தேவனுடைய அனுதின வார்த்தைகள்: கிரியையின் மூன்று கட்டங்கள் | பகுதி 1
செப்டம்பர் 8, 2022
எனது முழு நிர்வாகத் திட்டமான ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் மூன்று கட்டங்களை அல்லது மூன்று காலங்களைக் கொண்டுள்ளது: ஆதி காலத்தினுடைய நியாயப்பிரமாணத்தின் காலம்; கிருபையின் காலம் (இது மீட்பின் காலமும் ஆகும்); மற்றும் கடைசி நாட்களினுடைய ராஜ்யத்தின் காலம். இந்த மூன்று காலங்களிலும் எனது கிரியை ஒவ்வொரு காலத்தின் தன்மைக்கு ஏற்ப உள்ளடக்கத்தில் வேறுபடுகிறது. ஆனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இந்தக் கிரியை மனிதனின் தேவைகளுக்கு ஏற்ப அல்லது இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், சாத்தானுக்கு எதிராக நான் செய்யும் யுத்தத்தில் சாத்தான் பயன்படுத்தும் தந்திரங்களுக்கு ஏற்ப செய்யப்படுகிறது. என் கிரியையின் நோக்கம் சாத்தானை மடங்கடிப்பதும், என் ஞானத்தையும் சர்வவல்லமையையும் வெளிப்படுத்துவதும், சாத்தானின் தந்திரங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்தி, அதன் மூலம் சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் வாழும் முழு மனித இனத்தையும் இரட்சிப்பதுமே ஆகும். இது என் ஞானத்தையும் சர்வவல்லமையையும் வெளிக்காட்டுவதும், சாத்தானின் தாங்கமுடியாத வெறுப்பை வெளிப்படுத்துவதும் ஆகும். அதற்கும் மேலாக, சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களை நன்மைக்கும் தீமைக்கும் இடையிலுள்ள பாகுபாட்டைக் கண்டறிய அனுமதிப்பதும், எல்லாவற்றிற்கும் நானே அதிபதி என்பதை அறிந்துகொள்ளச் செய்வதும், சாத்தான் மனிதகுலத்தின் எதிரி, மனிதகுலத்தை சீரழித்தவன், தீயவன் என்பதையும் தெளிவாகக் காண்பிப்பதும், மேலும் நன்மை மற்றும் தீமையை, சத்தியம் மற்றும் பொய்யை, பரிசுத்தம் மற்றும் அசுத்தத்தை, மற்றும் எது மகத்துவமானது, எது இழிவானது என இவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அவர்கள் உறுதியாகச் சொல்ல அனுமதிப்பதுமே ஆகும். இவ்வாறு, நான் மனிதகுலத்தைச் சீர்கெடுக்கவில்லை, சிருஷ்டிகராகிய என்னால் மட்டுமே மனிதகுலத்தை இரட்சிக்க முடியும், மக்களுக்கு அவர்கள் அனுபவிக்கக்கூடிய காரியங்களை வழங்க முடியும், நான் எல்லாவற்றிற்கும் அதிபதி என்பதையும், நான் சிருஷ்டித்தவைகளில் ஒருவன்தான் சாத்தான் என்பதையும், பின்னர் எனக்கு எதிராகத் திரும்பினான் என்பதையும் அறியாமையில் உள்ள மனிதகுலம் அறிந்து எனக்கு சாட்சி கொடுக்க முடியும். எனது ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் மூன்று காலகட்டங்களாகப் பிரிந்துள்ளது. மேலும் சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்களை எனக்கு சாட்சி கொடுக்கவும், என் சித்தத்தைப் புரிந்துகொள்ளவும், நானே சத்தியம் என்பதை அறிந்து கொள்ளவும் செய்யும் பலனை அடைவதற்கும் இவ்வாறு கிரியை செய்கிறேன். இவ்வாறு, எனது ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டத்தின் தொடக்க காலத்தின்போது, நான் நியாயப்பிரமாணத்தின் கிரியையைச் செய்தேன். இதனைக் கொண்டு தான் யேகோவா ஜனங்களை வழிநடத்தினார். இரண்டாம் கட்டத்தில் யூதேயா கிராமங்களில் கிருபையின் காலத்தின் கிரியையை நான் செய்தேன். கிருபையின் காலத்தின் அனைத்து கிரியைகளையும் இயேசு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்; அவர் மாம்சத்தில் அவதரித்தார், சிலுவையில் அறையப்பட்டார், மேலும் அவர் கிருபையின் காலத்தையும் தொடங்கினார். மீட்பின் கிரியையை நிறைவு செய்வதற்கும், நியாயப்பிரமாணத்தின் காலத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், கிருபையின் காலத்தைத் தொடங்குவதற்கும் அவர் சிலுவையில் அறையப்பட்டார். எனவே அவர் "பிரதான அதிபதி," "பாவநிவாரணபலி" மற்றும் "மீட்பர்" என்று அழைக்கப்பட்டார். இதன் விளைவாக, இயேசுவின் கிரியையும், யேகோவாவின் கிரியையும் கொள்கை அடிப்படையில் ஒன்றாக இருப்பினும் உள்ளடக்கத்தில் வேறுபடுகின்றன. யேகோவா நியாயப்பிரமாண காலத்தைத் தொடங்கினார். பூமியில் தேவனுடைய கிரியைக்கான அடிப்படையை, அதாவது தோற்றுவிக்கும் இடத்தை நிறுவி நியாயப்பிரமாணங்களையும், கற்பனைகளையும் வழங்கினார். இவை அவர் மேற்கொண்ட இரண்டு கிரியைகளாகும், மேலும் இவை நியாயப்பிரமாண காலத்தைக் குறிக்கின்றன. கிருபையின் காலத்தில் இயேசு செய்த கிரியை, நியாயப்பிரமாணங்களை வழங்குவதல்ல, அவற்றை நிறைவேற்றுவதேயாகும். இதன் மூலம் கிருபையின் காலத்தை அறிமுகப்படுத்துவதும், இரண்டாயிரம் ஆண்டுகள் நீடித்த நியாயப்பிரமாண காலத்தை நிறைவு செய்வதும் ஆகும். அவர் கிருபையின் காலத்தைத் தொடங்குவதற்காக வந்த வழிகாட்டியாக இருந்தார், ஆனாலும் அவருடைய கிரியையின் முக்கிய பகுதி மீட்பில் இருந்தது. ஆகவே அவருடைய கிரியையும் இரு மடங்காக இருந்தது: ஒரு புதிய காலத்தைத் தொடங்குவதும், தாம் சிலுவையில் அறையப்படுவதன் மூலம் மீட்பின் பணியை முடிப்பதும் அந்த இரு மடங்கான கிரியை ஆகும். அதன் பிறகு அவர் புறப்பட்டார். இவ்வாறு நியாயப்பிரமாணத்தின் காலம் முடிவடைந்து கிருபையின் காலம் ஆரம்பமானது.
வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “மீட்பின் காலத்தினுடைய கிரியைக்குப் பின்னாலுள்ள உண்மையான கதை” என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்