தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 35

ஜனவரி 15, 2023

முக்கியமாக தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுவதற்கு பூமிக்கு வந்துள்ளார். நீ ஐக்கியப்படுவது தேவனுடைய வார்த்தையுடனே, நீ பார்ப்பது தேவனுடைய வார்த்தையே, நீ கேட்பது தேவனுடைய வார்த்தையே, நீ கடைப்பிடிப்பது தேவனுடைய வார்த்தையே, நீ அனுபவிப்பது தேவனுடைய வார்த்தையே, தேவனுடைய இந்த மனுவுருவானவர் மனிதனை பரிபூரணமாக்க இந்த வார்த்தையை முக்கியமாக பயன்படுத்துகிறார். அவர் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காட்டுவதில்லை, குறிப்பாகக் கடந்த காலத்தில் இயேசு செய்த கிரியையைச் செய்வதில்லை. அவர்கள் தேவனாயிருந்தாலும், மற்றும் இருவரும் மாம்சமாக இருந்தாலும், அவர்களுடைய ஊழியங்கள் ஒன்றல்ல. இயேசு வந்தபோது, அவரும் தேவனின் கிரியையின் ஒரு பகுதியைச் செய்தார் மற்றும் சில வார்த்தைகளையும் பேசினார். ஆனால் அவர் நிறைவேற்றிய முக்கியமான கிரியை என்ன? சிலுவையில் அறையப்பட்டதே அவர் முக்கியமாக சாதித்த கிரியை ஆகும். சிலுவையில் அறையப்படும் கிரியையை நிறைவேற்றவும், எல்லா மனிதர்களையும் இரட்சிப்பதற்கும் அவர் பாவமுள்ள மாம்சத்தின் சாயலானார், மேலும் முழு மனுக்குலத்தின் பாவங்களுக்காகவும் அவர் பாவநிவாரணபலியானார். அவர் நிறைவேற்றிய முக்கியமான கிரியை இதுதான். இறுதியில், பின்னர் வந்தவர்களை வழிநடத்த சிலுவையின் பாதையை அவர் கொடுத்தார். முதன்மையாக, இயேசு வந்தபோது மீட்பின் கிரியையை முடிக்க வேண்டும். அவர் எல்லா மனிதர்களையும் மீட்டு, பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தை மனிதனிடம் கொண்டு வந்தார், மேலும், அவர் பரலோகராஜ்யத்திற்கான பாதையை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக, பின்னர் வந்த அனைவரும், "நாம் சிலுவையின் பாதையில் நடக்க வேண்டும், சிலுவைக்காக நம்மை தியாகம் செய்ய வேண்டும்" என்று கூறினார்கள். நிச்சயமாக, ஆரம்பத்தில், இயேசுவும் வேறு சில கிரியைகளைச் செய்தார், மனிதனை மனந்திரும்பச் செய்யவும், தனது பாவங்களை அறிக்கையிடச் செய்யவும் சில வார்த்தைகளைப் பேசினார். ஆனால் சிலுவையில் அறையப்படுவதே இன்னும் அவருடைய ஊழியமாக இருந்தது, அவர் தம் வழியை பிரசங்கிக்க செலவிட்ட மூன்றரை வருடங்களும், பின்னர் வந்த சிலுவையில் அறையப்படுவதற்கான முன்னேற்பாடாக இருந்தன. இயேசு பல முறை ஜெபித்ததும் சிலுவையில் அறையப்படுவதற்காகவே. அவர் வாழ்ந்த ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையும், அவர் பூமியில் வாழ்ந்த முப்பத்தி மூன்றரை ஆண்டுகளும் முதன்மையாக சிலுவையில் அறையப்படும் கிரியையைச் செய்து முடிப்பதற்காகவே. இந்த கிரியையை மேற்கொள்ள அவை அவருக்கு பலம் கொடுப்பதாக இருந்தன, இதன் விளைவாக சிலுவையில் அறையப்படுவதை தேவன் அவரிடம் ஒப்படைத்தார். இன்று மனுவுருவான தேவன் எந்தக் கிரியையை நிறைவேற்றுவார்? முதன்மையாக "மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின்" கிரியையை நிறைவு செய்வதற்காகவும், வார்த்தையைப் பயன்படுத்தி மனிதனை பரிபூரணமாக்குவதற்கும், வார்த்தையால் நடத்தப்படுவதையும் வார்த்தையால் செம்மைப்படுத்துவதையும் மனிதனை ஏற்றுக்கொள்ளும்படி செய்யவும், இன்று, தேவன் மாம்சமானார். அவருடைய வார்த்தைகளில் அவர் உன்னை ஆகாரத்தைப் பெறவும் ஜீவனைப் பெறவும் செய்கிறார். அவருடைய வார்த்தைகளில் நீ அவருடைய கிரியைகளையும் செயல்களையும் காணலாம். உன்னை சிட்சிக்கவும் சுத்திகரிக்கவும் தேவன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார், இதனால், நீ கஷ்டங்களை அனுபவித்தால், அதுவும் தேவனுடைய வார்த்தையினாலேயே ஆகும். இன்று, தேவன் உண்மைகளால் அல்ல, வார்த்தைகளால் கிரியை செய்கிறார். அவருடைய வார்த்தை உன் மீது வந்த பின்னரே பரிசுத்த ஆவியானவர் உனக்குள் கிரியை செய்து உன்னை வலியை அனுபவிக்கவோ அல்லது இனிமையாக உணரவோ செய்ய முடியும். தேவனுடைய வார்த்தை மட்டுமே உன்னை யதார்த்தத்திற்குள் கொண்டு வர முடியும், மேலும் தேவனுடைய வார்த்தையால் மட்டுமே உன்னை பரிபூரணமாக்க முடியும். எனவே, குறைந்தபட்சம் நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும், கடைசி நாட்களில் தேவனால் செய்யப்படும் கிரியை என்பது முதன்மையாக ஒவ்வொரு நபரையும் பரிபூரணமாக்குவதற்கும் மனிதனை வழிநடத்துவதற்கும் அவருடைய வார்த்தையைப் பயன்படுத்துவதே ஆகும். அவர் செய்யும் எல்லா கிரியைகளும் வார்த்தையின் மூலமே செய்யப்படுகின்றன. உன்னைச் சிட்சிக்க அவர் உண்மைகளைப் பயன்படுத்துவதில்லை. சிலர் தேவனை எதிர்க்கும் நேரங்களும் உண்டு. தேவன் உனக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்துவதில்லை, உன் சரீரம் சிட்சிக்கப்படுவதில்லை, நீ கஷ்டங்களை அனுபவிப்பதில்லை. ஆனால் அவருடைய வார்த்தை உன் மீது வந்து, உன்னைச் சுத்திகரித்தவுடன், அதை உன்னால் தாங்க முடியாது. அது அப்படியல்லவா? ஊழியம் செய்பவர்களின் காலத்தில், மனிதனை பாதாளக்குழிக்குள் தள்ளும்படி தேவன் சொன்னார். மனிதன் உண்மையில் பாதாளக்குழிக்கு வந்தானா? மனிதனைச் சுத்திகரிக்க வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே, மனிதன் பாதாளக்குழிக்குள் நுழைந்தான். ஆகவே, கடைசி நாட்களில், தேவன் மாம்சமாகும் போது, எல்லாவற்றையும் நிறைவேற்றவும் எல்லாவற்றையும் தெளிவுபடுத்தவும் அவர் முக்கியமாக வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அவருடைய வார்த்தைகளில் மட்டுமே அவர் என்னவாக இருக்கிறார் என்று பார்க்க முடியும். அவருடைய வார்த்தைகளில்தான் அவர் தேவன் என்பதை நீ காண முடியும். மனுவுருவான தேவன் பூமிக்கு வரும்போது, அவர் வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர வேறு எந்தக் கிரியையும் செய்வதில்லை. இதனால் உண்மைகள் தேவையில்லை. வார்த்தைகளே போதுமானதாகும். இது ஏனென்றால், அவர், மனிதன் தம்முடைய வல்லமையையும் மேலாதிக்கத்தையும் அவருடைய வார்த்தைகளில் காண அனுமதிக்கவும், மனிதனை அவர் தம்மை எப்படி தாழ்மையுடன் மறைக்கிறார் என்பதை அவரது வார்த்தைகளில் காண அனுமதிக்கவும், மனிதன் தன் வார்த்தைகளை முழுவதுமாக அறிந்துகொள்ள அனுமதிக்கவும், முக்கியமாக இந்தக் கிரியையைச் செய்ய வந்துள்ளார். அவரிடம் உள்ள அனைத்தும், அவர் என்னவாக இருக்கிறார் என்பதும் அவருடைய வார்த்தைகளிலேயே உள்ளன. அவருடைய ஞானமும் அதிசயமும் அவருடைய வார்த்தைகளிலேயே உள்ளன. நீ இதில், தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பல முறைகளில் பேசுவதைக் காண முடியும். இந்தக் காலப்பகுதியில் தேவனின் பெரும்பாலான கிரியைகள் மனிதனை வழிநடத்துதல், வெளிப்படுத்துதல் மற்றும் கையாள்வது ஆகும். அவர் ஒரு நபரை எளிதில் சபிப்பதில்லை, அவர் அவ்வாறு செய்யும்போது கூட, அவர் வார்த்தையின் மூலம்தான் அவர்களைச் சபிக்கிறார். ஆகவே, தேவன் மாம்சமாகிய இந்தக் காலத்தில், தேவன் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதையும், பேய்களை மீண்டும் துரத்துவதையும் பார்க்க முயற்சிக்காதீர்கள், தொடர்ந்து அடையாளங்களைத் தேடுவதை நிறுத்துங்கள். அதற்கு எந்த அர்த்தமும் இல்லை! அந்த அறிகுறிகளால் மனிதனைப் பரிபூரணப்படுத்த முடியாது! தெளிவாகப் பேசுவோமானால், இன்று, மாம்சத்தின் உண்மையான தேவன் தாமே செயல்படுவதில்லை. அவர் பேச மட்டுமே செய்கிறார். இதுவே சத்தியம்! அவர் உன்னைப் பரிபூரணமாக்குவதற்கு வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மேலும் உன்னை போஷிப்பதற்கும் உனக்குத் தண்ணீர் பாய்ச்சவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவர் கிரியை செய்யவும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார், மேலும் அவருடைய யதார்த்தத்தை உங்களுக்குத் தெரியப்படுத்த அவர் உண்மைகளுக்குப் பதிலாக வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். தேவனின் இந்த கிரியையின் முறையை நீ உணரக்கூடியவனாக இருந்தால், எதிர்மறையாக இருப்பது கடினம். எதிர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நீ நேர்மறையானவற்றில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் அதாவது, தேவனின் வார்த்தைகள் நிறைவேற்றப்படுமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அல்லது உண்மைகளின் வருகை இருக்கிறதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், தேவன் மனிதனை அவருடைய வார்த்தைகளிலிருந்து வாழ்க்கையைப் பெற வைக்கிறார், இது எல்லா அறிகுறிகளிலும் மிகப்பெரியது. இன்னும் அதிகமாக, இது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். தேவனை அறிந்து கொள்வதற்கான சிறந்த சான்று இதுவாகும், மேலும் இது அறிகுறிகளை விட பெரிய அறிகுறியாகும். இந்த வார்த்தைகளால் மட்டுமே மனிதனைப் பரிபூரணப்படுத்த முடியும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க