தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 16

பிப்ரவரி 1, 2023

இன்றையக் கிரியை கிருபையின் கால கிரியையை முன்னோக்கித் தள்ளியுள்ளது; அதாவது, முழுமையான ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் கீழ் உள்ள கிரியை முன்னோக்கி நகர்ந்துள்ளது. கிருபையின் காலம் முடிந்துவிட்டாலும், தேவனின் கிரியையில் முன்னேற்றம் இருந்துவருகிறது. கிரியையின் இந்தக் கட்டம் கிருபையின் காலம் மற்றும் நியாயப்பிரமாணத்தின் காலத்தின் மேல் கட்டமைகிறது என்று ஏன் நான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்? ஏனெனில் இந்த நாளின் கிரியை கிருபையின் காலத்தில் செய்யப்பட்ட கிரியையின் தொடர்ச்சியாக இருக்கிறது, மேலும் நியாயப்பிரமாணத்தின் காலத்தில் செய்யப்பட்டவற்றின் ஒரு முன்னேற்றமாகவும் உள்ளது. இந்த மூன்று கட்டச் சங்கிலியின் ஒவ்வொரு வளையமும் அடுத்ததோடு நெருக்கமாகக் கட்டப்பட்டு ஒன்றுக்கொன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இயேசு செய்தவற்றின் மேல் இந்தக் கட்டத்தின் கிரியை கட்டமைகிறது என்று ஏன் நான் கூறுகிறேன்? இந்தக் கட்டம் இயேசு செய்த கிரியையின் மேல் கட்டமையவில்லை என்று வைத்துக்கொண்டால், இந்தக் கட்டத்தில் இன்னொரு சிலுவைமரணம் ஏற்பட வேண்டும், மேலும் முந்திய கட்டத்தின் இரட்சிப்பின் கிரியை மீண்டும் முழுவதுமாகச் செய்யப்பட வேண்டும். இது அர்த்தமற்றதாக இருக்கும். ஆகவே கிரியை முற்றிலுமாக முடிக்கப்படவில்லை, ஆனால் காலம் முன்னோக்கி நகர்ந்துள்ளது மற்றும் கிரியையின் நிலை முன்னை விட கூடுதல் உயரத்திற்கு எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கட்டத்தின் கிரியை நியாயப்பிரமாண காலம் என்னும் அடித்தளத்தின் மீதும் இயேசுவின் கிரியை என்ற பாறையின் மீதும் கட்டப்படுகிறது என்று கூறலாம். தேவனுடைய கிரியை கட்டம் கட்டமாகக் கட்டமைக்கப்படுகிறது, மற்றும் இந்தக் கட்டம் ஒரு புதிய தொடக்கம் அல்ல. மூன்று கட்டக் கிரியை மட்டுமே ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் எனக் கருதப்படலாம். கிருபையின் கால கிரியையின் அடித்தளத்தின் மீது இந்தக் கட்டத்தின் கிரியை செய்யப்படுகிறது. இந்த இரு கட்டங்களின் கிரியை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவைகளாக இருந்தால், பின்னர் ஏன் இந்தக் கட்டத்தில் சிலுவைமரணம் திரும்பவும் நடைபெறவில்லை? நான் ஏன் மனிதனின் பாவத்தைச் சுமக்கவில்லை, ஆனால் அதற்குப் பதிலாக மனிதனை நியாயந்தீர்க்கவும் கடிந்துகொள்ளவும் நேரடியாக வந்திருக்கிறேன்? மனிதனை நியாயந்தீர்ப்பதும் சிட்சிப்பதுமான என் கிரியை சிலுவை மரணத்தைப் பின்பற்றவில்லை என்றால், இப்போதைய என் வருகை பரிசுத்த ஆவியினால் கருத்தரிக்கப்படவில்லை என்றால், பின்னர் மனிதனை நியாயந்தீர்க்கவும் கடிந்துகொள்ளவும் எனக்குத் தகுதி இல்லாமல் போயிருக்கும். நான் இயேசுவோடு முற்றிலும் ஒன்றாக இருப்பதால் மனிதனை நியாயந்தீர்க்கவும் சிட்சிக்கவும் நான் நேரடியாக வந்திருக்கிறேன். இந்தக் கட்டத்தின் கிரியை முந்தைய கட்ட கிரியையின் மேல் கட்டமைக்கப்படுகிறது. ஆகவேதான், இந்த வகையான கிரியை மட்டுமே மனிதனைப் படிப்படியாக இரட்சிப்புக்குள் கொண்டுவர முடியும். இயேசுவும் நானும் ஒரே ஆவியில் இருந்து வருகிறோம். நாங்கள் எங்கள் மாம்சத்தில் தொடர்பற்றவர்களாக இருந்தாலும், எங்கள் ஆவிகள் ஒன்றே; நாங்கள் செய்வதன் உள்ளடக்கமும் நாங்கள் எடுத்துக்கொள்ளும் கிரியையும் ஒன்றாக இல்லாத போதும், நாங்கள் உட்சாரத்தில் ஒன்றுபோல் இருக்கிறோம்; எங்கள் மாம்சங்கள் வெவ்வேறு வடிவங்களை எடுக்கின்றன, ஆனால் இது யுகத்தின் மாற்றத்தாலும் எங்கள் கிரியையின் வேறுபடும் தேவைகளின் காரணமாகவும் ஆகும்; எங்கள் ஊழியங்கள் ஒன்றுபோல் இல்லை, ஆகவே நாங்கள் கொண்டுவரும் கிரியையும் நாங்கள் வெளிப்படுத்தும் மனநிலைகளும் கூட வேறாக இருக்கின்றன. யுக மாற்றத்தின் காரணமாக மனிதன் இன்றைய நாளில் பார்ப்பதும் புரிந்து கொள்ளுவதும் கடந்த காலத்தைப் போலல்லாமல் இருக்கின்றன. அவர்கள் பாலினத்திலும் தங்கள் மாம்சத்தின் வடிவத்திலும் வேறாக இருந்தாலும், அவர்கள் ஒரே குடும்பத்தில் பிறக்கவில்லை எனினும், ஒரே கால கட்டத்தில் இல்லாவிட்டாலும் கூட, அவர்களது ஆவி ஒன்றே. அவர்களுடைய மாம்சங்கள் இரத்தத்தையோ அல்லது எந்த வகையான உடலியல் உறவுகளையோ பகிரவில்லை, அவர்கள் இருவேறு கால கட்டத்தில் தேவனின் அவதார மாம்சங்களாக இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. ஆகவே அவர்கள் தேவனுடைய மனுவுருவான மாம்சங்களாக இருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். எனினும், அவர்கள் ஒரே இரத்தவழியைச் சேர்ந்தவர்கள் அல்ல மற்றும் ஒரே பொது மொழியைக் கொண்டவர்களும் அல்ல (ஒருவர் யூதர்களின் மொழியைப் பேசிய ஓர் ஆண் மற்றும் இன்னொருவர் சீன மொழியை மட்டுமே பேசும் ஒரு பெண்) எனினும் அவர்கள் தேவனின் அவதார மாம்சங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தக் காரணங்களால் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையின் பொருட்டு அவர்கள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டத்திலும் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் ஒரே ஆவியாக இருக்கிறார்கள், ஒரே சாராம்சத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கும் போதிலும், அவர்களுடைய மாம்சத்தின் புறப்பகுதியில் முழுமையான எந்த ஓர் ஒற்றுமையும் இல்லை. அவர்கள் ஒரே மனிதத்தன்மையைப் பகிர்ந்துகொண்டாலும், அவர்களுடைய மாம்சத்தின் புறத் தோற்றத்தையும் அவர்களுடைய பிறப்பின் சூழ்நிலைகளையும் பொறுத்த வரையில் அவர்கள் ஒன்றுபோல் இல்லை. அவர்களுடன் தொடர்புடைய கிரியை அல்லது அவர்களைப் பற்றி மனிதன் கொண்டிருக்கும் அறிவின் மேல் இந்த விஷயங்கள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, ஏனெனில் இறுதி ஆய்வில், அவர்கள் ஒரே ஆவியாக இருக்கிறார்கள், மேலும் ஒருவரும் அவர்களைப் பிரிக்க முடியாது. அவர்கள் இரத்த சம்பந்தமான உறவுடையவர்கள் இல்லை என்றாலும், அவர்களுடைய முழு இருப்பும் அவர்களுடைய ஆவியின் கட்டுப்பாட்டில் உள்ளது, அது அவர்களுக்கு வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு கிரியைக்கும், அவர்களுடைய மாம்சங்கள் வெவ்வேறு இரத்தவழிகளைக் கொண்டவையாகும். யேகோவாவின் ஆவி இயேசுவினுடைய ஆவியின் பிதா அல்ல, மற்றும் இயேசுவின் ஆவி யேகோவாவினுடைய ஆவியின் குமாரனும் அல்ல: அவை ஒரே ஆவியாகும். அதுபோலவே, இன்றைய தேவ அவதாரமும் இயேசுவும் இரத்தத்தால் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் ஒன்றே, இது ஏனெனில் அவர்களது ஆவி ஒன்றே. இரக்கம் மற்றும் அன்பான கருணையின் கிரியையும், மனிதனை நீதியாக நீயாயந்தீர்த்து கடிந்துகொள்ளுதலையும் மற்றும் மனிதன் மேல் சாபங்களை வரவழைப்பதையும் தேவனால் செய்ய முடியும்; முடிவில் உலகத்தை அழித்துத் துன்மார்க்கரை தண்டிக்கும் கிரியையும் அவரால் செய்ய முடியும். இவற்றை எல்லாம் அவர்தாமே செய்வதில்லையா? இது தேவனின் சர்வவல்லமை அல்லவா? மனிதர்களுக்காக நியாயப்பிரமாணங்களைப் பிரகடனப்படுத்தவும், அவனுக்குக் கட்டளைகளை விதிக்கவும் அவர் வல்லவராய் இருந்தார், மேலும் ஆதி இஸ்ரவேலர்களை பூமியில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த வழிகாட்டவும் அவரால் முடிந்தது, மேலும் ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்ட அவர்களை வழிநடத்தவும், அனைத்து இஸ்ரவேலர்களையும் அவரது ஆளுகையின் கீழ் வைக்கவும் அவரால் முடிந்தது. அவருடைய அதிகாரத்தின் நிமித்தமாக அவர் பூமியில் இஸ்ரவேல் மக்களுடன் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார். இஸ்ரவேலர்கள் அவரை எதிர்த்துக் கலகம் செய்யத் துணியவில்லை; அனைவரும் யேகோவாவை வணங்கி அவரது கட்டளைகளைப் பின்பற்றினர். அவரது அதிகாரத்தாலும் அவரது சர்வ வல்லமையாலும் செய்யப்பட்ட கிரியை இவ்வாறாக இருந்தது. பின்னர், கிருபையின் காலத்தில், பாவத்தில் வீழ்ந்த முழு மனுக்குலத்தையும் (இஸ்ரவேலர்கள் மட்டுமல்ல) இரட்சிக்க கிருபையின் காலத்தில் இயேசு வந்தார். அவர் இரக்கத்தையும் அன்பின் கருணையையும் மனிதனிடம் காட்டினார். கிருபையின் காலத்தில் மனிதன் கண்ட இயேசு அன்பின் கருணையால் நிரம்பி இருந்தார் மற்றும் எப்போதும் அவர் மனிதனை நேசித்தார், ஏனெனில் பாவத்தில் இருந்து மனுக்குலத்தை மீட்க அவர் வந்தார். அவர் தமது சிலுவை மரணம் வரை மனிதனை அவர்களது பாவத்தில் இருந்து மன்னிக்க முடிந்தது மற்றும் மனுக்குலத்தைப் பாவத்தில் இருந்து முற்றிலுமாக இரட்சித்தார். இக்கால கட்டத்தில் தேவன் மனிதனின் முன்னர் இரக்கம் மற்றும் அன்பின் கருணையோடு தோன்றினார்; அதாவது, அவர் மனிதனுக்காக ஒரு பாவநிவாரண பலியானார் மேலும் மனிதன் எப்போதும் மன்னிக்கப்படத் தக்கதாய் அவர் மனிதனின் பாவத்துக்காக சிலுவையில் அறையப்பட்டார். அவர் இரக்கம் உள்ளவர், பரிவுள்ளவர், பொறுமையுள்ளவர் மற்றும் அன்பானவர். மேலும், கிருபையின் காலத்தில் இயேசுவைப் பின்பற்றிய யாவரும் எல்லாவற்றிலும் பொறுமையாகவும் அன்பாகவும் இருக்க முயன்றனர். அவர்கள் துன்பத்திலும் நீடித்த பொறுமையோடு இருந்தனர், மேலும் அடிக்கப்பட்டபோதும், சபிக்கப்பட்டபோதும் அல்லது கல்லெறியப்பட்டபோதும் அவர்கள் ஒரு போதும் எதிர்த்துப் போராடவில்லை. ஆனால் கடைசிக் கட்டத்தில் அது அப்படி இருக்க முடியாது. இயேசுவும் யேகோவாவும் ஆவியில் ஒன்றாக இருந்த போதிலும், அவர்களது கிரியை முற்றிலும் ஒன்று போல் இருக்கவில்லை. யேகோவாவின் கிரியை காலத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவில்லை, ஆனால் காலத்தை வழிநடத்தியது, பூமியில் மனுக்குலத்தின் வாழ்க்கையை வழிநடத்தியது, மேலும் புறஜாதியார் தேசத்தில் ஆழமாக சீர்குலைந்திருப்போரை ஜெயம் கொள்ளுவதும் மற்றும் சீனாவில் இருக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களை மட்டுமல்லாமல் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ளவர்களையும் அனைத்து மனுக்குலத்தையும் வழிநடத்துவதே இன்றைய கிரியை. இந்தக் கிரியை சீனாவில் மட்டுமே செய்யப்படுவதாக உனக்குத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அது ஏற்கெனவே வெளிநாடுகளிலும் பரவத்தொடங்கி விட்டது. சீனாவுக்கு வெளியில் இருக்கும் மக்கள் ஏன் மீண்டும் மீண்டும் மெய்யான வழியை நாடுகிறார்கள்? இது ஏனெனில் ஆவியானவர் ஏற்கெனவே கிரியைசெய்ய தொடங்கிவிட்டார், மேலும் இன்று பேசப்படும் வார்த்தைகள் பிரபஞ்சம் எங்கும் உள்ள மக்களை நோக்கிப் பேசப்படுகின்றன. இதனுடன், கிரியையில் பாதி ஏற்கெனவே நடந்துகொண்டு இருக்கிறது. உலக சிருஷ்டிப்பில் இருந்து இன்று வரை, தேவ ஆவியானவர் இந்த மாபெரும் கிரியையை இயக்கத்தில் வைத்துள்ளார், மேலும் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு தேசங்களின் மத்தியில் அவர் வெவ்வேறு கிரியைகளைச் செய்திருக்கிறார். ஒவ்வொரு காலத்தின் மக்களும் அவரது வெவ்வேறு மனநிலைகளைக் காண்கின்றனர், அது அவர் செய்யும் வெவ்வேறு கிரியை மூலம் இயல்பாக வெளிப்படுத்தப்படுகின்றது. அவர் தேவன், இரக்கம் மற்றும் அன்பின் கருணையால் நிறைந்திருப்பவர்; அவர் மனிதனுக்கான பாவநிவாரண பலி மற்றும் மனிதனின் மேய்ப்பன்; ஆனால் அவரே மனிதனின் நியாயத்தீர்ப்பு, சிட்சை மற்றும் சாபம். மனிதனை பூமியின் மேல் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ அவரால் வழிநடத்த முடியும், மேலும் சீர்குலைந்த மனிதனை பாவத்தில் இருந்து அவரால் இரட்சிக்கவும் முடியும். இன்று, அவரை அறியாத மனித குலத்தை அவரால் ஜெயம் கொள்ள முடியும், மேலும் அனைவரும் அவருக்குக் கீழடங்கும் வகையில் அவரால் அவர்களைத் தமது ஆளுகையின் கீழ் விழுந்து பணியுமாறும் செய்ய முடியும். தாம் இரக்கமும் அன்பும் கொண்ட ஒரு தேவன் மட்டுமல்ல, ஞானம் மற்றும் அதிசயங்களின் ஒரு தேவன் மட்டுமல்ல, பரிசுத்தமான ஒரு தேவன் மட்டுமல்ல, ஆனால் அதற்கு மேல், மனிதனை நியாயந்தீர்க்கும் ஒரு தேவன் என்று அவர்களுக்குக் காட்ட முடிவில், பிரபஞ்சம் முழுவதும் அசுத்தமானவைகளையும் மக்களுக்கிடையில் அநீதியானவர்களையும் சுட்டெரிப்பார். மனுக்குலத்தின் மத்தியில் தீயவர்களுக்கு, அவர் சுட்டெரிப்பு, நியாயத்தீர்ப்பு, மற்றும் தண்டனையாக இருக்கிறார்; பரிபூரணப்படுத்தப்பட வேண்டியவர்களுக்கு, அவர் உபத்திரவம், சுத்திகரிப்பு மற்றும் சோதனைகள் மட்டுமல்லாமல் ஆறுதல், பராமரிப்பு, வார்த்தைகளின் வழங்கல், கையாளல் மற்றும் சீரமைப்பு. புறம்பாக்கப்பட்டவர்களுக்கு அவர் தண்டனையும் பழிவாங்கலும் ஆவார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க