தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 320

மார்ச் 21, 2023

மற்றவர்களை சந்தேகிக்காதவர்களிடத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், மற்றும் சத்தியத்தை உடனடியாக ஏற்றுக்கொள்பவர்களே எனக்கு வேண்டும். இந்த இரண்டு விதமான ஜனங்களை நோக்கி நான் மிகுந்த அக்கறை காட்டுகிறேன், ஏனென்றால் என் பார்வையில் அவர்கள் நேர்மையான ஜனங்கள். நீ வஞ்சகனாக இருந்தால், நீ எல்லா மக்களிடமும் காரியங்களிடமும் எச்சரிக்கையாக இருப்பாய், சந்தேகப்படுவாய், இதனால் என் மீது உன் விசுவாசம் சந்தேகம் என்னும் அஸ்திபாரத்தின் மீது கட்டப்பட்டிருக்கும். அத்தகைய விசுவாசத்தை என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையான விசுவாசத்தின் குறைபாட்டால், நீ உண்மையான அன்பிலிருந்து இன்னும் அதிகமாக விலகிவிட்டாய். தேவனைச் சந்தேகிக்கவும், அவரைப் பற்றி விருப்பப்படி ஊகிக்கவும் நீ ஆளாகிறாய் என்றால், நீ சந்தேகமின்றி, எல்லா ஜனங்களைக் காட்டிலும் மிகவும் வஞ்சகனாக இருக்கிறாய். மன்னிக்க முடியாத பாவம், அற்பமான குணம், நியாயமும் பகுத்தறிவும் இல்லாமை, நீதி உணர்வு இல்லாமை, பொல்லாத தந்திரங்களைக் கொண்டிருத்தல், துரோகம் மற்றும் கபடம், தீமை மற்றும் இருள் ஆகியவற்றால் மகிழ்தல், மற்றும் பலவற்றால் தேவன் மனிதனைப் போல இருக்க முடியுமா என்று நீ ஊகிக்கிறாய். ஜனங்களுக்கு இத்தகைய எண்ணங்கள் இருப்பதற்கு தேவனைக் குறித்த சிறிதளவு அறிவும் இல்லாததே காரணம் இல்லையா? இத்தகைய விசுவாசம் பாவத்திற்குக் குறைவானதல்ல! என்னைப் பிரியப்படுத்துபவர்கள் துல்லியமாக முகஸ்துதி செய்து தன் காரியத்திற்காகக் கெஞ்சுபவர்கள் என்றும், அத்தகைய திறமைகள் இல்லாதவர்கள் தேவனின் வீட்டில் வரவேற்கப்படாதவர்களாக இருப்பார்கள் என்றும், அங்கே தங்கள் இடத்தை இழக்க நேரிடும் என்றும் சிலர் நம்புகிறார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு நீங்கள் பெற்ற அறிவு இது மட்டும் தானா? இதைத்தான் நீங்கள் பெற்றுள்ளீர்களா? என்னைக் குறித்த உங்கள் அறிவு இந்தத் தவறான புரிதல்களோடு நிற்காது. தேவனின் ஆவியானவருக்கு எதிரான உங்கள் தூஷணமும் பரலோகத்தை இழிவுபடுத்துவதும் இன்னும் மோசமானது. இதனால்தான், உங்களுடையதைப் போன்ற விசுவாசம் உங்களை என்னிடமிருந்து மேலும் விலகக் காரணமாகி, எனக்கு எதிராக அதிக எதிர்ப்பாக இருக்கும் என்று நான் சொல்கிறேன். அநேக வருடங்களாக செய்த கிரியை முழுவதுமாக, நீங்கள் அநேக சத்தியங்களைக் கண்டிருக்கிறீர்கள், ஆனால் என் காதுகள் கேட்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்களில் எத்தனை பேர் சத்தியத்தை ஏற்கத் தயாராக இருக்கிறார்கள்? நீங்கள் சத்தியத்திற்கான விலைக்கிரயத்தைச் செலுத்தத் தயாராக உள்ளீர்கள் என்று நீங்கள் அனைவரும் விசுவாசிக்கிறீர்கள், ஆனால் உங்களில் எத்தனை பேர் சத்தியத்திற்காக உண்மையிலேயே துன்பப்பட்டிருக்கிறீர்கள்? உங்கள் இருதயங்களில் அநீதியைத் தவிர வேறொன்றுமில்லை, இது எல்லோரும், அவர்கள் யாராக இருந்தாலும் சமமாக வஞ்சகர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், மனுவுருவான தேவன் ஒரு சாதாரண மனிதனைப் போலவே அன்பான இருதயம் அல்லது கருணைமிக்க அன்பு இல்லாமல் இருக்க முடியும் என்ற அளவிற்குக் கூட நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அதற்கும் மேலாக, ஒரு உன்னத குணமும், இரக்கமுள்ள, கருணைமிக்க இயல்பும் பரலோகத்தில் உள்ள தேவனுக்குள் மட்டுமே இருப்பதாக நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அத்தகைய ஒரு பரிசுத்தவான் இல்லை, பூமியில் இருளும் தீமையும் மட்டுமே ஆட்சி செய்கின்றன, அதே சமயம் ஜனங்கள் தங்களால் உருவாக்கப்பட்ட நல்ல அழகான, பிரபலமான நபருக்கான ஏக்கத்தை ஒப்படைப்பதே தேவன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். உங்கள் மனதில், பரலோகத்தில் உள்ள தேவன் மிகவும் உயர்ந்தவர், நீதியுள்ளவர், பெரியவர், தொழுதுகொள்வதற்கும் போற்றுதலுக்கும் தகுதியானவராக இருக்கிறார். இதற்கிடையில், பூமியிலுள்ள இந்த தேவன், பரலோகத்தில் உள்ள தேவனுக்கு மாற்றாகவும் கருவியாகவும் இருக்கிறார். இந்த தேவன் பரலோகத்தின் தேவனுக்குச் சமமாக இருக்க முடியாது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், அவரை அதே சுவாசம் என்று குறிப்பிடவும் முடியாது. தேவனின் மகத்துவம் மற்றும் மரியாதை என்று வரும்போது, அவை பரலோகத்திலுள்ள தேவனின் மகிமைக்கு உரியவை, ஆனால் அது இயல்பு மற்றும் மனிதனின் சீர்கேடு என்று வரும்போது, அவை பூமியில் உள்ள தேவனுக்கு ஒரு பங்கைக் கொண்டிருக்கும் பண்புகளாகும். பரலோகத்தில் உள்ள தேவன் நித்தியமாக உயர்ந்தவர், அதே நேரத்தில் பூமியில் உள்ள தேவன் என்றென்றும் முக்கியமற்றவர், பலவீனமானவர், திறமையற்றவர். பரலோகத்தில் உள்ள தேவன் உணர்ச்சிக்கு ஆளாகாமல் நீதியுடன் மட்டுமே இருக்கிறார், அதே நேரத்தில் பூமியில் உள்ள தேவன் சுயநலமான நோக்கங்களை மட்டுமே கொண்டிருக்கிறார், எந்த நியாயமும் பகுத்தறிவும் இல்லாமல் இருக்கிறார். பரலோகத்தில் உள்ள தேவனுக்கு சிறிதளவும் கபடத்தனம் இல்லை, என்றென்றும் உண்மையுள்ளவர், பூமியில் உள்ள தேவன் எப்போதும் நேர்மையற்ற பகுதியைக் கொண்டிருக்கிறார். பரலோகத்தில் உள்ள தேவன் மனிதனை மிகவும் நேசிக்கிறார், அதே நேரத்தில் பூமியில் உள்ள தேவன் மனிதன் மீது போதிய அக்கறை காட்டவில்லை, அவனை முற்றிலுமாக புறக்கணிக்கவும் செய்கிறார். இந்தத் தவறான அறிவு நீண்ட காலமாக உங்கள் இருதயங்களுக்குள் வைக்கப்பட்டுள்ளது, மேலும் இது எதிர்காலத்திலும் நிலைத்திருக்கக்கூடும். நீங்கள் கிறிஸ்துவின் அனைத்து கிரியைகளையும் அநியாயக்காரர்களின் நிலைப்பாட்டில் இருந்து பார்க்கிறீர்கள், மேலும் அவருடைய எல்லாக் கிரியைகளையும், அவருடைய அடையாளத்தையும் சாராம்சத்தையும் துன்மார்க்கரின் கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்கிறீர்கள். நீங்கள் உங்களுக்கு முன் வருபவர்களால் செய்யப்படாத ஒரு கடுமையான தவறைச் செய்துள்ளீர்கள். அதாவது, நீங்கள் பரலோகத்திலுள்ள உயர்ந்த தேவனுக்கு மட்டுமே தலையில் கிரீடம் வைத்து ஊழியம் செய்கிறீர்கள், மிகவும் முக்கியமற்றவராக நீங்கள் கருதும் உங்களால் பார்க்க முடியாத தேவனை நீங்கள் எப்போதும் கவனிப்பதில்லை. இது உங்களுடைய பாவம் அல்லவா? தேவனின் மனநிலைக்கு எதிரான உங்கள் மீறுதலுக்கு இது ஒரு சிறந்த உதாரணம் அல்லவா? நீங்கள் பரலோகத்திலுள்ள தேவனை ஆராதிக்கின்றீர்கள். நீங்கள் உயர்ந்த சொரூபங்களை வணங்குகிறீர்கள், அவர்களின் சொல்லாற்றலுக்காகப் புகழ்பெற்றவர்களை மதிக்கிறீர்கள். உன் கைகளைச் செல்வங்களால் நிரப்புகிற தேவனால் நீ மகிழ்ச்சியுடன் கட்டளையிடப்படுகிறாய், மேலும் உன் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றக்கூடிய தேவனுக்காக ஏங்குகிறாய். இந்த உயர்ந்தவர் அல்லாதவரே நீ வணங்காத ஒரே தேவன் ஆவார். நீங்கள் வெறுக்கிற ஒரே காரியம், எந்த மனிதனும் உயர்வாகக் கருதாத இந்தத் தேவனோடு இணைந்திருப்பதுதான். நீ செய்ய விரும்பாத ஒரே காரியம், உனக்கு ஒருபோதும் ஒரு காசும் கொடுக்காத இந்த தேவனைச் சேவிப்பதே ஆகும், மேலும் உன்னை அவருக்காக ஏங்க வைக்க முடியாத ஒரே ஒருவர் இந்த அன்பற்ற தேவன் ஆவார். இந்த வகையான தேவனால் உன் எல்லைகளை விரிவுபடுத்தவும், நீ ஒரு புதையலைக் கண்டுபிடித்ததைப் போல உணர வைக்கவும், நீ விரும்புவதை நிறைவேற்றவும் முடியாது. அப்படியானால், நீ அவரை ஏன் பின்பற்றுகிறாய்? இது போன்ற கேள்விகளைப் பற்றி நீ சிந்தித்திருக்கிறாயா? நீ செய்வது இந்தக் கிறிஸ்துவைப் புண்படுத்தாது. மிக முக்கியமாக, அது பரலோகத்தில் உள்ள தேவனைப் புண்படுத்துகிறது. இது தேவன் மீதான உங்கள் விசுவாசத்தின் நோக்கம் அல்ல என்று நான் நினைக்கிறேன்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "பூமியில் தேவனை அறிந்துகொள்வது எப்படி" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க