தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 2
ஜூன் 5, 2022
தேவனின் 6,000 ஆண்டுக்கால நிர்வாகக் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம் மற்றும் ராஜ்யத்தின் காலம். இந்த மூன்று கட்ட கிரியைகள் அனைத்தும் மனுக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டு, அதாவது சாத்தானால் கடுமையாகச் சீர்கெட்டுவிட்ட மனுக்குலத்தின் இரட்சிப்புக்காகவேயாகும். ஆயினும், அதே சமயம், அவை மேலும் தேவன் சாத்தானுடன் யுத்தம் செய்வதற்குமானவையாகும். இவ்வாறு, இரட்சிப்பின் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுவது போல, சாத்தானுடனான யுத்தமும் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் தேவனுடைய கிரியையின் இந்த இரண்டு அம்சங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன. சாத்தானுடனான போர் உண்மையில் மனுக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டானது ஆகும், மனுக்குலத்தின் இரட்சிப்பின் கிரியை ஒரே கட்டத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படக்கூடிய ஒன்றல்ல என்பதால், சாத்தானுடனான யுத்தமும் கட்டங்கள் மற்றும் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மனிதனின் தேவைகளுக்கேற்பவும், சாத்தான் அவனுக்குச் செய்துள்ள சீர்கேட்டின் அளவுக்கு ஏற்பவும் யுத்தம் நடத்தப்படுகிறது. ஒருவேளை, மனிதனின் கற்பனையில், இரண்டு படைகளும் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதுபோல், இந்த யுத்தத்தில் தேவன் சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பார் என்று அவன் நம்புகிறான். மனிதனின் அறிவாற்றல் இப்படித்தான் கற்பனை செய்யும் திறன் கொண்டது; இது அதீதத் தெளிவற்ற மற்றும் நம்பத்தகாத யோசனை, ஆனாலும் மனிதன் இதைத்தான் நம்புகிறான். மனிதனுடைய இரட்சிப்பின் வழி சாத்தானுடனான யுத்தத்தின் மூலம் என்று நான் இங்கே சொல்வதால், யுத்தம் இப்படித்தான் நடத்தப்படுகிறது என்று மனிதன் கற்பனை செய்கிறான். மனிதனுடைய இரட்சிப்பின் கிரியைக்கு மூன்று கட்டங்கள் உள்ளன, அதாவது சாத்தானை முழுவதுமாக தோற்கடிப்பதற்காகச் சாத்தானுடனான யுத்தம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சாத்தானுடனான யுத்தத்தின் முழு கிரியையின் உள்ளார்ந்த சத்தியம் என்னவென்றால், அதன் விளைவுகள் பல படிநிலைகளிலான கிரியை மூலம் அடையப்படுகின்றன: அவை மனிதனுக்குக் கிருபையை கொடுப்பது, மனிதனின் பாவநிவாரணபலியாக மாறுதல், மனிதனின் பாவங்களை மன்னித்தல், மனிதனை ஜெயிப்பது, மனிதனைப் பரிபூரணமாக்குவது. உண்மையில், சாத்தானுடனான யுத்தம் என்பது சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பது அல்ல, மாறாக மனிதனின் இரட்சிப்பு, மனிதனின் ஜீவிதம் பற்றிய கிரியை, தேவனுக்குச் சாட்சியம் அளிக்கும்படி மனிதனின் மனநிலையை மாற்றுவது ஆகியவையாகும். இப்படித்தான் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். மனிதனின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுவதன் மூலம் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். சாத்தான் தோற்கடிக்கப்பட்டிருக்கும்போது, அதாவது மனிதன் முற்றிலுமாக இரட்சிக்கப்பட்டிருக்கும்போது, பின்னர் அவமானப்படுத்தப்பட்ட சாத்தான் முற்றிலுமாக கட்டப்படுவான், இந்த வழியில் மனிதன் பரிபூரணமாக இரட்சிக்கப்பட்டிருப்பான். இவ்வாறு, மனிதனின் இரட்சிப்பின் சாராம்சமானது சாத்தானுக்கு எதிரான யுத்தமாகும், இந்த யுத்தம் முதன்மையாக மனிதனின் இரட்சிப்பில் பிரதிபலிக்கிறது. மனிதனை ஜெயங்கொள்ளும் கடைசி நாட்களின் கட்டம், சாத்தானுடனான யுத்தத்தின் கடைசிக் கட்டமாகும், மேலும் இது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் முழுமையான இரட்சிப்பின் கிரியையாகும். மனிதன் ஜெயங்கொள்ளப்படுவதன் உள்ளார்ந்த அர்த்தம், அவன் ஜெயங்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சாத்தானின் பண்புருவத்தை—சாத்தானால் சீர்கெட்ட மனிதனை—சிருஷ்டிகரிடம் திருப்பித் தருவதேயாகும், இதன் மூலம் அவன் சாத்தானைக் கைவிட்டு முழுமையாக தேவனிடம் திரும்புவான். இந்த வழியில், மனிதன் முழுமையாக இரட்சிக்கப்பட்டிருப்பான். எனவே, ஜெயங்கொள்ளும் கிரியை என்பது சாத்தானுக்கு எதிரான யுத்தத்தின் கடைசிக் கிரியை மற்றும் சாத்தானின் தோல்வியின் பொருட்டு தேவனின் நிர்வாகத்தின் இறுதிக் கட்டமாகும். இந்தக் கிரியை இல்லாமல், மனிதனின் முழு இரட்சிப்பும் இறுதியில் சாத்தியமற்றதாகும், சாத்தானின் முழுதளவான தோல்வியும்கூட சாத்தியமற்றதாகும், மனுக்குலம் ஒருபோதும் அற்புதமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்க முடியாது, அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாது. இதன் விளைவாக, சாத்தானுடனான யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் மனிதனின் இரட்சிப்பின் கிரியையை முடிக்க முடியாது, ஏனென்றால் தேவனின் நிர்வாகக் கிரியையின் உட்கருத்து மனுக்குலத்தின் இரட்சிப்புக்கானதாகும். ஆரம்பக்கால மனுக்குலம் தேவனின் கைகளில் இருந்தது, ஆனால் சாத்தானின் சோதனை மற்றும் சீர்கேட்டின் காரணமாக, மனிதன் சாத்தானால் கட்டப்பட்டு தீயவனின் கைகளில் விழுந்தான். இவ்வாறு, சாத்தான், தேவனின் நிர்வாகக் கிரியையில் தோற்கடிக்கப்பட வேண்டிய பொருளாக ஆனான். ஏனென்றால், சாத்தான் மனிதனைத் தன்னிடம் எடுத்துக்கொண்டான், மனிதன் எல்லா நிர்வாகத்தையும் நிறைவேற்ற தேவன் பயன்படுத்தும் மூலதனம் என்பதால், மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், அவன் சாத்தானின் கைகளிலிருந்து பறிக்கப்பட வேண்டும், அதாவது சாத்தானால் சிறைபிடித்து வைக்கப்பட்ட பின்னர் மனிதன் மீட்டெடுக்கப்பட வேண்டும். ஆகவே, மனிதனின் பழைய மனநிலையின் மாற்றங்கள், மனிதனின் அசலான ஆராயும் உணர்வை மீட்டெடுக்கும் மாற்றங்கள் மூலம் சாத்தானைத் தோற்கடிக்க வேண்டும். இந்த வழியில், சிறைபிடிக்கப்பட்ட மனிதனைச் சாத்தானின் கைகளிலிருந்து மீண்டும் பறிக்க முடியும். மனிதன் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டால், சாத்தான் வெட்கப்படுவான், மனிதன் இறுதியில் திரும்பப் பெறப்படுவான், சாத்தான் தோற்கடிக்கப்படுவான். மனிதன் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதால், மனிதன் இந்த முழு யுத்தத்திலும் கொள்ளைப் பொருளாக மாறுவான், யுத்தம் முடிந்தவுடன் தண்டிக்கப்பட வேண்டிய பொருளாகச் சாத்தான் மாறுவான், அதன் பிறகு மனிதகுலத்தின் இரட்சிப்பின் முழுக்கிரியையும் முடிந்துவிடும்.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்