சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை எவ்வாறு உருவாகியது

செப்டம்பர் 2, 2020

மாம்சமான தேவனின் கிரியையினால் கிறிஸ்தவ சபைகளைப் போலவே சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையும் உருவாகியது. கர்த்தராகிய இயேசு மாம்சமாகித் தோன்றி கிரியை செய்ததால் கிறிஸ்தவ சபைகள் உருவாயின. கடைசி நாட்களின் மனுவுருவான சர்வவல்லமையுள்ள தேவனின் தோற்றத்தாலும் கிரியையாலும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை உருவாயிற்று. இவ்வாறு, மாம்சமான தேவனின் தோற்றத்தாலும் கிரியையாலும் காலங்கள் தோறும் சபைகள் உருவாயின. ஒவ்வொரு முறையும் மாம்சமாகிக் கிரியை செய்யும்போதெல்லாம் தேவன் பல சத்தியங்களை வெளிப்படுத்துகிறார். தேவன் வெளிப்படுத்தும் சத்தியங்களின் காரணமாக பல ஜனங்கள் தேவனை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்தொடர்கிறார்கள், இதன் மூலம் சபைகள் எழுகின்றன. இதில் இருந்து தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொண்டு தேவனைப் பின்பற்றுகிறவர்கள் மூலமாக இருந்து சபைகள் ஸ்தாபிக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கலாம். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் இந்தக் கூடுகைகளே சபைகள் என்று அழைக்கப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், மனுவுருவான கர்த்தராகிய இயேசு தோன்றி தமது கிரியைகளைச் செய்து, “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது(மத்தேயு 4:17), என்று பிரசங்கித்தார். அவர் மீட்பின் பணியைச் செய்தார். கிருபையின் காலத்து ஜனங்கள் கடைப்பிடித்து பிரவேசிக்க வேண்டிய சத்தியங்களை வெளிப்படுத்தினார். பல ஜனங்கள் கர்த்தரை விசுவாசித்து அவரைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். இவ்வாறு அக்காலத்தில் கிறிஸ்தவ சபைகள் உருவாயின. அதன் பின்னர், கர்த்தராகிய இயேசுவின் சுவிசேஷம் ஒவ்வொரு தேசத்துக்கும் பிரந்தியங்களுக்கும் பரவி, கடைசி நாட்களில் பூமியின் கடையாந்தரங்கள் வரை பரவியது. இவ்வாறு கிறிஸ்தவ சபைகள் எல்லா தேசங்களிலும் எழுந்தன. இவையே கிருபையின் காலச் சபைகளாக இருந்தன. கடைசி நாட்களில், மனுவுருவான தேவன் சீனாவின் முக்கிய நிலப்பகுதியில் தோன்றி கிரியை செய்கிறார். கிருபையின் காலத்தில் கத்தராகிய இயேசுவின் மீட்பின் பணியை அஸ்திவாரமாகக் கொண்டு , வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள, “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது(1 பேதுரு 4:17). என்ற தீர்க்கதரிசனத்தின் படி சர்வவல்லமையுள்ள தேவன் கிரியையைச் செய்துவருகிறார். தேவனின் ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் இரகசியங்களையும் மனுக்குலத்தின் சுத்திகரிப்புக்கும் இரட்சிப்புக்குமான எல்லா சத்தியங்களையும் சர்வவல்லமையுள்ள தேவன் முழு மனுக்குலத்துக்கும் வெளிப்படுத்துகிறார். கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனின் தோற்றத்தாலும் கிரியையாலும் மத உலகின் வெவ்வேறு சபைப்பிரிவுகளில் இருந்து பல ஆண்டுகளாக கர்த்தரை விசுவாசித்து வந்த ஜனங்கள் இறுதியாக தேவனின் குரலைக் கேட்டு கர்த்தராகிய இயேசு திரும்பி வந்து கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியையைச் செய்வதைக் கண்டுள்ளனர். அவர்கள் யாவரும் சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகி இயேசு என்ற உண்மையை உறுதிப்படுத்துகின்றனர். இதனால் அவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனின் கடைசி நாட்களின் கிரியையை ஏற்றுக்கொண்டு சர்வவல்லமையுள்ள தேவனுக்கு முன்பாகத் திரும்பி வந்துள்ளனர்; இவ்வாறு சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை உருவாகி ஸ்தாபிக்கப்பட்டது. முற்றிலும் சர்வவல்லமையுள்ள தேவனின் தோற்றம் மற்றும் கிரியையின் விளைவாகவே சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை உருவாகியது. அது எந்த ஒரு நபராலும் அல்ல, தனிப்பட்ட முறையில் சர்வவல்லமையுள்ள தேவனாலேயே ஸ்தாபிக்கப்பட்டது. சீன தேசத்தின் முக்கிய நிலத்தில் குறைந்தது பல மில்லியன்கணக்கான பேர் சர்வவல்லமையுள்ள தேவனை ஏற்றுக்கொண்டு இப்போது பின்பற்றுகின்றனர். சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பிவந்த கர்த்தராகிய இயேசுவான கடைசி நாட்களின் கிறிஸ்து மற்றும் தேவனின் தோற்றம் என்று சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவரும் முற்றிலுமாக அங்கீகரிக்கின்றனர். சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் கிறிஸ்தவர்கள் சர்வவல்லமையுள்ள தேவனுடைய நாமத்தை நோக்கி ஜெபிக்கிறார்கள். அவர்கள் வாசிப்பது, கேட்பது, ஐக்கியம் கொள்வது எல்லாம் சர்வவல்லமையுள்ள தேவனின் வார்த்தைகளைத்தான், அவர்கள் பற்றிக்கொண்டு இருப்பது எல்லாம் சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய சத்தியங்களைத்தான். இந்த சத்தியங்கள்தான் கடைசி நாட்களில் தேவனால் கொண்டுவரப்பட்டுள்ள நித்திய ஜீவனுக்கான வழியாகும். கடைசி நாட்களில் தமது கிரியையைச் செய்ய தேவன் மனுவுருவெடுத்திருக்கிறார், மேலும் கர்த்தராகிய இயேசு கிரியை செய்தபோது அவர் தனிப்பட்ட முறையில் பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தெரிந்துகொண்டு நியமித்தது போலவே—அவர் தேவனால் பயன்படுத்தப்படும் மனுஷனை தனிப்பட்ட முறையில் நியமித்து சாட்சியளித்திருக்கிறார், இதன் மூலம் அவனால் தேவனுடைய கிரியையில் ஒத்துழைக்க முடியும். இருந்தாலும் தேவனால் பயன்படுத்தப்படும் இந்த ஜனங்களால் தேவனுடைய கிரியையில் ஒத்துழைக்கத்தான் முடியுமே தவிர அவருக்குப் பதிலாகக் கிரியை செய்ய முடியாது. சபைகள் அவர்களால் ஸ்தாபிக்கப்படவில்லை. தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு விசுவாசித்து பின்பற்றுபவர்கள் தேவனால் பயன்படுத்தப்படுபவர்கள் அல்லர். கிருபையின் கால சபைகள் பேதுருவாலோ, பவுலாலோ, பிற அப்போஸ்தலர்களாலோ ஸ்தாபிக்கப்படவில்லை. மாறாக அவை கர்த்தராகிய இயேசுவின் கிரியையினால் எழுந்தன; அவை கர்த்தராகிய இயேசுவால் தனிப்பட்ட முறையில் ஸ்தாபிக்கப்பட்டவை. அதுபோல, கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையும் தேவனால் பயன்படுத்தப்பட்ட மனிதனால் உருவாக்கப்படவில்லை, மாறாக அது சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையால் எழுந்தது. அது தனிப்பட்ட முறையில் சர்வவல்லமையுள்ள தேவனால் ஸ்தாபிக்கப்பட்டு அவராலேயே மேய்க்கப்பட்டு வருகிறது. தேவனால் பயன்படுத்தப்படுகிற மனுஷன், தண்ணீர் பாய்ச்சி, தேவைகளை அளித்து, சபைகளை வழிநடத்தி, மனுஷனுடைய கடமைகளைச் செய்கிறான். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், தேவனால் பயன்படுத்தப்படும் மனிதனால் வழிநடத்தப்பட்டு, அவன் அவர்களுக்குத் தண்ணீரும் ஆகாரமும் அளித்தாலும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒருவன் சர்வவல்லமையுள்ள தேவனையே விசுவாசித்து அவரையே பின்பற்றுகிறான்—இது யாராலும் மறுக்கமுடியாத ஓர் உண்மையாகும். சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவம், கத்தோலிக்கம் மற்றும் பிற சபைப்பிரிவுகளில் இருந்து வந்தவர்கள். இவர்கள் கர்த்தரைப் பல ஆண்டுகள் விசுவாசித்து வந்தவர்கள். அவர்கள் எல்லோரும் வேதாகமத்தைப் புரிந்துகொள்ளுகிறார்கள். அவர்கள் கடைசி நாட்களின் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொண்ட பின், கர்த்தராகிய இயேசு திரும்பி வந்துவிட்டார், அவரே சர்வவல்லமையுள்ள தேவன், அவர் சத்தியத்தை வெளிப்படுத்தி கடைசி நாட்களின் நியாயத்தீர்ப்புக் கிரியையைச் செய்கிறார் என்று இந்தப் பல்வேறு சபைப்பிரிவுகளில் சாட்சி கொடுக்கிறார்கள். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் சத்தியமும் தேவனுடைய குரலாகவும் இருப்பதைப் பார்ப்பதன் விளைவாக பலர் சர்வவல்லமையுள்ள தேவனை ஏற்றுக்கொள்ள முன்வருகிறார்கள். இவர்களே சிங்காசனத்தின் முன்பாக எடுத்துக் கொள்ளப்படும் முதல் ஜனக்கூட்டமாக இருக்கின்றனர். இப்போது, உலகம் முழுவதும் பார்ப்பதற்காய் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வார்த்தைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேவனுடைய கடைசி நாட்களின் கிரியைகளுக்கு சாட்சி அளிக்க பல வகையான காணொளிகள் பெருகி வருகின்றன. சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடைசி நாட்களின் கிரியையை உலகம் முழுவதும் அதிக அதிகமான ஜனங்கள் தேடி, ஆராய்ந்து, ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். இவ்விதமாக, “எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்(ஏசாயா 2:2). என்ற வேதாகமத்தின் தீர்க்கதரிசனம் நிறைவேறிவருகிறது. முடிவில், உண்மையாகவே தேவனை விசுவாசிக்கும் அனைவரும் சர்வவல்லமையுள்ள தேவனிடம் திரும்பிவருவார்கள்; இது தவிர்க்க முடியாதது, ஏனெனில் இது நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே தேவனால் திட்டமிடப்பட்டது, இது தேவனின் ஆணை, இதை ஒருவராலும் மாற்ற முடியாது! இது சர்வவல்லமையுள்ள தேவன் கூறியது போலவே உள்ளது: “என் ஜனங்கள் நிச்சயமாக என் குரலைக் கேட்பார்கள், என்னை உண்மையாக நேசிப்பவர்கள் ஒவ்வொருவரும் என் சிங்காசனத்திற்கு முன்பாக வருவார்கள்(வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “முழு பிரபஞ்சத்திற்கான தேவனுடைய வார்த்தைகள், அத்தியாயம் 1”).

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை தேவனுடைய வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது என்று நாம் ஏன் சொல்கிறோம்?

வார்த்தைகள் தேவனுடைய ஆவியானவரால் நேரடியாகப் பேசப்படுகின்றனவா, ஒரு தீர்க்கதரிசி மூலமாக தெரிவிக்கப்படுகின்றனவா அல்லது கர்த்தராகிய இயேசுவின்...

சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் நோக்கங்கள் என்ன?

வேதாகமத்தில் உள்ள தேவனுடைய வார்த்தைகளின்படியும், சர்வவல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்திய மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தையின் படியும் முழு...

கிறிஸ்தவத்திற்கும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபைக்கும் இடையிலான வேறுபாடு

மனுவுருவான கர்த்தராகிய இயேசுவினுடைய மீட்பின் கிரியையைத் தொடர்ந்து கிறிஸ்தவம் தோன்றியது; இது கிருபையின் காலத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ...

சர்வவல்லமையுள்ள தேவனும் கர்த்தராகிய இயேசுவும் ஒரே தேவன்தான்

மனுக்குலம் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டபோது, மனுக்குலத்தின் இரட்சிப்பிற்கான தமது நிர்வாகத் திட்டத்தை தேவன் தொடங்கினார். மனுக்குலத்தின்...