தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 34

ஜனவரி 15, 2023

வெவ்வேறு காலங்களுக்கு ஏற்றபடி தேவன் தம்முடைய வார்த்தைகளைப் பேசுகிறார், அவருடைய கிரியையைச் செய்கிறார், வெவ்வேறு காலங்களில் அவர் வெவ்வேறு வார்த்தைகளைப் பேசுகிறார். தேவன் விதிகளுக்குக் கட்டுப்படுவதில்லை, அல்லது அதே கிரியையை மீண்டும் செய்வதில்லை, அல்லது கடந்த கால விஷயங்களுக்காக ஏக்கம் கொள்வதில்லை. அவரே தேவன், அவர் எப்போதும் புதியவர், ஒருபோதும் பழையவர் இல்லை, அவர் ஒவ்வொரு நாளும் புதிய வார்த்தைகளைப் பேசுகிறார். நீ இன்று பின்பற்ற வேண்டியதைப் பின்பற்ற வேண்டும். இதுவே மனிதனின் பொறுப்பும் கடமையும் ஆகும். இன்றைய தினத்தில் நடைமுறையானது தேவனின் வெளிச்சம் மற்றும் வார்த்தைகளை மையமாகக் கொண்டிருப்பது முக்கியமானதாகும். தேவன் விதிகளுக்குக் கட்டுப்படுபவர் இல்லை, மேலும் அவருடைய ஞானத்தையும் சர்வவல்லமையையும் தெளிவுபடுத்துவதற்காகப் பல்வேறு கண்ணோட்டங்களில் இருந்து அவரால் பேச முடிகிறது. அவர் ஆவியினுடைய அல்லது மனிதனினுடைய, அல்லது மூன்றாவது நபரினுடைய கண்ணோட்டத்தில் பேசுகிறாரா என்பது முக்கியமல்ல—தேவன் எப்போதுமே தேவன் தான், மனிதனின் கண்ணோட்டத்திலிருந்து அவர் பேசுவதால் நீ அவரை தேவன் இல்லை என்று சொல்ல முடியாது. வெவ்வேறு கண்ணோட்டங்களில் தேவன் பேசுவதின் விளைவாக சில நபர்களிடையே கருத்துக்கள் உருவாகியுள்ளன. அத்தகையோருக்கு தேவனைப் பற்றிய அறிவும் இல்லை, அவருடைய கிரியையைப் பற்றிய அறிவும் இல்லை. தேவன் எப்போதும் ஒரே கண்ணோட்டத்தில் பேசியிருந்தால், தேவனைப் பற்றிய விதிகளை மனிதன் வகுத்திருக்க மாட்டானா? அப்படிச் செயல்படுவதற்கு மனிதனை தேவன் அனுமதிக்க முடியுமா? எந்தக் கண்ணோட்டத்தில் தேவன் பேசுகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், அவ்வாறு செய்ய அவருக்கு நோக்கங்கள் உள்ளன. தேவன் எப்போதும் ஆவியானவரின் கண்ணோட்டத்திலேயே பேசுவதாக இருந்தால், உன்னால் அவருடன் ஐக்கியப்பட முடியுமா? இவ்வாறு, சில நேரங்களில் தமது வார்த்தைகளை உனக்குக் கொடுக்கவும், உன்னை யதார்த்தத்திற்குள் வழிநடத்தவும் அவர் மூன்றாவது நபரைப் போல் பேசுகிறார். தேவன் செய்யும் அனைத்துமே பொருத்தமானதாக இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இவை அனைத்தும் தேவனால் செய்யப்படுகின்றன, இதை நீ சந்தேகிக்கக்கூடாது. அவர் தேவன், ஆகவே அவர் எந்த கண்ணோட்டத்தில் பேசினாலும் அவர் எப்போதும் தேவனாகவே இருப்பார். இது ஒரு மாற்ற முடியாத சத்தியம். இருப்பினும் அவர் கிரியை செய்கிறார், அவர் இன்னும் தேவன் தான், அவருடைய சாராம்சம் மாறாது! பேதுரு தேவனை மிகவும் நேசித்தான், தேவனின் சொந்த இருதயத்திற்குப் பிரியமான ஒரு மனிதனாக இருந்தான், ஆனால் தேவன் அவனைக் கர்த்தராகவோ அல்லது கிறிஸ்துவாகவோ சாட்சி அளிக்கவில்லை, ஏனென்றால் ஒரு மனிதனின் சாராம்சம் என்னவோ அதுதான், அது ஒருபோதும் மாற முடியாது. தேவன் தமது கிரியையில் விதிகளுக்குக் கட்டுப்படுவதில்லை, ஆனால் அவருடைய கிரியையை பயனுள்ளதாக்கவும், அவரைக் குறித்த மனிதனின் அறிவை ஆழப்படுத்துவதற்கும் வெவ்வேறு முறைகளைப் பிரயோகிக்கிறார். அவர் செய்யும் கிரியையின் முறைகள் ஒவ்வொன்றும் மனிதன் அவரை அறிந்து கொள்ள உதவுகிறது, மேலும் மனிதனை பரிபூரணமாக்குவதற்காகவே உள்ளது. அவர் கிரியை செய்வதற்காக எந்த முறையைப் பிரயோகித்தாலும், ஒவ்வொன்றும் மனிதனைக் கட்டியெழுப்பவும், மனிதனைப் பரிபூரணப்படுத்தவுமே செய்யப்படுகிறது. அவர் கிரியை செய்யும் முறைகளில் ஒன்றானது மிக நீண்ட காலமாக நீடித்திருந்தாலும், இது தேவன் மீதுள்ள மனிதனின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதற்காகவே ஆகும். இதனால், உங்கள் இருதயத்தில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது. இவை அனைத்தும் தேவனின் கிரியையின் படிநிலைகள், நீங்கள் அவற்றிற்கு கீழ்ப்படியத் தான் வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய வார்த்தையால் அனைத்தையும் அடைந்திட முடியும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க