தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 17

மார்ச் 27, 2023

இன்றைய நாளிலும் தனது ஆறாயிரம் ஆண்டுகாலக் கிரியைகளைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் தேவன், தம்முடைய பல கிரியைகளை ஏற்கனவே வெளிப்படுத்தியிருக்கிறார், இதன் முதன்மை நோக்கம் சாத்தானைத் தோற்கடித்து மனுஷகுலம் முழுமைக்குமான இரட்சிப்பைக் கொண்டுவருவதாகும். பரலோகத்தில் உள்ள அனைத்தையும், பூமியிலுள்ள சகலத்தையும், சமுத்திரங்களுக்குள் உள்ள அனைத்தையும், மற்றும் பூமியில் தேவனுடைய சிருஷ்டிப்பின் ஒவ்வொரு கடைசிப் பொருளையும் அவருடைய சர்வவல்லமையைக் காணவும், அவருடைய எல்லா கிரியைகளுக்கும் சாட்சியாகவும் இருக்க அனுமதிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். சாத்தானை அவர் தோற்கடித்ததன் மூலம் அவர் செய்த எல்லாக் கிரியைகளையும் மனுஷருக்கு வெளிப்படுத்தவும், அவர்கள் அவரைப் புகழ்ந்து பேசவும், மற்றும் சாத்தானைத் தோற்கடித்ததில் அவருடைய ஞானத்தை உயர்த்தவும் இந்த வாய்ப்பைக் கைக்கொள்கிறார். பூமியிலும், பரலோகத்திலும், சமுத்திரங்களிலும் உள்ள சகலமும் தேவனை மகிமைப்படுத்துகின்றன, அவருடைய சர்வவல்லமையைப் புகழ்கின்றன, அவருடைய ஒவ்வொரு கிரியையையும் புகழ்கின்றன, அவருடைய பரிசுத்த நாமத்தைக் கூக்குரலிடுகின்றன. அவர் சாத்தானைத் தோற்கடித்ததற்கு இதுவே சான்று; அவர் சாத்தானை வென்றதற்கு இதுவே சான்று. மிக முக்கியமாக, அவர் மனுஷகுலத்தை இரட்சித்ததற்கும் இதுவே சான்று. தேவனின் சிருஷ்டிப்புக்கள் சகலமும் அவருக்கு மகிமையைக் கொண்டுவருகின்றன, அவருடைய எதிரியைத் தோற்கடித்து வெற்றிகரமாகத் திரும்பியதற்காக அவரைப் புகழ்கின்றன, மேலும் அவரை வெற்றிகரமான ராஜா என்றும் புகழ்கின்றன. அவருடைய நோக்கம் சாத்தானை தோற்கடிப்பது மட்டுமாக இருக்கவில்லை, அதனால்தான் அவருடைய கிரியை ஆறாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது. மனிதகுலத்தை இரட்சிக்க அவர் சாத்தானின் தோல்வியைப் பயன்படுத்துகிறார்; அவர் சாத்தானின் தோல்வியைப் பயன்படுத்தி அவருடைய எல்லாக் கிரியைகளையும் அவருடைய எல்லா மகிமையையும் வெளிப்படுத்துகிறார். அவர் மகிமையைப் பெறுவார், தேவதூதர்கள் அனைவரும் அவருடைய எல்லா மகிமையையும் காண்பார்கள். பரலோகத்திலுள்ள தூதர்களும், பூமியிலுள்ள மனுஷரும், பூமியில் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் சிருஷ்டிகரின் மகிமையைக் காண்பார்கள். அவர் செய்யும் கிரியை இது. வானத்திலும் பூமியிலும் அவர் சிருஷ்டித்தவை அனைத்தும் அவருடைய மகிமைக்கு சாட்சியாக இருக்கும், மேலும் சாத்தானை முற்றிலுமாக தோற்கடித்தபின் அவர் வெற்றிகரமாகத் திரும்பி வருவார், மேலும் மனிதகுலம் அவரைப் புகழ்ந்துப் பேச அனுமதிப்பார், இதனால் அவருடைய கிரியையில் இரட்டை வெற்றியைப் பெறுவார். இறுதியில், மனிதகுலம் முழுவதும் அவரால் ஜெயங்கொள்ளப்படும், அவரை எதிர்த்து நிற்கும் அல்லது கலகம் செய்யும் எவரையும் அவர் அழிப்பார்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சாத்தானுக்குச் சொந்தமான அனைவரையும் அவர் அழிப்பார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க