தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 150
தேவன் முதலில் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார், பின்னர் அவர் ஒரு சர்ப்பத்தையும் படைத்தார். எல்லாவற்றைக் காட்டிலும், இந்த சர்ப்பம் மிகுந்த...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
இன்று, பெரும்பாலான ஜனங்களுக்கு அந்த அறிவு இருப்பதில்லை. துன்பப்படுவதற்கு மதிப்பில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள், அவர்கள் உலகத்தால் கைவிடப்படுகிறார்கள், அவர்களின் குடும்ப வாழ்க்கை கலக்கமடைகிறது, அவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்களாக இருப்பதில்லை, அவர்களின் வாய்ப்புகள் இருண்டவையாக இருக்கின்றன. சிலரின் துன்பம் ஒரு தீவிரத்தை அடைகிறது, அவர்களின் எண்ணங்கள் மரணமாக மாறுகின்றன. இது தேவன் மீதான உண்மையான அன்பு அல்ல; அத்தகையவர்கள் கோழைகள், அவர்களுக்கு விடாமுயற்சி இருப்பதில்லை, அவர்கள் பலவீனமானவர்கள், சக்தியற்றவர்கள்! மனுஷன் தன்னை நேசிக்க வேண்டுமென தேவன் ஆவலாக உள்ளார், ஆனால் மனுஷன் எவ்வளவு அதிகமாக தேவனை நேசிக்கிறானோ, அந்தளவிற்கு அவன் துன்பப்படுகிறான், மனுஷன் எவ்வளவு அதிகமாக தேவனை நேசிக்கிறானோ, அந்தளவிற்கு அவனுக்கு உபத்திரவங்கள் இருக்கின்றன. நீ அவரை நேசிக்கிறாய் என்றால், ஒவ்வொரு விதமான துன்பமும் உனக்கு ஏற்படும்—நீ அவரை நேசிக்காவிட்டால், உனக்கு எல்லாமே சுமுகமாக நடக்கும், உன்னைச் சுற்றி அனைத்தும் அமைதியாக இருக்கும். நீ தேவனை நேசிக்கும்போது, உன்னைச் சுற்றியுள்ளவை வெல்ல முடியாதவை என்பதை நீ உணருவாய், மேலும் உனது வளர்ச்சி மிகச் சிறியதாக இருப்பதால் நீ சுத்திகரிக்கப்படுவாய்; மேலும், உன்னால் தேவனை திருப்திப்படுத்த இயலாது, மேலும் தேவனின் சித்தம் மிக உயர்ந்தது, அதை மனுஷனால் எட்ட முடியாது என்பதை நீ எப்போதும் உணருவாய். இவை அனைத்தின் காரணமாகவும் நீ சுத்திகரிக்கப்படுவாய்—உனக்குள் அதிக பலவீனம் இருப்பதாலும், மேலும் தேவனுடைய சித்தத்தை உன்னால் நிறைவேற்ற முடியாது என்பதாலும், நீ உனக்குள் சுத்திகரிக்கப்படுவாய். ஆயினும் புடமிடுதல் மூலம் மட்டுமே தூய்மையானது அடையப்படுகிறது என்பதை நீ தெளிவாகக் காண வேண்டும். எனவே, இந்தக் கடைசிக் காலத்தில் நீ தேவனுக்கு சாட்சி கொடுக்க வேண்டும். உனது துன்பம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நீ இறுதி வரை நடக்க வேண்டும், உனது கடைசி மூச்சிலும் கூட, நீ தேவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மேலும் தேவனின் திட்டமிடலுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்; இதுதான் உண்மையிலேயே தேவனை நேசிப்பதாகும், இது மட்டுமே வலுவான மற்றும் உறுதியான சாட்சியம் ஆகும். நீ சாத்தானால் சோதிக்கப்படும்போது, நீ, "என் இருதயம் தேவனுக்குச் சொந்தமானது, தேவன் ஏற்கெனவே என்னை ஆதாயப்படுத்தியிருக்கிறார். என்னால் உன்னைத் திருப்திப்படுத்த முடியாது—தேவனைத் திருப்திப்படுத்துவதற்காக நான் என்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்," என்று கூற வேண்டும். நீ எவ்வளவு அதிகமாக தேவனை திருப்திப்படுத்துகிறாயோ, அவ்வளவு அதிகமாக தேவன் உன்னை ஆசீர்வதிப்பார், மேலும் தேவன் மீதான உனது அன்பின் வலிமையும் அதிகமாகும்; ஆகவே, நீ விசுவாசத்தையும் மனவலிமையையும் பெறுவாய், மேலும் தேவனை நேசிப்பதால் கழிந்த ஜீவிதத்தை விட வேறு எதுவும் தகுதியானதாகவோ அல்லது முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ இல்லை என்று உணருவாய். மனுஷன் தேவனை நேசிக்கும் வரை, அவன் துக்கம் இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறலாம். உனது மாம்சம் பலவீனமடைந்து, பல உண்மையான கஷ்டங்களில் நீ சிக்கித் தவிக்கும் காலநேரங்கள் இருந்தாலும், இப்படிப்பட்ட காலங்களில் நீ உண்மையிலேயே தேவனை நம்பியிருப்பாய், உனது ஆவிக்குள் நீ ஆறுதலடைவாய், மேலும் நீ சார்ந்திருக்க ஏதோ இருக்கிறதென்று உறுதியாக உணருவாய். இவ்வாறாக, உன்னால் பல சூழல்களை வெல்ல முடியும், எனவே நீ அனுபவிக்கும் வேதனையின் காரணமாக நீ தேவனைப் பற்றி குறைகூற மாட்டாய். அதற்குப் பதிலாக, நீ பாடுவதற்கும், நடனமாடுவதற்கும், ஜெபிப்பதற்கும், ஒன்றுகூடுவதற்கும், தொடர்புகொள்வதற்கும், தேவனைப் பற்றி சிந்தனை செய்யவும் விரும்புவாய், மேலும் தேவனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உன்னைச் சுற்றியுள்ள எல்லா ஜனங்களும், காரியங்களும், விஷயங்களும் பொருத்தமானவை என்பதை நீ உணருவாய். நீ தேவனை நேசிக்காவிட்டால், நீ பார்க்கும் அனைத்தும் உனக்குத் தொந்தரவாக இருக்கும், மேலும் உனது கண்களுக்கு எதுவுமே மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்காது; உனது ஆவியில் நீ விடுதலையோடு இருக்க மாட்டாய் அதற்குப்பதிலாக ஒடுக்கப்படுவாய், உனது இருதயம் எப்போதும் தேவனைப் பற்றி குறைசொல்லும், மேலும் நீ இவ்வளவு வேதனையை அனுபவிக்கிறாய், அது மிகவும் அநியாயமானது என்பதை நீ எப்போதும் உணருவாய். நீ மகிழ்ச்சிக்காகக் கடைப்பிடிக்காமல் தேவனைத் திருப்திப்படுத்தவும், சாத்தானால் குற்றம் சாட்டப்படாமலும் இருக்க வேண்டும் என்பதற்காகக் கடைப்பிடித்தால், அத்தகைய கடைப்பிடித்தலானது தேவனை நேசிக்க உனக்கு பெரும் பலத்தைத் தரும். தேவனால் பேசப்படும் அனைத்தையும் மனுஷனால் செயல்படுத்த முடிகிறது, மேலும் அவன் செய்யும் அனைத்து விஷயங்களாலும் தேவனை திருப்திப்படுத்த முடிகிறது—இதுதான் யதார்த்தத்தை வைத்திருப்பதன் அர்த்தமாக இருக்கிறது. தேவனின் திருப்தியைக் கடைப்பிடிப்பது என்றால் தேவன் மீதான உனது அன்பைப் பயன்படுத்தி அவருடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதாகும்; நேரத்தைப் பொருட்படுத்தாமல்—மற்றவர்கள் பலமில்லாமல் இருக்கும்போதும் கூட—உனக்குள்ளே தேவனை நேசிக்கும் ஒரு இருதயம் இன்னும் இருக்கிறது, அந்த இருதயமானது தேவனுக்காக ஆழமாக ஏங்குகிறது மற்றும் தவிக்கிறது. இதுவே உண்மையான வளர்ச்சியாகும். உனது வளர்ச்சி எவ்வளவு பெரியது என்பது தேவனுக்கான உனது அன்பு எவ்வளவு பெரியதாக இருக்கிறது, சோதனை செய்யப்படும்போது உன்னால் உறுதியாக நிற்க முடிகிறதா, ஒரு குறிப்பிட்டச் சூழல் உன் மீது வரும்போது நீ பலவீனமாக இருக்கிறாயா, உனது சகோதர சகோதரிகள் உன்னை நிராகரிக்கும்போது உன்னால் நிலையாக நிற்க முடிகிறதா என்பதைப் பொறுத்ததாக இருக்கிறது; உண்மைகளின் வருகை தேவன் மீதான உனது அன்பு எப்படி இருக்கும் என்பதைக் காண்பிக்கும். மனுஷனுடைய ஆவிக்குரிய கண்கள் இன்னும் முழுமையாகத் திறக்கப்படவில்லை என்றாலும், தேவனின் பெரும்பாலான கிரியைகளையும், அவருடைய சித்தத்தையும், அல்லது தேவனைப் பற்றிய பல அழகான விஷயங்களையும் அவனால் தெளிவாகக் காண முடியவில்லை என்றாலும், தேவன் உண்மையிலேயே மனுஷனை நேசிக்கிறார் என்பதை தேவனின் பெரும்பாலான கிரியைகளிலிருந்து காணமுடிகிறது; தேவன் மீதான மனுஷனின் உண்மையான அன்பு மிகக் குறைவாக இருக்கிறது. நீ இவ்வளவு காலமாக தேவனை விசுவாசித்திருக்கிறாய், இன்று தேவன் நீ தப்பிப்பதற்கான எல்லா வழிகளையும் துண்டித்துவிட்டிருக்கிறார். யதார்த்தமாகச் சொல்வதானால், சரியான பாதையை தெரிந்துகொள்வதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை, இந்தச் சரியான பாதையானது கடுமையான நியாயத்தீர்ப்பு மற்றும் தேவனின் உயர்ந்த இரட்சிப்பால் உன்னை வழிநடத்திய பாதையாகும். கஷ்டத்தையும் புடமிடுதலையும் அனுபவித்த பின்னரே தேவன் அழகானவர் என்பது மனுஷனுக்குத் தெரிகிறது. இன்று வரை அனுபவித்த நிலையில், தேவனுடைய சௌந்தர்யத்தின் ஒரு பகுதியை மனுஷன் அறிந்திருக்கிறான் என்று கூறலாம், ஆனால் இது இன்னும் போதாது, ஏனென்றால் மனுஷன் மிகவும் குறைபாடுள்ளவனாக இருக்கிறான். தேவனின் அற்புதமான கிரியையை மனுஷன் அதிகம் அனுபவிக்க வேண்டும், மேலும் தேவன் ஏற்பாடு செய்த துன்பங்களின் புடமிடுதலையும் மனுஷன் அனுபவிக்க வேண்டும். அப்போதுதான் மனுஷனின் ஜீவித மனநிலை மாறும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "வேதனைமிகுந்த உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் மட்டுமே தேவனின் அன்பை உன்னால் அறிந்துகொள்ள முடியும்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
தேவன் முதலில் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார், பின்னர் அவர் ஒரு சர்ப்பத்தையும் படைத்தார். எல்லாவற்றைக் காட்டிலும், இந்த சர்ப்பம் மிகுந்த...
மற்றவர்களை சந்தேகிக்காதவர்களிடத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், மற்றும் சத்தியத்தை உடனடியாக ஏற்றுக்கொள்பவர்களே எனக்கு வேண்டும். இந்த இரண்டு...
ஜனங்கள் செய்ய வேண்டிய பல கடமைகளை அவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதைத்தான் ஜனங்கள் கடைப்பிடிக்க வேண்டும், இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும்....
கிருபையின் யுகம் இயேசுவின் நாமத்துடன் தொடங்கியது. இயேசு தம்முடைய ஊழியத்தைச் செய்யத் தொடங்கியபோது, பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்திற்கு...