நீங்கள் அந்தஸ்தை அளிக்கும் ஆசீர்வாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்

ஒரு மனிதக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, மோவாபின் சந்ததியாரைப் பரிபூரணப்படுத்த முடியாதது மட்டுமல்லாமல் அவர்களை அவ்வாறு ஆக்குவதற்கு அவர்கள் தகுதிபெற்றவர்களும் அல்ல. மறுபுறம், தாவீதின் சந்ததியாருக்கோ நிச்சயமாக நம்பிக்கை உண்டு, மேலும் உண்மையில் அவர்களைப் பரிபூரணப்படுத்த முடியும். யாராவது ஒருவர் மோவாபின் சந்ததியாராக இருந்தால், அவர்களைப் பரிபூரணப்படுத்த முடியாது. இப்போதும், உங்கள் மத்தியில் செய்யப்பட்டு வரும் கிரியையின் முக்கியத்துவத்தை இன்னும் நீங்கள் அறியவில்லை; இந்தக் கட்டத்தில், நீங்கள் இன்னும் உங்கள் எதிர்கால நல்வாய்ப்புகளையே இருதயத்தில் வைத்திருக்கிறீர்கள், மேலும் அவற்றை விட்டுவிட மனமற்றவர்களாக இருக்கிறீர்கள். உங்களைப் போன்ற மிகவும் தகுதியற்ற ஒரு ஜனக்கூட்டத்தினரிடம் தேவன் ஏன் இன்று கிரியை செய்யத் தெரிந்துகொண்டார் என்று ஒருவரும் கவலைப்படுவதில்லை. இந்தக் கிரியையில் அவர் ஒரு தவறை செய்திருக்கக் கூடுமோ? இந்தக் கிரியை ஒரு கணநேர கவனக்குறைவாக இருக்கிறதா? உங்களை மோவாபின் சந்ததியார் என்று எப்போதும் அறிந்திருக்கிற தேவன் ஏன் உங்கள் மத்தியில் கிரியை செய்வதற்கென்றே கீழே இறங்கி வந்துள்ளார்? இது ஒருபோதும் உங்கள் மனதில் தோன்றவில்லையா? தேவன் தமது கிரியையைச் செய்யும்போது ஒருபோதும் இதை எண்ணிப்பார்க்கவில்லையா? அவர் விளைவுகளைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் நடந்துகொள்ளுகிறாரா? தொடக்கத்தில் இருந்தே நீங்கள் மோவாபியரின் சந்ததி என்று அவருக்குத் தெரியாதா? இந்த விஷயங்களை எண்ணிப்பார்க்க உங்களுக்குத் தெரியவில்லையா? உங்கள் எண்ணங்கள் எங்கு சென்றுவிட்டன? உங்களது ஆரோக்கியமான சிந்தனை நெறிபிறழ்ந்து போய்விட்டதா? உங்களது புத்திசாலித்தனமும் ஞானமும் எங்கே போய்விட்டன? இத்தகைய சிறு விஷயங்களைக் கவனிக்காத அளவுக்கு நீங்கள் இத்தகைய பெருந்தன்மையான நடத்தையைக் கொண்டிருக்கிறீர்களா? உங்களது எதிர்கால நல்வாய்ப்புகள் மற்றும் உங்கள் சொந்தத் தலைவிதி போன்றவற்றில் உங்கள் மனங்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவைகளாக இருக்கின்றன, ஆனால் வேறெதற்காவது வரும்போது, அவை உணர்வற்றவைகளாகவும், மந்த அறிவு கொண்டவைகளாகவும் முற்றிலும் அறியாமை நிறைந்தவையாகவும் இருக்கின்றன. பூமியில் நீங்கள் எதன் மீது விசுவாசம் கொள்கிறீர்கள்? உங்கள் எதிர்கால நல்வாய்ப்புகளிலா? அல்லது தேவனிடமா? நீ விசுவாசிப்பது எல்லாம் உனது அழகான சென்றடையும் இடம் அல்லவா? உனது எதிர்கால நல்வாய்ப்புகள் அல்லவா? இப்போது வாழ்க்கை முறையைப் பற்றி எவ்வளவு தூரம் புரிந்துகொண்டிருக்கிறாய்? எவ்வளவு நீ அடைந்திருக்கிறாய்? இப்போது மோவாபின் சந்ததியர்களுக்கு செய்யப்பட்டு வரும் கிரியை உங்களை அவமதிப்பதற்காகச் செய்யப்படுகிறது என்று நினைக்கிறாயா? உங்கள் அருவருப்புகளை வெளிப்படுத்த அது வேண்டுமென்றே செய்யப்படுகிறதா? உங்களை சிட்சையை ஏற்றுக்கொள்ள வைத்துப் பின்னர் உங்களை அக்கினிக் கடலுக்குள் தள்ளுவதற்காக அது மனமாரத்திட்டமிட்டு செய்யப்படுகிறதா? உங்களுக்கு எதிர்கால நல்வாய்ப்புகள் இல்லை என்றும் அதைவிட நீங்கள் அழிக்கப்பட அல்லது கேடடைய வேண்டும் என்றும் நான் ஒருபோதும் கூறவில்லை. நான் இத்தகைய விஷயங்களை வெளிப்படையாக அறிவித்திருக்கிறேனா? நீ நம்பிக்கை இல்லாமல் இருப்பதாகக் கூறுகிறாய், ஆனால் இது நீயாகவே வருவித்துக்கொண்ட முடிவல்லவா? இது உன்னுடைய சொந்த மனப்பாங்கின் விளைவு அல்லவா? உன் சொந்த முடிவுகள் கருத்தில் கொள்ளப்படுமா? நீ ஆசீர்வதிக்கப்படவில்லை என்று நான் கூறினால் அதன்பின் நீ நிச்சயமாகவே அழிவின் பொருளாக இருப்பாய்; மேலும் நீ ஆசீர்வதிக்கப்படுகிறாய் என்று நான் கூறினால் அதன்பின் நீ நிச்சயமாக அழிக்கப்படமாட்டாய். நீ மோவாபியரின் சந்ததி என்று மட்டும்தான் நான் கூறுகிறேன்; நீ அழிக்கப்படுவாய் என்று நான் கூறவில்லை. சொல்லப்போனால் மோவாபின் சந்ததியார் சபிக்கப்பட்டிருக்கிறார்கள், மேலும் அவர்கள் சீர்கெட்ட மனிதர்களின் ஓர் இனம் ஆவர். பாவம் முன்னர் குறிப்பிடப்பட்டது; நீங்கள் எல்லோரும் பாவிகள் அல்லவா? பாவிகள் எல்லோரும் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டவர்கள் அல்லவா? பாவிகள் எல்லோரும் தேவனுக்கு எதிர்த்து நின்று கலகம் செய்யவில்லையா? தேவனுக்கு எதிர்த்து நிற்பவர்கள் சபிக்கப்பட வேண்டாமா? பாவிகள் யாவரும் அழிக்கப்பட வேண்டாமா? அப்படியென்றால், சதையும் இரத்தமுமான மனிதர்களின் மத்தியில் யார் இரட்சிக்கப்படக் கூடும்? இந்நாள் வரை உங்களால் எவ்வாறு பிழைத்திருக்க முடிந்தது? நீங்கள் மோவாபியரின் சந்ததியார் என்பதால் நீங்கள் எதிர்மறையானவர்களாக வளர்ந்துவிட்டீர்கள்; நீங்கள் பாவிகளான மனிதர்கள் என்றும் கருதப்படவில்லையா? இந்நாள் வரை நீங்கள் எப்படி தப்பிப்பிழைத்தீர்கள்? பரிபூரணம் என்று குறிப்பிடப்படும்போது, நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். பெரும் உபத்திரவத்தின் காலத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்று கேட்ட பின்னர், அது உங்களை அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக ஆக்குகிறது என்று உணர்கிறீர்கள். உபத்திரவ காலத்தில் இருந்து வெளிவந்த பின் நீங்கள் ஜெயங்கொண்டவர்களாக மாறிவிடலாம் என்றும், மேலும் இது இன்னும் தேவனின் பெரும் ஆசீர்வாதம் என்றும் உங்களுக்கு அவர் அளிக்கும் பெரும் மேன்மை என்றும் நீங்கள் எண்ணுகிறீர்கள். மோவாபைப் பற்றி குறிப்பிட்டவுடன் உங்களுக்குள் ஒரு கொந்தளிப்பு எழுகிறது; பெரியவர்களும் குழந்தைகளும் ஒன்றுபோல கூறமுடியாத ஒரு வருத்தத்தை உணர்கிறார்கள் மேலும் உங்கள் இருதயங்களில் முற்றிலுமாக மகிழ்ச்சி இல்லை, மேலும் பிறந்ததற்காய் வருந்துகிறீர்கள். மோவாபின் சந்ததியினருக்காக செய்யப்படும் இந்தக் கட்ட கிரியையின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை; உயர்ந்த ஸ்தானங்களைத் தேடுவதை மட்டுமே நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், மேலும் எப்போதெல்லாம் நம்பிக்கை ஒன்றும் இல்லை என்று உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் நீங்கள் பின்வாங்கிப் போகிறீர்கள். பரிபூரணம் மற்றும் எதிர்காலத்தில் சென்றடையும் இடம் ஆகியவற்றைக் குறிப்பிடும்போது, நீங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள்; ஆசீர்வாதத்தைப் பெறுவதனால் உங்களுக்கு ஒரு நல்ல சென்றடையும் இடம் கிடைக்கும் என்று நீங்கள் தேவனின் மேல் உங்கள் விசுவாசத்தை வைக்கிறீர்கள். தங்கள் அந்தஸ்தின் காரணமாக சில ஜனங்கள் இப்போது அச்ச உணர்வை அடைகின்றனர். ஏனெனில் அவர்கள் குறைந்த மதிப்பும் குறைந்த அந்தஸ்தும் உடையவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் பரிபூரணப்படுத்தப்படுவதைத் தேட விரும்பவில்லை. முதலில், பரிபூரணம் குறித்து பேசப்பட்டது, மற்றும் அதன்பின் மோவாபின் சந்ததியார் பற்றி குறிப்பிடப்பட்டது, ஆகவே ஜனங்கள் முன்னர் குறிப்பிடப்பட்ட பரிபூரணத்தின் பாதையை மறுத்தார்கள். இது ஏனென்றால் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை, இந்தக் கிரியையின் முக்கியத்துவத்தை நீங்கள் ஒருபோதும் அறிந்துகொள்ளாததோடு, அதன் முக்கியத்துவம் பற்றி நீங்கள் கவலைப்படவும் இல்லை. நீங்கள் வளர்ச்சியில் மிகவும் சிறியவர்கள், மேலும் மிகச் சிறிய இடையூறையும் உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உங்கள் அந்தஸ்து மிகக் குறைவாக இருப்பதை நீங்கள் பார்க்கும் போது, எதிர்மறை மனநிலை கொண்டவர்களாகி தொடர்ந்து தேடுவதற்கான தன்னம்பிக்கையை இழந்துபோகிறீர்கள். கிருபையை அடைவதும் சமாதானத்தை அனுபவிப்பதும் விசுவாசத்தின் அடையாளங்கள் என்றே ஜனங்கள் கருதுகின்றனர், மேலும் ஆசீர்வாதத்தை நாடுவதையே தேவனிடம் தங்களுக்குள்ள விசுவாசத்தின் அடிப்படையாகப் பார்க்கின்றனர். தேவனை அறிய அல்லது தங்கள் மனநிலையில் மாற்றத்தைத் தேட ஒரு சில ஜனங்களே நாடுகின்றனர். தங்கள் விசுவாசத்தில், தேவன் அவர்களுக்கு ஒரு பொருத்தமான சென்றடையும் இடத்தையும் அவர்களுக்குத் தேவையான எல்லா கிருபையையும் அளிப்பதையும், அவரைத் தங்கள் ஊழியக்காரராக மாற்றவும், எந்தச் சூழலிலும் தங்களுக்கு இடையில் ஒருபோதும் எந்த ஒரு முரண்பாடும் இல்லாத வண்ணம் அவர்களோடு அவர் ஒரு சமாதானமான, நட்புரீதியான உறவைப் பேணுவதையும் ஜனங்கள் நாடுகிறார்கள். அதாவது, வேதாகமத்தில் அவர்கள் வாசித்திருக்கும், “நான் உங்கள் எல்லா விண்ணப்பங்களுக்கும் செவிகொடுப்பேன்” என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப, அவர் அவர்களுடைய எல்லா தேவைகளையும் சந்திக்கும் வாக்குத்தத்தம் அளித்து அவர்கள் எதற்காகவெல்லாம் ஜெபிக்கிறார்களோ அவற்றை எல்லாம் தந்தருளுவதே தேவனிடம் அவர்களுக்கு இருக்கும் விசுவாசம் கோருகிறது. அவர்கள் தேவன் யாரையும் நியாயந்தீர்க்கவோ அல்லது தண்டிக்கவோ கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள், ஏனெனில் அவர் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் நல்ல உறவைப் பேணும், எப்போதும் இரக்கம் உள்ள இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவாக இருக்கிறார். தேவனை ஜனங்கள் விசுவாசிக்கும் விதம் இதுவே: தாங்கள் கலகக்காரர்களாக அல்லது கீழ்ப்படிகிறவர்களாக இருந்தாலும் அவர் கண்மூடித்தனமாக அவர்களுக்கு எல்லாவற்றையும் அளிப்பார் என்ற நம்பிக்கையோடு அவர்கள் வெட்கம் இல்லாமல் தேவனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அவர் தங்களுக்கு எந்தத் தடையும் இன்றி அதுவும் இரட்டத்தனையாக “திருப்பிச் செலுத்த” வேண்டும் என்ற நம்பிக்கையோடு அவர்கள் தொடர்ந்து தேவனிடம் இருந்து “கடன்களை வசூலிக்கிறார்கள்”; அவர்கள் நினைக்கிறார்கள், தேவன் அவர்களிடம் இருந்து எதையும் பெற்றாரோ இல்லையோ, அவர் அவர்களால் ஏமாற்றப்பட மட்டுமே முடியும், மற்றும் அவரால் ஜனங்களைத் தன்னிச்சையாகத் திட்டமிட்டுக் கையாள முடியாது, அதைவிட, பல ஆண்டுகளாக மறைந்திருக்கும் அவரது ஞானத்தையும் நீதியான மனநிலையையும் தாம் விரும்பும் போதெல்லாம் அவர்களுடைய அனுமதி இல்லாமல் ஜனங்களிடம் வெளிப்படுத்த முடியாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். தேவன் அப்படியே விடுவித்துவிடுவார், அவ்வாறு செய்வதில் அவர் வெறுப்படைய மாட்டார், மற்றும் இது என்றென்றும் இப்படியே தொடர்ந்து நடக்கும் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் வெறுமனே தங்கள் பாவங்களை தேவனிடத்தில் அறிக்கையிடுகிறார்கள். தேவன் ஊழியம் கொள்ளும்படி வராமல், மனிதர்களுக்கு ஊழியம் செய்யவே வந்தார், மற்றும் அவர் இங்கே அவர்களது ஊழியக்காரராக இருக்கிறார் என்று வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் அவர்களுக்கு சும்மா கீழ்ப்படிவார் என்று நம்பி அவர்கள் தேவனுக்கு வெறுமனே உத்தரவிடுகிறார்கள். எப்போதும் நீங்கள் இந்த வகையிலேயே நம்பிவிட்டீர்கள் அல்லவா? எப்போதெல்லாம் உங்களுக்கு தேவனிடத்தில் இருந்து ஏதாவது ஒன்றைப் பெற முடியவில்லையோ அப்போதெல்லாம், நீங்கள் ஓடிவிட விரும்புகிறீர்கள்; ஏதாவது ஒன்றை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் மனக்கசப்பு அடைகிறீர்கள், மற்றும் அவருக்கு எதிராக எல்லா வகையான நிந்தனைகளையும் வீசும் அளவுக்குப் போகிறீர்கள். நீங்கள் தேவன் தமது ஞானத்தையும் அற்புதத்தையும் முழுமையாக வெளிப்படுத்தக் கூட அனுமதிப்பதில்லை; பதிலாக, தற்காலிகமான தொல்லைகள் அற்ற ஆறுதலை அனுபவிக்க மட்டுமே நீங்கள் விரும்புகிறீர்கள். இப்போதுவரை, தேவனை விசுவாசிப்பதில் உங்கள் சிந்தை அதே பழைய பார்வைகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. தேவன் சிறிதளவு தம் மகத்துவத்தைக் காட்டினாலே, நீங்கள் வருத்தம் அடைகிறீர்கள். உங்கள் வளர்ச்சி எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று இப்போது நீங்கள் பார்க்கிறீர்களா? உண்மையில் உங்கள் பழைய பார்வைகள் மாறாமல் இருக்கும்போது நீங்கள் எல்லோரும் தேவனுக்கு விசுவாசமாக இருப்பதாக கருதாதீர்கள். உனக்கு ஒன்றும் நேரிடாதபோது, நீ எல்லாம் சீராகச் செல்வதாக நம்புகிறாய், மேலும் தேவனிடத்தில் உன் அன்பு உச்சத்தை எட்டுகிறது. ஏதாவது சிறிய அளவில் நேர்ந்தால், நீ பாதாளத்தில் விழுந்து விடுகிறாய். இதுதான் தேவனுக்கு விசுவாசமுள்ளவனாக இருப்பதா?

இறுதிக் கட்ட ஜெயங்கொள்ளும் கிரியை இஸ்ரவேலில் தொடங்குவதாக இருந்தால், பின்னர் அத்தகைய கிரியைக்கு எந்த அர்த்தமும் இருக்காது. சீனாவில் செய்கின்ற போது மற்றும் உங்களிடம் செய்கின்ற போது இந்தக் கிரியை மிகவும் முக்கியமானதாக உள்ளது. நீங்கள்தான் மனுஷரில் மிகவும் தாழ்ந்தவர்கள், மிகக் குறைந்த அந்தஸ்தைக் கொண்ட ஜனங்கள்; நீங்கள்தான் சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருக்கிறீர்கள், மற்றும் நீங்கள்தான் ஆரம்பத்தில் தேவனை மிகவும் குறைவாகவே அங்கீகரித்தீர்கள். நீங்கள்தான் தேவனை விட்டு வெகுதூரம் வழிவிலகிப் போனவர்கள் மற்றும் மிகவும் கடுமையாக தீங்கிழைத்த ஜனங்கள். இந்தக் கட்டத்தின் கிரியை ஜெயங்கொள்ளுதலுக்காக மட்டுமே என்பதனால் வருங்கால சாட்சிக்காக உங்களைத் தெரிந்துகொள்வது மிகவும் பொருத்தமானதாக இல்லையா? ஜெயங்கொள்ளும் கிரியையின் முதல் படி உங்களிடம் செய்யப்படாவிட்டால், அதன் பின் வரவிருக்கும் ஜெயங்கொள்ளும் கிரியையை முன்னெடுத்துச் செல்வது கடினமாகிப் போய்விடும், ஏனெனில் தொடரவிருக்கும் ஜெயங்கொள்ளும் கிரியை இன்று செய்யப்படும் கிரியையின் உண்மைகளின் அடிப்படையிலேயே முடிவுகளை அடையும். ஒட்டுமொத்தமான ஜெயங்கொள்ளும் கிரியையின் ஆரம்பமே தற்போதைய ஜெயங்கொள்ளும் கிரியை ஆகும். ஜெயங்கொள்ளப்பட வேண்டிய முதல் பகுதியினர் நீங்களே; நீங்கள் ஜெயங்கொள்ளப்படப்போகும் அனைத்து மனுக்குலத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள். இன்று தேவன் செய்யும் அனைத்துக் கிரியையும் பெரியது என்றும் அவர் ஜனங்கள் தங்கள் சொந்த மாறுபாட்டை அறிந்துகொள்ள அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் அந்தஸ்தையும் வெளிப்படுத்துகிறார் என்று உண்மையிலேயே அறிவுபடைத்த ஜனங்கள் உணர்வார்கள். அவருடைய வார்த்தைகளின் நோக்கமும் அர்த்தமும் ஜனங்களை ஊக்கமிழக்கச் செய்யவோ அல்லது அவர்களைக் கவிழ்த்துப்போடவோ அல்ல. அவரது வார்த்தைகளின் மூலம் உள்ளொளியையும் இரட்சிப்பையும் அவர்கள்தான் அடைய வேண்டும்; இது அவரது வார்த்தைகள் மூலம் தங்கள் ஆவியை விழிப்பூட்டுவது ஆகும். பூமியின் சிருஷ்டிப்பில் இருந்தே தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை அறியாமலும் விசுவாசிக்காமலுமே மனிதன் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்து விட்டான். இந்த ஜனங்கள் தேவனின் மாபெரும் இரட்சிப்பில் உள்ளடக்கப்பட்டு தேவனால் பெரிதும் எழுப்பப்பட முடியும் என்பது உண்மையில் தேவனின் அன்பைக் காட்டுகிறது; உண்மையாகப் புரிந்துகொள்ளுபவர்கள் இதை விசுவாசிப்பார்கள். அத்தகைய அறிவு இல்லாதவர்களைக் குறித்து என்ன செய்வது? அவர்கள் கூறுவார்கள், “ஆ, நாங்கள் மோவாபின் சந்ததியார் என்று தேவன் கூறுகிறார்; அவர் இதைத் தம் சொந்த வார்த்தைகளால் கூறினார். நம்மால் இன்னும் ஒரு நல்ல முடிவை அடைய முடியுமா? நாம் மோவாபின் சந்ததியார், நாம் அவரைக் கடந்த காலத்தில் எதிர்த்தோம். நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்க தேவன் வந்திருக்கிறார்; ஆரம்பத்தில் இருந்தே அவர் எவ்விதம் நம்மை நியாயந்தீர்த்தார் என்பதை நீ பார்க்கவில்லையா? நாம் தேவனை எதிர்த்த காரணத்தினால், இவ்வாறுதான் நாம் சிட்சிக்கப்பட வேண்டும்.” இந்த வார்த்தைகள் சரியானவைகளாக இருக்கின்றனவா? இன்று தேவன் உங்களை நியாயந்தீர்க்கிறார், உங்களை சிட்சிக்கிறார், மற்றும் உங்களை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார், ஆனால் உன் ஆக்கினைத் தீர்ப்பின் நோக்கத்தை அறிய வேண்டியது நீதான் என்பதை நீ அறியவேண்டும். நீ உன்னை அறிந்து கொள்ள முடிவதற்கும், உன் மனநிலை மாறக் கூடுவதற்கும், இன்னும், நீ உன் மதிப்பை அறிந்துகொள்ளக் கூடுவதற்கும், தேவனுடைய செயல்கள் எல்லாம் நீதியானவையும், அவரது மனநிலைக்கும் அவரது கிரியையின் தேவைக்கும் ஏற்றவையும், அவர் மனிதனுடைய இரட்சிப்பின் திட்டத்துக்கு இணங்க கிரியை செய்கிறார் மற்றும் அவரே மனிதனை நேசிக்கின்ற, இரட்சிக்கின்ற, நியாயந்தீர்க்கின்ற மற்றும் சிட்சிக்கின்ற நீதியுள்ள தேவன் என்று உணர்வதற்கும் அவர் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறார், சபிக்கிறார், நியாயந்தீர்க்கிறார், மற்றும் சிட்சிக்கிறார். நீ மிகத் தாழ்ந்த அந்தஸ்துள்ளவன், நீ சீர்கேடடைந்தவன் மற்றும் கீழ்ப்படியாதவன் என்று மட்டும் நீ அறிந்து, ஆனால் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சையின் மூலம் இன்று உன்னில் அவர் செய்யும் அவரது இரட்சிப்பைத் தெளிவாக விளக்க விரும்புகிறார் என்று அறியாவிட்டால், அதன்பின் அனுபவத்தை அடைய உனக்கு வேறு வழியில்லை, அதைவிட தொடர்ந்து முன்னேற உனக்குத் திறனும் இருக்காது. தேவன் நியாயந்தீர்க்கவும், சபிக்கவும், சிட்சிக்கவும், இரட்சிக்கவும் வந்திருக்கிறாரே ஒழிய கொல்வதற்காகவோ அல்லது அழிப்பதற்காகவோ அல்ல. அவரது 6,000-ஆண்டுக்கால நிர்வாகத் திட்டம் ஒரு முடிவுக்கு வரும் வரை—ஒவ்வொரு மனித வகையினரின் முடிவையும் அவர் வெளிப்படுத்தும் முன்—பூமியில் தேவனின் கிரியை இரட்சிப்புக்காகவே இருக்கும்; அவரை நேசிப்பவர்களை பரிபூரணப்படுத்துவதும், இவ்வாறு முற்றிலும் அவரது ஆளுகையின் கீழ் அடங்கியிருக்க அவர்களைக் கொண்டுவருவது மட்டுமே அதன் நோக்கமாக இருக்கிறது. தேவன் ஜனங்களை எவ்வாறு இரட்சித்தாலும், அவர்களது பழைய சாத்தானின் சுபாவத்தில் இருந்து உடைத்து வெளியேறும்படி செய்வதன் மூலம் இவையெல்லாம் செய்யப்படுகின்றன; அதாவது, அவர்களை ஜீவனைத் தேடும்படி செய்து அவர் இரட்சிக்கிறார். அவர்கள் அவ்விதம் செய்யவில்லை என்றால், பின்னர் தேவனின் இரட்சிப்பை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு ஒரு வழியும் இருக்காது. இரட்சிப்பு என்பது தேவன் தாமே செய்யும் கிரியையாகும், மேலும் ஜீவனைத் தேடுவது என்பது இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளுவதற்காக மனிதன் செய்யவேண்டிய ஒரு விஷயமாகும். மனிதனின் பார்வையில், இரட்சிப்பு என்பது தேவனின் அன்பாகும், மற்றும் தேவனின் அன்பானது சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் சாபங்களாக இருக்க முடியாது; இரட்சிப்பு என்பது அன்பு, மனதுருக்கம் மற்றும், அதற்குமேல் ஆறுதலின் வார்த்தைகளோடு தேவனால் வழங்கப்பட்ட வரம்பற்ற ஆசீர்வாதங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். தேவன் மனிதனை இரட்சிக்கும் போது, அவர்கள் தங்கள் இருதயங்களைத் தேவனுக்குக் கொடுக்கும்படியாக அவர்களைத் தமது ஆசீர்வாதங்கள் மற்றும் கிருபையைக் கொண்டு மனதை இளகச்செய்தே அவ்வாறு செய்கிறார் என்று மக்கள் நம்புகிறார்கள். அதாவது, மனிதனை அவர் தொடுவதே அவர்களை அவர் இரட்சிப்பதாகும். இது போன்ற இரட்சிப்பு ஓர் ஒப்பந்தத்தை செய்வதன் மூலமே செய்யப்படுகிறது. தேவன் நூறத்தனையாய் அளிக்கும்போதே மனிதன் தேவ நாமத்துக்கு முன்னால் கீழ்ப்படிய வருகிறான் மற்றும் அவருக்கு ஏற்புடையதை செய்ய முயன்று அவருக்கு மகிமையைக் கொண்டுவருகிறான். தேவன் மனுக்குலத்துக்கான நோக்கமாகக் கொண்டிருப்பது இதையல்ல. சீர்கெட்ட மனுக்குலத்தை இரட்சிக்கவே தேவன் பூமியில் கிரியை செய்ய வந்திருக்கிறார்; இதில் எந்தப் பொய்யும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால், அவர் தாமே இந்தக் கிரியையைச் செய்ய நிச்சயமாக வந்திருக்க மாட்டார். கடந்த காலத்தில், அளவிலா அன்பையும் மனதுருக்கத்தையும் காட்டுவது அவரது இரட்சிப்பின் வழிமுறையில் அடங்கி இருந்ததனாலேயே அவர் தமது எல்லாவற்றையும் முழு மனுக்குலத்திற்கும் ஈடாக சாத்தானுக்குக் கொடுத்தார். நிகழ்காலம் கடந்தகாலத்தைப் போல் இல்லை: இன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரட்சிப்பு கடைசி நாட்களின் காலத்தில், வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப் படும்போது நிகழ்கிறது; உங்களது இரட்சிப்பின் வழிமுறை அன்போ அல்லது மனதுருக்கமோ அல்ல, ஆனால் சிட்சையும் நியாயத்தீர்ப்பும் ஆகும், இதனால் மனிதன் மிகவும் முழுமையாக இரட்சிக்கப்படலாம். இவ்வாறு, நீங்கள் பெறுவதெல்லாம் சிட்சை, நியாயத்தீர்ப்பு மற்றும் இரக்கமற்ற முறையில் கடுமையாகக் கடிந்துகொள்ளுதலும் ஆகும், ஆனால் இதை அறியுங்கள்: இந்த இரக்கமற்ற கடிந்துகொள்ளுதல் என்பது சிறு அளவில் கூடத் தண்டனை அல்ல. என்னுடைய வார்த்தைகள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் சரி, ஒரு சில வார்த்தைகள் உங்களுக்கு முற்றிலும் இரக்கமற்றதாக தோன்றுவதைத் தவிர வேறொன்றும் உங்களுக்கு நேரிடாது, மேலும் நான் எவ்வளவு கோபமாக இருந்தாலும் சரி, உங்கள் மேல் என்ன பொழியும் என்றால் போதனையின் அமர்ந்த வார்த்தைகளே, மேலும் நான் உங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது உங்களைக் கொன்றுவிடவோ எண்ணவில்லை. இது எல்லாம் உண்மை அல்லவா? இப்போதெல்லாம், அது நீதியான நியாயத்தீர்ப்பாக இருந்தாலும் அல்லது இரக்கமற்ற புடமிடுதல் மற்றும் சிட்சையாக இருந்தாலும், யாவும் இரட்சிப்புக்கானவையே. இன்று ஒவ்வொன்றும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அல்லது மனிதர்களின் பிரிவுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து தேவனுடைய வார்த்தைகள் மற்றும் கிரியைகளின் நோக்கமும் தேவனை உண்மையிலேயே நேசிப்பவர்களை இரட்சிப்பதாகவே இருக்கிறது. நீதியான நியாயத்தீர்ப்பு மனிதனை சுத்திகரிப்பதற்குக் கொண்டுவரப்படுகிறது, மற்றும் இரக்கமற்ற புடமிடல் அவர்களைச் சுத்தமாக்கச் செய்யப்படுகிறது; கடுமையான வார்த்தைகள் அல்லது சிட்சை ஆகிய இரண்டும் சுத்திகரிப்பதற்காகச் செய்யப்படுகின்றன, மேலும் அவை எல்லாம் இரட்சிப்புக்காகவே செய்யப்படுகின்றன. இவ்வாறு, இன்றைய இரட்சிப்பின் முறை கடந்தகாலத்தைப் போன்றதல்ல. இன்று, நீங்கள் இரட்சிப்பிற்குள் நீதியான நியாயத்தீர்ப்பு மூலம் கொண்டுவரப்பட்டிருக்கிறீர்கள், மற்றும் இது உங்கள் ஒவ்வொருவரையும் வகையின் படி வகைப்படுத்த ஒரு நல்ல கருவியாகும். மேலும், இரக்கமற்ற சிட்சை உங்களது மாபெரும் இரட்சிப்புக்கு உதவுகிறது—மற்றும் இத்தகைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ளும்போது உங்களிடம் சொல்ல என்ன இருக்கிறது? ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை நீங்கள் எப்போதும் இரட்சிப்பை அனுபவிக்கவில்லையா? நீங்கள் மாம்சமாகிய தேவனை கண்டிருக்கிறீர்கள் மற்றும் அவருடைய சர்வவல்லமையையும் ஞானத்தையும் உணர்ந்திருக்கிறீர்கள்; மேலும் தொடர்ந்து கடுமையான கடிந்துகொள்ளுதலையும் சிட்சித்தலையும் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள். இருப்பினும், நீங்கள் மேலான கிருபையையும் பெறவில்லையா? வேறு யாரையும் விட உங்கள் ஆசீர்வாதங்கள் பெரிதானவை அல்லவா? உங்கள் கிருபைகள் சாலொமோன் அனுபவித்த மகிமை மற்றும் செல்வங்களை விடவும் ஏராளமானவை! அதைப் பற்றிச் சிந்தியுங்கள்: என் வருகையின் நோக்கம் உங்களை இரட்சிப்பதற்காக அல்லாமல் மாறாக உங்களை ஆக்கினைக்கு உள்ளாகத் தீர்ப்பதும் தண்டிப்பதுமாக இருந்தால், உங்கள் நாட்கள் இவ்வளவு நீண்டதாக நீடித்திருக்குமா? மாம்சமும் இரத்தமுமான பாவம் நிறைந்த மனிதர்களாகிய நீங்கள் இன்றுவரை உயிர்பிழைத்து வாழ்ந்திருக்க முடியுமா? உங்களைத் தண்டிப்பது மட்டுமே என் இலக்காக இருந்திருந்தால், பின் ஏன் நான் மாம்சமாகி இத்தகைய மாபெரும் காரியத்தில் இறங்க வேண்டும்? வெறும் மனிதர்களாகிய உங்களைத் தண்டிப்பதை ஒரு ஒற்றை வார்த்தையைக் கூறியே செய்திருக்கலாமே? நோக்கத்தோடு ஆக்கினைக்குள்ளாக உங்களைத் தீர்த்த பின்னர் உங்களை இன்னும் நான் அழிப்பது தேவையா? நீங்கள் என்னுடைய இந்த வார்த்தைகளை இன்னும் விசுவாசிக்கவில்லையா? நான் மனிதனை வெறும் அன்பாலும் மனதுருக்கத்தாலும் இரட்சிக்க முடியுமா? அல்லது மனிதனை இரட்சிக்க சிலுவையில் அறைதலை மட்டுமே என்னால் பயன்படுத்த முடியுமா? மனிதனை முற்றிலும் கீழ்ப்படிதலுள்ளவனாக மாற்ற என்னுடைய நீதியான மனநிலை இன்னும் அதிக அளவில் உகந்ததாக இல்லையா? மனிதனை முற்றிலுமாக இரட்சிக்க அது இன்னும் அதிகத் திறனுடையதாக இல்லையா?

என் வார்த்தைகள் கடுமையானவையாக இருந்தாலும், அவை எல்லாம் மனிதனுடைய இரட்சிப்புக்காகக் கூறப்படுகின்றன, ஏனெனில் நான் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறேனே தவிர மனிதனுடைய மாம்சத்தைத் தண்டிக்கவில்லை. இந்த வார்த்தைகள் மனிதனை ஒளியில் வாழவும், ஒளி இருக்கிறது என்பதை அறியவும், ஒளி விலைமதிப்பற்றது என்பதை அறியவும், இன்னும் அதிகமாக இந்த வார்த்தைகள் அவர்களுக்கு எவ்வளவு நன்மையானவை என்பதை அவர்கள் அறிவதோடு தேவனே இரட்சிப்பு என்றும் அறியச் செய்கின்றன. சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த பல வார்த்தைகளை நான் கூறியிருந்தாலும், உண்மையில் அவை எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவோ அது உனக்குச் செய்யப்படவில்லை. நான் என் கிரியையைச் செய்யவும் என் வார்த்தைகளைக் கூறவும் வந்திருக்கிறேன், என் வார்த்தைகள் கண்டிப்பானவையாக இருந்தாலும், அவை உங்கள் சீர்கேடு மற்றும் உங்கள் மாறுபாட்டைக் குறித்த நியாயத்தீர்ப்பாகப் பேசப்படுகின்றன. சாத்தானின் ஆதிக்கத்தில் இருந்து மனிதனை இரட்சிப்பதே நான் இதைச் செய்வதற்கான நோக்கமாக இருக்கிறது; நான் மனிதனை இரட்சிக்க என் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். என் வார்த்தைகளைக் கொண்டு மனிதனுக்குத் தீங்கு செய்வது என் நோக்கமல்ல. என் கிரியையில் முடிவுகளை அடையவே என் வார்த்தைகள் கடுமையாக இருக்கின்றன. இத்தகைய கிரியை மூலமே மனிதர் தங்களை அறிந்து தங்களது மாறுபாடான மனநிலையில் இருந்து விடுபட்டு வருவார்கள். சத்தியத்தைப் புரிந்துகொண்டபின் அதைக் கடைப்பிடிக்க ஜனங்களை அனுமதிப்பதும், தங்கள் மனநிலையில் மாற்றங்களை அடைவதும், தங்களைப் பற்றியும் தேவனின் கிரியையைப் பற்றியும் அறிவைப் பெறுவதுமே வார்த்தைகளின் கிரியையின் மாபெரும் முக்கியத்துவம் ஆகும். வார்த்தைகளைப் பேசுவதன் மூலம் கிரியையைச் செய்வது மட்டுமே தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்பைச் சாத்தியப்படுத்தும், மற்றும் வார்த்தைகளால் மட்டுமே சத்தியத்தை விளக்க முடியும். இந்த வகையில் கிரியை செய்வதே மனிதனை ஜெயங்கொள்ளுவதற்கான சிறந்த வழியாகும்; வார்த்தைகளைக் கூறுவதை விட, சத்தியத்தையும் தேவனின் கிரியையையும் குறித்த தெளிவான புரிதலை வேறு எந்த முறையும் ஜனங்களுக்கு அளிக்கும் திறன் கொண்டது அல்ல. இவ்வாறு, தமது இறுதிக் கட்ட கிரியையில், இன்னும் மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத சத்தியங்களையும் இரகசியங்கள் அனைத்தையும் அவர்களுக்காக வெளிப்படுத்த, சத்திய வழியையும் ஜீவனையும் தேவனிடம் இருந்து அடைய அவர்களை அனுமதித்து, அவ்வகையில் அவருடைய சித்தத்தை நிறைவேற்ற தேவன் மனிதனோடு பேசுகிறார். தேவ சித்தத்தை அவர்கள் நிறைவேற்ற அவர்களுக்கு உதவுவதுதான் மனிதன் மீது தேவன் செய்யும் கிரியையின் நோக்கமாகும், மேலும் அது அவர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரச் செய்யப்படுகிறது. ஆகவே, மனிதனை இரட்சிக்கும் காலகட்டத்தின் போது, அவர்களைத் தண்டிக்கும் கிரியையை அவர் செய்வதில்லை. மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவரும் வேளையில், தேவன் தீங்கைத் தண்டிப்பதோ நன்மைக்குப் பிரதிபலன் அளிப்பதோ இல்லை, அதுமட்டுமல்லாமல் பல வகையான ஜனங்களின் சென்றடையும் இடங்களை அவர் வெளிப்படுத்துவதும் இல்லை. மாறாக, அவரது இறுதிக் கட்ட கிரியை முடிவடைந்த பின்னர் மட்டுமே, தீங்கைத் தண்டித்து நன்மைக்குப் பிரதிபலன் அளிக்கும் கிரியையைச் செய்வார் மற்றும் அதன்பின் அவர் அனைத்து வெவ்வேறு வகையான ஜனங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்துவார். இரட்சிக்கப்படக் கூடாதவர்களே உண்மையில் தண்டிக்கப்படுகிறவர்களாக இருப்பார்கள், அதே வேளையில் தேவனின் இரட்சிப்பின் சமயத்தில் தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றவர்களே இரட்சிக்கப்படுகிறவர்களாக இருப்பார்கள். தேவனுடைய இரட்சிப்பின் கிரியை செய்யப்படும் போது, முடிந்த வரையில் இரட்சிக்கப்படக் கூடிய ஒவ்வொரு தனி நபரும் இரட்சிக்கப்படுவார்கள், மற்றும் ஒருவரும் நிராகரிக்கப்பட மாட்டார்கள், ஏனெனில் மனிதனை இரட்சிப்பதே தேவனுடைய கிரியையின் நோக்கமாகும். மனிதனைத் தேவன் இரட்சிக்கும் சமயத்தில், தங்கள் மனநிலையில் மாற்றத்தை அடைய முடியாத அனைவரும்—அது மட்டும் அல்லாமல் முற்றிலுமாக தேவனுக்குக் கீழ்ப்படிய முடியாதவர்களும்—தண்டனைக்குரிய பொருளாவார்கள். வார்த்தைகளின் கிரியை எனப்படும் இந்தக் கட்ட கிரியையானது ஜனங்கள் புரிந்துகொள்ளாத எல்லா வழிமுறைகளையும் இரகசியங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தும், அதனால் அவர்கள் தேவ சித்தத்தையும் மற்றும் அவர்களிடம் இருந்து தேவனுக்குத் தேவையானவற்றையும் புரிந்துகொள்ள முடியும், அதனால் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் படி நடக்கவும் தங்கள் மனநிலைகளில் மாற்றத்தை அடையவும் தேவையான முன்னிபந்தனைகளைக் கொண்டிருக்கவும் முடியும். தம்முடைய கிரியையைச் செய்ய தேவன் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துகிறார் மேலும் சிறிதளவு கலகத்துடன் இருப்பதற்காக ஜனங்களைத் தண்டிப்பதில்லை; இது ஏனென்றால் இப்போதுதான் இரட்சிப்பின் கிரியைக்கான சமயம் ஆகும். கலகத்துடன் நடந்து கொள்ளுகிற எவரேனும் ஒருவர் தண்டிக்கப்பட்டால், பின்னர் இரட்சிக்கப்படுவதற்கு ஒருவருக்கும் வாய்ப்பு கிடைக்காது; எல்லோரும் தண்டிக்கப்பட்டு பாதாளத்தில் விழுவார்கள். மனிதனை நியாயந்தீர்க்கும் வார்த்தைகளின் நோக்கம் அவர்கள் தங்களை அறிவதற்கும் தேவனுக்குக் கீழ்ப்படிவதற்கும் அவர்களை அனுமதிப்பதுதான்; அத்தகைய நியாயத்தீர்ப்பைக் கொண்டு அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல. வார்த்தைகளின் கிரியையின் காலத்தில், பல ஜனங்கள் மாம்சமாகிய தேவனிடத்தில் தங்கள் மாறுபாட்டையும் விரோதத்தையும், அது மட்டும் அல்லாமல் தங்கள் கீழ்ப்படியாமையையும் வெளிப்படுத்துவார்கள். இருந்த போதிலும், அதன் விளைவாக அவர் இந்த எல்லா மக்களையும் தண்டிக்க மாட்டார், ஆனால் அதற்குப் பதில் முற்றிலுமாக சீர்கெட்டுப் போனவர்களையும் இரட்சிக்கப்படக் கூடாதவர்களையும் மட்டுமே புறம்பே தள்ளிவிடுகிறார். அவர் அவர்களுடைய மாம்சத்தைச் சாத்தானிடம் கொடுப்பார், மேலும், சில நேர்வுகளில், அவர்களுடைய மாம்சத்துக்கு முடிவுகட்டுவார். மீந்திருப்பவர்கள் தொடர்ந்து பின்தொடர்வார்கள் மேலும் அடக்கியாளப்பட்டுத் திருத்தப்படும் அனுபவத்தைப் பெறுவார்கள். பின்தொடரும் போது, இந்த ஜனங்களால் அடக்கியாளப்பட்டுத் திருத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல், மேலும் மேலும் சீரழிந்தால், பின்னர் அவர்கள் இரட்சிப்புக்கான தங்கள் கடைசி வாய்ப்பையும் இழந்து போவார்கள். தேவனுடைய வார்த்தைகளால் ஜெயங்கொள்ளப்பட்டு கீழ்ப்படியும் ஒவ்வொருவருக்கும் இரட்சிப்புக்கான ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்; இந்த ஜனங்கள் ஒவ்வொருவருக்குமான தேவனின் இரட்சிப்பு அவரது மிகுந்த இரக்கத்தைக் காட்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்களிடத்தில் மிகவும் பொறுமை காட்டப்படும். ஜனங்கள் தங்கள் தவறான பாதைகளில் இருந்து திரும்பினால், மேலும் அவர்கள் மனந்திரும்ப முடியுமானால், அவரது இரட்சிப்பைப் பெற தேவன் அவர்களுக்கு வாய்ப்புகளை அளிப்பார். மனிதர்கள் தேவனுக்கு விரோதமாய் முதன்முதலில் கலகம் செய்யும்போது, அவர்களைக் கொன்றுபோட அவருக்கு விருப்பம் இல்லாதிருக்கிறது; மாறாக அவர்களை இரட்சிக்க அவரால் முடிந்ததை எல்லாம் அவர் செய்கிறார். யாருக்காவது இரட்சிப்புக்கான இடம் இல்லாத போது, தேவன் அவர்களைப் புறம்பே தள்ளிவிடுகிறார். சில ஜனங்களைத் தண்டிப்பதில் தேவன் நெடிய சாந்தமுள்ளவராக இருப்பதற்கான காரணம் அவர் இரட்சிக்கப்படக்கூடிய எல்லோரையும் இரட்சிக்க விரும்புவதே ஆகும். வார்த்தைகளை மட்டும் கொண்டு அவர் ஜனங்களை நியாயந்தீர்க்கிறார், அவர்களுக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கிறார், மற்றும் வார்த்தைகள் மூலம் வழிகாட்டுகிறார் மேலும் அவர் ஒரு கோலைப் பயன்படுத்தி அவர்களைக் கொல்வதில்லை. வார்த்தைகளைப் பயன்படுத்தி மனிதர்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வருவதே இறுதிக்கட்ட கிரியையின் நோக்கமும் முக்கியத்துவமும் ஆகும்.

முந்தைய: பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து

அடுத்த: தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லை வகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக