கிரியையின் மூன்று கட்டங்கள் தேவன் மனுக்குலத்தை நிர்வகிப்பதைப் பற்றிய அனைத்தையும் கூறுகின்றன

பிப்ரவரி 21, 2022

மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையானது மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது,

அதாவது மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையானது

மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று கட்டங்களுக்குள்ளும் உலகை சிருஷ்டிக்கும் கிரியை அடங்காது,

ஆனால் நியாயப்பிரமாணத்தின் யுகம், கிருபையின் யுகம்

மற்றும் ராஜ்யத்தின் யுகம் ஆகிய மூன்று கட்ட கிரியைகளும் அடங்கும்.

உலகை சிருஷ்டிக்கும் கிரியை என்பது

முழு மனுக்குலத்தையும் உருவாக்கும் கிரியையாக இருந்தது.

இது மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையாக இருக்கவில்லை,

இதற்கும் மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஏனென்றால், உலகம் சிருஷ்டிக்கப்பட்டபோது,

மனுக்குலம் சாத்தானால் சீர்கெடுக்கப்படவில்லை,

ஆகையால் மனுக்குலத்தை இரட்சிக்கும்

கிரியையை செய்ய வேண்டிய அவசியமில்லாதிருந்தது.

மனுஷனை தேவன் நிர்வகித்தலுக்குள் உள்ள கதை,

முழு உலகத்திற்கும் சுவிசேஷம் வருதல்,

சகல மனுஷர் மத்தியில் காணப்படும் மாபெரும் இரகசியம் ஆகியவை

கிரியையின் மூன்று கட்டங்களாகும்,

இவைதான் சுவிசேஷத்தைப் பரப்புவதற்கான அடித்தளமாகும்.

மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியையின் விளைவாகவே மனுஷனை

தேவன் நிர்வகிப்பது துவங்கியது,

இது உலகை சிருஷ்டிக்கும் கிரியையிலிருந்து எழும்பவில்லை.

மனுக்குலம் ஒரு சீர்கெட்ட மனநிலையை பெற்ற பிறகுதான்

மனுக்குலத்தின் நிர்வாகக் கிரியையானது செயல்பாட்டுக்கு வந்தது.

ஆகையால், மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையில் நான்கு கட்டங்கள்

அல்லது நான்கு யுகங்களுக்குப் பதிலாக மூன்று பகுதிகளே அடங்கும்.

மனுக்குலத்தை தேவன் நிர்வகிப்பதைக் குறிப்பிட இதுவே சரியான வழியாகும்.

இறுதி காலம் முடிவுக்கு வரும்போது,

மனுக்குலத்தை நிர்வகிக்கும் கிரியையும் முழுமையான முடிவுக்கு வந்திருக்கும்.

நிர்வாகக் கிரியையின் முடிவு என்றால் சகல மனுஷரையும்

இரட்சிக்கும் கிரியை முழுவதுமாக முடிந்துவிட்டது என்றும்,

அப்போது முதல் மனுக்குலத்திற்கான இந்தக் கட்டம் முடிந்துவிட்டது என்றும் அர்த்தமாகும்.

தேவனுடைய சிருஷ்டிகளாகிய நீங்கள் மனுஷன்

தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவன் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

மேலும், மனுக்குலத்தின் சீர்கேட்டிற்கான மூலக்காரணத்தையும், அத்துடன் மனுஷனுடைய

இரட்சிப்பின் செயல்முறையையும் அறிந்துகொள்ள வேண்டும்.

உனது ஜீவிதம் தொடர்பான எளிய சத்தியங்களில் மட்டுமே கவனம் செலுத்தி,

இந்த மாபெரும் இரகசியங்கள் குறித்து நீ எதையும் அறியவில்லை என்றால்,

உன் ஜீவிதமானது ஒரு மோசமான விஷயம் போல, பார்க்கப்படுதற்குத் தவிர

வேறொன்றுக்கும் உதவாதது.

மனுஷனை தேவன் நிர்வகித்தலுக்குள் உள்ள கதை,

முழு உலகத்திற்கும் சுவிசேஷம் வருதல்,

சகல மனுஷர் மத்தியில் காணப்படும் மாபெரும் இரகசியம் ஆகியவை

கிரியையின் மூன்று கட்டங்களாகும்,

இவைதான் சுவிசேஷத்தைப் பரப்புவதற்கான அடித்தளமாகும்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க