது தேவனா அல்லது இது சற்று இயற்கைக்கு அப்பாற்பட்டதா? உண்மையில், சத்தியம் என்பது வாழ்க்கைக்கான பழமொழிகளில் மிகவும் உண்மையானதாகவும், மேலும் முழு மனிதகுலத்திடமும் இதுபோன்ற பழமொழிகளில் மிக உயர்ந்ததாகவும் இருக்கிறது. ஏனென்றால், தேவன் மனிதனை உருவாக்க இது தேவையாய் இருக்கிறது, மேலும் இது தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்படும் கிரியை, எனவே இது "வாழ்க்கைக்கான பழமொழி" என்று அழைக்கப்படுகிறது. இது ஏதோவொன்றிலிருந்து சுருக்கமாக உரைக்கப்பட்ட ஒரு பழமொழியும் அல்ல, ஒரு சிறந்த மனிதரின் பிரபலமான மேற்கோளும் அல்ல. மாறாக, வானத்திற்கும் பூமிக்கும் மற்றும் சகல காரியங்களுக்கும் எஜமானராகியவரிடமிருந்து மனிதகுலத்திற்காக உரைக்கப்பட்ட வார்த்தையாக இது இருக்கிறது; இது மனிதனால் சுருக்கமாக உரைக்கப்பட்ட சில வார்த்தைகள் அல்ல, ஆனால் தேவனுடைய இயல்பான ஜீவனாக இருக்கிறது. எனவே இது "சகல ஜீவன்களின் பழமொழிகளிலும் மிக உயர்ந்தது" என்று அழைக்கப்படுகிறது. சத்தியத்தைக் கடைப்பிடிப்பதற்கான ஜனங்களின் பின்தொடர்தல் அவர்களின் கடமையைச் செய்வதாக இருக்கிறது—அதாவது இது தேவனின் தேவையைத் திருப்திப்படுத்துவதற்கான பின்தொடர்தலாகும். எந்தவொரு மனிதனும் அடையமுடியாத வெற்று கோட்பாட்டைக் காட்டிலும், இந்தத் தேவையின் சாராம்சம் அனைத்து சத்தியங்களிலும் மிகவும் உண்மையானது. உன் பின்தொடர்தல் கோட்பாட்டளவிலும் யதார்த்தமில்லாமலும் இருந்தால், நீ சத்தியத்திற்கு எதிராகக் கலகம் செய்யவில்லையா? நீ சத்தியத்தைத் தாக்கும் ஒருவன் அல்லவா? அத்தகைய ஒரு நபர் தேவனை நேசிக்க விரும்பும் ஒருவராக எவ்வாறு இருக்க முடியும்? யதார்த்தமில்லாத ஜனங்கள் சத்தியத்தைக் காட்டிக்கொடுப்பவர்கள், மேலும் அவர்கள் அனைவரும் இயல்பாகவே கலகக்காரர்களுமாக இருக்கிறார்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனையும் அவருடைய கிரியையையும் அறிந்தவர்களால் மட்டுமே தேவனைத் திருப்திப்படுத்த முடியும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க