தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 36

ஜனவரி 15, 2023

ராஜ்யத்தின் காலம் தொடங்கியவுடன், தேவன் தம்முடைய வார்த்தைகளை வெளியிடத் தொடங்கினார். எதிர்காலத்தில், படிப்படியாக இந்த வார்த்தைகள் நிறைவேற்றப்படும், அந்த நேரத்தில் மனிதனுடைய வாழ்க்கை முதிர்ச்சியடையும். தேவன் இந்த வார்த்தையை மனிதனின் சீர்கேடான மனநிலையை வெளிப்படுத்தப் பயன்படுத்துவது மிகவும் உண்மையானது, மேலும் மிகவும் அவசியமானது, மேலும் மனிதனின் விசுவாசத்தைப் பரிபூரணப்படுத்துவதற்கான தனது கிரியையை அவர் செய்வதற்கு வார்த்தையைத் தவிர வேறு எதையும் பயன்படுத்துவதில்லை, ஏனென்றால் இன்று வார்த்தையின் காலம், மற்றும் மனிதனின் விசுவாசம், தீர்மானம் மற்றும் ஒத்துழைப்பு அதற்குத் தேவை. மனுவுருவான தேவனின் கடைசி நாட்களின் கிரியை மனிதனுக்கு ஊழியம் செய்வதற்கும் வழங்குவதற்கும் அவருடைய வார்த்தையைப் பயன்படுத்துவதாகும். மனுவுருவான தேவன் அவருடைய வார்த்தைகளைப் பேசிய பின்னர்தான் அவை நிறைவேற்றப்படத் தொடங்கும். அவர் பேசும் காலத்தில், அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படவில்லை, ஏனென்றால் அவர் மாம்சத்தின் கட்டத்தில் இருக்கும் போது, அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்பட முடியாது. தேவன் மாம்சமானவரே, ஆவியானவர் அல்ல என்பதை மனிதன் காணும்படி இது நிகழ்கிறது. இதனால் மனிதன் தேவனின் யதார்த்தத்தை தன் கண்களால் பார்க்க முடியும். அவருடைய கிரியை முடிந்த நாளில், பூமியில் அவரால் பேசப்பட வேண்டிய அனைத்து வார்த்தைகளும் பேசப்பட்டுவிட்டபோது, அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படத் தொடங்கும். இப்போது தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்படுவதற்கான காலம் அல்ல, ஏனென்றால் அவர் இன்னும் தம்முடைய வார்த்தைகளைப் பேசி முடித்திருக்கவில்லை. ஆகவே, தேவன் தம்முடைய வார்த்தைகளை இன்னும் பூமியில் பேசுகிறார் என்பதை நீ காணும்போது, அவருடைய வார்த்தைகளின் நிறைவேறுதலுக்காகக் காத்திருக்க வேண்டாம். தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுவதை நிறுத்தும்போது, பூமியில் அவருடைய கிரியை முடிக்கப்பட்டிருக்கும் போதுதான் அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படத் தொடங்கும். அவர் பூமியில் பேசும் வார்த்தைகளில், ஒரு பக்கத்தில் வாழ்க்கையின் ஏற்பாடும், மற்றொரு பக்கத்தில், வரவிருக்கும் காரியங்களின் தீர்க்கதரிசனமும், செய்யப்படவிருக்கும் காரியங்கள் மற்றும் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்கள், ஆகிய தீர்க்கதரிசனமும் உள்ளது. இயேசுவின் வார்த்தைகளிலும் தீர்க்கதரிசனம் இருந்தது. ஒரு பக்கத்தில், அவர் ஜீவனை வழங்கினார், மற்றொரு பக்கத்தில் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார். இன்று, ஒரே நேரத்தில் வார்த்தைகளையும் உண்மைகளையும் நிறைவேற்றுவதற்கான பேச்சு எதுவும் இல்லை, ஏனென்றால் மனிதன் தன் கண்களால் காணக்கூடியவற்றுக்கும் தேவனால் செய்யப்படுவனவற்றிற்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. தேவனின் கிரியை முடிக்கப்பட்டதும், அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படும், வார்த்தைகளுக்குப் பிறகு உண்மைகள் வரும் என்று மட்டுமே கூற முடியும். கடைசி நாட்களில், மனுவுருவான தேவன் பூமியில் வார்த்தையின் ஊழியத்தைச் செய்கிறார், மேலும் வார்த்தையின் ஊழியத்தைச் செய்வதில், அவர் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார், மற்ற காரியங்களில் அக்கறை காட்டுவதில்லை. தேவனின் கிரியை மாறியதும், அவருடைய வார்த்தைகள் நிறைவேற்றப்படத் தொடங்கும். இன்று, உன்னை பரிபூரணப்படுத்துவதற்கு முதலில் வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர் முழு பிரபஞ்சத்திலும் மகிமை பெறும்போது, அவருடைய கிரியை முழுமையடையும். பேசப்பட வேண்டிய அனைத்து வார்த்தைகளும் பேசப்பட்டிருக்கும், எல்லா வார்த்தைகளும் உண்மைகளாக மாறியிருக்கும். மனுக்குலம் அவரை அறிந்துகொள்ளும்படி, இதன்மூலம் மனுக்குலம் அவர் என்றால் என்ன என்பதைக் காணவும், அவருடைய ஞானத்தையும், அவருடைய வார்த்தையிலிருக்கும் அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் காணவும், தேவன் கடைசி நாட்களில் இந்த வார்த்தையின் ஊழியத்தைச் செய்ய பூமிக்கு வந்திருக்கிறார். ராஜ்யத்தின் காலத்தின் போது, தேவன் முக்கியமாக முழு மனுக்குலத்தையும் ஜெயங்கொள்ள இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார். எதிர்காலத்தில், அவருடைய வார்த்தை ஒவ்வொரு மதம், துறை, தேசம் மற்றும் சபைப் பிரிவினரின் மீதும் வரும். தேவன் இந்த வார்த்தையை ஜெயங்கொள்ளுவதற்காகப் பயன்படுத்தி, அவருடைய வார்த்தை அதிகாரத்தையும் வல்லமையையும் கொண்டுள்ளது என்பதை எல்லா மனிதர்களையும் காணச் செய்கிறார். எனவே இன்று நீங்கள் தேவனுடைய வார்த்தையை மட்டுமே எதிர்கொள்கிறீர்கள்.

இந்தக் காலத்தில் தேவன் பேசும் வார்த்தைகள் நியாயப்பிரமாண காலத்தின் போது பேசப்பட்ட வார்த்தைகளிலிருந்து வேறுபடுகின்றன, ஆகவே, அவை கிருபையின் காலத்தின் போது பேசப்பட்ட வார்த்தைகளிலிருந்து வேறுபடுகின்றன. கிருபையின் காலத்தில், தேவன் வார்த்தையின் கிரியையைச் செய்யவில்லை, ஆனால் மனிதகுலத்தை இரட்சிப்பதற்காக சிலுவையில் அறையப்படுவதை மட்டுமே விவரித்தார். இயேசு ஏன் சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதையும், அவர் சிலுவையில் பட்ட துன்பத்தையும், தேவனுக்காக மனிதன் எவ்வாறு சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதையும் மட்டுமே வேதாகமம் விவரிக்கிறது. அந்தக் காலத்தில், தேவனால் செய்யப்பட்ட அனைத்துக் கிரியைகளும் சிலுவையில் அறையப்படுவதையே மையமாகக் கொண்டிருந்தன. ராஜ்யத்தின் காலத்தின் போது, மனுவுருவான தேவன் தன்னை விசுவாசிக்கிற அனைவரையும் ஜெயங்கொள்ள வார்த்தைகளைப் பேசுகிறார். இது "மாம்சத்தில் தோன்றும் வார்த்தை". இந்தக் கிரியையைச் செய்ய தேவன் கடைசி நாட்களில் வந்துள்ளார், அதாவது, மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் உண்மையான முக்கியத்துவத்தை நிறைவேற்றிட அவர் வந்துள்ளார். அவர் வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார், உண்மைகளின் வருகை அரிதானதாக உள்ளது. இது மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் சாராம்சமாகும், மேலும் மனுவுருவான தேவன் அவருடைய வார்த்தைகளைப் பேசும்போது, இது மாம்சத்தில் உள்ள வார்த்தையின் தோற்றம், மற்றும் மாம்சத்திற்குள் வரும் வார்த்தையாக இருக்கிறது. "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகியது." இது (மாம்சத்தில் வார்த்தையின் தோற்றத்தின் கிரியை) தேவன் கடைசி நாட்களில் நிறைவேற்றும் கிரியை, இது அவருடைய முழு நிர்வாகத் திட்டத்தின் இறுதி அத்தியாயமாகும், எனவே தேவன் பூமிக்கு வந்து அவருடைய வார்த்தைகளை மாம்சத்தில் வெளிப்படுத்த வேண்டும். அது இன்று செய்யப்படுகிறது, அது எதிர்காலத்தில் செய்யப்படும், தேவனால் நிறைவேற்றப்படும், மனிதனின் இறுதி இலக்கு, இரட்சிக்கப்படுவார்கள், அழிக்கப்படுவார்கள் மற்றும் இதுபோன்ற இறுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய இந்தக் கிரியைகள் எல்லாம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன, மேலும் அவை மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் உண்மையான முக்கியத்துவத்தை நிறைவேற்றுவதற்காகவே ஆகும். முன்னர் வெளியிடப்பட்ட நிர்வாக ஆணைகள் மற்றும் அமைப்புச்சட்டம், அழிக்கப்பட இருப்பவர்கள், இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கப் போகிறவர்கள்—இந்த வார்த்தைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். இதுதான் கடைசி நாட்களில் மனுவுருவான தேவனால் பிரதானமாக நிறைவேற்றப்படும் கிரியை ஆகும். தேவனால் முன்குறிக்கப்பட்டவர்கள் எங்கு இருக்கிறார்கள், முன்குறிக்கப்பட்டாதவர்கள் எங்கு இருக்கிறார்கள், அவருடைய ஜனங்களும் குமாரர்களும் எவ்வாறு வகைப்படுத்தப்படுவார்கள், இஸ்ரேலுக்கு என்ன நடக்கும், எகிப்துக்கு என்ன நடக்கும், எதிர்காலத்தில், இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்படும். தேவனின் கிரியையின் வேகம் துரிதப்படுத்துகிறது. ஒவ்வொரு காலத்திலும் என்ன செய்யப்பட வேண்டும், கடைசி நாட்களில் மனுவுருவான தேவன் செய்ய வேண்டியவை, செய்யப்பட வேண்டிய அவருடைய ஊழியம், இந்த வார்த்தையை மனிதனுக்கு வெளிப்படுத்துவதற்கான வழிமுறையாக தேவன் பயன்படுத்துகிறார் மற்றும் இந்த வார்த்தைகள் அனைத்தும் மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின் உண்மையான முக்கியத்துவத்தை நிறைவேற்றுவதற்காகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க