தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 15

செப்டம்பர் 15, 2022

ஜனங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தேவனை வரையறுக்க முனைகிறார்கள்

தேவனை அறிவது என்ற தலைப்பைப் பற்றி பேசும் போது, நீங்கள் ஏதாவது கவனித்தீர்களா? இந்த நாட்களில் அவருடைய மனநிலை ஒரு மாற்றத்திற்கு ஆளானது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? மனிதர்களைப் பற்றிய அவரது மனநிலை மாறாததா? அவர் எப்பொழுதும் இப்படி சகித்துக்கொள்வாரா, அவருடைய அன்பையும் இரக்கத்தையும் மனிதர்களுக்கு காலவரையின்றி நீட்டிப்பாரா? இந்த விஷயத்தில் தேவனுடைய சாராம்சமும் அடங்கும். … தேவன் மனிதகுலத்தை நேசிக்கிறார் என்பதை அறிந்தவுடன், அவர்கள் அவரை அன்பின் அடையாளமாக வரையறுக்கிறார்கள்: ஜனங்கள் என்ன செய்தாலும், அவர்கள் எப்படி நடந்துக்கொண்டாலும், அவர்கள் தேவனை எப்படி நடத்தினாலும், அவர்கள் எவ்வளவு கீழ்ப்படியாதவர்களாக இருந்தாலும், இவை எதுவும் உண்மையில் முக்கியமானதில்லை. ஏனென்றால், தேவனிடம் அன்பு இருக்கிறது, அவருடைய அன்பு வரம்பற்றது மற்றும் அளவிட முடியாதது. தேவனிடம் அன்பு இருக்கிறது, எனவே அவர் ஜனங்களைச் சகித்துக்கொள்ள முடியும். தேவனிடம் அன்பு உண்டு, ஆகவே அவர் ஜனங்களிடம் இரக்கமுள்ளவராகவும், அவர்களுடைய முதிர்ச்சியற்ற தன்மைக்கு இரக்கமுள்ளவராகவும், அவர்களுடைய அறியாமையை நோக்கி இரக்கமுள்ளவராகவும், கீழ்ப்படியாமையின் மீது இரக்கமுள்ளவராகவும் இருக்க முடியும். அது உண்மையில் அப்படித்தானா? சிலர், தேவனுடைய பொறுமையை ஒரு முறை அல்லது சில தடவைகள் அனுபவித்தபோது, அவர்கள் தேவனைப் பற்றிய தங்கள் சொந்தப் புரிதலில் இந்த அனுபவங்களை ஆதாரமாகக் கருதுவார்கள். அவர் என்றென்றும் பொறுமையாகவும் இரக்கத்துடனும் இருப்பார் என்று நம்புகிறார்கள். பின்னர், அவர்களுடைய ஜீவிதத்தில், தேவனுடைய இந்தப் பொறுமையை அவர் அவர்களை நடத்தும் தரமாகக் கருதுகிறார்கள். தேவனுடைய சகிப்புத்தன்மையை ஒரு முறை அனுபவித்தபின், தேவனை சகிப்புத்தன்மை கொண்டவர் என்று எப்போதும் வரையறுப்பவர்களும் உண்டு மற்றும் அவர்களுடைய மனதில், இந்தச் சகிப்புத்தன்மை காலவரையற்றது, நிபந்தனையற்றது மற்றும் முற்றிலும் கொள்கை ரீதியற்றது. இத்தகைய நம்பிக்கைகள் சரியானதாகுமா? ஒவ்வொரு முறையும் தேவனுடைய சாராம்சம் அல்லது தேவனுடைய மனநிலை பற்றிய விஷயங்கள் விவாதிக்கப்படும்போது, நீங்கள் திகைத்துப் போகிறீர்கள். உங்களை இப்படிப் பார்ப்பது என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது. தேவனுடைய சாராம்சத்தைப் பற்றி நீங்கள் நிறைய சத்தியங்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். அவருடைய மனநிலையைப் பற்றிய பல விவாதங்களையும் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இருப்பினும், உங்கள் மனதில், இந்தப் பிரச்சனைகளும் இந்த அம்சங்களின் சத்தியமும், கோட்பாடு மற்றும் எழுதப்பட்ட வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுகள் மட்டுமே. உங்கள் அன்றாட ஜீவிதத்தில், தேவனுடைய மனநிலையை உண்மையில் என்னவென்று உங்களில் எவராலும் அனுபவிக்கவோ பார்க்கவோ முடியாது. இவ்வாறு, நீங்கள் அனைவரும் உங்கள் நம்பிக்கைகளில் குழப்பமானவர்கள். நீங்கள் அனைவரும் கண்மூடித்தனமாக நம்புகிறீர்கள், நீங்கள் தேவனைப் பற்றி ஒரு பொருத்தமற்ற மனநிலையைக் கொண்டிருக்கிறீர்கள். அவரை ஒதுக்கித் தள்ளுகிறீர்கள். தேவனைப் பற்றிய இத்தகைய மனநிலையைக் கொண்டிருப்பது எதற்கு வழிவகுக்கிறது? நீங்கள் எப்போதும் தேவனைப் பற்றி முடிவுகளை எடுப்பதை நோக்கி அது செல்கிறது. நீங்கள் சிறிது அறிவைப் பெற்றவுடன், நீங்கள் தேவனை முழுவதுமாகப் பெற்றிருப்பதைப் போல மிகவும் திருப்தி அடைகிறீர்கள். அதன்பிறகு, தேவன் இப்படித்தான் இருக்கிறார் என்று நீங்கள் முடிவு செய்கிறீர்கள். அவரைச் சுதந்திரமாக நகர்த்த நீங்கள் அனுமதிக்கவில்லை. மேலும், தேவன் புதிதாக ஏதாவது செய்யும்போதெல்லாம், அவர் தேவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். ஒரு நாள், "நான் இனி மனிதகுலத்தை நேசிப்பதில்லை. நான் இனி மனிதர்களிடம் இரக்கம் காட்ட மாட்டேன். அவர்களிடம் எனக்குச் சகிப்புத்தன்மையோ பொறுமையோ இல்லை. நான் அவர்களிடம் மிகுந்த வெறுப்பையும் விரோதத்தையும் கொண்டுள்ளேன்," என இதுபோன்ற கூற்றுகள் ஜனங்களுடைய இருதயங்களில் ஆழமான மோதலை ஏற்படுத்தும். அவர்களில் சிலர், "இனி நீர் என் தேவன் இல்லை. இனி நீர் நான் பின்பற்ற விரும்பும் தேவன் இல்லை. இதனையே நீர் சொன்னால், நீர் இனி என் தேவனாக இருக்கத் தகுதியற்றவர். நான் உம்மைப் பின்பற்றத் தேவையில்லை. நீர் இனி எனக்கு இரக்கம், அன்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கொடுக்கவில்லை என்றால், நான் உம்மைப் பின்தொடர்வதை நிறுத்துவேன். நீர் காலவரையின்றி என்னைச் சகித்துக்கொண்டிருந்தால், எப்போதும் என்னுடன் பொறுமையாக இரும். அன்பு, பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை கொண்டவர் என்பதைக் காண என்னை அனுமதித்தால், அப்போதுதான் நான் உம்மைப் பின்பற்ற முடியும், அப்போதுதான் கடைசிவரை உம்மைப் பின்பற்ற எனக்கு நம்பிக்கை இருக்கும். உமது பொறுமையும் இரக்கமும் எனக்கு இருப்பதால், எனது கீழ்ப்படியாமையும், மீறுதல்களும் காலவரையின்றி மன்னிக்கப்பட்டு இரக்கங்காட்டப்படலாம். நான் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பாவம் செய்யலாம். பாவமன்னிப்புக் கோரி எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் மன்னிக்கப்படலாம். எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கோபப்படலாம். உம்மிடம் எந்தக் கருத்தும் இருக்கக்கூடாது அல்லது என்னைப் பற்றி எந்த முடிவுகளையும் நீர் எடுக்கக்கூடாது," என்று சொல்வார்கள். உங்களில் ஒருவர் கூட இத்தகைய பிரச்சனையைப் பற்றி அவ்வளவாக மனதால் அல்லது உணர்வுடன் சிந்திக்கவில்லை என்றாலும், உங்கள் பாவங்களை மன்னிக்க பயன்படும் ஒரு கருவியாக அல்லது ஓர் அழகான இலக்கைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு பொருளாக தேவனை நீங்கள் கருதும் போதெல்லாம், ஜீவனுள்ள தேவனை உனக்கு எதிராக உன் எதிரியாக நுட்பமாக வைத்தாய். இதைத்தான் நான் பார்க்கிறேன். "நான் தேவனை நம்புகிறேன்," "நான் சத்தியத்தைத் தொடர்கிறேன்," "நான் என் மனநிலையை மாற்ற விரும்புகிறேன்," "இருளின் ஆதிக்கத்திலிருந்து விடுபட விரும்புகிறேன்," "நான் திருப்தி அடைய விரும்புகிறேன் தேவனே," "நான் தேவனுக்குக் கீழ்ப்படிய விரும்புகிறேன்," "நான் தேவனுக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன், என் கடமையைச் சிறப்பாகச் செய்ய விரும்புகிறேன்," என்றும் மற்றும் பல காரியங்களையும் நீ தொடர்ந்து கூறலாம். இருப்பினும், உன் வார்த்தைகள் எவ்வளவு இனிமையாக இருந்தாலும், உனக்கு எவ்வளவாக கோட்பாடு தெரிந்திருந்தாலும், அந்தக் கோட்பாடு எவ்வளவாக திணிக்கப்பட்டாலும், கண்ணியமானதாக இருந்தாலும், இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், தேவனைப் பற்றிய முடிவுகளை எடுக்க நீ தேர்ச்சி பெற்றுள்ள ஒழுங்குமுறைகள், உபதேசங்கள், கோட்பாடுகள் என இவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை உங்களில் பலர் ஏற்கனவே கற்றுக்கொண்டுள்ளனர். அதனால் இயல்பாகவே அவரை நீ எதிராக நிறுத்துகிறாய். நீ எழுத்துக்களிலும் கோட்பாடுகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும், நீ சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் உண்மையாக பிரவேசிக்கவில்லை. எனவே நீ தேவனிடம் நெருங்கி வருவதும், அவரை அறிந்துக்கொள்வதும், அவரைப் புரிந்துக்கொள்வதும் மிகவும் கடினமாகும். அது மிகவும் புலம்பத்தக்கது ஆகும்!

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க