சுவிசேஷ திரைப்பட டிரெய்லர்கள் | தேவபக்திக்குரிய இரகசியம் (Tamil Subtitles)

ஏப்ரல் 5, 2021

லின் போயன் சீனாவிலுள்ள ஒரு வீட்டு திருச்சபையில் ஒரு மூப்பராக இருந்தார். ஒரு விசுவாசியாக இத்தனை வருடங்களாக, கர்த்தருக்காக துன்பப்படுவதை அவர் கௌரவமாக உணர்ந்தார், மேலும் உலகிலுள்ள எதைக் காட்டிலும் மேலானதாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அறிவையும் திறமையையும் மதிப்பிட்டார். ஒரு முக்கியமான நாள், அவர் பிரசங்கிக்கச் சென்று சில அதிர்ச்சியூட்டும் செய்திகளைக் கேட்டார்: கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் திரும்பி வந்திருக்கிறார், அவர்தான் கடைசி நாட்களின் கிறிஸ்துவாகிய சர்வவல்லமையுள்ள தேவன்! லின் போயன் குழப்பமடைந்தார். கர்த்தர் திரும்பி வரும்போது, அவர் மேகங்களுடன் இறங்கி வர வேண்டும், அப்படியானால் அவர் ஏன் மனுஷனாக அவதரித்து இரகசியமாக தமது கிரியையைச் செய்கிறார்? தேவனுடைய மனுஷ அவதரிப்புக்குப் பின்னால் என்ன இரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளன? கர்த்தர் உண்மையிலேயே திரும்பி வந்திருந்தால், நாம் ஏன் எடுத்துக்கொள்ளப்படவில்லை? …லின் போயனுக்கும், அவருடைய சக ஊழியர்களுக்கும், சர்வவல்லமையுள்ள தேவடைய திருச்சபையின் பிரசங்கியார்களுக்கும் இடையே ஒரு தீவிரமான விவாதம் ஆரம்பமாகிறது… சர்வவல்லமையுள்ள தேவன்தான் திரும்பி வந்திருக்கிற கர்த்தராகிய இயேசு என்பதையும், மாம்சத்தில் தேவனுடைய தோற்றம் என்பதையும் அவர்களால் இறுதியாக புரிந்துகொள்ள முடிந்ததா?

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க