தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 4
மார்ச் 3, 2021
தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் கிரியை முழுவதும் தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகிறது. முதல் கட்டம்—உலகத்தைச் சிருஷ்டித்தல்—இது தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்பட்டது, அது அவ்வாறு இல்லாதிருந்தால், மனிதகுலத்தைச் சிருஷ்டிக்கும் வல்லமை வேறு யாருக்கும் இருந்திருக்காது; இரண்டாவது கட்டம் அனைத்து மனிதகுலத்தையும் மீட்பது ஆகும், இதுவும்கூட தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்பட்டது; மூன்றாவது கட்டம் பற்றிச் சொல்லாமலே அது விளங்கும்: அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வரும் தேவனின் கிரியைகள் எல்லாமும் தேவனால் தாமே செய்யப்பட வேண்டும் என்பதற்கு இன்னும் பெரிய தேவை உள்ளது. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் மீட்பது, ஜெயங்கொள்வது, ஆதாயப்படுத்துவது, மனித குலம் முழுவதையும் பரிபூரணப்படுத்துவது ஆகிய அனைத்தும் தனிப்பட்ட முறையில் தேவனால் தாமே செய்யப்படுகின்றன. அவர் தனிப்பட்ட முறையில் இந்தக் கிரியையைச் செய்யவில்லை என்றால், அவருடைய அடையாளத்தைப் பிரதிநிதித்துவம் செய்யவோ அல்லது அவரது கிரியையை அறிந்துகொள்ளவோ மனிதனால் முடியாது. சாத்தானைத் தோற்கடிப்பதற்காக, மனிதகுலத்தை ஆதாயப்படுத்த, மனிதனுக்கு பூமியில் ஓர் இயல்பான ஜீவிதத்தைத் தருவதற்காக, அவருடைய முழு நிர்வாகத் திட்டத்துக்காகவும், அவருடைய எல்லா கிரியைகளுக்காகவும், அவர் தனிப்பட்ட முறையில் மனிதனை வழிநடத்துகிறார், தனிப்பட்ட முறையில் மனிதர்களிடையே கிரியை செய்கிறார், அவர் தனிப்பட்ட முறையில் இந்தக் கிரியையை அவசியம் செய்ய வேண்டும். மனிதன் அவரைக் காணும் படிக்கு, மனிதன் சந்தோஷப்படுவதற்காக தேவன் வந்தார் என்று மட்டுமே மனிதன் நம்பினால், அத்தகைய நம்பிக்கைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை, முக்கியத்துவமும் இல்லை. மனிதன் விளங்கிக் கொள்வது மிகவும் மேலோட்டமானது! இந்தக் கிரியையைத் தானே நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே தேவன் இந்தக் கிரியையைப் பரிபூரணமாகவும் முழுமையாகவும் செய்ய முடியும். தேவன் சார்பாக மனிதனால் அதைச் செய்ய இயலாது. தேவனின் அடையாளமோ அல்லது அவருடைய சாராம்சமோ அவனுக்கு இல்லாததால், அவனால் தேவனின் கிரியையைச் செய்ய இயலாது, மனிதன் இந்தக் கிரியையைச் செய்தாலும், அதற்கு எந்த விளைவும் இருக்காது. மீட்புக்காகவும், எல்லா மனிதர்களையும் பாவத்திலிருந்து மீட்பதற்கும், மனிதன் தூய்மைப்படுத்தப்படுவதற்கு ஏற்றவன் ஆவதற்கும், அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்படுவதற்கும் தேவன் முதன்முதலில் மாம்சமாக ஆனார். மேலும் மனிதர்களிடையே ஜெயங்கொள்ளும் கிரியையும் தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்படுகிறது. இந்தக் கட்டத்தில், தேவன் தீர்க்கதரிசனத்தை மட்டுமே பேசினால், ஒரு தீர்க்கதரிசி அல்லது அத்தகைய திறமை பெற்ற ஒருவர் அவருடைய இடத்தைப் பிடிக்க முடியும்; தீர்க்கதரிசனம் பற்றி மட்டுமே பேசப்பட்டால், மனிதன் தேவனுக்குப் பதிலீடாக இருக்க முடியும். மனிதன் தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்யும் கிரியையைச் செய்ய முயன்றால், மேலும் மனிதனின் ஜீவித காரியத்தைச் செய்ய முயன்றால், அவனால் அந்தக் கிரியையைச் செய்ய இயலாது. இது தேவனால் தாமே தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டும்: இந்தக் கிரியையைச் செய்யத் தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாற வேண்டும். வார்த்தையின் காலத்தில், தீர்க்கதரிசனம் மட்டுமே பேசப்பட்டால், ஏசாயா அல்லது எலியா தீர்க்கதரிசி இந்தக் கிரியையைச் செய்ய முடியும், மேலும் அதைத் தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்ய வேண்டியதில்லை. இந்தக் கட்டத்தில் செய்யப்படும் கிரியைகள் வெறுமனே தீர்க்கதரிசனத்தைப் பேசுவதல்ல, மேலும் மனிதனை ஜெயங்கொள்ளவும் சாத்தானைத் தோற்கடிக்கவும் வார்த்தைகளின் கிரியை பயன்படுத்தப்படுவது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், இந்தக் கிரியையை மனிதனால் செய்ய முடியாது, தனிப்பட்ட முறையில் தேவன் தாமே செய்ய வேண்டும். நியாயப்பிரமாணத்தின் காலத்தில் யேகோவா தம்முடைய கிரியையின் ஒரு பகுதியைச் செய்தார், அதன் பிறகு அவர் சில வார்த்தைகளைப் பேசினார், தீர்க்கதரிசிகள் மூலம் சில கிரியைகளைச் செய்தார். இது ஏனென்றால், மனிதன் யேகோவாவை அவரது கிரியையில் பதிலீடு செய்ய முடியும், மேலும் தீர்க்கதரிசிகள் விஷயங்களை முன்னறிவிக்கவும், அவர் சார்பாகச் சில கனவுகளை விளக்கவும் முடியும். ஆரம்பத்தில் செய்யப்பட்ட கிரியை மனிதனின் மனநிலையை நேரடியாக மாற்றும் கிரியை அல்ல, அது மனிதனின் பாவத்துடன் தொடர்பில்லாதது, மேலும் மனிதன் நியாயப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட வேண்டிய தேவை இருந்தது. ஆகவே, யேகோவா மாம்சமாகி, தன்னை மனிதனுக்கு வெளிப்படுத்தவில்லை; அதற்குப் பதிலாக அவர் மோசேயுடனும் மற்றவர்களுடனும் நேரடியாகப் பேசினார், அவர்களை அவர் சார்பாகப் பேசவும் கிரியை செய்யவும் அனுமதித்தார், மேலும் அவர்கள் நேரடியாக மனிதர்களிடையே கிரியை செய்யும்படி செய்தார். தேவனுடைய முதல் கட்டக் கிரியை மனிதனின் தலைமையாக இருந்தது. இது சாத்தானுக்கு எதிரான யுத்தத்தின் தொடக்கமாக இருந்தது, ஆனால் இந்த யுத்தம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவில்லை. சாத்தானுக்கு எதிரான அதிகாரப்பூர்வ யுத்தம் தேவன் முதலில் மாம்ச உருவம் எடுத்தபோது தொடங்கியது, அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேவன் மாம்ச உருவம் எடுத்துச் சிலுவையில் அறையப்பட்டதுதான் இந்த யுத்தத்தின் முதல் சண்டை. மனித உருவம் எடுத்த தேவன் சிலுவையில் அறையப்பட்டது சாத்தானைத் தோற்கடித்தது, அதுதான் யுத்தத்தின் முதல் வெற்றிகரமான கட்டமாகும். மனித உருவம் எடுத்த தேவன் மனிதனின் ஜீவிதத்தில் நேரடியாகக் கிரியை செய்யத் தொடங்கியபோது, அதுதான் மனிதனை மீட்டெடுக்கும் கிரியையின் அதிகாரப்பூர்வத் தொடக்கமாகும், மேலும் இது மனிதனின் பழைய மனநிலையை மாற்றும் கிரியை என்பதால், இது சாத்தானுடன் போரிடுவதற்கான கிரியை ஆகும். ஆரம்பத்தில் யேகோவா செய்த கிரியையின் கட்டமானது பூமியில் மனிதனின் ஜீவிதத்தின் தலைமைத்துவம் மட்டுமேயாகும். இது தேவனின் கிரியையின் தொடக்கமாக இருந்தது, அது இன்னும் எந்தவொரு யுத்தத்திலும் அல்லது எந்தவொரு பெரிய கிரியையிலும் ஈடுபடவில்லை என்றாலும், அது வரவிருக்கும் யுத்தத்தின் கிரியைக்கு அடித்தளத்தை அமைத்தது. பின்னர், கிருபையின் காலத்தின் இரண்டாம் கட்டக் கிரியை மனிதனின் பழைய மனநிலையை மாற்றுவதை உள்ளடக்கியது, அதாவது மனிதனின் ஜீவிதத்தை தேவன் தாமே வார்த்தெடுத்தார். இதனை தேவன் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டியிருந்தது: இதற்கு தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சமாக மாற வேண்டியிருந்தது. அவர் மாம்சமாக மாறாமல் இருந்திருந்தால், இந்தக் கிரியையின் கட்டத்தில் வேறு யாரும் அவருக்குப் பதிலீடு செய்திருக்க முடியாது, ஏனென்றால் அது சாத்தானுக்கு எதிராக நேரடியாகப் போரிடும் கிரியையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. மனிதன் இந்த வேலையை தேவனின் சார்பாக செய்திருந்தால், மனிதன் சாத்தானுக்கு முன் நின்றபோது, சாத்தான் கீழ்ப்படிந்திருக்க மாட்டான், அவனைத் தோற்கடிப்பது சாத்தியம் இல்லாது போகும். அதைத் தோற்கடிக்க வந்தது மனித உருவம் எடுத்த தேவனாகத்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் மனித உருவம் எடுத்த தேவன் சாராம்சத்தில் இன்னும் தேவன்தான், அவர் இன்னும் மனிதனின் ஜீவிதம்தான், அவர் இன்னும் சிருஷ்டிகராகவே இருக்கிறார்; என்ன நடந்தாலும், அவருடைய அடையாளமும் சாராம்சமும் மாறாது. எனவே, அவர் மாம்ச உருவத்தை எடுத்துக்கொண்டார் மற்றும் சாத்தானின் பரிபூரணமான கீழ்ப்படிதலை ஏற்படுத்தும் கிரியையைச் செய்தார். கடைசிக் காலத்தின் கிரியையின் போது, மனிதனை இந்தக் கிரியையைச் செய்து, வார்த்தைகளை நேரடியாகப் பேசும்படி செய்திருந்தால், அவனால் அவற்றைப் பேசமுடிந்திருக்காது, தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தால், இந்தத் தீர்க்கதரிசனத்தால் மனிதனை ஜெயங்கொள்ள முடியாமல் இருந்திருக்கும். மாம்ச உருவத்தை எடுத்துக் கொள்வதன் மூலம், தேவன் சாத்தானைத் தோற்கடித்து அதன் முற்றிலுமான அடிபணிதலை ஏற்படுத்தினார். அவர் சாத்தானை முற்றிலுமாகத் தோற்கடித்து, மனிதனைப் பரிபூரணமாக ஜெயங்கொண்டு, மனிதனை முழுவதுமாக ஜெயங்கொள்ளும் போது, இந்தக் கட்டக் கிரியை முடிவடைந்து ஜெயம் கிடைக்கும். தேவனின் நிர்வாகத்தில், மனிதன் தேவனுக்கு மாற்றீடாக இருக்க முடியாது. குறிப்பாக, காலத்தை வழிநடத்துவதற்கு மற்றும் புதிய கிரியையைத் தொடங்குவதற்குத் தேவனால் தாமே தனிப்பட்ட முறையில் கிரியைகள் செய்யப்பட வேண்டிய தேவை அதிகமாக உள்ளது. மனிதனுக்கு வெளிப்பாட்டைக் கொடுப்பதும், தீர்க்கதரிசனத்தை வழங்குவதும் மனிதனால் செய்யப்படலாம், ஆனால் அது தேவனால் தனிப்பட்ட முறையில் செய்யப்பட வேண்டிய கிரியை என்றால், அது தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையிலான யுத்தத்தின் கிரியை என்றால், பின்பு இந்தக் கிரியையை மனிதனால் செய்ய முடியாது. முதல் கட்டக் கிரியையின் போது, சாத்தானுடன் போர் இல்லாதபோது, தீர்க்கதரிசிகள் பேசிய தீர்க்கதரிசனத்தைப் பயன்படுத்தி யேகோவா தனிப்பட்ட முறையில் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார். பின்னர், இரண்டாம் கட்ட கிரியையானது சாத்தானுடனான யுத்தம், மற்றும் தேவன் தாமே தனிப்பட்ட முறையில் மாம்சமாகி, இந்தக் கிரியையைச் செய்ய மாம்சத்திற்குள் வந்தார். சாத்தானுக்கு எதிரான யுத்தத்தில் சம்பந்தப்பட்ட எதுவும் மனித உருவம் எடுத்த தேவனையும் உள்ளடக்கியது, அதாவது இந்த யுத்தத்தை மனிதனால் தொடங்க முடியாது. மனிதன் யுத்தம் செய்தால், அவன் சாத்தானைத் தோற்கடிக்க சக்தியில்லாதவன். அதன் ஆதிக்கத்தின்கீழ் இருக்கும்போது அதை எதிர்த்துப் போராடுவதற்கான வலிமை அவனுக்கு எப்படி இருக்க முடியும்? மனிதன் இவற்றுக்கு இடையில் இருக்கிறான்: நீ சாத்தானை நோக்கிச் சாய்ந்தால், நீ சாத்தானுக்குச் சொந்தம், ஆனால் நீ தேவனைத் திருப்திப்படுத்தினால், நீ தேவனுக்குச் சொந்தமானவன். இந்த யுத்தத்தின் கிரியையில் மனிதன் முயற்சித்து தேவனுக்கு மாற்றீடு ஆகலாமா, அவனால் முடியுமா? அவன் அவ்வாறு செய்திருந்தால், அவன் வெகு காலத்திற்கு முன்பே அழிந்து போயிருக்க மாட்டானா? அவன் நீண்ட காலத்திற்கு முன்பே பாதாள உலகுக்குள் நுழைந்திருப்பான் அல்லவா? ஆகவே, மனிதன் தேவனை அவரது கிரியையில் மாற்றீடு செய்ய முடியாது, அதாவது மனிதனுக்கு தேவனின் சாராம்சம் இல்லை, அதாவது நீ சாத்தானுடன் போரிட்டால் அதை உன்னால் தோற்கடிக்க இயலாது. மனிதனால் சில வேலைகளை மட்டுமே செய்ய முடியும்; அவன் சிலரை ஜெயிக்க முடியும், ஆனால் தேவன் தாமே செய்யும் கிரியையில் அவன் தேவனுக்கு மாற்றீடாக இருக்க முடியாது. மனிதன் எப்படிச் சாத்தானுடன் யுத்தம் செய்ய முடியும்? நீ தொடங்குவதற்கு முன்பே சாத்தான் உன்னைச் சிறைபிடிப்பான். தேவன் தாமே சாத்தானுடன் போரிடுகிறார், இந்த அடிப்படையில் மனிதன் தேவனைப் பின்பற்றிக் கீழ்ப்படிகிறான், அதனால் மனிதன் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு சாத்தானின் கட்டுகளிலிருந்து தப்பிக்க முடியும். மனிதன் தனது சொந்த ஞானத்தினாலும் திறன்களாலும் அடையக்கூடிய விஷயங்கள் மிகவும் குறைவு; அவனால் மனிதர்களை முழுமையாக்குவதற்கும், அவர்களை வழிநடத்துவதற்கும், மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக, சாத்தானைத் தோற்கடிப்பதற்கும் இயலாது. மனிதனின் புத்திசாலித்தனமும் ஞானமும் சாத்தானின் திட்டங்களை முறியடிக்காது, ஆகவே மனிதன் அதை எவ்வாறு எதிர்த்து யுத்தம் செய்ய முடியும்?
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்