தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 26
வார்த்தைகளைப் பேசுவதே கடைசிக் காலத்தின் கிரியையாகும். வார்த்தைகளின் மூலம் கூட மனுஷனில் பெரிய மாற்றங்களைச் செய்யலாம். இந்த வார்த்தைகளை...
தேவன் தோன்றுவதைக் காண ஏங்கும் அனைவரையும் வரவேற்கிறோம்!
பெரும்பாலான ஜனங்கள் தங்கள் எதிர்கால இலக்கிற்காக அல்லது தற்காலிக இன்பத்திற்காக தேவனை விசுவாசிக்கிறார்கள். எந்தவொரு கையாளுதலுக்கும் உட்படுத்தப்படாதவர்கள் பரலோகத்திற்குள் பிரவேசிப்பதற்காகவும் வெகுமதிகளைப் பெறுவதற்காகவும் தேவனை விசுவாசிக்கிறார்கள். அவர்கள் பரிபூரணப்படுத்தப்படுவதற்காகவோ அல்லது தேவனுடைய சிருஷ்டியாகத் தங்கள் கடமையைச் செய்வதற்காகவோ அவர்கள் தேவனை விசுவாசிப்பதில்லை. அதாவது, பெரும்பாலான ஜனங்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகவோ அல்லது தங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காகவோ தேவனை விசுவாசிப்பதில்லை. அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்காக ஜனங்கள் தேவனை விசுவாசிப்பதுமில்லை அல்லது மனிதன் உயிருடன் இருப்பதால், அவன் தேவனை நேசிக்க வேண்டும் என்று விசுவாசிப்பவர்களும் இல்லை. ஏனென்றால் அவ்வாறு செய்யப்படுவதற்காக அது பரலோகத்தால் நியமிக்கப்பட்டு பூமியால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது மனிதனின் இயல்பான தொழில். இவ்வாறு, வெவ்வேறு மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது சொந்தக் குறிக்கோள்களைப் பின்தொடர்ந்தாலும், அவர்களுடைய பின்தொடர்தலின் நோக்கம் மற்றும் அதன் பின்னால் உள்ள உந்துதல் அனைத்தும் ஒரே மாதிரியானவையாகும். மேலும் என்னவென்றால், அவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்களுடைய வழிபாட்டின் நோக்கங்கள் ஒரே மாதிரியானவை ஆகும். கடந்த பல ஆயிரம் ஆண்டுகளில், பல விசுவாசிகள் இறந்துவிட்டார்கள். பலர் இறந்து மீண்டும் பிறந்திருக்கிறார்கள். ஒன்று இரண்டு மனிதர்கள் அல்லது ஓராயிரம் அல்லது ஈராயிரம் மனிதர்கள் தேவனைத் தேடுவது மட்டுமின்றி, பெரும்பாலானோர் தங்கள் சொந்த வாய்ப்புகளுக்காகவோ எதிர்காலத்திற்கான அவர்களுடைய மகிமையான நம்பிக்கைகளுக்காகவோ தேவனைப் பின்பற்றுகிறார்கள். கிறிஸ்துவின் மீது பக்தியுள்ளவர்கள் மிகக் குறைவானவர்கள். இன்னும் பல பக்தியுள்ள விசுவாசிகள் தங்கள் வலைகளிலேயே சிக்கி இறந்திருக்கின்றனர். மேலும், ஜெயம்பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகும். இன்றுவரை, ஜனங்களுக்கு அவர்கள் தோல்வியடைவதற்கான காரணங்கள் அல்லது அவர்களுடைய ஜெயத்தின் ரகசியங்கள் இன்னும் தெரியவில்லை. கிறிஸ்துவைத் தேடுவதில் வெறித்தனமானவர்களுக்கு இன்னும் திடீர் நுண்ணறிவைப் பெறும் கணம் வரவில்லை. அவர்கள் இந்த இரகசியங்களின் அடிப்புறத்திற்கு இன்னும் வரவில்லை. ஏனென்றால், அவர்களுக்கு அதைப் பற்றித் தெரியவில்லை. அவர்கள் தங்கள் பின்தொடர்தல் கடினமான முயற்சிகளை மேற்கொண்டாலும், அவர்கள் நடந்து செல்லும் பாதையானது அவர்கள் முன்னோர்கள் முன்பு நடந்து சென்ற தோல்வியின் பாதையாகவே இருக்கிறது. அது ஜெயத்தின் பாதை அல்ல. இவ்வாறு, அவர்கள் எப்படித் தேடுகிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் இருளுக்கு வழிவகுக்கும் பாதையில் நடக்கிறார்கள் அல்லவா? அவர்கள் பெறுவது கசப்பான பழமல்லவா? கடந்த காலங்களில் ஜெயம் பெற்றவர்களைப் பின்பற்றும் ஜனங்கள் இறுதியில் செல்வத்தைப் பெறுவார்களா அல்லது பேரழிவுக்கு வருவார்களா என்று கணிப்பது கடினமாகும். அப்படியானால், தோல்வியுற்றவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் மூலம் தேடும் ஜனங்களின் சிக்கல்கள் எவ்வளவு மோசமானதாக இருக்கும்? தோல்வி அடைவதற்கான இன்னும் பெரிய வாய்ப்பில் அவர்கள் நிற்கவில்லையா? அவர்கள் நடந்து செல்லும் பாதைக்கான மதிப்பு என்னவாக இருக்கிறது? அவர்கள் நேரத்தை வீணடிக்கவில்லையா? சுருக்கமாகச் சொல்வதானால், ஜனங்கள் தங்கள் முயற்சியில் ஜெயம் பெறுகிறார்களா அல்லது தோல்வியடைகிறார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் அவ்வாறு செய்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள் விருப்பம் போல தேடுவதன் மூலம் அவர்களுடைய ஜெயம் அல்லது தோல்வி தீர்மானிக்கப்படுவதில்லை.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயமானாலும் தோல்வியானாலும் அது மனிதன் நடந்து செல்லும் பாதையைப் பொறுத்ததாகும்” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
வார்த்தைகளைப் பேசுவதே கடைசிக் காலத்தின் கிரியையாகும். வார்த்தைகளின் மூலம் கூட மனுஷனில் பெரிய மாற்றங்களைச் செய்யலாம். இந்த வார்த்தைகளை...
தேவனுக்கு பயப்படாமல் தீமையைத் தவிர்க்காமல் இருப்பது தேவனை எதிர்ப்பதாகும் இந்த நாட்களில் நீங்கள் தேவனை நேருக்கு நேர் பார்க்கிறீர்கள்,...
மனுஷனின் பாரம்பரியக் கருத்துக்களில், தேவனின் அன்பு என்பது அவருடைய கிருபை, இரக்கம் மற்றும் மனுஷனின் பலவீனத்திற்கான அனுதாபம் ஆகியவைதான் என்று...
இந்த உலகத்திற்கு வருகின்ற அனைவரும் வாழ்க்கையையும் மரணத்தையும் கட்டாயம் கடந்து செல்ல வேண்டும். அவர்களில் பெரும்பாலானோர் மரணம் மற்றும்...