மதக் கருத்துக்களை வெளிப்படுத்துதல்

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 281

தேவனையும் மனுஷனையும் சமமாகக் கருத முடியாது. அவரது சாரமும் அவரது கிரியையும் மனுஷனால் எவ்வகையிலும் ஆழங்காண முடியாதவை மற்றும் புரிந்துகொள்ள முடியாதவை. மனுஷ உலகில் தேவன் தனிப்பட்ட முறையில் தனது கிரியையைச் செய்யாமலும், தன் வார்த்தைகளைப் பேசாமலும் இருந்தால், மனுஷனால் ஒருபோதும் தேவனின் சித்தத்தைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே, தங்கள் முழு ஜீவிதத்தையும் தேவனுக்காக அர்ப்பணித்தவர்களால் கூட அவருடைய அங்கீகாரத்தைப் பெற முடியாது. தேவன் கிரியை செய்யத் தொடங்கவில்லை என்றால், மனுஷன் எவ்வளவு நன்றாகச் செயல்பட்டாலும், அவை அனைத்தும் பயனற்றதாகவே இருக்கும், ஏனென்றால் தேவனின் எண்ணங்கள் எப்போதும் மனுஷனின் எண்ணங்களை விட உயர்ந்தவையாக இருக்கின்றன, மேலும் தேவனின் ஞானம் மனுஷனின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. ஆகவே, தேவனையும் அவருடைய கிரியையையும் “முழுமையாகப் புரிந்துகொள்கிறேன்” என்று கூறுபவர்கள் தகுதியற்றவர்கள் என்று நான் சொல்கிறேன்; அவர்கள் அனைவரும் மிகைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அறிவற்றவர்கள் ஆவர். தேவனின் கிரியையை மனுஷன் வரையறுக்கக் கூடாது; மேலும், தேவனின் கிரியையை மனுஷனால் வரையறுக்க முடியாது. தேவனின் பார்வையில், மனுஷன் ஓர் எறும்பு போல அற்பமானவன்; ஆகையால் தேவனின் கிரியையை மனுஷன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? “தேவன் இவ்வாறாக அல்லது அவ்வாறாகச் செயல்படமாட்டார்,” அல்லது “தேவன் இப்படிப்பட்டவர் அல்லது அப்படிப்பட்டவர்,” என்று கூச்சலிட விரும்புவோர், ஆணவத்துடன் பேசவில்லையா? மாம்சத்திலிருந்து வந்த மனுஷன் சாத்தானால் சீர்கெட்டுப்போனான் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். தேவனை எதிர்ப்பதே மனுஷகுலத்தின் இயல்பாக இருக்கிறது. மனுஷகுலம் தேவனுக்கு இணையாக இருக்க முடியாது, தேவனின் கிரியைக்கு அறிவுரை வழங்குவது என்பது மனுஷகுலத்திற்கு எட்டாக்கனியாக இருக்கிறது. தேவன் மனுஷனை வழிநடத்துவது என்பது தேவனின் கிரியையாக இருக்கிறது. இந்த அல்லது அந்தக் கருத்தை எதிர்க்காமல் மனுஷன் கீழ்ப்படிய வேண்டும் என்பது பொருத்தமானது தான், ஏனென்றால் மனுஷன் என்பவன் வெறும் மண்தான். தேவனைத் தேடுவது நம்முடைய நோக்கம் என்பதால், தேவனின் எண்ணப்படியான அவரது கிரியை மீதுள்ள நம் கருத்துக்களை நாம் மிகைப்படுத்தக் கூடாது, தேவனின் கிரியையை வேண்டுமென்றே எதிர்ப்பதற்கு நம்முடைய சீர்கேடான மனநிலையை அதிகம் பயன்படுத்தவே கூடாது. அப்படிச் செய்வது நம்மை அந்திக்கிறிஸ்துக்களாக மாற்றாதா? அத்தகையவர்கள் எப்படி தேவனிடத்தில் விசுவாசமாக இருப்பார்கள்? தேவன் ஒருவர் இருக்கிறார் என்று நாம் விசுவாசிப்பதால், அவரைத் திருப்திப்படுத்தவும் அவரைப் பார்க்கவும் நாம் விரும்புவதால், நாம் சத்தியத்தின் வழியைத் தேட வேண்டும், மேலும் தேவனுடன் ஒத்துப்போக ஒரு வழியைத் தேட வேண்டும். நாம் அவரை எதிர்ப்பதில் வணங்காக் கழுத்துள்ளவர்களாக இருக்கக்கூடாது. அத்தகைய செயல்களால் என்ன நன்மை வரக்கூடும்?

இன்று, தேவன் புதிய கிரியையைச் செய்துள்ளார். உன்னால் இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம், அவை உனக்கு வித்தியாசமாகத் தோன்றலாம், ஆனால் உன் இயல்புகளை நீ வெளிப்படுத்த வேண்டாம் என்று நான் உனக்கு அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் தேவனுக்கு முன்பாக நீதிக்காக உண்மையிலேயே பசியும் தாகமும் கொண்டவர்களால் மட்டுமே சத்தியத்தைப் பெற முடியும், உண்மையான பக்தியுள்ளவர்களால் மட்டுமே அவரால் அறிவூட்டப்பட முடியும். சச்சரவு மற்றும் சண்டையுடன் இல்லாமல், நிதானமான அமைதியுடன் சத்தியத்தைத் தேடுவதன் மூலம் முடிவுகள் பெறப்படுகின்றன. “இன்று, தேவன் புதிய கிரியையைச் செய்துள்ளார்,” என்று நான் கூறும்போது, தேவன் மாம்சத்திற்குத் திரும்பும் விஷயத்தைக் குறிப்பிடுகிறேன். ஒருவேளை இந்த வார்த்தைகள் உன்னைத் தொந்தரவு செய்யாமல் போகலாம்; ஒருவேளை நீ அவற்றை வெறுக்கலாம்; அல்லது அவற்றின் மீது உனக்கு அதிக ஆர்வம் இருக்கலாம். எது எப்படியிருந்தாலும், தேவன் தோன்றுவதற்கு உண்மையிலேயே ஏங்குகிற அனைவருமே அந்த உண்மையை எதிர்கொண்டு, அதைப் பற்றிய முடிவுகளுக்குச் செல்வதை விட, அவர்கள் அதனைக் கவனமாகக் கவனிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்; ஒரு புத்திசாலி செய்ய வேண்டியது அதுதான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முகவுரை” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 282

தேவனை விசுவாசிக்கிற விஷயத்தில் ஒருவர் எப்படி அவரை அறிந்துகொள்ள வேண்டும்? தேவனுடைய வார்த்தைகள் மற்றும் அவரது இன்றைய கிரியைகளின் அடிப்படையில் ஒருவர் தேவனை அறிந்துகொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, விலகலோ அல்லது தவறான நம்பிக்கையோ இல்லாமல் தேவனுடைய கிரியைகளை ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும். இதுதான் தேவனை அறிந்து கொள்ளுகிறதன் அஸ்திபாரம் ஆகும். தேவனுடைய வார்த்தைகளை குறித்த சுத்தமான புரிந்துகொள்ளுதல் குறைவாய்க் காணப்படும் பல்வேறுவிதமான அனைத்துத் தவறான உபதேசங்களும் சமயம் சார்ந்த நோக்கம் கொண்டவையாகும்; அவை மாறுபட்டதும் தவறான புரிந்துகொள்ளுதலுமாகும். தேவனுடைய வார்த்தைகளை எடுத்து அவற்றைக் கடந்தகாலத்தில் புரிந்துகொண்டு, தேவனுடைய இன்றைய வார்த்தைகளை அவற்றுக்கு எதிராய் மதிப்பிடுவதே மதவாதிகளின் சிறந்த திறமையாகும். இன்றைய தேவனை சேவிக்கும்போது, கடந்த காலத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஞானத்தினால் வெளிப்படுத்தப்பட்ட காரியங்களை நீங்கள் பற்றிக்கொண்டால் அது இடையூறு விளைவிக்கக்கூடியதாகவும், உங்கள் நடைமுறைகள் பழமையாகிப் போனதாகவும் வெற்று சமய சடங்காச்சாரமாகவும் மட்டுமே இருக்கும். தேவனை சேவிப்பவர்கள் ஏனைய தராதரங்களோடு வெளிப்புறமாகத் தாழ்மையாகவும் பொறுமையாகவும் இருக்கவேண்டும் என்று நீ நம்பினால், அவ்வகையான அறிவை இக்காலத்தில் நடைமுறைப்படுத்தினால், அவ்வறிவு சமய நோக்கம் கொண்டதாகும்; அச்செயல்பாடு மாய்மாலமாகிவிடும். “சமயம் சார்ந்த நம்பிக்கை” என்னும் பதம் (முன்பு தேவனால் உரைக்கப்பட்ட வார்த்தைகளின் புரிதல் மற்றும் பரிசுத்த ஆவியானவரால் நேரடியாக வெளிப்படுத்தப்பட்ட வெளிச்சம் உள்பட) பழமையாகிப்போன மற்றும் வழக்கத்தில் இல்லாத காரியங்களைக் குறிக்கும். இக்காலத்தில் அவற்றை நடைமுறைப்படுத்தினால் அவை தேவனின் செயல்பாட்டுக்கு இடையூறாக அமையும்; மனுஷனுக்கு ஒரு நன்மையையும் கொண்டு வராது. சமயம் சார்ந்த நம்பிக்கைகளை மக்கள் தம்மிடமிருந்து அகற்றாவிட்டால், அது அவர்கள் தேவனை சேவிப்பதற்குப் பெரிய தடையாக மாறும். சமயம் சார்ந்த நம்பிக்கையுள்ள மக்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையுடன் முன்னேறிச் செல்ல எந்த வழியும் இல்லை; அவர்கள் ஒன்று, இரண்டு என அடி சறுக்குவார்கள். ஏனென்றால் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் மனுஷனை அசாதாரண சுயநீதி கொண்டவனாகவும் அகந்தை கொண்டவனாகவும் மாற்றுகின்றன. தேவன் தாம் முன்பு கூறியவற்றை, செய்தவற்றைக் குறித்த பழைய நினைவுகளில் திளைப்பவரல்லர்; மாறாக, ஏதாவது ஒன்று பழையதாகிவிட்டால் அதை அவர் நீக்கிப்போடுகிறார். உண்மையில் நம்பிக்கைகளை உன்னால் விட்டுவிட முடியவில்லையா? தேவன் முற்காலத்தில் கூறிய வார்த்தைகளைப் பற்றிக்கொண்டிருந்தால், இது நீ தேவனின் கிரியைகளை அறிந்திருக்கிறாய் என்பதை நிரூபிக்கிறதா? இன்று பரிசுத்த ஆவியானவரின் வெளிச்சத்தை உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், கடந்த கால வெளிச்சத்தைப் பற்றிக் கொண்டிருப்பதால், நீ தேவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாய் என்று நிரூபிக்க இயலுமா? இன்னும்கூட சமயம் சார்ந்த நம்பிக்கைகளை உன்னால் விட்டுவிட இயலவில்லையா? அப்படியாயின் நீ தேவனை எதிர்க்கும் ஒருவனாக மாறுவாய்.

சமயம் சார்ந்த நம்பிக்கைகளை மக்களால் விட்டுவிடக்கூடுமாயின் அவர்கள் தேவனின் இன்றைய கிரியைகளையும் வார்த்தைகளையும் மதிப்பிடுவதில் தங்கள் மனதை ஈடுபடுத்தாமல் நேரடியாகக் கீழ்ப்படிவார்கள். தேவனின் இன்றைய கிரியை கடந்த காலத்தைப் போலன்றி வெளிப்பட்டாலும், உன்னால் கடந்த கால பார்வைகளை விட்டுவிட்டு தேவனின் இன்றைய கிரியைக்கு நேரடியாகக் கீழ்ப்படிய முடியும். தேவன் கடந்த காலத்தில் எப்படி செயல்பட்டார் என்பதைக் கருதாமல், தேவனின் இன்றைய கிரியைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்ளும் திறன் உனக்கு இருந்தால், நீ அவற்றின் நம்பிக்கைகளை விட்டுவிடுபவனாகவும், தேவனுக்குக் கீழ்ப்படிபவனாகவும், தேவனின் வார்த்தைகளுக்கும் அவரது கிரியைகளுக்கும் கீழ்ப்படியக்கூடியவனாகவும் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறவனாகவும் இருப்பாய். இதில் நீ தேவனுக்கு உண்மையாய் கீழ்ப்படிகிறவனாக இருப்பாய். தேவனின் கிரியையைப் பரிசோதிக்காமல் அல்லது ஆராய்ந்து பார்க்காமல், தேவன் தமது முந்தைய கிரியையை மறந்துவிட்டதுபோல நீயும் அதை மறந்திருப்பாய். நிகழ்காலம் நிகழ்காலம்தான்; கடந்த காலம் கடந்தகாலம்தான். முன்பு தாம் செய்தவற்றை தேவன் இன்று புறம்பே தள்ளி வைத்துவிட்டதால், நீ அதில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடாது. அப்படிப்பட்டவரே தேவனுக்கு முழுவதுமாக கீழ்ப்படிகிறவராக, தங்கள் சமயம் சார்ந்த நம்பிக்கைளை முற்றிலும் விட்டுவிடுகிறவராக இருக்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் இன்றைய கிரியையை அறிந்துகொள்பவர்களால் மட்டுமே அவரைச் சேவிக்க இயலும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 283

தேவனின் கிரியையில் எப்போதும் புதிய முன்னேற்றங்கள் இருப்பதால், புதிய கிரியை வரும்போது, பழையதாகி வழக்கத்தில் இல்லாமல் போகிற கிரியை உண்டு. பழையதும் புதியதுமான இந்த வெவ்வேறு வகையான கிரியைகள் ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கின்றன, ஒவ்வொரு நடவடிக்கையும் கடைசி நடவடிக்கையிலிருந்து தொடர்கிறது. புதிய கிரியை வருவதால் பழையவை நீக்கப்படவேண்டியது கட்டாயம். எடுத்துக்காட்டாக, மனுஷனின் பல்லாண்டு அனுபவம் மற்றும் போதகத்தோடு இணைந்த நீண்டகால பழக்கவழக்கங்கள், சொல்வழக்குகள் மனுஷனின் மனதில் எல்லாவிதமான கருத்துக்களையும் ஏற்படுத்தி இருக்கும். பழங்காலம் முதல் பல ஆண்டுகளாகப் பரவி வரும் பாரம்பரியக் கோட்பாடுகள் மனுஷனின் மனதில் இதுபோன்ற நம்பிக்கைகளை ஏற்புடையதாக உருவாக்கி வரும் நிலையில், தேவன் இன்னும் தமது உண்மையான முகத்தை, உள்ளார்ந்த தன்மையை மனுஷனுக்கு முழுவதுமாக வெளிப்படுத்த வேண்டும். காலப்போக்கில் தேவன்மேல் மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையின்மீது இதுபோன்ற பல்வேறு நம்பிக்கைகளின் தாக்கம், தேவ ஜனங்களில் எல்லாவிதமான நம்பிக்கை சார்ந்த புரிதல்கள் உருவாக தொடர்ந்து காரணமாகிறது; தேவனை சேவிக்கும் சமயரீதியான பல மக்கள் அவரது எதிரிகளாக மாறிவிட இது வழிவகுக்கிறது என்று சொல்லலாம். ஆகவே, மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் தேவனை எதிர்த்தும், அவ்வளவு அதிகமாய் அவருக்கு எதிரிகளாகவும் இருக்கின்றனர். தேவனின் கிரியை ஒருபோதும் பழமையாய்ப் போகாது; அது எப்போதும் புதியதாய் இருக்கும்; ஒருபோதும் சித்தாந்தங்களை உருவாக்காது; மாறாக, தொடர்ந்து மாறி, பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இம்முறையில் செயல்படுவது தேவனின் இயல்பான மனநிலையின் ஒரு வெளிப்படுதலாகும். இது தேவனின் கிரியையின். இயல்பான கொள்கையாகவும், தேவன் தமது ஆளுகையை நிறைவேற்றும் வழிகளில் ஒன்றாகவும் உள்ளது. தேவன் இவ்வழியில் செயல்படாவிட்டால் மனுஷன் மாறாமல் அல்லது தேவனைக் குறித்து அறிந்துகொள்ள இயலாமல் போகும்; சாத்தான் தோற்கடிக்கப்படமாட்டான். இப்படியாக அவரது கிரியையில், மாற்றங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது, ஆனால் இது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடக்கிறது. எப்படியாயினும் தேவனில் மனுஷன் நம்பிக்கை வைக்கும் முறையானது சற்று வேறுபட்டது. அவன் பழைய, பழக்கமான சித்தாந்தங்கள் மற்றும் அமைப்புகளைப் பற்றிக் கொள்கிறான்; அவை எந்த அளவுக்குப் பழமையாக இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு அவை அவன் மனதுக்குப் பிடித்தமானவையாய் உள்ளன. மதியீனமான, கல்லைப் போல் இறுகிய மனுஷ மனதினால் தேவனுடைய ஆராய்ந்துமுடியாத புதிய கிரியைகளையும் வார்த்தைகளையும் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? ஒருபோதும் பழையவராகிப் போகாமல் எப்போதும் புதிதாய் இருக்கின்ற தேவனை மனுஷன் விரும்பவில்லை; நீண்ட பல்லும் வெள்ளை முடியும் கொண்டு ஓரிடத்தில் இருக்கிற பழைய தேவனையே அவன் விரும்புகிறான். இப்படி தேவனும் மனுஷனும் தங்களுக்கென்று சொந்த விருப்பங்களை கொண்டிருப்பதால், மனுஷன் தேவனுக்கு விரோதியாகிறான். ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகள் தேவன் புதிய கிரியைகளைச் செய்து கொண்டிருக்கிறார்; இன்றும்கூட பல முரண்பாடுகள் இருந்து வருகின்றன. பின்னர் அவை தீர்வுக்கு அப்பாற்பட்டவையாகி விடுகின்றன. மனுஷனுடைய பிடிவாதம் அல்லது எந்த மனுஷனாலும் மாற்றக்கூடாத தேவனின் ஆளுகை ஆணைகளின் காரணமாக அப்படி இருக்கக்கூடும். ஆனாலும் தம் பக்கம் யாருமில்லாததுபோல தேவன் தமது பூர்த்தியாகாத இரட்சிப்பின் பணிகளை நடத்திக்கொண்டிருக்கும்போது, அந்த குருமாரும் குருத்துவ பெண்களும் இன்னும் செல்லரித்துப் போன பழைய புஸ்தகங்கள் மற்றும் காகிதங்களை பற்றிக்கொண்டுள்ளனர். இந்த முரண்பாடுகள் தேவனுக்கும் மனுஷனுக்குமிடையே விரோதத்தை உண்டு பண்ணினாலும், அவை சரிசெய்யப்படக்கூடாதவையாயிருந்தாலும், அவை இருந்தாலும் இல்லாததுபோல தேவன் அவற்றின்மேல் கவனம் செலுத்தமாட்டார். எப்படியாயினும் மனுஷன் தன்னுடைய நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய எண்ணங்களை விட்டுவிடாமல் இருக்கிறான். மனுஷன் தன் நிலைப்பாட்டிலிருந்து மாறாமல் இருந்தாலும், தேவனது பாதங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன; சூழ்நிலைக்கேற்ப தம் நிலைப்பாட்டை அவர் எப்போதும் மாற்றிக்கொண்டே இருக்கிறார் என்பது விளக்கம் தேவைப்படாத உதாரணமாகும். முடிவில் போராட்டமே இல்லாமல் மனுஷன் தோற்கடிக்கப்படுவான். தம்மால் தோற்கடிக்கப்பட்ட அத்தனை எதிரிகளுக்கும் தேவன் பெரிய பகைவராகவும், தோற்கடிக்கப்பட்ட மற்றும் தோற்கடிக்கப்படாத மனுக்குலத்திற்கான வீரராகவும் திகழ்வார். தேவனோடு போட்டியிட்டு யாரால் ஜெயம்பெற இயலும்? தேவனுடைய கிரியை தொடங்கும்போதுதான் மனுஷனுடைய கருத்துகள் பிறப்பதால், அவை தேவனிடமிருந்து வந்தவை போன்று தோற்றமளிக்கின்றன. எப்படியாயினும் தேவன் இதற்காக மனுஷனை மன்னிப்பதில்லை; மாறாக, தமது கிரியைக்குப் புறம்பான தமது கிரியை தொடங்கும்போது, “தேவனுக்காக” என்று தொகுப்பு தொகுப்பாய் மனுஷன் உருவாக்கும் தயாரிப்புகளுக்காக அவர் மனுஷனை மெச்சுவதில்லை. அதற்குப் பதிலாக, மனுஷனுடைய நம்பிக்கைகளை குறித்தும் பழைமையானதும் சமயரீதியானதுமான நம்பிக்கையைக் குறித்தும் அவர் மிகவும் வெறுப்படைந்திருக்கிறார், மேலும் அவர் இக்கருத்துக்கள் எப்போது முதன்முதலாக தோன்றின என்ற காலத்தை ஒப்புக்கொள்ள மனமில்லாதிருக்கிறார். மனுஷனுடைய இப்படியான நம்பிக்கைகள் தேவனிடத்திருந்தல்ல, சாத்தானிடமிருந்தும் மனுஷ சிந்தனைகளிலிருந்தும் மனதிலிருந்தும் தோன்றி மனுஷனால் பரப்பப்படுவதால் இக்கருத்துகள் தமது கிரியையினால் தோன்றியவை என்பதை அவர் ஒப்புக்கொள்ளமாட்டார். தமது கிரியை பழையதாகவும் செத்துப்போனதாகவும் அல்ல, புதிதாயும் ஜீவனுள்ளதாயும் இருக்கவேண்டுமென்பதே எப்போதும் தேவனின் நோக்கம். அவை காலத்திற்கேற்ப மனுஷனால் பின்பற்றப்படவேண்டியவையாயினும், அவை மாற்றப்படக்கூடாததும் அழியாதவையுமல்ல. ஏனென்றால் அவர் மனுஷனை ஜீவித்திருக்கவும் புதிதாயிருக்கவும் செய்யும் தேவனாக இருக்கிறார், மாறாக, சாத்தானோ மனுஷன் சாகவும் பழையவனாகிப் போகவும் காரணமாகிறான். உங்களால் இதை இன்னும் புரிந்துகொள்ள இயலவில்லையா? தேவனைக் குறித்து உனக்குக் கருத்துகள் இருந்தாலும், உன் மனம் மூடியிருப்பதினால் அவற்றை விட்டொழிக்க இயலவில்லை. தேவனுடைய கிரியைகளில் மிகவும் குறைவான அறிவு இருப்பதாலோ, அவரது கிரியைகள் மனுஷ விருப்பங்களிலிருந்து வேறுபட்டு இருப்பதாலோ தேவன் தமது கடமைகளில் எப்போதும் அலட்சியமாக இருப்பதாலோ அல்ல. தேவன் காரியங்களை உனக்கு கடினமாக்கி வைத்திருப்பதால் அல்ல, நீ கீழ்ப்படியாதவனாக இருப்பதனாலும், சிருஷ்டியின் தன்மை உன்னிடம் சிறிதும் காணப்படாததனாலும், உன் நம்பிக்கைகளை உன்னால் விட்டுவிட முடியவில்லை. இவை எல்லாவற்றையும் நீயே வருவித்துக் கொண்டாய்; தேவனுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை. எல்லா பாடுகளும் தொல்லைகளும் மனுஷனாலேயே உருவாக்கப்படுகின்றன. தேவனுடைய எண்ணங்கள் எப்போதும் நன்மையானவையாய் இருக்கின்றன. நீ கருத்துக்களை உருவாக்கிக்கொள்ள தாம் காரணமாவதையல்ல, காலம் செல்லச் செல்ல நீ மாற்றம் பெற்று புதுப்பிக்கப்படவேண்டுமென்றே அவர் விரும்புகிறார். உனக்கு எது நன்மையானதென்று இன்னும் அறிந்திடாமல், எப்போதும் ஆராய்ந்து கொண்டு அல்லது பரிசோதித்துக் கொண்டு இருக்கிறாய். தேவன் உனக்குக் காரியங்களை கடினமாக்கவில்லை; உனக்குக் கீழ்ப்படியாமை பெரிதாயிருப்பதோடு தேவன்மேல் உனக்கு எந்தப் பயமுமில்லை. மிகச்சிறிய சிருஷ்டிப்பு ஒன்று, முன்பு தேவனால் கொடுக்கப்பட்ட பழையவற்றை எடுத்துக்கொண்டு, திரும்ப தேவனை தாக்குவதற்கு அதை பயன்படுத்தினால் அது மனுஷனின் கீழ்ப்படியாமைதானே? தேவன் முன்பு தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு மனுஷர்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை; அவர்கள் அந்த அழுகிய கருத்துக்களைக் குறித்து எதுவும் சொல்ல விரும்பாததனால், எந்தப் பெறுமதியும் இல்லாத, துர்நாற்றம் வீசுகிற, அழுகிய, அலங்கார வார்த்தைகளைப் பகட்டாக காண்பிக்கத் தகுதியில்லாதவர்கள். அவர்கள் இன்னும் அதிகத் தகுதியற்றவர்கள்தானே?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனின் இன்றைய கிரியையை அறிந்துகொள்பவர்களால் மட்டுமே அவரைச் சேவிக்க இயலும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 284

தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது, மேலும் அவருடைய கிரியையின் நோக்கம் மாறாவிட்டாலும், அவர் கிரியை செய்யும் முறை தொடர்ந்து மாறுகிறது, அதாவது தேவனைப் பின்பற்றுகிறவர்களும்கூட தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறார்கள். தேவன் அதிகமான கிரியையைச் செய்யச்செய்ய, தேவனைப் பற்றிய அறிவு மனிதனுக்கு முழுமையாகிறது. தேவனின் கிரியையின் விளைவாக மனிதனின் மனநிலையிலும் அதற்கேற்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. இருப்பினும், தேவனுடைய கிரியை எப்போதும் மாறிக்கொண்டு இருப்பதால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறியாதவர்கள், மேலும் சத்தியத்தை அறியாத அந்த மூடத்தனமான மக்கள் தேவனை எதிர்ப்பவர்களாகின்றனர். தேவனின் கிரியை ஒருபோதும் மனிதனின் எண்ணங்களுக்கு ஏற்ப இருப்பதில்லை, ஏனெனில் அவரது கிரியை எப்போதும் புதியதே தவிர ஒருபோதும் பழையதல்ல, மற்றும் அவர் ஒருபோதும் பழைய கிரியையைத் திருப்பிச் செய்வதில்லை, ஆனால் மாறாக முன்னெப்போதும் செய்யப்படாத கிரியையுடன் முன்னோக்கிச் செல்கிறார். தேவன் தாம் செய்த அதே கிரியையைத் திருப்பிச் செய்வதில்லை என்பதாலும், மனிதன் எப்போதும் தேவன் கடந்த காலத்தில் செய்த கிரியையை வைத்தே அவரது தற்போதைய கிரியையை மதிப்பிடுவதினாலும், புதிய காலத்தின் கிரியையின் ஒவ்வொரு கட்டத்தையும் நிறைவேற்றுவது தேவனுக்கு மிகவும் கடினமாகிவிட்டது. மனிதனுக்கோ மிக அதிக அளவிலான கஷ்டங்கள்! அவன் தனது சிந்தனைகளில் மிகவும் பழமைவாதியாக இருக்கிறான்! தேவனின் கிரியையை எவரும் அறியவில்லை, ஆனால் ஒவ்வொருவரும் அதை வரம்பிற்குட்படுத்துகின்றனர். தேவனை விட்டு விலகும் போது மனிதன் ஜீவன், சத்தியம் மற்றும் தேவ ஆசீர்வாதங்களை இழக்கிறான், ஆனால் அவன் ஜீவனையோ அல்லது சத்தியத்தையோ பெறுவதில்லை, மனுக்குலத்திற்குத் தேவன் அருளும் பெரும் ஆசீர்வாதங்களையும் பெறுவதில்லை. எல்லா மனிதர்களும் தேவனை அடையவே விரும்புகின்றனர், ஆனால் தேவனின் கிரியைகளில் எந்த ஒரு மாற்றத்தையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தேவனின் புதிய கிரியையை ஏற்காதவர்கள் தேவனின் கிரியை மாறாதது என்றும் அது என்றென்றும் நிலைமாறாமல் இருக்கும் என்றும் நம்புகின்றனர். அவர்களது நம்பிக்கையின்படி, நித்திய இரட்சிப்பை அடையத் தேவையானதெல்லாம் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிப்பது மட்டுமே, மேலும் அவர்கள் மனந்திரும்பி தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு விட்டாலே தேவனின் சித்தம் எப்போதும் நிறைவேறிவிடும். நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கும் தேவனும், மனிதனுக்காகச் சிலுவையில் அறையப்பட்ட தேவனும் மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்று அவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்; வேதாகமத்தை தேவன் மிஞ்சக் கூடாது மற்றும் மிஞ்ச முடியாது என்பதும் கூட அவர்களது எண்ணம் ஆகும். சரியாகச் சொல்லப்போனால், இந்த எண்ணங்களே அவர்களைப் பழைய நியாயப்பிரமாணங்களுடன் பிணைத்து செத்த விதிகளுடன் சேர்த்துவைத்து அறைந்துள்ளன. தேவனின் புதிய கிரியை எதுவாக இருந்த போதிலும், அது தீர்க்கதரிசனங்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும், மேலும் அத்தகைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், “உத்தம” இருதயத்துடன் அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் வெளிப்பாடுகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்; அப்படி இல்லை என்றால், அத்தகைய கிரியைகள் தேவனின் கிரியைகளாக இருக்க முடியாது என்று நம்பும் மேலதிகமானோரும் உள்ளனர்; தேவனை அறிந்துகொள்ளுவது என்பது மனிதனுக்கு ஏற்கெனவே ஓர் எளிமையான காரியம் அல்ல. மனிதனின் மூட இருதயத்தோடு அவனது சுய-முக்கியத்துவம் மற்றும் அகம்பாவம் என்னும் கலக சுபாவத்தின் காரணமாக தேவனின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளுவது அவனுக்கு இன்னும் கடினமானதாக இருக்கிறது. தேவனின் புதிய கிரியையை மனிதன் கவனமாக ஆராய்வதுமில்லை, அதைத் தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை; அதற்குப் பதிலாக, அவன் தேவனிடம் இருந்து வெளிப்பாடுகளுக்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் காத்திருந்து ஓர் அலட்சியமான மனப்பாங்கைக் கடைபிடிக்கிறான். இது தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்து அவரை எதிர்ப்பவர்களின் நடத்தை அல்லவா? இத்தகைய மக்கள் தேவனின் அங்கீகாரத்தை எவ்வாறு பெற முடியும்?

இயேசுவின் கிரியையும் தகர்ந்து போய்விட்டது என்று இன்று நான் கூறுவது போலவே கிருபையின் காலத்தில் யேகோவாவின் கிரியை தகர்ந்து போய்விட்டது என்று இயேசு கூறினார். கிருபையின் காலம் இல்லாமல் இருந்து நியாயப்பிரமாணத்தின் காலம் மட்டுமே இருந்திருந்தால், இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்க மாட்டார் மேலும் அனைத்து மனுக்குலத்தையும் இரட்சித்திருக்கவும் மாட்டார். நியாயப்பிரமாணத்தின் காலம் மட்டுமே இருந்திருந்தால், மனுக்குலம் இன்றளவும் வந்தடைந்திருக்க முடியாது. வரலாறு முன்னோக்கி நகர்கிறது, மேலும் வரலாறு என்பது தேவனின் கிரியையின் இயற்கைச் சட்டம் அல்லவா? பிரபஞ்சம் முழுவதிலும் அவர் மனிதனை நிர்வகிப்பது பற்றிய ஒரு சித்தரிப்பு அல்லவா இது? வரலாறு முன்னோக்கி நகர்கிறது, மேலும் தேவனின் கிரியையும் அவ்வாறே முன்னோக்கி நகர்கிறது. தேவ சித்தம் தொடர்ந்து மாறுகிறது. அவரால் ஆறாயிரம் ஆண்டுகளாகக் கிரியை என்னும் ஒற்றைக் கட்டத்திலேயே நிலைத்திருக்க முடியாது, ஏனெனில் ஒவ்வொருவரும் அறிந்திருப்பது போல, தேவன் எப்போதுமே புதியவராக இருக்கிறார், மேலும் அவர் ஒருபோதும் பழையவர் அல்ல, மற்றும் சிலுவையில் அறையப்பட்டது போல ஒருமுறை, இருமுறை, மூன்று முறைகள்…. என அவர் தொடர்ந்து அறையப்பட்டு அவ்விதமான கிரியையை அவரால் ஆற்ற முடியாது, அவ்வாறு சிந்திப்பதே கேலிக்குரியதாக இருக்கும். தேவன் தொடர்ந்து ஒரே கிரியையை செய்துகொண்டே இருப்பதில்லை; நான் எவ்வாறு உங்களிடம் புதிய வார்த்தைகளைப் பேசியும் ஒவ்வொரு நாளும் புதிய கிரியையைச் செய்கிறேனோ அதுபோல அவருடைய கிரியையும் எப்போதும் மாறிக்கொண்டிருக்கிறது மற்றும் எப்போதும் புதிதானது. இதுதான் நான் செய்யும் கிரியை, மற்றும் எது முக்கியம் என்றால் “புதிது” மற்றும் “அற்புதமானது” என்ற வார்த்தைகளே. “தேவன் மாறாதவர், மற்றும் தேவன் எப்போதும் தேவனாகவே இருப்பார்”: இந்தக் கூற்று நிச்சயமாகவே உண்மையானது; தேவனின் சாராம்சம் மாறுவதில்லை, தேவன் எப்போதும் தேவனே, மற்றும் அவர் ஒருபோதும் சாத்தானாக மாற முடியாது, ஆனால் இது அவரது கிரியையானது அவரது சாரம்சத்தைப் போன்று நிலையாகவும் மாறாததாகவும் இருக்கும் என்று நிரூபிக்காது. தேவன் மாறாதவர் என்று நீ அறிவிக்கிறாய், ஆனால் எவ்வாறு, பின்னர், தேவன் எப்போதும் புதியவர் மற்றும் ஒருபோதும் பழையவர் அல்ல என்று உன்னால் விளக்க முடியுமா? தேவனின் கிரியை தொடர்ந்து பரவுகிறது மேலும் தொடர்ந்து மாறுகிறது, மற்றும் அவரது சித்தம் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு மனிதனுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மனிதன் தேவனின் கிரியையை அனுபவிக்கும்போது, அவனது மனநிலை முடிவின்றி மாறுகிறது போல அவனது அறிவும் மாறுகிறது. பின் எங்கிருந்து இந்த மாற்றம் எழுகிறது? அது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் தேவனின் கிரியையில் இருந்தல்லவா? மனிதனின் மனநிலை மாறமுடியும் என்றால், என்னுடைய கிரியையும் என் வார்த்தைகளும் தொடர்ந்து மாற மனிதனால் ஏன் அனுமதிக்க முடியாது? மனிதனின் கட்டுப்பாடுகளுக்கு நானும் உட்பட வேண்டுமா? இதில், திணிக்கப்படும் வாதங்களையும் நெறியற்ற தர்க்கங்களையும் நீ பயன்படுத்தவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லை வகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 285

யூதர்கள் யாவரும் பழைய ஏற்பாட்டைப் படித்து ஒரு முன்னணையில் ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்தார்கள். இந்தத் தீர்க்கதரிசனத்தை முற்றிலுமாக அறிந்திருந்த பின்னும் அவர்கள் ஏன் இயேசுவைத் துன்பப்படுத்தினார்கள்? அது அவர்களது கலக சுபாவத்தினாலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் குறித்த அறியாமையினாலும் அல்லவா? அக்காலத்தில், தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட ஆண் பிள்ளையைப் பற்றி தாங்கள் அறிந்திருந்ததை விடவும் இயேசுவின் கிரியை வேறாக இருப்பதாக பரிசேயர்கள் நம்பினார்கள், மேலும் மனிதனாகப் பிறந்த தேவனுடைய கிரியை வேதாகமத்தோடு இணக்கமானதாக இல்லை என்பதால் இன்று மக்கள் தேவனை நிராகரிக்கிறார்கள். தேவனிடத்தில் அவர்களுடைய கலகப்புத்தியின் சாராம்சம் ஒரேமாதிரியாக இருக்கிறதல்லவா? பரிசுத்த ஆவியானவரின் அனைத்துக் கிரியைகளையும் உன்னால் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள முடியுமா? அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தால் அதுவே சரியான நீரோட்டம் ஆகும், மேலும் எந்த ஒரு சந்தேகமும் இன்றி நீ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; எதை ஏற்க வேண்டும் என்பதை நீ தேர்ந்தெடுக்கக் கூடாது. நீ தேவனுக்குள் நுண்ணறிவைப் பெற்று அவரைக் குறித்து அதிக கவனமாக இருந்தால், இது தேவையற்றதாக இருந்திருக்கும் அல்லவா? நீ வேதாகமத்தில் இருந்து இன்னும் அதிக ஆதாரத்தைத் தேடக் கூடாது; அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தால், நீ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் நீ தேவனைப் பின்பற்றவே அவரை நம்புகிறாய், மேலும் அவரை நீ சோதித்தறியக் கூடாது. நான் உன்னுடைய தேவன் என்பதை நிரூபிக்க மேலும் ஆதாரங்களை நீ தேடக் கூடாது, ஆனால் நான் உனக்குப் பயனுள்ளவராக இருக்கிறேனா என்பதை உய்த்துணர்ந்து கொள்ளும் திறனுடையவனாக நீ இருக்கவேண்டும்—இதுவே மிகவும் முக்கியமானதாகும். நீ வேதாகமத்துக்குள் மறுக்கமுடியாத சான்றுகளைக் கண்டறிந்தாலும், அது உன்னை என் முன் முழுமையாகக் கொண்டுவர முடியாது. நீ வேதாகமத்தின் வரையறைக்குள்ளேயே வாழ்கிறாய், எனக்கு முன் அல்ல; என்னை அறிந்துகொள்ள வேதாகமம் உனக்கு உதவமுடியாது, என் பேரில் உனக்குள்ள அன்பையும் அதனால் ஆழப்படுத்த முடியாது. ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்று வேதாகமம் தீர்க்கதரிசனம் உரைத்த போதிலும், மனிதன் தேவனுடைய கிரியையை அறிந்திருக்கவில்லை என்பதால், ஒருவராலும் யாரைக் குறித்து இந்தத் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, மேலும் இதுவே இயேசுவுக்கு எதிராகப் பரிசேயர்களை நிற்கவைத்தது. என் கிரியை மனிதனின் நலனுக்கானது என்று சிலர் அறிவர், ஆனால் அவர்கள் தொடர்ந்து நானும் இயேசுவும் முற்றிலும் தனியான, ஒருவருக்கொருவர் இணக்கமற்ற இருவர் என தொடர்ந்து நம்புகின்றனர். அக்காலமான கிருபையின் காலத்தில், எவ்வாறு கடைப்பிடித்து நடப்பது, எவ்வாறு ஒன்றுகூடுவது, எவ்வாறு ஜெபத்தின் போது வேண்டுதல் செய்வது, எவ்வாறு பிறரை நடத்துவது, போன்ற தலைப்புகளில் இயேசு மட்டுமே தமது சீடர்களுக்கு ஒரு தொடர் போதனையை அளித்தார். அவர் செய்த கிரியை கிருபையின் காலத்திற்குரியது, மேலும் அவர் சீடர்களும் தம்மைப் பின்பற்றியவர்களும் எவ்வாறு கடைபிடித்து நடக்கவேண்டும் என்று மட்டுமே விளக்கினார். அவர் கிருபையின் காலக் கிரியையை மட்டுமே செய்தார், மேலும் கடைசி நாட்களின் கிரியை ஒன்றையும் செய்யவில்லை. நியாயப்பிரமாணத்தின் காலத்தில் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணங்களை யேகோவா விதித்தபோது, பின் ஏன் அவர் கிருபையின் காலக் கிரியையை ஆற்றவில்லை? கிருபையின் காலக் கிரியையை முன்கூட்டியே ஏன் அவர் தெளிவுபடுத்தவில்லை? மனிதன் அதை ஏற்றுக்கொள்ள அவனுக்கு இது உதவி இருக்குமல்லவா? ஓர் ஆண் குழந்தை பிறந்து ஆளுகை செய்யும் என்று மட்டுமே அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார், ஆனால் அவர் கிருபையின் காலக் கிரியையை முன்கூட்டியே செய்யவில்லை. தேவனின் கிரியைக்கு ஒவ்வொரு காலத்திலும் தெளிவான எல்லைகள் உள்ளன; அவர் நடப்புக் காலத்தின் கிரியையை மட்டுமே செய்கிறார், மற்றும் கிரியையின் அடுத்த கட்டத்தை அவர் ஒருபோதும் முன்கூட்டியே ஆற்றுவதில்லை. இவ்வாறே ஒவ்வொரு காலத்தினுடைய அவரது பிரதிநிதித்துவக் கிரியையை முன்னுக்குக் கொண்டுவர முடியும். இயேசு கடைசி நாட்களின் அடையாளங்களைப் பற்றி, எவ்வாறு பொறுமையாக இருப்பது என்பது பற்றி, மற்றும் எவ்வாறு இரட்சிக்கப்படுவது என்பது பற்றி, எவ்வாறு மனந்திரும்பி பாவ அறிக்கை செய்வது என்பது பற்றி மற்றும் எவ்வாறு சிலுவையை எடுத்துக்கொண்டு பாடுகளை சகிப்பது என்பது பற்றி மட்டுமே பேசினார்; கடைசி நாட்களில் எவ்வாறு மனிதன் வருகைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்றோ அல்லது அவன் எவ்வாறு தேவ சித்தத்தைத் திருப்தி செய்ய முயலவேண்டும் என்றோ ஒருபோதும் அவர் பேசவில்லை. இவ்வாறிருக்க, தேவனின் கடைசி நாட்களின் கிரியையை வேதாகமத்தில் தேடுவது என்பது வேடிக்கையாக இருக்கிறது அல்லவா? வேதாகமத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு இருப்பதால் மட்டுமே உன்னால் என்ன காண முடியும்? ஒரு வேத விளக்கவுரையாளராக இருந்தாலும் சரி அல்லது ஒரு போதகராக இருந்தாலும் சரி, இன்றைக்கான கிரியையை முன்கூட்டியே யாரால் கண்டிருக்க முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லை வகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 286

பரிசேயர்கள் இயேசுவை ஏன் எதிர்த்தார்கள் என்பதற்கான மூலக்காரணத்தை நீங்கள் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? பரிசேயர்களின் சாராம்சத்தை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அவர்கள் மேசியாவைப் பற்றிய கற்பனைகளால் நிறைந்திருந்தனர். மேலும், மேசியா வருவார் என்று மட்டுமே அவர்கள் நம்பினார்கள், ஆனாலும் ஜீவியத்தின் சத்தியத்தைப் பின்பற்றவில்லை. ஆகவே, இன்றும் அவர்கள் மேசியாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஜீவ வழியைப் பற்றிய எந்த அறிவும் இல்லை, சத்தியத்தின் வழி என்னவென்றும் அறிந்திருக்கவில்லை. இதுபோன்ற முட்டாள்தனமான, பிடிவாதமான மற்றும் அறிவற்ற ஜனங்களால் தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற முடியும் என்று எப்படி கூறுகிறீர்கள்? அவர்களால் மேசியாவை எவ்வாறு காண முடியும்? பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் விதத்தை அவர்கள் அறியாத காரணத்தினாலும், இயேசு பேசிய சத்தியத்தின் பாதை அவர்களுக்குத் தெரியாததாலும், மேசியாவை அவர்கள் புரிந்து கொள்ளாததாலும் அவர்கள் இயேசுவை எதிர்த்தார்கள். அவர்கள் ஒருபோதும் மேசியாவைக் கண்டிராததாலும், மேசியாவுடன் ஒருபோதும் ஐக்கியப்பட்டிராததாலும், மேசியாவின் சாராம்சத்தை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தார்கள். ஆனால், அதே நேரத்தில், மேசியாவின் பெயரை மட்டும் பற்றிப்பிடித்துக்கொண்ட தவறையும் செய்தார்கள். இந்தப் பரிசேயர்கள் பொதுவாகவே பிடிவாதமானவர்கள் மற்றும் அகந்தையுள்ளவர்கள். மேலும், அவர்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியவில்லை. தேவன் மீது அவர்கள் வைத்திருந்த விசுவாசத்தின் கொள்கை என்னவென்றால்: உன் பிரசங்கம் எவ்வளவுதான் ஆழமானதாக இருந்தாலும், உன் அதிகாரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நீ மேசியா என்று அழைக்கப்படாவிட்டால் நீ கிறிஸ்து அல்ல. இந்த விசுவாசம் போலியானது மற்றும் கேலிக்குரியது அல்லவா? நான் உங்களிடம் மேலும் கேட்கிறேன்: இயேசுவைப் பற்றிய புரிதல் துளியளவும் உங்களிடம் இல்லாதிருந்தால், ஆரம்பகாலப் பரிசேயர்களின் தவறுகளை நீங்களும் செய்வது உங்களுக்கு மிகவும் எளிதானதல்லவா? சத்தியத்தின் வழியை உன்னால் அறிந்துகொள்ள முடியுமா? கிறிஸ்துவை நீ எதிர்க்க மாட்டாய் என்று மெய்யாகவே உன்னால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? பரிசுத்த ஆவியானவரின் கிரியையை உன்னால் பின்பற்ற இயலுமா? நீ கிறிஸ்துவை எதிர்ப்பாயா என்று உனக்குத் தெரியாவிட்டால், நீ ஏற்கனவே மரணத்தின் விளிம்பில் ஜீவிக்கிறாய் என்று நான் சொல்கிறேன். மேசியாவை அறியாதவர்கள் அனைவரும் இயேசுவை எதிர்க்கவும், இயேசுவை நிராகரிக்கவும், அவரை அவதூறு செய்யவும் கூடியவர்களாவர். இயேசுவைப் புரிந்து கொள்ளாத ஜனங்கள் அனைவரும் அவரை நிராகரித்து அவதூறு செய்யக்கூடியவர்களாவர். மேலும் இயேசுவின் வருகையைக் கூட சாத்தானின் வஞ்சகமாக அவர்கள் பார்க்கக்கூடியவர்கள். இன்னும் அதிகமான ஜனங்கள் இயேசு மாம்சத்திற்குத் திரும்பியதைக் குறைகூறுவார்கள். இவை அனைத்தும் உங்களைப் பயமுறுத்தவில்லையா? நீங்கள் எதிர்கொள்வது எல்லாம் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரான தூஷணமாகவும், பரிசுத்த ஆவியானவர் சபைகளுக்கு வழங்கும் வார்த்தைகளின் அழிவாகவும், இயேசுவால் வெளிப்படுத்தப்பட்ட அனைத்தும் வெறுத்து ஒதுக்கப்படுவதுமாக இருக்கும். நீங்கள் மிகவும் குழப்பமடைந்துவிட்டால், இயேசுவிடமிருந்து உங்களால் எதைப் பெற முடியும்? உங்கள் தவறுகளை நீங்கள் பிடிவாதமாக உணர மறுத்துவிட்டால், ஒரு வெண்மையான மேகத்தின் மீது இயேசு மறுபடியும் மாம்சத்தில் திரும்பும்போது, அவரின் கிரியையை உங்களால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும்? நான் உங்களுக்கு இதைச் சொல்கிறேன்: சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளாமல், வெண்மேகங்களின் மீது இயேசுவின் வருகையைக் கண்மூடித்தனமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜனங்கள், நிச்சயமாகப் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை தூஷிப்பார்கள், மேலும், இந்த வகையான ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். நீங்கள் இயேசுவின் கிருபையை மட்டுமே விரும்புகிறீர்கள், மேலும், பரலோகம் என்னும் ஆனந்த சாம்ராஜ்யத்தை அனுபவிக்க வேண்டும் என்பதை மட்டுமே விரும்புகிறீர்கள், ஆனால் இயேசு பேசிய வார்த்தைகளுக்கு நீங்கள் ஒருபோதும் கீழ்ப்படிந்திருப்பதில்லை, மேலும், இயேசு மாம்சத்தில் திரும்பி வருகையில் அவர் வெளிப்படுத்திய சத்தியத்தை ஒருபோதும் பெற்றுக்கொள்வதில்லை. ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வந்திருக்கிறார் என்ற உண்மைக்கு ஈடாக நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? நீங்கள் மீண்டும் மீண்டும் பாவங்களைச் செய்து, அதன் பின் மீண்டும் மீண்டும் பாவமன்னிப்புக் கேட்பது நேர்மையாகுமா? ஒரு வெண்மேகத்தின் மீது மறுபடியும் வரும் இயேசுவுக்குப் பலியாக நீங்கள் எதைக் கொடுப்பீர்கள்? நீங்கள் பெருமையாகக் கருதும், உங்களுடைய ஆண்டுக்கணக்கான வேலையையா? திரும்பி வந்த இயேசு உங்களை நம்புவதற்கு நீங்கள் எதை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்? எந்த சத்தியத்திற்கும் கீழ்ப்படியாத உங்கள் அகந்தையுள்ள சுபாவத்தையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 287

உங்கள் விசுவாசம் வார்த்தையில் மட்டுமே உள்ளது, அறிவு சார்ந்த மற்றும் கருத்தியல் சார்ந்த அறிவு மட்டுமே உங்களிடம் உள்ளது, உங்கள் கிரியைகள் பரலோகத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவே உள்ளன, எனவே உங்கள் விசுவாசம் எத்தகையதாய் இருக்க வேண்டும்? இன்று கூட, நீங்கள் இன்னும் சத்தியத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் செவி மடுக்கவில்லை. தேவன் என்றால் யாரென்று உங்களுக்குத் தெரிவதில்லை, கிறிஸ்து என்றால் யாரென்று உங்களுக்குத் தெரிவதில்லை, யேகோவாவை எவ்வாறு வணங்குவது என்று உங்களுக்குத் தெரிவதில்லை, பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்குள் எவ்வாறு பிரவேசிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிவதில்லை, மேலும் தேவனுடைய கிரியையையும் மனிதனுடைய ஏமாற்று வேலையையும் எவ்வாறு வேறுபடுத்துவது என்றும் உங்களுக்குத் தெரிவதில்லை. உன் சொந்த எண்ணங்களுடன் இணங்காத, தேவன் வெளிப்படுத்திய எந்த சத்திய வார்த்தையையும் நிந்திக்க மட்டுமே உனக்குத் தெரியும். உனது தாழ்மை எங்கே? உனது கீழ்ப்படிதல் எங்கே? உனது விசுவாசம் எங்கே? சத்தியத்தைத் தேடுவதற்கான உனது வாஞ்சை எங்கே? தேவன் மீதுள்ள உனது பயபக்தி எங்கே? அடையாளங்கள் நிமித்தமாக தேவனை விசுவாசிப்பவர்கள் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டிய பிரிவினர் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். மாம்சத்திற்குத் திரும்பிய இயேசுவின் வார்த்தைகளைப் பெற இயலாதவர்கள் நிச்சயமாக நரகத்தின் சந்ததியினரும், பிரதான தூதனுடைய சந்ததியினரும் மற்றும் நித்திய அழிவுக்கு உட்படுத்தப்படும் பிரிவினரும் ஆவர். நான் சொல்வதைப் பலர் பொருட்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் இயேசுவைப் பின்பற்றிக்கொண்டு தன்னைப் பரிசுத்தவான் என்று அழைத்துக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் நான் இன்னும் சொல்ல விரும்புகிறேன், இயேசு வானத்திலிருந்து ஒரு வெண்மேகத்தின் மீது இறங்கி வருவதை நீங்கள் உங்களது கண்களால் காணும்போது, அது நீதியின் சூரியனுடைய பகிரங்கமான தோற்றமாக இருக்கும். ஒருவேளை, அது உனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தரும் நேரமாக இருக்கும், ஆனால் இயேசு வானத்திலிருந்து இறங்குவதை நீ காணும் நேரம், நீ தண்டிக்கப்பட நரகத்திற்குச் செல்ல வேண்டிய நேரமாகவும் இருக்கும் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். இது தேவனின் நிர்வாகத் திட்டத்தின் இறுதி காலமாக இருக்கும், மேலும், நல்லோருக்கு தேவன் வெகுமதி அளித்து துன்மார்க்கரைத் தண்டிக்கும் நேரமாகவும் அது இருக்கும். ஏனென்றால் சத்தியத்தின் வெளிப்பாடு மாத்திரம் இருக்கின்ற நிலையில், மனிதன் அடையாளங்களைக் காண்பதற்கு முன்னமே தேவனுடைய நியாயத்தீர்ப்பு முடிந்திருக்கும். சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, அடையாளங்களைத் தேடாதவர்கள், இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டவர்கள், தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாகத் திரும்பி, சிருஷ்டிகரின் அரவணைப்பில் பிரவேசித்திருப்பார்கள். “ஒரு வெண்மேகத்தின் மீது பயணம் செய்யாத இயேசு ஒரு கள்ளக்கிறிஸ்து” என்ற விசுவாசத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் மட்டுமே நித்திய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள், ஏனென்றால் அவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் இயேசுவை மட்டுமே விசுவாசிக்கிறார்கள், மாறாக கடுமையான நியாயத்தீர்ப்பையும், மெய்யான வழியையும், ஜீவனையும் அறிவிக்கும் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே, பகிரங்கமாக, ஒரு வெண்மேகத்தின் மீது இயேசு திரும்பி வரும்போது அவர்களைக் கையாள்வார். அவர்கள் அதீத பிடிவாதமும், தங்களுக்குள் அளவுக்கு மீறிய நம்பிக்கையும் மற்றும் அதீத அகந்தையும் கொண்டவர்கள். இத்தகைய சீர்கேடானவர்களுக்கு இயேசுவால் எவ்வாறு வெகுமதியளிக்க முடியும்? சத்தியத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களுக்கு இயேசு திரும்பி வருவது ஒரு பெரிய இரட்சிப்பாகும், மாறாக சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, அது கண்டனத்தின் அடையாளமாகும். உங்கள் சொந்தப் பாதையை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும், மேலும் பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கவோ, சத்தியத்தை நிராகரிக்கவோ கூடாது. ஒரு அறிவற்ற, அகந்தையுள்ள நபராக நீங்கள் இருக்கக்கூடாது, மாறாகப் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிந்து, சத்தியத்திற்காக ஏங்குகிற மற்றும் அதைத் தேடுகிற ஒருவராக இருக்க வேண்டும்; இந்த வழியில் மட்டுமே நீங்கள் பயனடைவீர்கள். தேவன் மீதான விசுவாசத்தின் பாதையில் கவனமாக நடக்க வேண்டும் என நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். உடனடியாக முடிவுக்கு வந்துவிட வேண்டாம்; மேலும் என்னவென்றால், தேவன் மீதான உங்கள் விசுவாசத்தில் பொறுப்பற்றும் சிந்தனையின்றியும் இருக்காதீர்கள். குறைந்தபட்சம், தேவனை விசுவாசிப்பவர்கள் தாழ்மையும் பயபக்தியும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சத்தியத்தைக் கேட்டும், அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் முட்டாள்தனமானவர்கள் மற்றும் அறிவற்றவர்கள். சத்தியத்தைக் கேட்டும், கவனக்குறைவாக முடிவுகளுக்குச் செல்பவர்களும் அதைக் கண்டனம் செய்பவர்களும் ஆணவத்தால் சூழப்படுகிறார்கள். இயேசுவை விசுவாசிக்கிற எவரும் மற்றவர்களைச் சபிக்கவோ கண்டிக்கவோ தகுதி பெறவில்லை. நீங்கள் அனைவரும் புத்திசாலித்தனமாகவும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவராகவும் இருக்க வேண்டும். ஒருவேளை, சத்திய வழியைக் கேட்டு, ஜீவ வார்த்தையைப் படித்த பிறகு, இந்த 10,000 வார்த்தைகளில் ஒன்று மட்டுமே உனது விசுவாசங்களுக்கும் வேதாகமத்துக்கும் இணங்குவதாக நீ நம்பினால், பின்னர் இந்த வார்த்தைகளின் 10,000வது வார்த்தையில் நீ தொடர்ந்து தேட வேண்டும். தாழ்மையுடன் இருக்கவும், அதீத நம்பிக்கை இல்லாதிருக்கவும், உன்னை மிக அதிகமாக உயர்த்திக் கொள்ளாதிருக்கவும், நான் இன்னும் உனக்கு அறிவுறுத்துகிறேன். தேவனிடம் இத்தகைய அற்ப பயபக்தியை உனது இருதயம் கொண்டிருப்பதால், நீ மாபெரும் வெளிச்சத்தைப் பெறுவாய். இந்த வார்த்தைகளை நீ கவனமாக ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் சிந்தித்தால், அவை சத்தியமா இல்லையா என்பதையும், அவை ஜீவனா இல்லையா என்பதையும் நீ புரிந்துகொள்வாய். ஒருவேளை, சில வாக்கியங்களை மட்டுமே வாசித்த சிலர், இந்த வார்த்தைகளைக் கண்மூடித்தனமாகக் கண்டிப்பார்கள், “இது பரிசுத்த ஆவியானவரின் கொஞ்ச வெளிச்சமே அன்றி வேறொன்றுமில்லை” அல்லது “இவர் ஜனங்களை வஞ்சிப்பதற்காக வந்த ஒரு கள்ளக்கிறிஸ்து” என்று கூறுவார்கள். இவ்வாறு சொல்பவர்கள் அறியாமையால் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள்! தேவனின் கிரியை மற்றும் ஞானத்தை மிகக் குறைவாகவே நீ புரிந்துகொள்கிறாய், மேலும், நீ மீண்டும் புதிதாகத் தொடங்க வேண்டுமென நான் உனக்கு அறிவுறுத்துகிறேன்! கடைசி நாட்களில் கள்ளக்கிறிஸ்து தோன்றியதால் தேவன் வெளிப்படுத்திய வார்த்தைகளை நீங்கள் கண்மூடித்தனமாக கண்டிக்கக்கூடாது, மேலும் நீங்கள் வஞ்சகத்திற்குப் பயப்படுவதால் பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக தூஷணம் செய்யும் ஒருவராக இருந்துவிடாதீர்கள். அது ஒரு பெரிய பரிதாபமாக இருக்கும் அல்லவா? பல பரிசோதனைகளுக்குப் பிறகு, இந்த வார்த்தைகள் சத்தியம் இல்லை, வழி இல்லை, தேவனின் வெளிப்பாடும் இல்லை என்று நீ இன்னும் நம்பினால், நீ இறுதியில் தண்டிக்கப்படுவாய் மற்றும் நீ ஆசீர்வாதம் இல்லாமலும் இருப்பாய். இவ்வளவு எளிமையாகவும் தெளிவாகவும் பேசப்படும் இத்தகைய சத்தியத்தை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், தேவனின் இரட்சிப்புக்கு நீ தகுதியற்றவனாக இருக்கிறாய் அல்லவா? நீ தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்கு போதுமான பாக்கியம் இல்லாத ஒருவன் அல்லவா? அதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்! கண்மூடித்தனமாகவும் மூர்க்கத்தனமாகவும் இருக்க வேண்டாம். தேவன் மீதான விசுவாசத்தை ஒரு விளையாட்டாகக் கருத வேண்டாம். உங்கள் இலக்குக்காகவும், உங்கள் வருங்காலத்துக்காகவும், உங்கள் வாழ்வின் நன்மைக்காகவும் சிந்தியுங்கள், தன்னிச்சையாக செயல்பட வேண்டாம். இந்த வார்த்தைகளை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “இயேசுவின் ஆவிக்குரிய சரீரத்தை நீ காணும் நேரத்தில், தேவன் வானத்தையும் பூமியையும் புதிதாக்கியிருப்பார்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 288

அந்த நேரத்தில், இயேசுவுடைய கிரியையின் ஒரு பகுதி பழைய ஏற்பாட்டிற்கும், மோசேயின் நியாயப்பிரமாணங்களுக்கும், நியாயப்பிரமாணத்தின் காலத்தில் யேகோவாவின் வார்த்தைகளுக்கும் ஏற்ப இருந்தது. இந்த விஷயங்கள் அனைத்தும், இயேசு தன்னுடைய கிரியையின் ஒரு பகுதியாகச் செய்தார். அவர் ஜனங்களுக்கு பிரசங்கித்தார், ஜெப ஆலயங்களில் அவர்களுக்குப் போதித்தார், பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளின் கணிப்புகளை அவருடன் பகைமை கொண்ட பரிசேயர்களைக் கண்டிப்பதற்காகப் பயன்படுத்தினார், மேலும் வேதவசனங்களிலிருந்து வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களின் கீழ்ப்படியாமையை வெளிப்படுத்தி, அவர்களைக் கண்டித்தார். ஏனென்றால் இயேசு செய்ததை அவர்கள் இகழ்ந்தார்கள்; குறிப்பாக, இயேசுவின் பெரும்பாலான கிரியைகள் வேதாகமத்தில் உள்ள நியாயப்பிரமாணங்களின்படி செய்யப்படவில்லை, மேலும், அவர் போதித்தவை அவர்களின் சொந்த வார்த்தைகளை விட உயர்ந்தவையாக இருந்தன, மேலும் வேதவசனங்களில் தீர்க்கதரிசிகள் முன்னறிவித்ததை விடவும் உயர்ந்தவையாக இருந்தன. இயேசுவின் கிரியை மனுஷனின் மீட்பிற்காகவும் மற்றும் சிலுவையில் அறையப்படுவதற்காகவும் மட்டுமே இருந்தது, எனவே எந்த மனுஷனையும் வெல்வதற்காக அவர் அதிக வார்த்தைகளைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் மனுஷனுக்குப் போதித்தவற்றில் பெரும்பாலானவை வேதவசனங்களின் வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டவை, மேலும் அவருடைய கிரியை வேதவசனங்களைத் தாண்டி இருக்கவில்லை என்றாலும் கூட, சிலுவையில் அறையப்பட வேண்டிய கிரியையை அவரால் நிறைவேற்ற முடிந்தது. அவருடைய கிரியை வார்த்தைக்கான கிரியை அல்ல, மனுஷகுலத்தை ஜெயங்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட கிரியையும் அல்ல, மாறாக மனுஷகுலத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கிரியை ஆகும். அவர் மனுஷகுலத்திற்கான பாவநிவாரணபலியாக மட்டுமே செயல்பட்டார், மனுஷகுலத்திற்கான வார்த்தையின் ஆதாரமாக அவர் செயல்படவில்லை. மனுஷனை ஜெயங்கொள்ளும் கிரியையாக இருந்த புறஜாதியாரின் கிரியையை அவர் மேற்கொள்ளவில்லை, ஆனால் தேவன் ஒருவர் இருப்பதாக நம்புபவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட கிரியையான சிலுவையில் அறையப்பட வேண்டிய கிரியையை அவர் மேற்கொண்டார். அவருடைய கிரியை வேதவசனங்களின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், பழைய தீர்க்கதரிசிகளால் முன்னறிவிக்கப்பட்டதைப் பரிசேயர்களைக் கண்டிக்க அவர் பயன்படுத்தியிருந்தாலும், சிலுவையில் அறையப்பட வேண்டிய கிரியையை முடிக்க இது போதுமானதாக இருந்தது. வேதவசனங்களில் உள்ள பழைய தீர்க்கதரிசிகளின் கணிப்புகளின் அஸ்திபாரத்தின் அடிப்படையில் இன்றைய கிரியை மேற்கொள்ளப்பட்டிருந்தால், உங்களை ஜெயங்கொள்வது கடினமாக இருந்திருக்கும், ஏனென்றால் பழைய ஏற்பாட்டில் சீன ஜனங்களாகிய உங்களின் கீழ்ப்படியாமை மற்றும் பாவங்கள் பற்றிய எந்தப் பதிவும் இல்லை, உங்கள் பாவங்களின் வரலாறும் அதில் இல்லை. எனவே, இந்தக் கிரியை வேதாகமத்தில் இன்னும் நீடித்திருந்தால், நீங்கள் ஒருபோதும் கீழ்ப்படிய சம்மதித்திருக்க மாட்டீர்கள். இஸ்ரவேலரின் வரையறுக்கப்பட்ட வரலாற்றை மட்டுமே வேதாகமம் பதிவு செய்கிறது, நீங்கள் தீயவர்களா அல்லது நல்லவர்களா, அல்லது உங்களை நியாயந்தீர்க்க முடியவில்லையா என்பதைக் கண்டறிய இயலாது. இஸ்ரவேலரின் வரலாற்றின்படி நான் உங்களை நியாயந்தீர்ப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள், இன்று நீங்கள் என்னைப் பின்பற்றுவது போலவே இனியும் என்னைப் பின்பற்றுவீர்களா? நீங்கள் எவ்வளவு கடினமானவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த யுகத்தில் எந்த வார்த்தைகளும் பேசப்படவில்லை என்றால், ஜெயங்கொள்ளும் கிரியையை முடிப்பது கடினமாகிவிடும். நான் சிலுவையில் அறையப்பட வரவில்லை என்பதால், நான் வேதாகமத்தில் இல்லாத வார்த்தைகளைப் பேச வேண்டும், இதன் மூலம் நீங்கள் ஜெயங்கொள்ளப்படுவீர்கள். இயேசு செய்த கிரியை பழைய ஏற்பாட்டை விட ஒரு நிலை மட்டுமே மேலானது; இது ஒரு யுகத்தைத் தொடங்கவும், அந்த யுகத்தை வழிநடத்தவும் பயன்படுத்தப்பட்டது. “நான் நியாயப்பிரமாணத்தை அழிக்க வரவில்லை, அதை நிறைவேற்றுவதற்காக வந்தேன்,” என்று அவர் ஏன் சொன்னார்? ஆயினும், அவருடைய கிரியையில் அப்பியாசித்துக் கொண்டிருந்த நியாயப்பிரமாணங்களில் இருந்தும், பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்களால் பின்பற்றப்பட்ட கட்டளைகளிலிருந்தும் வேறுபடும் பல விஷயங்கள் இருக்கின்றன, ஏனென்றால் அவர் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய வரவில்லை, ஆனால் அதை நிறைவேற்றுவதற்காக வந்தார். அதை நிறைவேற்றுவதற்கான செயல்முறை அப்பியாசிப்பதற்கான விஷயங்கள் பலவற்றை உள்ளடக்கியது: அவருடைய கிரியை மிகவும் நடைமுறைக்குரியதாகவும் மற்றும் உண்மையானதாகவும் இருந்தது, மேலும், அது மிகுந்த ஜீவனுடனும் இருந்தது. அது விதிகளை கண்மூடித்தனமாக பின்பற்றவில்லை. இஸ்ரவேலர் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லையா? இயேசு வந்தபோது, அவர் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை, ஏனென்றால் மனுஷகுமாரன் ஓய்வுநாளின் ஆண்டவர் என்றும், ஓய்வுநாளின் ஆண்டவர் வந்திறங்கியதும், அவர் விரும்பியபடி செய்வார் என்றும் கூறினார். அவர் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்களை நிறைவேற்றவும், நியாயப்பிரமாணங்களை மாற்றவும் வந்திருந்தார். இன்று செய்யப்படும் அனைத்தும் நிகழ்காலத்தை அடிப்படையாகக் கொண்டவை, ஆனாலும் அவை நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் யேகோவாவின் கிரியையின் அஸ்திபாரத்தைச் சார்ந்திருக்கின்றன, மேலும் அவை இந்த நோக்கத்தை மீறுவதில்லை. எடுத்துக்காட்டாக, உங்கள் நாக்கை அடக்குவதும், விபச்சாரம் செய்யாமல் இருப்பதும்—இவை பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்கள் அல்லவா? இன்று, உங்களுக்குத் தேவைப்படுவது பத்து கட்டளைகளுக்கு உட்படுபவை மட்டுமல்ல, முன்பு வந்ததை விட உயர்வான ஒழுக்கக் கட்டளைகளும், நியாயப் பிரமாணங்களும்தான் தேவைப்படுகிறது. இதனால் இதற்கு முன் வந்தவை ஒழிக்கப்பட்டுவிட்டன என்று அர்த்தமல்ல, ஏனென்றால் தேவனின் ஒவ்வொரு கட்டமும் முன்பு வந்தக் கட்டத்தின் அஸ்திபாரத்தைக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. யேகோவா அப்போது இஸ்ரவேலில் செய்த கிரியையைப் பொறுத்தவரை, ஜனங்கள் பலிகளைச் செலுத்த வேண்டும், தங்களது பெற்றோரை மதிக்க வேண்டும், விக்கிரகங்களை வணங்கக்கூடாது, மற்றவர்களைத் தாக்கவோ சபிக்கவோ கூடாது, விபச்சாரம் செய்யக்கூடாது, புகைபிடிக்கவோ மது அருந்தவோ கூடாது, இறந்தவற்றைப் புசிக்கவோ அல்லது இரத்தத்தை அருந்தவோ கூடாது—இது இன்றும் உங்கள் பயிற்சிக்கு அடித்தளமாக அமையவில்லையா? கடந்த காலத்தின் அஸ்திபாரத்தில்தான் இன்று வரை கிரியைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த கால நியாயப்பிரமாணங்கள் இனியும் குறிப்பிடப்படுவதில்லை என்றாலும், உனக்கான புதிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், இந்த நியாயப்பிரமாணங்கள், ஒழிக்கப்படாமல், அதற்குப் பதிலாக உயர்வாக உயர்த்தப்பட்டுள்ளன. அவை ஒழிக்கப்பட்டுவிட்டன என்று சொல்வது முந்தைய யுகம் காலாவதியாகிவிட்டது என்று அர்த்தம் தரும். அதேசமயம் நீ நித்தியம் முழுமைக்கும் மரியாதை செலுத்த வேண்டிய சில கட்டளைகளும் உள்ளன. கடந்த காலக் கட்டளைகள் ஏற்கனவே அப்பியாசிக்கப்பட துவங்கிவிட்டன, ஏற்கனவே மனுஷனுள் ஒன்றிவிட்டன, மேலும் “புகைபிடிக்காதே,” “மது அருந்தாதே” என்பன போன்ற கட்டளைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அஸ்திபாரத்தின் மீது, இன்றைக்கான உங்கள் தேவைக்கு ஏற்பவும், உங்கள் வளர்ச்சிக்கு ஏற்பவும், மற்றும் இன்றைக்கான கிரியைக்கு ஏற்பவும் புதிய கட்டளைகள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய யுகத்திற்கான கட்டளைகளை ஆணையிடுவது என்பது பழைய யுகத்திற்கான கட்டளைகளை ஒழிப்பதைக் குறிக்காது, ஆனால் மனுஷனின் செய்கைகளை யதார்த்தத்திற்கு ஏற்ப இன்னும் முழுமையானதாக்க இந்த அஸ்திபாரத்தின் மீது அவற்றை உயர்த்துவதைக் குறிக்கும். இன்று, நீங்கள் இஸ்ரவேலர்களைப் போலவே கட்டளைகளைப் பின்பற்றவும், பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்களைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தால், நீங்கள் யேகோவா வகுத்த நியாயப்பிரமாணங்களை மனப்பாடம் செய்ய வேண்டியிருந்தால், நீங்கள் மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றாகிவிடும். நீங்கள் அந்தச் சில வரையறுக்கப்பட்ட கட்டளைகளுக்கு அல்லது மனப்பாடம் செய்த எண்ணற்ற நியாயப்பிரமாணங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடந்தால், உங்கள் பழைய மனநிலை ஆழமாக வேரூன்றியிருக்கும், மேலும் அதைப் பிடுங்கி எறிய எந்த வழியும் இருக்காது. இதனால் நீங்கள் பெருகிய முறையில் மோசமானவர்களாகி விடுவீர்கள், உங்களில் ஒருவர் கூட கீழ்ப்படிய மாட்டீர்கள். யேகோவாவின் கிரியைகளை அறிந்து கொள்ள உங்களுக்கு உதவ சில எளிய கட்டளைகளாலோ அல்லது எண்ணற்ற நியாயப்பிரமாணங்களாலோ இயலாது. நீங்கள் இஸ்ரவேலரைப் போன்றவர்கள் அல்ல: நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றி, கட்டளைகளை மனப்பாடம் செய்வதன் மூலம், அவர்களால் யேகோவாவின் கிரியைகளைக் கண்டு, தங்கள் பக்தியை அவரிடம் மட்டுமே கொடுக்க முடிந்தது. ஆனால் உங்களால் இதை அடைய முடியாது, மேலும் பழைய ஏற்பாட்டு யுகத்தின் ஒரு சில கட்டளைகளால் உங்களை உங்களது இருதயத்தை விட்டுக்கொடுக்கச் செய்யவோ அல்லது உங்களைப் பாதுகாக்கவோ இயலாது என்பது மட்டுமல்லாமல், அதற்குப் பதிலாக உங்களை தளர்ந்துபோகச் செய்து, பாதாளத்தில் வீழ்த்தும். என் கிரியையானது ஜெயங்கொள்வதற்கான கிரியை என்பதால், அது உங்கள் கீழ்ப்படியாமை மற்றும் உங்கள் பழைய மனநிலையை நோக்கமாகக் கொண்டுள்ளது. யேகோவா மற்றும் இயேசுவின் கனிவான வார்த்தைகள் இன்றைய நியாயத்தீர்ப்புகளின் கடுமையான வார்த்தைகளுக்கு அருகே கூட வராது. இத்தகைய கடுமையான வார்த்தைகள் இல்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கீழ்ப்படியாத “நிபுணர்களான” உங்களை ஜெயங்கொள்ள முடியாது. பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே உங்கள் மீதான அதிகாரத்தை இழந்துவிட்டன, மேலும் இன்றைய நியாயத்தீர்ப்பானது பழைய நியாயப்பிரமாணங்களை விட மிகவும் வலிமையாக இருக்கிறது. உங்களுக்கு மிகவும் பொருத்தமானது நியாயத்தீர்ப்பு தான், நியாயப்பிரமாணங்களின் அற்பமான கட்டுப்பாடுகள் அல்ல, ஏனென்றால் நீங்கள் ஆதியில் இருந்த மனுஷகுலம் அல்ல, ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சீர்கெட்டுப்போன ஒரு மனுஷகுலம். மனுஷன் இப்போது அடைய வேண்டிய விஷயமானது இன்றைய மனுஷனின் உண்மையான நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும், இன்றைய மனுஷனின் திறமை மற்றும் உண்மையான சரீர வளர்ச்சிக்கு ஏற்ப இருக்க வேண்டும், மேலும் நீ விதிகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. இது உன் பழைய மனநிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும், மேலும் உன் கருத்துக்களை நீ ஒதுக்கி வைக்கவும் கூடும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (1)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 289

வரலாறு எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது, அதேபோல் தேவனின் கிரியையும் எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது. அவரது ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டம் அதன் முடிவை எட்டுவதற்கு, அது ஒரு முன்னோக்கிய திசையில் முன்னேற வேண்டும். ஒவ்வொரு நாளும் அவர் புதிய கிரியையைச் செய்ய வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் அவர் புதிய கிரியையைச் செய்ய வேண்டும்; அவர் புதிய பாதைகளைத் தொடங்க வேண்டும், புதிய யுகங்களைத் தொடங்க வேண்டும், புதிய மற்றும் பெரிய கிரியைகளைத் தொடங்க வேண்டும், இவற்றுடன் புதிய நாமங்களையும் புதிய கிரியைகளையும் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு கணத்திலும், தேவனின் ஆவியானவர் புதிய கிரியையைச் செய்கிறார், ஒருபோதும் பழைய வழிகளையோ விதிகளையோ பற்றிக்கொள்வதில்லை. அவருடைய கிரியை இதுவரை நிறுத்தப்படவில்லை, ஆனால் கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும் அது நிறைவேறுகிறது. பரிசுத்த ஆவியின் கிரியை மாறாதது என்று நீ சொன்னால், யேகோவா ஏன் ஆசாரியர்களை ஆலயத்தில் சேவிக்கும்படிக் கேட்டார்? இயேசு வந்தபோது, அவர் பிரதான ஆசாரியராக இருந்தார் என்றும், அவர் தாவீதின் பரம்பரையைச் சேர்ந்தவர் என்றும், பிரதான ஆசாரியரும் பெரிய ராஜாவுமாக இருந்தார் என்றும் கூறியபோதும் ஏன் இயேசு ஆலயத்திற்குள் நுழையவில்லை? அவர் ஏன் பலிகளைக் கொடுக்கவில்லை? ஆலயத்திற்குள் நுழைவதாகட்டும் அல்லது நுழையாததாகட்டும்—இவை அனைத்தும் தேவனின் கிரியைகள் அல்லவா? மனுஷன் கற்பனை செய்வதுபோல, இயேசு மீண்டும் வருவார், கடைசிக் காலத்திலும் இயேசு என்று அழைக்கப்படுவார், ஒரு வெண்மையான மேகத்தின் மீது வந்து, இயேசுவின் சாயலில் மனுஷரிடையே இறங்குவார்: அது அவருடைய கிரியையை மறுபடியும் செய்வது போலில்லையா? பரிசுத்த ஆவியானவர் பழையதையே பற்றிக்கொண்டிருப்பவரா? மனுஷன் நம்புகிறதெல்லாம் கருத்துக்களை மட்டும்தான், மற்றும் மனுஷன் நேரடி அர்த்தத்திற்கு ஏற்பவும், அவனது கற்பனைக்கு ஏற்பவும்தான் அனைத்தையும் புரிந்துகொள்கிறான்; அவை பரிசுத்த ஆவியினுடைய கிரியையின் கொள்கைகளுடன் முரண்படுகின்றன, மேலும் தேவனின் நோக்கங்களுடனும் அவை ஒத்துப்போவதில்லை. தேவன் அவ்வாறு செயல்பட மாட்டார்; தேவன் அவ்வளவு முட்டாள்தனமானவரோ மதிகெட்டவரோ அல்ல, மேலும் அவருடைய கிரியை நீ கற்பனை செய்வது போல அவ்வளவு எளிதானதல்ல. மனுஷன் கற்பனை செய்யும் சகலத்தையும் அடிப்படையாகக் கொண்டு, இயேசு ஒரு மேகத்தின் மீது வந்து உங்களுக்கு மத்தியில் இறங்குவார். மேகத்தின் மீது வந்திறங்கிய அவரை நீங்கள் காண்பீர்கள், தாம் இயேசு என்று அவர் உங்களுக்குச் சொல்லுவார். நீங்கள் அவருடைய கைகளில் உள்ள ஆணி அடிக்கப்பட்ட தழும்புகளைக் கண்டு, அவரை இயேசு என்று அறிந்து கொள்வீர்கள். அவர் உங்களை மீண்டும் இரட்சிப்பார், மேலும் அவர் உங்களது வலிமைமிக்க தேவனாக இருப்பார். அவர் உங்களை இரட்சிப்பார், உங்களுக்கு ஒரு புதிய நாமத்தைக் கொடுப்பார், உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளைக் கல்லைக் கொடுப்பார், அதன் பிறகு நீங்கள் பரலோகராஜ்யத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டு பரலோகத்தில் பெறப்படுவீர்கள். இத்தகைய நம்பிக்கைகள் மனுஷனின் கருத்துக்கள் அல்லவா? தேவன் மனுஷனின் கருத்துக்களுக்கு ஏற்ப செயல்படுகிறாரா, அல்லது மனுஷனின் கருத்துக்களுக்கு எதிராக அவர் செயல்படுகிறாரா? மனுஷனின் கருத்துக்கள் அனைத்தும் சாத்தானிடமிருந்து பெறப்பட்டவை அல்லவா? மனுஷர் அனைவரும் சாத்தானால் சீர்கெட்டுப் போகவில்லையா? தேவன் தனது கிரியையை மனுஷனின் கருத்துக்களின்படி செய்திருந்தால், அவர் சாத்தானாக மாறியிருக்கமாட்டாரா? அவர் தனது சொந்த சிருஷ்டிப்புகளைப் போலவே இருந்திருக்க மாட்டாரா? அவருடைய சிருஷ்டிப்புகள் இப்போது சாத்தானால் மிகவும் சீர்கெட்டிருப்பதால், மனுஷன் சாத்தானின் உருவமாகிவிட்டான், தேவன் சாத்தானின் விஷயங்களின்படி செயல்படுவதாக இருந்தால், அவர் சாத்தானுடன் கூட்டணி அமைத்திருக்க மாட்டாரா? தேவனின் கிரியையை மனுஷன் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? ஆகையால், தேவன் ஒருபோதும் மனுஷனின் கருத்துக்களின்படி செயல்படமாட்டார், மேலும் நீ கற்பனை செய்யும் வழிகளில் ஒருபோதும் செயல்பட மாட்டார். தேவன் ஒரு மேகத்தில் வருவார் என்று அவரே சொன்னதாகச் சொல்பவர்களும் உண்டு. தேவன் அவராகவே சொன்னார் என்பது உண்மைதான், ஆனால் தேவனின் மறைபொருட்களை எந்த மனுஷனாலும் புரிந்து கொள்ள முடியாது என்பது உனக்குத் தெரியாதா? தேவனின் வார்த்தைகளை எந்த மனுஷனாலும் விளக்க முடியாது என்று உனக்குத் தெரியாதா? பரிசுத்த ஆவியானவரால் நீ ஞானமும் தெளிவும் பெற்றிருக்கிறாய் என்பதில் சந்தேக நிழலுக்கு அப்பாலும் நீ உறுதியாக இருக்கிறாயா? உனக்கு இதுபோன்ற நேரடியான முறையில் காட்டியவர் பரிசுத்த ஆவியானவர் இல்லை என்று உன்னால் நிச்சயமாகக் கூறமுடியுமா? உனக்கு அறிவுறுத்தியது பரிசுத்த ஆவியானவரா, அல்லது உன் சொந்தக் கருத்துக்கள் உன்னை அவ்வாறு சிந்திக்க வழிவகுத்ததா? “இது தேவனால் கூறப்பட்டது,” என்று நீ சொன்னாய். ஆனால் தேவனின் வார்த்தைகளை அளவிட நம் சொந்த கருத்துகளையும் மனதையும் பயன்படுத்த முடியாது. ஏசாயா பேசிய வார்த்தைகளைப் பொறுத்தவரை, அவருடைய வார்த்தைகளை முழுமையான உறுதியுடன் உன்னால் விளக்க முடியுமா? அவருடைய வார்த்தைகளை விளக்க உனக்கு தைரியம் இருக்கிறதா? ஏசாயாவின் வார்த்தைகளை விளக்க உனக்கு துணிவில்லை என்பதால், இயேசுவின் வார்த்தைகளை விளக்க மட்டும் நீ ஏன் துணிகிறாய்? இயேசுவா அல்லது ஏசாயாவா, இவர்களில் மிகவும் உயர்ந்தவர் யார்? பதில் இயேசு என்பதால், இயேசு பேசிய வார்த்தைகளை நீ ஏன் விளக்குகிறாய்? தேவன் தனது கிரியையை முன்கூட்டியே உனக்குச் சொல்வாரா? ஒரு சிருஷ்டியால் கூட அறிய முடியாது, பரலோகத்திலுள்ள தூதர்களோ, மனுஷகுமாரனோ கூட அறிய முடியாது, எனவே உன்னால் மட்டும் எப்படி அறிந்து கொள்ளமுடியும்? மனுஷன் பலவற்றைக் கொண்டிருப்பதில்லை. உங்களுக்கு இப்போது முக்கியமானது என்னவென்றால், கிரியையின் மூன்று கட்டங்களை அறிந்து கொள்வதுதான். யேகோவாவின் கிரியை முதல் இயேசுவின் கிரியை வரை மற்றும் இயேசுவின் கிரியை முதல் இந்தத் தற்போதைய கட்டம் வரை, என இந்த மூன்று கட்டங்களும் தொடர்ச்சியான நூலில் தேவனின் ஆளுகையின் முழு வரம்பையும் உள்ளடக்குகிறது, இவை அனைத்தும் ஒரே ஆவியானவரின் கிரியைதான். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து, தேவன் எப்போதும் மனுஷகுலத்தை நிர்வகிக்கும் கிரியையை செய்துவருகிறார். அவரே ஆதியும் அந்தமும் ஆவார், அவரே முதலும் கடைசியும் ஆவார், மேலும், ஒரு யுகத்தைத் தொடங்குவதும் முடித்து வைப்பதும் அவரே. கிரியையின் மூன்றுக் கட்டங்கள், வெவ்வேறு யுகங்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில், ஒரே ஆவியானவரின் கிரியை என்பதில் சந்தேகமில்லை. இந்த மூன்று கட்டங்களையும் பிரிப்பவர்கள் அனைவரும் தேவனுக்கு எதிராக நிற்பவர்கள் தான். இப்போது, முதல் கட்டத்திலிருந்து இன்று வரை அனைத்துக் கிரியைகளும் ஒரே தேவனின் கிரியை, ஒரே ஆவியானவரின் கிரியை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 290

மனிதன் தேவனை நம்புகிறான் என்பதால், அவன் படிப்படியாக, தேவனுடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றவேண்டும்; அவன் “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்ற” வேண்டும். இவர்கள் மட்டுமே உண்மையான வழியை நாடுகிற ஜனங்களாக இருக்கிறார்கள், இவர்கள் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள். எழுத்துக்கள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றை அடிமைத்தன இயல்புடன் பின்பற்றுகிறவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் நீக்கிப்போடப் பட்டிருப்பவர்களாய் இருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், தேவன் புதிய கிரியையைத் தொடங்குவார், ஒவ்வொரு காலகட்டத்திலும், மனுஷர்களிடையே ஒரு புதிய தொடக்கம் இருக்கும். அந்தந்த யுகங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சத்தியங்களான “யேகோவாவே தேவனாக இருக்கின்றார்” மற்றும் “இயேசுவே கிறிஸ்துவாக இருக்கின்றார்” என்ற சத்தியங்களில் மாத்திரம் மனுஷன் நிலைத்திருந்தால், மனுஷன் ஒருபோதும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தொடரமாட்டான், மற்றும் அவன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை ஆதாயப்படுத்திக் கொள்ள இயலாதவனாகவே இருப்பான். தேவன் எவ்விதமாகக் கிரியை செய்கின்றார் என்பதைப் பொருட்படுத்தாமல், மனுஷன் சற்றும் சந்தேகம் இன்றிப் பின்தொடர்கிறான், மற்றும் அவன் நெருக்கமாகப் பின்தொடர்கிறான். இந்த வழியில், பரிசுத்த ஆவியானவரால் மனுஷனை எவ்வாறு புறம்பாக்கிப்போட முடியும்? தேவன் என்ன செய்கின்றார் என்பதைப் பொருட்படுத்தாமல், அது பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்று மனுஷன் உறுதியாக நம்புகிறவரை, மற்றும் அவன் பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் எந்தவிதமான ஐயப்பாடுகளுமின்றி ஒத்துழைக்கும் வரை, தேவனுடைய நிபந்தனைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறவரை, அவன் தண்டிக்கப்படக் கூடுவது எப்படி? தேவனுடைய கிரியை ஒருபோதும் ஒழிந்து போவதில்லை, அவருடைய அடிச்சுவடுகள் ஒருபோதும் நின்றுபோயிருக்கவில்லை, அவருடைய நிர்வாகக் கிரியையை முடிப்பதற்கு முன்பு, அவர் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்திருக்கின்றார், மற்றும் அவர் ஒருபோதும் நிறுத்தவில்லை. ஆனால் மனிதன் வேறுபட்டவனாக இருக்கிறான்: பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய சிறு அளவை ஆதாயப்படுத்தியுள்ள நிலையில், அது ஒருபோதும் மாறாது என்பது போன்று அதை அவன் நடத்துகிறான்; கொஞ்சம் அறிவை பெற்றுக்கொண்ட நிலையில் அவன், தேவனுடைய புதிய கிரியையின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற முன்வருவதில்லை; தேவனின் ஒரு சிறிய கிரியையைக் கண்டாலும், அவன் உடனடியாகத் தேவனைக் குறிப்பிட்ட ஒரு மரச்சிற்பமாகப் பரிந்துரைக்கிறான், மற்றும் தனக்கு முன்பாகக் காணும் இந்த வடிவத்திலேயே தேவன் எப்போதும் இருப்பார் என்று நம்புகிறான், இது கடந்த காலங்களில் இதைப் போன்றதாக இருந்தது, மற்றும் எதிர்காலத்திலும் எப்போதும் இவ்வாறே இருக்கும்; மனுஷன் மேலோட்டமான அறிவைப் பெற்றிருந்தாலும், அவன் தன்னையே மறக்கும் அளவுக்கு மிகுந்த கர்வம் கொண்டு, ஒரு மனநிலையையும் மற்றும் இருப்பையும் கொண்டிராத ஒரு தேவனைப் பொறுப்பற்ற வகையில் பறைசாற்றத் தொடங்குகிறான்; மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய ஒரு கட்டத்தைப்பற்றி நிச்சயப்படுத்திக் கொண்ட நிலையில், தேவனுடைய புதிய கிரியையைப் பறைசாற்றுபவர் எவ்வகைப்பட்ட நபராக இருந்தாலும், மனுஷன் அதை ஏற்றுக்கொள்வதில்லை. இவர்கள் பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ள முடியாத ஜனங்களாக உள்ளனர்; இவர்கள் மிகவும் பழமைவாதிகளாக உள்ளனர், மற்றும் புதிய விஷயங்களை ஏற்க இயலாதவர்களாய் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஜனங்கள் தேவனை நம்புகிறார்கள், ஆனால் தேவனை நிராகரிக்கவும் செய்கிறார்கள். இஸ்ரவேலர் “யேகோவாவை மட்டுமே நம்பி, இயேசுவை நம்பாமல்” தவறானவர்களாய் இருந்தார்கள் என்று மனுஷன் நம்புகிறான், ஆனாலும் பெரும்பான்மையான மக்கள் “யேகோவாவை மட்டுமே நம்புகிறார்கள், இயேசுவை நிராகரிக்கிறார்கள்” மற்றும் “மேசியா திரும்பி வருவதற்கு ஏங்குகிறார்கள், ஆனால் இயேசு என்று அழைக்கப்படும் மேசியாவை எதிர்க்கவும் செய்கிறார்கள்” என்ற ஒரு பாத்திரத்தில் வெளிப்படையாகச் செயல்படுகிறார்கள். ஆகவே, பரிசுத்த ஆவியின் கிரியையின் ஒரு கட்டத்தை ஏற்றுக்கொண்ட பிறகும் ஜனங்கள் சாத்தானின் களத்தில் வாழ்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை, மற்றும் அவர்கள் இன்னும் தேவனின் ஆசீர்வாதங்களைப் பெறவில்லை. இது மனிதனின் கலகத்தன்மையின் விளைவாக இருக்கிறது அல்லவா? இன்றைய புதிய கிரியையைக் கடைப்பிடிக்காத உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும் தாங்கள் அதிர்ஷ்டம் பெறுவோம், தங்களின் ஒவ்வொரு விருப்பத்தையும் தேவன் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஆயினும், தேவன் அவர்களை மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துச் செல்வார் என்பது ஏன் என்று அவர்களால் உறுதியாகச் சொல்லமுடியாது, அல்லது அவர்களை அழைத்துச் செல்ல இயேசு ஒரு வெண்மையான மேகத்தின்மீது ஏறி வருவார் என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை, அவர்கள் கற்பனை செய்யும் நாளில் வெண்மையான மேகத்தின்மீது இயேசு உண்மையிலேயே வருவாரா என்பதை அவர்கள் கூறமுடியாது. அவர்கள் அனைவரும் பெருங்கவலைப் படுகிறார்கள், மற்றும் குழப்பத்தில் இருக்கிறார்கள்; ஒவ்வொரு சபைப் பிரிவையும் சேர்ந்த பலதரப்பட்ட சிறு ஜனக்கூட்டத்திலுள்ள அவர்கள் ஒவ்வொருவரையும் தேவன் எடுத்துக்கொள்வாரா என்று அவர்களுக்குத் தெரியாது. தற்போதைய யுகத்தில், இப்போது தேவன் செய்யும் கிரியை, தேவனுடைய சித்தம்—இந்த விஷயங்களைப் பற்றிய எந்தப் புரிதலையும் அவர்கள் கொண்டிருப்பதில்லை, மற்றும் அவர்கள் தங்கள் விரல்களின் மீது நாட்களை இறங்கு வரிசையில் எண்ணுதல் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைக் கடைசிவரை பின்பற்றுபவர்கள் மட்டுமே இறுதியான ஆசீர்வாதத்தைப் பெறமுடியும், அதேசமயம் அதைக் கடைசிவரை பின்பற்ற முடியாமலே இன்னும் அனைத்தையும் பெற்றதாக நம்புகிற அந்த “புத்திசாலி ஜனங்கள்” தேவன் தோன்றுவதைக் காண இயலாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பூமியில் புத்திசாலித்தனமான நபராயிருக்கிறதாக நம்புகிறார்கள், மேலும் அவர்கள் எந்தக் காரணமும் இல்லாமல் தேவனுடைய கிரியையின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் குறைத்து விடுகிறார்கள், மேலும் தேவன் அவர்களைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்வார் என்று முழுமையான உறுதியுடன் நம்புவதாகத் தெரிகிறது, அவர்களே “தேவனிடம் மிகுந்த விசுவாசமுள்ளவர்கள், தேவனைப் பின்பற்றுபவர்கள், தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிபவர்கள்.” தேவனால் பேசப்பட்ட வார்த்தைகளுக்கு அவர்கள் “மிகுந்தவிசுவாசம்” கொண்டிருந்தாலும், அவர்களுடைய வார்த்தைகளும் செயல்களும் இன்னும் வெறுக்கத் தக்கவையாகவே உள்ளன, ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை எதிர்க்கிறார்கள், மேலும் வஞ்சகத்தையும் பொல்லாங்கையும் செய்கிறார்கள். கடைசிவரை பின்பற்றாதவர்கள், பரிசுத்த ஆவியின் கிரியையைப் பின்தொடராதவர்கள், மற்றும் பழைய கிரியையை மட்டுமே பிடித்திருப்பவர்கள், தேவனுக்கு விசுவாசத்தைக் காண்பிக்கத் தவறியது மட்டுமல்லாமல், இதற்கு மாறாக, தேவனை எதிர்ப்பவர்கள் ஆகியுள்ளனர், புதிய யுகத்தால் நிராகரிக்கப்படுபவர்களாகவும், தண்டிக்கப்படுபவர்களாகவும் ஆகியுள்ளனர். அவர்களைவிட அதிகம் பரிதாபகரமானவர்கள் யாராவது இருக்கிறார்களா? பழைய நியாயப்பிரமாணத்தை நிராகரித்து புதிய கிரியையை ஏற்றுக்கொள்கிறவர்கள் யாவரும் மனசாட்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்றுகூடப் பலர் நம்புகிறார்கள். “மனசாட்சியை” பற்றி மட்டுமே பேசுகிற, மற்றும் பரிசுத்த ஆவியின் கிரியையை அறியாத இந்த ஜனங்கள், இறுதியில் தங்கள் சுய மனசாட்சியால் தங்கள் வாய்ப்புகளைக் குறைத்துக் கொள்வார்கள். தேவனுடைய கிரியை கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை, அது அவருடைய சொந்தக் கிரியையாக இருந்தாலும், தேவன் இன்னமும் அதை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கிறது இல்லை. மறுக்கப்படவேண்டியது மறுக்கப்படுகிறது, புறம்பாக்கப்படவேண்டியது புறம்பாக்கப்படுகிறது. ஆயினும், தேவனுடைய நிர்வகித்தலின் ஒரு சிறிய பகுதியை உறுதியாய்ப் பற்றிக் கொள்வதன் மூலம் மனுஷன் தன்னைத்தானே தேவனிடத்தில் பகைமையுள்ள இடத்தில் வைக்கிறான். இது மனிதனின் அபத்தமாயிருக்கிறது அல்லவா? இது மனிதனின் அறியாமையாயிருக்கிறது அல்லவா? ஜனங்கள் எவ்வளவு அதிகமாய் மாபெரும் ஆசீர்வாதங்களைப் பெறமுடியாமல், மற்றும் இறுதி ஆசீர்வாதத்தைப் பெறமுடியாமல் இருக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் பயத்துடனும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற மாட்டோமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள், அடிமைத்தனமாகப் நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருக்கிற அந்த ஜனங்கள் அனைவரும் நியாயப்பிரமாணத்தின்மீது மிகுந்த விசுவாசத்தைக் காட்டுகிறார்கள், மேலும் அவர்கள் எவ்வளவு அதிகமாய் நியாயப்பிரமாணத்தை நோக்கித் தங்கள் விசுவாசத்தைக் காட்சிப்படுத்துகிறார்களோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் தேவனை எதிர்க்கிற கலகக்காரர்களாக இருக்கிறார்கள். இராஜ்யத்தின் காலமே இப்போதுள்ளது, நியாயப்பிரமாணத்தின் காலமல்ல, மற்றும் இன்றைய நாளின் கிரியை மற்றும் கடந்த காலத்தின் கிரியை ஆகியவை ஒரே மூச்சில் குறிப்பிடப்பட முடியாது, அல்லது கடந்த காலத்தின் கிரியை இன்றைய நாளின் கிரியையுடன் ஒப்பிடப்பட முடியாது. தேவனுடைய கிரியை மாறியுள்ளது, மனிதனின் நடைமுறையும் மாறியுள்ளது; இது நியாயப்பிரமாணத்தைப் பற்றிக்கொள்வதாகவோ அல்லது சிலுவையைச் சுமப்பதாகவோ இருப்பதில்லை, ஆகவே நியாயப்பிரமாணம் மற்றும் சிலுவை மீதான ஜனங்களின் விசுவாசம் தேவனின் அங்கீகாரத்தைப் பெறாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 291

இன்று உன்னை ஜெயங்கொள்வதன் நோக்கம், தேவன் உனது தேவன் என்றும் மற்றவர்களின் தேவன் என்றும், மிக முக்கியமாக அவர் தம்மை நேசிக்கும் அனைவருக்கும் தேவன் என்றும், மற்றும் அனைத்து சிருஷ்டிப்புகளுக்கும் தேவன் என்றும் நீ ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதுதான். அவர் இஸ்ரவேலரின் தேவன், எகிப்து ஜனங்களின் தேவன். அவர் ஆங்கிலேயர்களின் தேவன் மற்றும் அமெரிக்கர்களின் தேவன். அவர் ஆதாம் மற்றும் ஏவாளின் தேவன் மட்டுமல்ல, அவர்களுடைய சந்ததியினரின் தேவனும் கூட. அவர் வானத்திலும், பூமியிலும் உள்ள சகலத்திற்கும் தேவன். எல்லா குடும்பங்களும், அவர்கள் இஸ்ரவேலராக இருந்தாலும், புறஜாதியராக இருந்தாலும், அனைவரும் ஒரே தேவனின் கைகளில் இருக்கிறார்கள். அவர் யூதேயாவில் பிறந்து, இஸ்ரவேலில் பல ஆயிரம் ஆண்டுகள் கிரியை செய்தது மட்டுமல்லாமல், இன்று அவர் சீனாவில் இறங்குகிறார், இங்குதான் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் சுருண்டு கிடக்கிறது. யூதேயாவில் பிறந்திருப்பது அவரை யூதர்களின் ராஜாவாக ஆக்குகிறது என்றால், இன்று உங்கள் அனைவருக்கும் இடையே இறங்குவதால் அவர் உங்கள் அனைவருக்குமான தேவன் அல்லவா? அவர் இஸ்ரவேலரை வழிநடத்தி யூதேயாவில் பிறந்தார், மேலும் அவர் ஒரு புறஜாதி தேசத்திலும் பிறந்தார். அவர் செய்த எல்லாக் கிரியைகளும் அவர் சிருஷ்டித்த எல்லா மனுஷர்களுக்காகத்தான் இல்லையா? அவர் இஸ்ரவேலரை நூறு மடங்கு நேசிக்கிறாரா, புறஜாதியாரை ஆயிரம் மடங்கு வெறுக்கிறாரா? அது உங்கள் கருத்து அல்லவா? தேவன் ஒருபோதும் உங்கள் தேவனாக இருக்கவில்லை என்பது விஷயம் அல்ல, மாறாக நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் விஷயம்; தேவன் உங்கள் தேவனாக இருக்க விரும்பவில்லை என்பது விஷயம் அல்ல, மாறாக நீங்கள் அவரை நிராகரிக்கிறீர்கள் என்பதுதான் விஷயம். சிருஷ்டிக்கப்பட்டவர்களில் யார் சர்வவல்லவரின் கைகளுக்குள் இல்லை? இன்று உங்களை ஜெயங்கொள்வதில், தேவன் உங்கள் தேவன்தானே தவிர வேறு யாருமல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வதே குறிக்கோள் அல்லவா? தேவன் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமே என்பதை நீங்கள் இன்னும் பராமரிக்கிறீர்கள் என்றால், இஸ்ரவேலில் உள்ள தாவீதின் வீடு தேவனின் பிறப்பின் தோற்றம் என்றும், இஸ்ரவேலைத் தவிர வேறு எந்தத் தேசமும் தேவனை “உற்பத்தி” செய்யத் தகுதியற்றவை என்றும், எந்தவொரு புறஜாதிக் குடும்பத்தினரும் யேகோவாவின் கிரியையைத் தனிப்பட்ட முறையில் பெற முடியாது என்றும் நீங்கள் இன்னும் பராமரிக்கிறீர்கள் என்றால்—நீ இப்போதும் இவ்வாறு நினைத்தால், அது உன்னைப் பிடிவாதக்காரனாக மாற்றாதா? எப்போதும் இஸ்ரவேல் மீதே குறியாக இருக்க வேண்டாம். தேவன் இன்று உங்களிடையே இருக்கிறார். நீ பரலோகத்தையே பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. பரலோகத்தில் இருக்கும் உன் தேவனுக்காக வருத்தப்படுவதை நிறுத்து! தேவன் உங்கள் மத்தியில் வந்துவிட்டார், எனவே அவர் எப்படி பரலோகத்தில் இருக்க முடியும்? நீ மிக நீண்ட காலமாக தேவனை நம்பவில்லை, ஆனாலும் நீ அவரைப் பற்றி நிறைய கருத்துக்களைக் கொண்டிருக்கிறாய், இஸ்ரவேலரின் தேவன் தமது பிரசன்னத்தால் உனக்கு கிருபை அளிப்பார் என்று நீ ஒரு நொடி கூட நினைக்கத் துணிவதில்லை. நீங்கள் எவ்வளவு இழிவாக இருக்கிறீர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவன் தனிப்பட்ட தோற்றத்தில் வருவதை நீங்கள் எப்படிக் காண்பீர்கள் என்பதை நீங்கள் சிந்திக்கத் துணிவதில்லை. தேவன் எப்படி ஒரு புறஜாதி தேசத்தில் தனிப்பட்ட முறையில் இறங்க முடியும் என்பதைப் பற்றி நீங்கள் இதுவரை நினைத்ததில்லை. அவர் சீனாய் மலையிலோ அல்லது ஒலிவ மலையிலோ இறங்கி இஸ்ரவேலருக்குத் தோன்ற வேண்டும். புறஜாதியார் (அதாவது இஸ்ரவேலுக்கு வெளியே உள்ளவர்கள்) அனைவரும் அவர் வெறுக்கும் பொருட்களாக இருக்கவில்லையா? அவர் எவ்வாறு அவர்களிடையே தனிப்பட்ட முறையில் கிரியை செய்ய முடியும்? இவை அனைத்தும் நீங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள். இன்று உங்களை ஜெயங்கொள்வதன் நோக்கம் உங்களுடைய இந்தக் கருத்துக்களைச் சிதைப்பதாகும். இவ்வாறு, சீனாய் மலையிலோ அல்லது ஒலிவ மலையிலோ அல்ல, ஆனால் இதற்கு முன் அவர் வழிநடத்தியிராத ஜனங்களாகிய உங்களிடையே தேவனின் தனிப்பட்டத் தோற்றத்தை நீங்கள் காண்கிறீர்கள். தேவன் இஸ்ரவேலில் தமது கிரியையின் இரண்டு கட்டங்களைச் செய்தபின், அவர் எல்லாவற்றையும் சிருஷ்டித்தார் என்பது உண்மைதான் என்றாலும் அவர் இஸ்ரவேலரின் தேவனாக மட்டுமே இருக்க விரும்புகிறார், புறஜாதியினரின் தேவனாக இருக்க விரும்பவில்லை என்று இஸ்ரவேலரும் எல்லா புறஜாதியரும் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருந்தனர். இஸ்ரவேலர் பின்வருவனவற்றை நம்புகிறார்கள்: தேவன் எங்கள் தேவனாக மட்டுமே இருக்க முடியும், புறஜாதியாரான உங்கள் தேவனாக இருக்க முடியாது, மேலும் நீங்கள் யேகோவாவை வணங்காததால், எங்கள் தேவனாகிய யேகோவா உங்களை வெறுக்கிறார். அந்த யூத ஜனங்களும் பின்வருவனவற்றை நம்புகிறார்கள்: கர்த்தராகிய இயேசு யூத ஜனங்களாகிய எங்களது உருவத்தை அணிந்துகொண்டார், அவர் யூத ஜனங்களின் அடையாளத்தைத் தாங்கிய தேவன் ஆகிறார். தேவன் எங்களிடையே கிரியை செய்கிறார். தேவனின் உருவமும் எங்கள் உருவமும் ஒத்தவை; எங்கள் உருவம் தேவனுக்கு நெருக்கமாக இருக்கிறது. கர்த்தராகிய இயேசு யூதர்களின் ராஜா; புறஜாதியார் அத்தகைய பெரிய இரட்சிப்பைப் பெற தகுதியற்றவர்கள். கர்த்தராகிய இயேசுதான் யூதர்களான நமக்கு பாவநிவாரணப்பலி. இஸ்ரவேலர்களும் யூத ஜனங்களும் இந்த இரண்டு கருத்துக்களையும் உருவாக்கியது கிரியையின் அந்த இரண்டு கட்டங்களின் அடிப்படையில்தான். தேவன் புறஜாதியினரின் தேவன் என்பதை அனுமதிக்காமல், அவர்கள் தேவனைத் தங்கள் தேவன் என்று கூறி அகந்தை கொள்கிறார்கள். இவ்வாறாக, தேவன் புறஜாதியரின் இருதயங்களில் ஒரு வெற்றிடமாகிப் போனார். ஏனென்றால், தேவன் புறஜாதியினரின் தேவனாக இருக்க விரும்பவில்லை என்றும், அவர் தேர்ந்தெடுத்த ஜனங்களான இஸ்ரவேலர்களையும் யூத ஜனங்களையும், குறிப்பாக அவரைப் பின்பற்றிய சீஷர்களை மட்டுமே நேசிக்கிறார் என்றும் எல்லோரும் விசுவாசித்தனர். யேகோவாவும் இயேசுவும் செய்த கிரியை எல்லா மனுஷரும் உயிர்வாழ்வதற்காகவே என்று உங்களுக்குத் தெரியாதா? இஸ்ரவேலுக்கு வெளியே பிறந்த உங்கள் அனைவருக்கும் தேவன்தான் தேவன் என்பதை நீ இப்போது ஒப்புக்கொள்கிறாயா? தேவன் இன்று இங்கே உங்கள் மத்தியில் இல்லையா? இது ஒரு சொப்பனமாக இருக்க முடியாது, இல்லையா? இந்த யதார்த்தத்தை நீங்கள் ஏற்கவில்லையா? நீங்கள் அதை நம்பவோ அல்லது அதைப் பற்றிச் சிந்திக்கவோ துணிவதில்லை. நீங்கள் அதை எப்படிப் பார்த்தாலும், உங்கள் நடுவில் தேவன் இங்கே இல்லையா? இந்த வார்த்தைகளை நம்ப நீங்கள் இன்னும் பயப்படுகிறீர்களா? இந்த நாளிலிருந்து, ஜெயங்கொள்ளப்பட்ட அனைவரும் மற்றும் தேவனின் சீஷர்களாக இருக்க விரும்பும் அனைவரும் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்லவா? இன்று பின்பற்றுபவர்களாக இருக்கும் நீங்கள் அனைவரும், இஸ்ரவேலுக்கு வெளியே இருக்கும் ஜனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லையா? உங்கள் அந்தஸ்து இஸ்ரவேலருக்கு சமமானதல்லவா? இவை அனைத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டாமா? உங்களை ஜெயங்கொள்ளும் கிரியையின் குறிக்கோள் இதுவல்லவா? நீங்கள் தேவனைக் காண முடியும் என்பதால், ஆதியிலிருந்து எதிர்காலம் வரை அவர் என்றென்றும் உங்கள் தேவனாக இருப்பார். நீங்கள் அனைவரும் அவரைப் பின்பற்றி, அவருடைய விசுவாசியாக, கீழ்ப்படிதலுள்ள ஜீவன்களாக இருக்கும்வரை அவர் உங்களைக் கைவிட மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெயங்கொள்ளும் கிரியையைக் குறித்த உள்ளார்ந்த சத்தியம் (3)” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 292

உனது பழைய கருத்துக்களை ஒதுக்கி வைப்பதன் மூலம் மட்டுமே உன்னால் புதிய அறிவைப் பெற முடியும், ஆனால் பழைய அறிவு என்பது பழைய கருத்துக்களுக்கு சமமானதாக இருக்கவேண்டும் என்பதில்லை. “கருத்துக்கள்” என்பவை மனுஷன் கற்பனை செய்யும் யதார்த்தத்துடன் முரண்படுகின்ற காரியங்களைக் குறிக்கின்றன. பழைய அறிவானது ஏற்கனவே பழைய யுகத்திலேயே காலாவதியாகி, புதிய கிரியைக்குள் மனுஷன் பிரவேசிப்பதைத் தடுத்திருந்தால், இதுபோன்ற அறிவும் ஒரு கருத்தாகும். இதுபோன்ற அறிவுக்கான சரியான அணுகுமுறையை மனுஷனால் எடுக்க முடிந்தால், பழையதையும் புதியதையும் இணைத்துப் பல அம்சங்களிலிருந்து தேவனை அறிந்துகொள்ள முடிந்தால், பழைய அறிவு மனிதனுக்கு ஒரு உதவியாக மாறி, மனுஷன் புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் அடிப்படையாகிவிடுகிறது. தேவனை அறிந்துகொள்வதற்கான பாதையில் எவ்வாறு பிரவேசிப்பது, தேவனை அறிந்துகொள்வதற்கு எந்த சத்தியங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் உனது கருத்துக்களையும் பழைய மனநிலைகளையும் எவ்வாறு அகற்றுவது போன்ற பல கொள்கைகளை அறிந்துகொள்ளுமாறு தேவனை அறிந்துகொள்வதற்கான பாடமானது உன்னிடம் கேட்டுக்கொள்கிறது, இதன்மூலம் தேவனுடைய புதிய கிரியையின் அனைத்து ஏற்பாடுகளுக்கும் நீங்கள் கீழ்ப்படியலாம். தேவனை அறிந்துகொள்வதற்கான பாடத்திற்குள் நுழைவதற்கான அஸ்திபாரமாக இக்கொள்கைகளைப் பயன்படுத்தினால், உனது அறிவு மென்மேலும் ஆழமாகும். தேவனுடைய முழு நிர்வாகத் திட்டத்தைப் பற்றியும், அதாவது மூன்று கட்ட கிரியைகளைப் பற்றியும் உனக்கு தெளிவான அறிவு இருந்தால், தேவனுடைய கிரியையின் முந்தைய இரண்டு கட்டங்களையும் தற்போதைய கட்டத்துடன் முழுமையாக தொடர்புபடுத்தவும், அதுதான் தேவனால் செய்யப்பட்ட கிரியை என்று உன்னால் பார்க்கவும் முடிந்தால், நீ ஒரு ஈடுஇணையற்ற உறுதியான அஸ்திபாரத்தைக் கொண்டிருப்பாய். மூன்று கட்ட கிரியைகளும் ஒரே தேவனால்தான் செய்யப்பட்டன; இதுதான் மிகப் பெரிய தரிசனமாகும், மேலும் இதுதான் தேவனை அறிந்துகொள்வதற்கான ஒரே பாதையாகும். மூன்று கட்ட கிரியைகளும் தேவனால் மட்டுமே செய்யப்பட்டிருக்க முடியும், எந்த மனுஷனாலும் அவர் சார்பாக இதுபோன்ற கிரியையைச் செய்திருக்க முடியாது. அதாவது, தேவனால் மட்டுமே ஆதியில் இருந்து இன்று வரை தனது சொந்தக் கிரியையைச் செய்திருக்க முடியும். தேவனுடைய மூன்று கட்ட கிரியைகள் வெவ்வேறு யுகங்களிலும் இடங்களிலும் செய்யப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கிரியையும் வேறுபட்டதாக இருந்தாலும், இவை அனைத்தும் ஒரே தேவனால் செய்யப்படும் கிரியையாகும். எல்லா தரிசனங்களிலும், இதுவே மனுஷன் அறிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய தரிசனமாக இருக்கிறது. மனுஷனால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தால், அவனால் உறுதியாக நிற்க முடியும். இன்று, பல்வேறு மதங்கள் மற்றும் மதப்பிரிவுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை அறிவதில்லை, மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கும் பரிசுத்த ஆவியானவருடையதல்லாத கிரியைக்கும் இடையிலான வேறுபாட்டை அறிய முடிவதில்லை, இதனால், அவர்கள் கடைசி இரண்டு கட்ட கிரியைகளைப் போலவே, இந்தக் கட்ட கிரியையும் யேகோவா தேவனால் செய்யப்படுகிறதா என்று சொல்ல முடிவதில்லை. ஜனங்கள் தேவனைப் பின்பற்றினாலும், பெரும்பாலானவர்களால் இது சரியான வழிதானா என்று இன்னும் சொல்ல முடிவதில்லை. தேவனால் தனிப்பட்ட முறையில் வழிநடத்தப்படுகிற வழி இதுதானா, தேவன் மாம்சமாகியிருப்பது உண்மைதானா என்று மனுஷன் கவலைப்படுகிறான், மேலும் இதுபோன்ற விஷயங்களை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றிய எந்த துப்பும் இன்னமும் பெரும்பாலானவர்களிடம் இல்லை. தேவனைப் பின்பற்றுபவர்களால் வழியைத் தீர்மானிக்க முடியவில்லை. ஆகையால், பேசப்படும் செய்திகள் இந்த ஜனங்கள் மத்தியில் ஒரு பகுதியளவு தாக்கத்தை மட்டுமே கொண்டுள்ளன, மேலும் அவற்றால் முழுவதும் பயனுள்ளதாக இருக்க முடியாது, ஆதலால் இதுபோன்றவர்களின் ஜீவிய பிரவேசத்தை இது பாதிக்கிறது. மூன்று கட்ட கிரியைகளிலும் அவை வெவ்வேறு யுகங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நபர்களிடம் தேவனால் செய்யப்பட்டவை என்பதை மனுஷனால் பார்க்க முடிந்தால், கிரியை வேறுபட்டதாக இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே தேவனால்தான் செய்யப்படுகின்றன என்பதை மனுஷனால் பார்க்க முடிந்தால், அது ஒரே தேவனால் செய்யப்பட்ட கிரியை என்பதனால், அது சரியானதாகவும் பிழையில்லாததுமாக இருக்க வேண்டும். மேலும் அது மனுஷனின் கருத்துக்களுடன் முரண்பட்டதாக இருந்தாலும், அது ஒரே தேவனுடைய கிரியை என்பதை மறுப்பதற்கில்லை. இது ஒரே தேவனுடைய கிரியைதான் என்று மனுஷனால் உறுதியாகச் சொல்ல முடிந்தால், மனுஷனுடைய கருத்துக்கள் வெறும் அற்பமானவையாக குறைக்கப்படும், குறிப்பிடத் தகுதியற்றவையாகிவிடும். மனுஷனுடைய தரிசனங்கள் தெளிவற்றவையாக இருப்பதனாலும், மனுஷன் யேகோவாவை தேவனாகவும், இயேசுவை கர்த்தராகவும் மட்டுமே அறிந்திருப்பதாலும், இன்றைய மாம்சமாகிய தேவனைப் பற்றி இரு மனதுடன் காணப்படுவதாலும், பலர் யேகோவா மற்றும் இயேசுவின் கிரியையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றார்கள், இன்றைய கிரியையை பற்றிய கருத்துக்களால் குழம்பியிருக்கின்றார்கள், பெரும்பாலானவர்கள் எப்போதும் சந்தேகத்துடன் காணப்படுவதோடு, இன்றைய கிரியையைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. கண்ணுக்குத் தெரியாத கடைசி இரண்டு கட்ட கிரியைகளைப் பற்றி மனுஷனிடம் எந்தக் கருத்தும் இல்லை. ஏனென்றால், கடைசி இரண்டு கட்ட கிரியைகளின் யதார்த்தத்தை மனுஷன் புரிந்துகொள்ளவில்லை, தனிப்பட்ட முறையில் அவற்றைப் பார்த்ததும் இல்லை. ஏனென்றால், இந்தக் கட்ட கிரியைகளை மனுஷன் விரும்புவது போலக் கற்பனை செய்து பார்க்க முடியாது. அவன் எதைக் கொண்டு வந்தாலும், இதுபோன்ற கற்பனைகளை நிரூபிக்க எந்த உண்மைகளும் இல்லை, அவற்றைச் சரிசெய்ய யாருமில்லை. மனுஷன் தனது மனப்போக்கிற்கு மிகவும் சுதந்திரம் கொடுக்கிறான், எச்சரிக்கையைக் காற்றில் பறக்கவிட்டு, அவனது கற்பனையைச் சுதந்திரமாக அலையவிடுகிறான். ஏனென்றால், அவனுடைய கற்பனைகளைச் சரிபார்க்க எந்த உண்மைகளும் இல்லை, ஆகையால் மனுஷனுடைய கற்பனைகளுக்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல், அவை “உண்மை” ஆகின்றன. இவ்வாறு மனுஷன் தன் மனதில் கற்பனை செய்துள்ள தேவனை நம்புகிறான், யதார்த்த தேவனையோ தேடுவதில்லை. ஒரு நபருக்கு ஒரு வகையான நம்பிக்கை இருந்தால், நூறு பேரிடம் நூறு வகையான நம்பிக்கைகள் இருக்கும். மனுஷன் தேவனுடைய கிரியையின் யதார்த்தத்தைக் காணாததாலும், அவன் அதைக் காதுகளால் மட்டுமே கேட்டு, அதைக் கண்களால் காணாததால், அவன் இதுபோன்ற நம்பிக்கைகளைக் கொண்டவனாக இருக்கிறான். மனுஷன் புராணங்களையும் கதைகளையும் கேட்டிருக்கிறான், ஆனால் தேவனுடைய கிரியையின் உண்மைகளைப் பற்றிய அறிவை அரிதாகவே கேள்விப்பட்டிருக்கின்றான். இவ்வாறு, ஒரு வருடமாக மட்டுமே விசுவாசிகளாக இருப்பவர்கள் தங்களுடைய சொந்தக் கருத்துக்களின் மூலமாகவே தேவனை விசுவாசிக்கிறார்கள். இது தங்கள் வாழ்நாள் முழுவதும் தேவனை விசுவாசித்தவர்களுக்கும் பொருந்தும். உண்மைகளைப் பார்க்க முடியாதவர்களால் ஒருபோதும் தேவனைப் பற்றிய கருத்துக்களைக் கொண்ட ஒரு விசுவாசத்திலிருந்து தப்பிக்க முடியாது. மனுஷன் தனது பழைய கருத்துக்களின் கட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, புதிய பிரதேசத்திற்குள் பிரவேசித்துவிட்டதாக நம்புகிறான். தேவனுடைய உண்மையான முகத்தைப் பார்க்க முடியாதவர்களின் அறிவு என்பது கருத்துக்களும் வதந்திகளுமே தவிர வேறு எதுவுமில்லை என்று மனுஷனுக்குத் தெரியாதா? மனுஷன் தனது கருத்துக்கள் சரியானவையாகவும் பிழையில்லாமலும் இருப்பதாக நினைக்கிறான், மேலும் இந்தக் கருத்துக்கள் தேவனிடமிருந்து வந்தவை என்றும் நினைக்கிறான். இன்று, மனுஷன் தேவனுடைய கிரியையைக் காணும்போது, பல வருடங்களாகக் கட்டி வைத்திருந்த கருத்துக்களை விட்டுவிடுகிறான். கடந்த காலத்தின் கற்பனைகளும் கருத்துக்களும் இந்தக் கட்டத்தின் கிரியைக்கு ஒரு தடையாக மாறியுள்ளன. மேலும், இதுபோன்ற கருத்துக்களை விட்டுவிடுவதும், இதுபோன்ற கருத்துக்களை மறுப்பதும் மனுஷனுக்கு கடினமாகிவிட்டது. இன்றுவரை தேவனைப் பின்தொடர்ந்தவர்களில் பலரின் இந்தப் படிப்படியான கிரியையைப் பற்றிய கருத்துக்கள் இன்னும் படுமோசமாகிவிட்டன. இவர்கள் மாம்சமாகிய தேவன் மீது படிப்படியாக ஒரு பிடிவாதமான பகைமையை உருவாக்கியுள்ளனர். இந்த வெறுப்பின் மூலக்காரணமானது மனுஷனுடைய கருத்துக்களிலும் கற்பனைகளிலும்தான் உள்ளது. மனுஷனுடைய கருத்துக்களும் கற்பனைகளும் இன்றைய கிரியைக்கு எதிரியாகிவிட்டன, இக்கிரியை மனுஷனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறது. உண்மைகள் மனுஷனை அவனுடைய கற்பனைக்குச் சுதந்திரம் கொடுக்க அனுமதிக்காததினாலும் மற்றும் அவற்றை மனுஷனால் எளிதில் மறுக்க முடியாததினாலுமே இது நடந்துள்ளது. மேலும், மனுஷனுடைய கருத்துக்களும் கற்பனைகளும் உண்மைகள் இருப்பதை ஆதரிக்கவில்லை. மேலும், மனுஷன் உண்மைகளின் சரித்தன்மையையும் உண்மைத்தன்மையையும் குறித்துச் சிந்திக்காததனால், பிடிவாதமாகத் தனது கருத்துக்களை அவிழ்த்துவிட்டு, தனது சொந்த கற்பனையைப் பயன்படுத்துகிறான். இது மனுஷனுடைய கருத்துகளின் தவறு என்று மட்டுமே கூற முடியுமே தவிர, இது தேவனுடைய கிரியையின் தவறு என்று கூற முடியாது. மனுஷன் தான் விரும்புகிற எதை வேண்டுமானாலும் கற்பனை செய்யலாம், ஆனால் தேவனுடைய எந்தக் கட்ட கிரியையும் அல்லது அதில் எந்த சிறு பகுதியையும் அவன் தன்னிச்சையாக மறுக்காமல் போகலாம்; தேவனுடைய கிரியைக் குறித்த உண்மை மனுஷனால் மீறக்கூடாததாக இருக்கிறது. நீ உனது கற்பனைக்குச் சுதந்திரம் கொடுக்கலாம், யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளைப் பற்றிய நல்ல கதைகளைத் தொகுக்கலாம், ஆனால் யேகோவா மற்றும் இயேசுவின் ஒவ்வொரு கட்ட கிரியையின் உண்மையையும் நீ மறுக்காமல் இருக்கலாம். இது ஒரு கொள்கையாகும், மேலும் இது ஒரு நிர்வாக ஆணையாகும். மேலும், இந்தப் பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்ட கிரியையானது மனுஷனுடைய கருத்துக்களுடன் பொருந்தாது என்றும், முந்தைய இரண்டு கட்ட கிரியைகளுக்கான காரியம் அல்ல என்றும் மனுஷன் நம்புகிறான். அவனுடைய கற்பனையில், முந்தைய இரண்டு கட்டங்களின் கிரியையும் நிச்சயமாகவே இன்றைய கிரியைக்கு சமமானதல்ல என்று மனுஷன் நம்புகிறான், ஆனால் தேவனுடைய கிரியையின் கொள்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை என்றும், அவருடைய கிரியை எப்போதும் நடைமுறையானது என்றும் மற்றும் யுகத்தைப் பொருட்படுத்தாமல், அவருடைய கிரியையின் உண்மையை எதிர்க்கும் ஒரு பெரிய ஜனக்கூட்டம் எப்போதும் இருக்கும் என்றும் நீ எப்போதாவது கருதியிருக்கிறாயா? இந்தக் கட்ட கிரியையை இன்று எதிர்ப்பவர்கள் அனைவரும் சந்தேகத்திற்கு இடமின்றி கடந்த காலங்களிலும் தேவனை எதிர்த்திருப்பார்கள், ஏனென்றால் இதுபோன்றவர்கள் எப்போதுமே தேவனுடைய எதிரிகளாகத்தான் இருப்பார்கள். தேவனுடைய கிரியைப் பற்றிய உண்மையை அறிந்தவர்கள், மூன்று கட்ட கிரியைகளையும் ஒரே தேவனுடைய கிரியையாகவே பார்ப்பார்கள் மற்றும் தங்களுடைய கருத்துக்களை விட்டுவிடுவார்கள். இவர்கள்தான் தேவனை அறிந்தவர்கள், இதுபோன்றவர்கள்தான் தேவனை உண்மையாகவே பின்பற்றுபவர்கள். தேவனுடைய முழு நிர்வாகமும் அதன் முடிவை நெருங்கும் போது, தேவன் எல்லாவற்றையும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்துவார். மனுஷன் சிருஷ்டிகரின் கைகளால் சிருஷ்டிக்கப்பட்டான், இறுதியில் அவர் மனுஷனை தமது ஆளுகையின் கீழ் முழுமையாகத் திருப்பிக் கொண்டுவர வேண்டும்; இதுவே மூன்று கட்ட கிரியைகளின் முடிவாகும். கடைசிக்கால கிரியையின் கட்டமும், இஸ்ரவேல் மற்றும் யூதேயாவிலுள்ள முந்தைய இரண்டு கட்டங்களும் முழுப் பிரபஞ்சத்திலுமுள்ள தேவனுடைய நிர்வாகத் திட்டமாகும். இதை ஒருவராலும் மறுக்க முடியாது, இது தேவனுடைய கிரியையைக் குறித்த உண்மையாகும். இந்தக் கிரியையை ஜனங்கள் அதிகம் அனுபவித்திருக்கவில்லை அல்லது கண்டிருக்கவில்லை என்றாலும், உண்மைகள் இன்னும் உண்மைகளாகவே இருக்கின்றன, இது எந்த மனிதனும் மறுக்க முடியாததாக இருக்கிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு தேசத்திலும் தேவனை நம்புகிறவர்கள் எல்லோரும் மூன்று கட்ட கிரியைகளையும் ஏற்றுக்கொள்வார்கள். நீ ஒரு கட்ட கிரியையை மட்டுமே அறிந்திருந்து, மற்ற இரண்டு கட்ட கிரியைகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை என்றால் மற்றும் கடந்த காலத்திலுள்ள தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், தேவனுடைய முழு நிர்வாகத் திட்டத்தைப் பற்றிய முழுமையான சத்தியத்தை உன்னால் பேச முடியாது மற்றும் தேவனைப் பற்றிய உனது அறிவு ஒருதலைப்பட்சமானதாகவே இருக்கிறது. ஏனென்றால், தேவன் மீதான உனது விசுவாசத்தில் நீ தேவனை அறிந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ இல்லை, ஆகையால் தேவனுக்குச் சாட்சி பகருவதற்கு நீ பொருத்தமானவனாக இல்லை. இக்காரியங்களைப் பற்றிய உனது தற்போதைய அறிவு ஆழமானதா அல்லது மேலோட்டமானதா என்பதைப் பொருட்படுத்தாமல், நீ இறுதியில் அறிவைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் முழுமையாக நம்பியிருக்க வேண்டும். ஜனங்கள் எல்லோரும் தேவனுடைய முழு கிரியையையும் கண்டு அவருடைய ஆளுகையின் கீழ் அடிபணிவார்கள். இக்கிரியையின் முடிவில், எல்லா மதங்களும் ஒன்றாகிவிடும், எல்லாச் சிருஷ்டிகளும் சிருஷ்டிகரின் ஆளுகையின் கீழ் திரும்புவார்கள், எல்லாச் சிருஷ்டிகளும் ஒரே மெய்தேவனை வணங்குவார்கள். தீய மதங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போகும், மீண்டும் ஒருபோதும் தோன்றாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 293

தேவனுடைய கிரியையின் நோக்கம், அவருடைய கிரியை மனுஷனில் ஏற்படுத்தும் தாக்கம், மனுஷனுக்கான அவருடைய சித்தம் என்ன என்பவற்றைப் புரிந்துகொள்ள, தேவனைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இதனைத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் தேவனின் கிரியைப் பற்றிய அறிவுதான் எல்லா ஜனங்களுக்கும் இருப்பதில்லை. தேவன் ஜனங்கள் மீது நடப்பித்த கிரியைகள், தேவனின் கிரியையின் முழுமை, மற்றும் உலகை சிருஷ்டித்ததிலிருந்து தற்போதைய காலம் வரை மனுஷனிடம் தேவனின் சித்தம் துல்லியமாக என்னவாக இருக்கிறது—இந்த விஷயங்கள் மனுஷனுக்குத் தெரிவதில்லை அல்லது அவன் புரிந்துகொள்வதுமில்லை. இந்தப் போதாமை மத உலகம் முழுவதும் மட்டுமல்லாமல், தேவனை விசுவாசிக்கிறவர்களிடமும் காணப்படுகிறது. நீ உண்மையிலேயே தேவனைக் காணும் நாள் வரும்போது, அவருடைய ஞானத்தை நீ உண்மையிலேயே பாராட்டும்போது, தேவன் செய்த அனைத்து கிரியைகளையும் நீ காணும்போது, தேவன் என்பவர் யார், அவர் என்ன வைத்திருக்கிறார் என்பதை நீ அறிந்துகொள்ளும்போது—அவருடைய ஈவை, ஞானத்தை, அதிசயத்தை மற்றும் அவர் ஜனங்கள் மீது புரிந்த அனைத்து கிரியையைக் காணும்போது—அப்போதுதான் தேவனில் நீ கொண்டிருக்கும் உனது விசுவாசத்தில் நீ வெற்றியை அடைவாய். தேவன் எல்லாவற்றையும் உள்ளடக்கியவர், எல்லாம் நிறைந்தவர் என்று கூறப்படும் போது, அவர் எந்த வகையில் சரியாக அனைத்தையும் உள்ளடக்கியவர், எந்த வகையில் அவர் எல்லாம் நிறைந்தவர்? நீ இதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், நீ தேவனை விசுவாசிப்பதாகக் கருத முடியாது. மத உலகில் இருப்பவர்கள் தேவனை விசுவாசிப்பவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் பிசாசைப் போல பொல்லாதவர்கள் என்று நான் ஏன் கூறுகிறேன்? அவர்கள் பொல்லாதவர்கள் என்று நான் கூறுவதற்கு அவர்கள் தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளாததும், அவருடைய ஞானத்தைக் காண முடியாததும் தான் காரணம். தேவன் எந்த நேரத்திலும் தம்முடைய கிரியையை அவர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் குருடர்கள்; அவர்களால் தேவனின் கிரியைகளைக் காண முடியாது, அவர்கள் தேவனால் கைவிடப்பட்டிருக்கிறார்கள், தேவனின் அக்கறையும் பாதுகாப்பும் அவர்களுக்கு முற்றிலுமாக இருப்பதில்லை, பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பற்றிக் குறிப்பிட வேண்டியதில்லை. தேவனின் கிரியை இல்லாதவர்கள் அனைவரும் பொல்லாதவர்கள் மற்றும் தேவனின் எதிராளிகள். நான் கூறும் தேவனின் எதிராளிகள் என்பவர்கள், தேவனை அறியாதவர்கள், தேவனை அவர்களின் உதடுகளால் ஏற்றுக்கொண்டாலும், இன்னும் அவரை அறியாதவர்கள், தேவனைப் பின்பற்றினாலும், இன்னும் அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள், மற்றும் தேவனின் கிருபையில் மகிழ்ச்சி அடைந்தாலும் இன்னும் அவருக்கு சாட்சியாக நிற்க முடியாதவர்கள். தேவனின் கிரியையின் நோக்கம் பற்றிய புரிதலோ அல்லது தேவன் மனுஷனில் செய்யும் கிரியைப் பற்றிய புரிதலோ இல்லாமல், அவன் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்கவும் முடியாது, அவன் தேவனுக்கு சாட்சியாக நிற்கவும் முடியாது. மனுஷன் தேவனை எதிர்ப்பதற்கான காரணம், ஒருபுறம், அவனுடைய சீர்கெட்ட மனநிலையிலிருந்தும், மறுபுறம், தேவன் குறித்த அறியாமையிலிருந்தும், தேவன் செயல்படும் கொள்கைகள் மற்றும் மனுஷனுக்கான அவருடைய சித்தம் பற்றிய புரிதல் இல்லாததாலும் உருவாகிறது. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக வைத்துப் பார்த்தால், இவை தேவனுடன் மனுஷனுக்கு உள்ள எதிர்ப்பின் வரலாற்றை உருவாக்குகின்றன. புதிதாக விசுவாசிப்பவர்கள் தேவனை எதிர்ப்பதற்கு காரணம், இது போன்ற எதிர்ப்பு அவர்களின் இயல்பிலேயே இருக்கிறது, அதே சமயம் பல ஆண்டுகளாக விசுவாசிப்பவர்கள் தேவனை எதிர்ப்பது அவரைப் பற்றிய அவர்களின் அறியாமையாலும், இதனுடன் அவர்களின் சீர்கெட்ட மனநிலையினாலும் விளைகிறது. தேவன் மாம்சமாக மாறுவதற்கு முந்தைய காலத்தில், ஒரு மனுஷன் தேவனை எதிர்க்கிறானா என்கிற அளவீடானது பரலோகத்தில் உள்ள தேவனால் வகுக்கப்பட்ட நியாயப்பிரமாணங்களைப் பின்பற்றுகிறானா என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உதாரணமாக, நியாயப்பிரமாண யுகத்தில், யேகோவாவின் நியாயப்பிரமாணங்களை யாரெல்லாம் கடைப்பிடிக்கவில்லையோ அவர்கள் தேவனை எதிர்த்தவர்களாகக் கருதப்பட்டார்கள்; யேகோவாவுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளை யாரெல்லாம் திருடினார்களோ, அல்லது யேகோவாவுக்கு ஆதரவானவர்களுக்கு எதிராக நின்றார்களோ, அவர்கள் தேவனை எதிர்த்தவர்கள் என்று கருதப்பட்டு, கல்லெறிந்து கொல்லப்படுவார்கள்; தன் தந்தையையும் தாயையும் மதிக்காதவர்கள், மற்றவனைத் தாக்கியவர்கள் அல்லது சபித்தவர்கள், நியாயப்பிரமாணங்களைக் கடைப்பிடிக்காதவர்களாகக் கருதப்பட்டார்கள். யேகோவாவின் நியாயப்பிரமாணங்களைக் கடைப்பிடிக்காத அனைவரும் அவருக்கு எதிராக நிற்பவர்கள் என்று கருதப்பட்டனர். ஆனால், கிருபையின் யுகத்தில் அது தொடரவில்லை, அப்போது இயேசுவுக்கு எதிராக யாரெல்லாம் நின்றார்களோ அவர்கள் தேவனுக்கு எதிராக நின்றவர்களாகக் கருதப்பட்டனர், மற்றும் இயேசு சொன்ன வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் தேவனுக்கு எதிராக நின்றவர்களாகக் கருதப்பட்டனர். இந்த நேரத்தில், தேவனை எதிர்ப்பது குறித்து வரையறுக்கப்பட்டுள்ள விதம், மிகவும் துல்லியமாகவும் நடைமுறைக்கு மிகவும் ஏற்றதாகவும் ஆனது. அதுவரை தேவன் மாம்சமாக மாறியிராத காலகட்டத்தில், மனுஷன் தேவனை எதிர்க்கிறானா என்பது மனுஷன் பரலோகத்தில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தேவனை வணங்குகிறானா மற்றும் போற்றுகிறானா என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தேவனை எதிர்ப்பது என்பது வரையறுக்கப்பட்ட விதம் நடைமுறைக்குரியதாக இல்லவே இல்லை, ஏனென்றால் மனுஷனால் தேவனைப் பார்க்கவும் முடியவில்லை, தேவனின் உருவம் எதுவென்றும், அல்லது அவர் எவ்வாறு கிரியை புரிந்தார், பேசினார் என்றும் அவனுக்குத் தெரிந்திருக்கவுமில்லை. மனுஷனுக்கு தேவனைப் பற்றி எவ்வகையான கருத்தும் இல்லை, அவன் தேவனைத் தெளிவற்ற முறையில் நம்பினான், ஏனென்றால் தேவன் அதுவரை மனுஷனுக்குத் தோன்றவில்லை. ஆகையால், மனுஷன் தனது கற்பனையில் தேவனை எப்படி நம்பினாலும் பரவாயில்லை, தேவன் மனுஷனைக் கண்டிக்கவோ அல்லது அவனிடம் பல கோரிக்கைகளை வைக்கவோ இல்லை, ஏனென்றால் மனுஷனால் தேவனை முழுமையாகக் காண முடியவில்லை. தேவன் மாம்சமாகி, மனுஷர்களிடையே கிரியைப் புரிய வரும்போது, அனைவரும் அவரைக் காண்பார்கள், அவருடைய வார்த்தைகளைக் கேட்பார்கள், தேவன் தம்முடைய மாம்ச உடலுக்குள் மேற்கொள்ளும் செயல்களை அனைவரும் காண்பார்கள். அந்தத் தருணத்தில், எல்லா மனுஷனின் கருத்துகளும் நுரையாகின்றன. தேவன் மாம்சத்தில் தோன்றுவதைக் கண்டவர்கள் விருப்பத்துடன் அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவர்கள் கண்டிக்கப்பட மாட்டார்கள், அதேசமயம் அவருக்கு எதிராக வேண்டுமென்றே நிற்பவர்கள் தேவனுடைய எதிரியாகக் கருதப்படுவார்கள். அத்தகையவர்கள் அந்திக்கிறிஸ்துகள், அவர்கள் தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்கும் எதிரிகள். தேவனைப் பற்றிய கருத்துகளைக் கொண்டிருந்தாலும், அவருக்குக் கீழ்ப்படியத் தயாராகவும், விருப்பம் கொண்டவராகவும் இருப்பவர்கள் ஆக்கினைக்குள்ளாக மாட்டார்கள். மனுஷனின் நோக்கங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில் தேவன் மனுஷனைக் கண்டிக்கிறார், ஒருபோதும் அவனது சிந்தனைகளையும் யோசனைகளையும் வைத்து அல்ல. அவர் மனுஷனை அவனுடைய சிந்தனைகள் மற்றும் யோசனைகளின் அடிப்படையில் கண்டித்தால், தேவனின் கோபமான கரங்களிலிருந்து ஒரு மனுஷனால் கூட தப்பிக்க முடியாது. மனுஷரூபமெடுத்த தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்பவர்கள், கீழ்ப்படியாமைக்காகத் தண்டிக்கப்படுவார்கள். தேவனுக்கு எதிராக வேண்டுமென்றே நிற்கும் இந்த ஜனங்களைப் பொறுத்தவரை, அவர்கள் தேவனுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் எதிர்ப்பு உருவாகிறது, அதன் விளைவாக இது தேவனின் கிரியைக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களுக்கு அவர்களை வழிநடத்துகிறது. இந்த ஜனங்கள் வேண்டுமென்றே தேவனின் கிரியையை எதிர்த்து அழிக்கிறார்கள். அவர்கள் வெறுமனே தேவனைப் பற்றிய கருத்துகளைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவருடைய கிரியையைச் சீர்குலைக்கும் செயல்களிலும் அவர்கள் ஈடுபடுகிறார்கள், இந்தக் காரணத்திற்காக இந்த வகையான ஜனங்கள் கண்டிக்கப்படுவார்கள். தேவனின் கிரியையை வேண்டுமென்றே சீர்குலைக்காதவர்கள் பாவிகளாகக் கண்டிக்கப்பட மாட்டார்கள், ஏனென்றால் அவர்களால் விருப்பத்துடன் கீழ்ப்படியவும், மேலும் இடையூறு மற்றும் தொந்தரவை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் முடிகிறது. இது போன்றவர்கள் கண்டிக்கப்பட மாட்டார்கள். இருப்பினும், பல ஆண்டுகளாக தேவனின் கிரியையை ஜனங்கள் அனுபவித்திருக்கும்போது, அவர்கள் தொடர்ந்து தேவனுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தால் மற்றும் மனுஷரூமமெடுத்த தேவனின் கிரியையை அறிய முடியாமல் இருந்தால், எத்தனை வருடங்கள் அவருடைய கிரியையை அவர்கள் அனுபவித்திருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் தொடர்ந்து தேவனைப் பற்றிய கருத்துக்களால் நிரம்பி இருந்தாலும், அவரை அறிய முடியாது, பின்னர் அவர்கள் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடாவிட்டாலும், அவர்களுடைய இருதயங்கள் தேவனைப் பற்றிய பல கருத்துகளால் நிரம்பியிருக்கும், இந்த கருத்துகள் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், இது போன்ற ஜனங்கள் தேவனின் கிரியைக்கு எந்தவகையிலும் உதவியாக இருக்க மாட்டார்கள். தேவனுக்காக சுவிசேஷத்தைப் பரப்பவோ அல்லது அவருக்கு சாட்சியாக இருக்கவோ அவர்களால் முடியவில்லை. இது போன்ற ஜனங்கள் எதற்கும் பிரயோஜனம் இல்லாதவர்கள் மற்றும் மிகக் குறைவான அறிவை உடையவர்கள். அவர்களுக்கு தேவனைத் தெரியாததாலும், மேலும் அவரைப் பற்றிய தங்கள் கருத்துகளைத் தூக்கி எறிய முற்றிலும் இயலாதவர்களாகவும் இருப்பதால், அவர்கள் கண்டிக்கப்படுகிறார்கள். இதனை இவ்வாறு கூறலாம்: புதிய விசுவாசிகள் தேவனைப் பற்றிய யூகக் கருத்துகளை வைத்திருப்பது அல்லது அவரைப் பற்றி எதுவும் தெரியாமல் இருப்பது இயல்பானது, ஆனால் பல ஆண்டுகளாக தேவனை விசுவாசித்து, அவருடைய கிரியையில் ஒரு நல்ல பங்கை அனுபவித்த ஒருவருக்கு, யூகக் கருத்துகளைத் தொடர்ந்து வைத்திருப்பது இயல்பான விஷயம் அல்ல, மேலும் இது போன்ற ஒருவன் தேவனைப் பற்றிய அறிவு இல்லாதிருப்பது அவ்வளவு இயல்பானதாக இருக்காது. இதற்குக் காரணம், அவர்கள் கண்டிக்கப்படுவது ஒரு சாதாரண நிலை அல்ல. இந்த அசாதாரண ஜனங்கள் அனைவரும் குப்பைகள்; அவர்கள் தான் தேவனை மிகவும் எதிர்க்கிறார்கள், எதுவும் செய்யாமல் தேவனின் கிருபையை அனுபவித்தவர்கள். அத்தகைய ஜனங்கள் அனைவரும் முடிவில் புறம்பாக்கப்படுவார்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 294

தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாத எவரும் அவரை எதிர்ப்பவர் ஆவர், தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொண்டாலும், இன்னும் தேவனைத் திருப்திப்படுத்த நாடிச் செல்லாதவர் தேவனின் எதிராளி என்றும் கருதப்படுகிறார். பெரிய தேவாலயங்களில் வேதாகமத்தை வாசித்து, நாள் முழுவதும் அதை மனப்பாடம் செய்து ஒப்பிப்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களில் ஒருவர்கூட தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்களில் ஒருவரால் கூட தேவனை அறிய முடிவதில்லை; அதிலும் அவர்களில் எவராலும் தேவனின் சித்தத்திற்கு இணங்கி இருக்க முடிவதில்லை. அவர்கள் அனைவரும் பயனற்றவர்கள், மோசமான ஜனங்கள், ஒவ்வொருவரும் தேவனுக்குச் சொற்பொழிவாற்ற உயரத்தில் நிற்கிறார்கள். தேவனின் பதாகையை அவர்கள் எடுத்துச் செல்லும்போதுகூட அவர்கள் வேண்டுமென்றே தேவனை எதிர்க்கிறார்கள். தேவன் மீது விசுவாசம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள், ஆனாலும் அவர்கள் மனுஷனின் மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தை குடிக்கின்றனர். அத்தகைய ஜனங்கள் அனைவரும் மனுஷனின் ஆத்துமாவை விழுங்கும் பிசாசுகள், சரியான பாதையில் செல்ல முயற்சிப்பவர்களின் வழியில் வேண்டுமென்றே குறுக்கிடும் தலைமைப் பேய்கள், தேவனைத் தேடுகிறவர்களுக்கு இடையூறு செய்யும் தடைக் கற்கள். அவர்கள் “நல்ல அமைப்பாகத்” தோன்றக்கூடும், ஆனால் அவர்கள் தேவனுக்கு எதிராக நிற்க ஜனங்களை வழிநடத்தும் அந்திக்கிறிஸ்துக்களே தவிர வேறு யாருமல்லர் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? அவர்கள் மனுஷ ஆத்துமாக்களை விழுங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிசாசுகள் என்பதை அவர்களைப் பின்பற்றுபவர்கள் எப்படி அறிந்து கொள்வார்கள்? தேவனின் முன்னிலையில் தங்களை உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பவர்கள் மனுஷனில் மிகவும் கீழ்த்தரமானவர்கள், அதே சமயம் தங்களைத் தாழ்த்திக் கொண்டவர்கள் மிகவும் மரியாதைக்குரியவர்கள். மேலும், தேவனின் கிரியைத் தனக்குத் தெரியும் என்று நினைப்பவர்கள், மேலும், அவர்கள் அவரை நேரடியாகப் பார்த்தாலும்கூட மிகுந்த ஆரவாரத்துடன் மற்றவர்களுக்குத் தேவனின் கிரியையை அறிவிக்க வல்லவர்கள், இவர்கள் மனுஷர்களிலே மிகவும் அறியாமையிலுள்ளவர்கள். அத்தகையவர்கள் தேவனின் சாட்சியம் இல்லாமல், திமிர்பிடித்தவர்களாகவும், அகங்காரம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். தேவனைப் பற்றிய உண்மையான அனுபவம் மற்றும் நடைமுறை அறிவு இருந்தபோதிலும், தேவனைப் பற்றி தனக்கு மிகக் குறைந்த அறிவு இருப்பதாக நம்புவோர், அவரால் மிகவும் நேசிக்கப்படுபவர்கள். அத்தகையவர்கள் மட்டுமே உண்மையிலேயே சாட்சியமளிக்கிறார்கள், அவர்களே தேவனால் பரிபூரணப்படுத்தப்பட வல்லவர்கள். தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள்; தேவனுடைய சித்தத்தைப் புரிந்துகொண்ட போதிலும், சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள்; தேவனுடைய வார்த்தைகளைப் புசித்து, குடித்தாலும், தேவனுடைய வார்த்தைகளின் சாராம்சத்திற்கு எதிராகச் செல்வோர் தேவனை எதிர்ப்பவர்கள்; மனுஷரூபமெடுத்த தேவனைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டவர்கள், மேலும் கலகத்தில் ஈடுபட மனம் கொண்டவர்கள், தேவனை எதிர்ப்பவர்கள்; தேவன் குறித்து நியாயந்தீர்ப்பவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள்; மற்றும் தேவனை அறியவோ அல்லது அவருக்கு சாட்சியாக இருக்கவோ முடியாதவர்கள் தேவனை எதிர்ப்பவர்கள். எனவே நான் உங்களிடம் வலியுறுத்துகிறேன்: இந்தப் பாதையில் உங்களால் நடக்க முடியும் என்று உங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருந்தால், அதைப் பின்பற்றுங்கள். ஆனால் உங்களால் தேவனை எதிர்ப்பதைத் தவிர்க்க முடியாவிட்டால், மிகவும் தாமதமாகிவிடுவதற்கு முன்பே நீங்கள் விலகிச் சென்றுவிடுவது நல்லது. இல்லையெனில், விஷயங்கள் உங்களுக்கு எதிராக மோசமாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன, ஏனென்றால் உங்கள் இயல்பு மிகவும் சீர்கெட்டுள்ளது. விசுவாசம் அல்லது கீழ்ப்படிதல், அல்லது நீதிக்காகவும் சத்தியத்துக்காகவும் தாகம் கொண்ட, அல்லது தேவனை நேசிக்கும் ஒரு இருதயம், உங்களுக்குக் கொஞ்சம்கூட இல்லை. தேவனுக்கு முன்பாக உங்கள் சூழ்நிலை முற்றிலும் குழப்பமானதாக இருக்கிறது என்று கூறப்படலாம். நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியதை உங்களால் கடைப்பிடிக்க முடியாது, மேலும் சொல்ல வேண்டியதைச் சொல்லவும் முடியாது. நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவற்றை, நீங்கள் கடைப்பிடிக்கத் தவறிவிட்டீர்கள்; நீங்கள் நிறைவேற்ற வேண்டிய செயல்பாட்டை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை. உங்களுக்கு இருக்கவேண்டிய விசுவாசம், மனசாட்சி, கீழ்ப்படிதல் அல்லது மன உறுதி உங்களிடம் இல்லை. சகித்துக்கொள்ள வேண்டிய துன்பத்தை நீங்கள் சகித்துக்கொள்ளவில்லை, உங்களுக்கு இருக்கவேண்டிய விசுவாசம் உங்களிடம் இல்லை. மிகவும் எளிமையாகக் கூறினால், நீங்கள் எந்தவொரு தகுதியையும் பூரணமாகப் பெறவில்லை: நீங்கள் இப்படியே வாழ்வதற்கு வெட்கப்படவில்லையா? நித்திய ஓய்வில் உங்கள் கண்களை மூடுவதே நல்லது என்று நான் உங்களைச் சம்மதிக்க வைக்கிறேன், இதன் மூலம் உங்களுக்காகக் கவலைப்படுவதிலிருந்தும், உங்கள் நிமித்தம் துன்பப்படுவதிலிருந்தும் தேவனுக்கு ஓய்வுகொடுங்கள். நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்கள், ஆனால் இன்னும் அவருடைய சித்தத்தை அறியவில்லை; நீங்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசிக்கிறீர்கள் மற்றும் குடிக்கிறீர்கள், ஆனால் இன்னும் தேவன் மனுஷனிடம் கேட்பதை உங்களால் நிறைவேற்ற முடியவில்லை. நீங்கள் தேவனை நம்புகிறீர்கள், ஆனால் இன்னும் அவரை அறியாமல் இருக்கிறீர்கள், மற்றும் முயற்சிப்பதற்கான குறிக்கோள் இல்லாமல், எந்தவொரு மதிப்பும் இல்லாமல், எந்த அர்த்தமும் இல்லாமல் நீங்கள் உயிர் வாழ்கிறீர்கள். நீங்கள் ஒரு மனுஷனாக வாழ்கிறீர்கள், ஆயினும் மனசாட்சி, ஒருமைப்பாடு அல்லது நம்பகத்தன்மை சிறிதளவும் இல்லை—நீங்கள் உங்களை இன்னும் மனுஷர்கள் என்று அழைக்க முடியுமா? நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்கள், ஆனால் அவரை ஏமாற்றுகிறீர்கள்; மேலும் என்னவென்றால், நீங்கள் தேவனின் பணத்தை எடுத்துக்கொள்கிறீர்கள், அவருக்கு வழங்கப்படும் காணிக்கைகளைப் புசிக்கிறீர்கள். ஆயினும்கூட, முடிவில், தேவனுடைய உணர்வுகள் அல்லது அவரை நோக்கிய மங்கலான மனசாட்சியைக் கருத்தில் கொள்ள நீங்கள் இன்னும் தவறிவிட்டீர்கள். தேவனின் கோரிக்கைகளில் மிகவும் அற்பமானவற்றைக்கூட உங்களால் பூர்த்தி செய்ய முடியாது. உங்களால் உங்களை இன்னும் மனுஷர்கள் என்று கூறிக்கொள்ள முடியுமா? தேவன் உங்களுக்கு வழங்கும் போஜனத்தைச் சாப்பிட்டுக் கொண்டு, அவர் உங்களுக்குக் கொடுக்கும் பிராணவாயுவை சுவாசித்துக் கொண்டு, அவருடைய கிருபையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், இறுதியில், தேவனைப் பற்றிய சிறிதளவு அறிவும் உங்களுக்கு இல்லை. மாறாக, நீங்கள் தேவனை எதிர்க்கும் எதற்கும் உதவாதவர்களாக மாறிவிட்டீர்கள். அது உங்களை ஒரு நாயை விடக் கேவலமான மிருகமாக மாற்றவில்லையா? விலங்குகளில், உங்களை விட தீங்கிழைக்கக்கூடியது ஏதேனும் உள்ளதா?

உயர்ந்த பிரசங்கபீடத்தின் மீது நின்றுகொண்டு மற்றவர்களுக்குக் கற்பிக்கும் போதகர்களும் மூப்பர்களும் தேவனை எதிர்ப்பவர்கள் மற்றும் சாத்தானின் கூட்டாளிகள்; உங்களில் உயர்ந்த பிரசங்கபீடத்தில் நின்றுகொண்டு, மற்றவர்களுக்குக் கற்பிக்காதவர்கள் தேவனின் பெரிய எதிரிகள் அல்லவா? சாத்தானுடன் சேர்ந்து சதி செய்வதில் நீங்கள் அவர்களைவிட மிஞ்சியவர்கள் அல்லவா? தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாதவர்களுக்கு, தேவனின் சித்தத்திற்கு இணங்கி நடக்கத் தெரியாது. நிச்சயமாக, தேவனுடைய கிரியையின் நோக்கத்தைப் புரிந்துகொள்பவர்களுக்கு அவருடைய சித்தத்திற்கு எவ்வாறு இணங்கி நடப்பது என்று தெரியாமல் இருக்காது. தேவனின் கிரியை ஒருபோதும் பிழையாகாது; மாறாக, மனுஷனின் நாட்டமே குறைபாடுடையது. தேவனை வேண்டுமென்றே எதிர்த்து சீர்கெடுகிறவர்கள், அந்தப் போதகர்களையும் மூப்பர்களையும்விட மிகவும் கொடியவர்களாகவும் வஞ்சகர்களாகவும் இருப்பார்கள் அல்லவா? பலர் தேவனை எதிர்ப்பவர்கள், ஆனால் அவர்கள் மத்தியில் தேவனை அவர்கள் எதிர்ப்பதற்கான பல்வேறு வழிகளும் உள்ளன. எல்லா விதமான விசுவாசிகளும் இருப்பதைப் போல், தேவனை எதிர்ப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரைப் போல் மற்றொருவர் இல்லாமல் எல்லா விதத்திலும் இருக்கிறார்கள். தேவனுடைய கிரியையின் நோக்கத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளத் தவறியவர்களில் ஒருவர் கூட இரட்சிக்கப்பட மாட்டார்கள். கடந்த காலங்களில் மனுஷன் தேவனை எவ்வாறு எதிர்த்திருந்தாலும், தேவனுடைய கிரியையின் நோக்கத்தை மனுஷன் புரிந்துகொண்டு, தேவனைத் திருப்திப்படுத்த தனது முயற்சிகளை அர்ப்பணிக்கும்போது, தேவன் அவனுடைய முந்தைய பாவங்கள் அனைத்தையும் துடைப்பார். மனுஷன் சத்தியத்தைத் தேடி, சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் வரை, தேவன் அவன் செய்ததை மனதில் கொள்ளமாட்டார். மேலும், மனுஷன் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதன் அடிப்படையில் தான் தேவன் அவனை நியாயந்தீர்க்கிறார். இது தேவனின் நீதியாகும். மனுஷன் தேவனைப் பார்ப்பதற்கு அல்லது அவருடைய கிரியையை அனுபவிப்பதற்கு முன்பு, மனுஷன் தேவனை நோக்கி எவ்வாறு செயல்பட்டிருந்தாலும், அவர் அதை நினைவில் கொள்ள மாட்டார். இருப்பினும், மனுஷன் தேவனைக் கண்டு, அவருடைய கிரியையை அனுபவித்ததும், மனுஷனின் எல்லா செயல்களும் நடவடிக்கைகளும் தேவனால் “வரலாற்றுப் பதிவேடுகளில்” பதிவு செய்யப்படும், ஏனென்றால் மனுஷன் தேவனைக் கண்டு, அவருடைய கிரியையின் மத்தியில் வாழ்ந்திருக்கிறான்.

மனுஷன் தேவனிடம் என்ன இருக்கிறது என்றும் மற்றும் அவர் யார் என்றும் உண்மையாகப் பார்த்ததும், அவருடைய மாட்சிமையைப் பார்த்ததும், தேவனின் கிரியையை அவன் உண்மையிலேயே அறிந்ததும், மேலும், மனுஷனின் பழைய மனநிலை மாறியதும், மனுஷன் தேவனை எதிர்க்கும் தனது கலக மனநிலையை முற்றிலுமாகத் தூக்கி எறிவான். எல்லோரும் சில சமயங்களில் தேவனை எதிர்த்திருக்கலாம், எல்லோரும் சில சமயங்களில் தேவனுக்கு எதிராகக் கலகம் பண்ணியிருக்கலாம் என்று கூறலாம். இருப்பினும், நீ மனுஷரூபமெடுத்த தேவனுக்கு விருப்பத்துடன் கீழ்ப்படிந்தால், இந்தத் தருணத்திலிருந்து உன் விசுவாசத்தால் தேவனின் இருதயத்தைத் திருப்திப்படுத்தினால், நீ கடைப்பிடிக்க வேண்டிய சத்தியத்தைக் கடைப்பிடித்தால், உனது கடமைகளை நீ செய்யவேண்டியபடி செய்தால், நீ பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பின்பற்றினால், பின்னர் நீ தேவனைத் திருப்திப்படுத்த உனது கலகக் குணத்தைத் தூக்கி எறியத் தயாராக இருப்பாய், தேவனால் பரிபூரணப்படுத்தப்படுவாய். உனது தவறுகளைப் பார்க்க நீ பிடிவாதமாக மறுத்து, உனக்கு மனந்திரும்பும் எண்ணம் இல்லாதிருந்தால், தேவனுடன் ஒத்துழைத்து அவரைத் திருப்திப்படுத்தும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் உனது கலக நடத்தையில் நீ தொடர்ந்து இருந்தால், உன்னைப் போன்ற ஒரு பிடிவாதமான மற்றும் தவறான ஆள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவான், நிச்சயமாக ஒருபோதும் தேவனால் பூரணப்படுத்தப்பட மாட்டான். அப்படியானால், நீ இன்று தேவனின் எதிரியாக இருக்கிறாய் மற்றும் நாளை நீ தேவனின் எதிரியாக இருப்பாய், நாளை மறுநாளும் நீ தேவனின் எதிரியாகவே இருப்பாய்; நீ என்றென்றும் தேவனை எதிர்ப்பவனாகவும், தேவனின் எதிரியாகவும் இருப்பாய். அவ்வாறான நிலையில், தேவன் உன்னை விடுவிப்பது எப்படிச் சாத்தியமாகும்? தேவனை எதிர்ப்பது மனுஷனின் இயல்பு, ஆனால் மனுஷன் தனது இயல்பை மாற்றுவது சமாளிக்க முடியாத பணியாக இருப்பதால் தேவனை எதிர்ப்பதற்கான “இரகசியத்தை” வேண்டுமென்றே தேடக்கூடாது. அது தான் சூழ்நிலை என்றால், மிகவும் தாமதமாவதற்கு முன் நீ விலகிச் சென்றுவிடுவது நல்லது, உனது மாம்ச உடல் இறுதியில் முடிக்கப்படும் வரை எதிர்காலத்தில் உனது தண்டனை மிகவும் கடுமையாவதைத் தடுத்திடு, உனது மிருகத்தனமான இயல்பு வெடித்து, கட்டுப்படுத்த முடியாமல் போவதைத் தடுத்திடு. ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக நீ தேவனை விசுவாசிக்கிறாய்; ஆனால் முடிவில் உனக்குத் துரதிர்ஷ்டம் ஏற்பட்டால், அது அவமானமாக இருக்காதா? நீங்கள் வேறொரு திட்டமிடுவது நல்லது என்று உங்களை வலியுறுத்துகிறேன். நீங்கள் செய்யக்கூடிய எதுவும் தேவனை விசுவாசிப்பதைவிட நல்லதாக இருக்கும்: நிச்சயமாக இந்த ஒரு பாதை மட்டுமே இருக்க முடியாது. நீங்கள் சத்தியத்தைத் தேடவில்லை என்றால் நீங்கள் தொடர்ந்து பிழைக்க மாட்டீர்களா? இந்த வழியில் நீங்கள் ஏன் தேவனுடன் முரண்பட வேண்டும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறியாத ஜனங்கள் அனைவரும் தேவனை எதிர்க்கும் ஜனங்களாவர்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 295

நான் மனுஷர்களிடையே அதிகமான கிரியை செய்திருக்கிறேன், அந்த நேரத்தில் நான் பல வார்த்தைகளையும் வெளிப்படுத்தியுள்ளேன். இந்த வார்த்தைகள் அனைத்தும் மனுஷனை இரட்சிப்பதற்கு உரியவையாகும் மற்றும் அவை மனுஷன் எனக்கு இணக்கமாய் இருக்கக்கூடிய வகையில் வெளிப்படுத்தப்பட்டன. இருப்பினும், பூமியில் என்னுடன் இணக்கமாய் இருக்கும் ஒரு சிலரை மட்டுமே நான் ஆதாயப்படுத்தியுள்ளேன், எனவே மனுஷன் எனது வார்த்தைகளைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கவில்லை என்று நான் சொல்கிறேன்—மனுஷன் என்னுடன் இணக்கமாய் இல்லை என்பதே இதற்கு காரணமாகும். இவ்விதமாக, நான் மனுஷன் என்னைத் தொழுதுகொள்வதற்காக மட்டும் கிரியை புரிவதில்லை; மிக முக்கியமாக, மனுஷன் என்னுடன் இணக்கமாய் இருக்க முடியும் என்பதற்காகவே புரிகிறேன். மனுஷன் சீர்கெட்டு, சாத்தானின் வலையில் வாழ்கிறான். எல்லா ஜனங்களும் மாம்சத்தில் வாழ்கிறார்கள், சுயநல ஆசைகளுடன் வாழ்கிறார்கள், அவர்களில் எனக்கு இணக்கமாய் ஒருவரும் இல்லை. என்னுடன் இணக்கமாய் இருப்பதாகச் சொல்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அத்தகையவர்கள் அனைவரும் குழப்பமான விக்கிரகங்களை வணங்குகிறார்கள். அவர்கள் எனது பெயரை பரிசுத்தமானதாக ஒப்புக் கொண்டாலும், அவர்கள் எனக்கு முரணான ஒரு பாதையில் நடக்கிறார்கள், அவர்களுடைய வார்த்தைகள் ஆணவமும் தன்னம்பிக்கையும் நிறைந்ததாக உள்ளன. ஏனென்றால், அடிப்படையிலேயே, அவர்கள் அனைவரும் எனக்கு எதிரானவர்கள், எனக்கு இணக்கமாய் இராதவர்கள். ஒவ்வொரு நாளும், அவர்கள் வேதாகமத்தில் எனது அடிச்சுவடுகளை நாடுகிறார்கள், சீரற்ற முறையில் “பொருத்தமான” பத்திகளைக் கண்டுபிடித்து, அவர்கள் முடிவில்லாமல் வாசித்து, வேதங்களாக மனப்பாடம் செய்கிறார்கள். என்னுடன் எவ்வாறு இணக்கமாய் இருக்க வேண்டுமென்பதோ அல்லது எனக்கு எதிராக இருப்பதன் பொருள் என்ன என்பதோ அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வெறுமனே வேதத்தைக் கண்மூடித்தனமாக வாசிக்கிறார்கள். வேதாகமத்துக்குள், அவர்கள் இதுவரை கண்டிராத, அவர்களால் பார்க்க இயலாத ஒரு கற்பனை தேவனைக் கட்டுப்படுத்துகிறார்கள், மற்றும் அதனை ஓய்வு நேரத்தில் பார்ப்பதற்காக வெளியே எடுக்கிறார்கள். அவர்கள் நான் இருப்பதை வேதாகமத்தின் எல்லைக்குள் மட்டுமே விசுவாசிக்கிறார்கள், அவர்கள் என்னை வேதாகமத்துடன் ஒப்பிடுகிறார்கள்; வேதாகமம் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் வேதாகமம் இல்லை. அவர்கள் எனது பிரசன்னத்துக்கோ அல்லது கிரியைகளுக்கோ செவிசாய்ப்பதில்லை, மாறாக வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் தீவிரமான மற்றும் சிறப்பான கவனம் செலுத்துகிறார்கள். வேதத்தால் முன்னறிவிக்கப்பட்டிருந்தாலொழிய நான் செய்ய விரும்பும் எதையும் நான் செய்யக்கூடாது என்று இன்னும் பலர் நம்புகிறார்கள். அவர்கள் வேதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அளவிடுவதற்கும் என்னை நிந்திப்பதற்கும் அவர்கள் வேதாகமத்தின் வசனங்களைப் பயன்படுத்தும் அளவிற்கு, வார்த்தைகளையும் வெளிப்பாடுகளையும் மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள் என்று கூறலாம். அவர்கள் தேடுவது என்னுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியையோ அல்லது சத்தியத்திற்கு இணக்கமாய் இருப்பதற்கான வழியையோ அல்ல, ஆனால், வேதாகமத்தின் வார்த்தைகளுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியைத் தேடுகிறார்கள், மற்றும் அவர்கள் வேதாகமத்திற்கு இணங்காத எதையும் விதிவிலக்கு இல்லாமல், எனது கிரியை அல்ல என்று அவர்கள் நம்புகிறார்கள். அத்தகையவர்கள் பரிசேயர்களின் கடமைப்பட்ட சந்ததியினர் அல்லவா? யூத பரிசேயர்கள் இயேசுவைக் கண்டிக்க மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் அந்தக் கால இயேசுவோடு இணக்கத்தைத் தேடவில்லை, ஆனால் எழுத்துக்களுக்கான நியாயப்பிரமாணத்தை விடாமுயற்சியுடன் பின்பற்றினார்கள், பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றவில்லை என்றும் மேசியாவாக இல்லை என்றும் அவரைக் குற்றம் சாட்டும் அளவிற்குச் சென்று, அவர்கள் இறுதியில் குற்றமற்ற இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவர்களின் சாராம்சம் என்ன? அவர்கள் சத்தியத்துக்கு இணக்கமாய் இருக்கும் வழியைத் தேடவில்லை அல்லவா? எனது சித்தத்திற்கு அல்லது எனது கிரியையின் படிகள் மற்றும் வழிமுறைகளுக்குச் செவிசாய்க்கும்போது அவர்கள் வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் பற்று வைத்திருந்தனர். அவர்கள் சத்தியத்தை நாடிய ஜனங்கள் அல்ல, மாறாக வார்த்தைகளைத் திடமாகப் பற்றிக்கொண்ட ஜனங்கள்; அவர்கள் தேவனை விசுவாசிக்கும் ஜனங்கள் அல்ல, மாறாக வேதத்தை விசுவாசிப்பவர்கள். அடிப்படையில், அவர்கள் வேதத்தின் கண்காணிப்பாளர்கள். வேதாகமத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், வேதாகமத்தின் கெளரவத்தை நிலைநிறுத்துவதற்கும், வேதாகமத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் இரக்கமுள்ள இயேசுவைச் சிலுவையில் அறையும் அளவுக்குச் சென்றார்கள். வேதாகமத்தைப் பாதுகாப்பதற்காகவும், வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையின் நிலையையும் ஜனங்களின் இதயங்களில் பேணுவதற்காகவும் மட்டுமே அவர்கள் இவ்வாறு செய்தனர். ஆகவே, வேதத்தின் கோட்பாட்டிற்கு இணங்காத இயேசுவிற்கு மரண தண்டனையைக் கொடுப்பதற்காக அவர்கள் தங்கள் எதிர்காலத்தையும் பாவநிவாரணத்தையும் கைவிட விரும்பினர். அவர்கள் அனைவரும் வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையின் சேவகர்கள் இல்லையா?

இன்றைய ஜனங்கள் எவ்வாறு இருக்கின்றனர்? கிறிஸ்து சத்தியத்தை வெளிப்படுத்த வந்திருக்கிறார், ஆனாலும் அவர்கள் பரலோகத்திற்குள் நுழைந்து கிருபையைப் பெறக்கூடும் என்பதால் அவரை இந்த உலகத்திலிருந்து துரத்துவார்கள். வேதாகமத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் சத்தியத்தின் வருகையை முற்றிலுமாக மறுப்பார்கள், மேலும் வேதாகமத்தின் நித்திய இருப்பை உறுதி செய்வதற்காக, மாம்சத்திற்குத் திரும்பிய கிறிஸ்துவை மீண்டும் சிலுவையில் அறைவார்கள். மனுஷனின் இதயம் மிகவும் தீங்கிழைப்பதாகவும் மற்றும் அவனது இயல்பு என்னை நோக்கி மிகவும் விரோதமாகவும் இருக்கும்போது அவனால் எப்படி எனது இரட்சிப்பைப் பெற முடியும்? நான் மனுஷனிடையே வாழ்கிறேன், ஆனாலும் எனது பிரசன்னத்தை மனுஷன் அறியவில்லை. நான் மனுஷனின் மீது எனது ஒளியைப் பிரகாசிக்கச் செய்யும்போது, அவன் அப்போதும் எனது பிரசன்னத்தை அறியாமல் இருக்கிறான். நான் மனுஷனின் மீது எனது கோபத்தைக் கட்டவிழ்த்து விடும்போது, அவன் எனது பிரசன்னத்தை இன்னும் அதிக வீரியத்துடன் மறுக்கிறான். மனுஷன் வார்த்தைகளுக்கு இணக்கமாய் இருக்கும் தன்மையையும் வேதாகமத்திற்கு இணக்கமாய் இருக்கும் தன்மையையும் தேடுகிறான், ஆனாலும் சத்தியத்துக்கு இணக்கமாய் இருக்கும் வழியைத் தேட ஒருவர் கூட என் முன்னால் வருவதில்லை. மனுஷன் பரலோகத்தில் என்னைப் பார்க்கிறான், பரலோகத்தில் எனது பிரசன்னத்திற்குக் குறிப்பாக அக்கறை செலுத்துகிறான், ஆனாலும் மாம்சத்தில் இருக்கும் என்னைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் மனுஷர்களிடையே வாழும் நான் அதிக முக்கியத்துவம் இல்லாதவன். வேதாகமத்தின் வார்த்தைகளுடன் மட்டுமே இணக்கமாய் இருக்க நாடுகிறவர்கள் மற்றும் தெளிவற்ற தேவனுடன் மட்டுமே இணக்கமாய் இருக்க நாடுபவர்கள் எனது பார்வைக்கு மோசமானவர்கள். ஏனென்றால், அவர்கள் இறந்த வார்த்தைகளையும், சொல்லப்படாத பொக்கிஷங்களை அவர்களுக்கு வழங்கக்கூடிய தேவனையுமே ஆராதிக்கின்றனர்; அவர்கள் மனுஷனின் தயவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஓர் இல்லாத தேவனை ஆராதிக்கின்றனர். அப்படியானால், அத்தகையவர்கள் என்னிடமிருந்து என்ன பெற முடியும்? மனுஷன் வெறுமனே வார்த்தைகளுக்கு மிகவும் தாழ்ந்தவன். எனக்கு விரோதமாய் இருப்பவர்கள், என்னிடம் வரம்பற்ற கோரிக்கைகளை முன்வைப்பவர்கள், சத்தியத்தின் மீது அன்பு இல்லாதவர்கள், என்னை நோக்கிக் கலகம் செய்பவர்கள்—அவர்களால் என்னுடன் எவ்வாறு இணக்கமாய் இருக்க முடியும்?

எனக்கு எதிராக இருப்பவர்கள் எனக்கு இணக்கமாய் இராதவர்கள். சத்தியத்தை நேசிக்காதவர்களின் நிலையும் இதுதான். எனக்கு எதிராகக் கலகம் செய்பவர்கள் எனக்கு எதிராக இன்னும் அதிகமாகவும், எனக்கு இணக்கமாய் இல்லாமலும் இருக்கிறார்கள். என்னுடன் இணக்கமாய் இராத அனைவரையும் நான் தீமையின் கைகளில் ஒப்படைக்கிறேன், தீமையின் சீர்கேட்டுக்கு நான் அவர்களை விட்டுவிடுகிறேன், அவர்களின் குறைபாட்டை வெளிப்படுத்த அவர்களுக்கு இலவச உள்ளிந்திரியங்களைக் கொடுக்கிறேன், மற்றும் இறுதியில் அவர்களை விழுங்குவதற்காகத் தீமையிடம் ஒப்படைக்கிறேன். எத்தனை பேர் என்னைத் தொழுதுகொள்கிறார்கள் என்பதில் எனக்குக் கவலை இல்லை, அதாவது எத்தனை பேர் என்னை விசுவாசிக்கிறார்கள் என்பதில் எனக்குக் கவலை இல்லை. எத்தனை பேர் எனக்கு இணக்கமாய் இருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். ஏனென்றால், எனக்கு இணக்கமாய் இராதவர்கள் அனைவரும் என்னைக் காட்டிக்கொடுக்கும் தீயவர்கள்; அவர்கள் என் எதிரிகள், நான் என் வீட்டில் என் எதிரிகளைப் “பாதுகாக்க” மாட்டேன். என்னுடன் ஒத்துப்போகிறவர்கள் என் வீட்டில் என்றென்றும் எனக்கு ஊழியம் செய்வார்கள், எனக்கு விரோதமாக நடப்பவர்கள் என் தண்டனையை என்றென்றும் அனுபவிப்பார்கள். வேதாகமத்தின் வார்த்தைகளில் மட்டுமே அக்கறை கொண்டிருப்பவர்களும், சத்தியத்திலோ அல்லது எனது அடிச்சுவடுகளைத் தேடுவதிலோ அக்கறை காட்டாதவர்கள் எனக்கு எதிரானவர்கள், ஏனென்றால் அவர்கள் என்னை வேதாகமத்தின்படி மட்டுப்படுத்துகிறார்கள், என்னை வேதாகமத்திற்குள் கட்டுப்படுத்துகிறார்கள், அதனால் தீவிரமாக என்னை நோக்கி தூஷிக்கிறார்கள். அத்தகையவர்கள் எனக்கு முன்னால் எப்படி வருவார்கள்? அவர்கள் எனது கிரியைகளையோ, எனது சித்தத்தையோ, எனது சத்தியத்தையோ கவனிக்கவில்லை, மாறாக எழுத்துகளில், அதாவது கொல்லும் எழுத்துகளில் பற்று வைத்துள்ளனர். அத்தகையவர்கள் என்னுடன் எவ்வாறு இணக்கமாய் இருக்க முடியும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 296

இயேசு மாம்சமாகியிருக்கிறார் என்ற உண்மை வெளிவந்த பிறகு, பரலோகத்தில் பிதா மட்டுமல்ல, குமாரனும் ஆவியானவரும் கூட இருக்கின்றனர் என்பதை மனிதன் நம்பினான். பரலோகத்தில் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி என்ற திரித்துவ தேவன் போன்ற ஒரு தேவன் இருக்கிறார் என்று மனிதன் கொண்டிருக்கும் வழக்கமான கருத்து இதுதான். முழு மனுக்குலமும் இந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது: தேவன் ஒரே தேவன்தான், ஆனால் மூன்று அங்கங்களை வகிக்கிறார். வழக்கமான கருத்துக்களில் ஆழமாக வேரூன்றியுள்ள எல்லோருமே அவரை பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி என்று கருதுகின்றனர். அந்த மூன்று அங்கங்களும் ஒன்றாகி உருவாக்கிய ஒருவரே முழுமையான தேவனாக இருக்கிறார். பரிசுத்த பிதா இல்லாமல், தேவன் முழுமையானவராக இருக்க மாட்டார். அதேபோல, குமாரனோ பரிசுத்த ஆவியோ இல்லாமல் தேவன் முழுமையானவராக இருக்க மாட்டார். பிதாவையோ அல்லது குமாரனையோ தனியாக தேவனாகக் கருத முடியாது என்று அவர்கள் தங்களுடைய கருத்துக்களில் நம்புகின்றனர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோரைச் சேர்த்து மட்டுமே தேவனாகக் கருத முடியும். இப்போது, எல்லா மத நம்பிக்கையுள்ளவர்களும், உங்கள் மத்தியில் பின்பற்றுகிற ஒவ்வொருவரும் கூட இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும், இந்த நம்பிக்கை சரியானதா என்பதை யாரும் விளக்க முடியாது, ஏனென்றால் நீங்கள் எப்போதும் தேவனுடைய காரியங்களைப் பற்றிய குழப்பத்திலேயே ஆழ்ந்திருக்கிறீர்கள். இவை கருத்துக்களாக இருக்கின்றபோதிலும், இவை சரியானவையா அல்லது தவறானவையா என்று உங்களுக்குத் தெரியாது, ஏனென்றால் நீங்கள் மதக் கருத்துக்களால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றீர்கள். மதத்தைப் பற்றிய இந்த வழக்கமான கருத்துக்களை நீங்கள் மிகவும் ஆழமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றீர்கள். மேலும், இந்த விஷம் உங்களுக்குள் மிகவும் ஆழமாக ஊடுருவிச் சென்றுள்ளது. ஆகையால், நீங்கள் இந்த காரியத்திலும் பொல்லாங்கான ஆதிக்கத்திற்கு அடிபணிந்திருக்கிறீர்கள், ஏனென்றால் திரித்துவ தேவன் என்பவரே கிடையாது. அதாவது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற திரித்துவம் உண்மையிலேயே கிடையாது. இவை எல்லாம் மனிதனின் வழக்கமான கருத்துக்களும், மனிதனின் தவறான நம்பிக்கைகளும் ஆகும். பல நூற்றாண்டுகளாக, மனிதன் இந்தத் திரித்துவத்தை நம்பிக்கொண்டிருக்கின்றான். இது மனிதனின் மனதிலுள்ள கருத்துக்களால் உண்டாகியிருக்கின்றன. மனிதனால் பொய்யாக புனையப்பட்டிருக்கின்றன. இதை மனிதன் இதற்கு முன் பார்த்ததில்லை. இத்தனை ஆண்டுகளில், திரித்துவத்தின் “உண்மையான அர்த்தத்தை” விளக்கிக்கூறிய பல வேதாகம விளக்கவுரையாளர்கள் உள்ளனர், ஆனால் மூன்று தனித்துவமான ஒத்த ஆட்களான திரித்துவ தேவனைப் பற்றிய விளக்கங்கள் தெளிவற்றவையாக இருந்து வருகின்றன. மேலும் ஜனங்கள் எல்லோரும் தேவனுடைய “கட்டமைப்பால்” குழப்பமடைந்திருக்கின்றனர். எந்த ஒரு பெரிய மனிதனாலும் ஒரு முழுமையான விளக்கத்தை வழங்க முடியவில்லை. பெரும்பாலான விளக்கங்கள் பகுத்தறிவின் அடிப்படையிலும் காகிதத்தில் உள்ளவற்றின் அடிப்படையிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஆனால் ஒரு மனிதனுக்குக் கூட அதன் அர்த்தத்தைப் பற்றிய முழுமையான தெளிவானப் புரிதல் கிடையாது. ஏனென்றால், மனிதனின் இருதயத்தில் இடம்பிடித்துள்ள இந்தப் பெரிய திரித்துவம் உண்மையிலேயே கிடையாது. ஏனென்றால், தேவனுடைய உண்மையான முகத்தை இதுவரை ஒருவரும் கண்டதுமில்லை, தேவன் இருக்கும் இடத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்பதை ஆராய்வதற்காகவும், “தேவனுடைய வீட்டில்” எத்தனை பல்லாயிரக்கணக்கான அல்லது நூற்றுக்கணக்கான மில்லியன் தலைமுறைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறியவும் அல்லது தேவனுடைய இயல்பான கட்டமைப்பு எத்தனை அங்கங்களாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை ஆராய்ந்து பார்க்கவும் தேவனுடைய இருப்பிடத்திற்கு ஏறிச்செல்லுமளவிற்கு ஒருவரும் அதிர்ஷ்டசாலியும் இல்லை. முக்கியமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது என்னவென்றால் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோரின் காலமும், அவர்கள் ஒவ்வொரு நபருடைய தோற்றங்களும், அவர்கள் எப்படிப் பிரிந்தார்கள் மற்றும் அவர்கள் எப்படி ஒன்றானார்கள் என்பவையே ஆகும். துரதிர்ஷ்டவசமாக, இத்தனை ஆண்டுகளில், ஒரு மனிதனால் கூட இந்தக் காரியங்களின் உண்மையைக் கண்டறிய முடியவில்லை. அவர்கள் எல்லோரும் வெறுமனே அனுமானம் செய்கின்றார்கள், ஏனென்றால் திரித்துவத்தின் மீது ஆர்வமுள்ள மற்றும் பக்தியுள்ள மத நம்பிக்கையுள்ளவர்கள் எல்லோருக்கும் இந்த விஷயத்தைப் பற்றிய உண்மையைத் தெரிவிக்க ஒரு மனிதன் கூடப் பரலோகத்திற்கு ஏறிச்சென்று, முழு மனுக்குலத்திற்கான ஒரு “ஆய்வு அறிக்கையுடன்” திரும்பி வரவில்லை. நிச்சயமாகவே, இதுபோன்ற கருத்துக்களை உருவாக்கியதற்காக மனிதன் மீது பழி சுமத்த முடியாது, ஏனென்றால் பிதாவாகிய யேகோவா மனிதனைச் சிருஷ்டித்த போது குமாரனாகிய இயேசு அவருடன் இருக்கவில்லையா? ஆதியில் எல்லாமே யேகோவா என்று அழைக்கப்பட்டிருந்தால், அது நன்றாக இருந்திருக்கும். குற்றம் சுமத்தப்பட வேண்டுமானால், சிருஷ்டிப்பின் வேளையில் குமாரனையும் பரிசுத்த ஆவியையும் தமக்கு முன்பாக அழைக்காமல், தமது கிரியையை மட்டும் செய்த யேகோவா தேவனுடைய குறுகிய காலத்தின் மீதே சுமத்தப்படட்டும். அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் கிரியை செய்திருந்தால், அவர்கள் ஒருவராகியிருக்க மாட்டார்கள் அல்லவா? ஆதியிலிருந்து அந்தம் வரை, யேகோவா என்ற பெயர் மட்டுமே இருந்து, கிருபையின் காலத்திலிருந்த இயேசுவின் பெயர் அல்ல, அல்லது அவர் இன்னும் யேகோவா என்று அழைக்கப்பட்டிருந்தால், மனுக்குலத்தினால் உண்டான இந்தப் பிரிவின் துயரத்தை தேவன் மன்னித்திருக்க மாட்டாரா? உண்மையிலேயே, இதற்கெல்லாம் யேகோவாவை குற்றஞ்சாட்ட முடியாது. குற்றம் சுமத்தப்பட வேண்டுமென்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யேகோவா, இயேசு மற்றும் பரிசுத்த ஆவி ஆகியோரின் பெயரால் தனது கிரியையைத் தொடர்ந்து செய்த மற்றும் தேவன் யார் என்று மனிதனால் சரியாக அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு மனிதனைக் குழப்பி வைத்திருந்த பரிசுத்த ஆவியானவர் மீது சுமத்தப்படட்டும். உருவமோ அல்லது சாயலோ அல்லது இயேசு போன்ற ஒரு பெயரோ இல்லாமல் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்திருந்தால், மனிதனால் அவரைத் தொட்டிருக்கவோ அல்லது பார்த்திருக்கவோ முடியாமல், இடியோசைகளை மட்டுமே கேட்டிருந்தால், இந்த வகையான கிரியை மனுக்குலத்திற்கு அதிக நன்மையை விளைவித்திருக்காதா? அப்படியானால் இப்போது என்ன செய்ய முடியும்? மனிதனுடைய கருத்துக்கள் மலை போல உயரமாகவும், கடல் போல அகலமாகவும், இன்றைய தேவனால் இனிமேல் தாங்க முடியாத அளவிற்கும் மற்றும் குழப்பமடையும் அளவிற்கும் பெருமளவில் திரண்டுள்ளன. கடந்த காலங்களில், அது யேகோவா, இயேசு, பரிசுத்த ஆவியானவர் ஆகியோருக்கு இடையில் இருந்தபோதே, மனிதன் எவ்வாறு சமாளிப்பது என்று பெரும் குழப்பத்தில் இருந்தான், இப்போதோ தேவனுடைய அங்கமாக இருப்பதாக கூறப்படும் சர்வவல்லவரும் கூடுதலாக சேர்ந்திருக்கிறார். அவர் யார் மற்றும் திரித்துவத்தின் எந்த ஆள்தத்துவத்துடன் அவர் இத்தனை ஆண்டுகளாக ஒன்றாகக் கலந்துள்ளார் அல்லது மறைந்துள்ளார் என்று யாருக்குத் தெரியும்? மனிதனால் இதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? திரித்துவ தேவனைக் குறித்து மட்டுமே மனிதனுக்கு விளக்கிக்கூறவே ஒரு ஆயுட்காலம் தேவைப்பட்டது, ஆனால் இப்போதோ “நான்கு ஆள்தத்துவங்களில் ஒரு தேவன்” இருக்கிறார். இதை எவ்வாறு விளக்க முடியும்? உன்னால் அதை விளக்க முடியுமா? சகோதர சகோதரிகளே! இந்நாள் வரை நீங்கள் இத்தகைய தேவனை எப்படி விசுவாசித்திருந்தீர்கள்? நான் உங்களைப் பெரிதும் பாராட்டுகிறேன். திரித்துவ தேவன் ஏற்கனவே தாங்கிக்கொள்வதற்குப் போதுமானவராக இருந்தார். நான்கு ஆள்தத்துவங்களில் உள்ள இந்த ஒரு தேவன் மீது நீங்கள் எவ்வாறு தொடர்ந்து அசைக்க முடியாத விசுவாசத்தை வைக்க முடியும்? நீங்கள் வெளியேறுமாறு வற்புறுத்தப்படுகின்றீர்கள், ஆனாலும் நீங்கள் மறுக்கின்றீர்கள். எவ்வளவு கற்பனைக்கு எட்டாததாக இருக்கிறது! நீங்கள் உண்மையில் உயர்ந்தவர்கள்! ஒரு நபரால் உண்மையில் நான்கு தேவர்களை விசுவாசித்தும், அது குறித்து ஒன்றும் புரிந்துகொள்ளவில்லை என்றால், இது ஒரு அற்புதம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? உங்களைப் பார்த்தால், இப்படிப்பட்ட ஒரு பெரிய அற்புதத்தை உங்களால் செய்ய முடியும் என்று யாருக்கும் தெரியாது! உண்மையில், இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் திரித்துவ தேவனே கிடையாது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேவனுக்குப் பிதாவும் கிடையாது குமாரனும் கிடையாது, பிதாவும் குமாரனும் ஒன்றாகச் சேர்ந்து பரிசுத்த ஆவியானவரை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தும் கிடையாது. இவை எல்லாம் உலகிலுள்ள மிகப் பெரிய பொய், உண்மையில் எதுவும் கிடையாது! ஆனாலும், இத்தகைய ஒரு தவறான கருத்து தோன்றி, முற்றிலும் அடிப்படையின்றி காணப்படவில்லை, ஏனென்றால் உங்கள் உள்ளங்கள் மிகவும் எளிமையானவை அல்ல, உங்கள் எண்ணங்கள் காரணமின்றி உதிப்பதில்லை. மாறாக, இவை மிகவும் பொருத்தமானவையாகவும் சாமர்த்தியமானவையாகவும் இருக்கின்றன. இவை எந்த சாத்தானாலும் தகர்க்க முடியாதவையாக இருக்கின்றன. பரிதாபம் என்னவென்றால், இந்த எண்ணங்கள் அனைத்தும் தவறான கருத்துக்களாக இருக்கின்றன, மேலும் இவை உண்மையில் இல்லை! நீங்கள் உண்மையான சத்தியத்தைக் கண்டிருக்கவே இல்லை. நீங்கள் அனுமானங்களையும் கற்பனைகளையும் மட்டுமே செய்கிறீர்கள், அதன்பின்னர் வஞ்சகமாக மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவும், புத்தியோ அல்லது பகுத்தறிவோ இல்லாத மிகவும் முட்டாள்தனமான ஜனங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காகவும், இவை அனைத்தையும் ஒரு கதையாகப் புனைகின்றீர்கள், இதனால் அவர்கள் உங்கள் சிறந்த மற்றும் புகழ்பெற்ற “நிபுணத்துவமான போதனைகளை” நம்புகின்றனர். இதுதான் சத்தியமா? இதுதான் மனிதன் பெற வேண்டிய ஜீவவழியா? இது எல்லாமே முட்டாள்தனம்! ஒரு வார்த்தை கூட சரியானதல்ல! இத்தனை ஆண்டுகளில், உங்களால் தேவன் இவ்வாறு பிரிக்கப்பட்டிருக்கிறார், ஒரு தேவன் வெளிப்படையாக மூன்று தேவர்களாகப் பிரிக்கப்படுமளவிற்கு தலைமுறைதோறும் சிறிது சிறிதாக பிரிக்கப்பட்டு வருகிறார். இப்போது மனிதனால் தேவனை மீண்டும் ஒன்றாக இணைப்பது உண்மையில் கூடாத காரியமாக இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் அவரை மிகவும் சிறியவராகப் பிரித்திருக்கின்றீர்கள்! தாமதமாவதற்கு முன்பே நான் காலம் தாழ்த்தாமல் எனது கிரியையை செய்யவில்லை என்றால், நீங்கள் எவ்வளவு காலம் இவ்வாறு வெட்கக்கேடான வழியில் தொடர்வீர்கள் என்று சொல்வது கடினம்! இவ்விதமாக தேவனைத் தொடர்ந்து பிரிப்பீர்களேயானால் அவரால் எப்படி இன்னும் உங்கள் தேவனாக இருக்க முடியும்? நீங்கள் இன்னும் தேவனை உணர்ந்துகொள்வீர்களா? நீங்கள் இன்னும் உங்கள் பூர்வீகங்களைக் கண்டறிவீர்களா? நான் தாமதமாக வந்திருந்தால், நீங்கள் “பிதாவையும் குமாரனையும்,” யேகோவாவையும் இயேசுவையும் இஸ்ரவேலுக்குத் திருப்பி அனுப்பிவிட்டு, நீங்களே தேவனுடைய ஒரு அங்கமாக இருக்கிறீர்கள் என்று கூறுவதற்கு வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டவசமாக, இப்போது கடைசி நாட்களாக இருக்கிறது. இறுதியாக, நான் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் வந்துள்ளது. நான் என் கையால் இந்தக் கட்டக் கிரியையை செய்த பிறகே, நீங்கள் தேவனைப் பிரிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இது நடந்திருக்காவிட்டால், நீங்கள் எழுந்து, ஆராதனைக்கான பீடங்களின் மீது உங்களுக்கு மத்தியில் எல்லா சாத்தான்களையும் வைத்திருப்பீர்கள். இது உங்கள் வஞ்சனை! இது நீங்கள் தேவனைப் பிரிக்கும் வழிமுறை! நீங்கள் இப்போதும் இவ்வாறு தொடர்ந்து செய்வீர்களா? உங்களிடம் கேட்கிறேன்: எத்தனை தேவர்கள் இருக்கின்றார்கள்? எந்த தேவன் உங்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வருவார்? முதல் தேவனா, இரண்டாவது தேவனா அல்லது நீங்கள் எப்போதும் ஜெபத்தை ஏறெடுக்கும் மூன்றாவது தேவனா? நீங்கள் எப்போதும் யாரை நம்புகிறீர்கள்? பிதாவையா? அல்லது குமாரனையா? அல்லது ஆவியானவரையா? நீ யாரை நம்புகிறாய் என்று சொல். ஒவ்வொரு வார்த்தையிலும் நீங்கள் தேவனை நம்புவதாகச் சொன்னாலும், நீங்கள் உண்மையில் நம்புவது உங்கள் சொந்த மூளையைத்தான்! உங்கள் இருதயங்களில் நீங்கள் உண்மையில் தேவனைக் கொண்டிருக்கவில்லை! உங்கள் உள்ளங்களில் இன்னும் அத்தகைய “திரித்துவங்களே” ஏராளமாக உள்ளன! நீங்கள் சம்மதிக்கவில்லையா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “திரித்துவம் என்பது உண்டா?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 297

இந்தத் திரித்துவ கருத்துக்கு ஏற்ப மூன்று கட்டக் கிரியைகளும் மதிப்பிடப்பட்டால், ஒவ்வொருவரும் செய்யும் கிரியை ஒரே மாதிரியானது அல்ல என்பதால் மூன்று தேவர்கள் இருக்க வேண்டும். உங்களில் யாராவது திரித்துவம் உண்மையில் உண்டென்று கூறினால், மூன்று ஆள்தத்துவங்களில் உள்ள இந்த ஒரே தேவன் சரியாக யார் என்பதை விளக்குங்கள். பரிசுத்த பிதா என்றால் யார்? குமாரன் என்றால் யார்? பரிசுத்த ஆவியானவர் என்றால் யார்? யேகோவா தான் பரிசுத்த பிதாவா? இயேசு தான் குமாரனா? அப்படியானால் பரிசுத்த ஆவியானவர் யார்? பிதா ஆவியானவர் இல்லையா? குமாரனின் சாராம்சம் ஆவியானவர் இல்லையா? இயேசுவின் கிரியை பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இல்லையா? அந்த நேரத்தில் ஆவியானவரால் செய்யப்பட்ட யேகோவாவின் கிரியை இயேசு செய்தது மாதிரியானது இல்லையா? தேவன் எத்தனை ஆவியானவர்களைக் கொண்டிருக்க முடியும்? உங்கள் விளக்கத்தின்படி, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி மூவரும் ஒருவரே என்று வைத்துக் கொண்டால், மூன்று ஆவியானவர்கள் உள்ளனர், ஆனால் மூன்று ஆவியானவர்கள் இருக்கின்றார்கள் என்றால் மூன்று தேவர்கள் இருக்கின்றனர் என்று அர்த்தமாகும். ஒன்றான மெய்த்தேவன் என்று யாருமே இல்லை என்பதே இதன் அர்த்தமாகும். இந்த வகையான தேவன் எவ்வாறு இன்னும் தேவனுடைய இயல்பான சாராம்சத்தைக் கொண்டிருக்க முடியும்? ஒரே ஒரு தேவன் மட்டுமே உண்டு என்பதை நீ ஏற்றுக்கொண்டால், அவரால் எப்படி ஒரு மகனைப் பெற்று பிதாவாக இருக்க முடியும்? இவை அனைத்தும் உண்மையில் உன் கருத்துக்கள் அல்லவா? “ஒரே ஒரு பரிசுத்த ஆவியானவரும், ஒரே ஒரு தேவனும் மட்டுமே உள்ளனர்” என்று வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி, ஒரே ஒரு தேவனும், இந்த தேவனில் ஒரே ஒரு ஆள்தத்துவமும், ஒரே ஒரு தேவனுடைய ஆவியானவரும் உள்ளனர். நீ பேசும் பிதாவும் குமாரனும் இருக்கின்றார்களா என்பதைப் பொருட்படுத்தாமல், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரே ஒரு தேவன் மட்டுமே இருக்கின்றார். மேலும், நீங்கள் நம்பும் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் சாராம்சம் பரிசுத்த ஆவியின் சாராம்சமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் ஆவியானவராக இருக்கிறார், ஆனால் அவரால் மாம்சமாகி மனிதர்களிடையே வாழவும், எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கவும் முடியும். அவருடைய ஆவியானவர் எல்லாவற்றையும் உள்ளடக்கியவராகவும், எங்கும் நிறைந்தவராகவும் காணப்படுகிறார். அவரால் ஒரே நேரத்தில் மாம்சத்திலும் பிரபஞ்சத்திற்கு மேலேயும் இருக்க முடியும். தேவனே ஒன்றான மெய்த்தேவன் என்று எல்லா ஜனங்களும் சொல்வதனால், யாருடைய விருப்பப்படியும் பிரிக்க முடியாத ஒரே தேவன் மட்டுமே இருக்கிறார்! தேவன் ஒரே ஒரு ஆவியானவராகவும், ஒரே ஒரு ஆள்தத்துவமுள்ளவராகவும் இருக்கின்றார்; அவர்தான் தேவனுடைய ஆவியானவர் ஆவார். நீ சொல்வது போல பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோர் இருந்தால், அவர்கள் மூன்று தேவர்கள் அல்லவா? பரிசுத்த ஆவியானவர் ஒருவராகவும், குமாரன் மற்றொருவராகவும், பிதா இன்னொருவராகவும் இருக்கின்றனர். அவர்களுடைய ஆள்தத்துவங்கள் வேறுபட்டவர்கள், அவர்களுடைய சாராம்சங்கள் வேறுபட்டவை, அப்படியானால் அவர்கள் ஒவ்வொருவராலும் எப்படி ஒரே தேவனின் அங்கமாக இருக்க முடியும்? பரிசுத்த ஆவியானவர் ஆவியானவராக இருக்கிறார். இதைப் புரிந்துகொள்வது மனிதனுக்கு எளிதாகும். இது இவ்வாறு இருப்பதனால், பிதா ஆவியானவரைக் காட்டிலும் மேலானவராக இருக்கிறார். அவர் ஒருபோதும் பூமிக்கு இறங்கி வரவில்லை, ஒருபோதும் மாம்சமாக மாறவில்லை. அவர் மனிதனுடைய இருதயத்தில் யேகோவா தேவனாக இருக்கிறார், மேலும் அவர் நிச்சயமாகவே ஒரு ஆவியானவராகவும் இருக்கிறார். அவருக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இடையிலான உறவு என்ன? இது பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலுள்ள உறவா? அல்லது பரிசுத்த ஆவியானவருக்கும் பிதாவின் ஆவியானவருக்கும் இடையிலுள்ள உறவா? ஒவ்வொரு ஆவியானவரின் சாராம்சமும் ஒன்றா? அல்லது பரிசுத்த ஆவியானவர் பிதாவின் கருவியா? இதை எவ்வாறு விளக்க முடியும்? அப்படியானால் குமாரனுக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் இடையிலான தொடர்பு என்ன? இது இரண்டு ஆவியானவர்களுக்கும் இடையிலான உறவா அல்லது ஒரு மனிதனுக்கும் ஆவியானவருக்கும் இடையிலான உறவா? இவை அனைத்தும் எந்த விளக்கமும் இல்லாத காரியங்களாகும்! அவர்கள் அனைவரும் ஒரே ஆவியானவர் என்றால், மூன்று ஆள்தத்துவங்களைப் பற்றி பேச முடியாது, ஏனென்றால் அவர்கள் ஒரே ஆவியானவரைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தனித்தனியான ஆட்களாக இருந்தால், அவர்களுடைய ஆவியானவர்கள் வலிமையில் மாறுபடுவார்கள், அவர்களால் ஒரே ஒரு ஆவியானவராக இருக்க முடியாது. பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்ற இந்த கருத்து மிகவும் பொருத்தமற்றதாகும்! இது தேவனைப் பிரிக்கின்றது, ஒவ்வொருவரையும் ஒரு நிலைப்பாட்டுடனும் ஆவியானவருடனும் மூன்று நபர்களாகப் பிரிக்கின்றது. அப்படியானால் அவரால் எப்படி இன்னும் ஒரே ஆவியானவராகவும் ஒரே தேவனாகவும் இருக்க முடியும்? வானமும் பூமியும் அதிலுள்ளவை யாவும் பிதா, குமாரனால் அல்லது பரிசுத்த ஆவியானவரால் சிருஷ்டிக்கப்பட்டனவா என்று சொல்லுங்கள்? அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அனைத்தையும் சிருஷ்டித்ததாக சிலர் கூறுகின்றனர். அப்படியானால் மனுக்குலத்தை மீட்டவர் யார்? அதைச் செய்தது பரிசுத்த ஆவியானவரா, குமாரனா அல்லது பிதாவா? மனுக்குலத்தை மீட்டது குமாரன் தான் என்று சிலர் கூறுகின்றனர். அப்படியானால் உண்மையில் குமாரன் யார்? அவர் தேவனுடைய ஆவியானவரின் மாம்சமாகிய தேவன் இல்லையா? சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் கண்ணோட்டத்தில் மாம்சமாகிய தேவன் பரலோகத்திலுள்ள தேவனை பிதா என்ற பெயரில் அழைக்கிறார். இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டு பிறந்தார் என்பது உனக்குத் தெரியாதா? அவருக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். நீ என்ன சொன்னாலும், அவர் இன்னும் பரலோகத்திலுள்ள தேவனுடன் இருக்கிறார், ஏனென்றால் அவர் தேவனுடைய ஆவியானவரின் மாம்சமாகிய தேவனாவார். குமாரனைக் குறித்த இந்தக் கருத்து உண்மையில் பொய்யானதாகும். எல்லாக் கிரியைகளையும் செய்பவர் ஒரே ஆவியானவர்தான். தேவன் மாத்திரமே, அதாவது, தேவனுடைய ஆவியானவரே அவருடைய கிரியையைச் செய்கிறார். தேவனுடைய ஆவியானவர் யார்? அவர் பரிசுத்த ஆவியானவர் இல்லையா? அவர் இயேசுவில் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியானவர் இல்லையா? பரிசுத்த ஆவியானவரால் (அதாவது தேவனுடைய ஆவியானவரால்) கிரியை செய்யப்படவில்லை என்றால், அவருடைய கிரியை தேவனை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்க முடியுமா? இயேசு ஜெபம் செய்கையில் பரலோகத்திலிருக்கின்ற தேவனை பிதா என்று பெயர் சொல்லி அழைத்தபோது, இது சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் மட்டுமே செய்யப்பட்டது, ஏனென்றால் தேவனுடைய ஆவியானவர் ஒரு சாதாரண மற்றும் இயல்பான மாம்சத்தை அணிந்திருந்தார் மற்றும் ஒரு சிருஷ்டியின் வெளிப்புறத் தோற்றத்தைப் பெற்றிருந்தார். அவனுக்குள் தேவனுடைய ஆவியானவர் இருந்தாலும், அவருடைய வெளிப்புறத் தோற்றம் இன்னும் ஒரு சாதாரண மனிதனின் தோற்றமாகவே இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் “மனுஷகுமாரனாக” மாறியிருந்தார், இதைப் பற்றி இயேசு உட்பட எல்லா மனிதர்களும் பேசினார்கள். அவர் மனுஷகுமாரன் என்று அழைக்கப்படுவதால், அவர் ஒரு சாதாரண மனிதரின் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு நபராக (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், மனிதனின் வெளிப்புறத் தோற்றமுள்ளவராக) இருக்கிறார். ஆகையால், இயேசு பரலோகத்திலிருக்கின்ற தேவனைப் பிதா என்ற பெயரில் அழைத்தது, நீங்கள் முதலில் அவரைப் பிதா என்று அழைத்ததைப் போன்றதாகும். அவர் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் இவ்வாறு அழைக்கப்பட்டார். இயேசு நீங்கள் மனப்பாடம் செய்வதற்காக உங்களுக்குக் கற்பித்த கர்த்தருடைய ஜெபம் இன்னும் உங்களுக்கு நினைவிருக்கிறதா? “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே….” அவர் எல்லா மனிதர்களையும் பரமண்டலங்களிலிருக்கிற தேவனைப் பிதா என்ற பெயரில் அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் அவரை பிதா என்று அழைத்ததால், உங்கள் அனைவருடனும் சமமான நிலையில் நிற்கும் ஒருவரின் கண்ணோட்டத்தில் அவ்வாறு சொன்னார். பரலோகத்திலுள்ள தேவனை நீங்கள் பிதா என்ற பெயரில் அழைத்ததால், இயேசு உங்களுடன் சமமான நிலையில் இருப்பதையும், பூமியில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனிதனாக (அதாவது தேவனுடைய குமாரன்) இருப்பதையும் கண்டார். நீங்கள் தேவனைப் பிதா என்று அழைத்தால், நீங்கள் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் என்பதனால்தான் அல்லவா? சிலுவையில் அறையப்படுவதற்கு முன், இயேசுவின் அதிகாரம் பூமியில் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவர் பரிசுத்த ஆவியானவரால் (அதாவது தேவனால்) ஆளுகை செய்யப்பட்ட மனுஷகுமாரனாகவும், பூமியில் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களில் ஒருவராகவும் மட்டுமே இருந்தார், ஏனென்றால் அவர் இன்னும் தமது கிரியையை நிறைவு செய்யவில்லை. ஆகையால், பரலோகத்திலுள்ள தேவனை அவர் பிதா என்று அழைத்தது அவருடைய மனத்தாழ்மையையும் கீழ்ப்படிதலையும் மட்டுமே குறிக்கிறது. ஆனாலும், அவர் தேவனை (அதாவது, பரலோகத்திலுள்ள ஆவியானவரை) இவ்வாறு அழைப்பது, அவர் பரலோகத்திலுள்ள தேவனுடைய ஆவியானவரின் குமாரன் என்பதை நிரூபிக்கவில்லை. மாறாக, அவருடைய கண்ணோட்டம் மட்டுமே வேறுபட்டதாக இருந்ததே தவிர, அவர் வேறு நபராக இருக்கவில்லை. தனித்தனியான நபர்களாக இருக்கின்றனர் என்பது பொய்யாகும்! சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, இயேசு மாம்சத்தின் வரம்புக்கு உட்பட்ட மனுஷகுமாரனாக இருந்தார், அவர் ஆவியின் அதிகாரத்தை முழுமையாகக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான், சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனின் கண்ணோட்டத்தில் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை மட்டுமே அவரால் நாட முடிந்தது. இது அவர் கெத்செமனே என்னும் இடத்தில் மூன்று முறை ஜெபித்தது போலவே இருக்கிறது: “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, அவர் யூதர்களின் ராஜாவாக இருந்தார். அவர் கிறிஸ்துவாகவும், மனுஷகுமாரனாகவும் இருந்தார், மகிமையின் சரீரத்தில் அல்ல. அதனால்தான், சிருஷ்டிக்கப்பட்டவர் என்ற ஒரு நிலைப்பாட்டில் இருந்து, அவர் தேவனைப் பிதா என்று அழைத்தார். இப்போது, தேவனைப் பிதா என்று அழைக்கின்ற எல்லோரையும் குமாரன் என்று உன்னால் சொல்ல முடியாது. இது அப்படி இருந்திருந்தால், கர்த்தருடைய ஜெபத்தை இயேசு உங்களுக்குக் கற்பித்தவுடனே நீங்கள் எல்லோரும் குமாரனாகியிருக்க மாட்டீர்களா? நீங்கள் இன்னும் நம்பவில்லை என்றால், நீங்கள் பிதா என்று அழைப்பவர் யார் என்று சொல்லுங்கள்? நீங்கள் இயேசுவைக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், இயேசுவின் பிதா யார்? இயேசு சென்ற பிறகு, பிதா மற்றும் குமாரனைக் குறித்த இந்தக் கருத்து இல்லாமல் போய்விட்டது. இந்தக் கருத்து இயேசு மாம்சமாகிய போது இருந்த ஆண்டுகளுக்கு மட்டுமே பொருத்தமானது. மற்ற எல்லா சூழ்நிலைகளிலும், நீங்கள் தேவனைப் பிதா என்று அழைக்கும்போது சிருஷ்டிப்பின் கர்த்தருக்கும் சிருஷ்டிக்கப்பட்டவற்றுக்கும் இடையிலான உறவு ஒன்றாகும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற திரித்துவத்தின் இந்த கருத்து நிலைநிற்பதற்கு எந்த நேரமும் இல்லை. இது காலங்காலமாக அரிதாகவே காணப்படும் ஒரு பொய்யாகும். திரித்துவம் என்பதே கிடையாது!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “திரித்துவம் என்பது உண்டா?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 298

இது ஆதியாகமத்திலுள்ள தேவனுடைய வார்த்தைகளை பெரும்பாலானவர்களுக்கு நினைவூட்டலாம்: “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக” (ஆதியாகமம் 1:26). “நமது சாயலாக மனுஷனை உண்டாக்குவோமாக என்று தேவன் சொல்வதால்,” “நமது” என்பது இரண்டு அல்லது அதற்கு அதிகமானவர்களைக் குறிப்பிடுகிறது. அவர் “நமது” என்று சொன்னதால், ஒரே ஒரு தேவன் மட்டும் இல்லை. இதனால், மனிதன் தனித்தனி நபர்கள் என்ற அர்த்தத்தில் சிந்திக்க ஆரம்பித்தான். இந்த வார்த்தைகளிலிருந்து தான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற கருத்து எழுந்தது. பிதாவின் சாயல் என்ன? குமாரனின் சாயல் என்ன? பரிசுத்த ஆவியின் சாயல் என்ன? இன்றைய மனுக்குலம் மூன்றில் இருந்து ஒன்றாக இணைந்த ஒருவரின் சாயலில் உருவாக்கப்பட்டிருக்குமோ? அப்படியானால் மனிதனின் சாயல் பிதா, குமாரன் அல்லது பரிசுத்த ஆவியின் சாயலைப் போன்று இருக்கிறதா? தேவனுடைய ஆள்தத்துவங்களில் மனிதனின் சாயலில் இருப்பவர் யார்? மனிதனின் இந்தக் கருத்து உண்மையில் தவறானது மற்றும் முட்டாள்தனமானது! இதனால் ஒரு தேவனை பல தேவர்களாக மட்டுமே பிரிக்க முடியும். உலகத்தைச் சிருஷ்டித்ததைத் தொடர்ந்து மனுக்குலத்தைச் சிருஷ்டித்த பிறகே மோசே ஆதியாகமத்தை எழுதினான். ஆதியில் உலகம் தோன்றியபோது, மோசே இல்லை. மோசே வேதாகமத்தை எழுதியது அதற்கு வெகு காலத்திற்குப் பிறகுதான். ஆகையால், பரலோகத்திலுள்ள தேவன் பேசியது அவனுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? தேவன் உலகை எவ்வாறு சிருஷ்டித்தார் என்பதற்கான ஒரு குறிப்பும் அவனிடம் இல்லை. வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஒரே மெய்த்தேவன் யேகோவா மட்டுமே இஸ்ரவேலில் தமது கிரியையைச் செய்தார். காலம் மாறும்போது அவர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார், ஆனால் ஒவ்வொரு பெயரும் வெவ்வேறு நபரைக் குறிக்கிறது என்பதை இது நிரூபிக்க முடியாது. இது இப்படி இருப்பதனால், தேவனில் எண்ணற்ற நபர்கள் இருக்க மாட்டார்கள் அல்லவா? பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டிருப்பது என்னவென்றால், நியாயப்பிரமாண காலத்தில் ஆரம்பிப்பதற்காக தேவனின் ஒரு கட்டக் கிரியையான யேகோவாவின் கிரியையாகும். இது தேவனுடைய கிரியையாக இருந்தது. அவர் பேசியது போலவே அது இருந்தது. அவர் கட்டளையிட்டபடியே அது நின்றது. யேகோவா எந்த நேரத்திலும் தாம் கிரியை செய்ய வந்த பிதா என்று சொல்லவும் இல்லை, மனுக்குலத்தை மீட்க வந்த குமாரன் என்றும் அவர் ஒருபோதும் தீர்க்கதரிசனம் உரைத்ததில்லை. இயேசுவின் காலத்திற்கு வரும்போது, சகல மனுக்குலத்தையும் மீட்க தேவன் மாம்சமாகினார் என்று மட்டுமே கூறப்பட்டது, ஆனால் வந்தவர் குமாரன் என்று கூறப்படவில்லை. காலங்கள் ஒன்றுபோல இருப்பதில்லை என்பதாலும், தேவன் செய்யும் கிரியையே வேறுபடுவதனால், அவர் தமது கிரியையை வெவ்வேறு பகுதிகளுக்குள் செய்ய வேண்டும். இதனால், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளமும் வேறுபடுகிறது. யேகோவா இயேசுவின் பிதா என்று மனிதன் நம்புகிறான், ஆனால் இது உண்மையில் இயேசுவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இயேசு சொன்னார்: “நாங்கள் பிதா, குமாரன் என்று ஒருபோதும் வேறுபடுத்தப்படவில்லை; நானும் பரலோகத்திலுள்ள பிதாவும் ஒருவரே. பிதா என்னிலும் நான் பிதாவிலும் இருக்கிறேன்; மனிதர் குமாரனைப் பார்க்கும்போது, அவர்கள் பரலோக பிதாவையே பார்க்கிறார்கள்.” எல்லாவற்றையும் பரிசீலித்துப் பார்க்கும்போது, பிதாவாக இருந்தாலும், குமாரனாக இருந்தாலும், அவர்கள் ஒரே ஆவியானவராக இருக்கின்றார்கள், தனி நபர்களாகப் பிரிக்கப்படுவதில்லை. மனிதன் இதை விளக்க முயற்சிக்கும்போது, தனித்தனி ஆள்தத்துவங்கள் என்ற கருத்து மற்றும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகியோருக்கு இடையிலான உறவு ஆகியவற்றினால் காரியங்கள் சிக்கலாகியுள்ளன. மனிதன் தனித்தனி ஆள்தத்துவங்களைப் பற்றி பேசும்போது, இது தேவனைப்பொருளாக்காதா? மனிதன் ஆள்தத்துவங்களை முதலாமவர், இரண்டாவது நபர் மற்றும் மூன்றாவது நபர் என்றும் வரிசைப்படுத்துகிறான். இவை அனைத்தும் மனிதனின் கற்பனைகளே தவிர, இவை அர்த்தமுள்ளவையும் அல்ல, முற்றிலும் நம்பத்தகுந்தவையும் அல்ல! நீ அவரிடம், “எத்தனை தேவர்கள் இருக்கிறார்கள்?” என்று கேட்டால், தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் திரித்துவமான ஒரே மெய்த்தேவனாக இருக்கிறார் என்று அவர் கூறுவார். நீ மேலும் அவரிடம், “பிதா யார்?” என்று கேட்டால், “பிதா பரலோகத்திலுள்ள தேவனுடைய ஆவியானவர் என்றும், அவர் அனைவருக்கும் பொறுப்பானவர், பரலோகத்தின் எஜமானர்” என்று அவர் கூறுவார். “அப்படியானால் யேகோவா ஆவியானவரா?” அவர், “ஆம்!” என்று கூறுவார். நீ அவரிடம், “குமாரன் யார்?” என்று கேட்டால், நிச்சயமாகவே, இயேசு தான் குமாரன் என்று அவர் கூறுவார். “அப்படியானால் இயேசுவின் கதை என்ன? அவர் எங்கிருந்து வந்தார்?” “இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டு மரியாளிடம் பிறந்தார்” என்று கூறுவார் அப்படியானால் அவருடைய சாராம்சம் ஆவியானவர் இல்லையா? அவருடைய கிரியை பரிசுத்த ஆவியின் பிரதிநிதித்துவம் இல்லையா? யேகோவாதான் ஆவியானவர், இயேசுவின் சாராம்சமும் அவர்தான். இப்போதும் கடைசி நாட்களில், ஆவியானவர்தான் இன்னும் இருக்கிறார் என்று சொல்ல வேண்டிய அவசியம் அதிகமில்லை என்றிருக்கும்போது, அவர்களால் எப்படி வெவ்வேறு நபர்களாக இருக்க முடியும்? தேவனுடைய ஆவியானவரே ஆவியானவரின் கிரியையை வெவ்வேறு கண்ணோட்டங்களில் இருந்து செய்யவில்லையா? இவ்வாறு, ஆள்தத்துவங்களுக்கு இடையில் வேறுபாடு கிடையாது. இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார், மேலும் சந்தேகத்திற்கு இடமின்றி, அவருடைய கிரியையானது துல்லியமாக பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருக்கிறது. யேகோவா செய்த முதல் கட்டக் கிரியையில், அவர் மாம்சமாகவும் மாறவில்லை, மனிதனிடத்தில் தோன்றவும் இல்லை. ஆகையால் மனிதன் அவர் தோன்றியதை ஒருபோதும் பார்த்ததில்லை. அவர் எவ்வளவு பெரியவராகவும், எவ்வளவு உயரமானவராகவும் இருந்தாலும், அவரே இன்னும் ஆவியானவராக இருந்தார், தேவன்தாமே மனிதனை ஆதியிலே சிருஷ்டித்தார். அதாவது, அவர்தான் தேவனுடைய ஆவியானவராக இருந்தார். அவர் மேகங்களுடனே இருந்து மனிதனிடம் பேசினார், அவர் ஆவியானவராக மாத்திரமே இருந்தார், மேலும் அவருடைய தோற்றத்தை யாரும் கண்டதில்லை. கிருபையின் காலத்தில், தேவனுடைய ஆவியானவர் மாம்சத்தில் வந்து யூதேயாவில் அவதரித்தபோது, ஒரு யூதனாக மனிதன் மாம்சமான தேவனின் சாயலை முதன்முதலாகப் பார்த்தான். யேகோவாவைப் பற்றிய எதுவும் இருக்கவில்லை. ஆயினும், அவர் பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டார், அதாவது யேகோவாவின் ஆவியானவரால் கருத்தரிக்கப்பட்டார். இயேசு இன்னும் தேவனுடைய ஆவியானவரின் சாயலாகவே பிறந்தார். பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல் இயேசுவின் மேல் இறங்கியதைத் தான் மனிதன் முதலில் பார்த்தான். அது இயேசுவுக்கான பிரத்யேகமான ஆவியானவர் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியானவராக இருந்தார். அப்படியானால் இயேசுவின் ஆவியானவரைப் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பிரிக்க முடியுமா? குமாரனாகிய இயேசு இயேசுவாகவும், பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த ஆவியானவராகவும் இருந்தால், அவர்களால் எப்படி ஒருவராக இருக்க முடியும்? அவ்வாறு இருந்தால் கிரியையை செய்ய முடியாமல் போயிருக்கும். இயேசுவுக்குள் இருக்கும் ஆவியானவர், பரலோகத்திலுள்ள ஆவியானவர், யேகோவாவின் ஆவியானவர் எல்லோருமே ஒருவர்தான். அவர் பரிசுத்த ஆவியானவர் என்றும், தேவனுடைய ஆவியானவர் என்றும், ஏழு மடங்கு தீவிரமான ஆவியானவர் என்றும் மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஆவியானவர் என்றும் அழைக்கப்படுகிறார். தேவனுடைய ஆவியானவரால் அதிகமான கிரியைகளைச் செய்ய முடியும். அவரால் உலகத்தைச் சிருஷ்டிக்கவும், பூமியை ஜலப்பிரளயத்தால் அழிக்கவும் முடியும். அவரால் முழு மனுக்குலத்தையும் மீட்கவும் முடியும், முழு மனுக்குலத்தையும் ஜெயங்கொண்டு அழிக்கவும் முடியும். இந்தக் கிரியைகள் அனைத்தும் தேவனாலேயே செய்யப்படுகின்றன, அவருக்குப் பதிலாக தேவனுடைய ஆள்தத்துவங்களான யாராலும் செய்ய முடியாது. அவருடைய ஆவியானவரை யேகோவா, இயேசு மற்றும் சர்வவல்லவர் என்ற பெயர்களிலும் அழைக்கலாம். கர்த்தரும், கிறிஸ்துவும் அவரே. அவரால் மனுஷகுமாரனாகவும் முடியும். அவர் வானத்திலும் பூமியிலும் வாசம்பண்ணுகிறார். அவர் பிரபஞ்சங்களுக்கு மேலேயும், திரளான ஜனங்களுக்கு நடுவேயும் வாசம்பண்ணுகிறார். வானத்திற்கும் பூமிக்கும் அவர் ஒருவரே எஜமானர்! சிருஷ்டிப்பின் காலம் முதல் இப்போது வரை, இந்த கிரியையானது தேவனுடைய ஆவியானவரால் செய்யப்பட்டு வருகிறது. வானத்திலுள்ள கிரியையாக இருக்கட்டும் அல்லது மாம்சத்திலுள்ள கிரியையாக இருக்கட்டும், இவை அனைத்தும் அவருடைய சொந்த ஆவியானவராலேயே செய்யப்படுகின்றன. வானத்திலிருந்தாலும் அல்லது பூமியிலிருந்தாலும், சகல ஜீவராசிகளும் அவருடைய சர்வவல்லமையுள்ள உள்ளங்கையிலே உள்ளன. இவை எல்லாமே தேவனுடைய கிரியையாகும், அவருக்குப் பதிலாக வேறு ஒருவராலும் செய்ய இயலாது. வானங்களில், அவர் ஆவியானவராகவும், அதேவேளையில் தேவனாகவும் இருக்கிறார். மனிதர்களிடையே அவர் மாம்சமாகவும், அதேவேளையில் தேவனாகவும் இருக்கிறார். அவர் இலட்சக்கணக்கான பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அவர் இன்னும் அவராக இருக்கிறார், அவருடைய ஆவியானவரின் நேரடி வெளிப்பாடாகவும் இருக்கிறார். அவர் சிலுவையில் அறையப்பட்டதன் மூலமாக சகல மனுக்குலத்திற்குமான மீட்பு அவருடைய ஆவியானவரின் நேரடி கிரியையாகும், அதேபோல் இது கடைசி நாட்களில் எல்லா தேசங்களிலும், எல்லா நாடுகளிலும் அறிவிக்கப்படுகிறது. எல்லா நேரங்களிலும், தேவனை சர்வவல்லவர் என்றும், ஒரே மெய்த்தேவன் என்றும், சகலத்தையும் உள்ளடக்கிய தேவன் என்றும் மட்டுமே அழைக்க முடியும். தனித்தனி ஆள்தத்துவங்களும் கிடையாது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற இந்த கருத்தும் கிடையாது. வானத்திலும் பூமியிலும் ஒரே ஒரு தேவன் தான் வாசம்பண்ணுகிறார்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “திரித்துவம் என்பது உண்டா?” என்பதிலிருந்து

தேவனுடைய அனுதின வார்த்தைகள்  பகுதி 299

தேவனுடைய நிர்வாகத் திட்டம் ஆறாயிரம் ஆண்டுகள் நீடிக்கும், இது அவருடைய கிரியையின் வேறுபாடுகளின் அடிப்படையில் மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: முதல் காலம் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாண காலமாகும். இரண்டாவது கிருபையின் காலமாகும். மூன்றாவது கடைசி நாட்களினுடைய ராஜ்யத்தின் காலமாகும். ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு அடையாளம் குறிப்பிடப்படுகிறது. கிரியையிலுள்ள வேறுபாடே இதற்குக் காரணமாகும், அதாவது கிரியையின் தேவைகளே காரணமாகும். முதல் கட்டக் கிரியையானது நியாயப்பிரமாணத்தின் காலத்தில் இஸ்ரவேலில் செய்யப்பட்டது. மீட்பின் கிரியையை முடிக்கும் இரண்டாம் கட்டக் கிரியையானது யூதேயாவில் செய்யப்பட்டது. மீட்பின் கிரியைக்காக, இயேசு பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்பட்டு, ஒரே குமாரனாகப் பிறந்தார். இவை அனைத்துக்கும் கிரியையின் தேவைகளே காரணமாக இருந்தன. கடைசி நாட்களில், தேவன் தம்முடைய கிரியையை புறஜாதியினரிடத்திற்கு விரிவுபடுத்தி, அங்குள்ள ஜனங்களை ஜெயங்கொள்ள விரும்புகிறார், இதனால் அவருடைய பெயர் அவர்கள் நடுவே மகத்தானதாக இருக்கும். மனிதன் சகல சத்தியங்களையும் புரிந்துகொள்ளவும், அதற்குள் பிரவேசிக்கவும் அவனை வழிநடத்த அவர் விரும்புகிறார். இந்த கிரியைகள் அனைத்தும் ஒரே ஆவியானவரால் செய்யப்படுகின்றன. அவர் வெவ்வேறு நிலைப்பாடுகளிலிருந்து அவ்வாறு செய்தாலும், கிரியையின் தன்மையும் கொள்கைகளும் மாறாமலே இருக்கின்றன. அவர்கள் செய்த கிரியையின் கொள்கைகளையும் தன்மையையும் நீ கவனித்தால், அது அனைத்தும் ஒரே ஆவியானவரால் செய்யப்படுகிறது என்பதை அறிந்துகொள்வாய். இன்னும் சிலர் கூறலாம்: “பிதா பிதாவாகவே இருக்கிறார்; குமாரன் குமாரனாகவே இருக்கிறார்; பரிசுத்த ஆவியானவர் பரிசுத்த ஆவியானவராகவே இருக்கிறார், இறுதியில் அவர்கள் ஒருவராவார்கள்.” அப்படியானால் நீ எவ்வாறு அவர்களை ஒன்றாக உருவாக்க வேண்டும்? பிதாவையும் பரிசுத்த ஆவியானவரையும் எவ்வாறு ஒருவராக்க முடியும்? அவர்கள் இயல்பாகவே இருவராக இருந்தால், அவர்கள் எவ்வாறு ஒன்றாக இணைந்திருந்தாலும், அவர்கள் இரண்டு அங்கங்களாக இருந்திருக்க மாட்டார்களா? அவர்களை ஒன்றாக்குவது குறித்து நீ பேசும்போது, ஒரு முழுமையானதாக்க இரண்டு தனித்தனி அங்கங்களை வெறுமனே இணைப்பதாக இருக்காதா? ஆனால் அவர்கள் முழுமையாக்கப்படுவதற்கு முன்பு இரண்டு அங்கங்கள் இல்லையா? ஒவ்வொரு ஆவியானவரிடமும் ஒரு தனிப்பட்ட சாராம்சம் உள்ளது. மேலும், இரண்டு ஆவியானவர்களையும் ஒரே ஒருவராக உருவாக்க முடியாது. ஆவியானவர் ஒரு பொருள் அல்ல, பொருள் உலகிலுள்ள எதையும் போல் இல்லாதவர். மனிதன் அதைப் பார்க்கும்போது, பிதா ஒரு ஆவியானவராக இருக்கிறார், குமாரன் மற்றொருவராக இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர் இன்னொருவராக இருக்கிறார், அதன்பிறகு மூன்று ஆவியானவர்களும் மூன்று டம்ளர் தண்ணீரைப் போல ஒன்றாக கலக்கப்பட்டு, ஒரே முழுமையானவராகின்றனர். அப்படியானால் மூவரும் ஒருவராக உருவாக்கப்படுவதில்லையா? இது முற்றிலும் தவறான மற்றும் முட்டாள்தனமான விளக்கமாகும்! இது தேவனைப் பிரிப்பதில்லையா? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோர் எல்லோரையும் எப்படி ஒருவராக்க முடியும்? அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்ட மூன்று அங்கங்கள் அல்லவா? “இயேசு என்னுடைய நேசகுமாரன் என்று தேவன் வெளிப்படையாகக் கூறவில்லையா?” என்று மற்றவர்கள் சொல்கின்றனர். இயேசு என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்பது நிச்சயமாக தேவனால் கூறப்பட்டதுதான். தேவன் தமக்குத்தாமே சாட்சி கொடுத்தார், ஆனால் வேறுபட்ட கண்ணோட்டத்திலிருந்து மட்டுமே, பரலோகத்திலுள்ள ஆவியானவராக தமது சொந்த மனுஷ அவதரிப்புக்கு சாட்சி கொடுத்தார். இயேசு அவருடைய மனுஷ அவதரிப்பாவார், பரலோகத்திலுள்ள அவருடைய குமாரன் அல்ல. உனக்குப் புரிகிறதா? “நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறார்,” என்ற இயேசுவின் வார்த்தைகள் அவர்கள் ஒரே ஆவியானவராக இருக்கின்றனர் என்பதைக் குறிப்பிடவில்லையா? மனுஷ அவதரிப்பின் காரணமாக அவர்கள் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் பிரிக்கப்பட்டார்கள் அல்லவா? உண்மையில், அவர்கள் இன்னும் ஒருவராகவே இருக்கின்றனர். எதுவாக இருந்தாலும், தேவன் தமக்குத்தாமே சாட்சி கொடுக்கிறார். காலங்களின் மாற்றத்தின் காரணமாக, கிரியையின் தேவைகள் மற்றும் அவருடைய நிர்வாகத் திட்டத்தின் வெவ்வேறு கட்டங்களின் காரணமாக, மனிதன் அவரை அழைக்கும் பெயரும் வேறுபடுகிறது. அவர் முதல் கட்டக் கிரியையைச் செய்ய வந்தபோது, அவரை இஸ்ரவேலரின் மேய்ப்பராகிய யேகோவா என்று மட்டுமே அழைக்க முடிந்தது. இரண்டாவது கட்டத்தில், மாம்சமாகிய தேவனை, கர்த்தர் மற்றும் கிறிஸ்து என்று மட்டுமே அழைக்க முடிந்தது. ஆனால் அந்த நேரத்தில், பரலோகத்திலுள்ள ஆவியானவரே இவரே என்னுடைய நேசகுமாரன் என்று கூறினார், இவர் தேவனுடைய ஒரே குமாரன் என்று கூறவில்லை. இது உண்மையில் நடக்கவில்லை. தேவனுக்கு எப்படி ஒரே குழந்தை இருக்க முடியும்? அப்படியானால் தேவன் மனிதனாக மாறியிருக்க மாட்டாரா? அவர் மனுஷ அவதரிப்பு என்பதால், அவர் தேவனுடைய நேசகுமாரன் என்று அழைக்கப்பட்டார். இதிலிருந்தே, பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலான உறவு வந்தது. இது உண்மையில் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான பிரிவின் காரணமாக ஏற்பட்டது. இயேசு மாம்சத்தின் கண்ணோட்டத்தில் ஜெபம் பண்ணினார். அவர் சாதாரண மனிதனின் மாம்சத்தைத் தரித்திருந்ததால், அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்தில் இவ்வாறு சொன்னார்: “எனது வெளிப்புறத் தோற்றம் ஒரு சிருஷ்டியினுடையதாக இருக்கிறது. இந்தப் பூமிக்கு வருவதற்காக நான் ஒரு மாம்சத்தைத் தரித்திருந்ததால், நான் இப்போது பரலோகத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறேன்.” இந்தக் காரணத்திற்காகவே, அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்தில் பிதாவாகிய தேவனிடம் மட்டுமே ஜெபிக்க முடிந்தது. இது அவருடைய கடமையாக இருந்தது. மேலும், அதுவே மாம்சமாகிய தேவனுடைய ஆவியானவர் கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. அவர் மாம்சத்தின் கண்ணோட்டத்தில் பிதாவிடம் ஜெபித்ததனால், அவரை தேவன் இல்லை என்று சொல்ல முடியாது. அவர் தேவனுடைய நேசகுமாரன் என்று அழைக்கப்பட்ட போதிலும், அவர் இன்னும் தேவனாகவே இருந்தார், ஏனென்றால் அவர் ஆவியானவரின் மாம்சமானவராக மட்டுமே இருந்தார், மேலும் அவருடைய சாராம்சம் இன்னும் ஆவியானவராகவே இருந்தது. அவரே தேவனாக இருந்தால், அவர் ஏன் ஜெபம் செய்தார் என்று ஜனங்கள் நினைக்கின்றனர். ஏனென்றால், அவர் மாம்சமாகிய தேவனாக இருந்தார், மாம்சத்திற்குள் வாழும் தேவனாக இருந்தாரே தவிர, பரலோகத்திலுள்ள ஆவியானவராக அல்ல. மனிதன் அதைப் பார்க்கும்போது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி எல்லோருமே தேவனாகவே இருக்கின்றார்கள். மூவரும் ஒருவராக உருவாக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவரை ஒரே மெய்த்தேவனாகக் கருத முடியும். இதனாலேயே, அவருடைய வல்லமை மிகவும் பெரியதாக இருக்கிறது. இதனாலேயே, அவர் ஏழு மடங்கு தீவிரமான ஆவியானவர் என்று கூறுபவர்களும் இருக்கின்றனர். குமாரன் வந்து ஜெபம் செய்தபோது, அந்த ஆவியானவருக்கே அவர் ஜெபத்தை ஏறெடுத்தார். உண்மையில், அவர் ஒரு சிருஷ்டியின் கண்ணோட்டத்தில் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். மாம்சம் முழுமையானதாக இல்லை என்பதால், அவர் முழுமையாக இல்லை, அவர் மாம்சத்திற்குள் வந்தபோது பல பெலவீனங்களைக் கொண்டிருந்தார். அவர் மாம்சத்தில் தமது கிரியையைச் செய்ததால் அவர் மிகவும் கலக்கமுற்றார். அதனால்தான் அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு பிதாவாகிய தேவனிடம் மூன்று முறை ஜெபம்பண்ணினார், அதேபோல் அதற்கு முன்பும் பல முறை ஜெபம்பண்ணினார். அவர் தம்முடைய சீஷர்களுடன் ஜெபம்பண்ணினார். அவர் மலை மீது தனியாக ஜெபம்பண்ணினார். அவர் மீன்பிடி படகில் ஜெபம்பண்ணினார். அவர் திரளான ஜனங்கள் மத்தியில் ஜெபம்பண்ணினார். அப்பத்தைப் பிட்கும்போது ஜெபம்பண்ணினார். அவர் மற்றவர்களை ஆசீர்வதிக்கும்போது ஜெபம்பண்ணினார். அவர் ஏன் அவ்வாறு ஜெபம்பண்ணினார்? அவர் ஆவியானவரிடமே ஜெபம்பண்ணினார். மாம்சத்தின் கண்ணோட்டத்தில் அவர் ஆவியானவரிடமும், பரலோகத்திலுள்ள ஆவியானவரிடமும் ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார். ஆகையால், மனிதனுடைய கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது, இயேசு அந்தக் கட்ட கிரியையில் குமாரனானார். ஆனாலும், இந்தக் கட்டத்தில், அவர் ஜெபம்பண்ணுவதில்லை. அது ஏன்? ஏனென்றால், அவர் வெளிப்படுத்துவது வார்த்தையின் கிரியையாகும் மற்றும் வார்த்தையின் நியாயத்தீர்ப்பும் சிட்சிப்புமாகும். அவருக்கு ஜெபங்கள் தேவையில்லை, பேசுவதே அவருடைய ஊழியமாகும். அவர் சிலுவையில் அறையப்படுவதில்லை. மேலும், அவர் மனிதனால் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. அவர் தமது கிரியையை மட்டுமே செய்கிறார். இயேசு ஜெபம் பண்ணிய வேளையில், பரலோக ராஜ்யம் இறங்கி வருவதற்காகவும், பிதாவின் சித்தம் செய்யப்படுவதற்காகவும், வரவிருக்கும் கிரியைக்காகவும் பிதாவாகிய தேவனிடம் ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தார். இந்தக் கட்டத்தில், பரலோகராஜ்யம் ஏற்கனவே இறங்கி வந்து விட்டது, அப்படியானால் அவர் இன்னும் ஜெபம் பண்ண வேண்டுமா? காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே அவருடைய கிரியையாகும். மேலும் புதிய காலங்கள் இனிமேல் கிடையாது, அப்படியானால், அடுத்தக் கட்டத்திற்கு ஜெபம் பண்ண வேண்டிய அவசியமுள்ளதா? இல்லை என்று நான் நினைக்கிறேன்!

மனிதனுடைய விளக்கங்களில் பல முரண்பாடுகள் உள்ளன. மெய்யாகவே, இவை அனைத்தும் மனிதனுடைய கருத்துக்களாகும். நீங்கள் அனைவரும் மேற்கொண்டு ஆய்வு செய்யாமலேயே, அவர்கள் சொல்வது சரி என்று நம்புவீர்கள். ஒரு திரியேக தேவனைக் குறித்த இதுபோன்ற கருத்துக்கள் மனிதனுடைய கருத்துக்கள்தான் என்பதை நீங்கள் அறியவில்லையா? மனிதனுடைய எந்த அறிவும் முழுமையாகவும் பரிபூரணமாகவும் இருப்பதில்லை. அவை எப்போதும் களங்கமானவையாகவே இருக்கின்றன. மேலும், மனிதனிடம் பல கருத்துக்கள் உள்ளன. ஒரு சிருஷ்டியால் தேவனுடைய கிரியையை விளக்க முடியாது என்பதையே இது நிரூபிக்கின்றது. மனிதனுடைய மனதில் ஏராளமான காரியங்கள் உள்ளன. இவை அனைத்தும் பகுத்தறிதல் மற்றும் சிந்தனை ஆகியவற்றிலிருந்து வருகின்றன, இவை சத்தியத்துடன் முரண்படுகின்றன. உங்கள் பகுத்தறிவால் தேவனுடைய கிரியையை முழுமையாகப் பிரிக்க முடியுமா? யேகோவாவின் எல்லா கிரியைக்குள்ளும் உள்ள உள்நோக்கத்தை உங்களால் அறிந்து கொள்ள முடியுமா? ஒரு மனிதனாக உன்னால் அதை அறிந்துகொள்ள முடியுமா அல்லது நித்தியத்திலிருந்து நித்தியம் வரை காணக்கூடிய தேவனால் அறிந்துகொள்ள முடியுமா? வெகு காலத்திற்கு முந்தைய நித்தியத்திலிருந்து வரவிருக்கும் நித்தியம் வரை உன்னால் காண முடியுமா அல்லது அவ்வாறு செய்யக்கூடிய தேவனால் முடியுமா? நீ என்ன சொல்கிறாய்? தேவனைக் குறித்து விவரிக்க நீ எவ்விதத்தில் தகுதியுள்ளவனாக இருக்கிறாய்? உன் விளக்கம் எதன் அடிப்படையிலானது? நீ தேவனா? வானமும், பூமியும், யாவும் தேவனாலேயே சிருஷ்டிக்கப்பட்டவையாகும். இதைச் செய்தது நீ அல்ல, அப்படி இருக்கும்போது நீ ஏன் தவறான விளக்கங்களைக் கொடுக்கிறாய்? இப்போது, நீ திரித்துவ தேவனை தொடர்ந்து நம்புகிறாயா? இவ்விதமாக அது மிகவும் பாரமாக இருப்பதாக நீ நினைக்கவில்லையா? நீ மூவரை அல்ல, ஒரே தேவனை விசுவாசிப்பது சிறந்தது. ஒளியாக இருப்பது சிறந்தது, ஏனென்றால் கர்த்தருடைய பாரம் ஒளியாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “திரித்துவம் என்பது உண்டா?” என்பதிலிருந்து

முந்தைய: வேதாகமத்தைப் பற்றிய மறைபொருட்கள்

அடுத்த: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக