தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 13

மார்ச் 27, 2023

ஆறாயிரம் ஆண்டுகால நிர்வகித்தல் திட்டம் முழுமைக்கும் செய்யப்பட்ட கிரியைகள் அனைத்தும் இப்போது முடிவடைய இருக்கின்றன. இந்தக் கிரியைகள் அனைத்தும் மனுஷனுக்கு வெளிப்படுத்தப்பட்டு மனுஷகுலத்தின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பின்னரே, தேவனின் மனநிலை, அவர் என்னவாக இருக்கிறார் மற்றும் எதைக் கொண்டிருக்கிறார் என்பதை மனுஷகுலம் அறிந்து கொள்ளும். இந்தக் கட்டத்தின் கிரியைகள் முழுமையாக முடிந்ததும், மனுஷனால் புரிந்து கொள்ளப்படாத அனைத்து மறைபொருட்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும், முன்னர் புரிந்து கொள்ளப்படாத அனைத்து உண்மைகளும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும், மேலும் மனுஷ இனம் அவர்களின் எதிர்காலப் பாதை மற்றும் அவர்கள் சென்றுசேரும் இடம் குறித்துச் சொல்லப்பட்டிருக்கும். இதுவே தற்போதைய கட்டத்தில் செய்யப்பட வேண்டிய கிரியைகள் ஆகும். இன்று மனுஷன் நடந்து செல்லும் பாதைதான் சிலுவையின் பாதை மற்றும் துன்பத்தின் பாதை என்றாலும், இன்று மனுஷன் செய்யும் பயிற்சி, இன்று அவன் புசித்துக் குடிக்கும் மற்றும் அனுபவிக்கும் விஷயங்கள் கிருபையின் யுகத்தில் நியாயப்பிரமாணத்தின் கீழ் மனுஷனிடம் வந்துவிழுந்ததில் இருந்து பெரியளவில் மாறுபட்டவையாகும். இன்றைய நாளில் மனுஷனிடம் கேட்கப்படுவது கடந்த காலத்தைப் போலல்லாதது, மேலும் நியாயப்பிரமாணத்தின் யுகத்தில் மனுஷனிடம் கேட்டதைப் போலல்லாதது ஆகும். இஸ்ரவேலில் தேவன் தம்முடைய கிரியையைச் செய்யும்போது மனுஷனிடம் நியாயப்பிரமாணத்தின் கீழ் என்ன கேட்கப்பட்டது? மனுஷன் ஓய்வு நாளையும், யேகோவாவின் நியாயப்பிரமாணங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை. யாரும் ஓய்வுநாளில் வேலை செய்யவோ, யேகோவாவின் நியாயப்பிரமாணங்களை மீறவோ கூடாது. ஆனால் இப்போது அப்படி இல்லை. ஓய்வுநாளில், மனுஷன் வழக்கம் போல் வேலை செய்கிறான், கூடுகிறான், ஜெபிக்கிறான், அவனுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படுவதில்லை. கிருபையின் யுகத்தில் இருப்பவர்கள் ஞானஸ்நானம் பெற வேண்டியிருந்தது, மேலும் அவர்கள் உபவாசம் இருக்கவும், அப்பத்தை பிட்கவும், திராட்சைரசம் பருகவும், முக்காடிடவும், அவர்களுக்காக மற்றவர்கள் அவர்களது கால்களைக் கழுவவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இப்போது, இந்த விதிகள் ஒழிக்கப்பட்டுள்ளன, ஆனால் மனுஷனிடமிருந்து அதைவிட அதிகமான கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன, ஏனென்றால் தேவனின் கிரியை இன்னும் ஆழமாக வளர்ந்து, மனுஷனின் பிரவேசம் உயர்ந்த இடத்தை அடைகிறது. கடந்த காலத்தில், இயேசு மனுஷன் மீது கை வைத்து ஜெபம் செய்தார், ஆனால் இப்போது எல்லாம் சொல்லப்பட்டுவிட்டதால், கைகளை வைப்பதால் என்ன பயன்? வார்த்தைகளால் மட்டுமே முடிவுகளை அடைய முடியும். கடந்த காலங்களில் அவர் மனுஷன் மீது கை வைத்தபோது, அது மனுஷனை ஆசீர்வதிப்பதற்கும், அவனுடைய நோய்களைக் குணப்படுத்துவதற்கும் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் இப்படித்தான் கிரியை செய்தார், ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்போது பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வதற்கும் முடிவுகளை அடைவதற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவருடைய வார்த்தைகள் உங்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன, உங்களுக்குச் சொல்லப்பட்டதைப் போலவே அவற்றை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அவருடைய வார்த்தைகளே அவருடைய சித்தம்; அவர் செய்ய விரும்பும் கிரியைகள் அவை. அவருடைய வார்த்தைகளின் மூலம், அவருடைய சித்தத்தையும், அவர் உன்னை அடையச் சொல்லும் விஷயங்களையும் நீ புரிந்துகொள்வாய், மேலும் கைகளை வைப்பதற்கான எந்த தேவையும் இல்லாமல் அவருடைய வார்த்தைகளை நீ நேரடியாகக் கடைப்பிடிக்கலாம். சிலர், "உமது கைகளை என்மீது வையும்! உம்முடைய ஆசீர்வாதத்தை நான் பெறுவதற்கும், உம்முள் நான் பங்கெடுப்பதற்கும் உமது கைகளை என்மேல் வையும்," என்று கூறுவர். இவை அனைத்தும் கடந்த காலத்திலிருந்து வந்த காலாவதியான நடைமுறைகள், இப்போது வழக்கற்றுப் போய்விட்டன, ஏனெனில் யுகம் மாறிவிட்டது. பரிசுத்த ஆவியானவர் சீரற்றதாகவோ அல்லது விதிகளை அமைப்பதற்கு இணங்கவோ இல்லாமல் யுகத்துக்கு ஏற்ப செயல்படுகிறார். யுகம் மாறிவிட்டது, மேலும் ஒரு புதிய யுகம் அதனுடன் புதிய கிரியையைக் கொண்டுவருகிறது. கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும் இதுதான் உண்மை, எனவே அவருடைய கிரியை ஒருபோதும் மீண்டும் நிகழ்த்தப்படுவதில்லை. கிருபையின் யுகத்தில், இயேசு, நோயைக் குணப்படுத்துவது, பிசாசுகளை விரட்டுவது, மனுஷனுக்காக ஜெபிக்க தமது கைகளை அவன்மீது வைப்பது, மனுஷனை ஆசீர்வதிப்பது போன்ற குறிப்பிட்ட அளவு கிரியைகளைச் செய்தார். இருப்பினும், இன்றைய நாளில் மீண்டும் அவ்வாறு செய்வது அர்த்தமற்றதாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்தில் அவ்வாறாகக் கிரியை செய்தார், ஏனென்றால் அது கிருபையின் யுகம், மனுஷன் அனுபவிக்கப் போதுமான கிருபை இருந்தது. அவனிடம் இருந்து எந்தவொரு காசும் கேட்கப்படவில்லை, அவனுக்கு விசுவாசம் இருந்தால், அவன் கிருபையைப் பெறுவான். அனைவரும் மிகவும் கிருபையுடன் நடத்தப்பட்டனர். இப்போது யுகம் மாறிவிட்டதாலும், தேவனின் கிரியை மேலும் முன்னேறியுள்ளதாலும்; சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் மூலமே மனுஷனின் கலகத்தனமும் மனுஷனுக்குள் இருக்கும் அசுத்தமான விஷயங்களும் அகற்றப்படும். அந்தக் கட்டம் மீட்பின் கட்டமாக இருப்பதால், மனுஷன் பாவத்திலிருந்து மீட்கப்படுவதற்கும், கிருபையின் மூலம் அவன் செய்த பாவங்களை மன்னிப்பதற்கும், மனுஷன் அனுபவிக்கப் போதுமான கிருபையை காண்பிப்பதற்கும், அவ்வாறாகச் செயல்படுவதற்கும் தேவன் விரும்பினார். இந்தத் தற்போதைய கட்டம், மனுஷனுக்குள் உள்ள அநீதியை சிட்சை, நியாயத்தீர்ப்பு, வார்த்தைகளால் அடித்தல், அத்துடன் ஒழுக்கம் மற்றும் வார்த்தைகளின் வெளிப்பாடு ஆகியவற்றின் மூலம் அம்பலப்படுத்துவதாகும், இதனால் மனுஷகுலம் பின்னர் இரட்சிக்கப்படலாம். இது மீட்பை விட ஆழமான கிரியை ஆகும். கிருபையின் யுகத்தில் இருந்த கிருபை மனுஷனின் இன்பத்திற்குப் போதுமானதாக இருந்தது; இப்போது மனுஷன் இந்தக் கிருபையை ஏற்கனவே அனுபவித்திருப்பதால், இனி அவன் அதை அனுபவிக்க மாட்டான். இந்தக் கிரியை இப்போது அதன் நேரத்தைக் கடந்துவிட்டது, இனியும் செய்யப்படாது. இப்போது வார்த்தையின் நியாயத்தீர்ப்பின் மூலம் மட்டுமே மனுஷன் இரட்சிக்கப்பட இருக்கிறான். மனுஷன் நியாயந்தீர்க்கப்பட்டு, சிட்சிக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பிறகு, அவனது மனநிலை மாறுகிறது. இவையெல்லாம் நான் பேசிய வார்த்தைகளால்தான் இல்லையா? ஒவ்வொரு கட்ட கிரியையும் மனுஷ இனம் முழுமைக்குமான முன்னேற்றத்திற்கும் யுகத்திற்கும் ஏற்ப செய்யப்படுகிறது. இந்தக் கிரியை அனைத்தும் குறிப்பிடத்தக்கவை, எதிர்காலத்தில் மனுஷகுலத்திற்கு ஒரு நல்ல போய்சேரும் இடம் இருக்கக்கூடும், இறுதியில் மனுஷகுலம் வகைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படலாம் என்பதற்காக இவை அனைத்தும் இறுதி இரட்சிப்பின் பொருட்டு செய்யப்படுகின்றன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாம்சமாகியதன் மறைபொருள் (4)" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க