தேவனை அறிவது என்பது தெய்வ பயம் மற்றும் தீமையைத் தவிர்க்கும் பாதை ஆகும்

நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஜீவகாலம் முழுவதும் தேவனை எவ்வாறு விசுவாசித்தீர்கள் என்பதைப் புதிதாக ஆராய வேண்டும். இதன் மூலம் தேவனைப் பின்பற்றும் செயல்பாட்டில், நீ உண்மையிலேயே புரிந்துகொண்டிருக்கிறாயா, உண்மையிலேயே கிரகித்துக்கொண்டிருக்கிறாயா, தேவனை உண்மையாக அறிந்துகொள்கிறாயா, பல்வேறு வகையான மனிதர்களிடம் தேவன் என்ன மனநிலையைக் கொண்டிருக்கிறார், தேவன் உன் மீது நடப்பிக்கும் கிரியையை நீ உண்மையிலேயே புரிந்துகொள்கிறாயா, உன் ஒவ்வொரு கிரியையும் தேவன் எவ்வாறு வரையறுக்கிறார் என்பதை நீ காணலாம். உன் பக்கத்திலிருக்கும் இந்த தேவன், உன் முன்னேற்றத்தின் திசையை வழிநடத்துகிறார், உன் விதியை நிர்ணயிக்கிறார், உன் தேவைகளை வழங்குகிறார் என இவை எல்லாவற்றையும் சொல்லி முடிக்கும்போது, இந்த தேவனை எவ்வளவாக நீ புரிந்துகொள்கிறாய். இந்த தேவனைப் பற்றி உனக்கு உண்மையில் எவ்வளவு தெரியும்? ஒவ்வொரு தனிப்பட்ட நாளிலும் உன்மீது அவர் என்ன கிரியை செய்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? அவருடைய ஒவ்வொரு கிரியையிலும் அவர் அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் நோக்கங்களைப் பற்றி உனக்குத் தெரியுமா? அவர் உன்னை எவ்வாறு வழிநடத்துகிறார் என்று தெரியுமா? அவர் உனக்காக எந்த வழியை வழங்குகிறார் என்பது உனக்குத் தெரியுமா? அவர் உன்னை வழிநடத்தும் முறைகள் உனக்குத் தெரியுமா? அவர் உன்னிடமிருந்து எதைப் பெற விரும்புகிறார், உன்னிடம் அவர் எதை நிறைவேற்ற விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? நீ நடந்துகொள்ளும் பல்வேறு வழிகளைப் பற்றி அவர் வைத்திருக்கும் மனநிலை உனக்குத் தெரியுமா? நீ அவருக்குப் பிரியமான ஒரு மனிதனாக உள்ளாயா என்பது உனக்குத் தெரியுமா? அவருடைய மகிழ்ச்சி, கோபம், துக்கம் மற்றும் சந்தோஷம் ஆகியவற்றின் பிறப்பிடம், அவற்றின் பின்னால் உள்ள எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் மற்றும் அவருடைய சாராம்சம் பற்றி உனக்குத் தெரியுமா? இறுதியாக, நீ நம்பும் இந்த தேவன் எந்த வகையான தேவன் என்று உனக்குத் தெரியுமா? இந்தக் கேள்விகள் மற்றும் பிற கேள்விகள் எல்லாம் நீ ஒருபோதும் புரிந்துகொள்ளாத அல்லது சிந்திக்காத ஒன்றா? தேவன் மீதான உன் விசுவாசத்தைப் பின்பற்றுவதில், தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான புரிதல் மற்றும் அனுபவத்தின் மூலம், அவரைப் பற்றிய உன் தவறான புரிதல்களை நீக்கிவிட்டாயா? தேவனுடைய ஒழுக்கத்தையும் சிட்சையையும் பெற்ற பிறகு, உண்மையான கீழ்ப்படிதலையும் அக்கறையையும் அடைந்துவிட்டாயா? தேவனுடைய சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் மத்தியில், மனிதனுடைய கலகத்தனத்தையும் சாத்தானுக்குரிய தன்மையையும் அறிந்து, தேவனுடைய பரிசுத்தத்தைப் பற்றி சிறிதளவு புரிதலையாவது பெற்றிருக்கிறாயா? தேவனுடைய வார்த்தைகளின் வழிகாட்டுதல் மற்றும் வெளிச்சத்தின் கீழ், நீ ஜீவன் குறித்த ஒரு புதிய கண்ணோட்டத்தை வைத்திருக்கத் தொடங்கியிருக்கிறாயா? தேவன் அனுப்பிய சோதனைகளுக்கு மத்தியில், மனிதனுடைய குற்றங்களுக்கான அவருடைய சகிப்பின்மையையும், அவர் உன்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதையும், அவர் உன்னை எவ்வாறு இரட்சிக்கிறார் என்பதையும் உணர்ந்திருக்கிறாயா? தேவனைத் தவறாகப் புரிந்துகொள்வது என்றால் என்ன அல்லது இந்தத் தவறான புரிதலை அகற்றுவது எவ்வாறு என உனக்குத் தெரியாவிட்டால், நீ தேவனுடன் உண்மையான ஐக்கியத்திற்குள் ஒருபோதும் நுழைந்ததில்லை, தேவனைப் புரிந்துகொள்ளவில்லை என்று ஒருவர் கூறலாம் அல்லது குறைந்தபட்சம் நீ அவரைப் புரிந்துகொள்ள ஒருபோதும் விரும்பவில்லை என்று சொல்லலாம். தேவனுடைய ஒழுக்கம் மற்றும் சிட்சை என்னவென்று உனக்குத் தெரியாவிட்டால், கீழ்ப்படிதல் மற்றும் அக்கறை என்னவென்று உனக்கு நிச்சயமாகவே தெரியாது அல்லது குறைந்தபட்சம் நீ உண்மையிலேயே தேவனுக்குக் கீழ்ப்படியமல் அல்லது அவர் மீது அக்கறை கொள்ளாமல் இருப்பாய். தேவனுடைய சிட்சையையும் நியாயத்தீர்ப்பையும் நீ ஒருபோதும் அனுபவித்திருக்கவில்லை என்றால், அவருடைய பரிசுத்தம் என்னவென்று உனக்குத் தெரியாமல் போகும் மற்றும் மனிதனுடைய கலகம் என்ன என்பதும் உனக்குத் தெரியாமல் போகும். நீ ஒருபோதும் ஜீவன் குறித்த சரியான கண்ணோட்டத்தை கொண்டிராமல் அல்லது ஜீவிதத்தில் சரியான குறிக்கோளைக் கொண்டிராமல், ஜீவிதத்தில் உன் எதிர்காலப் பாதையைப் பற்றி இன்னும் குழப்பமாக மற்றும் முன்னேறத் தயங்கும் அளவிற்கு சந்தேக மனநிலையில் இருந்தால், தேவனுடைய ஞானத்தையும் வழிகாட்டலையும் நீ ஒருபோதும் பெறவில்லை என்பதையே அது உறுதிப்படுத்தும். உண்மையிலேயே தேவனுடைய வார்த்தைகள் ஒருபோதும் உனக்கு வழங்கப்படவில்லை அல்லது நீ நிரப்பப்படவில்லை என்றும் ஒருவர் கூறலாம். நீ இன்னும் தேவனுடைய சோதனைகளுக்கு ஆளாகவில்லை என்றால், மனிதனுடைய குற்றங்களுக்கு தேவனுடைய சகிப்பின்மை என்ன என்பதை நீ நிச்சயமாக அறிய மாட்டாய் அல்லது முடிவாக தேவன் உன்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதை நீ புரிந்துகொள்ள மாட்டாய் மற்றும் மனிதனை நிர்வகிக்கும் மற்றும் இரட்சிக்கும் அவருடைய கிரியை என்ன என்பதையும் நீ புரிந்துகொள்ள மாட்டாய் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு மனிதர் எத்தனை வருடங்கள் தேவனை நம்பினாலும், அவர் ஒருபோதும் தேவனுடைய வார்த்தைகளில் எதையும் அனுபவித்திருக்கவில்லை அல்லது உணர்ந்திருக்கவில்லை என்றால், அவர் நிச்சயமாக இரட்சிப்பை நோக்கிய பாதையில் நடக்கவில்லை, நிச்சயமாகவே தேவன் மீது அவர் வைத்திருக்கும் விசுவாசம் உண்மையான உள்ளடக்கம் இல்லாத ஒன்றாக இருக்கும், நிச்சயமாகவே தேவனைப் பற்றிய அவருடைய அறிவும் பூஜ்ஜியமாக இருக்கும் மற்றும் தேவனிடம் பயபக்தியுடன் இருப்பது என்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியாமல் இருக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தேவனுடைய உடைமைகள் மற்றும் ஜீவிதம், தேவனுடைய சாராம்சம், தேவனுடைய மனநிலை என இவை அனைத்தும் அவருடைய வார்த்தைகளில் மனிதகுலத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. தேவனுடைய வார்த்தைகளை அவன் அனுபவிக்கும் போது, மனிதன் அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரும் செயல்பாட்டில், தேவன் பேசும் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும், தேவனுடைய வார்த்தைகளின் மூலத்தையும் பின்னணியையும் புரிந்துகொள்வதற்கும், தேவனுடைய வார்த்தைகளின் நோக்க விளைவைப் புரிந்துகொள்வதற்கும் உணர்ந்துகொள்வதற்கும் தொடங்குவான். மனிதகுலத்தைப் பொறுத்தவரையில், இவை அனைத்தும் சத்தியத்தையும் ஜீவனையும் அடைவதற்கும், தேவனுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும், அவனுடைய மனநிலையில் மாற்றமடைவதற்கும், தேவனுடைய ராஜரீகம் மற்றும் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதற்கும், மனிதன் அவற்றை அனுபவிக்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் அடைய வேண்டும். மனிதன் இவற்றை அனுபவிக்கும், புரிந்துகொள்ளும் மற்றும் அடையும் அதே நேரத்தில், அவன் படிப்படியாக தேவனைப் பற்றிய புரிதலைப் பெற்றிருப்பான். இந்த நேரத்தில் தன்னைப் பற்றியும் அவன் பல்வேறு அளவிலான அறிவைப் பெற்றிருப்பான். இந்த புரிதலும் அறிவும் மனிதன் கற்பனை செய்த அல்லது இயற்றிய ஒன்றிலிருந்து வெளிவருவதில்லை. மாறாக, அவன் தனக்குள்ளேயே புரிந்துகொள்ளும், அனுபவிக்கும், உணரும், உறுதிப்படுத்துகிறவற்றிலிருந்து வெளிவருகிறது. இவற்றைப் புரிதல், அனுபவித்தல், உணர்தல் மற்றும் உறுதிப்படுத்திய பின்னரே தேவனைப் பற்றிய மனிதனுடைய அறிவு உள்ளடக்கத்தைப் பெறுகிறது. இந்த நேரத்தில் மனிதன் பெறும் அறிவு மட்டுமே நிஜமானது, உண்மையானது மற்றும் துல்லியமானது. அவருடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளுதல், அனுபவித்தல், உணர்தல் மற்றும் உறுதிப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் தேவனைப் பற்றிய உண்மையான புரிதலையும் அறிவையும் அடைவதற்கான இந்த செயல்முறையானது மனிதனுக்கும் தேவனுக்கும் இடையேயான உண்மையான ஐக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்த வகையான ஐக்கியத்தின் மத்தியில், மனிதன் உண்மையிலேயே தேவனுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் தொடங்குகிறான். உண்மையிலேயே தேவனுடைய உடைமைகளையும் இருப்பையும் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் தொடங்குகிறான். தேவனுடைய சாரத்தைப் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் உண்மையிலேயே தொடங்குகிறான். படிப்படியாக தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் தொடங்குகிறான். எல்லா சிருஷ்டிப்புகளிலும் தேவனுடைய ஆதிக்கத்தின் உண்மை பற்றிய உண்மையான உறுதியையும், சரியான வரையறையையும், தேவனுடைய அடையாளம் மற்றும் நிலையைப் பற்றிய முக்கியமான தாக்கத்தையும் அறிவையும் பெறுகிறான். இந்த வகையான ஐக்கியத்தின் மத்தியில், தேவனைப் பற்றிய அவனது கருத்துக்கள், இனிமேல் ஒன்றும் இல்லாமையில் இருந்து அவரைக் கற்பனை செய்து கொள்ளுதல் அல்லது அவரைப் பற்றிய தனது சொந்தச் சந்தேகங்களுக்குக் கட்டுப்பாட்டைக் கொடுத்தல் அல்லது அவரைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் அல்லது அவரை நிந்தித்தல் அல்லது விட்டுச் செல்லுதல் அவர்மீது நியாயத்தீர்ப்பு வழங்குதல் அல்லது அவரைச் சந்தேகித்தல் ஆகியவற்றை மனிதன் படிப்படியாக மாற்றுகிறான். இவ்வாறு, மனிதனுக்கு தேவனுடனான தகராறுகள் குறைவாகவே இருக்கும், அவனுக்கு தேவனுடனான மோதல்கள் குறைவாகவே இருக்கும் மற்றும் மனிதன் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்யும் சந்தர்ப்பங்களும் குறைவாகவே இருக்கும். அதற்கு மாறாக, தேவன் மீதான மனிதனுடைய அக்கறையும் தேவனுக்குக் கீழ்ப்படிதலும் பெரிதாக வளரும். தேவன் மீது அவன் கொண்டுள்ள மரியாதை மிகவும் உண்மையானதாகவும் ஆழமாகவும் மாறும். இத்தகைய ஐக்கியத்தின் மத்தியில், மனிதன் சத்தியத்தின் வழங்குதலையும் ஜீவனின் ஞானஸ்நானத்தையும் அடைவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் தேவனைப் பற்றிய உண்மையான அறிவையும் அடைவான். இத்தகைய ஐக்கியத்தின் மத்தியில், மனிதன் தனது மனநிலையில் மாற்றம் பெற்று இரட்சிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் தேவனை நோக்கி ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினத்தின் உண்மையான பயபக்தியையும் வழிபாட்டையும் பெறுவான். இந்த வகையான ஐக்கியத்தைக் கொண்டிருந்ததால், தேவன் மீதான மனிதனுடைய விசுவாசம் இனி ஒரு வெற்று காகிதத் தாளாகவோ அல்லது உதட்டளவில் வழங்கப்படும் வாக்குறுதியாகவோ அல்லது குருட்டுத்தனமான நாட்டம் மற்றும் விக்கிரகாராதனையாகவோ இருக்காது. இந்த வகையான ஐக்கியத்தின் மூலமாக மட்டுமே மனிதனுடைய ஜீவிதம் நாளுக்கு நாள் முதிர்ச்சியை நோக்கி வளரும். அப்போதுதான் அவனது மனநிலை படிப்படியாக மாற்றப்படும். தேவன் மீதான அவனது விசுவாசம், படிப்படியாக, தெளிவற்ற மற்றும் நிச்சயமற்ற நம்பிக்கையிலிருந்து உண்மையான கீழ்ப்படிதலுக்கும் அக்கறைக்கும், உண்மையான பயபக்திக்கும், செல்லும். மனிதனும் தேவனைப் பின்பற்றும் செயல்பாட்டில், படிப்படியாக ஒரு செயலற்ற நிலையில் இருந்து செயல்திறன்மிக்க நிலைப்பாட்டிற்கும், எதிர்மறையிலிருந்து நேர்மறைக்கும் முன்னேறும். இந்த வகையான ஐக்கியத்துடன் மட்டுமே மனிதன் தேவனைப் பற்றிய உண்மையான புரிதலுக்கும், உணர்தலுக்கும், உண்மையான அறிவுக்கும் வருவான். பெரும்பான்மையான ஜனங்கள் ஒருபோதும் தேவனுடன் உண்மையான ஐக்கியத்திற்குள் நுழைந்ததில்லை என்பதால், தேவனைப் பற்றிய அவர்களின் அறிவு கோட்பாட்டின் மட்டத்திலும், எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகளின் மட்டத்திலும் நின்றுவிடுகிறது. அதாவது, பெரும்பான்மையான ஜனங்கள், அவர்கள் எத்தனை வருடங்கள் தேவனை நம்பினாலும், தேவனை அறிந்துகொள்வதைப் பொறுத்தவரையில், பாரம்பரிய வடிவிலான மரியாதை என்னும் அடிப்படையில் சிக்கி, அவற்றுடன் தொடர்புடைய நிலப்பிரபுத்துவ மூடநம்பிக்கைகள் மற்றும் கற்பனையுணர்வுச் சாயல்களுடன், அவர்கள் ஆரம்பித்த அதே இடத்திலேயே இருக்கிறார்கள். தேவனைப் பற்றிய மனிதனுடைய அறிவு அதன் தொடக்கக் கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பது நடைமுறையில் இல்லாத ஒன்று என்பதாகும். தேவனுடைய நிலைப்பாடு மற்றும் அடையாளத்தை மனிதன் உறுதிப்படுத்தியதைத் தவிர, தேவன் மீது மனிதனுடைய விசுவாசம் இன்னும் தெளிவற்ற நிச்சயமற்ற நிலையில்தான் உள்ளது. இது அவ்வாறு இருப்பதால், மனிதன் தேவனுக்கு எவ்வளவாக உண்மையான பயபக்தியைக் கொண்டிருக்க முடியும்?

தேவன் உண்டென்பதை நீ எவ்வளவு உறுதியாக நம்பினாலும், அது தேவனைப் பற்றிய உன் அறிவையோ தேவன் மீதான உன் பயபக்தியையோ மாற்றாது. அவருடைய ஆசீர்வாதங்களையும் அவருடைய கிருபையையும் நீ எவ்வளவு அனுபவித்திருந்தாலும், தேவனைப் பற்றிய உன் அறிவை அதனால் மாற்ற முடியாது. உனக்குள்ள அனைத்தையும் பரிசுத்தப்படுத்தவும், உனக்குள்ள அனைத்தையும் அவருக்காக அர்ப்பணிக்கவும் ஈடுபடுத்திக்கொள்ளவும் நீ எவ்வளவு தயாராக இருந்தாலும், அதனால் தேவனைப் பற்றிய உன் அறிவை மாற்ற முடியாது. தேவன் பேசிய வார்த்தைகளை நீ நன்கு அறிந்திருக்கலாம், அல்லது நீ அவற்றை உன் இருதயத்திலும் அறிந்திருக்கலாம் மற்றும் அவற்றை உன்னால் விரைந்து கூறமுடியலாம், ஆனால் இதனால் தேவனைப் பற்றிய உன் அறிவை மாற்ற முடியாது. எவ்வாறாயினும், மனிதனின் நோக்கம் தேவனைப் பின்பற்றுவதாக இருந்தாலும், அவன் ஒருபோதும் தேவனுடன் உண்மையான ஐக்கியம் கொண்டிருக்கவில்லை அல்லது தேவனுடைய வார்த்தைகளில் உண்மையான அனுபவம் பெற்றிருக்கவில்லை என்றால், தேவனைப் பற்றிய அவனது அறிவு வெற்றுத் துண்டாகவோ அல்லது முடிவில்லாத மயக்கமாகவே இருக்கும். நீ தேவனோடு தோள் உரச கடந்து சென்றிருக்கலாம் அல்லது அவரை நேருக்கு நேர் சந்தித்திருக்கலாம், எனினும் தேவனைப் பற்றிய உன் அறிவு இன்னும் பூஜ்ஜியமாகவே இருக்கும். தேவனைப் பற்றிய உன் மரியாதை வெற்று வார்த்தையாக அல்லது கற்பனையான கருத்தாக மட்டுமே இருக்கும்.

பல ஜனங்கள், தேவனுடைய வார்த்தைகளை ஒவ்வொரு நாளும் படிக்க வைத்திருக்கிறார்கள். அதில் உள்ள அனைத்து உன்னதமான பத்திகளையும் மிகவும் மதிப்புமிக்க உடைமையாக நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கூட வைத்திருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்கிறார்கள். மற்றவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளை வழங்கி உதவுகிறார்கள். இதைச் செய்வது தேவனுக்கு சாட்சி கொடுப்பது என்றும் அவருடைய வார்த்தைகளுக்கு சாட்சி கொடுப்பது என்றும் தேவனுடைய வழியைப் பின்பற்றுவது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். இதைச் செய்வது தேவனுடைய வார்த்தைகளின்படி ஜீவிப்பதேயாகும் என்றும் அவருடைய வார்த்தைகளை அவர்களின் உண்மையான ஜீவிதத்தில் கொண்டு வருவதேயாகும் என்றும் தேவனுடைய புரிந்துகொள்ளுதலைப் பெறவும், இரட்சிக்கப்பட்டு முழுமையடையவும் உதவும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்கும்போதும், அவர்கள் ஒருபோதும் தேவனுடைய வார்த்தைகளை நடைமுறையில் பின்பற்றுவதில்லை அல்லது தேவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவற்றுடன் தங்களைத் தாங்களே ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிப்பதில்லை. மாறாக, தந்திரத்தின் மூலம் மற்றவர்களின் வணக்கத்தையும் நம்பிக்கையையும் பெறவும், சொந்தமாக ஆளுகையில் பிரவேசிக்கவும், தேவனுடைய மகிமையை ஏமாற்றவும் திருடவும் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். தேவனுடைய வார்த்தைகளைப் பரப்புவதன் மூலம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதை அவர்கள் வீணாக நம்புகிறார்கள். இதனால் தேவனுடைய கிரியை மற்றும் அவரது பாராட்டு வழங்கப்படும் என்றும் நம்புகிறார்கள். எத்தனை வருடங்கள் கடந்துவிட்டன, எனினும் இந்த ஜனங்களால் தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்கும் கிரியையில் தேவனுடைய பாராட்டைப் பெற இயலாமல் இருப்பது மட்டுமல்லாமல், தேவனுடைய சாட்சி அளிக்கும் செயல்பாட்டில் அவர்கள் பின்பற்ற வேண்டிய வழியைக் கண்டறியவும் அவர்கள் இயலாமல் இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளை மற்றவர்களுக்கு வழங்கி உதவுகையில் அவர்கள் தங்களுக்கு வழங்கி உதவுவதில்லை. எல்லாவற்றையும் செய்வதற்கான இந்தச் செயல்பாட்டில் அவர்கள் தேவனை அறியவோ அல்லது தேவனிடம் உண்மையான பயபக்தியை எழுப்பவோ இயலாது இருக்கிறார்கள். மாறாக, தேவனைப் பற்றிய அவர்களின் தவறான புரிதல்கள் இன்னும் ஆழமாக வளர்கின்றன. அவரைப் பற்றிய அவநம்பிக்கை எப்போதும் கடுமையாக இருக்கிறது. அவரைப் பற்றிய அவர்களின் கற்பனைகள் இன்னும் மிகைப்படுத்தப்படுகின்றன. தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய அவர்களின் கோட்பாடுகளால் வழங்கப்பட்ட மற்றும் வழிநடத்தப்பட்ட வார்த்தைகள், அவற்றின் அம்சங்களில் முழுமையாக இருப்பது போலவும், தங்கள் திறமைகளைச் சிரமமின்றி எளிதில் செலுத்துவது போலவும், ஜீவிதத்தில் தங்கள் நோக்கத்தையும் தங்களின் கிரியையையும் கண்டறிந்ததைப் போலவும், புதிய ஜீவனைப் பெற்று இரட்சிக்கப்பட்டது போலவும், தேவனுடைய வார்த்தைகள் நாவில் சரளமாக வருகையில், அவை உண்மையைப் பெற்றிருப்பது போலவும், தேவனுடைய நோக்கங்களைப் புரிந்துகொண்டது போலவும், தேவனை அறிவதற்கான பாதையைக் கண்டுபிடித்துக் கொடுப்பது போலவும், தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கிக்கும் கிரியையில், அவை பெரும்பாலும் தேவனுடன் நேருக்கு நேர் வந்திருப்பது போலவும் காணப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் அழுகைக்கு “நகர்த்தப்படுகிறார்கள்”. பெரும்பாலும் அவர்கள் தேவனுடைய வார்த்தைகளில் “தேவனால்” வழிநடத்தப்படுவது போலவும், அவர்கள் அவருடைய உற்சாகமான தனிமை மற்றும் கனிவான நோக்கத்தை இடைவிடாமல் புரிந்துகொள்வதாகவும், அதே நேரத்தில் மனிதன் தேவனுடைய இரட்சிப்பைப் புரிந்துகொள்வதாகவும், அவருடைய நிர்வகித்தலைப் புரிந்துகொள்வதாகவும், அவருடைய சாராம்சத்தை அறிந்துகொள்வதாகவும், அவருடைய நீதியான மனநிலையைப் புரிந்துகொள்வதாகவும் காணப்படுகிறது. இந்த அஸ்திவாரத்தின் அடிப்படையில், அவர்கள் தேவன் இருக்கிறார் என்பதை இன்னும் உறுதியாக நம்புகிறார்கள். அவருடைய உயர்ந்த நிலையை நன்கு அறிந்திருக்கிறார்கள். அவருடைய மாட்சிமையையும் உன்னதத்தையும் இன்னும் ஆழமாக உணர்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளைப் பற்றிய மேலோட்டமான அறிவில் மூழ்கி, அவர்களின் நம்பிக்கை வளர்ந்துள்ளது. துன்பத்தைத் தாங்குவதற்கான அவர்களின் மன உறுதி பலமடைந்துள்ளது. தேவனைப் பற்றிய அவர்களின் அறிவு ஆழமடைந்துள்ளது. தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் உண்மையில் அனுபவிக்கும் வரை, தேவனைப் பற்றிய அவர்களின் எல்லா அறிவும், அவரைப் பற்றிய அவர்களின் கருத்துக்களும் தங்கள் விருப்பமான கற்பனைகள் மற்றும் அனுமானங்களிலிருந்து வெளிவருகின்றன என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களுடைய விசுவாசம் தேவனுடைய எந்தவிதமான சோதனையின் கீழும் இருக்காது, அவர்களின் ஆவிக்குரிய ஜீவிதம் மற்றும் அந்தஸ்து என்று அழைக்கப்படுவது வெறுமனே தேவனுடைய சோதனை அல்லது பரிசோதனையின் கீழ் நிலைநிறுத்தப்படாது. அவர்களுடைய மன உறுதி மணல் மீது கட்டப்பட்ட ஓர் அரண்மனையாக இருக்கிறது, மேலும் தேவனைப் பற்றிய அவர்களுடைய பெயரளவிலான அறிவு அவர்களின் கற்பனையின் ஓர் உருவமே தவிர வேறில்லை. உண்மையில், தேவனுடைய வார்த்தைகளில் நிறைய முயற்சி செய்த இந்த ஜனங்கள், உண்மையான நம்பிக்கை எது, உண்மையான கீழ்ப்படிதல் என்ன, உண்மையான அக்கறை என்ன அல்லது தேவனைப் பற்றிய உண்மையான அறிவு என்ன என்பதை ஒருபோதும் உணரவில்லை. அவர்கள் கோட்பாடு, கற்பனை, அறிவு, பரிசு, பாரம்பரியம், மூடநம்பிக்கை மற்றும் மனிதகுலத்தின் நீதிநெறிக் கோட்பாடுகளை எடுத்துக்கொண்டு, தேவனை நம்புவதற்கும் அவரைப் பின்பற்றுவதற்கும் அவற்றை “மூலதனம்” மற்றும் “ஆயுதங்களாக” ஆக்குகிறார்கள். அவர்களின் நம்பிக்கை மற்றும் அவரைப் பின்பற்றுவதின் அஸ்திவாரங்களாகவும் ஆக்குகிறார்கள். அதே சமயம், அவர்கள் இந்த மூலதனத்தையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தேவனுடைய ஆய்வுகள், சோதனைகள், சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்வதற்கும் கையாள்வதற்கும் அவர்கள் தேவனை அறிவதற்கான மாய தாயத்துக்களாக அவற்றை மாற்றுகிறார்கள். முடிவில், அவர்கள் பெறுவது தேவனைப் பற்றிய முடிவுகளைத் தவிர வேறொன்றும் இல்லை. அவை மத அர்த்தத்தில், நிலப்பிரபுத்துவ மூடநம்பிக்கைகளில் மற்றும் கற்பனையான, கோரமான மற்றும் புதிரான எல்லாவற்றிலும் மூழ்கியுள்ளன. தேவனை அறிந்துகொள்வதற்கும் வரையறுப்பதற்குமான அவர்களின் வழியானது மேலே உள்ள பரலோகத்தை அல்லது வானத்தில் உள்ள பழைய மனிதரை மட்டுமே நம்பும் மனிதர்கள் போல ஒரே மாதிரியான அச்சில் முத்திரையிடப்பட்டுள்ளது, அதே சமயத்தில் தேவனுடைய யதார்த்தம், அவருடைய சாராம்சம், அவரது மனநிலை, அவருடைய உடைமைகள் மற்றும் இருப்பு மற்றும் உண்மையான தேவனோடு தொடர்புடைய அனைத்துமே அவர்களின் அறிவு புரிந்துகொள்ளத் தவறிய விஷயங்கள், அவற்றில் இருந்து அவர்களின் அறிவு வடக்கு மற்றும் தென் துருவங்கள் வரையிலாக முற்றிலுமாக பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இந்த ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளின் ஏற்பாடு மற்றும் ஊட்டச்சத்தின் கீழ் வாழ்கிறார்கள் என்றாலும், தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான பாதையை அவர்கள் உண்மையிலேயே அடைய முடியவில்லை. இதற்கு உண்மையான காரணம் என்னவென்றால், அவர்கள் ஒருபோதும் தேவனுடன் பழகவில்லை, அவருடன் உண்மையான தொடர்பு அல்லது ஐக்கியம் இருந்ததில்லை. எனவே, அவர்கள் தேவனுடன் பரஸ்பர புரிந்துணர்வை அடைவது சாத்தியமில்லை அல்லது தங்களுக்குள் உண்மையான நம்பிக்கையை எழுப்பபுவது, தேவனைப் பின்பற்றுவது அல்லது வணங்குவது சாத்தியமற்றதாக இருக்கிறது. தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் இவ்வாறு கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தேவனை இவ்வாறு கருத்தில் கொள்ள வேண்டும்—இந்த பார்வை மற்றும் மனநிலை அவர்களின் முயற்சிகளிலிருந்து வெறுங்கையுடன் திரும்புவதற்கு அவர்களை உட்படுத்திவிட்டது, தேவனுக்குப் பயந்து, தீமைக்கு விலகிச்செல்லும் பாதையை நித்திய காலமாக அவர்கள் ஒருபோதும் மிதித்து விடமுடியாத நிலைக்கு அவர்களை உட்படுத்திவிட்டது. அவர்களுடைய நோக்கம் மற்றும் அவர்கள் செல்லும் திசையானது, அவர்கள் நித்தியத்துக்கும் தேவனுடைய எதிரிகள் என்பதையும், அவர்களால் ஒருபோதும் இரட்சிப்பைப் பெற முடியாது என்பதையும் குறிக்கிறது.

பல ஆண்டுகளாக தேவனைப் பின்பற்றி, அவருடைய வார்த்தைகளைப் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த ஒரு மனிதரின் தேவனைப் பற்றிய வரையறையின் அடிப்படையில் விக்கிரகங்களுக்கு முன்பாக சாஸ்டாங்கமாக விழுந்து வணங்குகிற ஒருவருக்கு சமமானதாக இருந்தால், இந்த மனிதர் தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்தை அடையவில்லை என்பதைக் குறிக்கிறது. ஏனென்றால், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் மட்டும் பிரவேசித்திருக்கவில்லை. இதனால் யதார்த்தம், உண்மை, நோக்கங்கள் மற்றும் மனிதகுலத்தின் மீதான கோரிக்கைகள் என தேவனுடைய வார்த்தைகளில் உள்ள இவை அனைத்துக்கும் அந்த மனிதருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதாவது, தேவனுடைய வார்த்தைகளின் மேலோட்டமான அர்த்தத்தில் அத்தகைய மனிதன் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அனைத்தும் பயனற்றது: ஏனென்றால், அவர்கள் பின்பற்றுவது வெறும் வார்த்தைகள் என்பதால், அவர்கள் பெறுவது அவசியமான வார்த்தைகள் மட்டுமே. தேவன் பேசும் வார்த்தைகள் வெளிப்படையானவையாக அல்லது வெளிப்புற தோற்றத்தில் ஆழமாக இருந்தாலும், அவை அனைத்தும் மனிதன் ஜீவனுக்குள் நுழைகையில் இன்றியமையாத சத்தியங்களாக இருக்கின்றன. அவை ஜீவத்தண்ணிரின் நீரூற்று ஆகும். அவை மனிதனை ஆவியில் மற்றும் மாம்சத்தில் ஜீவிக்க உதவுகின்றன. மனிதன் உயிருடன் இருக்க தேவையானதை அவை வழங்குகின்றன. அவனது அன்றாட ஜீவிதத்தை நடத்துவதற்கான கொள்கைகள் மற்றும் நம்பிக்கையையும், இரட்சிப்பைப் பெறுவதற்கான பாதை மற்றும் அதன் குறிக்கோளையும் திசையையும், தேவனுக்கு முன்பாக சிருஷ்டிக்கப்பட்ட ஒருவராக அவர் வைத்திருக்க வேண்டிய ஒவ்வொரு சத்தியத்தையும், மனிதன் எவ்வாறு தேவனுக்குக் கீழ்ப்படிகிறான், வணங்குகிறான் என்பது பற்றிய ஒவ்வொரு சத்தியத்தையும் அவன் கொண்டிருக்க வேண்டும். அவை மனிதனுடைய ஜீவித்தத்தை உறுதி செய்யும் உத்தரவாதம், அவை மனிதனுடைய அன்றாட அப்பம் மற்றும் அவை மனிதனை வலிமையாகவும் எழுந்து நிற்கவும் உதவும் உறுதியான ஆதரவும் ஆகும். சாதாரண மனிதத்தன்மையில் வாழும் மனுக்குலம் சிருஷ்டிக்கப்பட்ட சத்தியத்தின் யதார்த்தத்தில் அவர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஏனெனில் சத்தியத்தால் நிறைந்திருக்கும் அது சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்தின் மூலம் வாழ்கிறது. இதனால் மனிதகுலம் சீர்கேட்டிலிருந்து விடுபட்டு சத்தியத்தால் நிறைந்திருக்கும், சாத்தானின் கண்ணிகளுக்குத் தப்பித்து, மனிதகுலத்திற்கு சிருஷ்டிகர் தரும் சளைக்காத போதனை, அறிவுரை, ஊக்கம் மற்றும் ஆறுதல் ஆகியவற்றால் நிறைந்திருக்கும். அவை நேர்மறையானவை. அவை, அனைத்தையும் புரிந்துகொள்ள மனிதர்களுக்கு வழிகாட்டும் மற்றும் அறிவூட்டும் கலங்கரை விளக்கமாகும். அவை மனிதர்கள் வெளியே ஜீவிப்பதையும், நீதியான மற்றும் நன்மையான அனைத்தையும் வைத்திருப்பதையும் உறுதி செய்யும் உத்தரவாதம் ஆகும். அவை எல்லா ஜனங்களும், நிகழ்வுகளும், பொருட்களும் அளவிடும் அளவுகோல் ஆகும். அவை இரட்சிப்பு மற்றும் ஒளியின் பாதையை நோக்கி மனிதர்களை வழிநடத்தும் வழிகாட்டி ஆகும். தேவனுடைய வார்த்தைகளானது நடைமுறை அனுபவத்தில் மட்டுமே மனிதனுக்கு சத்தியத்தையும் ஜீவனையும் வழங்க முடியும். சாதாரண மனிதத்தன்மை என்றால் என்ன, அர்த்தமுள்ள ஜீவிதம் எது, உண்மையான சிருஷ்டிப்பு எது, தேவனுக்கு உண்மையான கீழ்ப்படிதல் எது என்பதை இங்கு மட்டுமே மனிதன் புரிந்துகொள்ள முடியும். தேவன் மீது எவ்வாறு அக்கறைகொள்ள வேண்டும், சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனுடைய கடமையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும், உண்மையான மனிதனுடைய வெளிப்பாட்டை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பதை மனிதன் இங்கு புரிந்துகொள்ள முடியும். உண்மையான விசுவாசம் மற்றும் உண்மையான வழிபாடு என்பதன் பொருள் என்ன என்பதை இங்கு மனிதன் புரிந்துகொள்ள முடியும். வானங்களையும் பூமியையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவர் யார் என்பதை இங்கு மனிதன் புரிந்துகொள்ள முடியும். எல்லா சிருஷ்டிப்புகளின் எஜமானராக இருப்பவர் சிருஷ்டிப்பை ஆளுகிறார், வழிநடத்துகிறார், வழங்குகிறார் என்பதை மனிதன் இங்கு புரிந்துகொள்ள முடியும். எல்லா சிருஷ்டிப்புகளுக்கும் எஜமானர் இருக்கும், வெளிப்படும் மற்றும் செயல்படும் வழியை மனிதன் இங்கு புரிந்துகொள்ள முடியும். தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அனுபவத்திலிருந்து பிரிக்கப்பட்ட மனிதனுக்கு தேவனுடைய வார்த்தைகள் மற்றும் சத்தியத்தைப் பற்றிய உண்மையான அறிவு அல்லது நுண்ணறிவு இல்லை. அத்தகைய மனிதர் ஒரு நேர்மையான உயிருள்ள சடலமாகவும், ஒரு முழுமையான கூடாகவும் சிருஷ்டிகருடன் தொடர்புடைய எல்லா அறிவுடனும் தொடர்பும் இல்லாதவராகவும் இருப்பார். தேவனுடைய பார்வையில், அத்தகைய மனிதர் ஒருபோதும் அவரை நம்பவில்லை. அவரை ஒருபோதும் பின்பற்றவில்லை. ஆகவே, தேவன் அவரை அவருடைய விசுவாசியாகவோ அல்லது அவரைப் பின்பற்றுபவராகவோ, உண்மையான சிருஷ்டியாகவோ அங்கீகரிக்க மாட்டார்.

ஓர் உண்மையான சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன், சிருஷ்டிகர் யார், மனிதனுடைய சிருஷ்டிப்பு எதற்காக, ஒரு சிருஷ்டியின் பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றுவது மற்றும் எல்லா சிருஷ்டிப்புகளின் தேவனை எவ்வாறு வணங்குவது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சிருஷ்டிகரின் நோக்கங்கள், விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும், உணர்ந்துகொள்ள வேண்டும், அறிந்துகொள்ள வேண்டும் மற்றும் கவனித்துக்கொள்ள வேண்டும். சிருஷ்டிகரின் வழிக்கு ஏற்பச் செயல்பட வேண்டும். தேவனுக்குப் பயந்து தீமையைத் தவிர்க்க வேண்டும்.

தேவனுக்கு பயப்படுவது என்றால் என்ன? ஒருவர் எவ்வாறு தீமையைத் தவிர்க்க முடியும்?

“தேவனுக்குப் பயப்படுவது” என்பது பெயரிடப்படாத பயம் மற்றும் திகில் என்று அர்த்தமல்ல, தவிர்த்தலும், தூரத்தில் வைத்தலும் அல்ல மற்றும் விக்கிரகாராதனையோ மூடநம்பிக்கையோ அல்ல. மாறாக, அது போற்றுதல், மரியாதை, நம்பிக்கை, புரிதல், அக்கறை, கீழ்ப்படிதல், பிரதிஷ்டை, அன்பு, அத்துடன் நிபந்தனையற்ற மற்றும் குறைகூறாத வழிபாடு, காணிக்கை மற்றும் ஒப்புக்கொடுத்தல் ஆகியனவாகும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலத்திற்கு உண்மையான போற்றுதல், உண்மையான நம்பிக்கை, உண்மையான புரிதல், உண்மையான அக்கறை அல்லது கீழ்ப்படிதல் இருக்காது. ஆனால் பயம், கவலை, சந்தேகம், தவறான புரிதல், ஏய்ப்பு மற்றும் தவிர்ப்பு ஆகியவை இருக்கும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலத்திற்கு உண்மையான பிரதிஷ்டை மற்றும் காணிக்கை இருக்காது. தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலத்திற்கு உண்மையான வழிபாடும் ஒப்புக்கொடுத்தலும் இருக்காது. குருட்டு வழிபாடு மற்றும் மூடநம்பிக்கை மட்டுமே இருக்கும். தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இல்லாமல், மனிதகுலம் தேவனுடைய வழிக்கு ஏற்ப செயல்படவோ, தேவனுக்குப் பயப்படவோ அல்லது தீமையைத் தவிர்க்கவோ முடியாது. மாறாக, மனிதன் ஈடுபடும் ஒவ்வொரு செயலும் நடத்தையும் கலகம் மற்றும் எதிர்ப்பால் நிரப்பப்படும். அவதூறான குற்றச்சாட்டுகள் மற்றும் அவரைப் பற்றிய மோசமான நியாயத்தீர்ப்புகளால் நிரப்பப்படும். சத்தியத்திற்கு மாறாகவும் தேவனுடைய வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்திற்கு மாறாகவும் செயல்படும் தீங்கான நடத்தையால் நிரப்பப்படும்.

மனிதகுலம் தேவன் மீது உண்மையான நம்பிக்கை வைத்தவுடன், அவர்கள் அவரைப் பின்பற்றுவதில் அவரைச் சார்ந்திருப்பதில் உண்மையானவர்களாக இருப்பார்கள். உண்மையான நம்பிக்கையுடன் இருப்பதாலும், தேவனைச் சார்ந்திருப்பதாலும் மட்டுமே மனிதகுலத்திற்கு உண்மையான புரிதலும் உணர்தலும் இருக்க முடியும். தேவனைப் பற்றிய உண்மையான புரிதலுடன் அவர் மீதான உண்மையான அக்கறையும் வருகிறது. தேவன் மீதான உண்மையான அக்கறையுடன் மட்டுமே மனிதகுலம் உண்மையான கீழ்ப்படிதலைக் கொண்டிருக்க முடியும். தேவனுக்கான உண்மையான கீழ்ப்படிதலால் மட்டுமே மனிதகுலம் உண்மையான பிரதிஷ்டை செய்ய முடியும். தேவனுக்கு உண்மையான பிரதிஷ்டை செய்வதன் மூலம் மட்டுமே மனிதகுலத்திடம் நிபந்தனையற்ற மற்றும் புகார் இல்லாத கைம்மாறு இருக்க முடியும். உண்மையான நம்பிக்கை மற்றும் சார்பு, உண்மையான புரிதல் மற்றும் அக்கறை, உண்மையான கீழ்ப்படிதல், உண்மையான பிரதிஷ்டை மற்றும் கைம்மாறு ஆகியவற்றால் மட்டுமே, தேவனுடைய மனநிலையையும் சாரத்தையும் மனிதகுலம் உண்மையிலேயே அறிந்துகொள்ள முடியும் மற்றும் சிருஷ்டிகரின் அடையாளத்தை அறிந்துகொள்ள முடியும். சிருஷ்டிகரை அவர்கள் உண்மையிலேயே அறிந்துகொண்டால்தான் மனிதகுலம் தங்களுக்குள் உண்மையான வழிபாட்டையும் ஒப்புக்கொடுத்தலையும் எழுப்ப முடியும். சிருஷ்டிகருக்கு உண்மையான வழிபாடும் ஒப்புக்கொடுத்தலும் இருக்கும்போது மட்டுமே, மனிதகுலத்தால் அவர்களின் தீய வழிகளை ஒதுக்கி வைக்க முடியும், அதாவது தீமையைத் தவிர்க்க முடியும்.

இது “தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான” முழு செயல்முறையையும் உருவாக்குகிறது. இது, தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கான முழு உள்ளடக்கமாகும். இது, தேவனுக்குப் பயந்து, தீமையைத் தவிர்ப்பதற்கு பயணிக்க வேண்டிய பாதையாகும்.

“தேவனுக்குப் பயப்படுவதும், தீமையைத் தவிர்ப்பதும்” மற்றும் தேவனை அறிவதும் எண்ணற்ற நூல்களால் பிரிக்கமுடியாமல் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கிடையேயான தொடர்பு பிரத்தியட்சமாகத் தெரிகிறது. ஒருவர் தீமையைத் தவிர்ப்பதற்கு விரும்பினால், முதலில் தேவன் மீது உண்மையான பயம் இருக்க வேண்டும். ஒருவர் தேவனைப் பற்றிய உண்மையான பயத்தை அடைய விரும்பினால், முதலில் தேவனைப் பற்றிய உண்மையான அறிவு இருக்க வேண்டும். தேவனைப் பற்றிய அறிவை அடைய ஒருவர் விரும்பினால், முதலில் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்க வேண்டும், தேவனுடைய வார்த்தைகளின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க வேண்டும், தேவனுடைய சிட்சையையும் தண்டித்து திருத்துதலையும் அனுபவிக்க வேண்டும், அவருடைய சிட்சையும் நியாயத்தீர்ப்பையும் அனுபவிக்க வேண்டும். ஒருவர் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிக்க விரும்பினால், ஒருவர் முதலில் தேவனுடைய வார்த்தைகளை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும், தேவனை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும், மற்றும் ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வகையான சூழல்களின் வடிவத்திலும் தேவனுடைய வார்த்தைகளை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை வழங்க தேவனிடம் கேட்க வேண்டும். ஒருவர் தேவனோடு, தேவனுடைய வார்த்தைகளோடு நேருக்கு நேர் வர விரும்பினால், முதலில் ஓர் எளிய மற்றும் நேர்மையான இருதயம், சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கான தயார்நிலை, துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும் விருப்பம், மனஉறுதி மற்றும் தீமையைத் தவிர்ப்பதற்கான தைரியம் மற்றும் ஓர் உண்மையான சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக ஆசை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்…. இவ்வாறு, படிப்படியாக முன்னேறும்போது, நீ தேவனிடம் இன்னும் நெருக்கமாக வருவாய், உன் இருதயம் இன்னும் தூய்மையாக வளரும் மற்றும் உன் ஜீவிதத்தையும் உயிருடன் இருப்பதன் மதிப்பையும், தேவனையும் அறிந்துகொள்ளச் செய்யும், இன்னும் அர்த்தமுள்ளவனாகவும், இன்னும் பிரகாசமானவனாகவும் மாறுவாய். ஒரு நாள், சிருஷ்டிகர் இனி ஒரு புதிர் அல்ல என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து ஒருபோதும் மறைக்கப்படவில்லை என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து ஒருபோதும் முகத்தை மறைக்கவில்லை என்றும், சிருஷ்டிகர் உன்னிடமிருந்து வெகு தொலைவில் இல்லை என்றும், சிருஷ்டிகர் இனி உன் எண்ணங்களில் நீ தொடர்ந்து ஏங்கி, உணர முடியாமல் போனவர் அல்ல என்றும், அவர் உன் இடது மற்றும் வலதுபுறம் நிஜமாகவும் உண்மையாகவும் பாதுகாப்பாக நிற்கிறார் என்றும், உன் ஜீவனை வழங்குகிறார் என்றும், உன் விதியைக் கட்டுப்படுத்துகிறார் என்றும், நீ உணருவாய். அவர் தொலைதூர அடிவானத்தில் இல்லை, மேகங்களில் தன்னைத்தானே மறைக்கவில்லை. அவர் உன் பக்கத்திலேயே இருக்கிறார். உன்னை எல்லாவற்றிலும் வழிநடத்துகிறார். உன்னிடம் உள்ள அனைத்திடமும் உன்னிடமும் அவர் மட்டுமே இருக்கிறார். அத்தகைய தேவன், இருதயத்திலிருந்து அவரை நேசிக்கவும், அவருடன் ஒட்டிக்கொள்ளவும், அவரை நெருக்கமாகப் பிடித்துக் கொள்ளவும், அவரைப் போற்றவும், அவரை இழக்க பயப்படுவதற்கும், இனிமேல் அவரைத் துறக்க, அவருக்குக் கீழ்ப்படியாமலும் இருக்க அல்லது அவரைத் தவிர்க்க அல்லது தூரத்தில் அவரை தள்ளி வைக்க விரும்பாமல் இருப்பதற்கும் உன்னை அனுமதிக்கிறார். நீ விரும்புவதெல்லாம் அவர் மீது அக்கறைகொள்வதும், அவருக்குக் கீழ்ப்படிவதும், அவர் உனக்குக் கொடுக்கும் அனைத்தையும் திருப்பிக் கொடுப்பதும், அவருடைய ஆதிக்கத்திற்குக் கீழ்ப்படிவதும் மட்டுமே. நீ இனி வழிநடத்தப்படுவதை, உனக்கு வழங்கப்படுவதை, கவனிக்கப்படுவதை, அவரால் பாதுகாக்கப்படுவதை, அவர் கட்டளையிடுவதை, உனக்காக ஆணையிடுவதை, இனி மறுக்க மாட்டாய். நீ விரும்புவதெல்லாம் அவரைப் பின்பற்றுவதும், அவருடைய துணையுடன் அவரைச் சுற்றியே இருப்பதும், அவரை உன் ஒரே ஜீவனாக ஏற்றுக்கொள்வதும், அவரை உன் ஒரே கர்த்தராக ஏற்றுக்கொள்வதும், உன் ஒரே தேவனாக ஏற்றுக்கொள்வதும் ஆகும்.

ஆகஸ்ட் 18, 2014

முந்தைய: சகல மனுஷர்களின் தலைவிதியையும் தேவனே அடக்கி ஆளுகிறார்

அடுத்த: தேவனுடைய தோன்றுதலை அவருடைய நியாயத்தீர்ப்பிலும் சிட்சையிலும் காணுதல்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக