தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 129

பிப்ரவரி 1, 2023

தேவனால் செய்யப்பட்ட கிரியையின் ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரிய நடைமுறை முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அக்காலத்தில், இயேசு வந்தபோது, அவர் ஆண் ரூபத்தில் வந்தார், மேலும் தேவன் இம்முறை வரும்போது, அவருடைய ரூபம் பெண்ணாக இருக்கிறது. இதிலிருந்து, தேவன் தமது கிரியையில் பயன்படுத்துவதற்காகவே ஆண் பெண் இருபாலரையும் படைத்தார் என்பதை நீ பார்க்கலாம், மேலும் அவரிடத்தில் பாலின வேறுபாடு எதுவும் இல்லை. அவருடைய ஆவி வரும்போது, அவர் விரும்பும் எந்த மாம்சத்திலும் அவரால் தோன்ற முடியும், மற்றும் அந்த மாம்சம் அவரைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்; ஆணோ அல்லது பெண்ணோ, அது அவரது அவதார மாம்சமாக இருக்கும் வரை அதனால் தேவனை பிரதிநிதித்துவப்படுத்த முடியும். இயேசு வந்த போது அவர் ஒரு பெண்ணாகத் தோன்றியிருந்தால், அதாவது, ஓர் ஆண் குழந்தையாக இல்லாமல் ஒரு பெண் குழந்தை பரிசுத்த ஆவியினால் உற்பத்தியாகியிருந்தால், கிரியையின் அந்தக் கட்டம் அதே போன்றே நிறைவேறி இருக்கும். நிகழ்ந்தது அதுவாக இருந்திருந்தால், கிரியையின் தற்போதைய கட்டம் ஓர் ஆணால் நிறைவேற்றப்பட வேண்டியதாயிருந்திருக்கும், ஆனால் அதே போன்றே கிரியை நிறைவேற்றப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் செய்யப்பட்ட கிரியையானது தனக்குரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது; இருகட்ட கிரியைகளும் ஒன்றுக்கொன்று திருப்பி செய்யப்படவில்லை, அல்லது ஒன்றோடொன்று முரண்படவும் இல்லை. அக்காலத்தில், இயேசு தம் கிரியையை செய்தபோது ஒரே பேறான குமாரன் என்று அழைக்கப்பட்டார் மேலும் "குமாரன்" என்பது ஆண்பாலை குறிக்கிறது. தற்போதைய நடப்புக் கட்டத்தில் ஒரே பேறான குமாரன் ஏன் குறிப்பிடப்படவில்லை? ஏனெனில் கிரியையின் தேவைகள் இயேசுவின் பாலினத்தில் இருந்து ஒரு மாற்றத்தின் தேவையை உருவாக்கியுள்ளது. தேவனை பொறுத்தவரையில் பாலின வேறுபாடு எதுவும் இல்லை. அவர் தாம் விரும்பும் படி தமது கிரியையை நடப்பிக்கிறார், மேலும் அவர் தமது கிரியையை செய்யும் போது எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுவதில்லை, ஆனால் குறிப்பாக சுதந்திரமானவராக இருக்கிறார். ஆனால் கிரியையின் ஒவ்வொரு கட்டமும் அதற்கே உரிய நடைமுறை முக்கியத்துவத்தைக் கொண்டதாக இருக்கிறது. தேவன் இரு முறை மாம்சமானார், மேலும் கடைசி நாட்களில் அவரது அவதாரம் கடைசி முறையானது என்பது பிரத்தியட்சமானதாக இருக்கிறது. தமது கிரியைகள் அனைத்தையும் அறியச்செய்யவே அவர் வந்திருக்கிறார். இந்தக் கட்டத்தில் மனிதன் காணும்படியாகத் தாமே கிரியை புரிவதற்கு மாம்சம் ஆயிருக்கவில்லையெனில், தேவன் ஆணே, பெண்ணல்ல என்ற எண்ணத்தையே மனிதன் பற்றி பிடித்துக்கொண்டு இருந்திருப்பான். இதற்கு முன்னர், மனுக்குலம் யாவும் தேவன் ஆணாக மட்டுமே இருக்க முடியும், மேலும் ஒரு பெண்ணை தேவன் என்று அழைக்க முடியாது என்று நம்பியது, ஏனெனில் மனுக்குலம் யாவும் பெண்ணின் மேல் ஆணுக்கு அதிகாரம் உண்டு எனக் கருதியது. ஆண்கள் மட்டுமே அதிகாரத்தைப் பெற முடியும், ஒரு பெண்ணாலும் முடியாது என்று அவர்கள் நம்பினார்கள். மேலும் என்னவென்றால், ஆணே பெண்ணுக்குத் தலைவன், பெண் ஆணுக்குக் கீழ்ப்படிய வேண்டும், மேலும் அவனை மிஞ்சக் கூடாது என்றும் கூட அவர்கள் கூறினார்கள். கடந்த காலங்களில், ஆணே பெண்ணின் தலைவன் என கூறப்பட்டபோது, சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்ட ஆதாம் மற்றும் ஏவாளை நோக்கி இது கூறப்பட்டது—ஆதியில் யேகோவாவால் படைக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணிடத்தில் அல்ல. நிச்சயமாக, பெண் கணவனுக்குக் கீழ்ப்படிந்து அவனை நேசிக்க வேண்டும், மேலும் ஒரு கணவன் தன் குடும்பத்தைப் போஷித்து ஆதரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இவையே மனுக்குலம் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பதற்காக யேகோவாவால் உருவாக்கப்பட்ட நியாயப்பிரமாணங்களும் கட்டளைகளும் ஆகும். யேகோவா பெண்ணிடம், "உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்" என்றார். மனுக்குலம் (அதாவது ஆண் பெண் இருவரும்) இயல்பான வாழ்க்கையை யேகோவாவின் ஆளுகையின் கீழ் வாழ வேண்டும், அதன் மூலம் மனுக்குலத்தின் வாழ்க்கையில் ஓர் அமைப்பு இருக்கும், மேலும் அது தனது தகுந்த ஒழுங்கில் இருந்து குலையாது என்பதற்காக மட்டுமே அவர் இவ்வாறு பேசினார். ஆகவே, ஆணும் பெண்ணும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக யேகோவா பொருத்தமான விதிகளை உருவாக்கினார். இது பூமியில் வாழும் அனைத்து சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டிகளுக்கானவை மட்டுமே தவிர தேவனின் அவதார மாம்சத்திற்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தம்மால் படைக்கப்பட்ட சிருஷ்டிகளைப் போலவே எவ்வாறு தேவன் இருக்க முடியும்? அவரது சிருஷ்டிப்பில் மனுக்குலத்தை நோக்கியே அவரது வார்த்தைகள் பேசப்பட்டன; மனுக்குலம் இயல்பான வாழ்க்கையை வாழவே அவர் ஆணுக்கும் பெண்ணுக்குமான விதிகளை உருவாக்கினார். ஆதியில், யேகோவா மனுக்குலத்தை சிருஷ்டித்தபோது அவர் ஆண் பெண் ஆகிய இரு வகை மனிதர்களைப் படைத்தார்; ஆகையால் அவரது அவதார மாம்சங்களில் ஆண் மற்றும் பெண் என்ற பிரிவு உள்ளது. ஆதாம் மற்றும் ஏவாளுடன் பேசிய வார்த்தைகளின் அடிப்படையில் அவர் தமது கிரியையைத் தீர்மானிக்கவில்லை. முதலில் அவர் மனுக்குலத்தை சிருஷ்டித்தபோது இருந்த அவரது சிந்தனையின் படியே அவர் இரு முறை மாம்சமானதும் முற்றிலுமாகத் தீர்மானிக்கப்பட்டன; அதாவது, ஆண் மற்றும் பெண்ணை அடிப்படையாகக் கொண்ட அவரது இரு அவதாரங்களின் கிரியையையும் அவை களங்கப்படுவதற்கு முன்னதாகவே அவர் நிறைவுசெய்துவிட்டார். சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட ஆதாம் மற்றும் ஏவாளிடத்தில் யேகோவா பேசிய வார்த்தைகளை மனுக்குலம் அவ்வாறே எடுத்துக்கொண்டு, அவற்றை தேவனின் அவதார கிரியைகளுக்குப் பிரயோகித்தால், இயேசுவும் தமது மனைவியை அவர் நேசிக்க வேண்டிய விதத்தில் நேசிக்க வேண்டும் அல்லவா? இவ்வகையில், தேவன் இன்னும் தேவனாக இருப்பாரா? இது இவ்வாறு இருந்தால், அவரால் தமது கிரியையை இன்னும் நிறைவேற்ற முடியுமா? தேவனின் அவதார மாம்சம் பெண்ணாக இருப்பது தவறு என்றால், தேவன் பெண்ணைப் படைத்ததும் மாபெரும் அளவிலான ஒரு தவறாக அல்லவா இருந்திருக்கும்? தேவன் பெண்ணாக அவதரிப்பது தவறு என்று மக்கள் இன்னும் நம்பினால், திருமணம் ஆகாத காரணத்தால் மனைவியை நேசிக்க முடியாத இயேசுவும் இந்த அவதாரத்தைப் போலவே தவறிழைத்தவராக அல்லவா இருந்திருப்பார்? தற்காலத்தில் தேவ அவதாரத்தின் சத்தியத்தை அளவிட நீ ஏவாளிடத்தில் யேகோவோ பேசிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதால், கிருபையின் காலத்தில் மாம்சமான கர்த்தராகிய இயேசுவை நியாயம் தீர்க்க ஆதாமிடம் யேகோவா கூறிய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். இவை யாவும் ஒன்றேதான் அல்லவா? சர்ப்பத்தால் வஞ்சிக்கப்படாத ஆணின் படி கர்த்தாராகிய இயேசுவை நீ அளவிடுகிறபடியால், இன்றைய அவதாரத்தின் சத்தியத்தை சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் படி நீ நியாயம்தீர்க்க முடியாது. அது நியாயமற்றதாக இருக்கும்! இவ்விதம் நீ தேவனை அளவிடுவது உன் பகுத்தறிவுக் குறைபாட்டை நிரூபிக்கிறது. யேகோவா இருமுறை மாம்சமான போது அவரது மாம்சத்தின் பாலினம் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்படாத ஆண் மற்றும் பெண்ணுடன் தொடர்புபடுத்தப்பட்டது; சர்ப்பத்தால் வஞ்சிக்கப்படாத ஆண் மற்றும் பெண்ணோடு இணங்க அவர் இருமுறை மாம்சமானார். இயேசுவின் ஆண்தன்மை சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்ட ஆதாமுடையது போன்றது என்று நினைக்க வேண்டாம். அவை இரண்டும் முற்றிலும் தொடர்பற்றவை, அவை இரு வித இயல்புகள் கொண்ட இரு வேறு ஆண்களுடையவை. இயேசுவின் ஆண் தன்மை அவரே எல்லா பெண்களுக்கும் தலைவர் ஆனால் எல்லா ஆண்களுக்கும் அல்ல என்று நிச்சயமாக இருக்க முடியாதல்லவா? அவர் யூதர்களின் அரசர் அல்லவா (ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட)? அவர்தாமே தேவன், அவர் வெறுமனே பெண்ணின் தலைவரோ அல்லது ஆணிண் தலைவரோ மட்டுமல்ல. அவர் சர்வ சிருஷ்டிகளின் கர்த்தர் மேலும் சகல சிருஷ்டிகளின் தலைவர். இயேசுவின் ஆண்தன்மை பெண்ணின் தலைமைக்கான சின்னமாக இருக்கிறது என்று எவ்வாறு உன்னால் தீர்மானிக்க முடியும்? இது தேவ நிந்தனை ஆகாதா? இயேசு களங்கப்படுத்தப்படாத ஓர் ஆண். அவர் தேவன்; அவர் கிறிஸ்து; அவரே கர்த்தர். அவர் எவ்வாறு களங்கமடைந்த ஆதாமைப் போன்ற ஓர் ஆணாக இருக்க முடியும்? தேவனின் மிகப் பரிசுத்தமான ஆவியால் அணியப்பட்ட மாம்சமே இயேசு. அவர் ஆதாமின் ஆண் தன்மையைக் கொண்ட தேவனே என்று உன்னால் எவ்வாறு கூற முடியும்? அப்படி என்றால், தேவனின் அனைத்து கிரியைகளும் தவறாக அல்லவா இருந்திருக்கும்? சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட ஆதாமின் ஆண் தன்மையை இயேசுவுக்குள் யேகோவா ஒருங்கிணைத்திருக்க மாட்டாரா? தற்காலத்தின் அவதாரம் பாலினத்தால் இயேசுவில் இருந்து வேறுபட்ட ஆனால் இயல்பில் அவரைப் போன்ற தேவ அவதாரக் கிரியையின் இன்னொரு நேர்வு இல்லையா? சர்ப்பத்தால் முதலில் வஞ்சிக்கப்பட்டது பெண் என்பதால் பெண் தேவ அவதாரமாக இருக்க முடியாது என்று நீ இன்னமும் சொல்வதற்கு துணிகிறாயா? பெண் மிகவும் அசுத்தமானவளாகவும் மனுக்குலத்தின் சீர்குலைவுக்கு ஆதாரமாகவும் இருப்பதால் தேவன் மாம்சத்தில் ஒரு பெண்ணாக முடியாது என்று நீ இன்னும் துணிந்து கூறுகிறாயா? "பெண் எப்போதும் ஆணுக்குக் கீழ்ப்படிய வேண்டும் மேலும் ஒருபோதும் தேவனை வெளிப்படுத்த அல்லது நேரடியாக பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது" என்று கூறுவதில் நிலைத்துநிற்கிறாயா? கடந்த காலத்தில் நீ புரிந்துகொள்ளவில்லை, ஆனால் இப்போது நீ தேவனின் கிரியையை, குறிப்பாக தேவனுடைய அவதார மாம்சத்தை தொடர்ந்து தூஷணம் செய்துகொண்டே போவாயா? இது உனக்குத் தெளிவாகவில்லை எனில், உன் நாவை அடக்குவது நல்லது, அல்லது உன் முட்டாள்தனமும் அறிவீனமும் வெளிப்படுத்தப்பட்டு உன் அருவருப்பு வெளிக்கொண்டுவரப்படும். எல்லாவற்றையும் நீ புரிந்துகொள்வதாக எண்ணாதே. என்னுடைய நிர்வாகத் திட்டத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட புரிந்துகொள்ள நீ பார்த்ததும் அனுபவித்ததுமாகிய யாவும் போதுமானதல்ல என்று நான் உனக்குச் சொல்லுகிறேன். ஆகவே நீ ஏன் இவ்வளவு ஆணவத்துடன் நடந்துகொள்ளுகிறாய்? உனக்கிருக்கும் சிறு அளவிலான தாலந்தும் சிறு அளவிலான அறிவும் இயேசு தமது கிரியையில் பயன்படுத்த ஒரு நொடிக்குக்கூட போதுமானது அல்ல! நீ உண்மையில் எவ்வளவு அனுபவத்தைக் கொண்டிருக்கிறாய்? நீ பார்த்தவை எல்லாம் மற்றும் நீ உன் வாழ்க்கைக் காலத்தில் கேட்டவை எல்லாம் மேலும் நீ கற்பனைசெய்து பார்த்தவை எல்லாம் நான் ஒரு நொடிப்பொழுதில் செய்யும் கிரியையைவிடக் குறைவானவையே! அற்பக் காரியங்களில் கவனம் செலுத்தி நீ குற்றம் கண்டுபிடிக்காமல் இருப்பது நல்லது. நீ விரும்பும் அளவுக்கு ஆணவம் கொண்டவனாக இருந்தாலும் ஓர் எறும்புக்கு கூட சமம் இல்லாத ஜந்துவே நீ! உன் வயிற்றுக்குள் நீ வைத்திருப்பதெல்லாம் ஓர் எறும்பின் வயிற்றுக்குள் இருப்பதை விடக் குறைவே! நீ கொஞ்சம் அனுபவங்களையும் மூப்புநிலையையும் அடைந்ததால் மூர்க்கமாக சைகை காட்டிப் பெரிதாகப் பேசலாம் என்று எண்ணாதே. நான் பேசிய வார்த்தைகளின் விளைபொருட்கள் அல்லவா உன் அனுபவமும் மூப்புநிலையும்? அவைகள் எல்லாம் உன் சொந்த வேலைக்கும் உழைப்புக்கும் பதிலாக கிடைத்தவை என்று நீ நம்புகிறாயா? இன்று, நான் மாம்சமாகியிருப்பதை நீ பார்க்கிறாய், அதன் காரணமாக மட்டுமே உன்னில் மிதமிஞ்சிய கருத்துக்கள், மேலும் அவற்றில் இருந்து பிறக்கும் எண்ணங்களுக்கு முடிவே இல்லை. என் அவதாரத்துக்காக இல்லை என்றால், நீ அசாதாரணமான தாலந்துகள் கொண்டவனாக இருந்தாலும், உனக்கு மிக அதிகமான கருத்துக்கள் இருந்திருக்காது; இவற்றில் இருந்தல்லவா உன் எண்ணங்கள் எழுகின்றன? முதல் முறை இயேசு மாம்சமாகாமல் இருந்திருந்தால், அவதாரத்தைப் பற்றி நீ அறிந்தாவது இருப்பாயா? முதல் அவதாரம் உனக்கு அறிவைக் கொடுத்ததனால்தானே, இரண்டாவது அவதாரத்தை நியாயந்தீர்க்க முயலுவதற்கு உனக்கு அகம்பாவம் ஏற்பட்டது? கீழ்ப்படிதலுடன் பின்பற்றுபவனாக இல்லாமல் நீ அதை ஆராய முற்படுவது ஏன்? இந்த நீரோடையில் நீ நுழைந்து அவதார தேவனின் முன்னிலையில் வந்த பின்னர், அவரை ஆராய்ச்சி செய்வதற்கு அவர் உன்னை அனுமதிப்பாரா? நீ உன் சொந்தக் குடும்ப வரலாற்றை ஆராய்ச்சி செய்யலாம், ஆனால் நீ தேவனின் "குடும்ப வரலாற்றை" ஆராய முயற்சி செய்தால், இன்றைய தேவன் அப்படிப்பட்ட ஆராய்ச்சியை செய்ய உன்னை அனுமதிப்பாரா? நீ குருடன் இல்லை அல்லவா? நீ உன் மேல் அவமதிப்பைக் கொண்டுவர மாட்டாயா?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “அவதாரத்தின் முக்கியத்துவத்தை இரு அவதாரங்களும் நிறைவுசெய்கின்றன” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க