தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 127

மார்ச் 2, 2021

மனுஷனுடைய மாம்சம் சாத்தானால் சீர்கேடடைந்திருக்கிறது. இது மிகவும் ஆழமாக குருடாகியிருக்கிறது மற்றும் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளது. தேவன் தனிப்பட்ட முறையில் மாம்சத்தில் கிரியை செய்வதற்கான மிகவும் அடிப்படையான காரணம் என்னவென்றால், அவருடைய இரட்சிப்பின் நோக்கம் மாம்சத்தாலான மனுஷனாவான், ஏனென்றால் தேவனுடைய கிரியையைக்கு இடையூறு செய்ய சாத்தானும் மனுஷனுடைய மாம்சத்தைப் பயன்படுத்துகிறான். சாத்தானுடனான யுத்தமானது உண்மையில் மனுஷனை ஜெயங்கொள்ளும் கிரியையாக இருக்கிறது. அதே நேரத்தில், மனுஷனும் தேவனுடைய இரட்சிப்பின் நோக்கமாக இருக்கிறான். ஆகவே, மாம்சமான தேவனுடைய கிரியை அத்தியாவசியமானதாகும். சாத்தான் மனுஷனுடைய மாம்சத்தைக் கெடுத்தான், இதனால் மனுஷன் சாத்தானின் உருவகமாகி, தேவனால் தோற்கடிக்கப்பட வேண்டிய இலக்காக மாறிவிட்டான். ஆகையால், சாத்தானுடன் யுத்தம் செய்து மனுக்குலத்தை இரட்சிக்கும் கிரியை பூமியில் நடக்கிறது. சாத்தானுடன் யுத்தம் செய்வதற்கு தேவன் மனுஷனாக மாற வேண்டும். இதுதான் மிகவும் நடைமுறையான கிரியையாகும். தேவன் மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவர் உண்மையில் சாத்தானுடன் மாம்சத்தில் யுத்தம் செய்கிறார். அவர் மாம்சத்தில் கிரியை செய்யும்போது, அவர் ஆவிக்குரிய உலகில் தமது கிரியையைச் செய்து, ஆவிக்குரிய உலகில் தமது கிரியை முழுவதையும் பூமியில் உண்மையானதாக மாற்றுகிறார். அவருக்குக் கீழ்ப்படியாத மனுஷனே ஜெயங்கொள்ளப்படுகிறான், அவருக்கு விரோதமாக இருக்கிற சாத்தானின் உருவமே (உண்மையில், இதுவும் மனுஷன் தான்) தோற்கடிக்கப்படுகிறான், இறுதியில் மனுஷன்தான் இரட்சிக்கப்படுகிறவனாகவும் இருக்கிறான். ஆகையால், ஒரு சிருஷ்டியின் வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்ட மனுஷனாக தேவன் மாறுவது மேன்மேலும் அவசியமானதாக இருக்கிறது, இதனால் அவர் சாத்தானுடன் உண்மையான யுத்தம் செய்யவும் அவருக்குக் கீழ்ப்படியாத, அவரைப் போலவே வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கிற மனுஷனை ஜெயங்கொள்ளவும், அவரைப் போலவே வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கிற மற்றும் சாத்தானால் தீங்கிற்குள்ளான மனுஷனை இரட்சிக்கவும் முடியும். அவருடைய எதிரி மனுஷன்தான், அவர் ஜெயங்கொள்ளும் இலக்கும் மனுஷன்தான், அவருடைய இரட்சிப்பின் நோக்கமும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட மனுஷன் தான். ஆகையால், அவர் மனுஷனாக வேண்டும், இதனால், அவருடைய கிரியை மிகவும் எளிதாகிறது. அவரால் சாத்தானைத் தோற்கடித்து மனுக்குலத்தை ஜெயங்கொள்ள முடிகிறது, மேலும், மனுக்குலத்தை இரட்சிக்கவும் முடிகிறது. இந்த மாம்சம் சாதாரணமானதாகவும் உண்மையானதாகவும் இருக்கின்றபோதிலும், அவர் பொதுவான மாம்சமல்ல: அவர் மனுஷனாக மட்டுமே உள்ள மாம்சம் அல்ல, ஆனால் மனுஷனாகவும் தெய்வீகமாகவும் உள்ள மாம்சம் ஆவார். இது அவருக்கும் மனுஷனுக்கும் உள்ள வித்தியாசமாகும். இதுதான் தேவனுடைய அடையாளத்தின் குறியீடாகும். இத்தகைய மாம்சத்தால் மட்டுமே அவர் செய்ய விரும்பும் கிரியையைச் செய்யவும், மாம்சத்தில் தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்றவும், மனுஷர் நடுவில் அவருடைய கிரியையை முழுமையாக செய்து முடிக்கவும் இயலும். இவ்வாறு இல்லையென்றால், மனுஷர் நடுவே அவருடைய கிரியை எப்போதும் வெறுமையானதாகவும் குறைபாடுள்ளதாகவும் இருக்கும். தேவனால் சாத்தானின் ஆவியுடன் யுத்தம் செய்து ஜெயங்கொள்ள முடியும் என்றாலும், சீர்கேடான மனுஷனுடைய பழைய சுபாவத்தை ஒருபோதும் போக்க முடியாது. தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களும் அவரை எதிர்ப்பவர்களும் ஒருபோதும் அவருடைய ஆதிக்கத்திற்கு உண்மையாக உட்பட்டிருக்க முடியாது. அதாவது, அவரால் ஒருபோதும் மனுக்குலத்தை ஜெயங்கொள்ள முடியாது, மனுக்குலத்தை ஒருபோதும் ஆதாயப்படுத்த முடியாது. பூமியில் அவருடைய கிரியைக்குத் தீர்வு காண முடியவில்லை என்றால், அவருடைய நிர்வாகம் ஒருபோதும் முடிவுக்கு வராது, மனுக்குலம் முழுவதும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது. தேவன் தமது சிருஷ்டிகள் எல்லாவற்றுடனும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியாது என்றாலும், அத்தகைய நிர்வாகக் கிரியைக்கு ஒருபோதும் பலன் கிடைக்காது, இதன் விளைவாகத் தேவனுடைய மகிமை மறைந்துபோய்விடும். அவருடைய மாம்சத்திற்கு அதிகாரம் இல்லையென்றாலும், அவர் செய்யும் கிரியை அதன் பலனை அடைந்திருக்கும். இது அவருடைய கிரியையின் தவிர்க்க முடியாத திசையாகும். அவருடைய மாம்சம் அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும் கொண்டிருக்காவிட்டாலும், தேவன் தமது கிரியையைச் செய்ய வல்லவராக இருக்கும் வரை, அவர் தாமே தேவனாக இருக்கிறார். இந்த மாம்சம் எவ்வளவு இயல்பானதாகவும் சாதாரணமானதாகவும் இருந்தாலும், அவர் செய்யவேண்டிய கிரியையை அவரால் செய்ய இயலும், ஏனென்றால் இந்த மாம்சம் மனுஷனாக மட்டுமின்றி தேவனாகவும் இருக்கிறது. இந்த மாம்சம் மனுஷனால் செய்ய முடியாத கிரியையைச் செய்ய முடியும் என்பதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய உள்ளான சாராம்சம் எந்தவொரு மனுஷனையும் போல இல்லை. அவரால் மனுஷனை இரட்சிக்க முடிவதற்கான காரணம் என்னவென்றால், அவருடைய அடையாளம் எந்த மனுஷனுடைய அடையாளத்திலும் இருந்து வேறுபட்டதாகும். இந்த மாம்சம் மனுக்குலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும், ஏனென்றால் அவர் மனுஷனாகவும், இன்னும் அதிகமாக, அவர் தேவனாகவும் இருக்கிறார், ஏனென்றால் சாதாரண மாம்ச மனுஷனால் செய்ய முடியாத கிரியையை அவரால் செய்ய முடியும், பூமியில் அவருடன் சேர்ந்து வாழும் சீர்கேடான மனுஷனை அவரால் இரட்சிக்கவும் முடியும். அவர் மனுஷனைப் போலவே இருந்தாலும், மாம்சமான தேவன் எந்தவொரு மதிப்புமிக்க நபரைக் காட்டிலும் மனுக்குலத்திற்கு மிகவும் முக்கியமானவராவார், ஏனென்றால் தேவனுடைய ஆவியானவரால் செய்ய முடியாத கிரியையை அவரால் செய்ய முடியும், தேவனுடைய ஆவியானவரைக் காட்டிலும் அதிகமாகத் தேவனுக்குச் சாட்சி கொடுக்க முடியும், தேவனுடைய ஆவியானவரைக் காட்டிலும் அதிகமாக மனுக்குலத்தை முழுவதுமாக ஆதாயப்படுத்த முடியும். இதன் விளைவாக, இந்த மாம்சம் இயல்பானதாகவும் சாதாரணமானதாகவும் இருக்கின்றபோதிலும், மனுக்குலத்திற்கு அவர் அளித்த பங்களிப்பும், மனுக்குலம் வாழ்ந்திருப்பதற்கான அவரது முக்கியத்துவமும் அவரை மிகவும் விலையேறப்பெற்றவராக்குகின்றன. மேலும், இந்த மாம்சத்தின் உண்மையான மதிப்பும் முக்கியத்துவமும் எந்த மனுஷனாலும் அளவிட முடியாததாகும். இந்த மாம்சத்தால் சாத்தானை நேரடியாக அழிக்க முடியாது என்கின்றபோதிலும், மனுக்குலத்தை ஜெயங்கொள்ளவும், சாத்தானை தோற்கடிக்கவும், சாத்தானை தமது ஆதிக்கத்திற்கு முழுமையாக அடிபணியச் செய்யவும் அவர் தமது கிரியையைப் பயன்படுத்த முடியும். தேவன் மனுஷனாக அவதரித்திருப்பதால் தான், அவரால் சாத்தானை தோற்கடித்து, மனுக்குலத்தை இரட்சிக்க முடிகிறது. அவர் சாத்தானை நேரடியாக அழிப்பதில்லை, மாறாக சாத்தானால் சீர்கெட்டுப்போன மனுக்குலத்தை ஜெயங்கொள்ளும் கிரியையைச் செய்வதற்கு மாம்சமாக மாறுகிறார். ஆகையால், அவரால் தமது சிருஷ்டிகளுக்கு மத்தியில் தம்மைத்தாமே சிறப்பாக சாட்சி பகிர முடிகிறது, சீர்கேடான மனுஷனை சிறப்பாக இரட்சிக்க முடிகிறது. மாம்சமான தேவன் சாத்தானைத் தோற்கடித்தது தேவனுடைய ஆவியானவரால் சாத்தானை நேரடியாக அழிப்பதைக் காட்டிலும் அதிக சாட்சி பகிர்கிறது, அதிக வல்லமையானதாகவும் இருக்கிறது. மனுஷன் சிருஷ்டிகரை அறிந்துகொள்ள மாம்சத்திலுள்ள தேவனால் அவனுக்குச் சிறப்பாக உதவ முடியும், தமது சிருஷ்டிகளுக்கு மத்தியில் தம்மைத்தாமே சிறப்பாகச் சாட்சி பகிர முடியும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க