தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 18

மார்ச் 27, 2023

இஸ்ரவேலர்களுக்காக யேகோவா நடத்திய கிரியை தேவனின் தோற்றத்துக்கான பூமிக்குரிய இடத்தை மனிதகுலத்தின் மத்தியில் உருவாக்கியது. இதுவே அவர் இருக்கும் பரிசுத்தத் தலமாகவும் இருந்தது. அவர் தமது கிரியைகளை இஸ்ரவேல் ஜனங்களுக்காக மட்டுமே வரையறுத்துக்கொண்டார். முதலில், அவர் இஸ்ரவேலுக்கு வெளியில் கிரியை நடத்தவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக, தமது கிரியையின் செயற்பரப்பைக் கட்டுப்படுத்துவதற்குப் பொருத்தமானது என அவர் கண்ட மக்களைத் தெரிந்தெடுத்தார். இஸ்ரவேல்தான் தேவன் ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கிய இடம். மேலும் அந்த இடத்தின் தூசியில் இருந்து யெகோவா மனிதனை உண்டாக்கினார். இந்த இடமே உலகில் அவருடைய கிரியைகளுக்கான அடித்தளம் ஆயிற்று. நோவாவின் சந்ததிகள் மட்டுமல்லாமல் ஆதாமின் சந்ததிகளுமான இஸ்ரவேலர்களே, உலகில் யெகோவாவின் கிரியைக்கான மானிட அஸ்திபாரமாக இருந்தனர்.

இந்தக் கால கட்டத்தில், இஸ்ரவேலில் யெகோவா நடத்திய கிரியையின் முக்கியத்துவம், நோக்கம் மற்றும் நடவடிக்கைகள் முழு உலகத்திலும் அவருடைய கிரியையைத் தொடங்குவதற்கானதாகவே இருந்தன. அவை, இஸ்ரவேலை மையமாகக் கொண்டு, படிப்படியாக புறஜாதியார் தேசங்களுக்குள் பரவின. ஒரு மாதிரியை உருவாக்க பிரபஞ்சம் முழுவதிலும் அவர் இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே கிரியை செய்கிறார். அதற்காக உலகங்கள் எங்கும் உள்ள மக்கள் தமது சுவிசேஷத்தைப் பெற்றுக்கொள்ளும் வரை அதை விரிவாக்குகிறார். ஆதி இஸ்ரவேலர்கள் நோவாவின் சந்ததியார் ஆவர். இந்த மக்கள் யெகோவாவின் ஜீவசுவாசத்தை மட்டுமே பெற்றிருந்தார்கள். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் போதுமான அளவுக்குப் பேணுவதைப் புரிந்துகொண்டிருந்தார்கள். ஆனால் யெகோவோ எப்படிப்பட்ட தேவனாய் இருக்கிறார் என்றோ, அல்லது மனிதனுக்கான அவருடைய சித்தத்தையோ, அதைவிட மேலாக எல்லாவற்றையும் உருவாக்கிய கர்த்தரை எவ்வாறு வணங்க வேண்டும் என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. கீழ்ப்படிய வேண்டிய நியமங்கள் மற்றும் பிரமாணங்கள் இருக்கின்றனவா என்பது பற்றிய, சிருஷ்டிகருக்கு சிருஷ்டிக்கப்பட்டவர்கள் செய்யவேண்டிய கடமைகள் போன்றவற்றைப் பற்றிய விஷயங்கள் எதையும் ஆதாமின் சந்ததியார் அறிந்திருக்கவில்லை. கணவன் வியர்வை சிந்தி உழைத்து தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் மற்றும் மனைவி தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் மேலும் யேகோவா படைத்த மனித குலத்தை நிலைத்திருக்கச் செய்யவேண்டும் என்பவையே அவர்கள் அறிந்தவை எல்லாம். வேறு வகையாகக் கூறுவது என்றால், யேகோவா ஜீவசுவாசத்தையும் அவரது ஜீவனையும் மட்டுமே பெற்றிருந்த இத்தகைய மக்கள், தேவனின் பிரமாணத்தை எவ்வாறு பின்பற்றுவது அல்லது எல்லாவற்றையும் உண்டாக்கிய சிருஷ்டிகர்த்தரை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்பது பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. அவர்கள் மிகக் குறைவாகவே புரிந்துகொண்டார்கள். ஆகவே, அவர்களின் இருதயத்தில் நேர்மையற்றவையும் வஞ்சகமும் ஒன்றும் இல்லை என்றாலும், பொறாமையும் பூசல்களும் அவர்களிடையே அரிதாகவே எழுந்தபோதிலும், சிருஷ்டி அனைத்துக்கும் கர்த்தரான யேகோவாவைப் பற்றிய அறிவோ அல்லது புரிதலோ அவர்களுக்கு இல்லை. மனிதனின் இந்த மூதாதையர்கள் யேகோவாவின் பொருட்களை உண்பதற்கும், யேகோவாவின் பொருட்களை அனுபவித்து மகிழ்வதற்கும் மட்டுமே அறிந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் யேகோவாவை வணங்க அறிந்திருக்கவில்லை; தாங்கள் முழங்கால் மடக்கி தொழுதுகொள்ள வேண்டியவர் யேகோவா மட்டுமே என்று அவர்களுக்குத் தெரியாது. ஆக அவர்களை அவருடைய சிருஷ்டிகள் என்று எவ்வாறு அழைக்கமுடியும்? இது இவ்வாறு இருந்தால், "யேகோவாவே எல்லா சிருஷ்டிகளுக்கும் கர்த்தரானவர்" மற்றும் "அவரை வெளிப்படுத்தவும், அவரை மகிமைப்படுத்தவும் மேலும் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் அவர் மனிதனைப் படைத்தார்" என்ற வார்த்தைகள் வீணாகப் பேசப்பட்டவைகள் என்று ஆகிவிடும் அல்லவா? யேகோவாவின் மேல் பக்தி அற்ற மக்கள் அவருடைய மகிமைக்கு எவ்வாறு சாட்சியாக விளங்க முடியும்? எவ்வாறு அவர்கள் அவருடைய மகிமையின் வெளிப்பாடாக மாறமுடியும்? "நான் மனிதனை என்னுடைய சாயலில் சிருஷ்டித்தேன்" என்ற யேகோவாவின் வார்த்தைகள் பொல்லாங்கனான சாத்தானின் கைகளில் ஒரு ஆயுதமாக மாறிவிடக் கூடுமல்லவா? யேகோவாவின் மனித சிருஷ்டிப்பை கீழ்மைப்படுத்தும் ஓர் அடையாளமாக இந்த வார்த்தைகள் மாற்றிவிடும் அல்லவா? கிரியையின் இந்தக் கட்டத்தை நிறைவுசெய்வதற்காக, மனித குலத்தைச் சிருஷ்டித்த பின், ஆதாமில் இருந்து நோவா வரை யேகோவா அவர்களுக்கு அறிவுறுத்தவோ அல்லது வழிகாட்டவோவில்லை. மாறாக, உலகத்தை வெள்ளம் அழிக்கும் வரை, நோவாவின் மற்றும் ஆதாமின் சந்ததியாரான இஸ்ரவேலரை அவர் முறையாக வழிநடத்தத் தொடங்கவில்லை. இஸ்ரவேல் தேசம் எங்கும் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கியபோது அவரது கிரியையும் வார்த்தைகளும் இஸ்ரவேலில் அவர்களுக்கு வழிகாட்டுதலை அளித்தன. இதன் மூலம், யேகோவா, தம்மிடம் இருந்து ஜீவனைப் பெற்று தூசியில் இருந்து சிருஷ்டிக்கப்பட்ட மனிதனாக எழுவதற்காக மனிதனுக்குள் ஜீவசுவாசத்தை ஊத வல்லவர் என்பது மட்டுமல்லாமல், அவரால் மனித குலத்தை அழித்தொழிக்கவும், மனிதகுலத்தைச் சபிக்கவும், மற்றும் தமது கோலால் மனிதகுலத்தை ஆளுகை செய்யவும் முடியும் என்பதை மனிதகுலத்திற்குக் காட்டுகிறார். ஆக, மனிதனின் வாழ்க்கையை உலகில் வழிநடத்தவும், இரவும் பகலும் நாட்களின் நேரங்களின் படி மனிதகுலத்தின் மத்தியில் பேசவும் கிரியை செய்யவும் யேகோவாவால் முடியும் என்பதையும் அவர்கள் கண்டார்கள். அவரால் எடுக்கப்பட்ட தூசியில் இருந்து மனிதன் வந்தான் என்றும் மனிதன் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவன் என்றும் அவரது சிருஷ்டிகள் அறிந்துகொள்ளவே அவர் கிரியை செய்தார். இது மட்டுமல்லாமல், ஏனைய மக்களும் தேசங்களும் (உண்மையில் இவர்களும் இஸ்ரவேலில் இருந்து வேறுபட்டவர்கள் அல்லர், மாறாக இஸ்ரவேலில் இருந்து பிரிந்து சென்றவர்கள், இருப்பினும் ஆதாம் மற்றும் ஏவாளின் சந்ததியினரே) இஸ்ரவேலில் இருந்து யேகோவாவின் சுவிசேஷத்தைப் பெற்றுக்கொண்டு அதன்மூலம் பிரபஞ்சத்தில் உள்ள சிருஷ்டிக்கப்பட்ட யாவரும் யேகோவாவை வணங்கி அவரை உயர்ந்தவர் என்று போற்றுவதற்காகவே அவர் முதன்முதலில் இஸ்ரவேலில் கிரியைகளை நடப்பித்தார். யேகோவா தம் கிரியையை இஸ்ரவேலில் தொடங்காமல், மாறாக, மனிதகுலத்தைப் படைத்து, உலகில் அவர்கள் ஒரு கவலையற்ற வாழ்க்கையை வாழ அனுமதித்திருந்தால், அந்த நிலையில், மனிதனின் உடல் இயல்பின் காரணமாக (இயல்பு என்றால் மனிதன் அவனால் பார்க்க முடியாத விஷயங்களை ஒருபோதும் அறியமுடியாத நிலை, அதாவது யேகோவாவே மனிதகுலத்தைப் படைத்தார் என்பதையும் அதைவிட அவர் அப்படி ஏன் செய்தார் என்பதையும் அவனால் அறிய முடியாது), யேகோவாவே மனிதகுலத்தைப் படைத்தார் என்பதையும் அல்லது அவரே எல்லா சிருஷ்டிப்புக்கும் கர்த்தர் என்பதையும் அவன் ஒருபோதும் அறிய மாட்டான். யேகோவா மனிதனைப் படைத்து உலகில் வைத்து, மனிதகுலத்தின் மத்தியில் இருந்து ஒரு கால கட்டத்திற்கு அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்காமல் தமது கரங்களில் இருந்த தூசியை அப்படியே தட்டிவிட்டு சென்றிருந்தால், மனிதகுலம் ஒன்றுமில்லாமைக்குள் திரும்பிப் போயிருக்கும்; அவரது சிருஷ்டிப்பான வானமும் பூமியும் எண்ணற்ற பொருட்களும், மனிதகுலம் யாவும், ஒன்றுமில்லாமைக்குள் திரும்பிப்போனதோடு சாத்தானால் மிதித்து நசுக்கப்பட்டுப் போயிருக்கும். இவ்விதம், "உலகத்தில், அதாவது, தமது சிருஷ்டிப்பின் மத்தியில், நிற்க ஒரு பரிசுத்தமான இடம் வேண்டும்" என்ற யேகோவாவின் விருப்பம் சிதைந்து போயிருக்கும். ஆகவே, மனிதகுலத்தைச் சிருஷ்டித்தப் பின்னர், அவர்களின் நடுவில் இருந்து வாழ்க்கையில் அவர்களை வழிகாட்டவும், அவர்களின் நடுவில் இருந்து அவர்களோடு பேசவும் அவரால் முடிந்தது—இவை எல்லாம் அவரது விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவும் அவருடைய திட்டங்களை அடைவதற்குமாகவே. அவர் இஸ்ரவேலில் செய்த கிரியையானது எல்லாவற்றையும் உண்டாக்குவதற்கு முன்னர் அவர் வகுத்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே. ஆகவே அவர் முதலில் இஸ்ரவேலர்களின் மத்தியில் செய்த கிரியையும், எல்லாவற்றையும் அவர் சிருஷ்டித்ததும் ஒன்றுக்கொன்று முரண்பாடானவை அல்ல. ஆனால் அவை அவரது நிர்வாகம், அவரது கிரியை, மற்றும் அவரது மகிமைக்காகவும் மனிதகுலத்தை அவர் படைத்ததின் அர்த்தத்தை ஆழப்படுத்துவதுமாகிய இரண்டிற்குமாகும். நோவாவிற்குப் பின்னர் இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகத்தில் மனிதகுலத்தின் வாழ்வை வழிநடத்தினார். இக்காலத்தில் அவர் மனிதகுலத்திற்கு, சிருஷ்டிகர்த்தராகிய யேகோவாவை எவ்வாறு வணங்குவது, எவ்வாறு அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவது, மேலும் எவ்வாறு தொடர்ந்து வாழ்வது, மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, யேகோவாவுக்கு எவ்வாறு ஒரு சாட்சியாக செயலாற்றுவது, அவருக்குக் கீழ்ப்படிவது மற்றும் அவரை வணங்குவது மட்டுமல்லாமல் தாவீதும் அவனது ஆசாரியர்களும் செய்தது போல அவரை இசையோடு துதிப்பதற்கும்கூட அவர் கற்பித்தார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "நியாயப்பிரமாணத்தின் காலத்தில் கிரியை" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க