தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 21

ஆகஸ்ட் 21, 2021

ஆதியில், பழைய ஏற்பாட்டினுடைய நியாயப்பிரமாண யுகத்தின் போது மனுஷனை வழிநடத்துவது ஒரு குழந்தையின் ஜீவிதத்தை வழிநடத்துவதைப் போல இருந்தது. ஆதிகால மனுஷகுலம் யேகோவாவிலிருந்து புதிதாகப் பிறந்தது; அவர்கள் தான் இஸ்ரவேலர். தேவனை எவ்வாறு வணங்குவது என்பது பற்றியோ அல்லது பூமியில் எப்படி ஜீவிப்பது என்பது பற்றியோ அவர்களுக்கு எந்தப் புரிதலும் இருக்கவில்லை. அதாவது, யேகோவா மனுஷகுலத்தை சிருஷ்டித்தார், அதாவது ஆதாமையும் ஏவாளையும் சிருஷ்டித்தார், ஆனால் யேகோவாவை எவ்வாறு வணங்குவது அல்லது பூமியில் யேகோவாவின் விதிககளை எப்படிப் பின்பற்றுவது என்பதைப் புரிந்துகொள்வதற்கான திறன்களை அவர் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. யேகோவாவின் நேரடி வழிகாட்டுதல் இல்லாமல், இதை யாரும் நேரடியாக அறிய முடியாது, ஏனென்றால் ஆதியில் மனுஷன் அத்தகைய திறன்களைக் கொண்டிருக்கவில்லை. யேகோவாதான் தேவன் என்பதை மட்டுமே மனுஷன் அறிந்திருந்தான், ஆனால் அவரை எவ்வாறு வணங்குவது, எந்த விதமான நடத்தை அவரை வணங்குவதாக அழைக்கப்படும், ஒருவன் எந்த விதமான மனதுடன் அவரை வணங்க வேண்டும், அல்லது அவரை வணங்க அவருக்கு என்ன காணிக்கை வழங்க வேண்டும், என இவை அனைத்திற்கும் மனுஷனுக்கு விடை தெரிந்திருக்கவில்லை. யேகோவாவால் சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றிலும் அனுபவிக்கக்கூடியதை எப்படி அனுபவிப்பது என்பது மட்டும் மனுஷனுக்கு தெரியும், ஆனால் பூமியில் எந்த வகையான ஜீவிதம் தேவனின் சிருஷ்டிப்புக்கு தகுதியானது என்பது பற்றி மனுஷனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு அறிவுறுத்த யாருமில்லாமல், அவர்களை தனிப்பட்ட முறையில் வழிநடத்த யாருமில்லாமல், இந்த மனுஷரால் ஒருபோதும் மனுஷகுலத்திற்கு ஏற்ற ஜீவிதத்தை சரியாக வழிநடத்தியிருக்க முடிந்திருக்காது, மாறாக சாத்தானால் மறைமுகமாக சிறைபிடிக்கப்பட்டிருப்பர். யேகோவா மனுஷகுலத்தை சிருஷ்டித்தார், அதாவது, மனுஷகுலத்தின் முன்னோர்களான ஏவாளையும் ஆதாமையும் அவர் சிருஷ்டித்தார், ஆனால் அவர் அவர்களுக்கு மேற்கொண்டு எந்த புத்தியையோ அல்லது ஞானத்தையோ வழங்கவில்லை. அவர்கள் ஏற்கனவே பூமியில் வாழ்ந்துவந்தாலும், அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. எனவே, மனுஷகுலத்தை சிருஷ்டிக்கும் யேகோவாவின் கிரியை பாதி மட்டுமே முடிந்தது, முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை. அவர் களிமண்ணிலிருந்து மனுஷனின் உருவமாதிரியை மட்டுமே உருவாக்கி, அதற்கு அவரது சுவாசத்தைக் கொடுத்திருந்தார், ஆனால் மனுஷனுக்கு அவரை வணங்குவதற்குப் போதுமான சித்தத்தை அவர் வழங்கியிருக்கவில்லை. ஆதியில், மனுஷனுக்கு அவரை வணங்குவதற்கோ அல்லது அவருக்குப் பயப்படுவதற்கோ மனதில்லை. மனுஷன் அவரது வார்த்தைகளைக் கேட்க மட்டுமே அறிந்திருந்தான், ஆனால் பூமியிலுள்ள ஜீவிதத்திற்கான அடிப்படை அறிவையும் மனுஷ ஜீவிதத்தின் இயல்பான விதிகளையும் அறியாதவனாக இருந்தான். ஆகவே, யேகோவா ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்து ஏழு நாட்களின் திட்டத்தை முடித்திருந்தாலும், மனுஷனுக்கான சிருஷ்டிப்பை அவர் எந்த வகையிலும் முடித்திருக்கவில்லை, ஏனென்றால் மனுஷன் ஒரு உமி மட்டுமே, மேலும் மனுஷனாக இருப்பதன் யதார்த்தம் அவனிடம் இருக்கவில்லை. மனுஷகுலத்தை படைத்தவர் யேகோவாதான் என்பதை மட்டுமே மனுஷன் அறிந்திருந்தான், ஆனால் யேகோவாவின் வார்த்தைகளையோ விதிகளையோ எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதில் அவனுக்கு எந்தவிதமான அறிவும் இல்லை. ஆகவே, மனுஷகுலம் சிருஷ்டிக்கப்பட்ட பிறகும், யேகோவாவின் கிரியை முடிவடையவில்லை. மனுஷகுலத்தை தனக்கு முன்பாக வரும்படி செய்ய அவர் இன்னும் அதை முழுமையாக வழிநடத்த வேண்டியிருந்தது, இதனால் அவர்களால் பூமியில் ஒன்றாக ஜீவித்திருக்கவும் அவரை வணங்கவும் முடியும், மேலும் அவரது வழிகாட்டுதலுடன் பூமியில் சாதாரண மனுஷ ஜீவிதத்திற்கான சரியான பாதையிலும் அவர்களால் பிரவேசிக்க முடியும். இவ்வாறாக மட்டுமே யேகோவா என்ற நாமத்தில் முக்கியமாக மேற்கொள்ளப்பட்ட கிரியைகள் முழுமையாக நிறைவடைந்தன; அதாவது, இவ்வாறாக மட்டுமே உலகை சிருஷ்டிக்கும் யேகோவாவின் கிரியை முழுமையாக நிறைவடைந்தது. எனவே, மனுஷகுலத்தை அவர் சிருஷ்டித்ததால், அவர் பூமியிலுள்ள மனுஷகுலத்தின் ஜீவிதத்தை பல ஆயிரம் ஆண்டுகளாக வழிநடத்த வேண்டியிருந்தது, இதன்மூலம் மனுஷகுலம் அவருடைய கட்டளைகளுக்கும் விதிகளுக்கும் கட்டுப்பட்டு, பூமியில் ஒரு சாதாரண மனுஷ ஜீவிதத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் பங்குபெற முடிந்தது. அப்போதுதான் யேகோவாவின் கிரியை முழுமையாக நிறைவடைந்தது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (3)" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க