தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 10

மார்ச் 16, 2023

மூன்று கட்ட கிரியைகளும் ஒரே தேவனால்தான் செய்யப்பட்டன; இதுதான் மிகப் பெரிய தரிசனமாகும், மேலும் இதுதான் தேவனை அறிந்துகொள்வதற்கான ஒரே பாதையாகும். மூன்று கட்ட கிரியைகளும் தேவனால் மட்டுமே செய்யப்பட்டிருக்க முடியும், எந்த மனுஷனாலும் அவர் சார்பாக இதுபோன்ற கிரியையைச் செய்திருக்க முடியாது. அதாவது, தேவனால் மட்டுமே ஆதியில் இருந்து இன்று வரை தனது சொந்தக் கிரியையைச் செய்திருக்க முடியும். தேவனுடைய மூன்று கட்ட கிரியைகள் வெவ்வேறு யுகங்களிலும் இடங்களிலும் செய்யப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கிரியையும் வேறுபட்டதாக இருந்தாலும், இவை அனைத்தும் ஒரே தேவனால் செய்யப்படும் கிரியையாகும். எல்லா தரிசனங்களிலும், இதுவே மனுஷன் அறிந்துகொள்ள வேண்டிய மிகப் பெரிய தரிசனமாக இருக்கிறது. மனுஷனால் அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தால், அவனால் உறுதியாக நிற்க முடியும். இன்று, பல்வேறு மதங்கள் மற்றும் மதப்பிரிவுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை அறிவதில்லை, மேலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கும் பரிசுத்த ஆவியானவருடையதல்லாத கிரியைக்கும் இடையிலான வேறுபாட்டை அறிய முடிவதில்லை, இதனால், அவர்கள் கடைசி இரண்டு கட்ட கிரியைகளைப் போலவே, இந்தக் கட்ட கிரியையும் யேகோவா தேவனால் செய்யப்படுகிறதா என்று சொல்ல முடிவதில்லை. ஜனங்கள் தேவனைப் பின்பற்றினாலும், பெரும்பாலானவர்களால் இது சரியான வழிதானா என்று இன்னும் சொல்ல முடிவதில்லை. தேவனால் தனிப்பட்ட முறையில் வழிநடத்தப்படுகிற வழி இதுதானா, தேவன் மாம்சமாகியிருப்பது உண்மைதானா என்று மனுஷன் கவலைப்படுகிறான், மேலும் இதுபோன்ற விஷயங்களை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றிய எந்த துப்பும் இன்னமும் பெரும்பாலானவர்களிடம் இல்லை. தேவனைப் பின்பற்றுபவர்களால் வழியைத் தீர்மானிக்க முடியவில்லை. ஆகையால், பேசப்படும் செய்திகள் இந்த ஜனங்கள் மத்தியில் ஒரு பகுதியளவு தாக்கத்தை மட்டுமே கொண்டுள்ளன, மேலும் அவற்றால் முழுவதும் பயனுள்ளதாக இருக்க முடியாது, ஆதலால் இதுபோன்றவர்களின் ஜீவிய பிரவேசத்தை இது பாதிக்கிறது. மூன்று கட்ட கிரியைகளிலும் அவை வெவ்வேறு யுகங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நபர்களிடம் தேவனால் செய்யப்பட்டவை என்பதை மனுஷனால் பார்க்க முடிந்தால், கிரியை வேறுபட்டதாக இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே தேவனால்தான் செய்யப்படுகின்றன என்பதை மனுஷனால் பார்க்க முடிந்தால், அது ஒரே தேவனால் செய்யப்பட்ட கிரியை என்பதனால், அது சரியானதாகவும் பிழையில்லாததுமாக இருக்க வேண்டும். மேலும் அது மனுஷனின் கருத்துக்களுடன் முரண்பட்டதாக இருந்தாலும், அது ஒரே தேவனுடைய கிரியை என்பதை மறுப்பதற்கில்லை. இது ஒரே தேவனுடைய கிரியைதான் என்று மனுஷனால் உறுதியாகச் சொல்ல முடிந்தால், மனுஷனுடைய கருத்துக்கள் வெறும் அற்பமானவையாக குறைக்கப்படும், குறிப்பிடத் தகுதியற்றவையாகிவிடும். மனுஷனுடைய தரிசனங்கள் தெளிவற்றவையாக இருப்பதனாலும், மனுஷன் யேகோவாவை தேவனாகவும், இயேசுவை கர்த்தராகவும் மட்டுமே அறிந்திருப்பதாலும், இன்றைய மாம்சமாகிய தேவனைப் பற்றி இரு மனதுடன் காணப்படுவதாலும், பலர் யேகோவா மற்றும் இயேசுவின் கிரியையில் அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றார்கள், இன்றைய கிரியையை பற்றிய கருத்துக்களால் குழம்பியிருக்கின்றார்கள், பெரும்பாலானவர்கள் எப்போதும் சந்தேகத்துடன் காணப்படுவதோடு, இன்றைய கிரியையைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. கண்ணுக்குத் தெரியாத கடைசி இரண்டு கட்ட கிரியைகளைப் பற்றி மனுஷனிடம் எந்தக் கருத்தும் இல்லை. ஏனென்றால், கடைசி இரண்டு கட்ட கிரியைகளின் யதார்த்தத்தை மனுஷன் புரிந்துகொள்ளவில்லை, தனிப்பட்ட முறையில் அவற்றைப் பார்த்ததும் இல்லை. ஏனென்றால், இந்தக் கட்ட கிரியைகளை மனுஷன் விரும்புவது போலக் கற்பனை செய்து பார்க்க முடியாது. அவன் எதைக் கொண்டு வந்தாலும், இதுபோன்ற கற்பனைகளை நிரூபிக்க எந்த உண்மைகளும் இல்லை, அவற்றைச் சரிசெய்ய யாருமில்லை. மனுஷன் தனது மனப்போக்கிற்கு மிகவும் சுதந்திரம் கொடுக்கிறான், எச்சரிக்கையைக் காற்றில் பறக்கவிட்டு, அவனது கற்பனையைச் சுதந்திரமாக அலையவிடுகிறான். ஏனென்றால், அவனுடைய கற்பனைகளைச் சரிபார்க்க எந்த உண்மைகளும் இல்லை, ஆகையால் மனுஷனுடைய கற்பனைகளுக்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்பதைப் பொருட்படுத்தாமல், அவை "உண்மை" ஆகின்றன. இவ்வாறு மனுஷன் தன் மனதில் கற்பனை செய்துள்ள தேவனை நம்புகிறான், யதார்த்த தேவனையோ தேடுவதில்லை. ஒரு நபருக்கு ஒரு வகையான நம்பிக்கை இருந்தால், நூறு பேரிடம் நூறு வகையான நம்பிக்கைகள் இருக்கும். மனுஷன் தேவனுடைய கிரியையின் யதார்த்தத்தைக் காணாததாலும், அவன் அதைக் காதுகளால் மட்டுமே கேட்டு, அதைக் கண்களால் காணாததால், அவன் இதுபோன்ற நம்பிக்கைகளைக் கொண்டவனாக இருக்கிறான். மனுஷன் புராணங்களையும் கதைகளையும் கேட்டிருக்கிறான், ஆனால் தேவனுடைய கிரியையின் உண்மைகளைப் பற்றிய அறிவை அரிதாகவே கேள்விப்பட்டிருக்கின்றான். இவ்வாறு, ஒரு வருடமாக மட்டுமே விசுவாசிகளாக இருப்பவர்கள் தங்களுடைய சொந்தக் கருத்துக்களின் மூலமாகவே தேவனை விசுவாசிக்கிறார்கள். இது தங்கள் வாழ்நாள் முழுவதும் தேவனை விசுவாசித்தவர்களுக்கும் பொருந்தும். உண்மைகளைப் பார்க்க முடியாதவர்களால் ஒருபோதும் தேவனைப் பற்றிய கருத்துக்களைக் கொண்ட ஒரு விசுவாசத்திலிருந்து தப்பிக்க முடியாது. மனுஷன் தனது பழைய கருத்துக்களின் கட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, புதிய பிரதேசத்திற்குள் பிரவேசித்துவிட்டதாக நம்புகிறான். தேவனுடைய உண்மையான முகத்தைப் பார்க்க முடியாதவர்களின் அறிவு என்பது கருத்துக்களும் வதந்திகளுமே தவிர வேறு எதுவுமில்லை என்று மனுஷனுக்குத் தெரியாதா? மனுஷன் தனது கருத்துக்கள் சரியானவையாகவும் பிழையில்லாமலும் இருப்பதாக நினைக்கிறான், மேலும் இந்தக் கருத்துக்கள் தேவனிடமிருந்து வந்தவை என்றும் நினைக்கிறான். இன்று, மனுஷன் தேவனுடைய கிரியையைக் காணும்போது, பல வருடங்களாகக் கட்டி வைத்திருந்த கருத்துக்களை விட்டுவிடுகிறான். கடந்த காலத்தின் கற்பனைகளும் கருத்துக்களும் இந்தக் கட்டத்தின் கிரியைக்கு ஒரு தடையாக மாறியுள்ளன. மேலும், இதுபோன்ற கருத்துக்களை விட்டுவிடுவதும், இதுபோன்ற கருத்துக்களை மறுப்பதும் மனுஷனுக்கு கடினமாகிவிட்டது. இன்றுவரை தேவனைப் பின்தொடர்ந்தவர்களில் பலரின் இந்தப் படிப்படியான கிரியையைப் பற்றிய கருத்துக்கள் இன்னும் படுமோசமாகிவிட்டன. இவர்கள் மாம்சமாகிய தேவன் மீது படிப்படியாக ஒரு பிடிவாதமான பகைமையை உருவாக்கியுள்ளனர். இந்த வெறுப்பின் மூலக்காரணமானது மனுஷனுடைய கருத்துக்களிலும் கற்பனைகளிலும்தான் உள்ளது. மனுஷனுடைய கருத்துக்களும் கற்பனைகளும் இன்றைய கிரியைக்கு எதிரியாகிவிட்டன, இக்கிரியை மனுஷனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறது. உண்மைகள் மனுஷனை அவனுடைய கற்பனைக்குச் சுதந்திரம் கொடுக்க அனுமதிக்காததினாலும் மற்றும் அவற்றை மனுஷனால் எளிதில் மறுக்க முடியாததினாலுமே இது நடந்துள்ளது. மேலும், மனுஷனுடைய கருத்துக்களும் கற்பனைகளும் உண்மைகள் இருப்பதை ஆதரிக்கவில்லை. மேலும், மனுஷன் உண்மைகளின் சரித்தன்மையையும் உண்மைத்தன்மையையும் குறித்துச் சிந்திக்காததனால், பிடிவாதமாகத் தனது கருத்துக்களை அவிழ்த்துவிட்டு, தனது சொந்த கற்பனையைப் பயன்படுத்துகிறான். இது மனுஷனுடைய கருத்துக்களின் தவறு என்று மட்டுமே கூற முடியுமே தவிர, இது தேவனுடைய கிரியையின் தவறு என்று கூற முடியாது. மனுஷன் தான் விரும்புகிற எதை வேண்டுமானாலும் கற்பனை செய்யலாம், ஆனால் தேவனுடைய எந்தக் கட்ட கிரியையும் அல்லது அதில் எந்த சிறு பகுதியையும் அவன் தன்னிச்சையாக மறுக்காமல் போகலாம்; தேவனுடைய கிரியைக் குறித்த உண்மை மனுஷனால் மீறக்கூடாததாக இருக்கிறது. நீ உனது கற்பனைக்குச் சுதந்திரம் கொடுக்கலாம், யேகோவா மற்றும் இயேசுவின் கிரியைகளைப் பற்றிய நல்ல கதைகளைத் தொகுக்கலாம், ஆனால் யேகோவா மற்றும் இயேசுவின் ஒவ்வொரு கட்ட கிரியையின் உண்மையையும் நீ மறுக்காமல் இருக்கலாம். இது ஒரு கொள்கையாகும், மேலும் இது ஒரு நிர்வாக ஆணையாகும். மேலும், இந்தப் பிரச்சனைகளின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்ட கிரியையானது மனுஷனுடைய கருத்துக்களுடன் பொருந்தாது என்றும், முந்தைய இரண்டு கட்ட கிரியைகளுக்கான காரியம் அல்ல என்றும் மனுஷன் நம்புகிறான். அவனுடைய கற்பனையில், முந்தைய இரண்டு கட்டங்களின் கிரியையும் நிச்சயமாகவே இன்றைய கிரியைக்கு சமமானதல்ல என்று மனுஷன் நம்புகிறான், ஆனால் தேவனுடைய கிரியையின் கொள்கைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை என்றும், அவருடைய கிரியை எப்போதும் நடைமுறையானது என்றும் மற்றும் யுகத்தைப் பொருட்படுத்தாமல், அவருடைய கிரியையின் உண்மையை எதிர்க்கும் ஒரு பெரிய ஜனக்கூட்டம் எப்போதும் இருக்கும் என்றும் நீ எப்போதாவது கருதியிருக்கிறாயா? இந்தக் கட்ட கிரியையை இன்று எதிர்ப்பவர்கள் அனைவரும் சந்தேகத்திற்கு இடமின்றி கடந்த காலங்களிலும் தேவனை எதிர்த்திருப்பார்கள், ஏனென்றால் இதுபோன்றவர்கள் எப்போதுமே தேவனுடைய எதிரிகளாகத்தான் இருப்பார்கள். தேவனுடைய கிரியைப் பற்றிய உண்மையை அறிந்தவர்கள், மூன்று கட்ட கிரியைகளையும் ஒரே தேவனுடைய கிரியையாகவே பார்ப்பார்கள் மற்றும் தங்களுடைய கருத்துக்களை விட்டுவிடுவார்கள். இவர்கள்தான் தேவனை அறிந்தவர்கள், இதுபோன்றவர்கள்தான் தேவனை உண்மையாகவே பின்பற்றுபவர்கள். தேவனுடைய முழு நிர்வாகமும் அதன் முடிவை நெருங்கும் போது, தேவன் எல்லாவற்றையும் வகைக்கு ஏற்ப வகைப்படுத்துவார். மனுஷன் சிருஷ்டிகரின் கைகளால் சிருஷ்டிக்கப்பட்டான், இறுதியில் அவர் மனுஷனை தமது ஆளுகையின் கீழ் முழுமையாகத் திருப்பிக் கொண்டுவர வேண்டும்; இதுவே மூன்று கட்ட கிரியைகளின் முடிவாகும். கடைசிக்கால கிரியையின் கட்டமும், இஸ்ரவேல் மற்றும் யூதேயாவிலுள்ள முந்தைய இரண்டு கட்டங்களும் முழுப் பிரபஞ்சத்திலுமுள்ள தேவனுடைய நிர்வாகத் திட்டமாகும். இதை ஒருவராலும் மறுக்க முடியாது, இது தேவனுடைய கிரியையைக் குறித்த உண்மையாகும். இந்தக் கிரியையை ஜனங்கள் அதிகம் அனுபவித்திருக்கவில்லை அல்லது கண்டிருக்கவில்லை என்றாலும், உண்மைகள் இன்னும் உண்மைகளாகவே இருக்கின்றன, இது எந்த மனிதனும் மறுக்க முடியாததாக இருக்கிறது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு தேசத்திலும் தேவனை நம்புகிறவர்கள் எல்லோரும் மூன்று கட்ட கிரியைகளையும் ஏற்றுக்கொள்வார்கள். நீ ஒரு கட்ட கிரியையை மட்டுமே அறிந்திருந்து, மற்ற இரண்டு கட்ட கிரியைகளைப் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை என்றால் மற்றும் கடந்த காலத்திலுள்ள தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், தேவனுடைய முழு நிர்வாகத் திட்டத்தைப் பற்றிய முழுமையான சத்தியத்தை உன்னால் பேச முடியாது மற்றும் தேவனைப் பற்றிய உனது அறிவு ஒருதலைப்பட்சமானதாகவே இருக்கிறது. ஏனென்றால், தேவன் மீதான உனது விசுவாசத்தில் நீ தேவனை அறிந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ இல்லை, ஆகையால் தேவனுக்குச் சாட்சி பகருவதற்கு நீ பொருத்தமானவனாக இல்லை. இக்காரியங்களைப் பற்றிய உனது தற்போதைய அறிவு ஆழமானதா அல்லது மேலோட்டமானதா என்பதைப் பொருட்படுத்தாமல், நீ இறுதியில் அறிவைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் முழுமையாக நம்பியிருக்க வேண்டும். ஜனங்கள் எல்லோரும் தேவனுடைய முழு கிரியையையும் கண்டு அவருடைய ஆளுகையின் கீழ் அடிபணிவார்கள். இக்கிரியையின் முடிவில், எல்லா மதங்களும் ஒன்றாகிவிடும், எல்லாச் சிருஷ்டிகளும் சிருஷ்டிகரின் ஆளுகையின் கீழ் திரும்புவார்கள், எல்லாச் சிருஷ்டிகளும் ஒரே மெய்தேவனை வணங்குவார்கள். தீய மதங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போகும், மீண்டும் ஒருபோதும் தோன்றாது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய மூன்று கட்ட கிரியைகளையும் அறிந்துகொள்வதே தேவனை அறிந்துகொள்ளும் பாதையாகும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க