தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 119

மார்ச் 2, 2021

சீர்கெட்ட மனுஷனுடைய தேவைகள் தான் மாம்சமான தேவன் மாம்சத்திற்குள் வந்ததற்கு ஒரே காரணமாகும். தேவனுடைய தேவைகள் அல்ல, மனுஷனுடைய தேவைகளே இதற்குக் காரணமாகும். தேவனுடைய தியாகப்பலிகள் மற்றும் பாடுகள் எல்லாமே மனுக்குலத்திற்காகவே ஆகும், அவருடைய நலனுக்காக அல்ல. தேவனுக்கு எந்தச் சாதக பாதகமோ அல்லது வெகுமதிகளோ கிடையாது. முதலில் அவருக்குக் கொடுக்க வேண்டிய சில எதிர்கால அறுவடையை அவர் அறுவடை செய்ய மாட்டார். அவர் மனுக்குலத்திற்காக செய்கிற மற்றும் தியாகம் செய்கிற எல்லாம் அவர் சிறந்த வெகுமதிகளைப் பெறுவதற்காக அல்ல, முற்றிலும் மனுக்குலத்திற்காகவே ஆகும். மாம்சத்தில் தேவனுடைய கிரியை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல சிரமங்களைக் கொண்டிருக்கிற போதிலும், அது இறுதியில் அடையும் பலன்கள் ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியைகளின் பலன்களைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும். மாம்சத்தின் கிரியை மிகுந்த கஷ்டத்தை உண்டாக்குகின்றது. மேலும் ஆவியானவர் கொண்டிருக்கின்ற அதே மாபெரும் அடையாளத்தை மாம்சமானவரால் கொண்டிருக்க முடியாது. ஆவியானவர் செய்கிற அதே தெய்வீகச் செயல்களை மாம்சமானவரால் செய்ய முடியாது. ஆவியானவர் கொண்டிருக்கிற அதே அதிகாரத்தை மாம்சமானவரால் கொண்டிருக்க முடியாது. ஆனாலும், சாதாரணமான இந்த மாம்சமானவரால் செய்யப்படும் கிரியையின் சாராம்சமானது ஆவியானவரால் நேரடியாகச் செய்யப்படும் கிரியையைக் காட்டிலும் மிகவும் உயர்ந்ததாகும். மேலும் இந்த மாம்சமானவரே எல்லா மனுக்குலத்தின் தேவைகளுக்கும் பதிலாக இருக்கின்றார். இரட்சிக்கப்படுகிறவர்களைப் பொறுத்தவரையில், ஆவியானவரின் பயன்பாட்டு மதிப்பானது மாம்சமானவரின் பயன்பாட்டு மதிப்பைக் காட்டிலும் மிகவும் குறைவாகும்: ஆவியானவரின் கிரியையால் எல்லா மலைகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் சமுத்திரங்கள் உட்பட முழு பிரபஞ்சத்தையும் உள்ளடக்க முடியும். ஆனால் மாம்சமானவரின் கிரியை அவர் தொடர்புகொள்ளும் ஒவ்வொரு நபருடனேயே மிகவும் பயனுள்ள முறையில் தொடர்புடையதாக இருக்கின்றது. மேலும் என்னவென்றால், காணக்கூடிய உருவத்திலுள்ள தேவனுடைய மாம்சத்தை மனுஷனால் நன்கு புரிந்துகொள்ளவும் நம்பவும் முடியும். மேலும் தேவனைப் பற்றிய மனுஷனுடைய அறிவை இன்னும் ஆழப்படுத்தவும் முடியும். மேலும் தேவனுடைய உண்மையான செயல்களைக் குறித்த மிகவும் ஆழமான தாக்கத்தை மனுஷனுக்கு ஏற்படுத்தவும் முடிவும். ஆவியானவரின் கிரியை மறைபொருளில் மறைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கு ஏதுவானவர்களால் அவற்றைப் புரிந்துகொள்வது கடினமாகும். மேலும் அவற்றைக் காண்பதும் கடினமாகும். ஆகவே அவர்கள் வெற்றுக் கற்பனைகளை மாத்திரமே நம்பியிருக்க முடியும். ஆனாலும், மாம்சத்தின் கிரியை இயல்பானது, யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் வளமான ஞானத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது மனுஷனுடைய மாம்சக் கண்ணால் காணக்கூடிய ஒரு உண்மையாகும். தேவனுடைய கிரியையின் ஞானத்தை மனுஷன் தனிப்பட்ட முறையில் அனுபவிக்க முடியும். அவனுடைய வளமான கற்பனையைப் பயன்படுத்த வேண்டியதில்லை. இது மாம்சத்தில் தேவனுடைய கிரியையின் துல்லியமாகவும், உண்மையான மதிப்பாகவும் இருக்கிறது. மனுஷனுடைய கண்ணுக்குத் தெரியாத மற்றும் அவன் கற்பனை செய்வதற்கு கடினமான காரியங்களை மட்டுமே ஆவியானவரால் செய்ய முடியும். உதாரணமாக, ஆவியானவரின் அறிவொளி, ஆவியானவரின் அசைவு மற்றும் ஆவியானவரின் வழிகாட்டுதல் ஆகியவை மனம் கொண்ட மனுஷனுக்கு எந்தத் தெளிவான அர்த்தத்தையும் கொடுப்பதில்லை. அவை ஒரு அசைவையோ அல்லது பரந்த அர்த்தத்தையோ மாத்திரமே கொடுக்கின்றன, வார்த்தைகளாலான ஒரு அறிவுரையை வழங்க முடியாது. ஆனாலும், மாம்சத்தில் செய்யப்படும் தேவனுடைய கிரியை பெரிதும் வித்தியாசமானதாகும்: இது வார்த்தைகளின் துல்லியமான வழிகாட்டுதலைக் கொண்டுள்ளதோடு, தெளிவான சித்தத்தையும், தேவையான இலக்குகளையும் கொண்டுள்ளது. ஆகவே, மனுஷன் தட்டித் தடுமாறவோ அல்லது அவனுடைய கற்பனையைப் பயன்படுத்தவோ, ஊகங்கள் செய்யவோ வேண்டியதில்லை. இது மாம்சத்தில் செய்யப்படும் கிரியைக் குறித்த விளக்கமாகும். இது ஆவியானவரின் கிரியையிலிருந்து பெரிதும் வேறுபட்டதாகும். ஆவியானவரின் கிரியையானது ஒரு குறுகிய வரம்பிற்கு மட்டுமே பொருத்தமானதாகும். இது மாம்சத்தின் கிரியைக்கு மாற்றாக முடியாது. மாம்சத்தின் கிரியையானது ஆவியானவரின் கிரியையைக் காட்டிலும் மிகவும் துல்லியமான மற்றும் தேவையான இலக்குகளையும், உண்மையான, மதிப்புமிக்க அறிவையும் மனுஷனுக்குக் கொடுக்கிறது. துல்லியமான வார்த்தைகளையும், பின்தொடர்வதற்குத் தெளிவான இலக்குகளையும் கொடுக்கும் கிரியையே சீர்கெட்ட மனுஷனுக்கு மாபெரும் மதிப்புடையதாக இருக்கும் கிரியையாகும், இதைக் கண்டும், தொட்டும் உணரலாம். யதார்த்தமான கிரியை மற்றும் சரியான நேரத்திலான வழிகாட்டுதல் ஆகியவை மட்டுமே மனுஷனுடைய சுவைகளுக்குப் பொருத்தமானவையாகும். மேலும் மெய்யானக் கிரியை மட்டுமே மனுஷனை அவனது சீர்கேடான மற்றும் ஒழுக்கக்கேடான மனநிலையிலிருந்து இரட்சிக்க முடியும். மாம்சமான தேவனால் மட்டுமே இதை அடைய முடியும். மாம்சமான தேவனால் மட்டுமே மனுஷனை அவனுடைய முந்தைய சீர்கேடான மற்றும் மோசமான மனநிலையிலிருந்து இரட்சிக்க முடியும். ஆவியானவர் தேவனுடைய இயல்பான சாராம்சமாக இருக்கின்றபோதிலும், இத்தகைய கிரியையை அவருடைய மாம்சத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆவியானவர் தனியாக கிரியை செய்திருந்தால், அவருடைய கிரியை பயனுள்ளதாக இருக்க இயலாது என்பது ஒரு தெளிவான சத்தியமாகும். இந்த மாம்சத்தின் நிமித்தமாக பெரும்பாலான ஜனங்கள் தேவனுடைய சத்துருக்களாக மாறியிருக்கின்றபோதிலும், அவர் தமது கிரியையை முடிக்கும் தருவாயில், அவருக்கு எதிரானவர்கள் அவருடைய சத்துருக்களாக இல்லாமல், அவருடைய சாட்சிகளாக மாறுவார்கள். அவரால் ஜெயங்கொள்ளப்பட்ட சாட்சிகளாகவும், அவருடன் இணக்கமாகி அவரிடமிருந்து பிரிக்க முடியாத சாட்சிகளாகவும் மாறுவார்கள். மனுஷனுக்கு மாம்சத்தில் செய்யப்படும் அவருடைய கிரியையின் முக்கியத்துவத்தை அவர் மனுஷனுக்குத் தெரியப்படுத்துவார். மேலும் மனித வாழ்வின் அர்த்தத்தில் இந்த மாம்சத்தின் முக்கியத்துவத்தை மனுஷன் அறிந்துகொள்வான். மேலும் மனித வாழ்வின் வளர்ச்சியில் அவனுடைய உண்மையான மதிப்பை அறிந்துகொள்வான். மேலும் இந்த மாம்சமானது வாழ்வின் நீரூற்றாக மாறும், இதிலிருந்து மனுஷனால் பிரிந்திருக்க இயலாது என்பதை அறிந்துகொள்வான். மாம்சமான தேவனுடைய மாம்சமானது தேவனுடைய அடையாளத்திற்கும் நிலைப்பாட்டிற்கும் மிகவும் பொருத்தமில்லாததாக இருக்கின்றபோதிலும், மனுஷன் அவருடைய உண்மையான நிலைப்பாட்டுடன் இணக்கமில்லாதவனாக தோன்றுகின்றபோதிலும், தேவனுடைய மெய்யான சாயலையோ அல்லது மெய்யான அடையாளத்தையோ கொண்டிராத இந்த மாம்சத்தினால் தேவனுடைய ஆவியினால் நேரடியாகச் செய்ய முடியாத கிரியையைச் செய்ய முடியும். இதுவே தேவனுடைய மனுஷ அவதரிப்பின் உண்மையான முக்கியத்துவமும் மதிப்பும் ஆகும். மேலும் இந்த முக்கியத்துவத்தையும் மதிப்பையும் தான் மனுஷனால் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. சகல மனுஷரும் தேவனுடைய ஆவியை மேல்நோக்கிப் பார்க்கிறார்கள், தேவனுடைய மாம்சத்தை கீழ்நோக்கிப் பார்க்கிறார்கள். அவர்கள் அவற்றை எவ்வாறு பார்த்தாலும் அல்லது சிந்தித்தாலும், மாம்சத்தின் உண்மையான முக்கியத்துவமும் மதிப்பும் ஆவியானவருக்குரியவற்றை காட்டிலும் மிகவும் அதிகமானவையாகும். நிச்சயமாக, இது சீர்கெட்ட மனுக்குலத்துடன் மாத்திரமே தொடர்புடையதாகும். சத்தியத்தைத் தேடுகிற மற்றும் தேவன் தோன்றுவதற்காக வாஞ்சித்து ஏங்குகிற எல்லோருக்கும், ஆவியானவரின் கிரியை ஏவுதலையோ அல்லது தூண்டுதலையோ, விவரிக்க முடியாத மற்றும் கற்பனை செய்யமுடியாத அதிசய உணர்வையோ, மகத்துவமான, மேன்மையான மற்றும் போற்றத்தக்க, ஆனாலும் எல்லோராலும் அடைய முடியாத மற்றும் பெற முடியாத உணர்வையோ மட்டுமே கொடுக்க முடியும். மனுஷனும் தேவனுடைய ஆவியானவரும் தங்களுக்கு இடையில் மிகவும் அதிகமான தூரம் இருப்பது போலவே, ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் மனுஷனும் தேவனும் கண்ணுக்கு தெரியாத ஒரு பிளவினால் பிரிக்கப்பட்டிருப்பதைப் போலவே, அவர்களால் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. உண்மையில், இது ஆவியானவரால் மனுஷனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு மாயையாகும். ஏனென்றால் ஆவியானவரும் மனுஷனும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல, ஒரே உலகில் ஒருபோதும் இணைந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் ஆவியானவர் மனுஷனுக்குரிய எதையும் கொண்டிருக்கவில்லை. ஆகையால் மனுஷனுக்கு ஆவியானவர் தேவையில்லை. ஏனென்றால் மனுஷனுக்கு பெரிதும் தேவைப்படும் கிரியையை ஆவியானவரால் நேரடியாகச் செய்ய முடியாது. மாம்சத்தின் கிரியையானது மனுஷனுக்குப் பின்தொடர்வதற்கான உண்மையான இலக்குகளையும், தெளிவான வார்த்தைகளையும், அவர் உண்மையானவர், சாதாரணமானவர், அவர் தாழ்மையானவர், இயல்பானவர் என்ற உணர்வையும் கொடுக்கிறது. மனுஷன் அவருக்குப் பயப்படுகின்றபோதிலும், பெரும்பாலான ஜனங்களுக்கு அவர் எளிதாக தொடர்புகொள்ளக் கூடியவராக இருக்கிறார்: மனுஷனால் அவருடைய முகத்தைப் பார்க்க முடியும், அவருடைய குரலைக் கேட்க முடியும், அவன் அவரை தூரத்திலிருந்து பார்க்க வேண்டியதில்லை. இந்த மாம்சம் மனுஷனால் அணுகக்கூடியதாக உணர்கிறது. இது தொலைவில் இருப்பதாகவோ அல்லது புரிந்துகொள்ள இயலாததாகவோ இல்லாமல், கண்டும் தொட்டும் உணரக்கூடியதாக இருக்கிறது, ஏனென்றால் இந்த மாம்சம் மனுஷனுடைய அதே உலகில் உள்ளது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க