தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 610

எனக்கு ஏராளமான நம்பிக்கைகள் இருக்கின்றன. நீங்கள் தகுந்த மற்றும் நல்ல முறையில் நடந்து கொள்வீர்கள், உங்கள் கடமைகளை உண்மையோடு நிறைவேற்றுவீர்கள், சத்தியமும் மனிதத்தன்மையும் உடையவர்களாக இருப்பீர்கள், தங்களிடமுள்ள எல்லாவற்றையும் மற்றும் தங்கள் வாழ்க்கையைக் கூட தேவனுக்காகத் தரும் ஜனங்களாக இருப்பீர்கள் என்றெல்லாம் நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கைகள் எல்லாம் உங்கள் போதாமைகள் மற்றும் உங்கள் சீர்கேடு மற்றும் கீழ்ப்படியாமையில் இருந்து பிறக்கின்றன. நான் உங்களோடு நடத்திய உரையாடல்களில் ஒன்றும் உங்கள் கவனத்தைக் கவரப் போதுமானதாக இல்லை என்றால், என்னால் இப்போது செய்யக்கூடியது என்னவென்றால் இனிமேலும் சொல்லாமல் இருப்பதுதான். இருப்பினும், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்று உங்களுக்குப் புரிகிறது. நான் பெரும்பாலும் ஓய்வு எடுப்பதில்லை, ஆகவே நான் பேசாவிட்டால், நான் ஜனங்கள் பார்க்கும்படி எதையாவது செய்வேன். யாரோ ஒருவரின் நாக்கு அழுகும்படி நான் செய்யலாம், அல்லது அவயவங்கள் துண்டிக்கப்பட்டு யாரையாவது சாகும்படி செய்யலாம், அல்லது ஜனங்களுக்கு நரம்புக் கோளாறுகளை அளிக்கலாம் மற்றும் அவர்களைப் பல வகையிலும் அருவருப்பான தோற்றமுடையவர்களாகச் செய்யலாம். மீண்டும், அவர்களுக்கென்றே குறிப்பாக நான் உருவாக்க்கிய வேதனைகளால் ஜனங்கள் துன்புறும்படி என்னால் செய்யமுடியும். இந்த வகையில் மகிழ்ச்சியாகவும், மிகவும் சந்தோஷமாகவும், மற்றும் அதிக நிறைவாகவும் என்னால் உணர முடியும். "நன்மைக்கு நன்மையும், தீமைக்குத் தீமையும் பலனாகக் கிடைக்கும்" என்று எப்போதும் சொல்லப்பட்டிருக்கிறது, எனவே இப்போது ஏன் கூடாது? நீ என்னை எதிர்க்க விரும்பினால், மற்றும் என்னைக் குறித்து சில நியாயத்தீர்ப்பைச் செய்தால், பின் நான் உன் வாயை அழுகச் செய்வேன், மற்றும் அது முடிவற்ற வகையில் என்னை மகிழச் செய்யும். இது ஏன் என்றால் முடிவாக, நீ செய்துள்ளது சத்தியம் அல்ல, அதற்கும் ஜீவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதேசமயத்தில் நான் செய்வது எல்லாம் சத்தியம்; என்னுடைய செயல்கள் எல்லாம் எனது கிரியையின் கோட்பாடுகளுக்கும் நான் அமைத்துள்ள நிர்வாக ஆணைகளுக்கும் சம்பந்தப்பட்டவை. ஆகவே, கொஞ்சம் நற்குணங்களைத் திரட்டுங்கள், இவ்வளவு தீமைகளைச் செய்வதை நிறுத்துங்கள், மேலும் உங்கள் ஓய்வுநேரத்தில் என் கோரிக்கைகளைக் கேளுங்கள் என்று உங்கள் ஒவ்வொருவரையும் நான் வற்புறுத்துகிறேன். அப்போது நான் மகிழ்ச்சியாக உணர்வேன். மாம்சத்துக்காக நீங்கள் எடுக்கும் முயற்சியில் ஆயிரத்தில் ஒருபங்கை சத்தியத்திற்காக நீங்கள் வழங்கினால் (அல்லது கொடையளித்தால்) கூட, நீ அடிக்கடி மீறுதல்களைச் செய்ய மாட்டாய் மற்றும் அழுகிப்போன வாய்களைக் கொண்டிருக்க மாட்டாய் என்று நான் சொல்லுகிறேன். இது தெளிவாகத் தெரியவில்லையா?

நீ அதிகமாக மீறுதல்களைச் செய்யும்போது, ஒரு நல்ல சென்றடையும் இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உனக்கு மிகக் குறைவாகவே இருக்கும். மாறாக, மிகக் குறைவான மீறுதல்களை நீ செய்யும் போது, தேவனால் புகழப்படுவதற்கு சிறந்த வாய்ப்புகள் உனக்குக் கிடைக்கும். உன்னை மன்னிப்பதற்கு என்னால் முடியாத அளவுக்கு உனது மீறுதல்கள் அதிகரித்தால், பின்னர் மன்னிக்கப்படுவதற்கான உன் வாய்ப்புகளை நீ முற்றிலுமாக வீணாக்கியிருப்பாய். அவ்வாறாக, உனது சென்றடையும் இடம் மேலே இருக்காது, ஆனால் கீழே இருக்கும். நீ என்னை விசுவாசிக்காவிட்டால், பின்னர் தைரியமாக பொல்லாங்கைச் செய், மேலும் அது உனக்கு என்ன கொண்டுவரும் என்று பார். நீ சத்தியத்தை மிகவும் வாஞ்சையோடு கடைப்பிடிக்கும் ஒரு நபராக இருந்தால், உன் மீறுதல்களுக்காக மன்னிக்கப்பட நிச்சயமாக நீ ஒரு வாய்ப்பைப் பெறுவாய், மேலும் உன் கீழ்ப்படியாமை குறைந்துகொண்டே போகும். சத்தியத்தைக் கடைப்பிடிக்க மனதில்லாத ஒரு நபராக நீ இருந்தால், பின் தேவனுக்கு முன்பான உன் மீறுதல்கள் நிச்சயமாக எண்ணிக்கையில் அதிகரிக்கும் மேலும் வரம்பை எட்டும்வரை மிகவும் அடிக்கடி நீ கீழ்ப்படியாமல் இருப்பாய், அதுவே உன் முழுமையான அழிவுக்கான நேரமாக இருக்கும். ஆசீர்வாதங்களைப் பெறும் உன்னுடைய மகிழ்ச்சியான கனவு பாழாகும் போது இது நடக்கும். உன்னுடைய மீறுதல்களை ஒரு முதிர்வடையாத அல்லது முட்டாள்தனமான ஒரு நபரின் சாதாரணத் தவறுகள்தான் என்று எண்ணாதே; உனது மோசமான திறமையின் காரணமாக சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்டது என்ற சாக்குப்போக்கைப் பயன்படுத்தாதே. மேலும், உன்னால் செய்யப்பட்ட மீறுதல்கள் அதிகம் அறியாத ஒருவனின் செயல்கள் என்று சாதாரணமாகக் கருதாதே. உன்னை நீயே மன்னித்துக் கொள்வதில் நீ சிறந்தவனாக இருந்தால் மேலும் உன்னை நீயே பெருந்தன்மையோடு நடத்திக்கொண்டால், பின்னர் நான் உனக்குச் சொல்லுகிறேன் நீ ஒரு போதும் சத்தியத்தைப் பெற முடியாத ஒரு கோழை, மட்டுமல்லாது உன்னுடைய மீறுதல்கள் உன்னைச் சுற்றிச்சுற்றி வந்து வதைப்பதற்கு முடிவே இருக்காது; அவை சத்தியத்தின் தேவைகளை நீ நிறைவுசெய்வதை ஒருபோதும் அனுமதிக்கவிடாமல், உன்னை என்றென்றைக்கும் சாத்தானின் ஒரு விசுவாசமுள்ள கூட்டாளியாக இருக்கச் செய்யும். இன்னும் உங்களுக்கு என் புத்திமதி இதுவே: உனது மறைவான மீறுதல்களைக் கவனிக்கத் தவறுகையில் நீ சென்றடையும் இடத்தின் மேல் மட்டும் கவனம் செலுத்தாதே; மீறுதல்களைத் தீவிரமாக எடுத்துக் கொள், மேலும் உனது சென்றடையும் இடத்தின் மேல் உள்ள அக்கறையால் அவற்றில் ஒன்றையும் கவனிக்கத் தவறாதே.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மீறுதல்கள் மனுஷனை நரகத்திற்கு வழிநடத்தும்" என்பதிலிருந்து

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 318

தேவன் மீதான உன் விசுவாசம், சத்தியத்தின் மீதான உன் நாட்டம், உன்னை நீயே தொடர்பு கொள்ளும் விதம் அனைத்தும் யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 12

தேவனைப் பின்பற்றும்போது, ஜனங்கள் அவருடைய சித்தத்திற்கு எப்போதாவது கவனம் செலுத்துவார்கள். அவருடைய எண்ணங்களையும் மனிதர்களைப் பற்றிய அவருடைய...

தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கடைசிக் காலத்தில் நியாயத்தீர்ப்பு | பகுதி 80

நியாயத்தீர்ப்பு என்றால் என்ன என்பதையும், சத்தியம் எது என்பதையும் நீ இப்போது புரிந்துகொள்கிறாயா? நீ புரிந்துகொண்டாய் என்றால்,...