கிறிஸ்தவ பாடல் | இழந்துபோன நேரம் ஒருபோதும் மீண்டும் வரப்போவதில்லை

நவம்பர் 9, 2020

சகோதரர்களே, விழித்திருங்கள்! சகோதரிகளே விழித்திருங்கள்!

தேவனுடைய நாள் தாமதமாகப்போவதில்லை;

நேரம் தான் ஜீவனாயிருக்கிறது,

மேலும் நேரத்தைத் திரும்பப் பெறுவது என்பது ஜீவனை இரட்சிப்பதாகும்!

நேரம் வெகு தொலைவில் இல்லை!

நீங்கள் கல்லூரி நுழைவுத் தேர்வில் தோல்வியுற்றால்,

நீங்கள் எத்தனை முறை விரும்புகிறீர்களோ அத்தனை முறை அதை படித்து மீண்டும் எழுதலாம்

இருப்பினும், தேவனின் நாள் மேலும் தாமதமடையப் போவதில்லை.

நினைவில் கொள்ளுங்கள்! நினைவில் கொள்ளுங்கள்!

இந்த நல்ல வார்த்தைகளால் தேவன் உங்களைக் கேட்டுக்கொள்கிறார்.

உலகின் முடிவு உங்கள் கண்களுக்கு முன்பாக வெளிப்படுகிறது,

மேலும் பெரிய பேரழிவுகள் விரைவாக நெருங்கி வருகின்றன.

எது மிக முக்கியமானது: உங்கள் ஜீவனா,

அல்லது உங்கள் நித்திரையும், போஜனமும், பானமும், ஆடையுமா?

இவற்றை நீங்கள் எடைபோட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மனுக்குலமானது எவ்வளவு பரிதாபமாக இருக்கிறது! எவ்வளவு மோசமாக இருக்கிறது!

எவ்வளவு குருடாக இருக்கிறது! எவ்வளவு கொடுமையானதாக இருக்கிறது!

உண்மையில், நீங்கள் தேவனுடைய வார்த்தைகளுக்கு செவிசாய்ப்பதில்லை—

தேவன் உங்களிடம் வீணாகப் பேசுகிறாரா?

நீங்கள் இன்னும் அஜாக்கிரதையாக இருக்கிறீர்கள்—ஏன்? ஏன் அப்படி இருக்கிறீர்கள்?

நீங்கள் உண்மையில் இதுபோன்ற எண்ணத்தைக் கொண்டிருந்ததில்லையா?

இந்த விஷயங்களை தேவன் யாருக்காகச் சொல்கிறார்? அவரிடத்தில் விசுவாசமாயிருங்கள்!

தேவன் உங்கள் இரட்சகராக இருக்கிறார்! அவர்தான் உங்கள் சர்வவல்லவராக இருக்கிறார்!

விழிப்புடன் இருங்கள்! விழிப்புடன் இங்கள்!

இழந்துபோன நேரம் மீண்டும் ஒருபோதும் வரப்போவதில்லை—இதை நினைவில் கொள்ளுங்கள்!

வருத்தத்தை குணப்படுத்தும் மருந்து உலகில் இல்லவே இல்லை!

எனவே, தேவன் உங்களிடம் எப்படிப் பேச வேண்டும்?

தேவனுடைய வார்த்தையானது உங்களது கவனத்திற்கும்,

நீங்கள் மீண்டும் மீண்டும் பரிசீலிப்பதற்கும் தகுதியற்றதாக இருக்கிறதா?

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க