தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 44

செப்டம்பர் 1, 2021

"யேகோவா" என்பது இஸ்ரவேலில் நான் கிரியை செய்கையில் நான் வைத்துக் கொண்ட நாமம் ஆகும். அதன் அர்த்தம் என்னவென்றால் மனிதன் மீது பரிதாபப்படவும், மனிதனை சபிக்கவும், மனிதனுடைய வாழ்வை வழிநடத்தவும் கூடிய இஸ்ரவேலரின் (தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள்) தேவன் என்பதாகும். மாபெரும் வல்லமையைக் கொண்ட தேவன், ஞானம் நிறைந்தவர் என்பதாகும். "இயேசு" என்றால் இம்மானுவேல், அதாவது அன்பு நிறைந்த, இரக்கமுள்ள, மனிதனை மீட்டுக்கொள்ளும் பாவநிவாரணபலி என்று அர்த்தமாகும். அவர் கிருபையின் யுகத்துடைய கிரியையைச் செய்தார், மற்றும் அவர் கிருபையின் யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், ஆளுகைத் திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். அதாவது, யேகோவா மட்டுமே தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களின் தேவனும், ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனும், மோசேயின் தேவனும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரின் தேவனும் ஆவார். ஆகவே, தற்போதைய யுகத்தில், யூத ஜனங்கள் அல்லாமல், இஸ்ரவேலர் அனைவரும் யேகோவாவை வணங்குகிறார்கள். அவர்கள் பலிபீடத்தின் மீது அவருக்கு பலியிட்டு, ஆசாரியர்களின் வஸ்திரங்களை அணிந்து தேவாலயத்தில் அவருக்கு சேவை செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது யேகோவா மீண்டும் தோன்றுவது ஆகும். இயேசு மட்டுமே மனிதகுலத்தின் மீட்பர். அவர் மனிதகுலத்தை பாவத்திலிருந்து மீட்டெடுத்த பாவநிவாரண பலியாவார். அதாவது, இயேசுவின் நாமமானது கிருபையின் யுகத்தில் தோன்றியது. அது கிருபையின் யுகத்தில் மீட்பின் கிரியைக்காக வந்ததாகும். கிருபையின் யுகத்தைச் சேர்ந்தவர்கள் மறுபடியும் பிறந்து, இரட்சிப்பைப் பெறுவதற்காக இயேசுவின் நாமம் வந்தது. மேலும், இது முழு மனிதகுலத்தின் மீட்பிற்குமான ஒரு குறிப்பிட்ட நாமமாகும். ஆகவே, இயேசு என்ற நாமம் மீட்பின் கிரியையைக் குறிக்கிறது. மேலும், கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது. யேகோவா என்ற நாமம் நியாயப்பிரமாணங்களின் கீழ் வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்களுக்கான ஒரு குறிப்பிட்ட நாமம் ஆகும். ஒவ்வொரு யுகத்திலும், கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், எனது நாமம் ஆதாரமற்றதாக இருக்கவில்லை. ஆனால் பிரதிநிதித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது: ஒவ்வொரு பெயரும் ஒரு யுகத்தைக் குறிக்கிறது. "யேகோவா" என்பது நியாயப்பிரமாணத்தின் யுகத்தைக் குறிக்கிறது, இது இஸ்ரவேல் ஜனங்களால் வணங்கப்படும் தேவனுக்கான மரியாதையாகும். "இயேசு" என்பது கிருபையின் யுகத்தைக் குறிக்கிறது, மற்றும் கிருபையின் யுகத்தில் மீட்கப்பட்ட அனைவரின் தேவனுடைய நாமமாக இருக்கிறது. கடைசி நாட்களில் இரட்சகராகிய இயேசுவின் வருகைக்காக மனிதன் ஏங்கி யூதேயாவில் அவர் கொண்டிருந்த அதே உருவத்தில் அவர் வருவார் என்று மனிதன் இன்னும் காத்திருக்கிறான் என்றால், ஆறாயிரம் ஆண்டு ஆளுகைத் திட்டம் மீட்பின் யுகத்திலேயே நிறுத்தப்பட்டிருக்கும் மற்றும் அதைத் தாண்டி வந்திருக்க முடியாது. மேலும், கடைசி நாட்கள் ஒருபோதும் வராது. இந்த யுகம் ஒருபோதும் முடிவுக்கு வராது. ஏனென்றால், இரட்சகராகிய இயேசு மனிதகுலத்தின் மீட்பிற்காகவும் இரட்சிப்பிற்காகவும் மட்டுமே இருக்கிறார். கிருபையின் யுகத்தில் உள்ள அனைத்து பாவிகளுக்காகவும் நான் இயேசுவின் நாமத்தை எடுத்தேன், ஆனால் அது முழு மனிதகுலத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் நாமம் அல்ல. யேகோவா, இயேசு, மேசியா அனைவருமே என் ஆவியானவரைக் குறிக்கிறார்கள் என்றாலும், இந்த நாமங்கள் எனது ஆளுகைத் திட்டத்தின் வெவ்வேறு யுகங்களை மட்டுமே குறிக்கின்றன, மற்றும் என்னை முழுமையாக பிரதிநிதித்தும் செய்யவில்லை. பூமியிலுள்ள ஜனங்கள் என்னை அழைக்கும் நாமங்கள் எனது முழு மனநிலையையும், என்னுடைய அனைத்தையும் வெளிப்படுத்த முடியாது. அவை வெவ்வேறு யுகங்களில் நான் அழைக்கப்படும் வெவ்வேறு நாமங்கள் ஆகும். எனவே, இறுதி யுகம், அதாவது கடைசி நாட்களின் யுகம் வரும்போது, என் நாமம் மீண்டும் மாறும். நான் யேகோவா என்றோ, இயேசு என்றோ, அல்லது மேசியா என்றோ அழைக்கப்படமாட்டேன்—நான் வல்லமை பொருந்திய சர்வவல்லமையுள்ள தேவன் என்று அழைக்கப்படுவேன். இந்த நாமத்தின் கீழ் நான் முழு யுகத்தையும் முடிவுக்குக் கொண்டு வருவேன். நான் ஒரு யுகத்தில் யேகோவா என்று அழைக்கப்பட்டேன். நான் மேசியா என்றும் அழைக்கப்பட்டேன். ஜனங்கள் ஒரு முறை என்னை இரட்சகராகிய இயேசு என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைத்தார்கள். ஆயினும், கடந்த யுகங்களில் ஜனங்கள் அறிந்திருந்த யேகோவா அல்லது இயேசுவாக நான் இன்று இல்லை. நான் கடைசி நாட்களில் திரும்பி வந்த தேவன். நான் யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் தேவன். என் முழு மனநிலையுடன், அதிகாரம், மரியாதை மற்றும் மகிமை நிறைந்தவராக பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எழுந்து வரும் தேவன் நானே. ஜனங்கள் ஒருபோதும் என்னுடன் ஈடுபடவில்லை, ஒருபோதும் என்னை அறிந்திருக்கவில்லை, எப்போதும் என் மனநிலையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து இன்று வரை ஒரு நபர் கூட என்னைப் பார்த்ததில்லை. தேவன் கடைசி நாட்களில் மனிதனுக்குக் காட்சியளிக்கிறார். ஆனால் மனிதர்களிடையே மறைந்திருக்கிறார். எரியும் சூரியனையும், எரியும் சுடரையும் போல, உண்மையான மற்றும் மெய்யான மனிதர்களிடையே வல்லமை மற்றும் அதிகாரம் நிறைந்தவராக அவர் வசிக்கிறார். என் வார்த்தைகளால் தீர்மானிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. நெருப்பை எரிப்பதன் மூலம் சுத்திகரிக்கப்படாத ஒரு நபரோ பொருளோ இல்லை. இறுதியில், எல்லா ஜாதிகளும் என்னுடைய வார்த்தைகளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள், என் வார்த்தைகளால் துண்டு துண்டாக நொறுக்கப்படுவார்கள். இவ்வாறு, கடைசி நாட்களில் எல்லா ஜனங்களும் திரும்பி வந்த மீட்பர் நான் தான் என்பதையும், மனிதகுலம் அனைத்தையும் ஜெயிக்கும் சர்வவல்லமையுள்ள தேவன் நான் தான் என்பதையும் காண்பார்கள். நான் ஒரு யுகத்தில் மனிதனுக்கான பாவநிவாரண பலியாக இருந்தேன், ஆனால் கடைசி நாட்களில் நான் எல்லாவற்றையும் எரிக்கும் சூரியனின் தீப்பிழம்புகளாகவும், எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் நீதியின் சூரியனாகவும் மாறுகிறேன் என்பதை எல்லோரும் காண்பார்கள். இதுவே கடைசி நாட்களில் எனது கிரியை. அனைவரும் ஒரே உண்மையான தேவனாகிய என்னை வணங்குவதற்காகவும், அவர்கள் என் உண்மையான முகத்தைக் காணவும், நான் ஒரு நீதியுள்ள தேவன், எரியும் சூரியன், எரியும் சுடர் என்று ஜனங்கள் அனைவரும் காணவும், இந்த நாமத்தை நான் எடுத்துக்கொண்டேன்: நான் இஸ்ரவேலரின் தேவன் மட்டுமல்ல, நான் மீட்பர் மட்டுமல்ல; வானம், பூமி, கடல் என எல்லா உயிரினங்களுக்கும் நான் தான் தேவன்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க