தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 26

பிப்ரவரி 25, 2021

வார்த்தைகளைப் பேசுவதே கடைசிக் காலத்தின் கிரியையாகும். வார்த்தைகளின் மூலம் கூட மனுஷனில் பெரிய மாற்றங்களைச் செய்யலாம். இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்த ஜனங்களில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கிருபையின் யுகத்தில் அடையாளங்களையும் அதிசயங்களையும் ஏற்றுக்கொண்டதால் அந்த ஜனங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்களை விட மிக அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், கிருபையின் யுகத்தில், கைகளை வைப்பதன் மூலமும் ஜெபம் செய்வதன் மூலமும் மனுஷனிடமிருந்து பிசாசுகள் விரட்டப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருந்த சீர்கெட்ட மனநிலை இன்னும் அப்படியே இருந்தது. மனுஷன் நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டு, அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருக்கும் சீர்கெட்ட சாத்தானியை மனநிலையிலிருந்து எவ்வாறு அவன் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டால், இந்தக் கிரியையை இனிமேல் தான் செயல்படுத்தப்படவேண்டியதாக இருக்கும். மனுஷன் அவனது விசுவாசத்திற்காக இரட்சிக்கப்பட்டான், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனின் பாவ இயல்பு அழிக்கப்படவில்லை, அது இன்னும் அவனுக்குள் இருக்கிறது. மனுஷனின் பாவங்கள் மாம்சமான தேவன் மூலம் மன்னிக்கப்பட்டன, ஆனால் இதற்கு மனுஷனுக்குள் இனியும் பாவம் இருக்காது என்று அர்த்தமல்ல. மனுஷனின் பாவங்களைப் பாவ நிவாரணப்பலி மூலம் மன்னிக்க முடியும், ஆனால் எப்படி மனுஷனை இனிமேல் பாவம் செய்ய வைக்க முடியாதோ, எப்படி அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு மாற்றப்படலாமோ, அதேபோல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவனுக்கு வழி இல்லை. மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, இதற்குத் தேவனின் சிலுவையில் அறையப்பட்ட கிரியையே காரணமாகும், ஆனால் மனுஷன் தனது பழைய சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலேயே தொடர்ந்து ஜீவித்தான். இது அவ்வாறு இருப்பதால், மனுஷன் அவனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலிருந்து முற்றிலுமாக இரட்சிக்கப்பட வேண்டும், இதனால் அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீண்டும் ஒருபோதும் உருவாகாது, இதன் மூலம் மனுஷனின் மனநிலையை மாற்ற முடியும். இதற்கு ஜீவ வளர்ச்சியின் பாதையை மனுஷன் புரிந்து கொள்ள வேண்டும், ஜீவ வழியைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அவனது மனநிலையை மாற்றுவதற்கான வழியை அவன் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பாதைக்கு ஏற்ப மனுஷன் செயல்பட வேண்டும், இதனால் அவனது மனநிலை படிப்படியாக மாற்றப்பட்டு, வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ் ஜீவித்து, அவன் செய்யும் அனைத்தும் தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப இருந்து, அவன் தனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையை அகற்றி, சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, அதன் மூலம் பாவத்திலிருந்து முழுமையாக வெளியேறுவான். அப்போதுதான் மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெறுவான். இயேசு தமது கிரியையைச் செய்துகொண்டிருந்த நேரத்தில், அவரைப் பற்றிய மனுஷனின் அறிவுத் தெளிவற்றதாகவும் விளங்காததாகவும் இருந்தது. மனுஷன் எப்போதும் அவரை தாவீதின் குமாரன் என்று நம்பினான், அவரை ஒரு பெரிய தீர்க்கதரிசி என்று அறிவித்தான், மனுஷனின் பாவங்களை மீட்டெடுத்த கிருபையுள்ள தேவன் என்று விசுவாசித்தான். சிலர், தங்கள் விசுவாசத்தின் பலத்தில், அவருடைய ஆடையின் விளிம்பைத் தொடுவதிலிருந்தே குணமடைந்தார்கள்; குருடர்களால் பார்க்க முடிந்தது, இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்க முடிந்தது. இருப்பினும், மனுஷன் தனக்குள்ளேயே ஆழமாக வேரூன்றியிருக்கும் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அதை எப்படி அகற்றுவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. மாம்சத்தின் அமைதி மற்றும் மகிழ்ச்சி, ஒரு உறுப்பினரின் விசுவாசம் ஒரு முழு குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருதல், நோயைக் குணப்படுத்துதல் போன்ற பல கிருபைகளை மனுஷன் பெற்றான். மீதமுள்ளவை மனுஷனின் நல்ல செயல்களும் அவனுடைய தெய்வீகத் தோற்றமும் தான்; இவற்றின் அடிப்படையில் யாராவது ஜீவிக்க முடிந்தால், அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசுவாசிகளாகக் கருதப்பட்டனர். இந்த வகையான விசுவாசிகளால் மட்டுமே மரித்த பிறகு பரலோகத்தில் பிரவேசிக்க முடியும், அதாவது அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்று அர்த்தம். ஆனால், அவர்களின் வாழ்நாளில், இந்த ஜனங்கள் ஜீவ வழியைப் புரிந்து கொள்ளவே இல்லை. அவர்கள் செய்ததெல்லாம், பாவங்களைச் செய்வதும், பின்னர் தங்கள் மனநிலையை மாற்றுவதற்கான பாதை இல்லாமல் ஒரு நிலையான சுழற்சியில் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்வதும் மட்டுமே ஆகும்: கிருபையின் யுகத்தில் மனுஷனின் நிலை இப்படித்தான் இருந்தது. மனுஷன் முழுமையான இரட்சிப்பை பெற்றிருக்கிறானா? இல்லை! ஆகையால், கிரியையின் அந்தக் கட்டம் முடிந்தபின்னும், சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியை மீதமிருந்தது. வார்த்தையின் மூலம் மனுஷனைச் சுத்தமாக்குவதற்கும், அதன் மூலம் அவன் பின்பற்ற வேண்டிய ஒரு பாதையை அவனுக்கு அளிப்பதற்குமானக் கட்டம் இதுவாகும். இந்தக் கட்டத்திலும் பிசாசுகளை விரட்டுவதைத் தொடர்ந்தால் அது பலனளிப்பதாகவோ அல்லது அர்த்தமுள்ளதாகவோ இருக்காது, ஏனென்றால் அது மனுஷனின் பாவச் சுபாவங்களை அழிக்கத் தவறிவிடும், மேலும் மனுஷன் தனது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதை நிறுத்திவிடுவான். பாவநிவாரணப்பலியின் மூலம், மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஏனென்றால் சிலுவையில் அறையப்படும் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவனும் சாத்தானை வென்றுவிட்டார். ஆனால் மனுஷனின் சீர்கெட்ட மனநிலை அவனுக்குள் இன்னும் இருக்கிறது, மனுஷனால் இன்னும் பாவம் செய்து தேவனை எதிர்க்க முடியும், தேவன் மனுஷகுலத்தை ஆதாயப்படுத்தியிருக்கவில்லை. அதனால்தான் இந்த கிரியையின் போது மனுஷனின் சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்த தேவன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார், இது சரியான பாதைக்கு ஏற்ப அவனை நடக்க வைக்கிறது. இந்தக் கட்டம் முந்தையதை விட மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது, பலனளிப்பதாகவும் இருக்கிறது, ஏனென்றால் வார்த்தை மனுஷனின் ஜீவனை நேரடியாக வழங்குகிறது மற்றும் மனுஷனின் மனநிலையையும் முழுமையாகப் புதுப்பிக்க உதவுகிறது; இது ஒரு முழுமையான கட்ட கிரியையாகும். ஆகையால், கடைசிக் காலத்திற்கான மாம்சமாகிய தேவன், மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவத்தை நிறைவுசெய்திருக்கிறார், மற்றும் மனுஷனின் இரட்சிப்பிற்கான தேவனின் ஆளுகைத் திட்டத்தையும் முழுமையாக முடித்துவிட்டிருக்கிறார்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க