தேவனுடைய அனுதின வார்த்தைகள் | "மீட்பின் யுகத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள மெய்யான கதை" | பகுதி 22

தேவனுடைய அனுதின வார்த்தைகள் | "மீட்பின் யுகத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள மெய்யான கதை" | பகுதி 22

0 |செப்டம்பர் 18, 2020

இயேசு செய்த கிரியை அந்த யுகத்தில் மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப இருந்தது. அவருடைய கிரியை மனிதகுலத்தை மீட்பதும், அவர்களுடைய பாவங்களை மன்னிப்பதும் ஆகும். ஆகவே அவருடைய மனநிலையானது மனத்தாழ்மை, பொறுமை, அன்பு, பக்தி, சகிப்புத்தன்மை, இரக்கம் மற்றும் கிருபை ஆகிய அனைத்தும் கலந்த ஒன்றாக இருந்தது. அவர் மிகுதியான கிருபையையும் ஆசீர்வாதங்களையும் மனிதகுலத்திற்குக் கொண்டுவந்தார். மேலும் மக்கள் அனுபவிக்கக்கூடிய சமாதானம் மற்றும் மகிழ்ச்சி, அவருடைய சகிப்புத்தன்மை மற்றும் அன்பு, அவருடைய இரக்கம் மற்றும் கிருபை என எல்லாவற்றையும், அவர்களுடைய இன்பத்திற்காக அவர் அவர்களுக்குக் கொடுத்தார். அந்த காலகட்டத்தில், ஜனங்கள் இன்பத்துடன் அனுபவித்த அனுபவங்களாவன—அவர்களின் இருதயங்களுக்குள் சமாதானம் மற்றும் பாதுகாப்பின் உணர்வு, அவர்களின் ஆவிகளுக்குள் நிச்சயத்தின் உணர்வு, மற்றும் இரட்சகராகிய இயேசுவை அவர்கள் சார்ந்திருத்தல்—என இவை அனைத்தும் அவர்கள் வாழ்ந்த, அந்த யுகம் முழுவதும் நிறைந்திருந்தன. மனிதன் ஏற்கனவே சாத்தானால் சிதைந்துவிட்டான். ஆகவே கிருபையின் யுகத்தில், எல்லா மனிதர்களையும் மீட்கும் கிரியைக்கு, மிகுதியான கிருபையும், எல்லையற்ற சகிப்புத்தன்மையும், பொறுமையும் தேவைப்பட்டது. அதற்கும் மேலாக, ஒரு பலனைப் பெற, மனிதகுலத்தின் பாவங்களுக்கு நிவாரணம் செய்யப் போதுமான பலி ஒன்று தேவைப்பட்டது. கிருபையின் யுகத்தில் மனிதகுலம் கண்டது மனிதகுலத்தின் பாவங்களுக்கான எனது பாவநிவாரணபலி மட்டுமே: இயேசு. அவர்கள் அறிந்ததெல்லாம், தேவன் இரக்கமுள்ளவராகவும், சகிப்புத்தன்மையுள்ளவராகவும் இருக்க முடியும் என்பதாகும். மேலும் அவர்கள் பார்த்ததெல்லாம் இயேசுவின் இரக்கமும், கிருபையும் மட்டுமே. இவை அனைத்திற்கும் காரணம் அவர்கள் கிருபையின் யுகத்தில் பிறந்தார்கள் என்பதே. ஆகவே, அவர்கள் மீட்கப்படுவதற்கு முன்பு, இயேசு தங்களுக்கு அளித்த பல வகையான கிருபையை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது. இது மட்டுமே அவர்களுக்குப் பயனுள்ளதாய் இருந்தது. இவ்வாறு, அவர்கள் கிருபையை அனுபவிப்பதன் மூலம் தாங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற முடியும். மேலும் இயேசுவின் சகிப்புத்தன்மையையும் பொறுமையையும் அனுபவிப்பதன் மூலமும் மீட்கப்படுவதற்கான வாய்ப்பைப் பெற முடியும். இயேசுவின் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையினால் மட்டுமே அவர்கள் மன்னிப்பைப் பெறுவதற்கான உரிமையை ஜெயித்தனர், மேலும் இயேசு அளித்த மிகுதியான கிருபையினை அனுபவித்தனர். இயேசு சொன்னது போல்: பாவிகள் அவர்களுடைய பாவங்களிலிருந்து மன்னிப்பைப் பெறத்தக்கதாக அனுமதிக்கும்படி, நீதிமான்களையல்ல பாவிகளை மீட்பதற்கே வந்திருக்கிறேன். இயேசு மாம்சமானபோது, அவர் மனிதனின் குற்றங்களுக்கு சகிப்பின்மையையும், நியாயத்தீர்ப்பையும், சாபத்தையும் கொண்டு வந்திருந்தால், மனிதன் ஒருபோதும் மீட்கப்படுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருக்க மாட்டான், என்றென்றும் பாவியாகவே இருந்திருப்பான். இது அவ்வாறு இருந்திருந்தால், ஆறாயிரம் ஆண்டு மேலாண்மைத் திட்டம் நியாயப்பிரமாண யுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும், மேலும் நியாயப்பிரமாணத்தின் காலம் இன்னும் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும். மனிதனின் பாவங்கள் மிகுதியானதாக மற்றும் மிகவும் மோசமானதாக வளர்ந்திருக்கும். மேலும் மனிதகுலத்தின் சிருஷ்டிப்பு வீணானதாக இருந்திருக்கும். மனிதர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டு யேகோவாவுக்கு சேவை மட்டுமே செய்திருப்பார்கள், ஆனால் அவர்களுடைய பாவங்கள் முதலில் படைக்கப்பட்ட மனிதர்களின் பாவங்களைவிட அதிகமாக இருந்திருக்கும். இயேசு எவ்வளவு அதிகமாக மனிதகுலத்தை நேசித்தாரோ, அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களிடம் போதுமான இரக்கத்தையும் கிருபையையும் கொண்டுவந்தாரோ, அதற்கு ஈடாக மனிதர்களும், இயேசு ஒரு பெரிய விலைக்கிரயம் செலுத்தி திரும்பப் பெற்ற வழித்தவறிய ஆட்டுக்குட்டிகள் என்று அழைக்கப்படுவதற்கான உரிமையில் இருக்கிறார்கள். இந்த கிரியையில் சாத்தானால் தலையிட முடியவில்லை, ஏனென்றால் இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை ஒரு அன்பான தாய் குழந்தையை தன் மார்பில் சாய்த்துக்கொள்வது போல நடத்துகிறார். அவர்களைக் குறித்து கோபமோ வெறுப்போ அவரிடமில்லை, ஆனால் ஆறுதல் நிறைந்தவராக இருந்தார். அவர் ஒருபோதும் அவர்களிடையே கோபப்படவில்லை, ஆனால் அவர்களுடைய பாவங்களை மன்னித்து, அவர்களின் முட்டாள்தனத்திற்கும் அறியாமைக்கும், "மற்றவர்களை ஏழெழுபதுதரமட்டும் மன்னியுங்கள்" என்று சொல்லும் அளவிற்கு கண்டுகொள்ளாதவராக இருந்தார். இவ்வாறு மற்றவர்களின் இருதயங்கள் அவருடைய இருதயத்தால் மாற்றப்பட்டன. இவ்வாறு ஜனங்கள் அவருடைய சகிப்புத்தன்மையின் மூலம் பாவ மன்னிப்பைப் பெற்றார்கள்.

மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை என்பதிலிருந்து

மேலும் காண்பி
உங்களது விசுவாசத்தில் ஏதேனும் சிரமங்கள் அல்லது கேள்விகள் இருந்தால், தயவுசெய்து எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்புக் கொள்ளுங்கள்.
எங்களை தொடர்புக்கொள்ள
Messenger மூலம் எங்களை அணுகுங்கள்

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க