தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 12

செப்டம்பர் 7, 2022

தேவனைப் பின்பற்றும்போது, ஜனங்கள் அவருடைய சித்தத்திற்கு எப்போதாவது கவனம் செலுத்துவார்கள். அவருடைய எண்ணங்களையும் மனிதர்களைப் பற்றிய அவருடைய மனநிலையையும் அவர்கள் கவனிப்பதில்லை. தேவனுடைய எண்ணங்களை ஜனங்கள் புரிந்துக்கொள்ளவில்லை. ஆகவே, அவருடைய நோக்கங்கள் மற்றும் மனநிலையைப் பற்றிய கேள்விகளைக் கேட்கும்போது, நீங்கள் குழப்பமடைகிறீர்கள். நீங்கள் ஆழ்ந்த நிச்சயமற்ற நிலையில் விழுகிறீர்கள். பின்னர் நீங்கள் யூகிக்கிறீர்கள் அல்லது சூதாட்டம் செய்கிறீர்கள். இது என்ன மாதிரியான மனநிலை? அது ஓர் உண்மையை நிரூபிக்கிறது: தேவனை நம்புகிற பெரும்பாலான ஜனங்கள் அவரை வெறுமையான காற்றின் கலவை என்றும் ஒரு நிமிடம் இருப்பதாகவும் பிறகு இல்லாமல் போவதாகவும் கருதுகிறார்கள். நான் ஏன் இதை அவ்வாறு சொல்கிறேன்? ஏனென்றால் நீங்கள் பிரச்சனையை எதிர்கொள்ளும்போதெல்லாம், உங்களுக்கு தேவனுடைய சித்தம் என்னவென்று தெரியாது. அவருடைய சித்தத்தை நீங்கள் ஏன் அறியவில்லை? இப்போது மட்டுமல்ல, தொடக்கத்தில் இருந்து முடிவு வரையில் இந்தப் பிரச்சனையைப் பற்றிய தேவனுடைய மனநிலை உங்களுக்குத் தெரிவதில்லை. நீ அதைப் புரிந்துக்கொள்ள முடியாது. தேவனுடைய மனநிலை என்னவென்று உனக்கு தெரியாது. ஆனால் நீ அதை அதிகம் சிந்தித்துள்ளாயா? நீ அதை அறிய முயன்றாயா? நீ அதைப் பற்றி பேசியுள்ளாயா? இல்லை! அது ஓர் உண்மையை உறுதிப்படுத்துகிறது: உன் நம்பிக்கையில் உள்ள தேவனுக்கு யதார்த்த தேவனுடன் எந்தத் தொடர்பும் இல்லை. தேவன் மீதான உன் நம்பிக்கையில், உன் சொந்த நோக்கங்களையும் உன் தலைவர்களின் எண்ணங்களையும் மட்டுமே சிந்தித்துப் பார்க்கிறாய். தேவனுடைய சித்தத்தை உண்மையிலேயே அறியவோ தேடவோ முயலாமல், தேவனுடைய வார்த்தைகளின் மேலோட்டமான மற்றும் கோட்பாட்டு அர்த்தத்தை நீ சிந்திக்கிறாய். அது அப்படி அல்லவா? இந்த விஷயத்தின் சாராம்சம் மிகவும் கொடூரமானது! பல வருடங்களுக்குப் பிறகு, தேவனை நம்பும் பலரை நான் பார்த்திருக்கிறேன். மாற்றிய அவர்களுடைய நம்பிக்கை அவர்களுடைய மனதிற்குள் தேவனை என்னவாக மாற்றியது? சிலர் தேவனை வெறுமையான காற்றின் கலவை என்று நம்புகிறார்கள். தேவனுடைய இருப்பைப் பற்றிய கேள்விகளுக்கு இந்த ஜனங்களுக்கு எந்தப் பதிலும் இல்லை. ஏனென்றால் அவருடைய இருப்பை அல்லது அவர் இல்லாததை அவர்களால் உணரவோ அறியவோ முடியாது, அதைத் தெளிவாகப் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ அவர்களால் கூடாது. ஆழ்மனதில், இந்த ஜனங்கள் தேவன் இல்லை என்று நினைக்கிறார்கள். மற்றவர்கள் தேவனை ஒரு மனிதனாக நம்புகிறார்கள். அவர்களால் செய்ய முடியாத எல்லாவற்றையும் அவரால் செய்ய முடியாது என்றும், அவர்கள் நினைப்பது போல அவர் சிந்திக்க வேண்டும் என்றும் இந்த ஜனங்கள் நினைக்கிறார்கள். தேவனைப் பற்றிய அவர்களுடைய வரையறை "கண்ணுக்குத் தெரியாத மற்றும் தீண்டத்தகாத மனிதர்" என்பதாகும். தேவனை ஒரு கைப்பாவை போல நம்புகிற ஒரு கூட்டமும் இருக்கிறது. தேவனுக்கு உணர்ச்சிகள் இல்லை என்று இந்த ஜனங்கள் நம்புகிறார்கள். தேவன் ஒரு களிமண் சிலை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும்போது, தேவனுக்கு எந்த மனநிலையும், கண்ணோட்டமும், யோசனைகளும் இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர் மனிதகுலத்தின் தயவில் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். ஜனங்கள் தங்கள் விருப்பம் போல நம்புகிறார்கள். அவர்கள் அவரைப் பெரியவராக மாற்றினால், அவர் பெரியவர். அவர்கள் அவரைச் சிறியதாக மாற்றினால், அவர் சிறியவர். ஜனங்கள் பாவம் செய்யும்போது, தேவனுடைய இரக்கம், சகிப்புத்தன்மை மற்றும் அன்பு தேவைப்படும்போது, தேவன் அவருடைய இரக்கத்தைப் பெரிதாக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த ஜனங்கள் தங்கள் மனதில் ஒரு "தேவனை" கண்டுபிடித்து, பின்னர் இந்த "தேவன்" தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், அவர்களுடைய எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்யவும் செய்கிறார்கள். எப்போது என்றாலும் அல்லது எங்கு இருந்தாலும், அத்தகையவர்கள் என்ன செய்தாலும், அவர்கள் தேவனை நடத்துவதிலும், தங்கள் விசுவாசத்திலும் இந்த மனோபாவத்தைப் பின்பற்றுவார்கள். தேவனுடைய மனநிலையை மோசமாக்கி, அவர்களைக் காப்பாற்ற முடியும் என்று இன்னும் நம்புபவர்களும் இருக்கிறார்கள். ஏனென்றால் தேவனுடைய அன்பு எல்லையற்றது என்றும் அவருடைய மனநிலை நீதியானது என்றும் ஒருவர் தேவனை எவ்வளவு புண்படுத்தினாலும், அவர் அதில் எதையும் நினைவில் கொள்ள மாட்டார் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். மனித தவறுகள், மனித மீறுதல்கள் மற்றும் மனித ஒத்துழையாமை ஆகியவை ஒரு மனிதனுடைய மனநிலையின் உடனடி வெளிப்பாடுகள் என்பதால், தேவன் ஜனங்களுக்கு வாய்ப்புகளைத் தருவார், அவர்களுடன் சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் இருப்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். முன்பு போலவே தேவன் இன்னும் அவர்களை நேசிப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். இவ்வாறு, அவர்கள் இரட்சிப்பை அடைவதற்கான அதிக நம்பிக்கையைப் பேணுகிறார்கள். உண்மையில், ஜனங்கள் தேவனை எப்படி நம்பினாலும், அவர்கள் சத்தியத்தைப் பின்பற்றாதவரை, அவர் அவர்களை நோக்கி எதிர்மறையான மனநிலையை வைத்திருப்பார். ஏனென்றால், தேவனிடமான உன் விசுவாச ஜீவிதத்தில், நீ தேவனுடைய வார்த்தைகளின் புஸ்தகத்தை ஒரு புதையலாகப் பார்த்திருந்தாலும், ஒவ்வொரு நாளும் அதைப் படித்தாலும் வாசித்தாலும், உண்மையான தேவனை நீ ஒதுக்கி வைத்தாய். நீங்கள் அவரை வெறும் வெறுமையான காற்றாக அல்லது ஒரு மனிதராக மட்டுமே கருதுகிறீர்கள்—உங்களில் சிலர், அவரை ஒரு கைப்பாவையாக கருதுகிறீர்கள். நான் ஏன் இதை இவ்வாறு கூறுகிறேன்? நான் அவ்வாறு கூறுகிறேன், ஏனென்றால் நான் அதை அவ்வாறு பார்க்கிறேன். நீங்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டாலும் அல்லது சில சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும், உன் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களுக்கும், உனக்குள்ளாக நீ உருவாக்கும் விஷயங்களுக்கும், ஒருபோதும் தேவனுடைய வார்த்தைகளுடனோ சத்தியத்தைப் பின்தொடர்வதுடனோ எந்தத் தொடர்பும் இல்லை. நீ என்ன நினைக்கிறாய், உன் சொந்தப் பார்வை என்ன என்பது உனக்கு மட்டுமே தெரியும். பின்னர் உன் சொந்த எண்ணங்களையும் கருத்துக்களையும் தேவன் மீது கட்டாயப்படுத்துகிறாய். உன் மனதில் அவை தேவனுடைய கண்ணோட்டங்களாக மாறுகின்றன. நீ இந்தக் கண்ணோட்டங்களின் தரங்களை உறுதியற்ற முறையில் ஆதரிக்கிறாய். காலப்போக்கில், அதுபோன்று தொடர்வது உன்னை தேவனிடமிருந்து வெகுதூரம் அழைத்துச் செல்கிறது.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனுடைய மனநிலையையும் அவரது கிரியை அடையும் முடிவுகளையும் எவ்வாறு அறிந்து கொள்வது” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க