தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 465

நீ என்னை ஏன் விசுவாசிக்கிறாய் என்று இப்போது உனக்கு உண்மையிலேயே தெரிகிறதா? என் கிரியையின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் நீ உண்மையிலேயே அறிந்துகொள்ளுகிறாயா? உன் கடமைகளை உண்மையிலேயே அறிந்துகொள்ளுகிறாயா? என் சாட்சியை உண்மையிலேயே அறிந்துகொள்ளுகிறாயா? நீ வெறுமனே என்னை விசுவாசித்து, ஆனால் உன்னில் என் மகிமை அல்லது சாட்சியின் அடையாளம் இல்லை எனில், முன்னரே நான் உன்னை புறம்பாக்கிவிட்டேன் என்றாகிறது. இவைகளை எல்லாம் அறிந்தவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் எல்லாம் என் பார்வையில் அதிகமான முட்களே, மற்றும் என் வீட்டில், என் வழிகளில் அவர்கள் தடைகளே அன்றி வேறல்ல, என் கிரியையில் இருந்து முற்றிலுமாகத் தூற்றப்படவேண்டிய பதர்களே, அவர்களால் பயன் இல்லை, அவர்கள் மதிப்பேதும் அற்றவர்கள், நான் அவர்களை நீண்ட காலத்திற்கு முன்னரே வெறுத்துவிட்டேன். சாட்சி இல்லாத எல்லோர் மேலும் அடிக்கடி என் கோபாக்கினை விழுகிறது, மேலும் ஒருபோதும் என் கோல் அவர்களிடம் இருந்து விலகுவதில்லை. நான் அவர்களை நீண்ட காலத்திற்கு முன்னரே தீயவன் கைகளில் அளித்துவிட்டேன்; என் ஆசீர்வாதம் இல்லாமல் அவர்கள் இருக்கிறார்கள். நாள் வரும்போது, புத்தியில்லாத ஸ்திரீகளைவிட இவர்களுக்கான தண்டனை மிகவும் கடினமானதாக இருக்கும். இன்று, எனது கடமையாக இருக்கும் கிரியையை மட்டுமே நான் செய்கிறேன்; கோதுமை அனைத்தையும் அந்தப் பதர்களோடும் கூட நான் கட்டுகளாகக் கட்டுவேன். இன்று என் கிரியை இதுவே. நான் தூற்றும் காலத்தில் அந்தப் பதர்கள் தூற்றப்பட்டு அகற்றப்படும், பின்னர் கோதுமை மணிகள் களஞ்சியத்தில் சேர்க்கப்படும், தூற்றப்பட்ட அந்தப் பதர்கள் அக்கினியின் நடுவில் வைக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்படும். எல்லா மனிதர்களையும் கட்டுகளாகக் கட்டுவது மட்டுமே இப்போதைய என் கிரியையாகும்; அதாவது, அவர்களை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுவதேயாகும். பின் எல்லா மனிதர்களின் முடிவையும் வெளிப்படுத்தத் தூற்றுதலை நான் தொடங்குவேன். மேலும் நீ என்னை திருப்திப்படுத்துவது எவ்வாறு என்பதை இப்போது தெரிந்துகொள்ள வேண்டும், மற்றும் என்னில் உனக்கிருக்கும் விசுவாசத்தை சரியான பாதையில் அமைக்க வேண்டும். இப்போது உன் உண்மையையும் கீழ்ப்படிதலையும், இப்போது உன் அன்பையும் சாட்சியையும் நான் விரும்புகிறேன். இந்தக் கணத்தில் சாட்சி என்றால் என்ன அல்லது அன்பு என்றால் என்ன என்று உனக்குத் தெரியாவிட்டாலும், நீ உனக்கிருக்கும் எல்லாவற்றையும் என்னிடம் கொண்டுவர வேண்டும், மேலும் உன்னிடம் இருக்கும் ஒரே பொக்கிஷமான உன் உண்மையையும் கீழ்ப்படிதலையும் என்னிடம் அளிக்க வேண்டும். மனிதனை நான் முற்றிலுமாக ஜெயங்கொள்ளுதலின் சாட்சியைப் போலவே, சாத்தானை நான் தோற்கடிப்பதின் சாட்சியும் மனிதனின் உண்மை மற்றும் கீழ்ப்படிதலுக்குள்தான் அடங்கியுள்ளது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். என்னில் நீ வைக்கும் விசுவாசத்தின் கடமை என்னவென்றால் எனக்கு நீ சாட்சி கொடுப்பதும், எனக்கு உண்மையாய் இருப்பதும், மேலும் கடைசிவரை கீழ்ப்படிதலுடன் இருப்பதும் தவிர வேறில்லை. என் கிரியையின் அடுத்த படியை நான் தொடங்கும் முன் எனக்கு நீ எவ்வாறு சாட்சிகொடுப்பாய்? எவ்வாறு நீ எனக்கு உண்மையும் கீழ்ப்படிதலும் உள்ளவனாய் இருப்பாய்? நீ உன் முழு உத்தமத்தையும் உனது பணிக்கு அர்ப்பணிப்பாயா, அல்லது விட்டுவிடுவாயா? எனது ஒவ்வொரு ஏற்பாட்டுக்கும் (மரணமாக அல்லது அழிவாக இருந்தாலும்) ஒப்புக்கொடுப்பாயா அல்லது எனது சிட்சைக்கு விலகி நடுவழியில் ஓடிவிடுவாயா? நீ எனக்குச் சாட்சியாக விளங்க வேண்டும் என்றும், எனக்கு உண்மையோடும் கீழ்ப்படிதலோடும் இருக்க வேண்டும் என்றே நான் உன்னை சிட்சிக்கிறேன். மேலதிகமாக, தற்போதைய சிட்சை என் கிரியையின் அடுத்த படியை அவிழ்க்கவும் கிரியை தடைபடாது நடக்கவுமே ஆகும். எனவே, ஞானம் உள்ளவனாக இருந்து உன்னுடைய ஜீவனையும் வாழ்வின் முக்கியத்துவத்தையும் அற்பமான மணலைப் போன்றது என எண்ணி நடந்துகொள்ளாதே என நான் உனக்குப் புத்தி சொல்லுகிறேன். வரவிருக்கும் என் கிரியை சரியாக என்னவாக இருக்கும் என்று உன்னால் சரியாக அறிய முடியுமா? வரவிருக்கும் நாட்களில் நான் எவ்வாறு கிரியை செய்வேன் என்பதும் எவ்வாறு என் கிரியை கட்டவிழும் என்பதும் உனக்குத் தெரியுமா? என் கிரியையில் உனக்குள்ள அனுபவத்தின் முக்கியத்துவத்தையும் மேலதிகமாக, என்னில் இருக்கும் உன் விசுவாசத்தின் முக்கியத்துவத்தையும் நீ அறிய வேண்டும். நான் மிக அதிகமாக செய்துவிட்டேன்; நீ கற்பனை செய்வதுபோல என்னால் எப்படி பாதியில் விட்டுவிட முடியும்? நான் அப்படிப்பட்ட விசாலமான கிரியையைச் செய்திருக்கிறேன். நான் அதை எவ்வாறு அழிக்க முடியும்? உண்மையில், இந்த யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரவே நான் வந்திருக்கிறேன். இது உண்மையே, ஆனால் மேலும் நான் ஒரு புதிய யுகத்தை, புதிய கிரியையைத் தொடங்க வேண்டும் என்பதையும், எல்லாவற்றிற்கும் மேலாக, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்ப வேண்டும் என்பதையும் நீ அறிந்துகொள்ள வேண்டும். தற்போதைய கிரியை ஒரு யுகத்தைத் தொடங்கவும் இனிவரும் காலத்தில் சுவிசேஷத்தைப் பரப்ப ஓர் அடித்தளத்தை அமைக்கவும், எதிர்காலத்தில் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரவும் மட்டுமே என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும். என் கிரியை நீ நினைப்பது போல் மிக எளிதானதும் அல்ல, நீ நம்புவது போல மதிப்பற்றதும் அல்லது அர்த்தமற்றதும் அல்ல. ஆகவே, நான் இன்னும் உன்னிடம் கூறவேண்டியது: நீ உன் ஜீவனை என் கிரியைக்கு அளிக்க வேண்டும், மேலும், நீ என் மகிமைக்கு உன்னை அர்ப்பணிக்க வேண்டும். நீண்ட காலமாக நீ எனக்கு சாட்சி கொடுக்க வேண்டும் என நான் ஆவலாய் இருந்தேன், மேலும் இன்னும் அதிகமாக நான் நீ என் சுவிஷேஷத்தைப் பரப்ப வேண்டும் என்று ஏங்கினேன். என் இருதயத்தில் என்ன இருக்கிறது என்று நீ புரிந்துகொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “விசுவாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 163

ஏசாயா, எசேக்கியேல், மோசே, தாவீது, ஆபிரகாம் மற்றும் தானியேல் ஆகியோர் இஸ்ரவேலின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்களிடையே தலைவர்களாகவோ...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 8

தேவனுடைய வழியில் நடந்து செல்ல வேண்டும்: தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்க்க வேண்டும் நீங்கள் கவனிக்க வேண்டிய பழமொழி ஒன்று உள்ளது....

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 305

நீங்கள் எப்போதுமே கிறிஸ்துவைக் காண விரும்புகிறீர்கள், ஆனால் உங்களை இவ்வளவு உயர்ந்த மதிப்பில் வைத்திருக்க வேண்டாம் என்று நான் உங்களை...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 155

நிர்வாகக் கிரியையானது மனிதகுலத்தின் நிமித்தமாக மட்டுமே வந்தது, அதாவது மனிதகுலத்தின் இருப்பின் நிமித்தமாக மட்டுமே அது எழுந்தது....